Advertisement

ஸ்மிரிதியின் மனு – 10
“உன்னோட ஸ்பெஷல்னா உனக்கும் ரொம்ப பிடிக்கும்தானே..ஃபைன் லேட்ஸ் ஹவ்…ஆரன் ஜ் அண்ட் லைம் ஃபார் மீ.” என்று கார்மேகம் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் அவர் மகளுடன் போர் களத்தில் இறங்கினான் மன்னன் மனு வளவன்.
அவன் தாக்குதலில் தடுமாற்றமடைந்த ஸ்மிரிதி அவளைச் சுதாரித்துக் கொள்ளுமுன்,
“மனு தம்பி..ஸ்மிரிதிமா தெரியாமப் பேசிட்டாங்க..தப்பா நினைச்சுக்காதீங்க.” என்று மனுவிடம் மன்னிப்பு கேட்டார் கார்மேகம்.
கார்மேகத்தின் மன்னிப்பில் கோபமடைந்த ஸ்மிரிதி,
“அப்பா..நீங்க அவன்கிட்ட எனக்காக எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க? கோயமூத்தூரிலேர்ந்து அவன குடைஞ்சுகிட்டிருந்தத வெளிய விட்டிருக்கான்….கார் டிரைவர வரவழைச்சு அவன பத்திரமா அவன் வீட்டுக்கு அனுப்பிவிடுங்க..நல்ல பையன் நம்ம வீட்ல கெட்ட பையனாக வேண்டாம்.” என்று மேலும் வார்தையை விட்டாள் ஸ்மிரிதி.
மனுவின் முகத்தில் ஏற்பட்ட உணர்வுகளைப் பார்த்து கவலையடைந்த கார்மேகம்,”ஸ்மிரிதி மா..நீங்க மேல எதுவும் பேசாதீங்க.” என்றார்.
அப்போது உள்ளேயிருந்து சிரித்தபடி ஒடி வந்த இளம்பெண் வரவேற்பறையில் மனுவை எதிர்பார்க்கத்தால்,”ஸாரி..எனக்கு கெஸ்ட் இருக்காங்கணு தெரில.” என்று அனைவரையும் பார்த்து மன்னிப்பு கேட்டாள்.
உடனே,”அவங்க ஸ்மிரிதி தீதியோட ரிலேடிவ்..இது ஸப்னா தீதி..இவங்களுக்குதான் கல்யாணம்.” என்று அதுவரை மௌனமாக இருந்த மனிஷ் மனுவிற்கும், ஸ்மிரிதிக்கும் உறவை ஏற்படுத்தி அதே சமயம் கல்யாணப் பெண்ணையும் மனுவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.  
அந்தப் பெண் ஸப்னா மனுவைப் பார்த்து கை குவித்து,”நமஸ்தே பையா (bhaiyya).” என்றாள்.
மனுவும் அந்தப் பெண்ணைப் பார்த்து,”வாழ்த்துகள்.” என்றான்.
“தாங்கஸ்.” என்று சொன்ன ஸப்னா,
ஸ்மிரிதியைப் பார்த்து,”தீதி..மெஹக் தீதி வந்துட்டாங்களா?” என்று கேட்டாள்.
“வந்துட்டா..நாளைக்கு மத்தியானம் இங்க வந்திடுவா..உங்களோட ரிகர்ஸல்ல கலந்துப்பா.” என்று பதில் அளித்தாள் ஸ்மிரிதி.
அந்தப் பதிலைக் கேட்டவுடன் அவள் மெஹந்தி கலையாமல் ஸ்மிரிதியைக் கட்டிப்பிடித்த ஸப்னா,
“நீங்களும் மெஹந்தி வைச்சுக்க வாங்க.” என்றாள்.
“நீ போ..நான் வரேன்..மனீஷையும் கூட அழைச்சுகிட்டு போ.” என்று ஸப்னாவையும், மனிஷையும் வரவேற்பறையிலிருந்து அகற்றினாள் ஸ்மிரிதி. 
அவர்கள் வரவேற்பறையிலிருந்து சென்றவுடன் மனுவைப் பார்த்து,”கீதிகாவோட அண்ணன் பொண்ணு அவ..நாளைக்கு இராத்திரி கல்யாணம்…இங்க பக்கத்தில இன்னொரு இடத்திலதான் கல்யாணம் வைச்சிருக்கோம்.” என்று கல்யாணத்தைப் பற்றி பேசி சூழ் நிலையை சகஜமாக்க முயன்றார் கார்மேகம்.
“நான் கிளம்பறேன் அங்கிள்….என் பைக்லையேப் போயிடறேன்.” என்று சொல்லி அந்த அறையிலிருந்தவர்களைத் திரும்பிக்கூட பார்க்காமல் வாசல் வராண்டாவில் சற்றுமுன் நிறுத்தியிருந்த அவன் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் மனு.
“ஸ்மிருதி மா..என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கார்மேகம் கேட்க,
“அப்பா..கேட்டுக்கு உடனே போன் போட்டு அவன் பைக்க அங்கையே நிறுத்தி வைக்க சொல்லுங்க..நம்ம டிரைவருக்கு போன் செய்து கார எடுத்துகிட்டு வரச் சொல்லுங்க.” என்றாள்.
“தம்பி வேணாமுனு சொல்லிட்டாரு மா.”
“அவன் அப்படிதான் சொல்லுவான்..இப்ப அவன் சொல்றது..நான் சொன்னது முக்கியமில்ல..அவன் ஜாக்கிரதையா வீடு போயி சேரணும்… அதுதான் முக்கியம்…காரில நீங்களும் போங்க அப்பதான் அவன் ஒத்துப்பான்..பைக்க நாளைக்கு அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சு விட்டுங்க..நான் மெஹந்தி போட்டுக்க போறேன்..இதை செய்து முடிங்க.” என்று கார்மேகத்தை மனுவிற்கு காவலாளி ஆக்கினாள் ஸ்மிரிதி.
“சரி மா..நான் பார்த்துக்கறேன்.” என்று சொல்லி அடுத்த நிமிஷம் டிரைவரோடு அவர் காரில் சென்று கேட்டருகில் காத்திருந்த மனுவிடம் மறுபடியும் மன்னிப்பு கேட்டார்.
“மன்னிச்சுக்குங்க தம்பி..ஸ்மிரிதி மா இப்படிதான் யோசிக்காம ஏதாவது பேசிடறாங்க..நானே உங்களை  வீட்ல கொண்டு போயி விடறேன்..பைக்க நாளைக்கு உங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சிடறேன்.” என்றார்.
கார்மேகத்தின் வறுபுறுத்தலை மறுக்க முடியாமல், கடுங்குளிரினைப் பொறுத்து கொள்ள முடியாமல் அவருடைய காரில் ஏறினான் மனு.  அவனுடன் வழி முழுவதும் பேசிக் கொண்டே வந்த கார்மேகம், மனுவையும், அவன் குடும்பத்தையும் மறு நாள் கல்யாணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.
“இல்ல..பரவால்ல அங்கிள்..நாங்க வர முடியாது..கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்.” என்று ஒரேடியாக மறுத்தான் மனு.
“லிமிடெட் கெஸ்ட்தான் கூப்பிடறோம்….நீங்க வந்து போனீங்கனு யாருக்கும் வெளியத் தெரிய வராது.” என்று மனுவின் தயக்கத்தைப் புரிந்து கொண்டு பதில்லளித்தார் கார்மேகம்.
“இல்ல அங்கிள்..அப்பா கண்டிப்பா வர மாட்டாங்க..அம்மாவால நாளைக்கு காலைல சொல்லி இராத்திரி வர முடியுமானுத் தெரில..மாறனுக்கும், எனக்கும் இதுலயெல்லாம் விருப்பமில்ல.” என்று மறுத்தான் மனு.
“அம்மாவ அழைச்சிட்டு வர்ற முயற்சி செய்யுங்க….நீங்க  வந்தீங்கன்னா ஸ்மிரிதிக்கும், எனக்கும் சந்தோஷமா இருக்கும்..என் நம்பருக்கு போன் போடுங்க நான் வண்டி அனுப்பறேன்..நீங்க கஷ்டப்பட வேணாம்…அப்பறம் உங்க இஷ்டம் தம்பி.” என்றார் கார்மேகம்.
“சரி அங்கிள்..அம்மாகிட்ட பேசிட்டு உங்களுக்கு போன் செய்யறேன்.” என்று கார்மேகத்தின் கோரிக்கையை மறுக்க முடியாமல் அவர் போன் நம்பரை அவன் போனில் ஸேவ் செய்து கொண்டான் மனு.
அவன் வீட்டு வாசலில் இறங்கி கொண்ட மனு, கார்மேகம் சென்றபின் மெதுவாக கேட்டை அவனிடமிருந்த சாவியால் திறந்து உள்ளே வந்தபின் அதை மறுபடியும் பூட்டினான்.  அதன் பின் வீட்டின் பக்கவாட்டிலிருந்த கிரில் கேட்டில் இருந்த பூட்டை திறந்து மாடிப்படி லைட்டைப் போட்டவுடன் மேலிருந்து  “மனு வந்திட்டியா?” என்று சிவகாமி குரல் கொடுத்தார்.
“கேட் பூட்டிட்டு வரேன்.” என்று அவருக்கு பதில் அளித்தான் மனு.
அவன் மாடியேறி வரும் வரை வாசல்படியில் காத்திருந்த சிவகாமி உடனே பிலுபிலுவென்று பிடித்து கொண்டார்.
“என்ன டா..எல்லாரும் சேர்ந்து திரும்பி வர மாட்டீங்களா..அவங்க எல்லாரும் எப்பையோ திரும்பி வந்தாச்சு..உனக்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம்?”
“ராமும், ஜனனியும் இருக்காங்க..நீங்க இவ்வளவு கத்தினீங்க அவங்க இரண்டு பேரும் ரூமிலேர்ந்து வெளிய வந்திடுவாங்க.”
“எங்க போயிருந்த?” என்று கேட்டார்.
“ஸ்மிரிதி வீட்டுக்கு.” என்று பதில் சொன்னான்.
அவன் பதிலில் அதிர்ச்சியான சிவகாமி,”நிஜமாவா?” என்று கேட்க
“ஆமாம்..அவள கொண்டுவிட போனேன்…. ஒரே ஃபாக்..அதான் பைக்க அவங்க வீட்ல விட்டிட்டு அவங்க கார்ல வந்திட்டேன்.” என்றான்.
“நீ ஏன் அவள கொண்டு போயி விடணும்..அவ அப்பா வந்து அழைச்சுகிட்டு போக வேண்டியதுதான?” என்று கேட்க.
“அவ இன்னிக்கு நைட் ஹோட்டலத் தங்கறதனு முடிவு செய்திருந்தா..நாந்தான் ஒண்ணு நம்ம வீட்டுக்கு வரணும் இல்ல அவங்க வீட்டுக்குப் போகணுமுனு கட்டாயப்படுத்தினேன்.” என்றான் மனு.
“நம்ம வீட்டுக்கா? ஏன்?”
“அன்னிக்கு நைட் கபீர் ஹோட்டல்ல அவ ஸ்டே செய்தபோது அப்பாதான் சொன்னாங்க..அவளும் ஹோட்டல்ல தங்கறானு தெரிஞ்சிருந்தா எல்லாரையும் நம்ம வீட்டுக்கேக் கூட்டிகிட்டு வந்திருக்கலாம்..ஜனனிக்கும் கம்ஃபர்டபிளா இருந்திருக்குமுணு..அதான் இன்னிக்கு அப்படி சொன்னேன் அவகிட்ட..அவ உடனே அவங்க வீட்டுக்கே அழைச்சுகிட்டு போக சொன்னா.” என்றான் மனு.
“அன்னிக்கு ராம், ஜனனிக்காகதான் அவ ஹோட்டல்ல தங்கினா.” என்றார் சிவகாமி.
“அப்ப இன்னிக்கு யாருக்காக ஹோட்டல்?” என்று கேட்டான் மனு.
மனுவின் கேள்வியில் கவலையடைந்த சிவகாமி,”வீடு இருக்கும்போது ஹோட்டல் எதுக்கு டா?” என்று அவரும் மனுவைப் பதில் கேள்வி கேட்டார்.
“ஒரு வாரத்தில இரண்டாவது  நைட்டு வெளிலத் தங்கறா…வீட்டுக்குப் போகாம வெளிலத் தங்கறத ஆன் ட்டிகிட்ட சொல்லிடுவேனு மிரட்டினேன்..உடனே என்கூட அவ வீட்டுக்கு புறப்பட்டு வந்திட்டா..இப்ப என்னை டிராப் செய்யறத்துக்கு அங்கிளும் என்கூட கார்ல வந்தாரு.” என்றான்.
“என்ன டா சொல்ற? கார்மேகம் கொண்டு விட்டாரா உன்னை? என்று நம்பமுடியாமல் கேட்டார் சிவகாமி.
“ஆமாம்..கார் டிரைவரா வரல ஆனா கார்ல என்கூட வந்தாரு…..பைக்ல போக வேணாமுனு அப்பா, பொண்ணு இரண்டு பேரும் சொல்லிட்டாங்க..நானும் சரி  200 மீட்டர்கூட பார்க்க முடியல கார்லையேப் போயிடலாமுனு உட்கார்ந்திருந்தேன்..ஸ்மிரிதி வாய வைச்சுகிட்டு சும்மா இருக்காமா ஏதோ பேசினா நானும் பதிலுக்கு பேசினேன்..
அப்பறம் அவங்க வீட்ல இருக்க பிடிக்காம பைக்க எடுத்துகிட்டு புறப்புட்டு கேட்டுக்கு வந்தேன்.. அங்க அவ கேட்டை திறக்க வேணாமுனு சொல்லி வைச்சிட்டா..என்ன பண்றதுனு நான் யோசிச்சுகிட்டு இருக்கும்போது கார்மேகம் அங்கிள் காரோட அங்க வந்தாரு.” என்றான் மனு.
“ஸ்மிரிதி ஏன் அப்படி நடந்துகிட்டா?”
“இரண்டு தடவை இன்னிக்கு..ஹோட்டலேர்ந்து நான் கிளம்பும்போது பைக் சாவியக் கொடுக்க கூடாதுனு சொல்லி வைச்சிட்டா அதான் அவள இன்னிக்கு ஒரு வழி செய்யாம வரக்கூடாதுன்னு அங்கையே இருந்தேன்..
இவ பெரிய தமிழ்ச்சியாட்டம் மெஹக்குத் தமிழ் படம் புக் செய்ய உதவி செய்துகிட்டு இருக்கா..
அவளுக்கு என்ன தமிழ் தெரியுமுனு எனக்குத் தெரியல..நாம எல்லாரும் ஊருக்கு போயிகிட்டு வந்துகிட்டு இருக்கோம்..இப்ப வீடு வாங்கறதாவும் இருக்கோம்..
அவ ஒண்ணும் மாறல மா அப்படியேதான் இருக்கா..பதினைஞ்சு வயசுல செய்ததையேப் பத்து வருஷமா செய்துகிட்டு இருக்கா போல..ஊர் விஷயத்தில, உலகத்து விஷயத்தில தலையிட்டு  உருப்படாம போயிகிட்டிருக்கா..
ஆனா ஒண்ணு அவ ஆணையிட்டா அவள சுற்றியிருக்கறவங்க அடிபணியறாங்க..மெஹக்லேர்ந்து அவங்க அப்பாவரைக்கும்.. அதனாலதான் சும்மா இருக்க முடியாம அவளுக்கு என்னைய அதிகாரம் செய்ய தோணுது..இன்னிக்கு வீட்டுக்குப் போகல உங்கம்மாக்குப் போன் போயிடுமுனு சொன்னவுடன வாயாடி வாய மூடிக்கிட்டு ஓடி வந்தா என் பின்னாடி.” என்றான் மனு.
“ஏன் டா இன்னிக்கு நைட் அவ அவங்க வீட்டுக்குப் போகல?”
“எனக்குத் தெரியாது..ஆனா அங்கிள்கிட்ட தகவல் சொல்லியிருக்கா..அவ என்கூட வீட்டுக்கு வந்தது அவருக்கு ஆச்சர்யமா இருந்திச்சு.” என்றான் மனு.
“எப்படி இருக்கு அவங்க வீடு?”
“பண்ணை வீடு..பிரம்மாண்டமா இருக்கு.”
“பிரேமாவோட இங்கதான் பக்கத்தில இருந்தாரு..கீதிகாவ கல்யாணம் செய்த பிறகு அந்த ஸைட் வீடு வாங்கிகிட்டுப் போயிட்டாரு.”
“வெளில காலி இடம் பெரிசா இருக்கு..கேட்டிலேர்ந்து கொஞ்சம் உள்ள இருக்கு வீடு..கராஜ்..வேலைக்காரங்களோட குவார்டர்ஸ் எல்லாம் உள்ளையே இருக்குது.” என்றான் மனு.
“வேற யார் இருந்தாங்க அந்த வீட்ல? என்று விசாரித்தார்.
“கல்யாண வீடு..கல்யாணப் பொண்ணைப் பார்த்தேன்..அவரோட பையன் மனிஷைப் பார்த்தேன்..வேற யாரையும் பார்க்கல..நாளைக்கு நம்ம எல்லாரையும் கல்யாணத்துக்கு கூப்பிட்டாரு..சரிபடாதுனு சொல்லிட்டேன்..முயற்சி செய்யுங்க..நான் வண்டி அனுப்பறேனு சொன்னாரு.” என்றான் மனு.
“சரி..நீயும் போயி படு..நாளைக்கு ராமை ஏர்போர்ட்ல விடணும்..போயி ரெஸ்ட் எடுத்துக்க.” என்றார் சிவகாமி.
படுக்கையில் படுத்த மனு உடனே தூங்கிப் போனான்.  அவள் படுக்கையில் அறையில் மனுவை பற்றி நினைத்து கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு தூக்கம் கெட்டுப் போனது.  கையில் மெஹந்தியோடு ஜன்னலோரமாக அமர்ந்தபடி மூடியிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாள்.  சற்று நேரத்தில் கார்மேகம் காரிலிருந்து இறங்கியதைப் பார்த்த ஸ்மிரிதி அவள் அறையிலிருந்து வெளியே வந்து,
“மனுவை வீட்ல விட்டுட்டீங்களா?” என்று அவரைக் கேட்டாள்.
அவர் திரும்பிவரும் வரை விழித்திருந்து மனுவைப் பற்றி விசாரிப்பதை அதிசயமாகப் பார்த்த கார்மேகம்,
“என்ன மா..தூங்கமா முழிச்சுகிட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.
“நீங்க திரும்பி வர வெயிட் செய்தேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“மனு தம்பிய அவங்க வீட்ல பத்திரமா விட்டாச்சு..நீங்க போங்க..தூங்குங்க.” என்றார் கார்மேகம்.
“உங்களுக்காகவும்தான் வெயிட் செய்தேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“எதுக்கு மா?”
“நீங்க இராத்திரில வெளில போகறது கிடையாது ஆனா இன்னிக்கு நான் சொன்னதுக்காக மனுவ கொண்டுவிட போனீங்க..நானும் இராத்திரில தனியா வண்டில வர வேணாமுனுதான் மெஹக்கோட இருக்க முடிவு செய்தேன்..மனுக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது..நான் வீட்டுக்குப் போகாம வெளிலத் தங்கறேனு அம்மாக்கு சொல்லிடுவேனு மிரட்டினான் அதான் அவன் கூடவே புறப்பட்டு வந்திட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவங்களுக்குப் புரியாது..நீங்க போயி படுங்க..நாளைக்கு பிஸியா இருக்கும்..மனு தம்பியோட பைக்க நாளைக்கு காலைல ஆள் மூலம் கொடுத்து விட்டிடலாம்..அவங்க வீட்டையும் கல்யாணத்துக்கு கூப்பிட்டேன் ஆனா வரமாட்டாங்கனு நினைக்கறேன்..
மனு தம்பிகிட்ட என் போன் நம்பர் கொடுத்திருக்கேன் அப்படி அவங்க வீட்ல வர்றதா சொன்னாங்கன்னா வண்டி அனுப்பறதுலேர்ந்து அவங்கள திரும்ப வீட்டுக்கு கொண்டு போயி விடறது வரைக்கும் நம்ம பொறுப்பு.” என்றார் கார்மேகம்.
“அவங்க வந்தா பார்த்துக்கலாம்..நீங்களும் போயி ரெஸ்ட் எடுத்திக்கோங்க.” என்று சொல்லி அவள் அறைக்கு வந்தாள் ஸ்மிரிதி.
அவள் கைகலிலிருந்த மருதாணியைப் பாத் ரூமிலிருந்தக் குப்பைத் தொட்டியில் கசக்கி சுவடேயில்லாமல்  பியித்து போட்டாள்.  உள்ளங்கை இரண்டையும் விரித்து, சேர்த்து வைத்தபோது அதில் காவியமே படைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணனும், ராதையும், பிருந்தாவனமும் கண்முன் தத் ரூபமாக தெரிந்தது.  இரண்டு நிமிஷம் அதை இரசித்து விட்டு படுக்கையில் விழுந்தாள்.  தலையணை அருகில் இருந்த போன் கண்ணில் பட, அதில் வந்திருந்த மெஸெஜுகளைப் படிக்க ஆரம்பித்தாள். சுவாரசியமாக எதுவுமில்லாததால் போர் அடித்து போனை அணைக்க நினைத்தவள் மனசில் மனு அவளைக் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல தோன்றியது. உடனே அவனுடைய நம்பருக்கு மெஸெஜ் செய்தாள். 
“நீ கேட்டதுக்கு பதில் நீயே கோடிட்ட இடத்தை நிரப்பி கண்டுபிடிச்சிக்கோ..
எனக்கு ரொம்ப பிடிச்சது old ———— “ என்று டைப் செய்து பத்து ஸ்மைலிகளுடன அனுப்பி வைத்து நிம்மதியாக தூங்கிப் போனாள்.
காலையில் எழுந்தவுடன் அவள் போனைப் பார்த்த ஸ்மிரிதி ஏமாற்றம் அடைந்தாள்.  மனுவிடமிருந்து பதில்லில்லை. இனி அவனைப் பற்றி நினைக்ககூடாது என்று முடிவு செய்து கல்யாண வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள்.
பத்து மணி போல் விழித்து கொண்ட மனுவும் எழுந்தவுடன் அவன் போனை செக் செய்தான்.  நிறைய மெஸெஜூக்கள் நடுவில் ஸ்மிரிதியிடமிருந்து நேற்று இரவு வந்திருந்த மெஸெஜும் இருந்தது.  அவள் மெஸெஜை யோசனையுடன் படித்தவன் அதற்குபின் அதைப் பற்றி நினைக்காமல் அவன் காலை வேலைகளில் ஈடுபட்டான்.
அவன் தயாராகி அறையிலிருந்து வெளியே வந்தபோது வீடு அமைதியாக இருந்தது.  வரவேற்பறையையிலிருந்த பால்கனிக்கு வந்தவனுக்கு அங்கே வெய்யிலில் அமர்ந்து நிதானமாகப் பேப்பர் படித்து கொண்டிருந்த நாதன் தென்பட்டார்.
“எங்கப்பா எல்லாரும்?” என்று கேட்க,
“உங்கம்மாவோட சத்தர்பூர் கார்த்தியாயினி கோயிலுக்கு போயிருக்காங்க.” என்றார்.
“மாறனும் போயிருக்கானா?”
“அவந்தான் கார்ல அழைச்சுகிட்டு போயிருக்கான்..உன்கூடத்தான் போகணுமுனு நினைச்சுகிட்டிருந்தா உங்கம்மா..நேத்து இராத்திரி நீ ரொம்ப லேட்டா வந்த போல அதான் மாறன அழைச்சுகிட்டு போயிட்டா.” என்றார் நாதன்.
அப்போது அங்கே காலை டீயுடன் வந்த வேலையாள் திரேன்,”நாஷ்தா ரெடி செய்யட்டா?” என்று கேட்டான்.
“வேணாம்..நேரா லன்ச் சாப்பிடறேன்.” என்று மறுத்தான் மனு.
“ஏன் டா..நேத்து நைட் சாப்பிட்டது..இப்பவே மணி 11 ஆயிடுச்சு.” என்றார் நாதன்.
“அதான் வேணாமுனு நினைக்கறேன்..ஏர்போர்ட் போகணும்..எல்லாரோட சேர்ந்து லன்ச் சாப்டிடறேன்.” என்றான் மனு.
“நேத்து நைட் ஸ்மிரிதியோட வீட்டுக்குப் போனேனு உங்கம்மா சொல்றா.” என்று விசாரணையை ஆரம்பித்தார் நாதன்.
“ஆமாம்..கார்மேகம் அங்கிள்தான் இராத்திரி என்னை நம்ம வீட்டுக்கு கொண்டு வந்து விட்டாரு..பைக் அவங்க வீட்லதான் இருக்கு..ஒரே ஃபாக்..கண்ணு முன்னாடி என்ன இருக்குணுத் தெரியல.” என்றான்.
“எதுக்கு அந்த மாதிரி நேரத்தில பைக் எடுத்துகிட்டு போன?”
“நேத்து சாயந்திரம் என் வேலை முடிஞ்சதும் ஆபிஸ்லேர்ந்து நேரா மலை மந்திர் போனேன்..அங்கேயிருந்து ஸ்மிரிதி சொன்னதெல்லாம் செய்தோம்..அதுக்கு அப்பறம் நான் சொன்னத அவ செய்தா..அதுலதான் பைக் அவங்க வீட்ல மாட்டிகிச்சு.” என்றான்.
“எப்படி கொண்டிட்டு வருவ?”
“அவங்க ஆளு கொண்டு வந்து விட்டிடுவான்..அவங்க வீட்ல இன்னிக்கு கல்யாணம்.” என்றான் மனு.
“யாருக்கு?”
“அவரோட இரண்டாவது மனைவியோட அண்ணன் பொண்ணுக்கு.”
“நீ இனி அங்க போகாத…தள்ளி இரு.” என்று கட்டளையிட்டார் நாதன்.
“சரி பா.” என்றான் மனு.
அப்போது அவர்கள் வீட்டின் கேட்டருகில் மனுவின் பைக்கை நிறுத்தி அவன் பாக்கெட்டிலிருந்து எடுத்த போனில் யாருக்கோ போன் செய்தான் அதை ஓட்டிக்கொண்டு வந்தவன்.  போன் பேசி முடித்த பின் நிதானமாக கேட்டைத் திறந்து பைக்கை உள்ளே கொண்டு வந்து பார்க் செய்தான்.  
இவை அனைத்தையும் பால்கனியிலிருந்து பார்த்து கொண்டிருந்த நாதனும், மனுவும் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு அகலவில்லை.  வாசல் அழைப்புமணி ஒலித்தவுடன் கதவைத் திறந்த திரேனிடம் மனுவின் பைக் சாவியைக் கொடுத்துவிட்டு காத்திருந்தான் கார்மேகம் அனுப்பிய ஆள்.
பைக் சாவியுடன் பால்கனிக்கு வந்த திரேன், மனுவைப் பார்த்து,
 “ஏதாவது சொல்லணுமா அவருக்கு? என்று கேட்டான்.
“ஒண்ணுமில்ல..அனுப்பிடு.” என்றான் மனு.
அந்த ஆள் அவர்கள் வீட்டிலிருந்து சென்ற பின்,”கார் மேகம் ஒரு காலத்தில இந்த மாதிரி வேலை செய்துகிட்டிருந்தாரு இன்னிக்கு அவர்கிட்ட இந்த மாதிரி பத்து பேர் வேலைப் பார்க்கறாங்க.” என்றார் நாதன்.
“அரசியல்ல இருக்கறவங்க அப்படிதான்.” என்றான் மனு

Advertisement