Advertisement

ஸ்மிரிதியின் மனு – 35
மெஹக், மாறன் இருவரும் அவரவர் எண்ணங்களின் மூழ்கி இருந்த போது அடுத்து வர போகும் நிகழ்ச்சிகள் பற்றி அறிவிப்பு செய்தான் கபீர்.  அதில் முதல் நிகழ்ச்சியாக அவர்களின் பிரியமான சினேகிதி ஸ்மிரிதிகாக ஒரு சிறப்பு நடனம் என்று அறிவித்தான். அந்த அறிவிப்புக்குப் பின் மாறன் எழுந்து சென்று அவன் வாசிக்க போகும் டிரம்ஸுடன் தயாராக, அவனருகே கீ போர்டில் கபீர் அமர்ந்து கொள்ள, அவர்களை இருவரையும் அடுத்து கடைசியாக தல்ஜித் அமர்ந்தான்.
“என்ன ஆரம்பிக்கலாமா?” என்று கபீரை மாறன் கேட்க,
“மெஹக் வரணும்..கொஞ்சம் டிரெஸ் சேன் ஜ் நடக்குது.” என்று பதில் அளித்தான் தல்ஜித்.
“இவ்வளவு நேரம் சும்மா உட்கார்ந்திருந்தா அப்ப போக வேண்டியது தானே..திமிர்..எல்லாரையும் காக்க வைக்கறதில்லே ஒரு சந்தோஷம்..இன்னைக்கு நான் வாசிக்கறதுலே அவளோட திறமை வெளியே தெரியும்.” என்று மெஹக்கின் மீது வன்மம் வளர்த்தான் மாறன். 
விருந்தினர்கள் அனைவரையும் பத்து நிமிடம் காக்க வைத்துவிட்டு உள்ளே நுழைந்த மெஹக்கின் தோற்றத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. அதே புடவையை ஒரு சிறு மாற்றத்துடன், புடவைத் முந்தானையை வலது புறம் வைத்து வட இந்திய பெண்கள் பாணியில் உடுத்தியிருந்தாள். அவள் ஹாலின் நடுவிற்கு செல்லும் முன் கபீர், தல்ஜித் இருவருக்கும் “குட் லக்” என்று வாழ்த்தியவள் அவர்களருகே அமர்ந்திருந்த மாறனை கண்டு கொள்ளாமல் ஒய்யாரமாக நடந்து போய் அவள் இடத்தில் நின்று கொள்ள, அதை அடுத்து கீதிகாவின் உறவு பெண்கள் இருவர் அவளின் இருபுறமும் வந்து நின்று கொண்டனர்.
குடும்ப நபர்கள், நண்பர்களைத் தவிர கண்ணாடிக் கூரை வழியாக விரிந்து கிடந்த வானமும், சிதறி கிடந்த நட்சத்திரங்களும் மெஹக்கின் நடனத்தைப் பார்க்க தயாராகின.  குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை அனைவரும் இசைக்காகவும் அதற்கேற்ப மெஹக்கின் அசைவிற்காகவும் அமைதியாக காத்திருக்க, அவனின் கணீர் குரலில் தல்ஜித் ஒன்று, இரண்டு, ரெடி என்று சொன்ன பின், 
“நவ்ராயி மாஜி (navrai mazi) என்று பல்லவியை சோபாவில் அமர்ந்திருந்த சுசித் ரா அவளின் கனமான குரலில் ஆரம்பித்தாள். அவளின் வெண்கலக் குரலில் பல்லவி முடியும் வரை காத்திருந்த பின் கீ போர்டும், டிரம்ஸும் ஆரம்பமாக அவர்களுடன் மெஹக்கின் நடனமும் ஆரம்பித்தது.  அதன்பின் பல்லவியை மறுபடியும் மெஹக்கே பாடிக் கொண்டு ஆட அவளுக்கு சுசித் ராவும், கபீரின் அண்ணிகளும் கோரஸ் ஸப்போர்ட் கொடுத்தனர். அந்தப் பாடலின் சரணங்களைப் பாடி அதற்கு ஏற்றார் போல் நடனமும் ஆடினாள் மெஹக்.  அவள் நடனமாட ஆரம்பித்தவுடனையே மாறனின் கைகள் ரூபக தாளத்தில் டிரம்ஸுடன் விளையாட ஆரம்பித்தன. 
“ஸுனியோ ஜி (suniyo ji) என்ற சரணத்தை பாடிக் கொண்டே மனுவை நோக்கி வந்த தல்ஜித், மனுவிடம் ஸ்மிரிதியை சுட்டிக் காட்டி பாடலைத் தொடர, அந்த வரிகள் கல்யாண பெண்ணை, மென்மையானவள், மிருதுவானவள், அற்புதமானவள் என்று விவரிக்க அதைக் கேட்டு மனுவைவிட ஸ்மிரிதிக்குதான் சிரிப்பு அதிகமானது.  
அதன்பின் தல்ஜித்தும், ஸ்மிரிதியும் மெஹக்குடன் சேர்ந்து நடனமாட, சில அசைவுகளில் ஸ்மிரிதியினால் மெஹக்கின், மாறனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவள் சோபாவிற்குத் திரும்பிவிட, அதன்பின் மெஹக், மாறன் இருவரின் நிகழ்ச்சி என்றாகி போனது.  “பவுராயி சலி ஷர்மாதி (baurai chali sharmati) கடைசி சரணத்தை சுசித் ரா பாடி முடிக்க, “நவ்ராயி..மக்காஹி..ஓ..அல்லாஹ் (navrai..oh..allah) என்று கபீர், தல்ஜித், மாறன் மூவரும் கோரஸாக பாடலை முடிக்கும் வரை மாறனின் தாளத்திற்கு ஏற்ப சுழன்று, சுழன்று ஆடி அங்கிருந்த அனைவரையும் தன் ஆடல், பாடல் திறமையால் ஆட்கொண்டாள் மெஹக்.  
மெஹக் ஆடி முடித்து சபையை வணங்கியவுடன் அவளருகே வந்து அவளை ஆரத்தழுவி  திருஷ்டி சுற்றினார் மீரா.  அடுத்த நிகழ்ச்சியில் அவள் பாட்டு பாட வேண்டியிருந்ததால் சுசித்ராவின் அருகே அமர்ந்து கொண்டாள் மெஹக்.
அவன் தாளத்திற்கு ஈடு கொடுத்த ஆடிய மெஹக்கின் பாதங்கள் களைப்படைந்ததாயென்று மாறனுக்குத் தெரியவில்லை ஆனால் அவனின் உள்ளங்கை இரண்டும் சிவந்து போய் இருந்தன.  அடுத்து கபீரின் குடும்பம் முழுவதும் ஆடவிருந்ததால் கீ போர்ட் பொறுப்பு மாறன் கைக்கு மாறியது.
விருந்தினர்களுக்கு வணக்கம் தெரிவித்து, அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திய மீரா, அவரின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவளுடையக் குடும்பத்தினர் அவளுக்காக ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சி அது என்று சொன்னவுடன், மனுவின் அருகில் அமர்ந்திருந்த ஸ்மிரிதி எழுந்து வந்து மீராவையும், கபீரின் அண்ணிகள் இருவரையும் அணைத்து, அவர்களுடன் இருந்த கபீரை ஆரத்தழுவாமல் அவன் முதுகில் ஓங்கி அடித்து நன்றி சொல்லிவிட்டு மாறனிடமிருந்து ஒரு மைக்கைப் பெற்று அதை அவள் பிளவுஸில் பொருத்திக் கொண்டு மனு அருகே அமராமல் அவள் சினேகிதள் அருகே சென்று அமர்ந்து கொண்டாள். ஸ்மிரிதியும் அவர்களுடன் சேர்ந்து பாட விரும்பிகிறாள் என்று தெரிந்தவுடன் எந்த பாட்டு என்று அவள் காதில் முணுமுணுத்தாள் சுசித் ரா.
மாறனின் கையசைவிற்குக் காத்திருந்த சினேகிதிகள் அவன் “hey..hey..” என்று ஒசை எழுப்பி இசையை ஆரம்பித்தவுடன்,”ஹொய்..ஹொய்..ஹோய் (hoy..hoy..hoy) என்று மெஹக், ஸ்மிரிதி இருவரும் பாட ஆரம்பிக்க அவர்களைத் தொடர்ந்து, “ஸையா சேட் தேவே (saiyya chaed deve) என்று சுசித் ரா ஆரம்பித்தாள்.  
சுசித் ராவின் பாட்டிற்கேற்ப அபிநயத்துடன் மீரா ஆட, அவருடைய மருமகள்களும், மகன்களும் அவரை தொடர்ந்து அதை போலவே ஆடினர்.  “தேவர் ஸம்ஜாதேவே (devar samjadeva) என்று வரிகளுக்கு கபீரிடம் அனைவரும் முறையிட அவன் ஸ்மிரிதியின் அருகில் வந்து அவளுக்கு அட்வைஸ் செய்வது போல் ஆக்‌ஷன் செய்ததைப் பார்த்து அனைவரும் வாய்விட்டு சிரித்தார்கள்.  
அதற்குபின் “புஷ் ஷர்ட் பெஹன்கே” என்ற வரிகளைப் பாடிய போது அவர் அதுவரை அணிந்திருந்த குர்த்தாவின் மேலேயே புஷ் ஷர்ட் அணிந்து, வாயில் பான் போட்டு கொண்டே மிலிந்த் என் ட்ரி கொடுக்க, அவரருகில் சென்ற மீரா அவர் அழகில் மயங்கியது போல் செய்த பாவனையில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதன்பின் மனுவின் அருகில் அமர்ந்திருந்த சிவகாமியையும் அழைத்து வந்து பாடல் முடியும் வரை அவருக்கு ஜோடியாக ஆட வைத்தார் மீரா.  
முதலில் சங்கடமாக உணர்ந்த சிவகாமியின் காதில் விழும்படி மாறன் “ஹொய்..ஹோய்..” என்று உரத்த குரலில் கத்த அவனைத் திரும்பி பார்த்து முறைத்த அவன் அம்மாவைப் பொருட்படுத்தாமல் “ஹொய்..ஹொய்..ஹொய்.” என்று எக்ஸ்ட் ராவாக கோரஸுடன் சேர்ந்து பாடி சிவகாமியை மீராவுடன் வலுக்கட்டாயமாக ஆட வைத்தான் மாறன்.  அவர் இளைய மகனின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட சிவகாமியும் உற்சாகமாக நடனமாடி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
மீரா, சிவகாமி இருவரின் ஜோடி நடனம் அங்கேயிருந்த அனைவர் முகத்திலும் சந்தோஷத்தையும், சிரிப்பையும் வரவழைத்திருந்தது.  அந்த மகிழ்ச்சியான சூழ் நிலையில் மறுபடியும் விருந்தினர்களின் கவனத்தை கவர்ந்த கபீர், “இன்னுமொரு நிகழ்ச்சி இருக்கிறதென்றும்..அன்றைய இரவிற்கான கடைசி நிகழ்ச்சி” என்றும் அறிவித்தான்.  அவன் அறிவிப்பு முடிந்தவுடன் அறையிலிருந்த வெளிச்சம் மேலும் குறைக்கப்பட கண்ணாடி வழியாக வெளியிலிருந்து வந்த செயற்கை வெளிச்சம்தான் அந்த ஹாலின் இருட்டைப் போக்கியது.  
அப்போது இரண்டு பார் ஸுட்டுல்ஸ் (bar stool)  கொண்டு வந்து நடு ஹாலில் வைக்கப்பட்டது. யாருடைய நிகழ்ச்சி அடுத்து என்று யாராலும் கணிக்க முடியவில்லை.  அப்போது நிதனாமாக அவன் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து மாறன் அருகே சென்ற மனு அவன் கொடுத்த மைக்கை அவன் அச்கன் ஷர்வானியில் பொருத்திக் கொண்டு, ஓரமாக இருந்த கிடாரை மாறனிடம் கொடுத்தான். அதன்பின் அண்ணன், தம்பி இருவரும் ஸ்ட்டுலில் அமர்ந்து கொண்டு அவர்கள் நிகழ்ச்சிக்கு தயாராயினர்.  
மாப்பிள்ளையும், அவர் தம்பியும் சேர்ந்து பர்ஃபார்ம் செய்ய போகிறார்கள் என்று தெரிந்தவுடன் கைதட்டல் ஓசை வலுத்தது.  எந்தவித முன்னறிவிற்பும் இல்லாமல் “மெய்ன் ஷாயர் தோ நஹி (maine shayar to nahi)  என்று பாட ஆரம்பித்தான் மனு.  அவன் பாடிய அந்தப் பாடலுக்கு முன்னறிவிப்போ, விளக்கமோ தேவைப்படவில்லை. அவன் யாருக்காகப் பாடுகிறானென்று அந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தையுமே சொல்லியது.  மனுவின் குரலும், மாறனின் கிடாரின் ஆற்றலும் அடுத்து வந்த நிமிடங்களை மறக்க முடியாத நிமிடங்களாக ஸ்மிரிதியின் மனதில் செதுக்கியது.  
ஸ்மிரிதியின் மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த அன்பையும், அதன் தன்மையும், அனைவரின் முன் அந்தப் பாடலின் மூலம் போட்டு உடைத்தான் மனு.
அவன் என்ன பாட போகிறான் என்று ஆவலுடன் காத்திருந்த ஸ்மிரிதிக்கு,”மே ஷாயர் தோ நஹி (mei shayar toh nahi) என்று ஆரம்பித்தவுடனையே அவனின் நோக்கம் புரிந்துவிட்டது.  அவன் பாடலோடு ஒன்றிப் போனவளுக்கு அனைவரும் கைதட்டியபின் தான் நிகழ்வுக்குத் திரும்பினாள்.  உடனே எழுந்து சென்று மனுவை அணைத்து நன்றி சொன்னவள், மாறனுக்கும் நன்றி சொல்லிவிட்டு அவன் கையிலிருந்த கிடாரை வாங்கி கொண்டு அவனிடம் “ப்ளீஸ்” என்று சொல்லி அவனை எழுப்பி அதே ஸ்ட்டுலில் அமர்ந்து அவளுக்கு ஏற்றார் போல் கிடாரை செட் செய்தவள், அனைவரையும் பார்த்து,
“இந்தப் பாடல் தான் இன்னியோட கடைசி நிகழ்ச்சி..இதுக்கு நான் எந்த விதமான பயிற்சியும் செய்யலே அதனாலே வார்த்தைகளிலோ, வாசிப்பிலோ தவறு இருந்தா மன்னிக்கவும்..அண்ட் நானும் இந்த பாட்டைப் பற்றி எதுவும் சொல்ல போகறதில்லை..தேவையுமில்லை ஏன்னா பாட்டை கேட்டவுடனையே எதுக்காக, யாருக்காக பாடினேன்னு புரிஞ்சிடும்.” என்று சொல்லி மனுவின் புறம் திரும்பி அவனைப் பார்த்தபடி கிடாரை வாசிக்க ஆரம்பித்தாள். 
“சூராலியா தும்னே ஜோ தில்கோ (churaliya tum ne jo dil ko)” என்று ஸ்மிரிதி பாட ஆரம்பித்தவுடனையே மனு அவளின் புறம் திரும்பி உடகார, அவளும் அவன் கண்களைப் பாரத்து பாட அவர்கள் இருவரும் ஹாலின் இருந்த மற்றவர்களை மறந்தனர்.  
ஏற்கனவே ஒருமுறை ஸ்மிரிதி பாடி கேட்டிருந்த மனுவிற்கு இந்த முறை அவள் குரல் வேறு விதமாக அவனுக்குள் போய் சேர்ந்தது.  அவனைப் போலவே அவன்மீது அவள் கொண்டிருந்த அன்பையும், அதன் தன்மையையும், அவர்களுகேயான புரிதலேயும், அவளின் எதிர்பார்ப்பினையும்  அவள் பாட்டின் மூலம் விளக்கினாள்.
பாடலின் கடைசியில் ஸ்மிரிதியிடமிருந்து கிடாரைப் பறித்து திரைப்படத்தில் வருவது போல் மனுவே கிடாரை  வாசித்து, பாடி முடித்தபோது அங்கேயிருந்த அனைவரின் மனதிலும் அவர்கள் இருவரும் ஒருவருகொருவர் பொருத்தமானவர் என்ற எண்ணம் படிந்து போனது.
சோபாவில் அமர்ந்திருந்த சுசித் ராவும், மெஹக்கும் ஓடி வந்து ஸ்மிரிதியை அணைத்து கொண்டு, மேட் ஃபார் ஈச் அதர்..மாட் அபவுட் ஈச் அதர் (made for each other..mad about each other).” என்று கத்தினர்.
அதற்குபின் விருந்தினர்கள் ஒவ்வொருவராக புது மணமக்களிடம் விடைபெற, கடைசியில் மிஞ்சியிருந்தது மணமக்களின் குடும்பம், மீரா, மிலிந்த், நட்பு வட்டம் மட்டும்தான்.
“நாமளும் வீட்டுக்குக் கிளம்பலாமா டீ?” என்று பிரேமாவிடம் விசாரித்தார் சிவகாமி.
“கிளம்பலாம் டி..பசங்கதான் லேட்டா வருவாங்கன்னு நினைக்கறேன்.” என்றார் பிரேமா.
“அதெல்லாம் ரொம்ப லேட்டாகக்கூடாதுன்னு மீராகிட்ட சாயந்திரமே சொல்லிட்டேன்..நம்ம பின்னாடியே வந்திடுவாங்க..நான் எல்லார்கிடையும் சொல்லிகிட்டு வந்தவுடனே கிளம்பிடலாம்.” என்று கார்மேகத்திடம் ஆரம்பித்து வரிசையாக புவனாவிடம், ராம், ஜனனி என்று நன்றி உரைத்து விட்டு மீரா, மிலிந்த் இருவரிடம் சிறப்பு நன்றியுடன் விடைப்பெற்று கொண்டு சிவகாமி, தில்லை நாதன், பிரேமா மூவரும் ஹோட்டலின் கீழ் தளத்திற்கு வந்த போது அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரின் அருகில் அவனின் லாப் டாப் பேக்குடன் அவர்களுக்கு முன்னே வந்து அவர்களின் வரவிற்காகக் காத்திருந்தான் மாறன்.
அவர்களோடு அவன் வீட்டிற்கு வர போகிறான் என்று தெரிந்தவுடன் அவரின் அதிர்ச்சியை மறைக்க முடியாமல்,”என்ன டா எங்களோட வந்திட்ட..நீ இங்கையே இருந்திட்டு மனுவோடதான் வருவேன்னு நினைச்சேன்.” என்றார் சிவகாமி.
“எல்லாம் முடிஞ்சிடுச்சு இனி எனக்கு என்ன வேலை இருக்கு?..கிடார், டிரம்ஸ் இரண்டுத்தையும் கபீர்கிட்ட கொடுத்திட்டேன்.. அதை நம்ம வீட்டுக்கு ஆள் மூலம் அனுப்பிடுவான்.” என்று அவருக்குத் தெளிவாக பதில் சொன்னவனா அன்று மாலை முழுவதும் கையில் மது பானத்துடன் சுற்றி கொண்டிருந்தான் என்று சந்தேகம் எழுந்தது சிவகாமிக்கு.
கார்மேகமும் அவர் குடும்பத்துடன் கிளம்பியவுடன் மீராவும், மிலிந்தும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்லுமுன் கபீர் அண்ட் கோவிற்கு அரைமணி நேரத்திற்குள் அவர்களின் பார்ட்டியை முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டு சென்றிருந்தனர்.
வரவேற்பு ஹாலில் தல்ஜித், கபீர், மெஹக், சுசித் ரா, மஞ்சு நாத்துடன் பேசிக் கொண்டிருந்தனர் ஸ்மிரிதியும், மனுவும்.  மாறனின் கிடார் வாசிப்பை புகழ்ந்து கொண்டிருந்தான் கபீர்.
“பயங்கரமா வாசிக்கறான்..எங்க ஹோட்டல்ல அவனை வாசிக்க சொல்லணும்.” என்றான் கபீர்.
“டிரம்ஸும் நல்லா வாசிக்கறான்..மெஹக் நீ இன்னைக்கு செம்மையா ஆடின..டான்ஸும், டிரம்ஸும் ஸேம் டெம்போ.” என்றாள் சுசித் ரா.
அதற்கு மெஹக்கிடமிருந்து எந்தப் பதிலுமில்லை.  அவளின் உள்ளங்கைகளை வெறித்து பார்த்து கொண்டிருந்தவளின் மனம் டிரம்ஸ் வாசித்தவனால் டிரம்ஸ் வாசித்து கொண்டிருந்தது.  அவள் கைகளைத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தவளின் மௌனத்தைக் கலைத்தாள் சுசித்ரா.
“மெஹக்..நான் சொன்னது கேட்டிச்சா?” என்றாள்.
“கேட்டிச்சு..அது என் தொழில்.” என்று இரண்டே வார்த்தைகளில் பதிலளித்தாள்.
அந்தப் பதிலில் சினேகிதிகள் இருவருக்கும் அன்று மாலை மெஹக் இருந்த மன நிலை நினைவிற்கு வந்தது.  அதற்குமேல் அவளுடன் பேச்சை வளர்க்க முடியாது என்று உணர்ந்த ஸ்மிரிதி அவளெதிரே இருந்த கபீருக்கு சைகை காட்ட, அறையின் மூலைக்கு சென்று திரும்பி வந்தவன் கையில் ஒரு ட் ரெ அதில் சின்ன ஸைஸில் ஐந்து தர்மாஸ் இருந்தது.  அதிலிருந்து ஒன்றை எடுத்து மெஹக்கின் கையில் கொடுத்து,
“நீ கேட்ட என்னோட ஸ்பெஷல்…நாம எல்லாரும் எப்படி ஆரம்பிச்சோமோ அதே அளவுலே..அதே மாதிரி.” என்று சொன்ன ஸ்மிரிதிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாய் ஆர்பாட்டம் செய்யாமல் அமைதியாக அதைப் பெற்று கொண்ட மெஹக்.
“வாவ்..நைஸ் அண்ட் நாஸ்டால்ஜிக் (nostalgic)..தாங்க்ஸ்.” என்றாள்.
அங்கே இருந்த மற்றவர்களிடமும் ஸ்மிரிதி அதே போல் ஃபிளாஸ்க்கை கொடுத்த போது, ஆண்கள் இருவரும் சந்தோஷத்துடன் வாங்கிக் கொள்ள, சுசித் ரா சந்தேகத்துடன் பெற்று கொள்ள, மிஞ்சியிருந்த கடைசி ஃபிளாஸ்கை சங்கடத்துடன் பற்றி கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. சந்தேகத்தையும், சங்கடத்தையும் பார்த்து சிறு புன்னகையுடன்,”உங்க இரண்டு பேருக்கும் ஜஸ்ட் ஆரன் ஜுஸ் தான்.” என்றான் மனு.
நண்பர்கள் நால்வரும் அவர்கள் ஃபிளாஸ்கைத் திறந்து ஒன்றாக அதை உயர்த்தி,”சியர்ஸ்..ஹாப்பி மேரிட் லைஃப் பட்டி (buddy)” என்று வாழ்த்து சொல்லிவிட்டு ஒரே மூச்சில் குடித்து முடிக்க, ஸ்மிரிதியும் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அவர்களுடன் சேர்ந்து ஒரே மூச்சில் ஜுஸைக் குடித்து முடித்தாள். 
அவளின் ஸ்பெஷல் டிரிங்கை அளவில்லாமல் எதிர்பார்த்து கொண்டிருந்த மெஹக்கிற்கு சிறிய அளவிலான அந்த ஃபிளாஸ்க் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிந்த போதும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்த அவளின் மனபோக்கை ஸ்மிரிதியால் கணிக்க முடியவில்லை. அவளின் மனவோட்டத்தை எப்படி தெரிந்து கொளவதென்று ஸ்மிரிதி யோசித்து கொண்டிருந்த போது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில்,”உன்னோட ஸ்பெஷல் டச்சுக்கு தாங்க்ஸ் ஸ்மிரிதி..நான் கிளம்பறேன்.” என்று சொல்லி எழுந்து கொண்டாள் மெஹக்.
“என்ன மெஹக் இப்பவே கிளம்பற? நாம எல்லாரும் இங்க உட்கார்ந்து பேச ஆரம்பிச்சு பத்து நிமிஷம் கூட ஆகலே.” என்றாள் சுசித் ரா.
“நான் டயர்டா இருக்கேன்..நாளைக்கு விடியற் காலைலே ஃபிளைட்..இறங்கினவுடனே அவுட்டோர் ஷெட்யூல்..இப்ப தூங்கினாதான் உண்டு.” என்று சொல்லி அவளை யாரும் தடுக்குமுன் அங்கிருந்து வெளியேறினாள் மெஹக்.
“சுசி..அவ மேலே ஒரு கண்ணு வைக்க சொன்னேனே?” என்ற ஸ்மிரிதி விசாரிக்க,
“அமைதியா தான் உட்கார்ந்திருந்தா..வித்தியாசமா எதுவும் நடக்கலே..எனக்கும் டயர்டாதான் இருக்கு..நானும் கிளம்பறேன்..நாளைக்கு சாயந்திரம் ஃபிளைட் எங்களுக்கு..உன்னை ஏர்போர்ட்லே மீட் பண்றேன்.” என்றாள் சுசித் ரா.
அதற்குமேல் நண்பர்களைத் தாமதிக்க விரும்பாமல் அவர்களிடம் விடைப் பெற்று கொண்டாள் ஸ்மிரிதி.
ஆனால் மெஹக்கின் செய்கை ஸ்மிரிதியை விட்டு அகலாமல் மனதில் ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டிருந்தது.  கார்மேகம் ஏற்பாடு செய்திருந்த காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது,
“மனு, பெரிய ஃபிளாஸ்க் வாங்கியிருக்கலாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“எதுக்கு? நீங்க எல்லாரும் எப்படி இந்தப் பழக்கத்தை ஆரம்பிச்சீங்கன்னு கபீர்கிட்ட கேட்டேன்..அவந்தான் வெந்நீர் குடிக்க கொடுத்த சின்ன ஃபிளாஸ்க்லே கலந்து வைச்சு குடிப்பீங்கன்னு சொன்னான்..அதே பழைய நினைவைக் கொண்டு வரத்தான் அந்த மாதிரியே தேடி பிடிச்சு உனக்கும் சேர்த்து ஐந்து ஃபிளாஸ்க் வாங்க சொன்னேன்..உனக்கு வேண்டாம்னு சொன்னான்..ஏன்னு கேட்டதுக்கு கார் விபத்துக்கு அப்பறம் நீ குடிக்கறதை விட்டுடேன்னான்….
நீ ஏன் விட்டேன்னு அவன்கிட்ட கேட்கலே..அவன் உன் பிரண்டா இருந்தாலும் அவன்கிட்ட உன்னைப் பற்றி பேச விரும்பலே..இன்னைக்கு காலைலே ஒரு ஆள் டவுன்னு நான் சொன்ன போது நீ அது மெஹக்குன்னு நினைச்ச..நான் சுசித் ரான்னு சொன்னேன்..நீ கரெக்ட்டுன்னு ஒத்துகிட்ட ஆனா ஒருத்தர் இல்லை இரண்டு பேருன்னு என்னைத் கரெக்ட் செய்யலே..நீ எப்போ என்கிட்ட காரணத்தை சொல்லணும்னு நினைக்கறேயோ அதுவரைக்கும் காத்திருக்க நான் ரெடி.” என்றான்.
அவளைப் பற்றிய முக்கியமான விஷயத்தை கபீரிடமிருந்து தெரிந்து கொண்ட பின்னும் அதைப் பற்றி மேலும் விசாரிக்காமல் அதை அப்படியே ஏற்று கொண்ட மனுவிடம்,”தாங்க்ஸ்.” என்றாள் ஸ்மிரிதி.
அதற்குமேல் இருவரும் மௌனமாக அந்த மௌனம் ஏற்படுத்திய மன நிலை பிடிக்காமல் அவன் மனைவியை,“உனக்கு ஸ்குரூ டிரைவர் ரொம்ப பிடிக்கும்னு எனக்குத் தெரியும்..எனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு உனக்குத் தெரியுமா ஸ்மிரிதி பேபி?” வம்பிற்கு இழுத்தான் கணவன்.
ஸ்மிரிதியை நிகழ் காலத்திற்குத் திருப்பிய அந்தக் கேள்வி மனுவை அவளுடைய கணவன் என்று பிரேமா அறிவுறுத்தியதை நினைவுப்படுத்தியது.  இதுவரை எந்த விஷயத்திலும் அவனின் விருப்பு, வெறுப்பை தெரிந்து கொள்ள முற்படவில்லை என்ற குற்ற உணர்வு அவளைத் தாக்க,
“உனக்கு எது ரொம்ப பிடிக்கும் மனு?” என்று அவன் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள ஸிரியஸாக ஸ்மிரிதி கேட்க,
“உனக்குப் பிடிச்சதுதான் எனக்கும் பிடிக்கும்.” என்றான் மர்ம புன்னகையுடன்.
“எனக்குப் பிடிச்சதா?” 
“ஸ்குரூ டிரைவர் பேபி.” என்றான் சில்மிஷ சிரிப்புடன். அவன் சிரிப்பில் மறைந்திருந்த சில்மிஷத்தைக் கண்டு கொண்டு,
“வேணாம் மனு…இதோட ஸ்குரூ டிரைவர் பேச்சை விட்டிடு..இல்லை..” என்று எச்சரிக்கை விடுத்தாள் ஸ்மிரிதி.
“உண்மைதான் பேபி..ஸ்குரூ டிரைவரை ட் ரிங்க் பண்ண இல்லை..ஸ்குரூவை டிரைவ் பண்ண பிடிக்கும்.” என்று வினயமாக விளக்கம் கொடுத்து விவகாரமான விஷயத்தை ஆரம்பித்தான் வக்கீல்.
அவன் விளக்கத்திலிருந்த விஷமத்தை உணர்ந்த ஸ்மிரிதியின் மனது அதை அவசரமாக அலச முற்பட அதற்கு வாய்ப்பு அளிக்காமல் அவர்கள் உரையாடலை அடுத்த கட்டத்திற்கு கடத்தி சென்றான் மனு.
“இன்னைக்கு காலைலே யாருக்கும் யாருக்கும் கல்யாணம் நடந்திச்சு பேபி?” என்ற முட்டாள்தனமானக் கேள்வியுடன் மறுபடியும் வில்லங்கமாகப் பேசினான் வக்கீல்.
“மனு..வேணாம்..பதில் தெரிஞ்சுகிட்டே கேட்கற..என் வாயைக் கிளறாதே.”
“உன் வாயாலே அதை கேட்க ஆசைப்படறேன் பேபி..ப்ளீஸ்.” என்று சாதாரணமாக அவன் கேட்க அந்தக் கோரிக்கையை மறுக்க முடியாமல்,
“எனக்கும், உனக்கும்..ஸ்மிரிதிக்கும், மனுவுக்கும்.” என்றாள்.
“நோ பேபி..ஸ்குருவுக்கும், டிரைவருக்கும்…. அதனாலேதான் இன்னைக்கு ஸ்குரூடிரைவருக்கு ஸ்பெஷல்  நைட்..ஸ்குரூவோட ஸ்பெஷல் டிரைவ் வித் ஸ்பெஷலிஸ்ட் டிரைவர்.” என்று அவர்களிருவருக்கும் ஸ்குரூ, டிரைவர் என்று புது பட்டப்பெயர் வைத்து, அவனே அவனுக்கு ஸ்பெஷலிஸ்ட் டிரைவர் என்று புது பட்டம் கொடுத்து, அவர்கள் ஆரம்பிக்க போகும் புது பயணத்தைப் பற்றிய எதிர்ப்பார்பை தூண்டி ஸ்மிரிதியின் ஸுனாமி எதிர்ப்பை எதிர்பார்த்த மனு வளவனை ஏமாற்றாமல் அலைபோல் எழும்பிய ஸ்மிரிதி,
“என் வாயைக் கிளறாதேன்னு சொன்ன கேட்க மாட்டேங்கற….நான் நெட் பிராக்டீஸுக்கு ரெடியா வந்தேன்.. நீ  டிரைவுக்கு ரெடியா வந்திருக்க..டிரைவரோட டிரைவ் குவாலிட்டியை ரைடரோட ரெட்டிங்தான் தீர்மானிக்கும்..டெஸ்ட் டிரைவ் முடியாம உனக்கு டிரைவர்ன்னுகூட ஸர்டிஃபிகெட் கொடுக்க முடியாது..என்னோட ஸ்பெஷலிஸ்ட் டிரைவராகணும்னா அயராது உழைக்கணும் மனு பேபி.” என்று அவர்களின் ரைடில் (ride)  அவளின் ரைடரைப் (rider) புகுத்தி அவர்களின் புது பயணத்தைப் பற்றிய அவளின் எதிர்பார்பை மனு பேபிக்கு தெரியப்படுத்தி பர்ஃபாமன்ஸ் பீதியை ஏற்படுத்தினாள் ஸ்மிரிதி பேபி. 

Advertisement