மதியம் மூன்று மணிக்கு மேல தர்மா மகன்களோடு வந்து வீட்டில் இறங்கஅபி ஓடி வந்து தந்தையை அனைத்துக் கொண்டாள். “சாரி டா சாரி டா…” என்றான் தர்மா மகளிடம். அவள் நேற்றில் இருந்து எவ்வளவு மனஉளைச்சலில் இருந்திருப்பாள் என்று தெரியும்


எல்லோரும் அவனை நலம் விசாரித்தனர். தர்மா எல்லோரோடும் பேசினாலும் பார்வையெல்லாம் மனைவி மீதுதான். கீர்த்தி யாரோடும் பேசாமல் அமைதியாக மூவரையும் பார்வையால் ஆராய்ந்தவள், வேலை இருப்பது போல உள்ளே சென்று விட்டாள். நாயகி அறையில் படுத்திருக்கத் தர்மா அவரைப் பார்க்க சென்றான். மற்றவர்களும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர்


விஷாகன் குளித்து விட்டு வந்து கீர்த்தியை, “அம்மா…” என அணைத்துக்கொள்ள… “ஒழுங்கா அடி வாங்காம ஓடிடு.” என்றால் கீர்த்தி


கோபமா இருக்கீங்களா மா?” என அவன் தெரியாதது போலக் கேட்க


இல்லை ரொம்பக் குளு குளுன்னு இருக்கேன்.” என்ற கீர்த்திக் கார்த்திகேயனுக்கு உணவுப் பரிமாற… 


இவனும் தான் உங்ககிட்ட சொல்லாம வந்தான்.” என விஷாகன் போட்டுக் கொடுக்க, ஏன் டா என்பது போல கார்த்திகேயன் தம்பியை முறைத்தான்.  


ஆனா அவன் எப்படி வந்தான். ஒழுங்கா உங்க அக்காகிட்ட சொல்லி, வீட்ல இருந்து கார் எடுத்திட்டு, துணைக்கு டிரைவரோட வந்தான். நீ எப்படிப் போன?”

எனக்கு அப்போ அதெல்லாம் தோணலை. ஆனா நானும் பத்திரமா தான் போனேன்.” என்றான். அதற்குள் தர்மா குளித்து விட்டு வரகீர்த்திக் கணவனுக்கு உணவு பரிமாறினாள்


சாப்பிட உட்கார்ந்த விஷாகன், “என்னது சாம்பாராஹாஸ்ட்டல்ல இருந்து வந்த பையனுக்குச் சாம்பாரா மா போடுவீங்க?” என அவன் பரிதாபமாகக் கேட்க


உனக்குச் சோறு போடுறதே பெரிசு பேசாம உட்கார்ந்து சாப்பிடு.” என்றால் கீர்த்தி


நேத்தெல்லாம் எனக்கு உடம்பே முடியலைஇந்த விஷயம் நேத்து தெரிஞ்சிருந்தா, நான் நேத்தே போயிருப்பேன்.” என நாயகி உருக்கமாகச் சொல்ல… 


நீங்க போயிட்டா எனக்கு யாரு பாட்டி கதை சொல்லுவா?” என அபியும்


எனக்கு யாரு பாட்டி எண்ணெய் தேய்ச்சு விடுவா? எனக் கார்த்திகேயனும்


ஆமாம் பாட்டி நீங்க அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் போயிடாதீங்க. நீங்க போயிட்டா அப்புறம் நாங்க யார் கூட சண்டை போடுறது?” என்று விஷாகனும் நாயகியை வம்பிழுக்க, பார்த்தியா இதுங்களை என நாயகி முறைக்கஉண்டபடி தன் பிள்ளைகள் செய்யும் ரகளையைத் தர்மா ரசித்திருக்ககீர்த்தி அதற்கெல்லாம் மசியவில்லை


உண்டு முடித்து ஜமுனாவும் நாயகியும் படுக்கச் சென்று விடகீர்த்தி மட்டும் இன்னும் உண்ணவில்லை.

நீங்க அப்பா, பிள்ளைங்க எல்லாம் ஒன்னு சேர்ந்திட்டீங்க. என்கிட்ட எதுவும் சொல்றது இல்லை. நான் எதுக்கு இங்க இருக்கணும்? நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்.” என்றால் கீர்த்தி. பிள்ளைகள் மூவரின் முகமும் மாறிவிட்டது


அவங்க உன்கிட்ட சொல்லலை தான். ஆனா அவங்க யாருக்காகக் கீர்த்தி இதெல்லாம் பண்ணாங்க?” தர்மா கேட்க, கீர்த்திக் கணவனைப் பார்க்க


உனக்காக எனக்காகத் தான்.” என்றான்


நான் நல்லபடியா வந்திட்டேன். அதனால நீ இப்படிப் பேசுறஇதே நேத்து உனக்கு என்னைப் பத்தி தெரிஞ்சிருந்தாநீ எப்படி இருந்திருப்ப? யோசிச்சு பாரு.” 


அவங்க பத்திரமா வந்திட்டாங்க. நீ திரும்ப அதையே யோசிக்காத. பயந்திட்டே இருந்தா எதுவும் செய்ய முடியாது.” என்றதும், கீர்த்தி விஷாகனை பார்த்து கைநீட்டஅவன் சென்று அவள் கைபிடித்து அருகில் உட்கார்ந்து தோள் சாய்ந்து கொண்டான்


நான் அபியை ரொம்ப பேசிட்டேன் சாரி…” என்றால் மகளைப் பார்த்து. அபி வந்து அவளின் இன்னொரு பக்கம் உட்கார்ந்து கொண்டாள்


சாப்பிடுங்க மா…” எனக் கார்த்திகேயன் தட்டில் உணவு போட்டு எடுத்து வந்து கொடுத்தான்


பிள்ளைகள் தன் அம்மாவை தாங்குவதை தர்மா பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்

அன்று எல்லோரும் சேர்ந்தே இருந்தனர். மாலை பள்ளியில் இருந்து ஹர்ஷாவும் வந்துவிடஅதன் பிறகு அவனை வைத்து ஒரே கலாட்டா

இரவு அக்கா தம்பி மூவரும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர்

அப்பாவுக்கு மட்டும் எதாவது ஆகி இருந்தா…” என அபி கண் கலங்க… 

அக்கா, மாடியில இருந்து அப்பா நம்மைத்தான் பார்த்திட்டு இருக்கார்.” என கார்த்திகேயன் எச்சரிக்க, அபி சமாளித்துக் கொண்டாள்.

உன் வேலைக் கூட ஒருவருக்கு பயன்படும் என்றால்அதை விட வேற என்ன சிறப்பு என தந்தை சொன்னது விஷாகனின் மனதில் பதிந்து இருக்க

கார்த்தி நீ கலக்டர் ஆகு. நான் பி எஸ் ஆகிறேன். நமக்கு வேலைப் போனாலும் கவலை இல்லை. இருக்கவே இருக்கு எனக்கு டி வேலை. உனக்கு அப்பா பிஸ்னஸ். தப்பு பண்றவங்களை எல்லாம் சும்மா விரட்டி விரட்டி அடிக்கிறோம்.” என்றான்

கார்த்திகேயனும்ஆமாம்  நம்ம மனசாட்சியை அடக்கு வச்சு வேலைப் பார்க்கனும்னு அவசியம் இல்லை.”

அதுவும் நம்ம அக்காவும் பிஸ்னஸ் பார்க்கிறாங்க. நமக்கு என்ன கவலை.” என்றான்

பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்த தர்மா அறைக்குள் செல்லகீர்த்தி படுக்க தயாராகி கொண்டிருந்தாள்

அவளை அணைத்தவன், “என்னோட மகாராணிக்கு கோபம் போச்சா?” என கேட்ககீர்த்தி வார்த்தையால் பதில் சொல்லாமல் தானும் கணவனை அனைத்துக் கொண்டாள்


அந்த வருட ஊர் திருவிழாவுக்கு மொத்த குடும்பமும் சொந்த ஊருக்கு சென்றனர். தர்மாவின் குடும்பம் வருடாவருடம் ஊர் திருவிழாவுக்கு வந்து விடுவார்கள். தர்மா அருணாவும் கண்டிப்பாக வர வேண்டும் என்பான். அதனால் அவளும் குடும்பத்துடன் வந்து விடுவாள். ஆனால் மற்ற குடும்பங்கள், இரண்டு மூன்று வருடத்திற்கு ஒருமுறைதான் வருவார்கள். இந்த முறை எல்லோரும் வந்திருந்தனர்.

குல தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அடுத்த நாள் ஊர் கோவிலில் பொங்கல் வைத்தனர். அன்று இவர்கள் குடும்பம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது.

எல்லோரும் பட்டு வேஷ்ட்டி சட்டையில் இருக்கமுதல் முறையாகக் கார்த்திகேயனும் விஷாகனும் வேட்டி கட்டி இருந்தனர்.

இவர்கள் இருவரோடு விஷாலும் சேர்ந்துகொள்ளமூவரும் துண்டை தலையில் கட்டிக்கொண்டு, கூலர்ஸ் வேறு போட்டு ஒரே கலக்கல் தான்


ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்.” எனச் சேர்ந்து டான்ஸ் வேறு ஆடினர்


பாவாடை தாவணியில் அபிநயா இன்னும் மெருகு கூடி தெரியகீர்த்தியும் பாந்தமாகப் பட்டுப் புடவையில் வளைய வந்தாள்


இவர்கள் எல்லோரும் விழா நடக்கும் இடத்திற்குச் செல்லஅன்று தர்மாவிற்கு ஊர்ப் பெரியவர்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.

பலர் மகிழ்ச்சியோடு பார்த்தாலும் சிலருக்குப் பொறமை இருக்கத்தான் செய்யும். தர்மா அந்த ஊருக்கு செய்தது கொஞ்சம் நஞ்சம் அல்லஅந்த சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க அவ்வளவு செய்திருக்கிறான். அது தவிர பொது நூலகம் வேறுஅவனால் நிறைய பேர் இன்று படித்துக் கொண்டிருக்கிறார்கள்

  
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்த தர்மா, கீர்த்தியை தன்னுடன் மேடைக்கு அழைத்துக் கொண்டான்


இவங்க மட்டும் இல்லைனாநான் இதெல்லாம் செய்திருக்கவே முடியாது. என்னை எப்பவும் நம்பினாங்க. அவங்க வச்ச நம்பிக்கைதான். நான் இன்னைக்கு இங்க இருக்கேன்.” என்றான்


தந்தை பேசப்பேச பிள்ளைகள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று கைதட்டினர். மூவருக்குமே கண்கள் கலங்கியது


உங்க பிள்ளைங்களை மேடைக்கு அழைக்கலையா?” என ஒருவர் கேட்க


அவங்களே ஒருநாள் ஏறுவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றான் தர்மா பிள்ளைகளைப் பார்த்து. மூவருக்கும் தந்தை என்ன சொல்கிறார் என்று புரிந்தது


உங்களுக்கான மரியாதையை, மேடையை நீங்களே தேடிக் கொள்ளுங்கள் என்பது தான் அது. நான் செய்து காட்டி விட்டேன். இனி நீங்கள் செய்ய வேண்டும் என்கிறார் எனப் புரிந்தது. மூவரும் தந்தையை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினர்


தர்மாவும் கீர்த்தியும் மேடையில் இருந்து இறங்கபிள்ளைகள் மூவரும் பெற்றோரை சூழ்ந்து கொண்டனர். தர்மா மகன்களின் தோளில் கைபோடுக்கொள்ளகீர்த்தி மகளை அனைத்துக் கொண்டாள். அழகான அன்பான குடும்பம்


ஆசை ஆசையாய் இருக்கிறதேஇது போல் வாழ்ந்திடவே
பாசப் பூ மழை பொழிகிறதேஇதயங்கள் நனைந்திடவே
நம்மைக் காணுகிற கண்கள்நம்மோடு சேரக் கெஞ்சும்

சேர்ந்து வாழுகிற இன்பம்அந்த ஸ்வர்கம் தன்னை மிஞ்சும்.