சாரல் மழையே


இறுதி அத்தியாயம்



நாயகிக்கு ஆஸ்த்துமா நள்ளிரவு வரை படுத்திவிட்டது. அதன் பிறகுதான் அவர் உறங்க ஆரம்பித்தார். ஜமுனா அவருடன் இருக்க அறைக்கு வந்த கீர்த்தி, “என்ன இவரு ஒரு தகவலும் இல்லை. இப்படியெல்லாம் இருக்க மாட்டாரே.” என யோசித்துக் கொண்டிருந்தவள், பிறகு கைபேசியில் முகநூல் எல்லாம் சென்று பார்க்கும் போது தான். கடலூரில் மீண்டும் புயல் வந்து மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்தாள்


அவளும் கணவன் அவன் நண்பர்களுக்கு என அழைத்துப் பார்த்து யாரின் கைபேசிக்கும் அழைப்பு செல்லவில்லை என்றதும், சிக்னல் இருக்காது எனத் தன்னையே சமாதானம் செய்து கொண்டாள். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தானே இருக்கிறார்கள் என நினைத்துத் தைரியமாக இருந்தாள். அவளுக்குத் தர்மா மட்டும் தனியாகச் சென்று மாட்டிக்கொண்டது தெரியாது


கணவன் எப்படியும் நாளை காலைக்குள் வந்து விடுவான் என நினைத்தவள், பிள்ளைகள் உறங்கி விட்டார்கள் என நினைத்து படுத்தும் விட்டாள்


அவர்கள் இருவரும் எங்கே உறங்கினார்கள். கீர்த்திப் படுக்கும் வரை உறங்குவது போலப் படுத்திருந்தவர்கள், அவள் உறங்கி விட்டால் என்றதும் மீண்டும் எழுந்து கீழே ஹாலுக்குச் சென்றனர்


விஷாகன் கடலூர் அருகே சென்றதில் இருந்து அவனோடும் தொடர்பு விட்டுப் போனது. அவன் தந்தையிடம் போய்ச் சேர்ந்தானா இல்லை வழியில் எங்கும் மாட்டிக்கொண்டானா என அது வேறு தெரியவில்லை. அவ்வளவு அனுபவசாலியான தந்தை கூட எப்படியும் பத்திரமாக இருப்பார் என நம்பிக்கை இருந்தது. இப்போது விஷாகன் கவலைதான் பெருங்கவலையாக ஆகிவிட்டது அபிநயாவுக்கும் கார்த்திகேயனுக்கும்


அக்கா நான் நம்ம கார் எடுத்திட்டுப் போய்ப் பார்த்திட்டு வரட்டுமாகூட டிரைவரும் வரட்டும் தனியா இல்லை.” எனக் கார்த்திகேயன் சொன்னதும், அபிக்கும் வேறு வழியில்லை சரியென்றாள்


அபியே மணியை அழைத்து இதுமாதிரி தந்தை போன இடத்தில் மாட்டிக்கொண்டார். அவரை அழைக்கக் கார்த்திகேயன் செல்கிறான். கூடக் கார் எடுத்துக் கொண்டு செல்ல முடியுமா எனக் கேட்க, “நான் வரமா யார் வருவா? நான் வரேன்.” என்றார்


விடியக் காலையில மூணு மணிக்கு கிளம்புங்க என மணியும் சரியாக அந்த நேரத்திற்கு வந்து விட…. அபி கார்த்திகேயனை காரில் அனுப்பி வைத்தாள்


இப்போது இவனையும் அனுப்பி விட்டுக் காலையில் அம்மா எழுந்து வந்து கேட்டால் என்ன சொல்வது எனத் தெரியாத பயத்தில் உறங்கவும் முடியாமல் விழித்தே இருந்தாள்


காலையில் எழுந்து வந்த கீர்த்திக்கு இன்னும் கணவன் வரவில்லை என்றதும் பெரும் கவலையாகிவிட்டது. நாயகியை சென்று பார்த்து அவருக்கு என்ன தேவை எனக் கவனித்து வந்தவள், பிள்ளைகளைச் சென்று பார்க்கக் அபி மட்டுமே இருந்தாள்


கார்த்தி எங்க?” எனக் கேட்க


அவன் எதோ வேலைன்னு காலையில கிளம்பி போயிட்டான் மா…” என்றாள்


என்ன இது புதுபழக்கம், சொல்லாம போறது என நினைத்து கீர்த்தி மகளைப் பார்க்க, அபி வேறு எதுவோ வேலை இருப்பது போல நகர்ந்து விட்டாள்


கீர்த்திக் கணவனுக்கு அழைக்கஅழைப்பு செல்லவில்லை. கார்த்திகேயனுக்கு அழைக்க அவனுக்கும் அழைப்பு செல்லவில்லை. அப்போது தான் சந்தேகம் வந்தது. ஒருவேளை தந்தையைத் தேடிக்கொண்டு சென்றுவிட்டானோ எனவெளியே சென்று பார்க்க இவள் கார் மட்டும் இருந்தது. தர்மா கார் இல்லை. அவனே கார் எடுத்து சென்றானோ எனப் பயந்து விட்டாள்


என்ன நடக்குது அபி? கார்த்தித் தனியா கார் எடுத்திட்டு போனானா?” எனக் கேட்க, 


இல்லைமா டிரைவர் கூடத்தான் போனான்.” என்றதும், மணி அவர்கள் வீட்டில் பல வருண்டங்களாக டிரைவராக இருப்பவர், அவருடன் என்றதும் தனியாகச் செல்லாமல் அவரையாவது அழைத்துக் கொண்டு சென்றானே என நினைத்தவள், தர்மா நண்பர்களுடன் தானே சென்றான். எதற்கு இந்தப் பிள்ளைகள் இப்படிப் பயப்படுகிறார்கள் எனச் சந்தேகம் வர…. மகளைப் பார்க்கஅவள் குளிக்கச் சென்றிருந்தாள்


சரி வரட்டும் எனக் கீர்த்தி அவள் வேலையைப் பார்க்க சென்றாள்.
விஷால் மனைவி வழி சொந்தத்தில் திருமணம் எனக் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தவன், விடியற்காலை தான் வீடு திரும்பி இருந்தான்


காலையில் மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அப்படியே இங்கே வந்தவன், “எங்கே அண்ணன்?” எனக் கேட்க, கீர்த்தி விவரம் சொல்லஎப்போதும் நடப்பது தானே என நினைத்தவன், “கார்த்திக் காலேஜ் போயிட்டானா?” எனக் கேட்க


எனக்கு அவன் எங்கே போனான்னு தெரியலைமுதல் இந்த வீட்ல என்ன நடக்குதுன்னே தெரியலை? நீங்களே கேளுங்க.” என்றால் அபியைக் காட்டி


என்ன அபி அம்மா எதோ சொல்றாங்க? எங்க கார்த்தி?” எனக் கேட்க


அவன் அப்பாவை கூடிட்டு வர பாண்டிச்சேரி போயிருக்கான்.” என்றாள்


அப்பா இப்படி எப்பவும் போறது தானேஅவருக்கு வரத் தெரியாதா இவன் ஏன் போனான்?” எனக் கேட்ட விஷாலுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற, அவன் அபியைப் பார்க்கஅவள் வேறு எங்கோ பார்த்தாள்


அண்ணி அதெல்லாம் அண்ணன் வந்திடுவார். கார்த்திக் நம்ம கார்ல தானே போயிருக்கான். விடுங்க பார்த்து கூடிட்டு வரட்டும்.” எனச் சாதாரணம் போலச் சொன்னவன், பாட்டி எப்படி இருக்காங்க என நாயகியை பார்க்க சென்றவன், திரும்ப வந்து பார்க்க கீர்த்திச் சமையல் அறையில் இருக்க.. அபியை வெளியே அழைத்துக் கொண்டு சென்றான்


என்ன ஆச்சு அபி? அப்பா எப்பவும் போறது தானேஇவன் ஏன் போனான்?” எனக் கேட்க, அபி நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்


விஷாகன் நேற்று இரவு சென்றவன் பற்றி இப்போது வரை தகவல் இல்லையென்றதும் விஷாலுக்குமே பதட்டமாகத்தான் இருந்தது. இது கீர்த்திக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என அது வேறு கவலையாக இருக்கஅபியைப் பார்க்ககண்கலங்கி நின்றிருந்தாள்


அபி எதுவும் ஆகாது. எல்லாம் பத்திரமா வந்திடுவாங்க.” என்றான் ஆறுதலாக


எங்க அப்பாவுக்கு மட்டும் எதுவும் ஆகியிருந்தா அந்தக் கடவுளே இல்லை சித்தப்பா. எங்க அப்பா எவ்வளவு நல்லது பண்ணி இருக்கார். நல்லவங்களைக் கூட வாழ வைக்கலைனா அவர் என்ன கடவுள்.” என அவள் இத்தனை நேரம் உள்ளே அழுத்தி வைத்திருந்தது கோபமாக வெளி வர… 


அப்படியெல்லாம் எதுவும் ஆகாது அபி. உங்க அப்பா பத்திரமா இருப்பார். அவரைத் தேடி போயிருக்கானுங்க பாரு, இவனுங்க தான் என்ன ஆனானுங்க தெரியலை.” என்றவன், கைபேசியை எடுத்து விஷாகன் எண்ணுக்கு முயன்றான். அழைப்பு செல்லவில்லை


இன்டர்நெட்டில் ஆராய்ந்து கடலூரில் இப்போது என்ன நிலவரம் எனப் பார்த்தவன், ஏற்கவனவே இரண்டு பேர் சென்றிருக்க…. நாமாவது இவர்களுடன் இருக்க வேண்டும் என நினைத்து, யாரைப் பிடித்துக் கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தான்


என்ன எதுவும் சொன்னாளா?” எனக் கேட்டுக் கொண்டு கீர்த்தி வர… 


கடலூர்ல நைட்ல இருந்து மழை இல்லை. புயல் அடிச்சதுல எங்கையும் சிக்னல் இருக்காது. இப்ப காலையில தான் எல்லாம் சரி பண்ணுவாங்கஇன்னும் கொஞ்ச நேரத்தில தெரியும் அண்ணி.என்றான்


எனக்கு அது தெரியும். கார்த்தி எதுக்குப் போனான்?எனக் கீர்த்திக் கேட்க, அபி சொல்ல முடியாது என்பது போல நின்றிருந்தாள்


இதற்கு மேல் பேசினால் அம்மா கண்டு பிடித்து விடுவார்கள். விஷாகனும் போனது தெரிந்தால்இன்னும் பதட்டம் தான்.” எனப் பேசாமல் இருந்தாள். 


டேய் உங்க வீட்ல இருந்து இன்னும் வேற யாரும் வர்றதுக்குள்ள இங்க இருந்து கிளம்பலாம்.” என நண்பர்கள் தர்மாவிடம் சொல்லஉடனே அங்கிருந்து கிளம்பி இருந்தனர்


ரோட்டில் கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தி இருக்ககார்த்திகேயன் தந்தையின் நண்பர்கள் இருந்த இடம் வரை காரில் வந்துவிட்டான். அங்கிருந்து இரண்டு கார்களில் கிளம்பி இங்கே வரபாதி வரை தான் வர முடிந்தது. அதற்குப் பிறகு காரை நிறுத்துவிட்டு நடந்து தான் வந்தனர்.
அதனால் இப்போது சிறிது தூரம் நடந்து வந்து காரில் ஏறி, கடலூரு தாண்டியும் இன்னும் சிக்னல் இல்லை. மகன்கள் சோர்வாக இருப்பதைப் பார்த்து தர்மா அங்கிருந்த சின்ன ஹோட்டில் என்ன இருக்கிறதோ அதை வாங்கி உண்ண செய்தான்


டிரைவரோடு கார்த்திகேயன் முன்பக்கம் அமர்ந்து கொண்டான். பின் சீட்டில் தர்மாவும் விஷாகனும் இருந்தனர். நேற்றெல்லாம் நடந்து நடந்து விஷாகன் மிகவும் களைத்துப் போயிருந்தான். இப்போது உண்டதும் உறக்கம் வரஅதைக் கவனித்த தர்மா, மகனை தன் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்ளச் சொல்லவிஷாகனும் படுத்துக் கொண்டவன், உறங்கும் முன் தந்தையின் முகம் பார்த்து, “சாரி பா…” என்றான்


மகன் எதற்கு மன்னிப்புக் கேட்கிறான் எனத் தர்மாவுக்குப் புரியாமல் இல்லை. “தூங்கு…” என்றான் மிருதுவாக. விஷாகன் கண்ணை மூடிக் கொண்டான்


தர்மா கார்த்திகேயனிடம் என்ன நடந்தது என முழுவதும் விசாரித்துத் தெரிந்து கொண்டான். மனைவிக்கு இவர்கள் வந்தது, தன்னுடைய நிலை என எதுவும் தெரியாது எனப் புரிந்தது


காரில் செல்லை சார்ஜ் போட்டிருந்தனர். அது கொஞ்சம் ஏறும் வரை காத்திருந்த தர்மா ஏறியதும், இப்போது இரண்டு புள்ளிகள் சிக்னலும் இருக்கமனைவியை அழைத்திருந்தான். எடுத்ததும் கீர்த்திப் பொரிந்து தள்ளிவிட்டாள்


எங்கப் போனீங்க நீங்க? நேத்துல இருந்து ஒரு போன் இல்லை. ஒரு தகவல் இல்லை. நான் பயந்தா உங்க பசங்க வேற பயப்படுவாங்கன்னு நானும் எவ்வளவு நேரம் சமாளிக்கிறது? நான் இப்ப அங்க கிளம்பி வர்றதா தான் இருந்தேன்.” என்றதும், நீயுமா என நினைத்தவன், “சாரி மாஇங்க அப்படிச் சூழ்நிலை. நான் இங்க இருந்து கிளம்பிட்டேன்.” என்றான்


எனக்கு இங்க என்ன நடக்குதுன்னே தெரியலை. உங்க பெண்ணைக் கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்கிறா. கார்த்திக் காலையில இருந்து இல்லை. உங்களைத் தேடி நம்ம டிரைவரோட வந்திருப்பான் போலநீங்க அவனைப் பார்த்தீங்களா?” 


அவன் வந்துட்டான். நாங்க இப்போ சேர்ந்து தான் வரோம்.” என்றவன் மகனிடம் கொடுக்க… 


ஹாய் மாநான் உங்ககிட்ட சொல்லாம வந்திட்டேன் சாரி.” என்றான்


ஏன் அதை என்கிட்டே சொல்லிட்டு போனா என்ன? நீ வீட்டுக்கு வா இருக்கு.” என்றவள், போன்னை அவன் அப்பாவிடம் கொடுக்கச் சொல்ல, தர்மா வாங்கிப் பேசினான்


நான் நேத்துல இருந்து விஷாகன்கிட்ட கூடப் பேசலை. அப்பா வந்திட்டாறான்னு கேட்பானே என்ன சொல்றது? அவன் பாட்டுக்கு உங்களைத் தேடி கிளம்பி வந்திடுவான் தெரியுமா உங்களுக்கு. இங்க அபி முகமே சரியில்லை. கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா. ரொம்பப் பயந்து போயிருப்பா போல…” எனக் கீர்த்தித் தன் மக்களைப் பற்றிச் சரியாகவே கணித்திருக்க…. பெற்றவளுக்குத் தெரியாதா தன் பிள்ளைகளை. மனைவி தான் பிள்ளகைகளை அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாள் என நினைத்தான். உண்மையில் அவன் இவர்கள் வந்து நிற்பார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை


விஷாகன் இப்ப கிளாஸ்ல இருப்பான். சாயங்காலம் தான் அவன்கிட்ட பேசணும்.” என, “சரிமா அவனே கூப்பிடுவான் பாரு.” என்றான்


இப்போதே விஷாகன் இங்கே இருக்கிறான் என்று சொன்னால் டென்ஷன் ஆகிவிடுவாள் எனத் தெரியும். அதனால் நேரில் சென்று மகனை பார்த்த பிறகு தெரிந்துகொள்ளட்டும் என்றுதான் சொல்லவில்லை


தங்கள் அம்மாவுக்கும் விஷயம் தெரியாமல் பார்த்துக் கொண்டு, தன்னையும் தேடி வந்த பிள்ளைகளையும் நினைத்துப் பெருமையாக இருந்தது


அபிகிட்ட கொடு மா…” என்றான். அவள் அம்மா பேசுவதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். கீர்த்தி அவளிடம் போன்னை கொடுக்க… “அபி….” என்ற தந்தையின் அழைப்பு உயிர் வரை தீண்ட… “எங்களை ரொம்ப மிரட்டிடீங்க போங்கப்பா.” என்றால் அழுகையுடன்


சாரிசாரிடாஇப்படி நடக்கும்னு நினைக்கலைநேத்துல இருந்து உங்களுக்கு நான் பத்திரமா இருக்கேன்னு சொல்ல முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்றான்


சற்று தள்ளி வந்து, “விஷாகனை பார்த்தீங்களா பா?” என, “கவலைப்படாத என்னோடதான் ரெண்டு பேரும் இருக்காங்க.” என்றான்


இவன் வேற சொல்ல சொல்ல கேட்காம கிளம்பி போயிட்டான். பத்திரமா போயிட்டானா இல்லையான்னு ஒரே டென்ஷன்.” எனச் சொல்லுபோதே அபியின் குரல் அழுகையில் கேவ…. மகளின் நிலை தர்மாவுக்குப் புரிய… “சாரி என்னாலதான் எல்லாம். அழாத டா…” என்றான்


ஓகே பா பத்திரமா வாங்க.” என வைத்து விட்டாள். அவளுக்குப் பேசவே முடியவில்லை


மகளின் அழுகை கீர்த்தியை யோசிக்க வைக்க… “ஹப்பா… அவங்க அப்பா ஒருநாள் இல்லாம இருந்ததுக்கா இந்த அக்கப்போரு.” என நினைத்தபடி வேலையைக் கவனிக்கச் சென்றாள்


அண்ணனும் அவர் மகன்களும் பத்திரமாக இருக்கிறார்கள் என விஷாலும் நிம்மதியாக அவன் வேலையைப் பார்க்க சென்றான். 


கணவனும் மகனும் வரும் போது உண்ண உணவு தயாராக இருக்க வேண்டுமே எனக் கீர்த்திக் கணேசனுக்கு மதியம் என்ன சமைக்க வேண்டும் எனச் சொல்ல சென்றவள், பிறகு நாயகி எப்படி இருக்கிறார் எனப் பார்த்து வந்து ஓய்வாக உட்கார்ந்தவள் கைபேசியைப் பார்க்க.. விஷாகன் இன்று வகுப்புக்கு வரவில்லை எனத் தகவல் வந்திருந்தது

அவர்கள் கல்லூரியில் ஒருநாள் வகுப்புக்கு வரவில்லை என்றாலும் கைபேசியில் பெற்றோருக்கு தகவல் அனுப்பி விடுவார்கள்.
அதைப் பார்த்ததும் என்ன ஆச்சு இவனுக்கு உடம்பு சரியில்லையோ என நினைத்தவள், விஷாகனுக்கு அழைக்க அவன் கைபேசி அனைத்து வைக்கபட்டிருக்கிறது என்று வந்தது. அவன் போன்னில் சார்ஜ் இல்லாமல் தான் இருந்தது


மகளின் அழுகை, கார்த்திக் கிளம்பி சென்றது எல்லாம் யோசிக்கும் போது சந்தேகமாக இருக்ககணவனுக்கு அழைத்தாள்


சொல்லு மா…” என்றான்


விஷாகன் எங்கே?” எனக் கேட்க, அவன் அப்போது தான் எழுந்து உட்கார்ந்திருந்தான்


காலேஜ்ல இருந்து அவன் கிளாஸ்க்கு வரலைன்னு மெசேஜ் வந்திருக்கு. அவனும் அங்கதான் இருக்கான் இல்ல…” 


அதற்கு மேல் மறைக்க முடியாது என, “ஆமாம் என்னோடதான் இருக்கான்.” 


என்னதான் தர்மா நடக்குது? திருச்சியில இருந்து அவன் என் கடலூர் வந்தான்? உண்மையில உங்களுக்கு என்ன ஆச்சு?” எனக் கீர்த்திப் பொறுமையிழந்து கத்த… 


ஹே டென்ஷன் ஆகாத.” என்றவன் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்ல… 


என்கிட்டே சொல்லாம அவன் எப்படிப் போவான்? அவனுக்கு எதாவது ஆகியிருந்தாஅவனை அப்படியே திருச்சி போகச் சொல்லுங்க. வீட்டுக்கு வந்தா நான் கண்டிப்பா அவனை அடிப்பேன்.” என்றால் கீர்த்தி


என்ன மா இப்படிச் சொல்ற.” என்றவன், “நாம்தான் அவங்களைச் தைரியமா இருக்கச் சொல்லி சொல்றோம். பிறகு அவங்களை எதுவும் செய்யக் கூடாதுன்னு சொன்னா எப்படி? அவன் ரொம்பப் பாதுகாப்பா  தான் வந்திருக்கான். நான் எல்லாம் கேட்டுட்டேன். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கலாம்.” எனத் தர்மா விளக்கி சொல்லியும் கீர்த்திக்குக் கோபம் போகவில்லை. அப்போது எதுவும் பேசாமல் வைத்து விட்டாள்


போன்னை வைத்த கீர்த்தி அபியை பார்த்து, “என் பெண்ணுக்கு பொய்யே சொல்லத் தெரியாதுன்னு நினைச்சு தான் நேத்துல இருந்து நீ சொன்னதை எல்லாம் நம்பிட்டு இருந்தேன்.” 


எல்லோரும் என்னை ஏமாத்தி இருக்கீங்க. நீ உன் தம்பிங்க எல்லாம்.” என அவள் கோபமாகக் கத்த, அதன் பிறகே பதறி ஜமுனாவும் நாயகியும் என்ன என்று விசாரிக்ககீர்த்தி நடந்ததைச் சொல்ல… 


கடவுளேஇவ்வளவு நடந்ததா என இருவரும் அதிர்ச்சியானார்கள்


நாயகியை பார்க்க வந்த சுனிதா மற்றும் சுபாவிடம் நாயகி பெருமையாகத்தான் சொன்னார். இந்தப் பசங்க பாரு அவங்க அப்பாவுக்கு ஒன்னுனதும் ஓடிட்டாங்க. அவங்க அம்மா தெரிஞ்சா கஷ்டப்படுவான்னு அவகிட்டையும் சொல்லாமஅவங்க அப்பாவை தேடிப்பிடிச்சு கூட்டிட்டு தான் வர்றாங்க. 


தர்மா கீர்த்தியோட குணத்துக்குக் கடவுள் ஒரு குறையும் அவங்களுக்கு  வைக்கலை. தர்மா பண்ண புண்ணியமெல்லாம் அவனுக்குப் பிள்ளைகளா பிறந்திருக்கு.” என நன்றாக இருவருக்கும் உரைக்கும்படியே சொன்னார்


எத்தனை முறை தங்கள் பிள்ளைகள் தர்மாவை கீழாகப் பேசும்போது நக்கலாகச் சிரித்திருப்பார்கள். அந்தக் கொதிப்பெல்லாம் அவருக்கு இருக்கத்தானே செய்யும்


சுனிதாவும் சுபாவும் அவரவர் வீட்டில் போய்ச் சொல்லமதிய உணவுக்கு வந்த சூரியா வசீகரன் எல்லாம் கேளிவிப்பட்டு இங்கே வந்தனர்.