Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 42
வெள்ளிக் கிழமை: தூக்கம் களைந்து காலை கண் விழித்த கண்ணனின் கண்கள் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்தவள் மேல் பதிந்தது. ஆசையாய் நெருங்கி சென்றவன் சுதாவின் முடியை ஒதிக்கி, அவன் பின்னங்கழுத்தில் முத்தம் வைத்து, விலகாத சட்டையை விலக்கி அவள் இடையில் கோலம் போடவும், “இன்னைக்கு மட்டும் ஷிட் சொன்னீங்க.. ஜாக்கரத!” சொன்னவளை
புன்முறுவலோடு தன் புறம் திருப்பியவன், கண் திறவாமல் படுத்திருந்தவள் இதழில் மென்மையாய் இதழ் ஒற்றி எடுத்தான். இன்முகமாகவே அன்றைய பொழுதும் ஆரம்பித்தது.
அவள் குளித்துவிட்டி வெளி வரும் போது அவன் காலை உணவு ஆர்டர் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“இஞ்சி.. ரெண்டு பெப்பர்.. ஒரு கார்டமம்.. இதெல்லாம் இடிச்சு போடுங்க, ரொம்பச் சின்ன சின்னமன் ஸ்டிக், ஒரே ஒரு மிண்ட் லீஃப் கடைசியா.. டென் மினிட்ஸ்-ல” அவன் ஃபோனை வைக்கவும் அவன் மடியில் வந்தமர்ந்தவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டே, “உங்களுக்கு எனக்கு பிடிச்ச டீ வரைக்கும் தெரியுது! ஆனா எனக்குத் தான் உங்களுக்கு பிடிச்சது எதுவும் தெரியல?”
அவள் சுற்றி கை போட்டவன், கன்னத்தில் முத்தமிட்டு, “உன்ன பிடிக்கும்.. ரொம்ம்ம்ம்ப.. இப்போதைக்கு உனக்கு அது தெரிஞ்சா போதும்!.. கொஞ்ச நாள்ல என்னை எனக்கு தெரியரதவிட உனக்குத் தான் நல்லா தெரியும்..”
அவன் கையை இழுத்து அவள் வயிற்றோடு இன்னும் இறுக்கிக் கொண்டாள்.
“நான் ஒன்னு கேக்கட்டா?”
“ம்ம்”
“ஏன் நான்?”
“ஏன்னா நீ தான் எனக்காகப் படைக்க பட்டவ..”
அவன் மடியில் திரும்பி அமர்ந்தவள் அவன் முகம் பார்த்து, “நம்ம ரெண்டு பேரும் ரொம்ப சண்டை போடுறோம்..”
“ஆமா… அதுக்கென்ன? இன்னும் போடுவோம்.. வாழ் நாள் பூரா இருக்கு.. நாம ரெண்டு பேரும் சண்டை போடுவோம்… என் கூட உரிமையா சண்டை போட நீ மட்டும் தானே இருக்க.. அது நமக்கு மட்டுமேயனது. நீ என்ன நினைச்ச? காதலிக்கரவங்க எப்போவும் கட்டி பிடிச்சு சிரிசுட்டே இருப்பாங்கன்னா? அது பொய்யான உரவு.. என்  தப்ப நீ சகிச்சுக்க வேண்டாம்.. நானும் தான்… என்ன சண்டை போட்டாலும்.. அது நாம பிரியரதுக்கில்ல.. இன்னும் இன்னும் நாம ஒட்டுரதுக்கு.. என் கூட இருக்கும் போதும், நீ நீயா இருக்க முடியுதா.. அது தான் நான் உனக்கு குடுக்கர மரியாதை.. காதல்..
நாம அதிகமா காதலிக்கும் போது.. அதிகமா எதிர்பார்ப்போம்.. அதிகமா காயப்படுவோம்.. கொஞ்சம் நாள் ஆகும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ. சேர்ந்தே சண்டை போடுவோம்.. சேர்ந்தே சமாதானம் ஆவோம். நைட் தூங்க போகரதுக்குள்ள பேசி தீர்த்துப்போம்.. இந்த ஆறு மாசத்தில ஒரு தரம் சண்டை போட்டிருக்கோம்.. அது எல்லாம் கணக்கிலேயே வரக் கூடாது”
இருந்தவாறே அவன் தோள் சாய்ந்து கொள்ள அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து, “என் உலகத்தில நீ வானு உன்ன கூப்பிடல.. என் உலகமே நீ தான் சுதா!” 
இறுக அணைத்துக் கொண்டான்.
எந்த வித அலட்டலும் இல்லை. அருகிலோ தூரத்திலோ.. எங்கிருந்தாலும் அவளைப் பாதுகாத்தான். பார்த்துப் பார்த்து அவளுக்கு தேவையானதைச் செய்தான். பிடித்தது அவனை. இன்னும் அதிகமாய் பிடித்தது. இன்னும் இன்னும் அதிகமாய் பிடித்தது.  அணுஅணுவாய் அவளை முழுதும் ஆக்கிரமித்திருந்தான். அன்று முழுவதுமே அப்பிடி தான் இருந்தது அவளுக்கு.
வீதியில் நடக்கும் பொழுது அவனே சாலைப் பக்கம் நடந்தான்.
சாலையைக் கடக்கும் பொழுது கைபிடித்தே சென்றான்.
சூடான பானம் அருந்தும் முன் அதை அவள் குடிக்கும் பக்குவத்திற்கு ஆற்றிக் கொடுத்தான்.
அவன் அருகில் இருக்கையில் சிரிப்பிற்குப் பஞ்சமில்லை.
செல்ல சீண்டல்களும், குட்டி சண்டைகளுமாய் இனிதாகவே இருந்தது. இன்று தான் கவனித்தாள். எதையுமே அவன் இழுத்து பிடித்தெல்லம் செய்யவில்லை எல்லாம் இயல்பாய் செய்தான்.
யாருமில்லா மலைச் சரிவிலிருந்த மரத்தடியில் அமர்ந்து அந்தி வானத்தை அவள் ரசிக்க, அவனோ அவளையே ரசித்துக்கொண்டிருந்தான்.
‘இவர் கடைசி வரைக்கும் பார்த்திட்டே தான் இருப்பார் போல!’ மனதிற்குள்ளேயே வசை பாடிக் கொண்டாள். 
கை அவள் இடையைச் சுற்றிக் கொள்ள, அவள் மனமோ, ‘ம்ம்ம்.. அப்புறம்..?’ என்று அலுத்துக் கொண்டது.
அவள் தோள் மீது இதழ் பதிக்க, ‘சேம் லொகேஷன்! நேத்துல இருந்து இதையே எத்தன தரம் தான் பண்ணுவாரோ..’ மனம் கவுண்டர் கொடுத்தது.
அவள் முகம் திருப்பி அவனைப் பார்க்கவும் அவள் இதழ் வருடி.. “சுதா..” என்று அவன் தாபத்தோடு அவளைக் கூப்பிடவும், அவளால் அதற்கு மேல் முடியவில்லை ‘குப்’பென்று சிரித்துவிட்டாள்.
ஒருவித மயக்கத்திலிருந்தவனுக்கு, ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.
“என்னடி.. நான் என்ன ஜோக்கா சொல்லிட்டு இருக்கேன்.. மனுஷன் அவஸ்தையை புரிஞ்சுக்காமா சிரிச்சிகிட்டு!” எரிந்து விழுந்தான்.
“சாரி சாரி” என்று அவள் உதட்டை அவனுக்கு வாகாய் குவித்து காட்ட.. அவனுக்குக் கடுப்பு உச்சத்திற்குப் போய்விட, “போ.. என் மூடே போச்சு! இப்போ எதுக்கு சிரிச்ச?” காய்ந்தான்.
ஆனால் பாவம் அவளுக்குத் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘இந்த அலம்பலுக்கு ஒன்னும் கொரச்சலில்லை.. கிஸ் குடுக்க மூடு வேணுமாமே.. முடியல டா சாமி..’ வந்த சிரிப்பை அடக்கி, “இல்ல ஒன்னுமில்ல..” இதை சொல்லவே பாடாய் பட்டுவிட்டாள்.
‘ஐயோ. ஒரு ரொமான்ஸ் சீன காமடி சீன் ஆக்கிட்டேனே..’ என்ற சோகம் வேறு!
‘அடுத்து ஒரு கிஸ்.. அதுவும் ரெண்டு பேருக்கும் வலிக்காம.. இதுக்கு இவ்வளவு பிள்டப் வேற?’ சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டாலும் அவள் உடல் குலுங்கவுமே அவனுக்குப் புரிந்து விட்டது தன்னை நக்கல் செய்கிறாளென்று.
எழுந்து அவள் முன் வந்து நின்று கொண்டு அவளையும் அவன் எதிரில் நிற்கவைத்துக் கொண்டான். அவள் கண்ணோரம் ஒரு சொட்டு ஈரம் எட்டிப் பார்த்திருந்தது.
“இப்போ சொல்லு.. நானும் சிரிக்கிறேன்! கண்ணீர்  வர அளவுக்கு என்ன காமெடி?” முகம் சீரியசாய் இருக்க, சுதாவிற்குத் தான் ‘ஐயோ’ என்றாகிவிட்டது.
“ஒன்னும் இல்ல.. சும்மா தான்!”
“பரவால்ல சொல்லு!”
“திட்ட கூடாது..”
“வாய்தா வாங்கர அளவுக்கு மேட்டரா?”
“அது வந்து..” எச்சிலை விழுங்கி மூச்சை இழுத்து விட்டவளை பார்க்க அவனுக்குள் ஆர்வம் புறப்பட, “ம்ம்.. சொல்..லு!”
“எனக்கு உங்க மேல ஆசையா இருக்கு, அதாவது..”
அவன் மனம் கவுண்டர் கொடுக்க ஆரம்பித்தது, ‘ஓ..பரவாலேயே.. என் பொண்டாட்டிக்குக் கூட ஆசை வருது டா..’
“நீங்க வேணுங்கர மாதிரி ஆசை.. ஆனா..”
“ஆனா?” அவன் புருவம் உயர்த்த..
“புதன் கிழமை கல்யாணம் ஆச்சு.. வெள்ளி முடிய போகுது..” அவள் விழிக்க
அவள் கண் பார்த்து, “ம்ம்?” எனப் புருவம் உயர்த்த
அதற்கு மேல் எங்கு அவன் முகத்தைப் பார்ப்பது, தரையைப் பார்த்துக்கொண்டே
“நீங்க எ..ன் இடுப்பை தொடுரீங்க.. தொள்ல முத்தம் தரீங்க.. அப்புறம்.. எனக்கு ஆசையா வருமா.. நீங்க அவ்வளவு தானு போய்டுரீங்க.. அது தான் இதுக்கு மேல உங்களுக்கு எதுவும் தெரி..யா..தானு..” அவள் இழுக்க..
மரத்தில் சாய்த்திருந்தவள் அவனிடமிருந்து பதில் வராமல் போகவே தலை நிமிர்த்தி அவன் முகம் பார்க்க, அவனோ மிகவும் சீரியசாக ஏதோ சிந்திப்பவன் போல் புருவம் சுருக்கி, “வேற இருக்கா? அவ்வளவு தான்னு நினைச்சேன்?” எனவும்
“ம்ம்ம்?” ‘என்னது?’ என்பது போல் அவனைப் பார்க்க,
ஒரு கையை மரத்தில் ஊன்றி மரு கையாய் அவள் முகத்தில் விழுந்திருந்த முடியை ஒதுக்கிக் கொண்டே, “என்ன பதில் காணம்.. இன்னும் இருக்கா? உனக்கு தெரிஞ்சா சொல்லி தா, தெரிஞ்சுக்குறேன்.”
“…” எச்சில் மட்டுமே அவளால் முழுங்க முடிந்தது.
‘நீ அவ்வளவு நல்லவனாடா? அன்னைக்கு வீட்டில இந்த பூனையும் பால் குடிக்குமான்ற ரேஞ்சுல ஏதேதோ செஞ்சிட்டு.. இப்போ மண்டையில பாரங்கல் போட்டா என்ன அர்த்தம்? அவ்வளவு தானா?’ முகம் தொங்கிப்போய் அவனைப் பார்க்க
அவனால் அதற்கு மேல் அடக்க முடியவில்லை. முகத்தில் புன்னகை பெரிதாய் விரிய,
சுதா, “ஃப்ராடு புருஷா.. வேணும்னே பண்றத பாரு.. போட” ஓட எத்தனிக்க அவன் ஒரு கையால் அவளை வயிற்றோடு தூக்கி இருந்தான். 
அவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்து, இதழ் உரச, “போனா போகுது சின்ன பொண்ணுனு பார்த்தா.. ரொம்ப பேசர.. இருடி உனக்கு இருக்கு இன்னைக்கு நைட்” என்று ஏதோ காதில் கிசு கிசுக்க..
உடல் கூச, முகத்தை இருக்கைகளால் மூடிக் கொண்டு, “அச்சோ.. யாராவது வந்திட போராங்க.. விடுங்க!”
“அப்பிடி எல்லாம் விட முடியாது” அவளிடம் வம்பிழுத்து, பலதும் சொல்லி அவளைக் கூச வைத்து, “வீட்டுக்குப் போய் ப்ராக்டிகல்ஸ்” என்று ஒரு வழியாய் கிளம்பினார்கள்.
பொழுது போனது தெரியாமல் நேரம் கழித்துக் கிளம்பியதால் அவர்கள் காட்டேஜ் வந்து சேர மணி எட்டைத் தொட்டு விட்டது. மலை பிரதேசம் என்பதால் செயற்கை வெளிச்சம் தெருக்களில் இருப்பதில்லை. இருட்டுவதற்குள் இருப்பிடம் வந்துவிடுவது நல்லது.
பகல் முழுவதும் ஊர் சுற்றிய களைப்பில் அவர்கள் இருப்பிடம் வருமுன் சுதா காரிலேயே தூங்கியிருந்தாள். எழுப்ப மனமில்லாமல் அவளைக் குழந்தையை ஏந்துவது போல் ஏந்திக்கொண்டு நெற்றியில் இதழ் ஒற்றி படுக்கையில் படுக்க வைத்தான்.
குளித்து லேப்டாப் முன் அமர்ந்தவன், இரவு பதினொன்றுக்கு சுதாவை அணைத்துக் கொண்டு நித்திரையைத் தழுவினான்.
சனிக்கிழமை காலை விடியுமுன் உடலை அசைக்க முடியாத படி பாரம் அழுத்தத் தூக்கம் கலைந்தவன், கண்களைத் திறக்க, இருட்டில் முதலில் ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கசக்கி விட்டுப் பார்க்கச் சுதா அவன் மார்பில் முகம் புதைத்து அவள் முழு பாராத்தையும் அஷோக்கின் மேல் போட்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.
கட்டி அணைத்தவன் எண்ணங்கள் திசை மாற.. மனதை அடைக்கி மணியை பார்த்தால் அது ஐந்து என்று காட்டியது.
மெதுவாக ஒருகளித்து அவளை அருகில் படுக்க வைத்தவன் காலை கடன்களை முடித்து, வொர்க்கவுட் செய்யத் தயாராக சுதாவும் எழுந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
“குட் மார்னிங் லட்டு.. காலைலேயே முழிசுட்ட?”
“நான் எழும்பி ரொம்ப நேரம் ஆச்சு.. பொழுது போகலனு திரும்பவும் வந்து உங்கட்ட படுத்தேனா.. எப்போ தூங்கினேன்னு தெரியல..”
“வரியா சன் ரைஸ் பாக்க போலாம்!”
இருவருமாய் கிளம்பியவர்கள் இரண்டு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஓட்ட ஆரம்பித்தனர். சில்லென்ற காற்று முகத்தில் மோதப் பச்சை மரங்களின் வாசனையோடு இன்பமாய் மலை உச்சிக்குச் சென்று வாட்டமாய் பாரை மேல் அமர்ந்து கொண்டனர்.
கண் எட்டும் தூரம் வரை அடுக்கி வைத்தார் போன்று மலைச் சிகரம். மலைகள் நடுவில் வெறும் மேகக் கூட்டம். வெண்பஞ்சு மூட்டை மூட்டையாய் கொட்டி கிடப்பது போன்று காட்சியளித்தது. தேவலோகத்திலிருப்பது போன்ற பிரமை ஏற்படுத்தியது. அவர்களைச் சுற்றிலும் ஊதா மலர்கள் தலையசைத்து ஆடிக்கொண்டிருக்க.. பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத விருந்து.  
இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருவரின் அருகாமையே போதுமானதாக இருந்தது. அஷோக்கோடு ஒன்றி அவன் கால்களுக்கு நடுவில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்து கொண்டு இயற்கையைப் பார்க்க அது இன்னுமே அழகாய் தோன்றியது.
ஒரு சால்வைக்குள் இருவரும் ஒன்றாய்.. சுதாவை அணைத்தவாறு அவளைச் சுற்றி கை போட்டிருந்தான். அவளோடான இந்த நேரத்தை ரசித்தான். இப்படியே நேரம் நின்று விடாத…
இன்றோடு அவர்கள் தேனிலவும் முடிய.. சென்னை நோக்கிப் பயணிக்க வேண்டும். மூன்று இரவுகள் வந்து சென்ற பின்னும் தேனிநிலவிற்கான ஒன்றும் அவர்களுக்குள் நடக்கவில்லை.. அதற்கான தருணம் அமையவில்லையோ.. அமைத்துக் கொள்ளவில்லையோ.. கணவன் மனைவி காதலில் காமம் கலக்கத் தான் செய்யும்…  ஆனால் அது எதுவுமில்லாமலே இருவரும் ஒருவருகுள் ஒருவர் ஊடுருவிச் சென்றிருந்தனர்.
அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இருட்டை கிழித்துக் கொண்டு வானம் வண்ணமயமானது. தளிர் கரம் கொண்டு பூசப் பட்ட சாயம் போல்.. பளிர் ஆரஞ்சு நிறம். அதனுள் கண்ணைப் பறிக்கும் மஞ்சள். மீதி வானமெல்லாம் எடுப்பான நீலம்.
கண்கொள்ளா காட்சி என்று நினைக்கும் போதே சூரியன் சிகப்பு பிழம்பாய் மேலே எழ ஆரம்பித்தது.
“எங்கள் வாழ்வும் இப்படி தான் வண்ணமயமாய் இருக்க வேண்டும்” என்ற வேண்டுதல் மட்டுமே.
வானில் ஈரப்பதம் அதிகம் இருக்கவே பாவம் அவள் வேண்டுதல் இறைவனை சென்றடையவில்லை போலும்!

Advertisement