Advertisement

“ஏன் உன்னால போட முடியாது?” கேட்டவனுக்குள் ஒரு துள்ளல்..
அவனை நின்று பார்த்தவள், “போரப் போக்கப் பார்த்தா.. நான் தான் ஆயுசுக்கும் போட வேண்டி இருக்கும் போல!”
“என்ன சுதா சொல்ற? புரியல?” அவள் செல்லவும் அவள் பின்னோடு செல்ல அவனைப் பார்த்து “போய் சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்க.. வெயிட் பண்றேன்.” அவள் டி.வி. முன் அமர்ந்து கொண்டாள்.
அவனும் அவன் வேலையைத் தொடர சென்றுவிட்டான்.
ஒவ்வொரு சேனலாய் மாற்ற ஒன்றும் விரும்பும் படியாய் இல்லை. கடைசியாக வந்த சானலில் நடிகை ரேவதி அவளைப் பெண்பார்க்க வந்த மோகனிடம் தான் திருமணத்திற்கு தகுந்தவள் அல்ல என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதிகமாய் படம் பார்க்கும் பழக்கமில்லாததால் அவளுக்கு அந்த படம் புதிதே. நடிகை அவள் பெருமைகளைக் கூறிய பின்னும் நடிகன் அவளைத் திருமணம் செய்ய விரும்பவும் ‘அடுத்து என்ன?’ என்ற ஆர்வத்தோடு படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். ‘மௌன ராகம்’ ஓடிக்கொண்டிருந்து. கதையின் நாயகனை அவளுக்கு அவ்வளவு பிடித்து விட்டது. அவன் பொறுமை அவளை வெகுவாய் ஈர்க்க டி.வி. ரிமோட்டை கீழே வைத்து விட்டு சோஃபாவில் வசதியாய் அமர்ந்து கொண்டாள்.
நேரம் ஆக ஆக நடிகை மேல் கோபம் கோபமாய் வந்தது. ரேவதி மோகனிடம் ‘டைவோர்ஸ்’ குடு என்று கேட்டதுமே, ‘ச்சா.. என்ன பொண்ணு இவ.. ஒரு நல்ல வாழ்கையை கெடுத்து கிட்டு.. அவன் வாழ்க்கையும் கேடுத்துட்டு.. அவளும் அவ வாயும்!’ என்ற எண்ணமே. மாடிப்படியிலிருந்து அவள் இறங்கும் வேளை மோகன் ரேவதியிம் கையை பிடிக்க அவளோ, “நீங்க தொட்டா கம்பளிப் பூச்சி ஊர்ர மாதிரி இருக்கு!” என்று சொல்லவுமே.. படம் பார்க்கும் மூடே போய்விட்டது. ‘இவளது என்ன நாக்கா இல்ல பாட்டிது மாதரி தேள் கொடுக்கா? ஒருத்தன் அன்ப கூடவா புரிஞ்சுக்க முடியாது?’ கதை நாயகியைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
இது தான் அவள் படம் பார்க்காததின் காரணம். அது வெறும் படமென்று தெரிந்தாலும் அதையே வாரக் கணக்கில் நினைத்து உருகுவாள்.
தொலைக்காட்சியை அணைத்து விட்டுக் குளிக்கச் சென்றவளுக்கு இரவு என்ற நினைவெல்லாம் இல்லை. மனைவி இப்படிச் சொல்லிவிட்டாளே.. அதுவும் அமைதியான அன்பான கணவனிடம் என்பது மட்டுமே அவள் எண்ணத்தில்.
ஷவரலிருந்து நீர்த் தலையில் விழுந்து மொத்தமாய் நனைந்தபின் தான் உணர்ந்தாள். ‘அச்சோ.. முடி வேற காயாதே..’ என்று நோந்தவள் ஷாம்பூ போட்டு அலசி விட்டு வெளியே வந்தாள். ‘ப்ளோ ட்ரையரில்’ பாதி காய்ந்த முடியைக் கண்ணாடி முன் அமர்ந்து வாரிக் கொண்டிருந்தவளிடம்,
“எதுக்கு இந்நேரம் தலைக்கு ஊத்தின? இவ்வளவு முடியும் எப்போ காயரது.. எப்போ நாம படுக்கரது?” கூறிக்கொண்டே டவல் கொண்டு கண்ணன் அவள் தலை துவட்ட, அவளிடம் எந்த பதிலுமில்லை.
“ஹல்லோ.. என்ன கண்ண திறந்துட்டே தூக்கமா? என்ன யோசனை?”
கண்ணாடி வழியே கண்ணனைப் பார்த்துக்கொண்டே, “ஒரு புருஷன் பொண்டாட்டி கைய எதேச்சையா பிடிச்சா.. அவ சொல்றா, ‘நீ தொட்டா கம்பளி பூச்சி ஊருர மாதரி இருக்குனு’ எப்படி அவளால சொல்ல முடிஞ்சுது?”
அவனுக்கு அவள் படத்தைப் பற்றிப் பேசுகிறாள் என்று தெரியவில்லை. “அவளுக்கு ஏதாவது அவன் மேல கோபமா இருக்கும். அதெல்லாம் கோவத்தல் வார்த்தை பேருசு படுத்த கூடாது..”
“இல்ல.. அவன் அவள கோபமே படுத்தி இருந்தாலும் தப்பு தானே..”
“அது அந்த சிட்வேஷன பொருத்தது.” அவன் அவள் முடியை பொறுமையாய் துவட்டிக்கொண்டே இருக்க, அவளுக்கு தான் மனம் ஆரவில்லை.
“எனக்குப் புரியலா.. அப்படி எல்லாம் யாரவது அவங்க மேல உயிரையே வச்சிருக்கவங்கள ஹர்ட் பண்ணுவாங்களா?”
“ஏன் நீ கூடத் தான் ஒரு பொம்பளை பொறுக்கிட்ட கேக்கர மாதிரி என் கிட்ட கேக்கல.. நான் உன்னைத் தொட்டதும், ‘உரசிகிட்டே இருக்க எப்பவும் எவளாவது வேணுமில்லனு’.. அது மாதிரி தான் கோபத்தில அவளும் அவ புருஷன் கிட்டச் சொல்லியிருப்பா!” ஒருவழியாய் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தது அவனையும் அறியாமல் வந்து விழுந்தது.
டேபிளில் இருந்த கைப்பேசி ஒலிக்கவும், அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்து,  “அம்மாட்ட இருந்து கால்.. பேசிட்டு வரேன். நீ ஒழுங்கா தலையை துவத்துர வழிய பாரு.. கண்டதையும் யோசிச்சுட்டு இருக்காத!”
சுதாவின் கண்கள் உடைப்பெடுத்து அருவியாய் கொட்ட ஆரம்பித்தது. நெஞ்சங்கூடு காலியானது போன்ற உணர்வு. மும்பையில் அவள் பேசியதெல்லாம் ஒன்று விடாமல் நினைவில் வந்தது.
‘சோ.. என்னோடைய வார்த்தை அவரை காயப்படுத்தவே என் கிட்ட அவரால வர முடியலை.. என்ன காரியம் செஞ்சு வச்சிருக்க சுதா.. எப்படி சரி பண்ணப்போர?’
எழுந்து பால்கனி சென்றவள் இருட்டை வெறித்து நின்றாள்.
ஃபோன் பேசி வந்தவன், “அம்மா சன் டே மார்னிங் வராங்க.. சேட்டர் டே கிளம்பிடலாம். நைட் வீட்டுல இருந்துட்டு.. நாமளே போய் பிக் அப் பண்ணிடலாம். அம்மாட்ட ஒன்னும் சொல்லிக்கல. நேர்ல நடந்த எல்லாத்தையும் சொல்லுவோம்.. புரிஞ்சுப்பாங்க!” பின்னோடு நின்றவன் அவள் வயிற்றை அணைத்தவாறு அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க அவளிடம் அசைவில்லை.
விசும்பல் உணர ,அவனுக்கு அலுத்து விட்டது. அவளைத் தோளோடு திருப்பக் கண்கள் சிவந்து, கன்னத்தில் கண்ணீர் தடம். அவனையே பார்த்து நின்றாள். 
“என்ன ஆச்சு சுதா உனக்கு? இன்னும் என் மேல கோபம் போலியா? என் மேல அவ்வளவு தானா உன் நம்பிக்கை?
சொல்லு நான் என்ன செஞ்சா என்னை நீ நம்புவ? ரொம்ப ஃப்ராங்கா சொல்றேன் சுதா.. என் மனசு பூரா நீ தான். நீ மட்டும் தான். உன்ன பார்த்தா நான் என்னையே மறந்து போய்டுறேன். நிஜமா உன் கிட்ட வர ஃபீலிங் இது வரைக்கும் எனக்கு வேற யார் கிட்டையும் வந்ததே இல்ல. உன் கூட இருக்கணும் வாழ் நாள் பூர இருக்கணும்… உனக்காக.. உனக்கு மட்டுமே சொந்தமா… உன் கிட்ட நான் உரிமை எடுத்து நெருங்கினதே அப்போவே உன்ன என் மனைவியா நினைச்சனால மட்டும் தான்.
வெறும் நினைப்பு போதலை.. அதனால தானே பெத்த அம்மாட்டக் கூட ஒரு வார்த்த கேக்காம உன் கழுத்தில தாலி கட்டியிருக்கேன். இன்னும் என்ன செய்யணும் நான்? உன் கிட்ட நெருக்கமா இருந்தனால நான் பாக்குரவ கிட்ட எல்லாம்..” அதற்கு மேல் அவனைப் பேச விட வில்லை. அவன் சட்டையோடு அவனைக் கீழ் இழுத்தவள் தன் எல்லா உணர்வுகளையும் அவள் இதழ் வழி அவனுக்கு அனுப்பியிருந்தாள்.
இருவருக்குமான திரை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. 
வாயில் உப்பு கரிக்கவும் உணர்வுக்கு வந்தவன் அவளை அவனிடமிருந்து பிரித்து, “என்ன மா?” என அவள் தலை தடவ
“மாலினி நம்பர் இருக்கா?” என்றவளை அவன் முறைக்க
“இருக்கானு கேட்டா.. பதில் சொல்லணும்.. சும்மா முறைக்க கூடாது” என்று அவனைப் பார்க்க
“ம்ம்..இருக்கு”
“சரி.. அவளுக்கு ஒரு காள் போடுங்க. ஸ்பீக்கர்ல போடுங்க! அன்னைக்கு ஹோட்டல் ரூம்ல நான் அவட்ட என்ன சொன்னேன்னு அவகிட்டயே கேளுங்க” 
“சுதா.. இனாஃப்..” அவன் கடுகடுக்க
“இல்ல.. இன்னையோட இந்த பிரச்சினை முடியணும்! நீங்க போடுங்க.. போட்டு கேளுங்க! எனக்காக!”
பிடிவாதம் பிடித்து ஒரு வழியாய் அவளுக்கு அழைப்பு விடுத்து அஷோக்கை அவளோடு பேச வைக்க.. மாலினி சொல்லச் சொல்ல அஷோக் சுதாவை மட்டுமே பார்த்து நின்றான்.
“அவட்ட அப்படி பேசிட்டு ஏன் என்ட்ட சண்டை போட்ட? நான் கூட நீ என்னை புரிஞ்சுக்கலனு எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?”
கண்ணன் முகம் பார்க்கக் கூசி, அவனை இறுக அணைத்துக் கொண்டே கண்கள் கலங்க, “என்ன மன்னிச்சுடுங்கனு கேட்கக் கூட எனக்கு அருகதை இல்லை. எல்லாம் தெரிஞ்சவ மாதிரி ரொம்ப பேசிட்டேன். என்னன்ன வாய்க்கு வந்திச்சோ யோசிக்காம பேசிட்டேன். ஏதோ கோபம்…
நம்பிக்கை இல்லாம எல்லாம் இல்ல.. என்னை விட உங்கள் தான் நான் நம்பறேன்.. இது வேற..
அம்மா போனாங்க.. அழுதேன்.
அப்பா போனாங்க.. உடைஞ்சு போய்டேன்.
கார்த்தி போனான்.. நான் அவன இன்னுமே ரொம்ப மிஸ் பண்றேன்.. எனக்கு ஒரு கை போன மாதரி ஆகிடுச்சு! ஏன்னே தெரியாம எனக்கு அவன ரொம்ப பிடிக்கும்.. அவனுக்கும் அப்படி தான். அவன் போனது ரொம்ப கஷ்ட்டமாயிடுச்சு!
அடுத்த நாளே நீங்க திட்டுனீங்க… அதுக்க அடுத்த நாளே நீங்களும் சொல்லிக்காம மும்பை போய்டீங்க.. என் மனசு விட்டுப் போச்சு. ரொம்ப தனிமையா உணர்ந்தேன்.. வாழ்க்கை மேலையே ஒரு பிடிப்பு போய்டுச்சு..
இருந்தாலும் உங்களப் பார்க்க ஒரு ச்சான்ஸ் கிடைச்சதும், அங்க வந்து உங்களுக்கு சர்ப்ரைஸ் தர நினைச்சா, அதுவும் முடியாது போல ஆகிடுச்சு.
அந்த மாலினி சொல்லித் தான் வந்தேன்.. அவள உங்க கைல பார்த்ததும் ஷாக் தான்! இருந்தாலும் அவ கேம் ப்ளே பண்றான்னு தெரிஞ்சுடுச்சு!
ஆனாலும் ஒரு கோபம்… என்ட்ட நீங்க வேணும்னு எதையும் மறைக்கல ஆனா சொல்லலை. உங்க கூட குடும்பம் நடத்தப் போர எனக்கு ஒன்னுமே உங்கள பத்தி தெரியலங்கர கோபம்.. உங்க மேல.. என் மேல…
அப்புரம் என்னை விட்டுட்டு போக போறீங்களேனு உங்க மேல இன்னுமே கோபம்,.. நீங்க என்ன என்னை விட்டு போரது…? நான் போறேன்..! அப்போ எனக்கு வலிக்காதுனு நினைச்சேன். அதுவும் தப்பாகிடுச்சு! இன்னுமே வலிச்சுது.. பேசாம பார்க்காம.. ரொம்ப தப்பு பண்ணிட்டேன்னு புரிஞ்சுது.
இதுகெல்லாம் மூல காரணமே பாட்டி தான். என்னால பாட்டி கூட இருக்க முடியல. ரொம்ப குத்தி குத்தி பேசராங்க.. ஏதோ மனநோயாளி மாதரி! அவங்க பேச்சு ரொம்ப வலி.. ஏதோ நான் நடத்தை சரி இல்லாதவ மாதரியே பேசராங்க.
நான் தான் தீபக்கை ஆச காட்டி அவன் கூட இருந்த மாதரியும்.. அப்பரம் கார்த்திட்ட ‘லவ் யு’ சொல்லி ஹக் பண்ணினதுக்கு ஏதேதோ அசிங்கமா.. தப்பு தப்பா சொல்றாங்க! அவன் என் க்ளோஸ் ஃப்ரெண்டுனா புரிஞ்சுக்கவே மாட்டேன்றாங்க! அவங்கட்ட தனியா ஒரு மாசம் இருக்கணுமேனு பயம்.. எல்லாமா சேர்ந்து..  பச்! சாரி!
தெரியல ஏதோ லூசு மாதரி சம்பந்தமே இல்லாம சண்டை போட்டிருக்கேன்.. இதெல்லாம் ஒரு மாசமா நான் கண்டு பிடிச்சது.
நான் உங்க மேல கோபப் பட்ட மாதிரி நீங்க என் மேல கோபப் பட்டு என்னை விட்டுட்டு போயுருந்தா.. இந்நேரம் என் நிலமை.. ஐ ஆம் சோ சாரி..”
அவள் நாடி பிடித்து முகத்தைத் தூக்கியவன், “நான் தான் சாரி சொல்லணும். எனக்காக தான் நீ இவ்வளவையும் சகிச்சுட்டு இருந்திருக்க. நான் உனக்காக இருக்கவே இல்ல. இனி மேல இந்த மாதரி ஃபீலிங்ஸ் எல்லாம் பாட்டிலப் பண்ணி வைக்காத புரியுதா? உடனே என்ட்ட சொல்லிடு சரியா? பாட்டிட்ட இனி நீ போக வேண்டாம்.. அவங்க இனி மேல் உன்ன ஒரு வார்த்த சொல்ல மாட்டாங்க.  நீ வெறும் அவங்க பேத்தி இல்ல.. உன்ன இஷ்டத்துக்குப் பேச. நீ என் மனைவி.. என்னை மீறி யாரும் உன்ன பேச முடியாது.
சரி… இங்க ரொம்ப குளுருது.. வா உள்ள போலாம்!”
“அப்போ என் மேல கோபம் இல்ல தானே.. நான் கேட்டேங்கரதுக்காக தாலி கட்டல தானே?”
“ம்ம்ஹும்ம்.. இல்ல. நீ கேட்டதுக்கு இல்ல… எனக்கு நீ வேணும்னு தான்! கழுத்து காலியா இருக்கவும் கண்டவன் கண் எல்லாம் என் பொண்டாட்டி மேல.. அதுக்கு தான் இது. ஊருக்குப் போனதும் அம்மாட்ட சொல்லி பெருசா ரிசெப்ஷன் வச்சிடுவொம் சரியா? நீ என்னுது சுதா.. நான் உன்னுது. உனக்கு என் மேல கோபம் வந்த சண்டை போடு.. உன் கை வலிக்கர வரைக்கும் அடி.. பிச்சு பிடுங்கி தின்னு.. ஆனா என் கூடவே இருந்து வச்சு செய்.. என்ன ஆனாலும் விட்டுட்டு போன்னு சொல்லாத. புரியுதா?”
அவன் மடிமேல் அமர்ந்தவள் “ம்ம்.. மாட்டேன். நான் இன்னும் சொல்லணும்”
ஒரு மாத காலமாக தீபக் வீட்டில் நடந்த அனைத்தும்.. அவன் அவளிடம் கூறிய உண்மைகள்  பற்றியும் கூறினாள்.. கூடவே குணாவைப் பற்றியும்!
“பழசை விடு லட்டு.. அவனைப் பத்தி எதுக்குப் பேச்சு இப்போ? நீ எப்படி இருந்தாலும் எனக்கு நீ தான் இஷ்டம். அந்த குணா விஷயத்தை ஊருக்குப் போய் பார்ப்போம்.. இவனைப் பத்தி விசாரிச்சபோ.. இப்படி ஒரு நியூஸ் என் காதுக்கு வரவே இல்ல! போதும் இத பத்தி பேசினது”
அமைதியாய் அவன்  மடியில் அமர்ந்திருந்து மார்பில் சாய்ந்திருந்தவளின் கூந்தலை வருடிக் கொண்டே, “சுதா..” என்று கிரக்கமாய் அழைக்க
ஆசையாய், “ம்ம்..?” என்றாள்.
மீண்டும் மௌனம்.
தயங்கித் தயங்கி சொல்ல நினைத்ததைச் சொல்லாமல், “தூங்கலாமா?” என்று நிறுத்திகொண்டான்.
அவனுக்கு ஆசை தான் அவளோடு அடுத்த கட்டம் செல்ல.. இருந்தாலும் அம்மாவிடம் கூறிவிட்டு வாழ்கையை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் அவள் அனுமதிக்கும் பட்சத்தில். அவளிடம் கேட்பது தான் எப்படி…
“ஒகே..” என்றவள் படுக்கையில் அவனருகில் படுத்துக் கொண்டு அவன் கன்னம் வருடி, “இப்போ சொல்லட்டா?” எனவும்
“என்னத்த?” என்றான் குழப்பமாய்.
“நம்ம இன்னும் காதல சொல்லிகலியே.. சொல்லட்டுமா என் காதல?”
சத்தமாய் சிரித்தவன், “வேண்டாம்.. உணர்த்து.. ஒவ்வொரு நாளும்.. என் வாழ் நாள் பூரா..”
“எப்பிடி?” என்றவளை
இடையோடு அணைத்து அவள் கூந்தல் வாசம் பிடித்தவன், “இப்பிடி தான்” என்று இதழோடு இதழ் பதிக்க மனமோ கவி பாடியது. 
சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கி போடும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே..
உன்ன வெச்சேன் உள்ள
அட வெல்ல கட்டி புள்ள
இனி எல்லாமேய் உன் கூடத்தான்
வேணாம்
உயிர் வேணாம்
உடல் வேணாம்
நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேனுண்டி..

Advertisement