Advertisement

அவளிடமிருந்து ஒரு மெசேஜோ.. ஒரு அழைப்போ வந்திருந்தால் மனம் ஆறியிருக்கும்! ஆனால் அவள் தான் ‘ஆன்லைன்’ கூட வருவதில்லையே..
‘என் சுதாவால் என்னை வெறுக்கக் கூட முடியுமா?’ அவன் நம்பவில்லை. ‘சுதாவிற்கு கோப பட கூட தெரியுமா?’ 
இரவில் மெத்தையில் படுத்திருந்தவன் கையில் அவளுக்காக மும்பையில் வாங்கிய இதய வடிவிலான பதக்கம். அதைத் தான் பார்த்துப் படுத்திருந்தான். மும்பை சென்றிருந்த தினத்தன்று, “டேய் கண்ணா.. முன்னமே சொன்னது தானே.. ஷரன்-கு பத்து நாள்ல நிச்சயம்னு! நீ இருக்க மாட்டேனு சொன்னா எப்படி?” அவனின் அத்தை கோபித்துக் கொண்டு நிற்க
“நிச்சயம் அன்னைக்கு காலையில அம்மா இருப்பாங்க அத்த.. கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னமே வந்திடுவேன்.. நீங்க சொல்லுங்க நம்ம ஷரன் குட்டிக்கு என்ன வாங்கட்டும்?”
“எனக்கு தானே எங்கேஜ்மென்ட், அம்மாட்ட கேக்கர? எனக்கு மெலிசா ஒரு  ப்ளாடினம் செயின்ல டைமண்ட் பென்டென்ட் வச்சு வேணும் ண்ணா.. அம்மா அண்டா அண்டாவா வாங்கி தராங்க.. எனக்கு மெலிசா வேணும் டைய்லி போட்டுக்கர மாதரி. டெடி பேர் (teddy bear pendant) பெண்டண்ட். அது ஓட்டை வயத்தில ஒரு டையமண்ட் இருக்கணும்.. ஃபிக்ஸ் பண்ணிருக்க கூடாது.. டையமண்ட் ஆடணும்.. அப்போ தான் டாளடிக்கும்! அப்பறம், அதுக்கு மேட்சா ப்ரேஸ்லட்டும் ரிங்கும்!  டெடி இல்லன.. அதே மாதரி.. அந்த டைப்பல தான் வேணும்! என் ஃப்ரெண்டு கடைல இருக்கு..” என கண்ணின் முன் வந்து நின்றாள் அவன் அத்தை மகள் சரண்யா.
“அவன் உனக்கு அண்ணனா? உறவு முறைய மாத்திடுங்க?! உன் பெரியப்பாக்கு தெரியணும்  நீ வெளில வைரம் வாங்கரது..” அலுத்துக் கொண்டே சென்ற அன்னையின் தலை மறைய “எப்போ வங்கி தரண்ணா?”
காரியத்தில் கண்ணாய் அவனை கையோடே கடைக்குக் கூட்டிச்சென்றவள் அவள் கேட்டு வந்ததிற்கும் பார்த்து கொண்டிருந்த நகைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் போகவே, அரை மணி நேரமாய் ஃபோனில் மேயில் பார்த்துக் கொண்டிருந்தவன் மணியை பார்த்துவிட்டு, “டேய் ஷரன்.. என்ன டா பாக்குர.. செயின் கேட்டுட்டு, அதை தவிர எததையோ பார்த்திட்டு இருக்க? என்னென்ன வேணுமோ அந்த செக்ஷன் மட்டும் பாரு.. எதுக்கு இல்லாத டைம்ம வேஸ்ட் பண்ற?”
“ண்ணா… நான் கேட்டத நீ பார்த்து வாங்கி தா.. உன் செலக்ஷன் எனக்குப் பிடிக்கும்” தலையைக் கூட தூக்காமல் சொல்லி முடித்தவளை, முறைத்துவிட்டு
“டென் மின்ட்ஸ்-ல நான் எடுத்திட்டு வரேன்.. அதுகுள்ள உன் வேலையை முடி!”
‘இந்த பொண்ணுங்க கூட ஷாப்பிங்கே போகக் கூடாது..’ எண்ணிக்கொண்டே அவள் கேட்டதை வாங்கியவன் கண் அங்கிருந்த ஒரு அழகிய பெண்டென்டில்  நிலைக்க.. மனதில் சுதாவுக்கும் வாங்க ஆசை வர.. அவளுக்கும் வாங்கிக்கொண்டான். அவன் வாங்கிய பதக்கம் கொஞ்சம் பெரிதாயிருக்கவே அதற்கேற்ற சங்கிலியும்.. ஒரு வைர மோதிரமும் வாங்கிக்கொண்டான். அவனுக்குச் சமைத்த கைக்குப் பரிசாய்! சில மாதங்கள் முன் அவனுக்குச் சமைத்துக் கொண்டுவந்தவளிடம் பரிசு கொடுப்பதாய் கூறியிருக்க அதற்காக தான் மோதிரம்.
இதய வடிவு பெண்டன்ட், அடியில் தட்டையாய் இருக்க அதன் மேல் ரூபி நிறப்பி இருக்க நடுவில் ‘கூட்டல்’ குறி போன்ற வடிவில் வைரம் பதிக்கப்பெற்றிருந்தது. அதன் மேல் வலை வலையாய் அழகான இதய வடிவ கூடு. அதை வாங்கும் பொழுது அவன் இதய கூட்டில், வைரமாய் அவள் இருப்பது போன்ற உணர்வு.. 
இன்னும் அவன் இதயத்தில் அவள் தான்.. அவன் இதயம் நிற்கும் வேளை அதோடு தான் அவள் நினைவும் மடியும். அவளின் வாய்ச் சொல்லெல்லாம் அவர்களைப் பிரிக்கும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை.
வந்த இடத்தில் வேலை அதன் போக்கில் செல்ல அவன் நினைவெல்லாம் சுதா மட்டும் தான். அவள் பேசிய பேச்சு இன்னும் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே தான் இருந்தது. எத்தனை எளிதில் சொல்லிவிட்டாள் ‘பிரிந்துவிடுவோம்’ என்று. ‘பிரிவு’ என்ற வார்த்தை மட்டும் தான் அவனை அதிகம் அசைத்தது. ‘நான் இல்லாமல் அவளால் இருக்க முடியாதே.. ஏன் சொன்னாள்? அதை சொல்லும் அளவு நான் அவளை காய படுத்தி விட்டேனோ?’ 
இல்லை.. பிறந்த தேசம் சொல்லிக் கொடுத்த பாடமா? ‘லெட்ஸ் ஃபாள் ஈன் லவ்…’ (let’s falls in love) , ‘ஹே, லெட்ஸ் ப்ரேக் அப்..’ (hey.. let’s break up).. இப்படி எதையும் நினைத்ததும்  செய்யும் சமுதாயம் அவளை வளர்த்ததாலா.. எவ்வளவு எளிமையாய் கூறிவிட்டாள். 
அவனால் அவளை விட்டு.. அவள் சிந்தனையை விட்டு வெளி வர முடியவில்லை. எப்படி யோசித்தாலும் கடைசியில் ‘சிறு பெண் தானே.. சின்ன வயது முதல் ஏகபட்ட இழப்புகள்.. அதனால், நான் போவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும்.. இதற்கு நடுவில் மாலினி வேறு’ அப்பொழுதும் மனம் அவளுக்காகப் பரிந்து பேசியது. ‘தப்பு என் மேல தான்.. நான் தான் அவள் பார்த்து ஹாண்டில் பண்ணல..’ என்று சொல்லிக்கொண்டான்.
அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் அவளுக்கு யோசிக்க அவகாசம் வேண்டும் என்று சுதாவை நினைப்பதோடு நிறுத்தி கொண்டான். அவள் மலர், அவன் அவளின் வண்டு.. நீங்காமல் அவளை தான் சுற்றி வருவான்.
“தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?” அவன் வாய் முனுமுனுத்தது.
 
அடுத்த சில தினங்களில் மீனாட்சி பாட்டி வந்தார் சதீஷை பார்க்க. சுதாவிடம் தனியே பேசும் சந்தர்ப்பம் வரவும், “நீ எப்போ வர?” என்றார். அவளுக்கு மீண்டும் அவரோடு போகவேண்டும் என்ற நினைப்பே பிடிக்கவில்லை. தினம் தினம் அவர் குத்தல் பேச்சும், விஷ வார்த்தைகளும். திருமணம் வரை இங்கேயே இருந்தால் என்ன என்று தான் தோன்றியது. இந்த தீபக் ஒருவன் இல்லை என்றால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்! ஆனால் கண்ணனைப் பார்க்க வேண்டும். இன்னும் பத்து தினங்களில் வந்து விடுவான். அவனுக்காக இது போல் நூறு பாட்டியை சகித்துக் கொள்ளலாம்.. 
அவளுக்கு சுறீர் என்று அப்பொழுது தான் உதித்தது.. ‘பாட்டியை விட தீபக்கே மேல் என்று நினைக்கும் வண்ணம் உள்ளது பாட்டியின் பேச்சு’ என்பது தான் அது!
‘அப்போ நான் பேசிய பேச்சு? எங்கிருந்து தான் இப்படி எல்லாம் பேச கற்றுக்கொண்டேனோ? இனி வாழ்வில் ஒருவரையும் என் வார்த்தையால் புண் படுத்தவே மாட்டேன்’ மனதில் சத்தியம் செய்து கொண்டாள். 
சத்தமாய் பேச மாட்டாள்.. மிகவும் இனிமையானவள். முகத்தில் தெரியும் அவள் குணம்.. கண்ணில் தெரியும் அவள் இனிமை.. அதில் தானே கண்ணன் விழுந்தான்.. இன்று? 
அப்படி ஒருவரோடு பழகப் பழக நம் குணம் மாறுமா? ஏன் நல்ல வளர்ப்பில் உருவான தீபக் மாறவில்லையா? இதற்குத் தான் ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். ஒருவரோடு நீண்ட நேரம் சஞ்சரித்து வந்தால் அவர் குணம் நம்மை அறியாமலே நமக்குள் வந்து விடுவது உலக நியதி! 
‘யார் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.. என் பிறவிக் குணத்தை விட மாட்டேன்’ தனக்குள் நிச்சயித்து கொண்டாள்.
“மாமாவ பாத்துக்க ஆள் இருந்தாலும்.. எனக்கு மாமாட்ட இருக்கணும்.”
அந்த பக்கமாய் சென்ற ஒரு ஜீவன், ‘கவல படாத உன் ஆசையை நான் நிறைவேத்தறேன்’ என்று எண்ணிக்கொண்டே சென்றது.
“மாமாக்கு கொஞ்சம் சரி ஆனதும் வந்துடுவேன் பாட்டி”
“அப்போ சரி! வருஷா வருஷம் என்னோட ஒன்னு விட்ட அக்கா, அவ பார்க் ஃப்ரண்ட்ஸ்சோட சேந்து எங்கையாவது போவா. இந்த தரம் புண்ணிய ஸ்தலத்துக்கு போலாம்னு இருக்காங்களாம்.. என்னையும் கூப்பிட்டா. உன்ன விட்டுட்டு எங்க போரதுனு.. நான் வரலைனு சொல்லிடேன். நீ இங்க இருக்கனா ரெண்டு வாரம் அவங்களோட போய்ட்டு வந்திடவா? என்ன சொல்ர?” என்றார்.
இதில் அவள் சொல்ல என்ன இருக்கின்றது?
“பத்திரமா போய்ட்டு வாங்கப் பாட்டி.. நான் இருந்துக்குவேன்.” என்றுவிட்டாள்.
“உன் செல்ஃபோன் இந்தா.. இத எதுக்கு வாங்கி வச்சிருக்கியோ.. எப்போ பாரு வீட்டுலேயே விட்டுட்டு போயுடுர. கைல வச்சிருந்தா தானே ஆத்திர அவசரத்துக்கு கூப்பிட முடியும்!” இருதினம் இருந்துவிட்டு பாட்டி கிளம்பிவிட்டர்.
ஃபோனை உயிர்ப்பித்தவள் பார்த்தது, ஏகப்பட்ட மிஸ்ட் கால்ஸை. கார்த்தி, மீரா, கனி, அலுவலக தோழர்கள், அவளுடைய ஹெட், ஹெச்.ஆர் என் ஏகபட்ட கால்ஸ்! ஆனால் அவள் எதிர்பார்த்தவனிடமிருந்து ஒன்றும் வந்திருக்கவில்லை.
‘பேசவே மாட்டானா’ பயமாய் இருந்தது. ‘இனி யோசிக்காமல் பேசுவாயா?’ நாளுக்கு நாற்பது முறை தன்னையே கடிந்துகொண்டாள்.
அவனைப் போல் காதலாய் பேசத் தெரிந்தாலாவது பேசி பேசியே அவனைக் கரைக்கலாம்.. அதுவும் தெரியாதே.. அவனைக் கரைக்க அவள் பார்வை ஒன்றே போதுமே.. அது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
கைப்பேசியை பார்த்து நின்றாள். அதுவும் கண்ணன் அவளுக்கு வாங்கி வந்ததே.. அப்பொழுது மார்கெட்டில் புதிதாய் இரங்கிய அதி நவீன கைப்பேசி. அதன் அழகில் விழி விரித்து நின்றவள், “எதுக்கு எப்போ பார் வெளியூருக்கு போய்ட்டு வரும்போதெல்லாம் ஏதாவது வாங்கிட்டு வரீங்க?”
“வேண்டாம்னா சொல்லு.. வேற யாருக்காவது கொடுத்து கரெக்ட் பண்ணிக்குறேன்..”
அவன் கை மேல் இரண்டடி போட்டுவிட்டு, “பேச்ச பாரு?!.. ரொம்ப கனவு காணவேண்டாம்.. உங்க மூஞ்சிக்கு நானே ஜாஸ்தி.. “
“அடி பாவி.. ஏதோ ஊர்லயே நான் தான் அழகு.. ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கேனு சொல்லி என்னை யோசிக்க விடமா பண்ணிட்டு.. இப்போ பட்டா போட்டு சுவர் எழுப்பினதும் நான் சுமாரா.. எல்லாம் என் நேரம்!”
“ஆமா பட்டா வாங்கி சுவர் எழுப்பி உள்ள வச்சு பூட்ட போறேன்.. ரப்பன்சில் மாதரி.. ஆனா கூடவே நான் இருப்பேன்..
நீங்க பாட்டுக்கு இப்பிடி ஒவ்வொரு தரமும் ஏதாவது வாங்கிட்டு வந்தீங்கனா.. கல்யாணத்துகப்புறம் நீங்க வாங்காம வரும் போது எனக்கு மனசு கஷ்டமா இருக்குமே..”
“இப்போ தான் நான் தனியா போறேன்.. கல்யாணத்துக்கபுரம் உன்ன யார் தனியா விட்டா? என் கூட நீ இருப்பியே.. அப்போ உனக்கு பிடிச்சத நீயே வாங்கிக்கோ… உனக்கு வாங்கிட்டு வந்து உன்ன இம்பிரஸ் பண்ணனும்னு நான் வாங்கரதில்ல.. எப்போவும் வாங்க மாட்டேன். சிலதை பார்க்கும் போது அது உனக்கனதுனு  தோணும்.. அப்போ தான் அதை வாங்குவேன்.”
அவன் பேசியதெல்லாம் நேற்று நடந்து போல் நினைவில் வந்தது.
‘இந்த முறை என்ன வாங்கி வருவான்?’ ‘ஒன்றும் வேண்டாம்.. உன்னை தா.. காயப்படுத்தாமல் வைத்துக் கொள்வேன். வேரெதுவும் வேண்டாம் எனக்கு.. மன்னிப்பை தந்தாலே போதும். தாலி எல்லாம் கேட்க மாட்டேன். உனக்காய் தோன்றும் பொழுது கட்டு போதும்… இரத்த காட்டேறியாய் உன் உயிரை உரிய மாட்டேன்.. புரிந்து கொள்ளாமல் உன்னைப் பிடுங்கி எடுத்து தின்ன மாட்டேன்.. என்னை மன்னிப்பாயா?’
அவன் புகைப்படத்தை எடுத்து ஆசையாய் வருடி அதனோடு பேசி நின்றாள். அவன் இதழ் வருடி முத்தம் பதித்தாள். “சாரி” என்றாள் மனதார.. இது எதுவுமே அவன் அறியவில்லை ஆனாலும் அவள் உள்ளம் அமைதி நிலையில்..
பாற்கடலைக் கடைய, வந்த நஞ்செல்லாம் போய் இப்போழுது அமிர்தம் மட்டுமே மிச்சம்!
‘எத்தனை மைல் தூரம் வேண்டுமானாலும் போ.. எத்தனை வருடமானாலும் போ.. உன் மனம் என்னிடம்.. நான் தனியாய் இல்லை.. நீ என்னோடு என் இதய கூண்டுக்குள்’
 
“கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…” அவள் வாய் முனுமுனுத்தது.

Advertisement