Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 34
“கேபின் க்ரூ, ப்ளீஸ் ப்ரிபேர் ஃபார் டேக் ஆஃப்!” (“Cabin crew, please prepare for take-off.”)
ஃப்ளைட் கேப்டென் அறிவிக்க விமானம் ஆகாயத்தை நோக்கி தன் கனமான அலுமினிய உடலைத் தூக்கிக் கொண்டு பறக்க ஆரம்பித்தது.
அலுமினிய பறவையின் இயந்திரம்  ஏற்படுத்திய சத்தத்தினால் சில குழந்தைகள் வீரிட, அதனுள் ஏற்பட்ட காற்றழுத்தத்தினால் வளர்ந்த குழந்தைகள் காது வலியில் வீரிட.. விமானத்தில் சத்தம் காதை அடைத்தது. இதெல்லாம் விமானத்தில் என்றும் நடப்பது தான் என்பது போல் சிலர் கண்மூடியும், சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டும் அவரவர் இருக்கையில்.
நூறு முறை பார்த்தவர்களுக்கும் அந்த ஜன்னல் வழியே தெரியும் காட்சி அலாதி இன்பம். மிகப் பெரிதாய் கண் முன் தெரிந்த பெரியப் பெரியக் கட்டிடங்கள் தீப்பெட்டியாய் மாறி.. பின் எறும்பாய்.. பின் எதுவுமே தெரியாமல், மேலும் கீழும் பஞ்சு போன்ற மேகம் மத்தியில் ஒரு ஆகாயப் பயணம். அதைப் பார்க்க எந்த கண்களுக்கு தான் விருப்பம் இருக்காது? ஏனோ சுதாவிற்கு அதை எதையுமே பார்க்கும் மனநிலை இல்லை.
வேகமாய் விமானம் பயணப்பட்டாலும் அவளிடம் ஓர் மோன நிலை. சப்பணமிட்டு கைகளை ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்து கண்மூடி அமர்ந்திருந்தாள். மனம் முன்தினம் நடந்ததைக் அசைப் போட்டுக் கொண்டிருந்தது.
“பாட்டி நான் மும்பை போறேன்.. என் ஃப்ரெண்டுக்கு குழந்தை பிறந்திருக்கு” இதை அவள் பாட்டியிடம் கூறும் பொழுதே சில பல அர்ச்சைனைகளை எதிர் பார்த்தாள். பாட்டி என்ன சொன்னாலும் மும்பை செல்வதென்று முடிவெடுத்த பின் தான் அவரிடம் சென்றதே. மீரா-ராகுல் அவள் வாழ்வில் இன்றியமையாதவர்கள்.
தீபக் புண்ணியத்தில், வாழ்க்கை வெறுத்து ‘மாண்டு தன் அன்னையிடம் போகமாட்டேனா’ என்று தன் கூட்டுக்குள் சாகக் கிடந்தவளைத் தேற்றியவள் மீரா. ஒரு நீண்டப் போராட்டம்.. பின் சுதாவும் மீராவோடு விடுமுறைக்கு அவள் வீட்டுக்குப் போகப் பழகி இருந்தாள். மீராவிற்கு அன்னை மட்டுமே. அவரோடும் நல்ல பழக்கமே. ராகுலிடம் பழக்கம் ஏற்பட்ட பின்னரே மீண்டும் ஆண்களோடு பழக ஆரம்பித்தாள். 
ராகுலின் பெற்றோர் டுபாயில் பணிப்புரிய, மீரா – ராகுல் திருமணம் முடியவும் மீராவோடு அவள் தாயாரையும் அவர்களோடே அழைத்துக் கொண்டான்.
‘கண்டிப்பாய் போகத் தான் வேண்டும்.. அந்த குட்டி தேவதையைப் பார்த்தே ஆகவேண்டும்’. பத்து நாட்களுக்கு விடுமுறை கேட்க, வரதன் என்னச் சொல்லப் போகிறார்? “பத்திரமா போய்ட்டு வங்கமா” என்றார்.
‘ஏன் வரதனிடம் திடீர் மாற்றம்? அதுவும் வினாடி நேரத்தில். ஒரே ஒரு அழைப்பு கண்ணனிடமிருந்து.. அதுவும் கைப்பேசியில்! கண்ணனை வரதனுக்குத் தெரியுமா? ‘உங்க புருஷன்னு ‘சொல்ல சொன்னாங்க’!’.. கண்ணன் சொல்லியதை அப்படியே கிளிப்பிள்ளை போல இவன் ஒப்பிக்கக் காரணம்? கண்ணனிடம் கேட்க வேண்டும்.. ஊரிலிருந்து வந்ததும் கேட்க வேண்டும்.. கான்ஃபரென்ஸ் ஹாளை சொந்த காரியத்திற்குப் பயன்படுத்தும் அளவுக்கு கண்ணனுக்கு அங்கு என்ன தொடர்பு? பெரிய அளவு ஷேர் ஹோல்டரா இருக்குமோ? அவரிடமே கேட்க வேண்டும்.. எ.கெ-வ தெரிஞ்சிருக்குமோ? கண்டிப்பா இருக்கும்.. கண்டிப்பா கேக்கணும்..’
வரதன் பிரச்சனை ஒழிந்த நிம்மதி.. இனி பாட்டியை யார் சமாளிப்பது? ‘கேட்டு பார்க்கலாம் ஒத்து காட்டி, அவர்ட்டையே பேசச் சொல்லலாம்.. அவர் பேசினா பாட்டி ‘கண்ணா..’னு உருகிடும்! ஹப்பா எல்லாத்துகும் இந்த மனுஷன் தான் எனக்குத் தேவை படுது’ இதே நினைப்பில் தான் பாட்டியிடம் போய் நின்றாள்.
அவள் எதிர்பார்த்ததுக்கு நேர்மாறாய், “போ.. போய் நாலு நாள் இருந்தே பார்த்திட்டு வா. உன் கூட படிச்சவங்க எல்லாம் குடியும் குடுத்தனமுமா இருக்கத பார்த்துட்டு வா..” என்று நிறுத்திகொண்டார். அதனால் தானோ என்னமோ இன்று வானிலை சரி இல்லாமல் விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதம்..
“மாலு பேபி.. சமத்தா சீட்ல உக்கார்.. ஃப்ளைட் லேண்ட் ஆனதும் அம்மா நீ கேட்ட சாக்லேட் வாங்கி தரேன்..” பின் இருக்கையில் யாரோ அவரின் மகளிடம் கூறிக் கொண்டிருந்தார்.
மாலு.. மாலினி.. அவள் தான் சுதாவின் மூளையை அரித்துக்கொண்டிருந்தாள். ‘இவளுக்கு என் கிட்ட என்ன வேலை ஆகணும்? எதுக்கு என் பின்னாடியே சுத்தரா? காரணமே இல்லாம?
முதல் முறை கார்த்தியோடு அவள் பேசியதைப் பார்த்திருக்கிறாளே.. ஹப்பா என்ன ஒரு ஆணவம் அந்த பேச்சில். ஆணழகன், நல்ல பதவியிலிருந்தான்.. அப்பேர் பட்ட கார்த்தியைக் கூட அவள் மதித்ததாய் தெரியவில்லை. ‘என்னிடம் தோழமை பாராட்டக் காரணம்? யாருக்குமே தெரியாத ஒரு ட்ரெயினி தானே நான்?’
“சுதா.. இந்தா இத பிடி! நம்ம கம்பனிக்கு ஒரு பெரிய பிஸினஸ் டீல் சைன் ஆகுது. அத செலிபரேட் பண்றோம். நம்ம கம்பனியோட எல்லா பெரிய தலையும் வரும். லோக்கல்ல இருக்க மினிஸ்டர்ஸ் கூட வருவாங்க.. செம்மையா இருக்கும்.
பெரிய பெரிய செலிப்ரிட்டீஸ், மாடல்ஸ், பெஸ்ட் சிங்கர்ஸ்… செம பிரம்மாண்டமா இருக்கும். லைஃப் டைம் ஆப்பர்டியுனிட்டி! அந்த ப்ராஜெக்ட்ல இன்வாள்வ்டு டீம்க்கு மாட்டும் தான் இன்விடேஷன். சோ உனக்குனு ஒன்னு தனியா வாங்க முடியல.. என் இன்விடேஷன் வச்சு உன்ன கூப்பிட்டுகலாம். ஒரு கெஸ்ட் அலவ்டு! உன் பாட்டிட்ட பொய் சொல்ல வேண்டாம்.. முக்கியமான ஆஃப்பீஸ் பார்ட்டினு உண்மைய சொல்லிட்டு வா..
பார்ட்டி ஈவ்னிங் ஆரம்பிச்சு மிட் நைட் வரைக்கும் இருக்கும். மும்பை இல்லாதவங்களுக்கு அங்கேயே ரூம் இருக்கு. நீ என் கூட தங்கிக்கோ… விடிய காலைல எ.கெ-வோட நான் கிளம்பிடுவேன். நீ மார்னிங் பொறுமையா செக் அவுட் பண்ணி உன் ஃப்ரெண்ட பாக்க போயிடு… உனக்கு தனி ரூம் போட முடியல.. ஹோட்டல் ஃபுள்ளி புக்டு(fully booked). உனக்கு என் கூட ஃப்யூ அவர்ஸ்(few hours) இருக்க ப்ராப்லம் எதுவும் இல்லையே? என்ன சொல்ர?”
இவள் என்ன சொல்ல.. எல்லாவற்றையும் இவளுக்கும் சேர்த்து அவளே அழகாய் யோசித்துச் செய்து விட்டாளே.. அவள் தான் மாலினி! மும்பையில் சுதா கால் பதிப்பது முதல் ஹோட்டலில் நுழைவது முதல் அங்கிருந்து எப்பொழுது எதை/யாரைப் பார்க்கவேண்டும் என்று எல்லாம் மாலினி திட்டம்!
மாலினி கொடுத்ததில் விமான பயணச்சீட்டு, சில தாள்கள் நீக்கப்பட்ட இன்விடேஷன், மாலினியோடு தங்கவிருக்கும் அறை பற்றிய விபரம் மட்டுமே இருக்க மாலினியை பார்த்தாள். இன்விடேஷன் முழுவதும் இல்லை. விருந்தளிப்பவர், விருந்தினர், விருந்து நேரம் எந்த தகவலும் இல்லை. அந்த தாள்கள் மட்டும் நீக்கப்பட்டிருந்தது.
சுதா மாட்டேன் என்று சொல்லிவிடக் கூடாதென்ற பதட்டம் அப்பட்டமாய் தெரிந்தது. சுதாவிற்கு அப்பொழுதே ஏதோ இடறல். ஆனாலும் வாங்கிக்கொண்டாள். அவள் தான் எப்படியும் மும்பை செல்ல முடிவெடுத்து விட்டாளே..
“அப்பறம் சுதா.. அது ரிச் க்ரௌட்.. சோ உன் கிட்ட க்ராண்டா இருக்க அவுட்ஃபிட் எடுத்திட்டு வா..” என்ன நினைத்துச்  சொன்னாளோ… சுதா வாய் திறந்தாளில்லை.
“உன் கிட்ட நல்லது இருக்குத் தானே? நான் சைஸ் சீரோ.. உனக்கு என்னுது பத்தாது.. இல்ல நானே என்னுத கொடுத்திருப்பேன்..”
“நான் மேனேஜ் பண்ணிக்கறேன். எனக்கு மத்தவங்க துணி யூஸ் பண்ணி பழக்கம் கிடையாது! சோ, நோ வொரிஸ்..”
‘ஏன் மாலினிக்கு நான் இன்றியமையாதவளாய் போய்விட்டேன்..’ இது மட்டும் தான் சுதா மனதில்.
யோசித்தவள் இன்விடேஷன் மட்டும் கையில் எடுத்துக்கொண்டு, “ஃப்ளைட் டிக்கெட் எனக்கு வேண்டாம்.. ரூமும் வேண்டாம்.. நான் பார்த்துக்கறேன்.. பார்ட்டி மட்டும் முடிஞ்சா வரேன்.. ஆனா டீடெயில்ஸ் இருக்கப் பக்கம் காணமே..’’ அவளிடம் மற்றதை நீட்ட
“நீயே வச்சுக்கோ.. டிக்கெட் வாங்கியாச்சு.. டன் டீல். இனி கேன்ஸல் பண்றதுல ஒரு புண்ணியமும் இல்ல…
ஒரே ஒரு ஹாள் பர்மிட் தான் இருக்கு.. நீ ஹோட்டல் வாசல் கிட்ட வந்ததும் எனக்கு ஒரு காள் போடு .. நானே வந்து உன்ன உள்ள கூப்பிட்டுக்கறேன். ரூம் டீட்டெயில்ஸ் வச்சுக்கோ… இன் கேஸ் நீ வர டைம்க்கு என்னை ரீச் பண்ண முடியாட்டி ரிஷப்ஷன்ல இருந்து ரூம் அக்செஸ் கார்ட் வாங்கிக்கோ.. நான் ஒரு கார்ட எதுக்கும் உன்ட்ட குடுக்க சொல்லி குடுத்திட்டு போறேன். என் ரூம்ல இரு நான் வந்து கூப்பிட்டுகறேன்..
அபிஷியலா பார்ட்டி இவினிங் ஆரம்பிக்கும்.. பேசியே போர் அடிப்பாங்க. எட்டு மணிக்கு புஃப்பே ஆரம்பிக்கும்.. அப்போவே பாரும் திறந்திடும்.. ட்வெல் வரைக்கும் இருக்கும். நீ எட்டுக்கப்பறம் வா.. நல்லாயிருக்கும். எ.கெ என்கூட தான் அங்க பத்து மணி வரைக்கும் இருப்பார்.. உனக்கு அறிமுகப்படுத்தறேன்..” ‘சுதா சரி சொல்ல வேண்டுமே’ என்றவளின் வேண்டுதலைச் சுதா நிறைவேற்றி வைத்தாள்.
‘எ.கெ.-வ பார்த்து நான் என்ன பண்ணப்போறேன்.. அவனை எதுக்கு எனக்கு இன்ரொடியூஸ் பண்ணனும்?’ ப்ரத்வி கூறியதெல்லாம் சுதாவின் நினைவில் வந்து போனது. 
இவள் எதை எதையோ நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்க மும்பையிலிருந்த அஷோக் மாலை விருந்துக்காகத் தன்னை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தான்.
‘கண்ணனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பின் பார்ட்டி’ என்ற அவள் நினைப்பில் வானிலை மண்ணை அள்ளிப்போட.. கண்ணனா? பார்ட்டியா? என்ற கேள்வி முன் வந்தது. கண்ணன் தரப்பு வெல்ல அவனுக்கு அழைக்க, அவன் அதை ஏற்கும் நிலையில் இல்லை. இரண்டு முறை அவளிடமிருந்து அழைப்பு வரவும் “பிஸி.. காள் யூ லேட்டர்..” என்ற மெசேஜ் மட்டுமே அவனால் அனுப்ப முடிந்தது.
கண்ணனைப் பார்ப்பது கூடாத காரியமாய் தள்ளிவைத்துவிட்டாள். பார்ட்டிகே போகலாம் என்ற நினைப்பு ஏனோ கசத்தது. ‘எதற்கு அங்கெல்லாம் போய்.. என்னத்தை காண’ என்ற சலிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.
பார்க்கலாம் என்று எண்ணி வந்த கண்ணனையும் காணயிலவில்லை. மீராவும் குழந்தையும் இன்னும் மருத்துவமனையில்.. அடுத்த நாள் காலை தான் பார்க்க முடியும். ராகுலும் வீட்டுற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து அசதியில் உறங்கிவிட.. சுதாவும் படுத்துவிடலாம் என்று நினைத்த வேளை தான் மாலினி அழைத்தது.
அவள் வற்புறுத்தவும் ஒரு மணி நேரத்தில் வருவதாய் கூறி கிளம்ப சென்றாள்.
மணி எட்டை அடையவும் பார்ட்டி களைக் கட்ட ஆரம்பித்தது. பார்ட்டியில் பியர் பாட்டிலோடு நின்றிருந்த அஷோக்கைப் பார்த்து நின்ற மாலினி மனதில் ஒரு மென்னகை(?).
அன்று அஷோக்கின் அறையில் சென்றதின் காரணம் சுசிலா அவர்களுக்கு மணமுடிப்பதைப் பற்றிப் பேசப் போகிறார் என்ற நினைப்பில் மட்டுமே. சுதாவையும் அஷோக்கையும் பார்க்கவுமே தெரிந்துவிட்டது யாருக்கு யாருடன் திருமணம் என்று. அன்று வரை அஷோக் ஒரு பெண்ணிடம் நெருக்கமாய் பேசியது கூட கிடையாது. அதனால் அவளாய் விலகிக் கொண்டாள். 
மறு தினம் சுதா மூலம் தெரிந்தது இது தான்: சுதா அடுத்த வீட்டுக் கண்ணனைக் காதலிக்கிறாள். அவன் பெரிய அளவில் துணி வியாபாரம் செய்பவன். ஆக மொத்தத்தில் அவளுக்கு அஷோக்கின் டெக்ஸ்டைஸ் பற்றி  மட்டுமே தெரிந்திருந்தது. மற்றபடி அவள் பொழுதுபோக ஏதோ கடனே என்று வேலைக்கு வந்து போகிறாள், அங்குச் செல்ல பிடிக்காமல் ஓரிரு வாரத்தில் அதை விடவும் போகிறாள். வேலை செய்யும் நிறுவனம் பற்றியோ அதில் இருக்கும் முதலாளி என்று ஒருவரையும் தெரிந்து கொண்டாளில்லை. அது அவளுக்குத் தேவையில்லா விஷயம். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அவள் டீம் லீடும் நண்பர்கள் கூட்டமும். ஆயிரக் கணக்கான ஆட்களை வேலையில் அமர்த்தும் அளவு பெரிய நிலையில் இருக்கும் முதாளியைப் பார்ப்பது சுலபமில்லை என்பதால் சுதாவும் அஷோக்கைப் பார்த்தது இல்லை. அவள் காதலனும் அவள் கம்பனி முதாளியும் ஒருவனே என்று தோன்றக் காரணம் இருக்கவில்லை சுதாவிற்கு. கண்ணனோ சுசிலாவோ பேச்சு வாக்கில் கூறியிருந்தால் அறிந்திருப்பாள். (சுசிலா மும்பையில் இருக்கவே அவருக்கு இவள் இங்கு வேலை செய்வது தெரியாது. கண்ணன் முதலில் வேண்டுமென்றே கூறவில்லை. பின் அவளே அறிந்துகொண்டிருப்பாள் என விட்டுவிட்டான்.) அவளோடு தனியே கழிக்கக் கிடைத்த நேரம் மிகக் குறைவு அதில் இதைப் பற்றி பேச அவன் என்ன ‘அவ்வளவு நல்லவனா?’ அதையும் தான் மாலினி மாடியில் பார்த்தாளே.
ஒரு ஆர்வத்தில் தான் இதைத் தெரிந்து கொண்டாள். ஆனால் அன்று மாலையே விடியோ காளில், “மாலினி.. நீ என் கூட பழகரதெல்லாம் சரி தான்.. ஆனா என்னைக்கும் நினைவில வச்சுக்கோ… நான் உன் பாஸ்.. நி என் பி.எ… இனிமே என் வீட்டுக்கெல்லாம் வர வேண்டாம்.. சொந்தம்னு உரிமையில வந்தா.. அம்மாட்ட பேசினோமா.. ஹால், டைனிங் ஹாலோட வேளில போனமானு இருக்கணும்.. தேவ இல்லாம என் ப்ரைவேட் ஸ்பேஸ்ல வராத.. விளைவு உனக்குப் பிடிக்காது.” அஷோக் அவளிடம் கண்டிப்புடன் சொல்ல அதை அவள் அருகிலிருந்த இருவர் பார்த்துவிட அசிங்கமாய் போய்விட்டது. போதாக் குறைக்கு அவன் கூறிய நேரம் அவன் அருகில் மூர்த்தி இருந்தது போல் தெரிந்தது.
இனி இங்கு வேலை செய்தால் தனக்கு மரியாதை இருக்காது என்பது தின்னம். அவளுக்கு அளிக்கப் பட்ட சலுகைகள் காணாமல் போய்விடும். அவனாய் அனுப்பும்முன் சென்று விட வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் செல்லும் முன் அவனுக்கும் ஏதாவது நல்லது செய்ய விருப்பம் எழ.. அஷோக்கைப் பார்க்க அவனோ பார்ட்டி ஆரம்பித்ததிலிருந்தே அந்த ஒற்றை பாட்டில் பியரை உரிஞ்சிக் கொண்டிருந்தான். அவன் வேலைக்கு ஆக மாட்டான் என்று தெரிந்தே சுதாவிற்கு வலை விரித்தாள். விஷயம் தெரியாமல் இதோ சுதா வந்து கொண்டிருக்கிறாள் நடக்கப் போவதை உணராமலே..
அஷோக்கோடு சென்று நின்ற மாலினி அவர்களுக்கு ‘கம்பனி’ கொடுப்பதாக முதலில் பியரில் ஆரம்பித்து, அஷோக் அங்கிருந்து நகரவும் படி படியே முன்னேறி வாட்காவில் தலை சரிந்தாள். மணி ஒன்பதை அடைய.. சில மணி நேரத்தில் கிளம்ப வேண்டுமே என்று அஷோக், மாலினியை ஃபோனில் அழைக்க அவள் பதில் சொல்லும் நிலையில் இல்லை.
அவளைத் தேடிவந்தவனுக்கு ‘இவளை என்ன செய்தால் தகும்’ என்ற நிலை. போட்டிருந்த உடையோ உடலில் மூன்றில் ஒரு பாகமே மூடி இருக்க இன்னும் தர்ம சங்கடமாய் போனது.
‘இது என்ன டா தல வலி?’ என்றே எண்ணத்தோன்றியது.
மாலினி குடித்து டேபிலில் படுத்துக் கிடந்தாள். கூட்டம் குறைவதற்கான அறிகுறி இல்லை.  பார் நிரம்பி வழிந்தது. யாரும் போதையில் தள்ளாட ஆரம்பிக்கவில்லை. அங்கு இவள் நிலை மட்டுமே படு மோசம். அங்கு இருக்கும் ஊழியர்களை விட்டு அவளைத் தூக்கச் சொல்லும் நிலையில் அவள் இல்லை.. என்ன செய்ய.. அவனோடு எங்கும் வரும் பி.எ., நன்கு பழக்கப்பட்டவள், உறவுக் கார பெண், விட்டுப் போக முடியாது.
“மாலினி.. மாலினி.. கெட் அப்” அவளை உலுக்க
“..”
“மாலினி எழுந்து தொல… உயிர எடுக்காத… எழுந்திரு!” அவன் பொறுமை காற்றில் பறக்க.. அவள் காதில் சீர.. அது அவளை அடைந்தால் தானே?
அவள் பர்சை பேன்டிற்குள் சொருகிக்கொண்டு, அவளைக் கையில் தாங்கலாய் அழைத்துச் செல்லும்படி அவளைத் தூக்கி நிறுத்தினான். அஷோக்கிற்கோ அவமானமாய் இருந்தது.  போன முறையும் இதே தான் நடந்தது. அவன் முன் அதைப் பற்றி ஒருவரும் பேசவில்லை என்றாலும் காற்றின் திசையில் பரவத் தான் செய்தது. ஒவ்வொரு முறையும் இதே நடந்தால் அவன் மதிப்பு என்ன ஆவது?
“ஹே அஷோக்.. எடுக்கு டா டுக்குர.. விடுடா..” நா குழன்றது.
“முகரையை பேத்துடுவேன்.. மரியாதையா பேசு! நீயே நடந்து வா” என்று அவளை விட்டான்.
அங்கிருந்த தங்கத் திரவியத்தை வாயினுள் ஊற்றி, குனிந்து காலணியை போட எடுத்தவள் அங்கேயே தரையில் படுக்க, அவனின் கோபம் தலைக்கேறியது.
“என்ன கன்ராவிய குடிச்சுத் தொலைச்ச..” மீண்டும் அவளைக் கையில் பிடித்துத்  தூக்க, அவள் ஒரு காலில் ஹைய் ஹீல்சும், மற்றொன்று அவள் கையிலுமாய் இருந்தது. அவன் ஜேக்கட்டை அவள் மேல் போர்த்தி அழைத்து வர எல்லோரும் அவனையே பார்ப்பது போன்றிருக்கத் தலையைத் தூக்கினானில்லை. அருகிலிருந்த லிஃப்டிற்குள் நுழைந்தான்.
அவளின் தளம் கேட்க, அவளே பொத்தானை அழுத்த, தளம் வரவும் அங்கு எந்த அரவமும் இல்லை… அந்த முழு நீள வராண்டாவில் அவர்கள் இருவர் மட்டுமே. ‘ஹாப்பா’ என்றிருந்தது.
அதுவரை வாயே திறவாதவள், லிஃப்டை விட்டு வெளிவரவும் அவன் மேல் ‘தங்கத் திரவிய’ அபிஷேகம் செய்தாள்.
“ஷிட்.. மாலினி!!! வாட் கைண்டாஃப் இடியட் ஆர் யூ? ஒரு லிமிட்டோட நிருத்த தெரியலனா எதுக்கு குடிக்கர?” அப்படி ஒரு கோபம் அவனுக்கு. அருகிலிருந்த குப்பைத்தொட்டி அருகே அவளை அமர்த்தி, அவன் ட்-ஷிர்ட்டை கழட்டி அவனை துடைத்து விட்டு, பின் அவள் முகத்தையும் அதிலேயே துடைத்து, முழு கோபத்தோடு குப்பைத்தொட்டியில் அவளுக்குப் பதிலாய் ட்-ஷர்ட்டை வீசினான்.
அவளை எழுப்ப, அவள் எழுந்தால் தானே..
“அஷோக்.. வா நீயும்… இங்க நல்லா இருக்கு” என்று அவள் தரையில் படுத்துக் கொண்டு தட்ட
“வாய மூடு.. ச்ச.. ஏதாவது பேசின.. அப்பிடியே இந்த ட்ராஷ் பின்ல குப்பையோட குப்பையா போட்டுவேன்.. ஜாக்கரத!”
என்ன முயன்றும் அவள் எழுந்து நிற்கவில்லை. சுருண்டு சுருண்டு விழுந்தாள்.
ஆஃப் ஷொல்டர் உடை தொடையைக் கூட மறைக்கவில்லை.. சட்டை இல்லாமல் அவளைத் தூக்கவே அருவருப்பாய் இருந்தது. யாரேனும் வருவதற்குள் சென்று விட வேண்டுமென்று அவள் பர்சிலிருந்து ரூம் கார்டை எடுத்து அவளிடம் கொடுக்க,
“என்..ன பா..ஸ்.. கோபமா?” கண்ணை திற்க்க முயன்றுக் கொண்டே கேட்டாள்.
“இது தான் முதலும் கடைசியும் என் கூட நீ வரது! என் மானம் மரியாத போச்சு… பாக்கரவங்க என்ன நினைப்பாங்க.. அசிங்கமா இல்ல” திட்டிக்கொண்டே அவளை தூக்கிக்கொண்டு அறை நோக்கி நடக்க
“ஒரு அழகான பொண்ணை உஷார் பண்ணிட்டு போரான்னு..”
எரிச்சல் அப்பட்டமாய் தெரிய அக்குரலில், “பேசாதனு சொன்னேன். வாய மூடு.. வர எரிச்சலுக்கு அப்படியே தூக்கி போட்டுட்டு போய்டுவேன்! எழுந்து நிக்க முடியலானாலும் வாய்க் கொழுப்புக்கு ஒன்னும் கொரச்சல் இல்ல”
“அந்த கார்ட காட்டி கதவ திற” எனவும் அவள் கதவைத் திறக்க..
சட்டை இல்லா அஷோக், பார்ட்டி உடையிலிருந்த மாலினியை கையில் ஏந்திக் கொண்டு அறையின் நுழைய..
சோஃப்பாவில் அமர்ந்து குனிந்து மாலினிக்கு ஃபோன் போட்டுக் கொண்டிருந்த சுதா தலை தூக்க..
அறையினுள் நுழைந்ததும், “அ..ஷோ..க்.. கோவிச்சுக்காத டார்லிங்.. நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்..” என கொஞ்சலாய் மாலினி அவன் கழுத்தை கட்டிக்கொள்ள..
சுதா அதிர்ச்சியில் எழ.. அவள் கையிலிருந்த கைப்பேசி தானாய் நழுவியது.
You only see what your eyes want to see 
How can life be what you want it to be?
You’re frozen When your heart’s not open… (lines from Madonna Frozen)

Advertisement