Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 75_2
கார்த்திக்கிற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. புதியவரிடமே போகத இரண்டு குழந்தைகளும் அவனிடம் எப்படி ஒட்டிக்கொண்டனர் என்பது பெரும் வியப்பே. ‘அப்படி என்னடா உன்ட்ட இருக்கு..’ என்று தான் பார்த்தான்.
கண்ணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லா வார்த்தையும் விட்டுவிட்டு இது என்ன அழைப்பு? கண்டிப்பாக அவனாக அழைத்திருக்க மாட்டான். யார் சொல்லி? எப்படி? தன்னை வேறு யாரோவென்று எண்ணிக்கொண்டானோ? 
“சித்தப்பாவா?”
“எஸ் மாமா. அட்ட சொல்லி.. எனக்கு மாமா.. ஜோக்கு சிட்டப்பா” என்றான். மிக தெளிவாக. 
சொன்னவன் இறங்கி ஓடிவிட… பின்னோடு சென்றாள் அனி.
கார்த்தி முகத்தில் புன்னகை அரும்பி மறைந்தது. உள்ளுக்குள் இருந்த வலியும் குழப்பமும் நீங்க.. ஒரு நிம்மதி.
குழப்பத்தில் கண்ணன் நிற்க.. எதிரில் வந்தது ஒரு பளிங்கு சிற்பம், குழப்பத்தை தீர்க
சிற்பம் நடக்குமா?
ஓ..நடக்கிறதே..
சிற்பம் சிரிக்குமா?
ம்ம்.. முரல்கள் தெரிய சிரித்த முகமாய் அவர்களை நோக்கி வந்தது.
சுசிலாவிற்கு பின் ஒருத்தியை, கண்ணிற்கு அழகென்று அஷோக் ஒத்து கொண்டால் அது இந்த சிற்பத்தைத் தான்.
இந்திய அழகும் ஆஸ்திரேலியா அழுகும் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்க வேண்டும். அப்படி தான் தோன்றியது அஷோக்கிற்கு. 
அந்த பளிங்கு சிற்பம் பன்னீர் ரோஜா நிறத்தில் பட்டு சரசரக்க இவர்களை நோக்கி நடந்து வந்தாள்.
மோகினி பளிங்கு பல் வரிசை தெரியச் சிரித்தாள்.. தன் பன்னீர் ரோஜா இதழ் திறந்து.. கண்ணில் காதல் வழிய.. ஒரு பார்வை.. எந்த ரிஷியையும் தவம் காளைய செய்யும் பார்வை கார்த்திக்கை நோக்கி வீச..
அவனும் விழுந்துவிட்டான்.. அந்த நொடி ஏனோ அருகில் இருந்த அஷோக் இருவர் கண்ணுக்கும் தெரியவில்லை.. வந்தது லிண்டா. 
“கார்ட்டி ஹனி..” என்றாள் கொஞ்சும் தமிழில்.
அவளைக் கண்டதும் ஜோ, “அம்மா..” என்று அவளிடம் தாவினான். 
ஜோவின் அழகு கூட இவளால் தானோ? அதில் நமக்கு சந்தேகமே வேண்டாம்!
“சுடா பேபி எங்க?” என்றாள்.
“நீ கொஞ்ச நேரம் ஜோவ பார்த்துக்கோ.. அவ வெளியில போயிருக்கா!” என்றான் கார்த்தி.
“என் மனைவி” என்ற அறிமுக படலம் முடிய..
குழந்தைக்கு உணவு கொடுக்கும் வேளை என்று லிண்டா ஜோவோடு சென்றுவிட பால்கனியில் கார்த்தியும் கண்ணனும். 
சின்னாபின்னமாகிய இதயம் என்ற ஒன்று அஷோக்கின் உணர்களிடம் மாட்டிக் கொண்டு சித்திரவதையை அனுபவித்தது.
“இது சுதா ரூமா?” கண்ணன் கேட்க
“ம்ம்..” என்றான் கார்த்திக்
“அட்ட-னா அத்தையா?”
“ம்ம்”
“அந்த அத்த சுதாவா?”
கார்த்திக்கிடமிருந்து பதில் இல்லை. அஷோக்கிற்கு ஏகத்திற்கும் கோபம்.
கார்த்திக் சட்டையைக் கொத்தாய் பிடித்து, “என்ன ஆளாளுக்கு என்கிட்ட விளையாடி பாக்கறீங்களா?”, இறுக்க
“..” கார்த்திக் அஷோக்கின் சீரும் கண்களைக் கூர்ந்து பார்த்து நின்றான். வாய் திறக்கவில்லை.
அஷோக் உண்மை தெரிந்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருக்க கர்ஜனை அதிகமேயானது. கழுத்து நரம்பு புடைத்துக்கொண்டு வரும் அளவு கோபம். 
“என்ன சொல்ல மாட்டேன்ற கார்த்தி? உன் மகன் என்னை எதுக்கு சித்தப்பானு கூப்பிட்டான்? நீயா சொல்றியா? இல்ல இத எல்லாம் சொல்லிக் கொடுத்தாளே ஒருத்தி… அவட்ட கேக்கவா? எங்க அவ? அவள கூப்பிடு.. அவட்ட கேக்கறேன்..” 
கார்த்திக் பொறுமையாக அஷோக்கின் கையை சட்டையிலிருந்து விலக்கியவன், “நீங்க உங்க பொண்டாட்டியை மறந்துட்டு வேற ஒருத்தங்களுக்குத் தாலி கட்டினா முறை எல்லாம் இல்லேனு ஆகிடுமா பாஸ்? அவன் சித்தி புருஷன்.. அவனுக்குச் சித்திப்பா தானே.. அந்த முறையில கூப்பிடுறான்!” என்றான்.
சொற்களின் பொருள் இடியாய் இறங்கியது. ‘சுதா.. மனைவியா? என் மனைவியா?’
பாஸ்டன் விமான நிலையத்தில் கலங்கிய நெஞ்சோடு அவன் கைபிடித்து அவள் நிற்க முடியாமல் நின்றது நினைவில் வந்தது. கால் துவண்டு போனது. தலையில் கை கொடுத்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான். உள்ளுக்குள் தேங்கியிருந்த எல்லா உணர்வுகளும் ஒன்று திரண்டு தொண்டையில் வந்து மாட்டி நின்றது. கண்ணை மூடிக்கொள்ள.. அவள் தான் தெரிந்தாள். ‘சுதா… லட்டு…’ மனம் துள்ளிக் குதித்தது. ‘எனக்காகக் காத்திருக்கிறாளா? விட்டுவிட்டேன் என்றாளே.. இன்னும் இதயத்தில் என்னைச் சுமக்கிறாளா?’ 
அஷோக்கின் நிலையைப் பார்த்த கார்த்திக், ‘சத்தியமாவது புண்ணாக்காவது’ என்ற நிலைக்கு வந்துவிட்டான். சுதாவின் கண்ணீர் வந்து போனது. இதற்கு மேலும் மௌனம் சரியில்லை என்று தோன்ற. இதயத்தைத் திறந்தான்.
“சுதா உங்க மனைவி பாஸ். முறைப்படி தாலி கட்டின உங்க மனைவி. உங்க மேரேஜ் எதிர்பாராத விதமா கேரளால ஒரு கோவில்ல நடந்தது. சோ வீட்டில யாருக்கும் தெரியாது. அத வெளியில சொல்றதுக்கு முன்ன விபத்து.. உங்களுக்கு நினைவு போச்சு… அவள் உயிர் பிழைச்சு வரதுக்கு முன்னாடி உங்களுக்கு அவசர அவசரமா கல்யாணம். அவளால உங்க உயிருக்கு ஆபத்துன்னு சொல்லவே அவ அமைதியா கிளம்பிட்டா. என் புருஷன் கட்டின தாலியாவது குடு.. யார்ட்டையும் சொல்லாம காணாம போய்டுறேன்னு.. அவ பாட்டிட்ட பேரம் பேசி தாலிய மட்டும் வாங்கிட்டு அவ அண்ணாவோட அமெரிக்கா போய்ட்டா!”
அஷோக்கிடம் இம்மி அசைவில்லை. கண்ணை மூடிக் கேட்டுக் கொண்டிருந்தான். 
“சுதா அண்ணா தான் டேனியேல். அவர் மனைவி தான் ஜான்சி, என் தங்கை! சுதாவும் நானும் சொந்தம் ஆகரதுக்கு முன்னமே அவ என் உறவானவ. எங்க உறவு என்னனு கேட்டா சொல்ல தெரியாது.
மூச்சுக்கு முந்நூறு தரம் லவ் யு கார்த்தினு சொல்லுவா. தப்பா நினைக்காதீங்க… அது காதல் வார்த்தை இல்லை. அன்பின் மிகுதியில வர வார்த்தை. என் மேல உயிரே வச்சிருக்கா. எனக்கும் அப்படி தான். ஏன்னு தெரியாது. என் மடியில தலை வச்சு சலனமே இல்லாம தூங்குவா. என் தோள் சாய யோசிக்கவே மாட்டா. அவ கண்ணீர் என் சட்டையோட சேர்த்து என் நெஞ்சை நிரைய தரம் நனைச்சிருக்கு. என் மேல அளவு கடந்த நம்பிக்கை அவளுக்கு. எல்லா விஷயத்திலேயும். எதுனாலும் என் கிட்ட தான் வருவா. அப்படி பட்ட என் கிட்டயே உங்கள பத்தி ஒரு வார்த்த சொல்லலை. பாஸ்ட்டன்ல வச்சு நான் தான் கண்டுபிடிச்சேன். உங்கள யாரும் தப்பா நினைக்கக் கூடாது.. உங்க வாழ்க்கையில யாராலும் பிரச்சினை வந்திட கூடாதுங்கரதுக்காக. 
அவ உயிர் துடிப்பே நீங்க தான்… நீங்க மட்டும் தான். அது யாருக்கும் தெரில. எங்க உறவும் எங்க வீட்டில இருக்கவங்களுக்கு புரியல. எங்க அன்புக்கு வேற அர்த்தம் கொடுத்துகிட்டாங்க. நாங்க விரும்பரதா நினைச்சாங்க!
அவள கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்னால எப்படி முடியும்? அண்ணன் சொன்னா கினத்தில கூட குதிப்பா. நிறைய விஷயம் அண்ணனுக்காக விட்டு கொடுத்திருக்கா. அவ அம்மா அப்பா வாழ்ந்த வீட்டையே அண்ணனுக்காக விக்க கொடுத்தா! அண்ணன ஒரு தரம் தான் எதிர்த்தா… அவ காதலுக்காக. உங்க இடத்த யாருக்கும் குடுக்க மாட்டேன்னு அவளும் சொல்லி போராடி பார்த்தா.
அண்ணன் இல்லையா… அவர் எப்படித் தங்க வாழ்க்கை வீணாக விடுவார்? அவ தனியா நிக்கரத அவர் ஒத்துக்கவே இல்ல. 
என் நெஞ்சில சாஞ்சு கதறி அழுதா… எனக்கு இந்த ஜென்மத்தில மட்டும் இல்ல எந்த ஜென்மத்திலயும் கண்ணன் மட்டும் தான் கார்த்தினு. அப்பவும் நீங்க தான் அந்த கண்ணன்னு எனக்கு தெரியாது.
வீட்டில யாருமே அவ சொன்னதைக் கேட்கவே இல்ல. நானும் சொல்லி பார்த்தேன். கல்யாணாம் ஆனா சரியாகிடும்னு சொன்னாங்க. யாருக்கும் சொன்னா புரியல. ரொம்ப படுத்தினாங்க.
சுதாவ என்னால எல்லாமுமா பாக்க முடியும். ஆனா மனைவியா? சத்தியமா அப்படி நினைக்கக் கூட முடியல! ஒரு காலம் என்னை கட்டிகோனு கேட்டுருக்கேன்… அப்போ கல்யாணம் பண்ண சொல்லியிருந்தா… தெரியல.. மே பீ பண்ணியிருப்பேன். அப்பவுமே, அவ மேல காதல் இருக்கவே இல்ல. என் கூடவே அவள வச்சுக்கணும்னு தான் ஆசை பட்டேன். எனக்கு என் சுதானா அப்போவே அவ்வளவு இஷ்டம். ஆனா என் ஆசையை நிஜமாக்க எங்க வீட்டுல துடிச்சப்போ… அவ வாழ்க்கை முழுசும் துணையா இருப்பேன்.. வாழ்க்கை துணையா முடியாதுன்னு சொல்லிட்டேன்.
அங்க இருந்தா சரி படாதுனு அவள கூட்டிட்டு பாஸ்டன் போய்டேன். அங்க அவ அம்மா பிஸினஸ் இருந்துது. அங்க தான் லிண்டாவ மீட் பண்ணினேன். சுதாவோட தொழில் பார்ட்னர். கொஞ்ச நாள் பழக்கம். லிண்டா என்னை விருப்பினா! எனக்கும் அவளை பிடிச்சுது.
நானும் சுதாவும் ஒரே வீட்டில இருக்க, கல்யாணம் பண்ணாம அப்படி இருக்க கூடாதுனு சொன்னாங்க! யோசிக்கவே இல்ல, லிண்டா கழுத்தில தாலி கட்டி என் லைப் பாட்னர் ஆக்கிட்டேன். இப்போ யாரும் ஒன்னும் சொல்ல முடியாதில்லையா?
லிண்டாக்கு சுதா நல்ல ஃப்ரெண்ட். சோ அவாளால சுதாக்கு எந்த பிரச்சினையும் இல்ல. எங்க மகன் தான் ஜோ. 
ஜோ பிறந்த பிறகு, சுதாக்கு எல்லாமே அவன் தான். அவனுக்கும் அப்படி தான். அவள தான் அம்மானு முதல்ல கூப்பிட்டான். நாங்க யாரும் சொல்லி கொடுக்கல. ஆனா உங்களை எப்படி அவனுக்குத் தெரியும்? ஏன் அப்படி கூப்பிட்டான்னு தெரியாது. சுதா சொல்லி தந்திருக்கணும்.”
தலையைத் தூக்கக் கூட இல்லை. கண்மூடி கேட்டுக்கொண்டிருந்தான். அவளுக்குத் தான் எத்தனை போராட்டம்?
“இங்க வந்த பிறகு தினமும் அழரா பாஸ். நைட் எல்லாம் இந்த கடலையே வெறிச்சு பார்த்திட்டு நிக்கரா! யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கா. என்னலா அவ கண்ணீர பாக்க முடியல. அவ வாழ்க்கை நிம்மதியா இருக்கணும்னு தான் நானும் அவ சொல்ரதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு இருக்கேன். ஆனா அது தப்போனு தோண ஆரம்பிச்சிடுச்சு! அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்காம நானும் தப்பு செய்யரேனோனு ஒரே உறுத்தல். அவ கண்ணீரைக் கூட துடைக்க முடியாத பாவியாகிட்டேன்னு வருத்தம் உள்ளுக்குள்ள இருந்துட்டே இருக்கு. 
மூனு மாசம் முன்ன வரைக்குமாவது அவ புருஷன் யாருனு தெரியாது. இப்போ தெரியும். தெரிஞ்சும் ஒன்னும் செய்யாம இருக்கேன்னு மனசு கடந்து தவிக்குது. இந்த களேபரங்கள் எல்லாம் முடிஞ்சதும் , அவ என்னை கோவிச்சுகிட்டாலும் பரவால.. உங்கட்ட பேசணும்னு நானே நினைச்சுட்டு தான் இருந்தேன்.
இப்போ எல்லாம் அவள என் கூடவே வச்சுக்க நான் ஆச படல பாஸ். என் சுதா, கண் தெரியாத தூரத்தில இருந்தாலும் நிம்மதியா அவ புருஷன் பிள்ளைங்களோட வாழணும், ஒரு ஆசை. 
அவளுக்கு ஒரு வழி சொல்லுங்க பாஸ். என் சுதா காலம் பூர அழ வேண்டாம் பாஸ். உங்க கூட கூட்டிட்டு போங்கனு கேக்கல… அது உங்க ரெண்டு பேருக்குமே அசிங்கம். ஆனா நீங்க அவட்ட பேசி புரிய வைக்கலாம். அவளுக்கும் ஒரு எதிர்காலம் வேணும் பாஸ்!”
கார்த்திக் நெஞ்சு அடைக்க, அஷோக் ஏதாவது சொல்லுவானா… சுதா வாழ்வு மாறிவிடாதா அந்த ஒற்றை வார்த்தையில், என்ற தவிப்போடு அஷோக்கையே பார்த்து நின்றான்.
சுவாசிக்கக் கூட முடியாமல் அமர்ந்திருந்தவன், தலையை உயர்த்தி கார்த்தி முகத்தைப் பார்த்து ஒரு வித வலியோடே கேட்டான்.
“நான் அங்க வந்த போதே சொல்லி இருக்கலாமே கார்த்தி?”
“உங்களுக்கு வேற கல்யாணம் ஆகிட்டனால, நீங்க தான் அவ புருஷனு யார்ட்டையும் மூச்சு விட கூடாதுனு சொல்லி, சத்தியம் வாங்கிட்டு தான் உண்மைய ஒத்துகிட்டா.!
“ஓஹ்ஹ்?!” மூச்சு முட்டியது.. அஷோக்கிற்கு!
மூச்சு முட்டி நின்ற நெஞ்சை கை நீவி விட.. கை, சட்டை பாக்கெட்டைத் தொட.. உள்ளே இருந்தது, இரண்டு வைர வளையல்கள்.

Advertisement