Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_3
சரியாக ஐந்து நிமிடத்தில் சிகப்பு நிற உடைக்காரி வந்தாள் இவனை நோக்கி. அவள் பின்னாலேயே கைப்பேசியை காதுக்குக் கொடுத்து சுதா சீன் விட்டாள். “பூ கடைக்கிட்ட இருக்கானே.. அந்த கருப்பு சட்டை.. அவன் தானே? ப்ளீஸ்.. அவன பார்த்தாலே பிடிக்கல. அவனும் அவன் முகமும் சகிக்கல! அவன் என் பின்னாடியே சுத்தரான். என்ன பண்ணட்டும்?” என்று ஒலிவியா காதுபட பேசிக்கொண்டே வந்தாள்.
ஒலிவியா நெருங்கிவிட்டிருந்தாள். பாவம் இவன் தான் அவளைக் கவனிக்கவில்லை. கைப்பேசி திரையில் நடிகர் கார்த்திக் பூ கொடுக்க, அவன் மாமன் மகள் ‘தாங்யூ மாமா’ என்று வாங்கிக்கொண்டிருந்தாள். இவன் குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டிருக்க எதிரில் வந்து கொண்டிருந்த கிளியோபட்டராவை பாவம் கவனிக்கவில்லை. பூ கொத்தையும் வாங்கினானில்லை.
ஏதோ தோன்றத் தலையைத் தூக்கினான். எதிரில் சிகப்பு உடை காரி! அவள் உடையை விட அதிக சிகப்பாய் பின்னால் வந்த சுதாவின் முகம். சுதா வேகம் எடுத்து அவள் முன் வர.. அவனுக்குத் தெரியவில்லை யாரைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்று. தோராயமாய் சிரித்து வைத்தான்.
“ஹாய்.. நீங்க… உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்…” என்று ஒலிவியா அவள் பிட்டை போட்டாள்.
“உங்கள மாதரி ஒரு அழகான பொண்ணு என்னை பார்க்கரது என் பாக்கியம்” என்றான் சிரித்துக்கொண்டே.
அவள் வந்த வேலை எளிதில் முடிய… அவள் முகம் மலர்ந்தது. அவன் மயக்கப் புன்னகை சிந்த… அவள் மயங்க… அருகில் நின்றிருந்த சுதாவை மேலிருந்து கீழ் வரை ஏளனப் பார்வை பார்த்துவிட்டு அவனிடம் அவள் கை கொடுக்க… இவன் பல் காட்ட.. அவன் ஹீரோவாக… ஒலிவியா ஹீரோயின் ஆக.. சுதாவிற்கு காதில் புகையும்.. மூக்கு அறுபடவே அழுகையும் வர ஆரம்பித்துவிட்டது.
‘இவ கிட்ட எத்தன தரம் நானே பல்ப் வாங்கணும்… இதுல ஃபோன் வேற.. என் மானமே போச்சு! எல்லாம் இந்த ஆள நம்பி!! இவனும் எல்லா ஆம்பளைங்க மாதரியே அவ பின்னாடியே பல்ல காட்டிட்டு போரான்…’ மூக்கு விடைக்க… கண்ணில் நீர் கோர்க்க.. அவனை ‘யூ டூ புருட்டஸ்’ என்று முறைத்துவிட்டு செல்ல, ஏதோ அப்பொழுது தான் சுதாவைக் கவனிப்பவன் போல் ஒலிவியாவிடமிருந்து கையை உருவியவன் அருகிலிருந்த கடையிலிருந்து பெரிய ரோஜா கொத்தை வாங்கிக் கொண்டு சுதா பின்னால் ஓடினான்… அசிங்கமான ஹீரோவாக!
அவள் முன் மண்டியிட்டு மலர்க் கொத்தை அவன் நீட்ட, ஏமாற்றப் பட்ட கோபம் அவளுக்குள்.
அதை பிடுங்கி அதாலேயே அவனை அடித்து, “நான் என்ன சொன்னேன்.. நீங்க என்ன பண்றீங்க… இது எதுக்கு? என் மானம் போனதுக்குப் பரிகாரமா? அவளை காலிங்-கா மாத்தா சொன்னா என்னையே கவுண்டமணி ஆக்கிட்டீங்க!” மீதமிருந்த குச்சியை அங்கிருந்த குப்பையில் எறிந்துவிட்டு அவள் நடக்க… கெஞ்சிக்கொண்டே பின்னோடு வந்தவன்  ஒற்றைக்கையால் அவளை தன் வசம் இழுத்து இடையோடு கட்டிக்கொண்டு, முகத்தில் விழுந்திருந்த முடியைக் காதின் பின் தள்ளிவிட்டு கொண்டே ஆங்கிலத்தில், “நீ ரொம்ப அழகு தெரியுமா? கோபப்படும் போது இன்னுமே அழகு. உன்ன பார்த்தாலே எனக்குப் போதை ஏறுது. இந்த கண்ணு.. அது அப்படியே என்னைச் சுண்டி இழுக்குது… இந்த கன்னம்.. அதை அப்படியே கடிச்சுக்கவா.. நான் ஒரு மடையன், என் கண்ணு முன்னாடியே நீ இருந்த போது தெரியல, நீ தான் என் உயிருனு. நீ போனதும் தான் தெரிஞ்சுது… நீ இல்லாம நான் வெறும் கூடுனு. என் காதல ஏத்துக்கவே மாட்டியா… எனக்கு வாழ்க்கை கொடுக்கவே மாட்டியா? ஐ ஆம் நத்திங் வித்தவுட் யூ மை லவ்” என்று கூறிக்கொண்டே அவள் கழுத்தோரம் முகம் புதைக்க…  
சுதா இதயம் நின்றே விட்டது.
நின்றுவிடாத இந்த உலகம்… இந்த நேரம்… இப்படியே இவர்கள்.. ஒருவருக்குள் ஒருவர் புதைந்து..? நாம் ஆசைப்பட்டால் போதுமா?
காதலில்லா… சொட்டு காமமில்லா அணைப்பு அது. எந்த உணர்ச்சியும் தூண்டப் படவில்லை. ஆனால் பாசம் அளவில்லாமல் தலை மேல் ஊற்றிய உணர்வு அவளுக்கு. ஒரு நிம்மதி! நான்கு பேர் நடுவில் அவளை ஆசை பார்வை கூட பார்க்காதவன்.. அவளின் ஒரு வேண்டுதலுக்காக, அவன் கொள்கையை கூட தூர எறிந்தானே! 
அங்கு கேட்ட கரகோஷம் அதைத் தொடர்ந்து அவன் அணைப்பு விலக.. அவள் சுய நினைவு மீண்டது. அவன் ஹீரோ… அவள் ஹீரோயின்! அவ்வளவு தான்! தரை அதிர சிகப்பு ஹீல்ஸ் ஏற்படுத்திய சத்தம் உணர்த்தியது, ஒலிவியா வயிற்றில் நெருப்பு பற்றிக் கொண்டது என்று. 
அவள் நினைவில் ஒலிவியா இல்லவே இல்லை. இனி ஒலிவியாவை அவள் வெறுக்க மாட்டாள்.
சுதா கையை பிடித்துக்கொண்டே வெளியில் கூட்டி வந்தவன் அவள் கண்ணீரைத் துடைத்து, “என்ன தேருவேனா? பெர்ஃபார்மென்ஸ் எப்படி டைரக்டர் மேடம்?” என்றான் சிரித்துக்கொண்டே..
“போடா லூசு… என்னை அழ வச்சுடீங்க!” இரண்டு தட்டு தட்டினாள் அவன் தோளில். “உங்களால ஒரு கொத்து பூ வேஸ்ட்டா போச்சு!”
“ஏதோ அவ பாக்கறாளேனு கோபத்தில கூட அழகா இருக்கேனு சொன்னேன்… அதுக்காக முறைச்சே என்னைப் பய முறுத்தாத..” அவன் சிரிக்க… அவள் சிரிக்க… அழகான காட்சி! பார்க்கக் கிடைக்காத அரிய காட்சியும்! 
“ஏன் அப்படி செஞ்சீங்க?” அவள் சிணுங்க… 
“உன் ஸ்கிரிப்ட் (script) சரி இல்ல லட்டுமா.. என்னுது எப்படி?” இல்லாத காலரை இழுத்து விட்டுக்கொண்டே அவளைப் பார்க்க..
“ஒன்னும் சகிக்கல… போங்க” அவள் பார்வை வேறு சொன்னது. அவன் சிரிக்க.. அவனைப் பிடித்துத் தள்ளினாள். இல்லை… தள்ள முயற்சித்தாள்.
“நான் தள்ளினா… கீழ விழணும், இப்படி மரம் மாதரி நிக்கக் கூடாது!”
“ஓக்கே டா லட்டு… நீங்க சொன்ன சரி தான்! நோ அப்பீல்!” என்றான் புன்னகை முகமாய்.
அவன் பேசியது? அவளை அழைத்த விதம் உள்ளுக்குள் ஏதோ செய்ய, அவனை நின்று பார்த்தவள், “சத்தியமாவே பழசு ஒன்னுமே நினைவில இல்லையா?” என்றாள்.
“இல்ல சுதா… ஏன்?” என்றான் குழப்பமாக
அவன் அவளை எப்படிக் கூப்பிட்டான் என்பதை அவன் உணரவே இல்லையா?
காற்றின் தன்மை மாறியது. இதம் மாறி குளிர் ஆரம்பித்தது. மனதிலும் தான். 
“பழைய நினைவுனு ஒன்னும் இல்ல சுதா! அடிக்கடி கனவு வரும். அதுல நீ… நான் மட்டும் தான்! ஹாஸ்பிட்டல்ல உன் முகம் பாதி மாசமும் கட்டு போட்டிருந்துது.. கட்டு எடுத்த நேரத்துக்கெல்லாம் அதுல வெறும் எலும்பும் தோலும் தான் இருந்துது. சோ என் கனவுல வர என் லட்டு நீ தான்னு தெரியல! நீயா இருக்கும்னு நினைச்சு வந்த நேரம் நீ கண் காணாம போய்ட. நீ கார்த்திக்க விரும்பரதா தப்பா நினைச்சிட்டேன். அதனால தான் பிருந்தா கூட கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். நீ சொல்லி இருந்திருக்கலாம். உன்னால சொல்ல முடியல! விடு, முடிஞ்சு போச்சு! நீ சந்தோஷமா இருக்கரத பார்த்ததில ரொம்பவே மனசுக்கு இதமா இருக்கு.”
காற்றிம் சத்தமும் பரவையின் கீதமும் மட்டுமே காதில் இரைந்தது.
“திடீர்னு ஏன் கேட்ட?” அவளை பார்த்துக்கொண்டே கேட்க,
“அப்போ எல்லாம் வார்த்தைக்கு வார்த்த லட்டுனு தான்…” ‘கொஞ்சுவீங்க’ என்று முடிக்கவில்லை
“அது தான் கேட்டேன்” என்று முடித்தாள்.
‘என்ன கனவென்று’ அவளும் கேட்கவில்லை. அவனும் கூறவில்லை. சில விடயங்களைக் கேட்டு.. சொல்லித் தான் தெரியவேண்டுமென்பது இல்லை.
“நீங்க எதுக்கு அவ கைய பிடிச்சு கொஞ்சினீங்க?”
“அது பேரு கொஞ்சரதா உங்க ஊர்ல…? நீ எல்லாம் இங்க பொறந்து வளந்தேனும் யார்ட்டையும் சொல்லிடாத! உன்ன விடு.. என்ன பார்த்தா அந்த மொக்க ஃபிகர்ட்ட எல்லாம் பல்ல காட்டர மாதரி இருக்கா?”
சிரித்து கொண்டே, “இல்ல” என்றாள்.
“நீங்க யார் கிட்டையும் மயங்கி நான் பார்த்ததே இல்ல. நீங்க மயங்கின ஒரே ஆள் நான் தான். ஏன்னு எனக்கு தெரியல. உங்களுக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும். நீங்க ரொம்ப சமத்து தெரியுமா?”
வயிறு காலியாகவும் அங்கிருந்த பேக்கரியில் அமர்ந்து கொண்டாள்.
“என்ன மனுஷனோ நீங்க… எதையும் வாயில வைக்க மாட்டேங்கறீங்க! ஒரு வாய் வேணும்னா எடுத்துக்கோங்க. எனக்கு வயித்த வலிச்சுது… உங்களைச் சாத்து சாத்துனு சாத்திடுவேன்.”
“நீ சாப்பிடு… கொஞ்சமா! எனக்கு வேண்டாம். நீ ரொம்ப ஜங்கா சாப்பிடுர. இன்னைக்கு ஒரு நாள் ஓக்கே… இதையே தினமும் செய்யக் கூடாது”
கிரைண்டரை இயக்க மின்சாரம் வேண்டும் கண்ணா!!
மௌனமாக தன் முன்னிருந்த ‘திராமுசு’ கேக்கை வெட்டி ஒரு வாய் உண்டாள்.
கேக் துண்டை மென்றுகொண்டே, “இதுல 30% லிக்கர் இருக்கு..” என்றாள்.
“நீங்க ஒரு நாள் மூக்கு முட்ட குடிச்சுட்டு… உங்க பழைய செக்கரட்டரி, மாலினியை கையில தூக்கிட்டு  ஹோட்டல்ல.. அவ ரூமுக்குள்ள வந்தப்போ நான் அந்த ரூம்ல உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திட்டு இருந்தேன்.” சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்க.. அவன் முகத்தில் நம்பிக்கையின்மை.
“ஓவரா சீன் காட்டாதீங்க பாஸ். அன்னைக்கு அவள கைல வைச்சுக்கிட்டு என்ன சந்தோஷமா ரூமுக்கு வந்தீங்க?” அவள் சிரிக்க..
“சான்சே இல்ல… நான் மூக்கு முட்ட குடிச்சேனா? ம்ம்ஹூம் இருக்கவே இருக்காது. மாலினிய? நானா? அதுவும் உன்ன லவ் பண்ணிட்டே… நம்பரமாதரி ஏதாவது சொல்லேன்..” என்றான்
சத்தமாகச் சிரித்தாள். “சட்ட கூட போட்டிருக்கல.. உண்மை தான் சொன்னேன்.”
“ஆமா என்ன உடம்ப தாறுமாறா ஏத்தி வச்சுருக்கீங்க? பாவம் உங்க பொண்டாட்டி.. இத சாபிட மாட்டேன் அத சாபிட மாடேனு ஒரே டையட்டா சொல்லி கொல்றீங்களா?”
“மாலினி பத்தி சொல்லிட்டு இருந்த சுதா!” நினைவு படுத்தினான்.
“ம்ம்… அவ குடிச்சுட்டு மட்டையாகி உங்க மேல வாந்தி பண்ணிட்டா… அதனால அவ ரூம்ல அவள தூக்கி போட வந்தீங்க.. தப்பான எண்ணத்தில தூக்கிட்டு வரல”
“நீ இருந்தனு சொன்ன?”
“அங்க இருந்து நீங்க ஐஞ்சு வாரம் பிசினஸ் ட்ரிப் போரதா இருந்துது. சோ.. உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்து பல்ப் வாங்கிகிட்டேன்”
“ஏன்? நான் சர்ப்ரைஸ் ஆகலியா? நீ சந்தேக பட்டியா?”
“ரெண்டுமே இல்ல… உங்களுக்கு குஷி தான்! எனக்கு தான் நட்டு கழண்டிடுச்சு! சந்தேகம்? கொஞ்சம் கூட சந்தேகம் எல்லாம் வரவே இல்ல. ஆனா சண்டை போட்டேன். சண்டை பெரிசாகி பிரிஞ்சு போரேன்-னு சொல்லிட்டு போய்ட்டேன்.”
“ஓ…. அப்புறம் தான் கார்த்திக்கை லவ் பண்ண ஆரம்பிச்சியா?”
முறைத்தாள். “நீங்க கேள்வி கேட்கக் கூடாது. நினைவு இருக்கா?”
“சண்டையில பிரிஞ்சிட்டோம்னு சொன்ன..?”
“இல்ல பிரியல. அந்த சண்டை தான் எனக்கு உணர்த்திச்சு… நான் கூட உங்க ரேஞ்சுக்கு இல்லாட்டியும் உங்கள ரொம்பவே விரும்பரேன்னு!  நீங்க ஊர்ல இருந்து வந்ததும் மூனு நாள் மூனார் கூட்டிட்டு போனீங்க. அங்க சமாதானம் ஆகிட்டோம்”
“ஓ..” என்றான்.. புருவம் உயர்த்தி. ஆச்சரியம் கலந்த குரலில்.
“ஓவரா நினைக்க வேண்டாம். ஒன்னும் நடக்கல! நீங்க ஒரு சன்னியாசி மறக்க வேண்டாம்!” என்றாள்.
சிரித்துவிட்டான். அவளும்! 
“நம்ம காதல்.. ஆறு மாச வாழ்க்கை யாருக்குமே ஒழுங்கா தெரியாது. இந்த மூனார் ட்ரிப் எல்லாம், யாருக்குமே தெரியாது. ஒன்னும் நடக்கலனாலும் ஒரே பெட் ஷேர் பண்ணினோம்.
யாரையும் கோவிச்சுகுக்காதீங்க. உங்க ஃப்ரெண்டுக்கு நாம விரும்பினோம்னு மட்டும் தான் தெரியும். இது எல்லாம் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உங்கட்ட உண்மையை மறைச்சிருக்க மாட்டார். அவருக்கு உங்க மேல அளவு கடந்த அன்பு… அதனால தான் அவர் என்னைப் பத்தி உங்கட்ட சொல்லை. நீங்க அவர் இடத்தில இருந்தாலும் ஒரு நல்ல நண்பனா அதைத் தான் செஞ்சு இருப்பீங்க.
அவர கூப்பிட்டு பேசுங்க! மூனு வருஷம் உங்க வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அவர் அமைதியா இருக்கார்… அந்த நட்புக்கு நீங்க மரியாதை கொடுங்க! மனுஷனுக்கு ஃப்ரெண்ட் ரொம்ப முக்கியம் பாஸ்.
சுசிம்மா மாதரி ஒரு அம்மா கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்! ஒதுங்காதீங்க! அது பாவம்! இருக்கும் போது அருமை தெரியாது. எனக்கு அம்மா அப்பா இல்லை. எல்லாமே இப்போ அண்ணா மட்டும் தான். எனக்கு அண்ணா அருமை தெரியும் அதனால தான் எனக்கு பிடிக்காட்டாலும் அண்ணா சொன்னா செஞ்சிடுவேன். எனக்கு நல்லது தான் அண்ணா நினைப்பாங்க. சுசிமா உங்களுக்காகவே வாழர உயிர். அவங்கள விட்டுடாதீங்க. அந்த பாவம் என்னைத் தான் சேரும்!
நீங்களும் உங்க வைஃப் குழந்தைங்களோட சந்தோஷமா வாழணும். நம்ம சேர்ந்து வாழ்ந்த அத்தியாயம் முடிஞ்சு போச்சு. புதுசா எழுதுங்க.. அதுல உங்களுக்கான சந்தோஷம் உங்க மனைவிட்டையும் பிள்ளைங்க கிட்டையும் இருக்குனு கண்டு பிடிப்பீங்க.”

Advertisement