Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_2
“நான் சந்தோஷமா இருக்கேனானு கேட்டா… ஆமானு தான் சொல்லுவேன். ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கேன். மனசார சிரிக்கறேன். என்னைத் தங்க தட்டில வச்சு பார்த்துக்க ஒன்னுக்கு நாலு பேரு இருக்காங்க. என்ன பார்த்ததும் தாவி வந்து என் நெஞ்சோட சாஞ்சு என் கழுத்த ஆசையா கட்டிக்க ரெண்டு ஆத்துமா இருக்கு. நிம்மதியான வாழ்க்கை வாழறேன்.
நிறைவான வாழ்வானு கேட்டா.. இல்லனு தான் சொல்லுவேன். யாருமே இல்லாம.. நீங்க மட்டும் இருந்த போது முழுமையா இருந்த என் வாழ்க்கை இப்போ இன்கம்பிளிட் ஃபீலிங்க் குடுக்குது. மனசில ஒரு வெறுமை இன்னுமே இருக்கு. ஆனா சந்தோஷமா தான் வாழறேன்.
உங்க கூட கழிச்ச நாட்களை தள்ளி வச்சு வாழ்கையோட நான் போறாடல. அது நான் விரும்பி வாழ்ந்த வாழ்க்கை. அதனால் எனக்கு வலியும் வேதனையும் அதிகம் தான்… இருந்தும் அந்த வலி மட்டும் தான் என் புண்ணான மனசுக்கு மருந்து.
இன்னும் ஒரு முப்பது நாப்பது வருஷம்… பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் நாட்கள் நகர தான் போகுது. எதுக்கு போராடி வாழனும்? என் பழைய நினைவுகளை நான் ஒதுக்கல… அப்பப்போ அதுவா வரும்… அசை போட்டுப்பேன்… எதாவது வேலை வரும்… நினைவை ஒதுக்கி வச்சுட்டு வேலையைப் பார்ப்பேன். நான் வாழனுமேனு, கடனேனு வாழல. உயிர்போட தான் வாழறேன். அது நீங்க கொடுத்தது. 
நான் சந்தோஷமா இருக்கேன். என்ன சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சிருக்கேன். உங்க கூட வாழ்ந்த காலம் இன்னும் சாரலா என் மனசை வருடி என்னை சந்தோஷமா தான் வச்சிருக்கு,
அலைக்கு எதிரா போராடி கரை வந்து சேர முடியாதுனு தெரிஞ்சுகிட்டேன். நான் வாழ்க்கையோட ஃப்ளோவோட ஒத்து போரேன். போராட்டமில்லாம போகுது. முங்காம இருக்க என் கூடாவே துணையும் இருக்கு.”
பூக்கள் நிறைந்த தோட்டத்தில் அமரவும்.. ஜோ அஷோக் கை பிடித்து தத்தி நடந்தான். வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்து கைக் கொட்டிச் சிரித்தான். அரை மணி நேர ஓட்டமும் ஆட்டமும் அவனைக் களைப்பில் தள்ள அஷோக் மார்பில் உறங்கிப் போனான்.
அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். அருகில் வந்து அமர்ந்து கொண்டான். அங்கிருந்த மொட்டையும் பூவையும் பார்த்தவள், “உங்க வீட்டு தோட்டத்தில தான் நம்ம காதல் ஆரம்பிச்சுது! செண்பகம் மரம் கிட்ட! நீங்க ஒழுங்கா கூட ப்ரோப்போஸ் பண்ணல.. ஒரு பூவ பிச்சு கைல திணிச்சுட்டு போய்டீங்க. அது வெறும் பூ இல்ல உங்க மனசுன்னு எனக்கு தெரிய கூட இல்ல.
அப்புறம் நீங்க உங்க காதல் சொல்ல வந்த போது நான் அத ஏத்துக்கர நிலமைல இல்லனு சொல்லி ஒதுங்கப் பார்த்தேன். நீங்க என்னை விடவே இல்ல. என் கண்ணீர் துடைச்சு என்னைத் திரும்பவும் உயிருள்ள மனுஷியா உணரவச்சீங்க. எப்பவுமே நீங்க என்னை விடவே இல்ல.”
கீழே இருந்த புல்லைப் பிடுங்க ஆரம்பித்தாள். மெதுவாக முகம் உயர்த்தி, “நீங்க என் மேல உயிரா இருந்தீங்க. நான் இல்லேனா நீங்க இல்லங்கர ரேஞ்சுக்கு! நெஞ்ச பிளக்க முடிஞ்சா… அதுகுள்ள இருக்க உயிர பாக்க முடிஞ்சா.. அது நானா தான் இருப்பேன்.”
என்ன முயன்றும் இயல்பாய் பேச முடியவில்லை. நெஞ்சை அடைத்தது. அவன் கையணைப்பில் வைத்துக்கொண்டு கூறிய அன்றிலின் கதை நினைவில் வந்து படுத்தியது.
“உங்க உயிரா என்னை நினைச்சீங்க… அப்படி தான் காதலிச்சீங்க! எனக்கு அது நல்லாவே தெரியும். தவம் இல்லாமலே கிடைச்ச வரம் நீங்க. தெரியும்! தெரியாம எல்லாம் இல்ல! 
நீங்க சொன்னீங்க.. ‘யாருக்காகவும் என்னை விட்டுடாத லட்டுனு!’ சொல்லலை.. ஒரு யாசகம் மாதரி கேட்டீங்க..” அதற்கு மேல் சொல்ல முடியவில்லை. தலையை உயர்த்தவும் இல்லை. சொல்லத் தேவை இல்லை. கண்ணிருப்பவருக்குத் தெரியுமே.. அவள் அவனை விட்டுவிட்டதை.
குழந்தை தூங்கிவிட மீண்டும் அவனைக் கொண்டு டே-கேரில் விட்டு வந்தனர்.
“தொல்காப்பியத்தில இருந்து வைரமுத்து வரைக்கும் காதலுக்கு பல நிலைகள சொல்லி இருக்காங்க. நம்ம காதலுக்கும் நிலைகள் இருந்தது தெரியுமா? பார்த்து.. ஈர்த்து… பார்த்துட்டே இருக்க தவிச்சு… ஒரு கட்டத்துகப்பரம் பாக்கரது மட்டும் போதாம தொட ஆசைப் பட்டு.. அதையும் அனுபவிச்சு… சண்டை போட்டு… பிரிஞ்சு… பிரிவ தாங்க முடியாம ஏங்கி தவிச்சு.. ஒன்னு சேர்ந்து.. இப்படி பல!
காதலோட கடைசி நிலை மரணமாம். நாம அத கூட வாழ்ந்துட்டே பார்த்துட்டோம்.. அந்த நாள் வராமலே இருந்திருக்கலாம். கண்ணால பார்த்தேன்.. என் உயிர் பிரியரத. தாங்கவே முடியல. அங்க தான் நம்ம காதல் சமாதி ஆகிடுச்சு!”
அவள் பேச அவன் மௌனமாகக் கேட்டான். கோர விபத்தை அவனும் கண்டானே… அவன் லட்டு துடித்ததைக் கண்டானே.. கண்களில் நீர் கோர்த்தது.
“நீங்க என்னை மறக்கவும் நான் நிறையவே கஷ்டப் பட்டேன். செத்து போக நினைக்கல. சேர்ந்திடலாம்னு உறுதியா நம்பினேன். ஆனா சேர முடியாமலே போச்சு!
உங்க கல்யாணத்தன்னைக்கு வந்தேன்… ஆனா அத பாக்கர தெம்பு இல்ல. அங்க தான் அண்ணாவ பார்த்தேன். அவங்களோட இங்க வந்துட்டேன். விபத்திலேயே சாகம போய்டேன்னு வருந்தாத நாள் இருக்கல. 
ஒரு வருஷம் தினமும் அழுவேன்… யாருக்கும் தெரியாம! அண்ணா எப்படியோ கவனிச்சிட்டாங்க! அப்புறம் எல்லாம் மாறி போச்சு. என்னால வீட்டுல நிறைய பிரச்சினை. நான் தனியா இருக்கரது எல்லார் நிம்மதியையும் கொலைக்க ஆராம்பிச்சுது. தனியா அழ கூட முடியல. சுத்தி ஆள் இருந்துட்டே இருந்தாங்க. என் அழுகை எல்லாம் மூட்ட கட்டி வைக்க வேண்டியதா போச்சு!
நம்ம காதல்? அத பின்னாடி தள்ளிட்டு வாழ பழகிட்டேன். இப்போ நான் நிம்மதியா இருக்கேன். நீங்க உங்க மனைவியோட சந்தோஷமா இருபீங்கனு நினைச்சேன். உங்கள இப்படி பார்த்த பிறகு நான் இனி மேல் எப்படி நிம்மதியா இருக்க முடியும்? இது என்ன வேஷம்? தினமும் ஒரே மாதரி கருப்பு டி-ஷர்ட்? பழுப்பு ஷார்ட்ஸ்? நீங்க கார்மென்ட் ஃபேக்டரி ஓனர்? உங்களைச் சுத்தி இருக்கவங்க பாவம் இல்லையா?”
புன்னகைத்தான். “ஒன்னயே போடல.. நிறைய வச்சிருக்கேன்.” என்றான். 
பல விடயம் அவனுக்குப் புரிந்தது. அவள் மனதும் அதில் அவன் வாழ்விற்காய் அவள் வருந்துவதும் நன்றாகவே புரிந்தது. இப்படி காதலையும் தன்னையும் சுமந்தவள் ஏன் அவனை விட்டுச் சென்றாள்? கேட்டானில்லை. கேட்டு? அந்த பதிலை வைத்து என்ன செய்ய? கேட்டு, அவள் அதனால் வருந்தி, யாருக்கு என்ன பயன்!
சுற்றித் திரிந்தனர். அவனோடு இருக்கவே அவள் கிரைண்டர் மூன்றரை வருடம் பின் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்தது. அவனுக்கும் சேர்த்தே வாங்கினாள், அவளுக்கு பிடித்ததாய். அவளே இரண்டையும் அரைத்து உள்ளே தள்ளினாள்.
அவள் கேட்டதெல்லாம் ஆசையாய் வாங்கி தந்தான். “இது வேண்டாம்.. அது வேண்டாம்..” என்று அவன் சொன்னதெல்லாம் அவள் கேட்டால் தானே.. எல்லாவற்றிற்கும் அடம்! செல்லம் கொஞ்சப் பிடித்தது. மீண்டும் குழந்தையாய் மாறி அவனைப் படுத்தி எடுத்தாள்.
“எனக்கு ரெஸ்ட் ரூம் போகனும்.. ப்ளாடர் ஃபுல்!” என்று அவன் முகம் நோக்கி நின்றாள். அருகிலிருந்த மாலுக்குச் சென்றனர்.
ரெஸ்ட் ரூம் சென்றவள். கழிப்பறையை உபயோகித்து விட்டு கை கழுவ வரிசையில் நின்று கொண்டிருக்க.. அப்பொழுது உள்ளே நுழைந்த ஒருத்தி இவளைப் பார்த்து புருவம் சுருக்கி.. புன்னகை முகமாக இவளருகில் வந்து நின்றாள்.
“ஹேய் சுதா…” சத்தம் கேட்கவும்.. ‘யாருடா அவ?’ என்று தலையை உயர்த்தி பார்த்தவள் முகத்தில் ஏதோ புது பாவனை. பிடிக்காத நபரை மிகப் பிடித்ததாகக் காட்டும் பாவனை. அவளிடமும் அதே போல் ஒரு சிரிப்பு! இதற்கு எதற்கு இவளிடம் ‘ஹாய்’ சொல்லுவானேன்?
‘இவள போய் பார்க்கணுமா?’ எண்ணம் ஓடினாலும்… இழுத்துப் பிடித்த புன்னகையோடு.. “ஹேஏஏஏய் ஒலிவ்யா…” இரு கையையும் விரித்துத் தழுவிக் கொண்டனர்.
பள்ளிப் பருவத்தில் ஒன்றாய்ப் படித்தவள். எப்பொழுதும் இவளை மட்டப் படுத்திப் பார்ப்பதில் அந்தப் பிரசித்திப் பெற்ற பள்ளி அழகிக்கு ஓர் அலாதி இன்பம். தினமும் சீண்டல்கள் இருக்கும். சக மாணவர்கள் அவளோடு சேர்ந்து கொண்டு சுதாவை  கேலி செய்வது வழக்கம். அப்பொழுதே அவள் பின்னே ஆண்கள் சுற்ற, இவளைத் திரும்பிப் பார்க்க ஆள் இருக்காது. பாய் ஃப்ரெண்ட் இல்லாத ஹை-ஸ்கூல் வாழ்க்கை! ஏதோ ஒரு கேவல பிராணியைப் பார்ப்பது போல் தான் பார்ப்பாள் இவளை. யாரை வாழ்வில் பார்த்துவிடவே கூடாதென்று நினைத்தாளோ.. அவள் முன்.
“லுக்கிங் குட் சுதா..?”. காலங்கள் மாறிப் போயிருக்க, அவளும் மாறிப் போயிருக்கலாம். ஆனால் அடிபட்டவள் ஆகிற்றே. அவளின் பாராட்டு கூட கேலியாகத் தோன்றியது. கேலியாகத் தான் சொன்னாளோ? ‘இப்போ என்ன.. நான் நல்லா இல்லேனு சொல்றாளா… இல்ல அவ நல்லா இருக்கானு நான் சொல்லணும்னு நினைக்கிறாளா?’ மனம் கொதித்தது. முகம் இஞ்சி தின்னக் குரங்கு என்பாரே அது போல் காட்சியளித்தது.
‘போதும் விடு டி’ நினைத்தாலும் இளித்துக் கொண்டே நின்றாள் சுதா. அவளின் பெருமைகளை அவள் பட்டியலிட.. இவளுக்குச் சொல்ல எதுவும் இல்லாது போகவே இன்னும் எரிச்சல். இருந்தும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிரசித்தி பெற்ற ‘சாக்கர்’(soccer) வீரன் தோழனாம்… “உனக்கெல்லாம் அவர்களைத் தெரிய வாய்ப்பில்லை” என்றாள். கொஞ்சம் மட்டம் தட்டினாளோ? முகம் சிறுத்துப் போனது சுதாவிற்கு”
‘ஐயோ… நிறுத்தவே மாட்டாளா’ மனம் கொக்கரித்தது. ‘ஆண்டவா.. ஒரு தரம்… ஒரே ஒரு தரம் இவ மூக்க உடைக்க ஒரு சேன்ஸ் தர கூடாதா..’ ஆண்டவனிடம் அவள் கோரிக்கை வைக்க..  அவர் கெட்ட காரியங்களுக்குத் துணை போக மறுத்துவிட்டார்.
அவள் தோழி வர, இவள் விடுதலை பெற்றாள். மீண்டும் கை கழுவும் வரிசையில் சுதா நிற்க, ஒலிவியா அவள் தோழியோடு நகர்ந்து விட்டாள். பிடிக்காவிட்டாலும் அவள் பேசுவது கொஞ்சமாய் காதில் விழிந்தது. காது கூர்மையானது. ”ஐ வில் கிவ் எனிதிங் டு ஹவ் ஹிம்” என்றாள் ஒலிவியா..
கேட்டு கொண்டிருந்தவளுக்குக் காதில் புகை வந்தது. ‘அசிங்கம் பிடிச்ச ஜென்மம். இவ இன்னும் மாறலையா… ச்சை.. எப்போ பாரு எவனையாவது பத்தி பேசரதே வேலை இவளுங்களுக்கு!’
அவள் தோழி, “ஹூ இஸ் தட் ஹேன்சம்?” என்றாள்.  
“ப்ரெத் டேக்கிங் இண்டியன்… ப்ளாக் டி-ஷர்ட்… பேஜ் ஷார்ட்ஸ்… நியர் ஃப்ளவர் ஷாப்” என்றாள்.
ஏதோ அவர்களுக்குள் பேச்சு.. யாரையோ ஒலிவியா பார்த்துவிட்டு அவனிடம் மயங்கி விட… அவனை மயக்கி காட்டுவதாக கூறிக்கொண்டிருந்தாள். ‘என்னவோ பண்ணுங்கடி..’ என்று எண்ணிக்கொண்டே வெளியே வந்த சுதா கண் கண்ணனைத் தேட.. அதோ நின்று கொண்டிருந்தான்.
ஒலிவியா சொன்ன பூ கடை வாசலில். கருப்பு டி-ஷர்ட், பழுப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்து, மயக்கும் தோரணையில். உண்மையில் அவனைப் பார்த்தால் மூச்சு முட்டத் தான் செய்தது.
சுதா கண்ணில் நட்சத்திரங்கள்… “ஆண்டவா… லவ் யு.. லவ் யு..” ஆயிரம் நன்றிகள் சொல்லிக் கொண்டாள். “இரு டி… என்னையா மட்டம் தட்டின… இரு வச்சிகிறேன்..” கையை திருகிக்கொண்டே சூளுரைத்தாள். 
அவசர அவசரமாகக் கண்ணனிடம் வந்தவள், “கண்ணா… நல்லா கவனிங்க. ஒரு தரம் தான் சொல்லுவேன். ஒழுங்கா கவனிச்சு சொல்ரத அப்படியே செய்யணும் சரியா?” என்று அவன் முகம் பார்த்தாள்.
அவனுக்கு அவள் பேசியது ஏதேனும் புரிந்ததா என்று யோசிக்கக் கூட அவளுக்கு நேரமில்லை.
“ஒரு ரெட் ட்ரெஸ் போட்டவ உங்களைத் தேடி வருவா…. நீங்க அவளைப் பார்த்து ரொமேன்டிக்கா சிரிக்கணும். அத பார்த்ததும் அவ உங்க கால்ல விழ தயாராகிடணும்! அப்படி ஒரு லுக் விடனும்!  அவளும் பல்ல காட்டிடே வருவா… அவ உங்க கிட்ட வரவும்.. நான் அவ முன்னாடி வருவேன். ஏதோ உங்க உயிர் காதலி ஸ்லோ மோஷன்ல வரமாதரியும்… என்னைப் பார்த்ததும் உங்க உயிரே வந்த மாதரியும் ஆக்ட் விடணும். அப்படியே என்னை அள்ளி… ‘மிஸ்ட்.. யூ… லவ் யூ…’-னு பிணாத்தனும்.. அப்புறம்… ‘மானே.. தேனே… பேரழகியே…’ அப்படி அங்க அங்க சேர்த்துகணும். நான், உங்கள பிடிக்காத மாதரி சீன் விடுவேன்…  ‘நீ இல்லேனா நான் செத்தே போய்டுவேன்னு’ என்ட்ட கெஞ்சணும்… அவ வயிறு எரிஞ்சு சாகனும்!”
“என்ன?” என்று அவன் விழிக்க..
“மேட்டுக்குடி படம் தெரியுமா? நான் தான் இந்து… நீங்க மாமா… அவ காலிங் மாதரி பல்ப் வாங்கணும்… புரியுதா?”
அவனுக்கு எங்கே புரிந்தது? “என்ன சுதா?” என்றான் மீண்டும்..
கையை அவன் கழுத்தை நெரிப்பது போல் கொண்டு சென்றவள்.. “சொதப்பினா.. சத்தியமா கொன்னுடுவேன்.”
ஆட்காட்டி விரலை நீட்டி, எச்சரிக்கும் த்வனியில், “ஒழுங்கா செய்யணும்.” என்றாள்.
மூச்சை இழுத்துவிட்டவள், சினிமா டைரக்டர் தோரணையில், “நீங்க அசிங்கமான ஹீரோ… நான் உங்க ட்ரீம் ஹீரோயின். உங்க கண்ணுக்கு நான் மட்டும் தான் இந்த உலகத்திலேயே அழகு! சீன் புரிஞ்சுதா…. ப்லீஸ் சொதப்பாதீங்க! என் மானமே இதில தான் அடங்கி இருக்கு.” கை கூப்பி கெஞ்சினாள்.
நினைவு வந்தவளாய், “இம்ம்… ஒரு பூ கொத்து வாங்கிக்கோங்க… என்ட்ட குடுக்கணும்! சொதப்பீடாதீங்க!” மூச்சு விடாமல் கூறிவிட்டு மீண்டும் கழிவறை போகும் வழியில் ஒரு கடையில் மறைந்து நின்று கொண்டாள்.
அஷோக் முகம் முழுவதும் புன்னகை. ‘என்ன சொன்னா?’ ஏதோ புரிந்தும் புரியாததும் போல் இருந்தது. பட்டாசு போல் வெடித்துச் சிதறவிட்டுச் சென்றதை மனதுக்குள் ஓட்டி பார்த்தான். அவள் முகபாவம்.. அதில் லயித்துத் தான் போனான். அபிநயம் படித்த கண்ணும்… உதடும்… விரல்களும், சிரிப்பு தான் வந்தது அவள் கூறிய ‘அசிங்கமான ஹீரோ’ கதை. ‘இவளே இன்னும் குழந்த ஸ்டேஜ் தாண்டலியே… இவளுக்கு ஒரு குழந்தையா?’ 

Advertisement