Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 61
“உங்களுக்கு பிடிச்ச புருஷன் கிடைச்சதும் என் வலி உங்களுக்கு புரியல!” கூறிய பிருந்தாவை ஒரு இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்த அருணாவிற்கு உள்ளம் குடைந்தது. எத்தனை வருடம் உள்ளுக்குள் அழுதிருக்கிறாள் ஒரு மகிழ்ச்சியான வாழ்விற்கு? இன்று வரை யாரிடமும் பகிரப்படாத ரகசியம் நடுகூடத்தில் இறக்கி வைக்க மனம் கூசியது. இருந்தும் தன் வாழ்வு போல் பிருந்தாவின் வாழ்வு மாறிவிடக் கூடாதே.. அவள் மானத்தை விடத் தோழியின் வாழ்வு முதன்மையாய் படக் கண்ணை இறுக மூடி திறந்த அருணா பெருமூச்சோடு ஆரம்பித்தாள், “நான் ஒரு கதை சொல்றேன்… பொறுமையா கவனிச்சு கேளு! நடந்த கதை… இல்ல இன்னும் நடந்துகிட்டு இருக்கக் கதை.. அப்புறம் முடிவு பண்ணு!” என்றவளைக் குழப்பமாய் இருபெண்களும் பார்க்க..
அருணா ஆரம்பித்தாள்… பொறுமையாய் எதையோ வெறித்து பார்த்துக்கொண்டே.. உயிரற்ற குரலில்!
“ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி… ஆமா அப்படி தான் அவங்க வீட்டுல அவள வளத்தாங்க. ராஜகுமாரிக்கு ஒரு ராஜகுமாரன் இருந்தான். அவளுக்காகவே ஒரு ராஜகுமாரன்.. அவ அத்தை மகன். அத்தைக்கு இவள தான் மகனுக்கு முடிக்கணும்னு ஆசை. 
அது அவங்க ஆசை மட்டுமில்லை!  அது ரெண்டு வீட்டு பெரியவங்க மனசில இருந்த ஆசை. எப்படியோ அவ மனசிலேயும் அத்தை வளத்துவிட்டுடாங்க. அத்த மகன் வெளியூர் கான்வென்ட்ல படிச்சு.. வெளியூர் காலேஜ்ல படிச்சு… வெளியூர்லயே வேலையும் தேடிக்கிட்டான். அதிகமா ஊர் பக்கம் வரக் கூட மாட்டான்.
அவன் லீவுக்கு வரும்போது பழக்கம். அந்த கொஞ்ச நாள் அவனைப் பார்க்கவே தவம் கிடப்பா… வழி மேல விழி வச்சு! வீட்டில கல்யாண பேச்சு ஆரம்பிக்கவும் அவன் மேல இருந்த ஆசை எல்லாம் கண்மண் தெரியாத காதலா மாறி…. அவன புருஷனா நினைச்சு அவன் கூட மனசளவில வாழவே ஆரம்பிச்சிட்டா அந்த ராஜகுமாரி!!
சொந்த தொழில் ஆரம்பிச்சு அவனும் சொந்த ஊரிலேயே வந்து உட்கார்ந்துட்டான். தொழில் அப்போ தான் ஆரம்பிச்சனால.. ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பத்தி பேச்செடுக்க சொல்லிட்டான்.
ஊருக்கு வந்த ராஜகுமாரன பார்த்தவ கண்ணுக்கு அவன் நிஜ ராஜகுமாரனா தான் தெரிஞ்சான். அவளுக்கு மட்டும் இல்ல பலர் கண்ணுக்கு அவன் அப்படி தெரிஞ்சான். அதுவே பின்னாடி அவளுக்குப் பிரச்சினை ஆகி போச்சு!
எப்பவும் போல ஒரு நாள் அவ அத்தை வீட்டுக்கு போனா… அத்த மகன் மட்டும் தான் வீட்டில இருந்தான்.
ஏற்கனவே ராஜகுமாரன் மேல மயக்கமா இருந்த ராஜகுமாரிக்கு தனியா அவன பார்த்தும் தலை கால் புரியல. அவனும் நல்லாவே பேசினான். இந்த சந்திப்பு அடிக்கடி நடந்துது. கொஞ்சம் மாசத்தில புருஷனா நினைச்சவன் மேல அவளுக்கு காதல் முத்தி போச்சு.”
நெஞ்சமெல்லாம் கனக்க… எச்சிலை விழுங்கியவள், “அன்னைக்கும் அப்படி தான் அத்த மகனைப் பாக்க போனா.. அவன் அவள மயங்க எல்லாம் இல்ல.. ஆனா அவ ஒரு பக்கி.. அவன் சுண்டு விரல் பட்டதும் மயங்கிட்டா..
கொஞ்ச நாள்ல பழக்கம் எல்லைகளைக் கடக்க ஆரம்பிச்சுது! தப்புனு தெரியும் ஆனா அவளுக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.. அவனுக்கு எதையும் மறுக்கவே அவளுக்கு மனசில்ல.
ஏதேதோ ஆகி போச்சு. அவ புருஷன் தானே.. அவ வாழ போர வீடு தானேனு நினைச்சா. ஆமா, அப்படி தான் நினைச்சா..! அதனால அப்போ அவளுக்கு அது தப்பாவே தெரியாம போச்சு.
அப்போ தெரியல இப்போ அவளுக்கு தெரியுது.. அது எவ்வளவு பெரிய தப்புனு! என்ன ஒரு கேவலம்? இப்போ நினைச்சா கூட அருவருப்பா இருக்கு! எவ்வளவு பெரிய அசிங்கம்? வயத்தில மட்டும் ஒன்னு வந்திருந்தா..  பெத்தவங்கள எப்படிப் பார்ப்பா? குடும்பமே அவளால சந்தி சிரிச்சிருக்காதா? அந்த அறிவு கெட்ட ஜென்மத்துக்கு அப்போ அது தெரியலை!
அவன் தான் எல்லாம்னு கனவு கண்டுட்டு இருந்தவ தலையில அசராம கல்ல போட்டாங்க அவ அத்தை. அவன் அழகுக்கும்.. படிப்புக்கும், தொழிலுக்கும் ஏத்த மாதரி குடும்பம் அமைஞ்சிடுச்சாம். அவன் கூட படிச்ச பொண்ணு வீட்டுல இருந்து கல்யாணத்துக்கு பேசினாங்களாம். அந்த பொண்ணுக்கு அவ பங்கு சொத்து மட்டுமே பல கோடிகளாம்! கல்யாணம் போதே அவ சொத்து எல்லாம் அவளுக்கு தரதா சொன்னாங்களாம்… அதனால அத்த, அந்த பணக்காரப் பொண்ண பையனுக்குக் கட்ட போறதா முடிவு பண்ணிட்டாங்க.
இத கேக்க அவன் வீட்டுக்கு போனாளாம்.. எப்பவும் போல அவள அவன் பேசவே விடால.. அவ உலகத்தையே மறந்தா அவன் படுக்கையில. எல்லாம் முடிஞ்சதும் சொன்னான்.. ‘நாமா இனிமேல் பார்த்துக்க வேண்டாம்… அம்மா எனக்கு வேர பொண்ணு’ பார்த்திட்டாங்கனு!”
கண்ணில் வழிந்த கண்ணீரை அவள் துடைக்க ஜான்சிக்கும் பிருந்தாவுக்குமே புரிந்தது ராஜகுமாரி யார் என்று.
ஜான்சி, “வேண்டாம் அரு.. எதுக்கு இப்போ இதெல்லாம்.. விடுடி..” என்று முதுகைத் தடவி விட அருணாவிற்கு ஆரம்பித்ததை முடிக்கும் வேகமோ.. பிருந்தாவைக் காக்கும் வேகமோ.. நிறுத்தவில்லை. 
“வீட்டுக்கு வந்தவளுக்கு கைய மட்டும் தான் கிழிக்க முடிஞ்சுது.. அவ எவ்வளவு அறிவாளினா.. சரியான நரம்பைக் கூட பார்த்து வெட்டத் தெரியாத அளவு அறிவாளி.
பட்டபிறகு தான் தெரிஞ்சுது, அவனுக்கு அவ மேல காதலே இல்லனு! அவளுக்கும் என்ன செய்யரதுனு தெரியலை. முதல் தரம் தற்கொலை முயற்சிக்கே அவ அப்பா அம்மா துடிச்சு போய்டாங்க. திரும்பவும் அதையே செய்ய தைரியம் இல்ல. தன்னை விரும்பாத ஒருத்தனுக்காகப் பாசத்தைக் கொட்டி வளர்த்தவங்கள ஏமாத்த மனமில்லாம போச்சு! அட்லீஸ்ட் அந்த அளவாது அறிவிருந்ததே…
நடந்ததை மாத்த முடியாது. வேற ஒருத்தனோட வாழவும் முடியாது. வெளிலையும் சொல்ல முடியாது. அவன் கிட்டயே போய் நின்னா..
அவன் கெட்டவன் எல்லாம் இல்ல. அவ சொன்னதைப் பொறுமையா கேட்டான். ஏதோ அவ இணங்கவே அவன் எல்லையை மீறினதா சொன்னான்!! அவனுக்கு அவ மேல காதல் இல்லேனாலும் அவள பிடிச்சுது. அவ காதல் பிடிச்சுது. அவ விட்ட கண்ணீர் அவனுக்கு பிடிக்கல! அவ காதலை பார்த்து.. அவ கண்ணீர பார்த்து.. அவன் அவளைத் தான் கட்டிபேன்னு சொல்லி அவன் வீட்டில சண்டை போட்டு அவளையே கல்யாணம் பண்ணிகிட்டான். ஆவனுக்காக இல்ல… அவளுக்காக மட்டும்!
அவ அத்தை அவளைப் படுத்தின பாட்டுக்கு.. அவளுக்கு அவனைக் கல்யாணம் பண்ண இஷ்டமே இல்ல.. ஆனா அத வேண்டாம் சொல்லவும் முடியாது. ஆரம்பத்தில, எப்படியோ கல்யாணம் ஆகட்டும்.. எல்லாம் சரி ஆகிடும்னு தான் நினைச்சா… ஆனா எதுவுமே இன்னும் சரி ஆகலை! அவ அத்தைக்கு அவ மேல வெறுப்பு அதிகம் தான் ஆச்சு. அவளால தானே கிடைக்கவேண்டிய ஒரு லாரி வரதட்சணை கிடைக்காம போச்சு! அதனால மகன்ட்ட எப்போவும் அவளை குறை சொல்லிட்டே இருந்தாங்க! ஏற்கனவே அவனுக்கு அவ மேல ஏகபட்ட காதலா… அதனால் கொஞ்சம் காதலை குறைச்சிட்டான்.
ஏதோ கல்யாணம்னு ஒன்னு ஆச்சு.. மூனே மாசத்தில வயத்தில ரெண்டு மாச குழந்தை. ஏழு மாசத்தில அம்மா வீட்டுக்கு போனா… அந்த ஏழு மாசத்தில ஒரு நாள்.. ஓரே ஒரு நாள் அவன் அந்த வயிர ஆசையா பாப்பானா… கை வச்சு குழந்தை அசைவ உணர வருவானானு ஏங்காத நாளில்ல! அவனுக்கு அதுல எல்லாம் பெருசா நாட்டமில்ல! எதுல தான் இருந்தது? இதுல இருக்க? பிள்ளையும் பிறந்து ஐஞ்சு மாசத்துல அவ வீட்டுக்கும் வந்தா.. ரேண்டு வீடும் நாலு தெரு தொலைவில தான்! அத்தன மாசமும் வாரம் தவறாம ஒரு தரம் வருவான்… பத்து நிமிஷம் ஹால்லேயே இருந்துட்டு கிளம்பிடுவான்! எதுக்குனு இன்னுமே தெரியல!
கல்யாணம் முடிஞ்சு பிள்ளையும் பிறந்தாச்சு! அவள பார்க்கும்போது அவன் பார்வையில ஒரு காதல் இருக்காது. 
ஒரு கொஞ்சல்.. ஒரு ஏக்க பார்வை.. ஏன்..?, ஒரு ஆர்வமான பேச்சு..? எதுவுமே.. இல்ல.
இருக்கியா? இரு. அம்மா வீட்டுக்கு போணுமா? போ. வராத்துல ரெண்டு நான் சேர்ந்து இருப்போம்.. வேல முடிஞ்சதும் கவுந்து படுத்து தூங்கிடுவோம்… இப்படி தான் அவ வாழ்க்கை போச்சு.
இப்போ எல்லம் அதை விட மோசம். அவ புருஷன் இப்போ எல்லாம் அவ கிட்ட வரதே இல்ல… அவ புருஷனுக்கு அவட்ட வர இஷ்டம் இல்ல. கேட்டா.. ‘எனக்கு உன் கிட்ட வந்தாலே அப்படி எல்லாம் ஒன்னும் தோண மாட்டேங்குது’னு முஞ்சில அடிச்சா மாதரி சொல்லிட்டான்.”
வழிந்த நீரைத் துடைக்கக் கூட தோன்றாமல் பிருந்தாவின் கண் பார்த்து கேட்டாள், சொல்லு பிருந்தா.. நீயும் பொண்ணு தானே… நீயே சொல்லு… இது எல்லாம் ஒரு வாழ்க்கையா?”
“இருந்தா இரு.. செத்தா சாவுனு இருக்க புருஷன் கூட ஒரு வாழ்க்கை, எப்படி ஒரு நரகம் தெரியுமா?
ஆயுசுக்கும் நரகம். யார்ட்டையும் என்னால சொல்ல கூட முடியாது. என் தலகாணிக்குத் தெரியும் என் வலி!
இது நாள் வரைக்கும் என் உணர்வுக்கு அவர் கிட்ட மதிப்பே இல்ல. என்  தாம்பத்திய அழக, நான் தினமும் பேசர ராணி கிட்ட கூட சொன்னது இல்ல.. இன்னைக்கு உனக்காக தான் சொல்றேன். இன்னும் தாலி கழுத்தில ஏறல.. என்னை மாதரி நீ முட்டாள் தனமா மனசோட உடம்பை கெடுத்துக்கல!
அவர தான் கல்யாணம் பண்ணனும்னு எந்த நிர்ப்பந்தமும் இல்ல உனக்கு! நல்லா யோசிச்சுக்கோ… இது உனக்குத் தேவையா?”
பெண்களிடம் மௌனம்! பிருந்தா முகத்தில் குழப்பம். குட்டை குழப்ப பட்டுவிட்டதோ?
“அவர் கூட படுத்து எழுந்த தப்ப விட.. நான் பண்ணின பெரிய தப்பு என்ன தெரியுமா? ‘எனக்கு வீட்டில பொண்ணு பாக்கராங்க… இனி மேல் நாம் பார்த்துக்க வேண்டாம்’னு அவர் சொன்ன பிறகு அடம்பிடிச்சு அவரையே கல்யாணம் பண்ணினது தான்! அங்க தான் நான் செஞ்ச தப்புக்கான தூக்குத் தண்டனையை நானே வாங்கிகிட்டேன்.”
அவசரப் படக் கூடாத விடயத்தில் அவசரப் பட… இன்று அருணாவின் வாழ்வு வீணாய்ப் போனது! முழு தவறும் அவள் மேல் தான். இன்று தெரிந்தது! என்ன பயன்..? எல்லாம் முடிந்தது! அவள் வாழ்வும் தான்!
அங்கு வெறும் மௌனம் மட்டுமே..
“முதல்ல என் ஒருத்தி காதலே ரெண்டு பேருக்கும் போதும்னு தான் நினைச்சேன். ஆனா நடப்புக்கு அது ஒத்து வரல பிருந்தா.. ஆச அறுபது நாள் மோகம் முப்பது நாளுனு சொல்லுவாங்க.. ஆனா என்னால அது கூட முழுசா அனுபவிக்க முடியல..” சொல்ல சொல்ல அவள் குரல் தேய
“அழதா அருமா..” என இரு தோழியரும் அவளை தேற்ற வேண்டியதாய் போயிற்று!
பிருந்தா, “நான் ஒரு மேரேஜ் கௌன்சிலிங்க் சென்டர் நம்பர் அனுபறேன்.. போய் பாருங்க.. கண்டிப்பா பாருங்க! உங்க பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்!”
அருணா விசும்பலோடே கேட்டாள், “வலி எது தெரியுமா?
காதலிச்சவனோட வாழ முடியாதது வலினு நீ நினைக்குர…
ஆனா அதை விட ஒரு வலி இருக்கு தெரியுமா?
கதலிச்சவனோட கல்யாணத்துக்குப் பிறகு ஒன்றாம வாழரது.
நீ நேசிக்கலாம்… உன்னால ஆன மட்டும் நீ நேசிக்கலாம். அது மட்டும் போதாது.
கணவனோட கண் பார்த்து அவன் அருகாமைக்கு ஏங்கி தவிக்கர தவிப்பு இருக்கே… அது தான் வேதனை.
கொஞ்சமாவது என்னைக் காதலிக்க மாட்டானானு ஏங்கி நிக்கரது தான் வேதனை.
காதலிச்சவன் கூடவே காதலே இல்லாம வழரத விட கொடுமை வேற இல்ல பிருந்தா. வாழவும் முடியாம, சாகவும் முடியாம வாழர வாழ்க்கையோட  வலி தெரியுமா? யார் கிட்டயும் சொல்லவும் முடியாது. அப்படியே சொன்னாலும் ‘நீ தேடிக்கிட்ட வாழ்க்கை தானே’-னு சொல்லிடுவாங்க!
இப்போ கூட கெட்டு போகல.. வேண்டாம்… ரெண்டு பேரும் விரும்பி பண்ற கல்யாணங்களே நிம்மதியை தரதில்ல.. நீ ஏன் மூனு பேர் வாழ்க்கையில விபரீதமா விளையாடுர?“
“…”
“ஒரு தரம் பேசிதான் பாரேன். அவர்ட்ட பேசு… அந்த பொண்ணுட்ட பேசு. அவங்களுக்குள்ள ஒன்னும் இல்லேனு உறுதியா தெரிஞ்ச பின்னக் கல்யாணம் பண்ணிக்கோ… நான் கடவுளை மனசார வேண்டிக்கறேன். உனக்குக் கல்யாணம் நடக்கணும்.. ரெண்டு பேரும் மனசார ஒருத்தர ஒருத்தர் விரும்பி வாழணும்னு! ஆனா அதுக்கு முதல்ல உன் மனசுக்கு நிம்மதி வேண்டாமா? யோசி!”
பிருந்தாவின் வாழ்விற்காக இருட்டில் வைத்திருந்த கடந்த காலத்தை நடுக் கூடத்தில் பறைசாற்றினாள் அருணா! ஒரு இதயத்திலிருந்த விஷயம் இனி மூன்று இதயங்களில் இருக்கும் அவ்வளவு தான் வித்தியாசம். மூச்சு இருக்கும் வரை தன் தோழியை தவறாகவும் எண்ண மாட்டார்கள்.. அவர்கள் இணைக்கும் கூட உறைக்க மாட்டார்கள். 
கீழே விழும்போது தாங்கவும், எழுந்து நிற்கும் போது தட்டி கொடுத்தும்.. தவறும் போது வழிநடத்தும் நட்பு அனைவருக்கும் அமைவதில்லை. அப்படி ஒரு நட்பு இருக்குமேயென்றால் அதற்காக எதையும் செய்யலாம்.
ஜான்சியும் அருணாவும் அவர்களால் முடிந்தவரை சொல்லியாயிற்று… இனி இதில் அவளிடம் பேச ஒன்றுமே இல்லை! எல்லாம் அவரவர் விதிப்படி தான் நடக்கும்.
அஷோக்கோடான வாழ்க்கை கண்டிப்பாக இப்படி தான் இருக்கும்.. அவன் சுதாவை விரும்பும் பட்சத்தில்! அது பிருந்தா உணர்ந்தாளா? படித்த பெண்.. அறிவாளி.. வாழ்வின் நிதர்சனம் உணர்ந்தவள். ஒரு முறை அஷோக் கிடைக்க மாட்டான் என்று வாழ்வின் ஓட்டத்தோடு ஓட மனதை திடப்படுத்தியவள் தான்… இந்த முறை என்ன செய்யப் போகிறாள்.
‘இதெல்லாம் உனக்கும் வேண்டுமா?’ இருபெண்களும் பிருந்தா முகத்தைப் பார்க்க.. அவள் முகத்தில் பலமான யோசனை ரேகை. 
மதில் மேலிருக்கும் பூனை எந்த பக்கம் குதிக்கும்? பிருந்தா மட்டுமே அறிவாள்!
 

Advertisement