Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 60_2
அருணாவால் வெளிவர முடியவில்லை பிருந்தாவின் கதையிலிருந்து! “லவ் மேரேஜ் இல்லையா?” என்றாள் மீண்டும்… யோசனையாய்.
பிருந்தா, “லவ் தான். நான் அவர ரொம்ப விரும்பறேன். அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். பட் மத்த லவ்வர்ஸ் மாதரி சீண்ட மாட்டார். கொஞ்ச மாட்டார். குழைய மாட்டார். தெரியல… மே பீ மேரேஜுக்கு அப்பரம் செய்வாரா இருக்கும்!”
ஏனோ அருணாவால் கேட்டுவிட்டு இருக்கவே முடியவில்லை.
அவளே…”இரு இரு… நீ லவ் பன்ற. அவருக்கு உன்ன பிடிக்கும் ஆனா காதல் எல்லாம் இல்ல. நீ விரும்பரத பார்த்து கல்யாணத்துக்கு ஒத்துகிட்டார்! அப்படி தானே?”
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல… அவருக்கும் என்னை பிடிக்கும்” என்றாள். அடிபட்ட உணர்வு! உண்மையல்லவா.. வலித்தது.
அருணா முகத்தில் அத்தனை கேள்விகள், “என்ன சொல்ல மாடேங்கர பிருந்தா? உன்ன ஏதோ குடையுது… சொல்லணும்னு தோணுது… சொல்ல மாடேங்கர! சொல்லு டா..”
அதரவாய் அவள் தோள் பற்ற.. பிருந்தாவிற்கும் அவள் மனவலியை இறக்கி வைக்க வேண்டும் என்று தோன்றியதோ..? அவளும் எத்தனை நாள் கண்டும் காணாது போல் காட்டிக்கொள்ள முடியும்.
காதலித்தவனோடு திருமணம்… மனதில் மகிழ்ச்சி இல்லை. மாறாய் வலியும் பயமும்! வலியின் காரணம் தெரியும்! மருத்துவமனையில் அன்று அவள் கண்ட காட்சி அப்படி! 
பயம் ஏனோ? அவன் கிடைக்காமல் போய்விட்டால்.. என்ற பயமா? இல்லை… இவனோடான வாழ்வு எப்படி இருக்குமோ என்ற பயமா? என்ன ஆராய்ந்தும் இன்னும் விடை கிடைக்கவில்லை! கிடைத்திருக்கும்… விரும்பி தேடியிருந்தால்!! 
அவளுக்கு பயத்தின் காரணம் தெரிய வேண்டாம். தெரிந்து போனால்… அந்த காரணம் அவளுக்கு பிடிக்காமல் போனால்…? பயம் களைய வேண்டி அவள் அவனை இழக்க நேர்ந்தால்? வேண்டாத சிந்தனையாய் அதை ஒதுக்கி வைக்க.. இன்று அவளின் திருமணத் தருணங்களில் இன்பமாய் ஈடுபட முடியவில்லை.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அரு! அவர் கிடைக்கமாட்டாரோனு பயம்?”
“ச்ச… வாய கழுவு! என்ன பேச்சிது. இதோ ரெண்டு வீட்டுலையும் பேசி சம்மதிச்சு கல்யாணத்துக்கு ஒரு வாரம் கூட இல்ல… இது என்ன பேச்சு?”
“இல்ல… உனக்கு புரியல!” முகத்தில் அப்படி ஒரு கலவரம்
ஜான்சி, “பிருந்தா என்ன குழப்பம்? நீ சொன்னா தானே தெரியும். என்ன பிரச்சினை?”
நடந்த எல்லாவற்றையும் கூறினாள். மருத்துவமனியில் அவன் கண்விழித்து பேசியது முதல் சுதா இருந்த அறையில் தலைவலியில் துடித்தது வரை.
பெண்கள் முகத்தில் ஈயாடவில்லை. 
அருணா, “ஏய்… இது என்னடி… கிணறு வெட்ட பூதம் கிளம்புது!!”
அருணா, “அப்பரமும் அவரை கல்யாணம் பண்ணபோறியா?”
“ப்ச்… இருக்க குழப்பத்த அதிக படுத்த ப்ளான் இருந்தா வாய் திறக்காத!”
அருணா, “நீ சொல்ரத வச்சு பார்த்தா.. அவங்க லவ் பண்ணியிருப்பாங்களோனு ஒரு சந்தேகம். சண்டை போட்டு பிரிஞ்சு இருக்க நேரமா ஆக்ஸிடென்ட்ல மறந்து போயிருப்பாரோ? அவளுக்கு இன்னும் கோபம் போகலியோ என்னமோ?”
பிருந்தா, “ஏண்டி உளறி கொட்டுர?”
ஜான்சி, “விளையாடாத அரு! நீ சொல்லு பிருந்தா.. இதுல உனக்கு என்ன குழப்பம்? அவர் கிட்ட நீ கேட்டுட்ட.. அவர் தான் க்ளியரா சொல்றாரே ‘அவளுக்கு லவ்வர் இருக்கு அதனால நான் ஒதுங்கிட்டேன்னு’.. அப்பரம் என்ன?” 
பிருந்தா, “அது.. அது வந்து.. அவருக்கு அவள மறந்து போச்சு! அவள யாருணே அவருக்கு தெரியல. அவ அவரோட ஃப்ரெண்டுனு நினைக்குறார். ஆனா அவங்க ரெண்டு பேரும் வெறும் ஃப்ரெண்ட்ஸ் இல்லையோனு தோணவைக்கர பார்வை அது..”
ஜான்சி, “எந்த பார்வை?”
பிருந்தா, “தலவலி வந்த அன்னைக்கு அவர் அவள பார்த்த பார்வை… அப்பரம் என்னை பார்த்த விதம்… அப்புரம் அவ அவர பார்த்த ஏக்க பார்வை… எதுவுமே எனக்கு சரியா படல. பயமா இருக்கு டி!”
அருணா, “சத்தியமா சொல்றேன்… எனக்கு எதுவுமே புரியல!”
ஜான்சி, “நீ சும்மா இரு அரு! நீ சொல்லு… பார்வைய வச்சு அவங்க ஃரெண்ட்ஸ் இல்லனு எப்படி சொல்லுவ?”
“அத சொல்ல எல்லாம் முடியாது. உயிரா இருக்கவங்கள விட்டுட்டு சாகும் போது ஒரு வித வலியோட ஏக்க பார்வை வருமே… நான் ஹாஸ்பிட்டல்ல பார்த்திருக்கேன் உயிர் பிரியரவங்கட்ட… ரொம்ப கொடுமையா இருக்கும். ‘நான் இல்லாம நீ என்ன பண்ணுவியோ-னு’ ஒரு வலி நிரைஞ்ச பார்வை… அப்படி தான் இருந்தது அவ பார்த்தது. எனக்கு என்னமோ அவ அவர விரும்பராளோனு சந்தேகம். அது அவருக்கு ஏன் தெரியல? அவ சொல்ல வேண்டாம்-னு முடிவு பண்ணி இருக்கணும். அவ சொல்ல நினைச்சிருந்தா சொல்லியிருக்கலாம். ஏன் வலியோட பிரியனும்? பிரிஞ்சு போரவ திரும்பவும் வருவாளா… என் கிட்ட இருந்து அஷோக்க பிரிச்சிடுவாளா?”
ஜான்சி, “மக்கு… நீயா நினைச்சு குழப்பிக்காத! அப்படி எல்லாம் இருக்காது. வயசு பிள்ளைங்களா அவங்க? காதலிச்சும் வீட்டுக்கு பயந்து பிரியரதுக்கு? அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பேய் மாதரி!”
“இல்ல டி! அவ கண்டிப்பா அவருக்கு நெருக்கமானவ தான். அவள மறந்துட்டு தான் அவர் அவஸ்தை படராரோ? அதனால தான் ரெண்டு தரம் அவருக்கு தல வலி வந்துதோ? எனக்கு ஒன்னும் புரியல! என் கவல எல்லாம்.. அவ திரும்பவும் வந்தா? வந்து எங்கிட்ட இருந்து இவர கூட்டிட்டு போய்டா?” 
ஜான்சி, “உன் கவல அவ வரதில இருக்க கூடாது! கல்யாணத்துக்கு அப்புறம் அவருக்கு பழசு நினைவு வந்தா? அவ உண்மையாவே அவர் லவ்வரா இருந்தா?  உன்ன விட்டு அவர் போய்டா? உன் வாழ்க்கை நாசம் ஆகிடாத பிருந்தா.. யோசி டா…?”
பிருந்தா, “அவருக்கு அவ நினைப்பு வராமலே போய்டலாம்! அவர் அப்பா அவங்க அம்மாவ ஏமாதிட்டு போய்டார். அதனால இவர் அந்த தப்ப பண்ணவே மாட்டார். எனக்கு தெரியும். என் கழுத்தில தாலி கட்டின பிறகு அவள எல்லாம் தேடி போகவே மாட்டார்!”
ஜான்சி, “எதுக்கு இத்தன குழப்பம். அவருக்கு தான் அவள தெரியல. நீ அவட்ட பேசி பாரேன். ஓரே ஒரு தரம் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசி பார். அவங்க ஒன்னும் இல்லனு சொல்லட்டும்… நீ கல்யாணம் பண்ணிக்கோ. அவங்க விரும்பராங்கனா.. நீ ஒதுங்கிடு!”
பிருந்தாவால் யோசிக்க கூட முடியாத செயல் அது. அஷோக்கை விட்டு பிரிவதா? 
பிருந்தா, “ம்ம்ஹூம்… மாட்டேன். நான் யார்ட்டையும் கேக்கவே மாட்டேன். எனக்கு பயமா இருக்கு… அவ ஆமா-னு சொல்லிட்டா.. என்னால தாங்கவே முடியாது ராணி!”
ஜான்சி, “இது ரொம்ப ஆபத்தான விஷயம் பிருந்தா! நீயே தெரிஞ்சே பாழும் கிணத்துல குதிக்கரதுக்கு சமம்!”
அருணா “அவருக்கு விஷயம் தெரிஞ்சுது உன்ன மன்னிக்கவே மாட்டார்”
பிருந்தா, “அவர் காதலுக்கு அவர் போராடல. என் காதலுக்கு நான் போராடினா அது எப்படி தப்பாகும்? இதுல அவருக்கு என் மேல எப்படி கோபம் வரலாம்? காதல்ல ஏது தப்பு ஏது சரி? என் ஞாயம் எனக்கு”
ஜான்சி, “தப்பு பண்ற நீ… நிஜத்துக்கு ஏதோ சூழ்நிலைனால தான் அவங்க தள்ளி இருக்காங்கனா.. அந்த பொண்ணு மனச யோசி… அவர யோசி… அவருக்கு நினைவு வந்ததும் அவள தான் மனசு தேடும்.. அப்போ உன் நிலம? அவருக்கு உன்னையும் பிடிக்காது அந்த பொண்ணுகிட்டயும் போக முடியாது. அந்த மனுஷன் உயிரோட சாவார் தினம் தினம். நீ? உனக்கும் அதே நிலமை தான்! காதலே இல்லாத ஒரு வாழ்க்கை.. காலம் பூரா? ஏன் உனக்கு இந்த வேண்டுதல்? ரெண்டு மனச கொன்னுட்டு? அதுல கருக போரது உன் வாழ்க்கை தான்.. இதுக்கு மேல உன் இஷ்டம்!”
ஜான்ஸி, “நானும் என் புருஷனும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப விரும்பரோம் பிருந்தா.. அதுனால எங்க வாழ்க்கை தூர இருந்த போதும் சரி.. பக்கத்துல இருக்கும்போதும் சரி, ரொம்ப சந்தோஷமாவே போகுது.. இது ரெண்டு பேரும் விரும்பி வாழ்ந்தா மட்டும் தான் கிடைக்கும் பிருந்தா.. யோசி!”
அருணா, “ராணி சொல்றது கேக்குதா? யோசி பிருந்தா..!”
பிருந்தா, “ஏன் ரெண்டு பேரும் என்னை படுத்துரீங்க? நீங்க எனக்கு தானே ஃப்ரெண்ட்ஸ்… அவளுக்கு பேசுரிங்க?”
ஜான்சி, “லூசு.. உனக்கு தான் பேசரோம்… உன் வாழ்க்கைக்கு… இது வேண்டாம் பிருந்தா… தெரிஞ்சே நெருப்பில விளையாடுர!”
பிருந்தா, “எனக்கு அவர் வேணும்! புரிஞ்சுக்கோ.. அவர் இல்லாத வாழ்க்கை வேண்டாம் எனக்கு!”
நீண்ட மௌனம்.
ஜான்சி, “இது உன் வாழ்க்கை இல்லையா….? ஏதாவது தப்பாயிட போகுது டா.. அவட்ட பேசி தான் பாரேன்.”
ஜான்சி மடியின் முகம் புதைத்து கொண்டாள். கண்ணீர் வழிய.. “என்னால முடியாது ராணி. என் வலி உனக்கு புரியல. எனக்கு புரிய வைக்க தெரியல. செத்து பொய்டலாமானு தோணுது! அவர் கண்டிப்பா கிடைக்க மாட்டார்னு என் மனச தேத்தி வச்சிருந்தேன். அவர் ‘நீ தான் என் மனைவி… நான் கட்டுர தாலி தான் உன் கழுத்திலனு’ ஆசை வார்த்தைச் சொன்னார். என் உயிரெல்லாம் அவர் தான். ஆனா அன்னைக்கு அவள, அவர் பார்த்தது.. என் உயிரே போயிடுச்சு! அப்படி ஒரு நாள் கூட என்னை பார்த்தது இல்லை. ஒன் சைட் லவ் தானே-னு நினைச்சேன். அவள பார்த்தா அவ அவர அப்படி பாக்கரா… அவ ஜீவனே அவர் தாங்கர மாதரி. அவ முகத்தில அவ்வளவு வலி! ஏன்னு தெரியல! அவளுக்கு கண்டிப்பா வேற ஆள இருக்க வாய்பே இல்லனு தோணுது. இவர் தான் அவள மறந்திட்டு.. எங்கையோ தப்பா புரிஞ்சு இருகார்னு பார்த்த உடனேயே தெரிஞ்சிடுச்சு! ஆனா என்னால அவர் இல்லாம முடியாது ராணி! அதனால நான் எதையுமே பார்க்கலனு என்னையே சமாதன படுத்திக்கிறேன்.. இப்போ நீங்களும் பேசினா நான் என்ன பண்ணுவேன்? அவர் இல்லானா நான் செத்ததுக்கு சமம். அதுக்கு அவருக்கு நினைவு வர வரைக்குமாவது அவரோட வாழ்ந்துட்டு போறேனே.. நினைவு வராமலே போகலாம் இல்லையா… எனக்கு அவர் வேணும் ராணி”
மடியில் முகம் புதைத்து அழுபவளை என்ன சொல்ல முடியும்? எல்லாம் சரி வர வேண்டுமே… அவள் தோழி இன்பமாய் வாழவேண்டுமே…  என்ற வேண்டுதல் மட்டுமே. முகம் தெரியாத அந்த பெண்ணை விட அவள் மடியில் தலை சாய்த்திருக்கும் தோழியின் வலி தான் பெரிதாய் தோன்றுவதில் ஆச்சரியம் இல்லையே. 
இருப்பினும் அவள் தோழியை காக்கும் கடைசி முயற்சியாய், பொறுமையாக மடி சாய்ந்தவள் தலையை தடவியவாறே, “அவர் மனசில அந்த பொண்ணு இருந்தா… தெரிஞ்சே அவரைக் கல்யாணம் பண்ணினா,.. அவருக்கு நினைவு வந்தா.. அவர் மனசு நிச்சயம் உனக்கு இல்ல. கல்யாணத்த நிறுத்து… வாழ்க்கை பூரா உனக்கு உயிர கொடுக்கர நண்பனா இருப்பார்!”
பிருந்தா, “என் மேல அன்பே இல்லாம.. என் உயிர எடுக்கர.. என்னை புரிஞ்சுக்காத ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் போதும்!”
ஜான்சி, “கோவப்படாத டா செல்லம்.. நீ சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டர ஃப்ரெண்டா வேணும்? உன் மெல அக்கர இருக்கனால தானே இவ்வளவு நேரமா இதயே பேசுறோம்.. புரிஞ்சுக்கோ! நீ அவர கல்யாணம் பண்ணிட்டு அவரோட சந்தோஷமா வாழ்ந்தா.. எங்களுக்கு அதுவே போதும்! ஆனா தப்பாகிட்டா…? அதனால தான்..”
அவர்கள் பேசுவது புரியாம இல்லை! ஆனால் கேட்கும் நிலையில் அவள் மனமில்லை என்பது தான் உண்மை! ரணமாய் போன மனது… யார் பேச்சும் கேட்காது! காயம் பட்ட மனது கிழிந்து வலிப்பது அவளால் மட்டுமே உணர முடியும். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு தெரியாது. 
உலகில் எல்லாவற்றிக்கும் ஒரு விலையுண்டு.. பிறருக்கு கொடுக்கும் ஆலோசனையை தவிற! இன்று தரபட்ட அட்வைஸ் வெறும் அன்பின் நிமித்தம் வந்தது. அது அவள் இதயத்தை தொட்டதா என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
அவள் காதலிக்க ஆரம்பிக்கும் வேளை அஷோக் மட்டும் தான் தெரிந்தான். அவன் அவளை மனைவியாய் ஏற்றுகொள்ள விருப்பம் தெரிவித்த வேளை, அவன் மட்டும் தான் தெரிந்தான். மனம் முழுவதும் அவன் மட்டும் தான். நிச்சயமும் முடிந்து திருமணத்திற்கு சில நாட்களே.. இன்று அவனோடு வேறு ஒரு பெண் தெரிகிறாள். அவள் அவனுக்கு யார்? தெரிந்துகொள்ள தைரியம் இல்லை! அவனுக்காக உயிரையும் விட்டுவிட தயார். அவனையே விட்டுவிட சொன்னால்? இதில் அவள் தவறு எங்கே? இன்னுமே அவர்கள் திருமணமானவர்கள் என்று அவளுக்கு தெரியாதே? 
பிருந்தா ஒரு வித சோர்வோடு, “ப்ச்… உங்களுக்கு பிடிச்ச புருஷன் கிடைச்சதும் என் வலி உங்களுக்கு புரியல! யாருக்குமே புரிய வேண்டாம். உங்களுக்குனு வரும்போது.. விட்டு கொடுத்திட்டு ‘எங்கிருந்தாலும் வாழ்கனு’ போய்டுவீங்களானு மாட்டும் சொல்லுங்க!!” கூறிவள் கண்மூடி சாய்ந்துகொண்டாள்.
அட்வைஸ் செய்தவர்களால் முடியுமா? திருமணம் முன் டேனிக்காக ஜான்சி  தவித்த தவிபென்ன? அவனை அவளால் விட்டுவிட முடியவில்லையே… இவளிடம் எப்படி எதிர்பார்க்கலாம்? இதன் பின் ஜான்சி இதை பற்றி பேச போவதில்லை! அழிந்து போக போவது இவளின் நெருங்கிய சொந்தத்தின் வாழ்வு என்று தெரிந்தால் இப்படி இருப்பாளா என்பது இவளுக்கான கேள்வி! 
இன்று பிருந்தா வடிக்கும் கண்ணீருக்கு கரைபவள் ஒரு நாள், இதே மடியில் சுதா, “என் புருஷன் இல்லாம என்னால முடியல அண்ணி… நான் செத்து போய்டவா” என்று உணவில்லாமல்.. உறக்கமில்லாமல் துடிதுடிப்பாளே அன்று அவளுக்கு என்ன பதில் கூறுவாள்? ஜான்சி முயன்றிருந்தால் சுதாவின் வாழ்வை காப்பாற்றி இருக்க முடியும் என்று தெரியும் வேளை சுதா எந்த நிலையில் இருப்பாள்?
அவன் சுதா மேல் விருப்பம் கொண்டிருப்பானோ என்ற எண்ணமே அன்று பிருந்தாவிற்கு கசத்தது! இதில் சுதாவிற்கும் அஷோக்கைப் பிடிக்குமோ என்ற சந்தேகம் அவளை குத்தி கிழித்தது. அவன் வாழ்வில் சுதாவிற்கு பங்கு இருந்திருக்குமோ? இன்று பயம் மட்டுமே வாழ்வாய் போனது!
காதல் அவளை கேட்டு வரவில்லை. தவறானவன் மேல் காதல் கொள்ளவில்லை. மற்றவள் மணாளன் என்பதை அறியாள். எங்கு தவறினாள்? அவள் மேல் ஒரு தவறும் இல்லையே..
காதலிப்பது குற்றமா? குற்றம் தான் போலும்… காதலின் இலவச இணைப்பாய் வரவேண்டிய இன்ப நினைவுகள் வெறும் வலியை ஏந்தி வந்தது. காயமும் வலியும் அவளாய் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்… யாரால் காயம் ஏற்பட்டதோ.. அவனால் மருந்தாய் இருக்க முடியாது. அது அவன் தவறில்லை! அவன் காலத்தால் ஆட்டிவைக்கப்பட்டு கொண்டிருக்கின்றான்.
அஷோக்கோடான வாழ்வு கண்டிப்பாய் அவள் வேதனைக்கு மருந்தாய் இருக்காது. அவளை காதலாய் பார்த்து நேசமாய் அரவணைக்கும் கரம் வேண்டும். கண்டிப்பாய் அவனால் அது முடியவே முடியாது. என்றோ ஒரு நாள் அவன் ‘சிந்தனையில் வந்தது சுதா’ என்று தெரியும் முன்னமே அவனால் காதலாய் ஒரு முத்தம் பகிரமுடியவில்லை பிருந்தாவோடு! அவன் சிதறிபோன சிந்தனை முழுவதும் சுதா ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும் வேளை.. பிருந்தாவை அவன் எப்படி நெருங்குவான்?
உயிர் சேரா உடல் சேரும் வாழ்வு தான் அஷோக் வாழப்போவதோ? அதற்கு சுதா சம்மதிப்பாளா?
பிழையில்லாமல் வாழ்ந்த மூன்று வாழ்க்கை இன்று பிழையாய் போக காத்திருக்க… மூன்று ஜீவங்களும் வலியில் பிடியில்! இதில் எந்த விதத்திலும் குறையாத வலியோடு ஜீவா என்ற ஜீவனும் புதிதாக இடம் பிடித்துள்ளது.. அடுத்த துரதிஷ்டம்!
பிருந்தா கண்மூடி கண்ணீர் வழிய படுத்திருந்தாள். எதுவும் புரியவில்லை… எதுவும் பிடிக்கவில்லை. சரியா தவறா தெரியவில்லை. வலி மட்டும் நிறந்திரமாய் போனது.
இன்றைய நிலையில்… பிருந்தா நெருப்பில் தான் விளையாடுகிறாளா? 
இது சொல்லபட்டது:- பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்க.. பற்றிகொள்ளும் அபாயம்!  
இது புதிது:- நெருப்பின் தன்மை மாறப்போவதில்லை. பிருந்தா என்ற பஞ்சு திருமணம் என்ற பந்தத்தால் சாம்பல் ஆகாம் இருந்தால் சரி!

Advertisement