Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 60_1
நாட்கள் வேகமாய் நகர வளைகாப்புக்கான வேலைகளும் வேகமாய் நடந்து கொண்டிருந்தது. பெரிய அளவில் இல்லை. வீட்டு மாடியிலேயே செய்வதாய் முடிவுசெய்தனர். கூட்டம் அதிகம் இல்லையென்றாலும் வேலை இருக்கத் தானே செய்யும். டேனியேல் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தான். ஏழு மாதம் மனைவிக்குச் செய்ய முடியாத வருத்தத்தை போக்கும் எண்ணம் போலும்.
கார்த்திக்கால் வர இயலவில்லை. எப்படியும் விழா முடிந்ததும், ஜான்சி அங்குச் செல்லவிருப்பதால் அவளே ‘வர வேண்டாம்’ என்றுவிட்டாள்.
அப்பாவும் மகனுமாய் வளைகாப்புக்கான வேலைகளைக் கவனிக்க, ஷாலினி மகனுக்குப் பிடித்ததாய் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்து மருமகளோடு சேர்த்து மகனையும் கவனித்துக் கொண்டார்.
அனி, ஜான்ஸியை “அழுகு படுத்துகிறேன்” என்ற பெயரில் அடுக்களை சாதனங்கள் கொண்டு ஜான்சியின் முகம், கை, கால் தலை என்று ஒவ்வொன்றிலும் எதையாவது பூசிக்கொண்டிருந்தாள். விரும்பியே பொறிக்குள் எலியாய் அமர்ந்திருந்தாள் ஜான்சி! பார்ப்பவர்களுக்கு இருவரும் சகோதரிகள் என்று சொல்லும் அளவு நெருக்கம்.
குடும்பத்தில் அன்பிற்கு பஞ்சமில்லை. அன்பையும் அக்கரையையும் அளவிற்கு அதிகமாகவே ஜான்சி அனுபவித்தாள். அன்பை காட்டுவதற்கும் பெறுவதற்கும் அளவு கோல் உண்டா? இன்று எல்லா அளவு கோலையும் தாண்டிய நிலை இவர்கள் வாழ்வில்.
இரு தினங்களிள் வளைகாப்பு இருக்க.. ஜான்சியை தேடி அவள் பள்ளித் தோழி பிருந்தா வந்திருந்தாள். அஷோக்கின் துணைவியாய் மாறவிருக்கும் அதே பிருந்தா தான்! அவள் வரவுமே அருணாவும் அவள் மகனை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்துவிட்டாள்.
பிருந்தாவின் ஆரம்ப படிப்பு நாகர்கோவிலில். ஜான்ஸி, அருணா, பிருந்தா மூவரும் ஒரே வகுப்பு மற்றும் ஓரே தெருவில் வசித்துவந்தனர். அன்று ஆரம்பமாகிய நட்பு தான் இவர்களுடையது.
ஆழமாய் வேரூன்றிய நட்பு. அவர்கள் மூவரும் பள்ளி மாறி, இடம் மாறிய பின்னும் தொடரவே செய்தது.
அருணா பி.எஸ்.சி முடித்து திருமணமாகிய பின்னும் அதே ஊரில் அவள் கணவனோடு வசிக்க, ஜான்ஸி, அருணா இருவரும் அதிக நெருக்கம்.
பிருந்தா பள்ளிப் பருவத்திலேயே சென்னைக்கு மாற்றமாகிச் சென்றிருந்தாள். அவ்வப்பொழுது சொந்த ஊருக்கு வரும் வேளையில் ஒன்றாய் நேரத்தைக் கழிப்பார்கள்.
பிருந்தா, “கொடுத்துவச்சவ டி நீ.. ஏழு மாசம் ஆகுது… உடம்பில எக்ஸ்ட்ரா சதையே காணம்?”
அருணா, “கண்ணு வைக்காதடி எரும.. நானே பயந்துட்டு இருந்தேன்.. ஏற்கனவே கால் வலி.. இதுல ரொம்ப வெயிட் போட்டா என்ன ஆவாளோனு.. நல்ல வேள, காலுக்குச் சிரமம் இல்ல..”
பிருந்தா, “ஆமா, இப்போ எப்பிடி இருக்கு?”
யாரிடமும் ஜான்சி வலியை பற்றிக் கூறவில்லை. எதற்கு வீண் டென்ஷன் என்று…
எதிரே இருந்த பண்டங்களை கொறித்துக் கொண்டிருந்தவளிடம் ஜான்ஸி, “இல்ல.. எப்பவும் போல பிரச்சினை இல்ல.. என்ன தீடீர்னு இங்க? எதாவது விசேஷமா? வளைகாப்புக்கு வானு கூப்பிட்டதுக்குக்கூட வரது கொஞ்சம் கஷ்டம்னு சொன்ன? என் கல்யாணத்துக்கும் வரலை… நீ டாக்டரானதும் ஆன எங்களை எல்லாம் மறந்தே போய்ட போடி…”
சலிப்பாய் சொன்னவள் மடியில் வாகாய் தலை வைத்துக் கொண்டு படுத்தவள், “இல்ல டி செல்லம். உன் கல்யாணத்தைவிட எனக்கு என்ன பெரிய வேலை? டிக்கெட் வரைக்கும் ரெடி தான்! ஆனா பாரு.. கல்யாணத்தன்னைக்கு தான் பொண்ணு பாக்கரேன்னு ஜீவா வீட்டில இருந்து வந்தாங்க.. எல்லாம் இந்த அப்பா செஞ்ச வேலை… வர முடியாம போச்சு”
ஜான்சியின் விரலில் சொடக்கு எடுத்துக் கொண்டே, “இத நீ இன்னும் எத்தன தரம் சொல்லப் போர ராணி? 100 தோப்புக்கரணம் போடச் சொன்ன.. போட்டேன். 1000 சாரி எழுதச் சொன்ன.. எழுதிட்டேன். ஒரு வாரம் தினமும் நுங்கு சர்பத் வாங்கி தரச் சொன்ன.. ஒரு வாரம் லீவ் போட்டு தினமும் வாங்கி கொடுத்தேன். கோட்ட முடிஞ்சு போச்சு! இன்னும் அதையே சொன்னா எப்பிடி? எனக்கே மேரேஜ் ஆக போகுது… இதில பழசா போன உன் மேரேஜ பத்தி பேசி என்னை திட்டணுமா.. சொல்லுடி ராணி மங்கம்மா?” பிருந்தா செல்லம் கொஞ்ச..
அருணா, “அவ மடிக்குச் சொந்த காரர் வரார் எழுந்து உக்காரு!”
வீட்டில் டேனியல் நுழையவும், “பிருந்தா.. இவங்க தான் என் ஹஸ்பன்ட்.. கல்யாணத்துக்கும் நீ வரல! வெறும் ஃபோட்டோல தானே பார்த்த..” என்று அறிமுகப் படுத்தவும், டேனி முன் நின்ற பிருந்தா யோசனையோடு சிரித்துக்கொண்டே, “நைஸ் மீட்டிங் யூ அண்ணா..” என்று சில நிமிடம் பேசிவிட்டு, “நம்ம இதுக்கு முன்னாடி அறிமுகம் ஆகி இருக்கோமா?” எனவும்
“இல்லையே.. ஏன் கேக்கரீங்க?”
“வாங்க.. போங்க எல்லாம் வேண்டாண்ணா. உங்க ஃபேஸ் ரொம்ப பழக்க பட்ட முகம் மாதிரி இருக்கு.. ஆனா யார மாதிரினு தான் தெரியல.. உங்க கஸின் யாராவது சென்னைவாசி இருக்காங்களா?” யோசனையாய் கேட்கவும்
“இல்ல மா.. எங்க சொந்தம் எல்லாம் சவுத் தான்… நான் அங்க வேலையா வருவேன்… அதுவும் ரொம்ப வருஷம் முன்ன..”
“ஓஹ்ஹ்.. தெரியலண்ணா… உங்களை மாதரி.. எங்கோ பார்த்த ஞாபகம்… ஆனா   நினைவில இல்ல.. பை த வே.. யுவர் ஐஸ் ஆர் வெரி அட்ராக்டிவ்..” என்றவளை இடைபுகுந்த ஜான்ஸி, “நீ ஃபர்ஸ்ட் இல்ல.. அண்ணாவும் இவர பார்த்துட்டு இதே தான் என் கிட்டச் சொன்னான்”
“கார்த்தியா? எப்பிடி இருக்கான் உன் அண்ணன்?” என்றவள் நினைவு வந்தவளாக..
“இரு இரு… நினைவு வந்திடுச்சு… எங்க ஹாஸ்பிட்டலுக்கு ஒரு மலையாளி வருவார். பேசினது இல்ல… ஆனா அவர் அப்படியே உங்களை மாதரி தான் இருந்தார். ரெண்டு பேரும் அண்ணன் தம்பினு சொல்லலாம்.. ஹைட்.. உடல்வாகு… ஃபேஸ்.. கலர்.. ஐஸ்.. எல்லாமே.. ஏன் இந்த தாடி கூட அப்படி தான் இருக்கு. ஆக்சுவலா… நீங்களும் கேரலைட் மாதரி தான் இருக்கீங்க!” என்றாள்.
சிரித்தவன், “தெரியல எங்க சொந்தம் யாரவது கேரளா பக்கம் இருக்காங்களானு! அம்மாட்ட கேட்கறேன். அடுத்த தரம் அவரைப் பார்த்தா.. நான் ஹாய் சொன்னேனு சொல்லுமா..”
அவன் இடத்தை விட்டு நகரவும், அங்கு வந்த அனிதா, “அண்ணா.. அப்பா உனக்காக வாசல்ல வெயிட் பண்றாங்க.. போவியாம். நானும் அம்மாவும் தைக்கக் கொடுத்த ப்ளவுஸ் வாங்கிட்டு வரோம்.. வழியில எங்களையும் டிராப் பண்ணிடுவியாம். நீங்க பத்திரமா இருந்துபீங்களாம். நீங்க சாப்பிடாம போகக் கூடாதாம். ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவோம்னு அம்மா சொன்னாங்க” அண்ணனிடம் ஆரம்பித்து, பின் ஜான்சியிடம் விஷயம் கூறி, அருணா, பிருந்தாவிடம் முடித்தவள், பொதுவாய் ‘டாட்டா’ கூறி வாசலுக்கு ஓடினாள்.
ஜான்சியை பார்த்து சென்றுவருவதாய் தலையசைத்தவன், “ரெண்டு பேரும் கண்டிப்பா நாள மறுநாள் ஃபங்ஷனுக்கு வந்திடனும்” இருவரிடமும் கூறிவிட்டு நகரவும்
“டேனிண்ணா.. ஒரு நிமிஷம்” என்று பத்திரிக்கை ஒன்றை எடுத்து கணவன் மனைவி இருவரையும் ஒன்றாய் நிற்கச் சொல்லிக் கொடுத்தவள், “நான் வீட்டில இருக்க எல்லாரையும் தனித் தனியா கூப்பிடுறேன்.. நீங்க இத ஃபர்ஸ்ட் வாங்கிகோங்க. நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போகரதுக்குள்ள எனக்குக் கல்யாணம்… இங்க தான். கண்டிப்பா வரணும். மலை கோவில்ல! இவளால ஏற முடியாட்டி, கல்யாணம் முடிஞ்சதும் கீழ இருக்க மண்டபத்தில தான் விருந்து.. அங்க வந்திடுங்க.. ஆனா கண்டிப்பா வரனும்”  
டேனி தலை மறைந்தது தான் தாமதம். இருவரும் அவளைப் பிடித்துக் கொண்டனர்.
ஜான்சி, “என்னடி.. இவ்வளவு நேரமா பேசிட்டு இருக்கோம்.. ஒரு வார்த்த சொன்னியா.. சொல்லு எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லு!” 
பிருந்தா, “சொல்றேன்… சொல்றேன்… உங்கட்ட சொல்லாம யார்ட்ட சொல்ல..”
அருணா, “ம்ம்… சொல்லு.. நீ நல்லவளா இருந்திருந்தா நாங்க கேக்கரதுக்கு முன்னமே சொல்லி இருக்கணும். நீயா சொல்லலை! சோ… எங்கையும்… எதையும் சென்சார் பண்ணாம சொல்லு!” வசதியாய் இடம் பார்த்து அமர்ந்துகொண்டே, ஆர்வமாய் கேட்க..
பிருந்தா, ‘ம்ம்கும்… சென்சார் ஒன்னு தான் கேடு! எழுந்து நிக்கவே திராணி இல்லையாம்… இதில ஊரெல்லாம் பொண்டாட்டியாம்..’ பிருந்தா வாய்குள் முணுமுணுக்க…
“என்ன டி சொன்ன? காதல விழரமாதரி சொல்லு!” ஜான்சி சத்தம் போட
‘எதுக்கு என் மானத்தை நானே வாங்கிக்கவா?’ “அது தான் சொல்றேன்னு சொன்னேன்ல என்ன அவசரம்?” என்றவள் சொல்ல ஆரம்பித்தாள்.
முதன் முதலாய் பள்ளியில் அஷோக்கைப் பார்த்தது, அவன் மேல் ஆர்வம் ஏற்பட்டது, காதலாய் மாறியது, அவனிடம் மனதை வெளிப்படுத்தியது, அவன் விலகியது, ஏழு மாதம் முன் ஜீவா வீட்டில் பெண் கேட்டது, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைத்து அவர்களிடம் யோசித்து சொல்லுவதாய் சொன்னது, பின் அடுத்த மாதமே அஷோக்கைப் பார்த்தது.. காய்ந்த விதை மரமாய் மாறியது… எல்லாவற்றையும் கூறி முடித்தாள்.
அருணா, “இருந்தாலும் உனக்கு இது ஆகாது டி!! இவ்வளவு நடந்திருக்கு ஒரு வார்த்தை சொன்னியா? இதில பெஸ்ட் ஃப்ரெண்ஸ்சா நாங்க?”
பிருந்தா, “அவர் போன மாசம் வரைக்குமே ஃப்ரெண்டுனு தானே சொன்னார்.. அதில என்ன இருக்கு சொல்ல?”
“ஒரு மாசத்திலேயே கல்யாணம் வரைக்கும் வந்திடுச்சு? ரொம்ப லவ்ஸ்சோ… சாருக்கு வெயிட் பண்ண முடியலையோ… ரொம்ப க்ளோஸா..” கேட்டுவிட்டு இரு பெண்களும் நமுட்டு சிரிப்பு சிரிக்க.. இவள் பார்வையில் அனல்.
அருணா, “உன்ன பார்த்துட்டு ஒருத்தரால அமைதியா இருக்க முடியுமா என்ன? ஆமா.. ரொம்ப பத்திகிச்சா?” வாய்விட்டு அவள் சிரிக்க
பிருந்தா, “எரும… தீப்பெட்டிக்கே வழி இல்ல… இதுல பத்திகிச்சாமே… போடி இவளே..”
ஜான்சி, “ஏண்டி… அண்ணா ரொமேன்டிக் டைப் இல்லையா?”
“தெரியாது டி”
பெண்கள் இருவரும் முகம் பார்த்துக் கொள்ள..
பிருந்தா, “அவர் அப்படி எல்லாம் என்னைப் பார்த்தது கூட இல்ல. இதுல எங்க இருந்து பத்திக்க?”
“நிஜமாவா?” ஆச்சரியத்தில் பெண்கள் கண் விரிக்க,
“ம்ம்.. ஒரு தரம்.. ஓரே ஒரு தரம் நானா கிட்டப் போனேன்… அவரும் மறுக்கல… கிட்ட வரைக்கும் வந்தார்.. பட் ஒன்னும் நடக்கல!”
“ஏனாம்?”
என்னவென்று சொல்ல.. அவன் ‘சுதா’ என்று உளறியதையா? நினைத்ததுமே முகம் வாடி விட்டது. இது வரை இருந்த மனநிலையும் மாற ஆரம்பித்தது.
அருணாவிற்கு என்ன தோன்றியதோ, “அவர் உன்ன லவ் பண்றார் தானே?”
“ம்ம்ம்..” என்றாள் சொரத்தையே இல்லாமல். 
ஜான்சி, “சொல்லு சொல்லு எங்க.. எப்படி ப்ரபோஸ் பண்ணினார்?” ஜான்சிக்கு ஒரே ஆர்வம்… அவளும் அருணாவும் விரும்பியவனோடு வாழ்க்கை பட.. இன்று அதே நிலையில் பிருந்தா!
பிருந்தா, “ப்ரபோசா?” அவள் விழிக்க
அருணாவிற்குள் ஏதோ படபடப்பு, “என்ன டி.. இது லவ் மேரேஜ் தானே? ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பரீங்க தானே? அவர் உன்ன காதலிக்கிறேன்னு சொல்லித் தானே கல்யாணத்துக்கு கேட்டிருப்பார். எது கேட்டாலும் இப்படி முழிச்சு என் வயத்தில் நெருப்பை அள்ளி போடுரா? என்ன நடக்குது? உனக்கு அவர் பிடித்தம் தானே?”
அவளின் ஆயிரம் ‘தானே’கள் இவளைச் சங்கடப் படுத்த.. பாவமாய் பார்த்தவள், “பச்.. நீ ஏன் அரு டென்ஷன் ஆர? எல்லாம் சரியா தான் போகுது!” நீண்ட பெருமூச்சு!
அருணா, “இல்ல… நீ எதையோ மறைக்கர.. மென்னு மென்னு பேசர! ராணிய பாரு… டேனி அண்ணா பத்தி ரெண்டு நிமிஷம் பேசு… அவ முகத்தை பாரு.. நமக்கே ஆசையாகிடும். நீ? ம்ம்ஹூம்… ஏதோ சரி இல்ல.. நீ ஒழுங்கா சொல்லு! ராணி கேட்டா இல்ல… சொல்லு? அவர் உன்ன காதலிக்கரதா எப்படிச் சொன்னார்? எங்க எப்படி ப்ரப்போஸ் பண்ணினார்?”
ஏதோ யோசனை செய்தவள், “நான் எதுக்கு உன் கிட்ட மறைக்கணும்? லூசா நீ? அவர் லவ் யூ-னு எல்லாம் சொல்லலை. ஏன்னா அவர் லவ்வர் டைப் இல்லை… ஹஸ்பண்ட் டைப்! நான் அவர விரும்பரதா சொன்ன பிறகும் ஃப்ரெண்டுனு சொன்னவர் ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். எப்பவும் போல இல்லாம அன்னைக்கு என்னையே பார்த்து ஏதோ யோசனையாவே இருந்தார். நான் தான் ‘லவ் பண்றீங்க தானே’-னு கேட்டேன். அவர் வீட்டில இருந்து அம்மாவ பேச சொன்றேனு சொன்னார். அப்பரம் அப்பா கல்யாணத்துக்கு அவசரப் படவும்.. அவங்க வீட்டில சரி சொன்ன அடுத்த நாளே நிச்சயம் ஆகிடுச்சு!”
“ஓஹ்!” அறையில் நிசப்தம்.
மூவரும் அவரவர் சிந்தையில்! ‘காதல் வயப்பட்டு.. திருமணத்திற்கு காத்திருப்பவள் முகத்தில் ஏன் பூரிப்பு இல்லை? ஏன் அவன் காதல் சொல்லவில்லை? சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தான்… ஆனால் உணர்த்தியிருப்பான் தானே? இவள் அதை உணரவில்லையா? எதற்கு இவன் இந்த திருமணத்திற்கு தீடீர் என  சம்மதித்தான்?’ இது அருணாவின் மனதில்!
அருணாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. “ஆறு மாசம் முன்ன அவர எங்க பார்த்த?”
பிருந்தா, “ஹாஸ்பிட்டல்ல!”
அவளே மீண்டும், “யாரையாவது கூட்டிட்டு வந்தாரா?”
பிருந்தா, “இல்ல.. அவருக்கு ஆக்ஸ்சிடென்ட் ஆகிடுச்சு!”
ஜான்சி, “அச்சச்சோ… ஒன்னும் பெருசா ஆகலியே?”
பிருந்தா, “இல்ல.. பெருசா ஒன்னும் இல்ல.. கொஞ்சம் பழைய விஷயங்கள மறந்திட்டார்”
ஜான்சி, “என்ன டி.. அசால்டா சொல்ற?”
அருணா, “மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதரி .. நினைவு வந்ததும் உன்ன மறந்திடுவாரா?”
முறைத்தவள், “இது ஒன்னும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. அந்த நினைவு வந்தாலும் வராட்டாலும் அவருக்கு ஒன்னும் இல்ல! நடுவுல கொஞ்சம் மாசமோ வருஷமோ… நடந்த விஷயம் அவர் நினைவில இல்லை அவ்வளவு தான்!”
ஜான்சி, “அப்போ அவருக்கு இன்னும் பழசு ஞாபகம் வரல?”
பிருந்தா, “இல்ல”
ஜான்சி, “ஓ.. ரொம்ப அவசரமா கல்யாணம் பண்ற மாதிரி இல்ல.. அவருக்குக் கொஞ்சம் நினைவு திரும்பட்டுமே..”
பிருந்தா, “அது திரும்புமானு தெரியாது ராணி. திரும்பலாம்.. நினைவு திரும்பாமலே போகலாம். அதுக்காக காத்திருக்கரதில அர்த்தமே இல்ல! எனக்கு ஜாதக பிரச்சினை இருக்கு தெரியுமில்ல. இந்த வருஷம் கல்யாணத்தை முடிக்கணும்.. ஆனா எனக்கு காலேஜ் போகரதுக்குள்ள முடிக்கணும். இல்லேனா நான் படிப்ப மறந்திடனும்..
இப்போ மேரேஜ் பண்ணாட்டா அடுத்த ஏழு வருஷம் பண்ணக்கூடாதாம்.. புருஷன் உயிருக்கு ஆபத்தாம். அப்பா ரொம்ப நம்பரார். அது தான் அவசரம். காத்திட்டு இருக்க அப்பா விட மாட்டார். மத்தபடி அவருக்கும் அவங்க வீட்டில் பார்த்திட்டு தான் இருந்தாங்க ஆக்ஸிடென்ட் முன்ன வரைக்கும்.”
ஜான்சி, “ஓஹ்.. அப்போ சரி.! வாழ்த்துக்கள்” அவளை அமர்ந்த வாக்கில் கட்டிக்கொள்ள..
அருணா, “ஜீவா என்ன ஆனார்?”
“நான் பேசல.. அப்பா தான் அவங்க வீட்டில பேசினாங்க!”
ஜான்சி, “ஒரு வார்த்தைகாகவாது அவர கூப்பிட்டுப் பேசு! ஒரு மரியாதைக்கு! அவர் உன்ன விரும்பி இருப்பார் தானே… பாவம்! திரும்பவும் நீ அவரைப் பார்க்க நேர்ந்தா.. அவர் முகம் பாக்கணும்! நினைவில வச்சுக்கோ!”
“ம்ம்ம்… ஃபோன் போடுறேன்! அவர் லவ் எல்லாம் பண்ணியிருக்க வாய்ப்பில்ல. விரும்பி எல்லாம் இருக்க மாட்டார். பத்திரிக்கை வைக்கறேன்… ஒக்கேவா?”
ஜான்சி, “ம்ம்ம்.. ஆறு மாசம் காத்திருந்து… நிச்சயம் வரைக்கும் வந்திருக்கு.. அவர் உன்ன விரும்பி இருக்க மாட்டார்னு சொல்ற? நீ ஏன் டி.. இப்படி மாறீட்ட? நீ அவர வேண்டாம் சொன்னது தப்பில்ல. ஆனா முன்னமே சொல்லி இருக்கணும்! அவர் மனசு வலிச்சிருக்கும்னுகூட உனக்கு தோணாத அளவுக்கு நீ சுயநலவாதியாகிட்டியா?”
அவள் முறைக்க… “சரி விடு.. எத சொன்னாலும் முறைக்கர!” என்று நிறுத்திகொண்டனர்.
தொடர்ந்தது ஏதேதோ பேச்சுக்கள்..

Advertisement