Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 44
“எதுக்கு டார்லிங் அது.. என்னை உடுத்திக்கோ..” என மீண்டும் கண்ணன் அவன் மனைவியைத் தூக்கி படுக்கைக்குச் சென்று, அவன் லீலைகளை ஆரம்பிக்க.. இருவரும் வேறு உலகில் மயக்கத்திலேயே சஞ்சரித்து, பின் இருவருமாய் சேர்ந்து குளித்து, குளியலறையை விட்டு வெளியில் வர மணி ஐந்தரையைத் தொட்டிருந்தது.
நேரத்தைப் பார்த்தவள், “எல்லாம் உங்களால.. வந்து என் முடியக் காயப் போட்டுத் தாங்க! ஆறரைக்கு ஃப்ளைட் லாண்டிங்! போக வேண்டாமா?”
“அம்மா வெளில வர செவென்.. செவென் தர்ட்டி ஆகிடும்.. டைம் இருக்கு.. 
லேட் ஆகுதுனு நினைச்சா… நான் வேணும்னா என் லட்டு குட்டிக்குப் புடவை கட்டி விடவா” கொஞ்சலாய் அவளை உரச..
“ஐயா சாமி.. ஆள விடுங்க… நான் ஜீன்ஸ் போட்டுகுறேன்” என்று அவள் தலை தெரிக்க ஓட… ‘வட போச்சே..’ என்று ஏக்கமாய் பார்த்து நின்றான்.
இருவருமாய் கிளம்பிச் செல்லும்முன், “குங்குமம்.. வச்சு விடுங்க” என்று வந்து நின்றவள் வகிட்டிலும், தாலியிலும் வைத்து விட்டவன், “உலகத்திலேயே க்ராஸ் போட்ட தாலியில குங்குமம் வச்சுவிடச் சொன்ன முதல் ஆள் நீதான் டி லட்டு!
சுதா குட்டி.. மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணின பிறகு தாலி வேணும்னா மாத்திடலாமா?”
“ஒன்னும் வேண்டாம். ஆயுசுக்கும் இது தான்!”
வாசல் வரை சென்றவனுக்கு உள்ளுக்குள் ஒருவித உணர்வு எழ, “சுதா தண்ணி எடுத்துட்டு வாயேன்!” என்று அமர்ந்து விட்டான்.
தண்ணீர் கொடுத்தவள், “என்னங்க.. ஒரு மாதிரி இருக்கீங்க?” அவள் முகத்தில் கலவரம் கூடவும்
“இல்ல லட்டு.. அம்மாட்ட சொல்ல போரத நினைச்சு கொஞ்சம் டென்ஷனா இருக்குன்னு நினைக்கிறேன். வா போலாம்”
மீதி தண்ணீரைத் தொண்டையில் இறக்கிவிட்டு கண்ணாடி குவளையை அடுக்களையில் வைத்து வந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான். ‘விட்டுப் போய்விடாதே’ என்பது போல. அவன் முகம் பார்த்தபின் அவளுக்கும் அது தேவையாகவே இருந்தது.     
“ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. வாங்கப் போகலாம். லேட் ஆக போகுது!” என்றவளிடம்,
“யாரு என்ன சொன்னாலும்.. எது நடந்தாலும் என் லைஃப் உன் கூட மட்டும் தான்.. உனக்கும் நான் மட்டும் தான்.. அம்மா சொன்னாங்க.. பாட்டி சொன்னாங்கனு என்னை விட்டுடாத லட்டு.. நீ இல்லேனா நான் இல்லாம போய்டுவேன்..” என்றான்.
“அச்சோ…. என்ன பேச்சிது.. ஆயுசுக்கும் சேர்ந்தே இருப்போம்.. இத நீங்க சொல்லணுமா? வா..ங்க!” இழுக்காத குறையாய் அவன் கை பற்றிக் கூப்பிட
வெளியே செல்லும் முன், இதழ் வலிக்க.. இதழ் சிவக்க.. முத்தம் கொடுத்தே விட்டான்.
“எங்கேயும் போய்ட மாட்டேன்.. வந்து வச்சுக்கலாம்… நாலு நாள வேஸ்ட் பண்ணும்போது தெரியல.. இப்போ வந்து பாஞ்சுகிட்டு… வாங்க..” ஒரு வழியாய் அவனை தட்டி தேற்றி பேசி இழுத்து சென்றாள் வீட்டின் வெளியில்.
“அம்மா இன்னும் அம்மா தானா? இல்ல அத்தையா? மாமியார் மருமக சண்டைக்குத் தயாரா?” சுதாவின் கரம் பிடித்து நடந்துக் கொண்டே அஷோக் கேட்க
“அம்மா தான்.. சண்டை எல்லாம் உங்கக் கூட மட்டும் தான் பாஸ்..”
பேசிக்கொண்டே கார் கராஜினுள் சென்றவள், “என்னங்க இது? உங்க ரெண்டு பேருக்கு எதுக்கு இவ்வளவு கார்? இவ்வளவு பைக்? மினி ஷோரூம் மாதிரி இருக்கு!”
“இது ஷோரூமா? என் ஃப்ரண்டு ஒருத்தன் கிட்ட பதினேழு இம்போர்ட்டட் கார், எட்டு இம்போர்ட்டட் பைக் இருக்கு! இன்னும் ஒருத்தன் கிட்ட லோக்கல்.. ஃபாரின்னு.. இருபத்தி எட்டு கார் இருக்கு. அது தான் மினி ஷோரூம்.. ஆனா அம்மா அலோ பண்ணமாட்டங்க அவ்வளவு வாங்க! ஸோ இது வெறும் ஷெட்!”
“இது ஷெட்டா? நாங்க எல்லாம் ஆளுக்கு ஒன்னு தான் வச்சிருப்போம்.. அப்போ அது என்ன? அட் அ டைம் ஒரு கார் தான் ஓட்டுவீங்க.. மீதி சும்மா நிக்கர காருக்கு பதிலா மத்தவங்களுக்கு யூசார மாதிரி ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாமில்ல!”
“உன் ஐடியா சகிக்கல வா.. இருக்க ட்ரஸ்ட் வரைக்குமே போதும்..” என்று பழைய மாடல் பென்சிடம் போக, “இருக்க அத்தன அழகான புது கார் எல்லாத்தையும் விட்டுட்டு இந்த மெர்சடீஸ்ல எதுக்கு போரோம்?”
“என்னோட ஃபோட்டீந்த் பர்த்டேக்கு தாத்தாட்ட கேட்டு அம்மாக்காக நான் சர்ப்ரைஸ்சா வாங்கினது. சோ அம்மா எப்பவும் இத தான் விரும்புவாங்க!
நம்ம மேரேஜ்ஜ செலிபரேட் பண்ண என்ன கார் வாங்கணும்? ம்ம்.. மசராட்டி! உனக்கும் எனக்கும் மட்டும்.. அத வேர யாருக்கும் ஓட்ட தர மாட்டேன்”
“ம்ம்கும்.. இருக்கது மூனு பேரு.. இதுல முந்நூறு கார் வரிசையா நிக்குது… அம்மாக்கு மகன் வாங்கி கொடுத்த ஒரு கார் தான் பிடிக்குமாம்! இந்த லட்சணத்தில வாங்கர கார யாருக்கும் கொடுக்க மாட்டாராம்.. யாருமே இல்லாத க்ரௌண்ட்ல யாருக்குத் தம்பி பால் போடுர?” அவள் சிரிக்க
“ரொம்ப.. பேசர நீ..” அவன் முகத்திலும் புன்னகையே..
அவளுக்குக் கதவைத் திறந்து விட்டு அவள் அமரவுமே மீண்டும் அதே உணர்வு… குனிந்து அவளைப் பார்த்தவன், ஒரு புன்னகை பூத்துவிட்டு.. கதவைச் சாற்றி ஓட்டுநர் இருக்கை நோக்கிச் சென்றான்.
அவன் சிரித்தாலும் அவளுக்கா அவன் முகமாற்றம் தெரியாது?
“என்ன ஆச்சு?”
“ஒன்னும் இல்ல.. திரும்பவும் ஒரு மாதிரி மனசு.. சொல்ல தெரியல சுதா.. ஏதோ வெயிட்டா.. எஃசாம் ஃபியர் மாதிரி?” நீண்ட மூச்சை விட்டு, அவள் உள்ளங்கைக்குள் முகம் புதைத்தவன், ‘எதுக்கு இவ்வளவு டெஷ்ன்.. அம்மா கண்டிப்பா பிரச்சினை பண்ண மாட்டாங்கனு தெரியும்.. அப்புறம் ஏன்’ என்ற கலவரம்.
“நான் தப்பு எதுவும் பண்ணிட்டேனு நினைக்கிறியா லட்டு?”
“என்ன தப்பு?” முழித்தவளிடம்,
சற்று தயங்கியவன், “நம்ம சொந்த பந்தம் யாருமே இல்லாம தாலி கட்டி..” என்று அவன் இழுக்க..
அவள் முறைத்த முறையில் அவன் ஏன் அதற்கு மேல் பேச போகிறான்.
முதல் முதலாய் வாய் திறந்து அவள் கண் பார்த்து, “லவ் யூ சுதா.. லவ் யூ சோ மச்  ஃப்ரம் தி பாட்டம் ஆஃப் மை ஹார்ட்!” என அவள் உள்ளங்கையில் இதழ் பதித்து அதை அப்படியே இறக்கி அவன் இயத்தில் வைத்து அழுத்திக் கொண்டான். அது தாரு மாராய் துடித்துக் கொண்டிருந்தது.
சுதாவும் உணர்ச்சிவசப் பட.. “என்னங்க.. இங்க இருக்க ஏர்போர்ட் போய்ட்டு வர போறோம்.. எதுக்கு இவ்வளவு எமோஷன்? உங்க விருப்பத்துக்குத் தடையே சொல்லாத அம்மா.. அவங்கட்ட சொன்னா கண்டிப்பா புரிஞ்சுக்குவாங்க.. அம்மாக்கு தான் என்னை ரொம்ப பிடிக்குமே.. நீங்க வேணும்னா பாருங்க சந்தோஷம் தான் படுவாங்க! ஏன் டென்ஷன்?”
கண் மூடி மூச்சை இழுத்து விட அது எங்கோ மாட்டிக்கொண்ட வலி.. முற்றிலும் வேளி வரவில்லை. “நீ வீட்டில இருக்கியா? நான் போய்ட்டு வரேன்..”
அவளுக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. பாவமாய் அவனைப் பார்த்துவைக்க,
“இங்க வா” அவன் இருந்த சீட்டை பின்னுக்குத் தள்ளி, அவளை மடியில் இருத்தி கொண்டான்.
பேச வார்த்தைகள் வரவில்லை. தொண்டையில் ஏதோ அடைத்துக்கொண்டதோ.. வகையறுக்க முடியாத ஒரு வலி இதயத்தில்.
அவள் தலையைக் கோதிக் கொண்டிருந்தவன் சிந்தனை அங்கில்லை. சிறிது நேரம் அமைதி காத்தவள், தலை திருப்பி அவன் விழிகளின் கலந்தாள். பெருவிரலால் அவன் புருவம் தடவ, கண்களை மூடிக்கொண்டான்.
அவனுள் ஏதோ இனம் தெரியாத தவிப்பு. அவளால் நன்கு உணரமுடிந்தது. ஆனால் அதை போக்குவது எப்படி?
அவன் தவிப்பைக் குறைக்க விழைந்தவள் மென்மையான முத்தம் இரண்டை கண்ணிமையில் பதித்து முகம் தூக்க, கண் திறந்தவன், அவளை தன்னோடு இழுத்து அவள் கண்கள் மூடச் செய்தான்.
அந்த நீளமான முத்தம் மனதின் அதிர்வலைகளை அடக்கியதோ? ‘எது நடந்தாலும் உன்னைப் பிரிவதில்லை’ என்று ஓலமிட்டதோ? தெரியவில்லை. ஆனால் ஏதோ மாயம் செய்திருக்க வேண்டும். அதனால் தானோ அவள் முகம் கண்டு புன்னகைத்தான்?
கன்னத்தில் மென்மையாய் கடித்து, “போலாமா?” என்று அவன் முகம் பார்க்க, அது சற்று தெளிந்திருந்தது.
கன்னத்தின் ஈரம் உள்ளத்தின் உருத்தலை மறக்கச் செய்திருக்க, புன்னகை முகமாய் காரை கிளப்பினான்.
அவர்கள் கார் பிராதான சாலையை அடையவும், பைக் ஒன்று அவன் பின்னே சென்றது. சிக்னலில் சிகப்பு நிறம் வரவும் கார் நிற்க, பைக் ஓட்டி ஜன்னல் பின் இருந்த அஷோக்கைப் பார்த்தான். சுதாவைக் கண்டு கொண்டானில்லை. கைப்பேசியை உயிர்ப்பித்தவன் யாருக்கோ தகவல் சிலதை அனுப்பினான். பச்சை விளக்கு வரவும், பைக்  வேறு திசை நோக்கிப் பயணப்பட்டது.
மீண்டுமாய் அவளுக்கே அவளுக்கென்று ஒரு குடும்பம். உயிராய் போற்றும் கணவன், தாயைப் போல அன்பு செலுத்தும் மாமியார். ‘சுசி அம்மாவிடம் கூறியதும் கார்த்தி தடியனிடம் கூறிவிட வேண்டும்.’ இன்னும் அவளின் ‘அவர்’ யார் என்று கார்த்திக்குத் தெரியாது. எ.கெ-வை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.. ‘உன் ஹீரோ தான் என் கணவன் என்று சொன்னதும் கண்டிப்பா ஒரு ஆட்டம் ஆடிவிடுவான்.. ஏன் முன்பே சொல்லவில்லை என்று..  பின் அத்தை மாமாவிடம் நேரில் போய் சொல்லவேண்டும்’ என்று மனதோடு சொல்லிக் கொண்டாள்.
அவளுக்குப் பிடித்த பாடல்களை ஒலிக்க விட்டான்.
இருவரும் நிம்மதியாய் உணர்ந்தனர். அவள் முத்தம் சகலத்தையும் மறக்கச் செய்திருந்தது. அழகான காலை.. அழகான பயணம், அழகான கணவன் மனைவி, எல்லாம் அழகாய் தோன்றியது இருவருக்கும்.
“இது போதும் எனக்கு!” என்ற நிறைவோ.. கார் கேட்டை விட்டு கடந்த பத்தாவது நிமிடம் நிம்மதியான நித்திரையைத் தழுவ ஆரம்பித்திருந்தாள்.
“ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லுத் தென்றலை
வரச்சொல்லு தென்றலை
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்? மறுபடி ஏன் வந்தாய்?”
காரில் மனதை வருடும் படி இதமாய் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
சாலை ஆளரவமில்லாமல் இருக்கவே கார் வேகம் எடுத்தது. சுதா தலை ஆடி ஆடி சரிந்து விழ,
“சுதா எழுந்திரு!… லட்டு….” காரை ஓட்டிக்கொண்டே அருகில் அவன் புறமாய் திரும்பி தன் வலது கையை மடித்து தலைக்குக் கொடுத்து, கால்களை சீட்டுக்குள் மடக்கி உறங்கி கொண்டிருந்தவளை  எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான்.
இடியே அவள் அருகில் விழுந்தாலும் கவலை இல்லாமல் உறங்கும் சுதாவிற்கு இவன் சத்தம் எம்மாத்திரம்?
“அடியே கும்பகர்ணீ…. எழுந்திரு”, ரோடில் கவனம் செலுத்திக்கொண்டே தன்னருகில் தூங்கி விழுந்து கொண்டிருந்தவளை எழுப்ப,
“டே…ய் தூங்க விடு டா…” என்று சிணுங்கிக்கொண்டே அவள் நெளிய,
அதிக செல்லம் கொஞ்சும் வேளை மட்டுமே இந்த ‘டேய்’
“என்னது? டேயா?”
“பின்ன என்ன தூங்க விட மாட்டீங்களா? தூ..க்கமா.. வருது!” கண்களை மிகவும் சிரமப் பட்டுத் திறந்து அவனைப் பாவமாய் நோக்கினாள்.
“தூக்கம் வருதா?”
“ப்ச்.. இத.. கேக்க தான் இப்போ என்னை எழுப்பினீங்களா? நிம்மதியா தூங்க விடவே மாட்டீங்களா? என்று அவனை முறைக்க
நமுட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு “அப்பிடியா? ஏனாம்? நான் என்ன பண்ணினேன் உன்ன?””
முகம் சிவக்க, “பேச்ச பாரு.. நேரம் காலமில்லாம..”
“சரி.. ரொம்ப தூங்கி தூங்கி விழர, மொதல கால சீட்ல இருந்து கிழ போடு… ஒழுங்கா உக்காந்தப்புறம் அந்த சீட் பெல்ட போடு! போர வேகத்துக்கு சடென் ப்ரேக் அடிச்சா.. கண்டிப்பா உனக்கு அடி படும்!”
அவன் வாய் முகூர்த்தமோ இல்லை விதியின் சதியோ.. அடுத்து நடந்தது ரசிக்கும்படியாக இல்லை.
“ம்ம்ம்” அலுப்போடு, நேரே அமர்ந்து, அவள் சீட் பெல்டை போட்டுவிட்டு மீண்டும் அவன் தோள் சாய்ந்து, விட்ட தூக்கத்தை மீண்டும் பிடிக்க முயலவும் கடியானவன் 
“எப்படி லட்டு உன்னால மட்டும் முடியுது?” எனக் கேட்க
ஒன்றும் புரியாத அப்பாவியாய் அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “என்னால என்ன முடியுது?”
“இப்படி டென்ஷனே இல்லாம தூங்க?”
“என்ன டென்ஷன்? எதுக்கு?” பாதி தூக்கத்தில் விழித்த குழந்தை போல முழித்தாள்.    
“கொடுத்து வச்சவ! என்ன டென்ஷன்னு கேக்கரா!! சரி அத விடு.. உன் அத்த மாமாட்ட அங்க வரமுடியாத பத்தி சொல்லிட்டியா?”
“ம்ம்.. ரெண்டு நான் முன்னாடியே சொல்லிட்டேன்.. தீபக்கோட பண பிரச்சினையும் சொன்னேன் மாமாட்ட… லாயர் வச்சு என்னனு பாக்கறேன்னு சொல்லியிருக்காங்க!”
“ம்ம்.. அம்மாட்ட சொல்லணும்னு யோசிச்சாலே வயத்த கலக்குது”
“ம்ம்கும்… இப்போ நடுங்குங்க!! இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்? எப்போவோ சொன்னேன் அம்மாட்ட நம்ம விஷயத்த சொல்லிடலாம்னு.. பேச்ச கேட்டா தானே..”
“சொல்லுவ நீ… ஏன் சொல்ல மாட்ட..” அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு ரோட்டின் மேல் கண்ணை மீண்டும் பதிக்க,
“என்னவோ பெரிய வீரன் மாதரி டயலாக் எல்லாம் விட்டீங்க.. வெறும் பேச்சு மட்டும் தானாக்கும்?”
“வண்டிய ஓரம் கட்டவா?” சாலையிலிருந்து கண்ணை ஒரு வினாடி அவள் பக்கம் திருப்ப..
“எதுக்கு?” என அவள் புருவம் சுருக்க,
“பேச்சு மாட்டும் இல்ல.. ஆக்ஷன் ஹீரோனு காட்ட” என்று குறும்பாய் கண்சிமிட்டி அவன் சிரிக்க…
முகத்தில் ஏற்பட்ட நாணத்தோடு முகம் மலர, இரு கைகளையும் அவள் தலைக்கு மேல் தூக்கி அவனுக்கு ஒரு கும்பிடு போட்டு சிரித்துக் கொண்டே, “பெரிய கும்பிடு.. உங்க வம்புக்கே நான் வரல சாமி… ரோட பார்த்து வண்டிய ஓட்டுங்க! உங்க வீர தீர செயல் எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்” சொல்ல..
அவனும் புன்னகைத்தவாறே வாகனத்தை செலுத்துவதில் கவனம் செலுத்த, காரில் ஒலித்த இசை அவர்கள் காதில் நுழைந்தாலும் இருவர் மனதையும் எட்டவில்லை.
ரோட்டை பார்த்துக்கொண்டிருந்தவள் உதடு தானாய் மலர, அவள் உணர்வை அறிந்தவனாய் சாலையிலிருந்து கண் எடுக்காமல், “என்ன லட்டு.. ஃப்லாஷ் பேக்கா?”
“ம்ம்.. இங்க வந்து என்ன ஆறு மாசம் இருக்குமா.. எவ்வளவு மாற்றம் என்னோட வாழ்கையில! என்னால நம்பவே முடியல. சென்னை வரதுக்கு முன்னாடி எவ்வளவு யோசிச்சேன் தெரியுமா? 
நான் பாட்டிய பத்தி கேள்வி மட்டும் தான் பட்டிருந்தேன்.. முகம் கூட தெரியாது. என்ன ஏத்துப்பாங்களா.. அப்பிடியே போயிடுனு சொல்லுவாங்களானு தெரியாத சூழ்நிலை. நல்ல வேளையா பாட்டி என்னை ஏத்துகிட்டாங்க. இல்லேனா உங்கள என்னால பார்த்திருக்க முடிஞ்சிருக்காது. 
எனக்குன்னு ஒரு வாழ்க்கை பத்தி நான் ரொம்ப யொசிச்சது எல்லாம் இல்ல. ஆனா காலேஜ் படிக்கும் போது ஒரு ஆச இருந்துது… இந்த ‘ஃபேரி டேல்ஸ்ல’ வர மாதிரி ஒரு பிரான்ஸ் சார்மிங் வந்து என்னை அப்பிடியே தூக்கிட்டு போகனும்னு”
“வந்தானா?”
புன்னகைத்தவாறே, “இம்ம்.. வந்தார்.. ரொம்ப ஹன்சமான பிரான்ஸ்! பார்க்காமலே அவர் கைல நான் விழ.. அவர் என்னை தரைல விழ விட்டார்.. அப்போ ஃப்லாட் ஆனது தான்.. ” 
சத்தமாய் சிரித்தவன், “ஓய்.. அது என் மேல தப்பில்ல.. நீ தான் கீழ விடுனு சத்தம் போட்ட..”
“ஓ.. போடுனா என்னை கீழ போடுவீங்களா?”
“அது அப்போ டா.. இப்போவும் கீழ போடுவேன்.. மேல நான்..” அவன் முகம் மலர..
“சும்ம இருங்க.. எப்போ பார் என்ன பேச்சோ இது..” 
“உன்ட்ட பேசம இதெல்லாம் யார் கிட்ட பேசரதாம்..” அவள் முகம் சிவக்க..
செல்ல சீண்டல்களும் சிணுங்கலுமாய் இன்பமான பயணம்.

Advertisement