Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 40
அந்த மலைப் பாதையில் கார் மெதுவாய் செல்ல அதற்குத் தகுந்தார்போல் கண்ணனின் மனமும் நத்தையாய் ஒரே இடத்தில் நின்றது.
‘அம்மாவை மதிக்காதது போல் தோன்றி விடுமோ? அம்மா கோபம் கொள்ள மாட்டார்.. ஆனால் வருத்தப்பட்டால்? ஏன் என்னை மறந்தாய் என்று கேட்டுவிட்டால் என்ன செய்வேன்?
எனக்காகவே வாழ்ந்தவரை என் வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் விட்டுவிட்டேன் என வருந்துவாரோ…’ சுசீலாவைச் சுற்றியே எண்ணவோட்டம்..
பிடித்துத் தான் மணந்தான்.. அதில் வருத்தம் எல்லாம் இல்லை. மகிழ்ச்சி மட்டுமே. தவறாகத் தோன்றவில்லை. மணமேடை வரை சென்றவளை எப்படி விட முடியும். மனதளவில் மனைவி தானே.. வெறும் தாலி மட்டும் தான் புதிது..
ஒருத்தியை விரும்பினான். அவளை அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் அம்மா மகன் மட்டும் தான்.. ‘அம்மா.. எனக்குச் சுதாவைப் பிடித்துள்ளது’ – இதை மட்டும் காலா காலத்திற்குக் கூறி இருந்தால் இத்தனை பிரச்சனைகள் வந்திருக்காது!
‘இவ்வளவு தானா? இல்லை இன்னும் தீபக்கிடமிருந்து எதையாவது எதிர்நோக்கி நிற்கவேண்டுமா?’ மனம் முழுவதும் சிந்தனை மட்டும் தான். குணா பற்றிய விஷயம் இன்னும் கண்ணனுக்கு வந்திருக்கவில்லை. அவன் ஒரு தருதலை என்பது வரை தெரியும். அவன் சுதாவை பற்றி தீபக்கிடம் பேசியதெல்லாம் கண்ணன் கவனத்திற்கு வந்திருக்கவில்லை. 
செவ்வாய் காலை வரை தீபக்கின் திட்டம் கண்ணனை வந்தடைந்திருக்கவில்லை. யாரிடமும் பொறுப்பை ஒப்படைக்காமல் தீபக்கே அனைத்தையும் செய்திருக்க விஷயம் வெளியில் வரவில்லை. அவன் அஷோக்கின் கவனத்திற்குப் போகக் கூடாது என்பதில் அதிக கவனம் எடுத்திருந்தான். அவனோடு ஒரு எட்டையப்பன் சுற்றுவது தெரியும் யார் என்று தெரியாமல் போகவே யாரிடமும் திருமண ஏற்பாடு பற்றிச் சொல்லியிருக்கவில்லை.
செவ்வாய் முழுவதும் குணா, தீபக்கோடே சுற்றுவதாய் இருக்கவே வேறு வழியில்லாமல் அன்று தான் குணாவோடு விஷத்தைப் பகிர்ந்திருந்தான். குணாவிற்கு இதில் சுத்தமாய் உடன்பாடில்லை. திருமணத்தை நிறுத்தவேண்டும்.. எப்படி என்று யோசித்தவன் விஷத்தைக் கசியவிட்டான். விஷயம் வெளிவந்த அரை மணி நேரத்திற்கெல்லாம் கண்ணனை எட்டியது. ஆனால் என்று.. எப்பொழுது.. எப்படி.. இப்படியான காரியங்கள் இன்னும் தெரிந்திருக்கவில்லை. அதற்காக அவன் காத்திருக்கவுமில்லை. 
விக்ரமிற்கு அழைத்து கண்ணன் அறிவிக்க.. அவர்கள் ஒரு பக்கமாக தீபக்கைக் கண்காணிக்கக் கடைசி நிமிடம் வரை அவனைச் சந்தேகிக்கும் படி எதுவுமே நடக்கவில்லை. அவன் நடக்கச் சுதா அவன் பின் நடந்தது வரை விக்ரத்திற்குத் தெரியும்.. ஆனால் அதன் பின் சுதாவை அவன் கோவினுள் தூக்கிச் செல்லவே அதன் பின் தான் காவல்துறை கிளம்பியது.
விஷயம் கண்ணனை எட்டியதுமே முரளியிடம் வேலையை விட்டுவிட்டு அடுத்த விமானத்திலிருந்து பயணப்பட்டான். சுசிலா மும்பையிலிருந்து பாரீஸ் பறக்க.. இவன் அங்கிருந்து கொச்சின் நோக்கிப் பயணப்பட்டான். கண்ணன் இந்திய மண்ணை மிதித்த நேரம் சுதா பத்துவின் திருமண மண்டபத்திலிருந்து கிளம்பியிருந்தாள்.
தீபக் இப்படி திருமணம் வரைக்கும் போவான் என்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் உண்டு அவன் வேலையுண்டு என்ற தகவல் கண்ணனை அப்படி நினைக்கச் செய்தது. விஷயம் கேள்விபட்டபின்னும், இப்படி ஒரு திருமண ஏற்பாட்டை அவன்  சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. ஏதோ தூக்கி சென்று கோவில் வாசலில் நின்று தாலி கட்ட முற்படுவான் என்று தான் எண்ணினான். பணம் எப்படி எல்லாம் மனிதனை ஆட்டி படைக்கிறது!
சரியான நேரத்தில் அவன் வந்து சேராத பட்சத்தில் சுதாவின் தோழர்கள் மற்றும் காவல் துரை மூலம் அவளைக் காக்க எல்லா ஏற்பாடும் செய்திருந்தான்.
புதிதாய் திருமணம் நடந்ததிற்கான அறிகுறி எதுவும் இருவரிடமும் தெரியவில்லை. இருவர் முகத்திலும் யோசனையின் ரேகை.
கார் மலை பாதையில் செல்லவுமே சுதா கண்டுகொண்டாள் அவர்கள் வீடு செல்லவில்லை என. கார் மூனாரை நோக்கி விரைந்தது.
தோழர்கள் இருந்த வரை பேச்சும் சிரிப்புமாய் சென்றது. அருகிலிருந்த ஹோட்டல் ஒன்றில் அனைவருக்கும் விருந்தளித்துவிட்டே கிளம்பினர். சில பல கோணத்தில் கண்ணனின் கைப்பேசி திருமண தருணங்களை க்ளிக் செய்துகொண்டது.
தனிமை கிடைத்ததும் மௌனம் இருவரையும் ஆட்கொண்டது. அருகருகே தொடும் தொலைவே.. இருப்பினும் ஒரு திரை!
பின் சீட்டில் இருவரும் ஜன்னல் அருகே அமர்ந்திருந்தனர்.
அஷோக்கின் கைப்பேசியில் திருமண புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தவள், அதிலிருந்து முகம் உயர்த்தாமல், “அம்மாக்கு, அத்தை மாமாக்கு சொல்ல வேண்டாமா?”
“ம்ம்.. நீ அங்க எப்போ போரதா சொல்லி இருந்த?”
“ஃப்ரெண்ஸ்சோட இருந்துட்டு டூ டேஸ்-ல வரதா சொன்னேன்.”
“அப்போ ரெண்டு நாள் கழிச்சு.. ட்ரிப் எக்ஸ்டெண்ட் ஆகிடுச்சுனு சொல்லு. முதல்ல அம்மா வந்ததும் சொல்லிட்டு, நேர்ல அம்மாவோட போய் பார்த்து உன் அத்தை மாமாட்ட சொல்லிடலாம்..”
மீண்டும் மௌனம். மலை மேல் இருந்தது அவர்களுக்கான காட்டேஜ். சென்றடையும் போதே மணி ஏழை தொட்டிருந்தது. ஒரு பெரிய ஹாலும், சமயல் அறையும், டைனிங்க் ஹாலும், ஒரு பெரிய கிங் சைஸ் படுகையோடு கூடிய படுக்கையறையும் இருந்தது.
அஷோக்கின் நான்கு பெட்டியும், சுதாவின் இரு பெட்டியும் வந்து இறங்கியது. உள்ளே நுழைந்ததும் கையிலிருந்த ஒவ்வொன்றையும் இங்கும் அங்குமாய் போட்டாள். அவன் அதை எடுத்து ஒதுங்க வைத்தான்.
“ரொம்ப கசகசனு இருக்கு நான் முதல்ல குளிச்சிடவா?” அஷோக் அவள் முகம் பார்க்க, “ம்ம்” என்று தலையாட்டி வைத்தாள்.
ஜன்னல் திறந்து இருட்டி இருந்த மலைச் சரிவைப் பார்த்து நின்றாள். ஒன்றும் தெரியவில்லை. வெறும் இருட்டு! கண் வெளியே வெறித்தாலும் மனம் யோசனையிலிருந்தது. காலையில் தோழியின் திருமணத்திற்காகக் கிளம்பியது. மணமகள் போல் தன்னை அழகாகவே அலங்கரித்திருந்தாள்.. அது அவள் திருமணத்திற்காக என்று சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.
அருகிலிருந்த ஆள் நீளக் கண்ணாடி முன் நின்றவள் தன்னை பார்த்து கொண்டாள். பார்வை அவள் கழுத்திலிருந்த தாலியில் நிலைக்க அதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அஷோக் வராமல் இருந்திருந்தால்.. நினைக்கவே முடியவில்லை. அதை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு கண்ணை மூடி அவன் அதை அவள் கழுத்தில் அணிவித்த நேரத்தை நினைத்துக் கொண்டாள். உடல் சிலிர்த்தது.
குளியலறை கதவு திறக்கப்படக் கண்திறந்தவள் பார்வை திசை மாறியது. திரும்பிப் பார்க்கவில்லை.. ஆனால் அவனைத் தான் பார்த்து நின்றிருந்தாள். இடுப்பில் ஒரு துவாலை மட்டுமே. பரந்து விரிந்த மார்பிலிருந்து அடி வயிரு வரை பிஸ்கட்ஸ் அடுக்கி வைத்தாற் போன்று இறுகிய தசைகள் எயிட் பேக்காய் தெரிய அதில் ஒழுங்காய் துவட்டப் படாததின் அறிகுறியாய் நீர்த் துளிகள். உள்ளுக்குள் ஏதோ சில்லெனப் பாய்ந்தது. என்றோ ஒரு நாள் அவன் மார்பில் சாய்ந்த நினைவு வந்து படுத்தியது.
அவனும் கண்ணாடி வழியே அவளைத் தான் பார்த்து வந்தான். அவன் அருகில் வர வர உடல் படபடத்தது. கழுத்தில் அவன் கட்டிய தாலி.. நெற்றியிலும் வகிட்டிலும் அவன் வைத்த குங்குமம் அவளை முழு பொலிவாய் காட்ட, பார்க்கப் பார்க்க சொக்கித் தான் போனான். பயணக் களைப்பைக் காட்டிய முகமோ.. கசிந்த கண் மையோ.. நலிந்த  பட்டோ.. வாடி வதங்கித் தொங்கிய மல்லி சரமோ அவள் பொலிவைக் கொஞ்சம் கூட குறைக்கவில்லை. அவன் சுதா, அவன் கண்ணுக்குப் பேரழகியே!
அவன் இதயமும் பந்தயத்திற்குத் தாயாரானதோ? முகத்தில் ஒன்றும் தெரியவில்லை.
அவள் பின் வந்து நின்றவன் அவள் பின்னங்கழுத்தில் இதழ் பதிக்க அவள் உடல் நிமிர்ந்தது. அவ்வளவு தான் அவள் மேலிருந்து உதட்டை பிரித்தவன், அவள் கலைந்த தலையை ஒதிக்கிக்கொண்டே கண்ணாடியில் அவள் முகம் பார்த்து, “ஃபேஸ் பாக்க ரொம்ப டையர்டா இருக்கு.. போய் குளிச்சுட்டு வா. சாப்பிட போலாம்” அன்பாய் கூறினான்.
சிலிர்த்த உடலை கட்டுக்குள் கொண்டுவரவே பாடாய் போனது! எனக்கு மட்டும் தானா? அவனுக்கு ஒன்று தோன்றவில்லையோ.. அவன் முகம் பார்க்க ஒன்றும் கண்டுகொள்ள முடியவில்லை.
‘அவனிடம் ஏதோ மிஸ்ஸிங்!’.
“ம்ம்” என்று குளியறையில் சென்றவள் மனம் அதைத் தான் சொன்னது.
குளித்து முடித்து கதவைத் திறந்து தலை நீட்டி எட்டிப் பார்த்தால் அவன் லேப்டாப்பில் மும்முரமாய் இருந்தான்.
“என்னங்க..” அவளுக்கே கேட்காத பொழுது அவனுக்கு எப்படிக் கேட்கும்?
“என்னங்க!” உறக்கக் கூப்பிட்டாள்.
“என்னாமா?” என்றான் தலையைத் தூக்கி
“டிரெஸ் மாத்தனும்” தயக்கத்துடனே அவன் முகம் பார்க்க, அவன் ஒன்றுமே சொல்லவில்லை.
“ம்ம்” என்று மடிக்கணினியோடு சென்று விட்டான். செல்ல குறும்பு பார்வையோ.. வம்புப் பேச்சோ எதுவும் இல்லை. வேளியில் சென்றவன் கதவைச் சாத்திவிட்டே சென்றான்.
மீண்டும் மனம் சொன்னது, ‘ஏதோ சரி இல்லை’
இருவருமாய் கிளம்பி உணவு அறைக்குச் சென்றனர். அவனுக்கு ஏழு மணிக்குள் உணவு அருந்த வேண்டும், உடலைக் கட்டுக் கோப்பாய் வைத்திருக்க. மணி எட்டைத் தாண்டவும் அங்கிருந்து வேகவைத்த காய் கறிகளையும் ஆவியில் அவித்த கோழியையும் ஆர்டர் செய்தான். சுதா அவனைப் பார்த்து விழிக்க, “நீ உனக்கு பிடிச்சத சாப்பிடு.. மத்த டைம்னா பரவால.. நைட் ஆகிட்டனால ஃப்ரை ஐடெம் வேண்டாம். ஸ்டீம்ட் ஃபூட் சாப்பிடு.. புது இடம்.. வயிறு டெமேஜ் ஆகாம பார்த்துக்கோ”
அவன் உணவைப் பார்த்ததுமே அவளுக்குப் பசி சென்ற திசை தெரியவில்லை. “இத எப்படி சாப்பிடுறீங்க?”
“நைட் நோ கார்ப்… எப்போவாது சாப்பிடுவேன்.. இன்னைக்கு சாப்பிட மூட் இல்ல. வெறும் ப்ரோட்டீன் தான்.. சாப்பிட்டு பாரு உனக்கும் பிடிக்கும்..”
பாதி வயற்றிற்கு சாப்பிட்டான். அவளுக்கும் வாய்க்கு ருசியாகவும் உடலுக்கு நல்லதாகவும் பார்த்துப் பார்த்து சொன்னான்.
லேசான குளிர்.. இதமாய் இருக்க, “ஒரு வாக் போகலாமா?” என்றாள்.
“சரி” என நடக்க ஆரம்பித்தான்.
அவன் நடக்க, அவன் பின்னோடு தொடரவே ஓட்டமும் நடையுமாய் செல்லவேண்டி இருந்தது.
‘பனை மரத்துக்கு என்ன ஆச்சு?’ கேள்வி கேட்டது மனது. ‘நீ கொஞ்சம் கேள்வி கேக்கரத நிறுத்து. ஒரு கேள்விக்கும் எனக்குப் பதில் தெரியலை! தாலி கட்டின ஷாக்குல இருந்து இன்னும் வெளி வரலைப் போல! எல்லாம் சரி ஆகிடும்’ சொல்லிக்கொண்டாள்.
மும்பையில் அவள் அவனை வசை பாடியதெல்லாம் காந்தி கணக்கு போல!! ‘மன்னித்து விடு’ என்று ஒரு வார்த்தை இன்னும் அவள் வாயிலிருந்து வரவில்லை. வசதியாக அவள் குற்றத்தை மட்டும் மறந்திருந்தாள்.
‘இது ஹனி மூனா?’ அடுத்த கேள்வி வருவதற்குள்.. ‘ஊக்கும்.. அது ஒன்னு தான் கேடு.. மனுஷன் மூஞ்சியவே பாக்க மாட்டேங்கரார்.. இதுல ஹனியாது மூனாது’ நொடித்துக்கொண்டாள்.
அவளாய் கேள்வி கேட்டு பதில் சொல்லி தலை நிமிர்த்து பார்க்க.. அங்கு வெறும் இருட்டு மட்டுமே, கண் எட்டிய தூரம் வரை! அவனைக் காணவில்லை. நிலவொளியில், சுற்றி இருக்கும் பாறைகளும் மரங்களும் பேய் பிசாசு போன்ற தோற்றத்தைக் கொடுக்க, சுதாவிற்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது.
அவர்கள் காட்டேஜை விட்டு வெளி வந்திருந்தனர். முன்னால் போகவும் பயம், பின்னால் போகவும் பயம். கணவனோடு இதமான குளிரில் கை பிடித்து, கதை பேசி நடக்க வந்தவள் நிலை குலைந்து நின்றாள்.
அவள் ஒரு பக்கம் பயத்தில் ஒடுங்கி நிற்க, அவன் மனமோ அதே சிந்தனையில். ‘அம்மாட்ட எப்படி சொல்ல.. எப்படி எடுத்துப்பாங்க? நடந்ததை முழுசா சொன்னாப் புரிஞ்சுக்குவாங்க. அம்மக்குச் சுதானா ரொம்ப இஷ்டம் தானே? இவளும் ஒன்னும் பேச மாடேங்கரா? இன்னும் என் மேலை நம்பிக்கை வரலியா? நான் இவ்வளவு சொன்ன பிறகும் புரிஞ்சுகலைனா என்ன பண்றது? கிட்ட போனாலே ஸ்டிஃப் ஆகிடுரா?’
அவளை பார்க்கவென தலை திருப்ப, அவள் தான் இல்லையே..
‘இருட்டில் எங்குத் தேட..பயந்திடுவாளே..’ எண்ணியவன், “சுதா… சுதா..” என்று வந்த திசையில் ஓட ஆரம்பித்தான். இரண்டு ஆள் உயரப் பாறைக்குப் பின் அவள் குரல் கேட்டது.. “என்னங்க..  எங்க இருக்கீங்க? கண்ணன்?”
அவள் எதிரில் வந்தவன் அவள் கலவர முகத்தைப் பார்த்ததும், “சாரி டா” என அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவனிடம் என்ன எதிர்பார்க்க என்று தெரியவில்லை.
“யோசனையில கவனிக்காம போய்ட்டேன்” பிடித்த கரத்தை அதன்பின் அவன் காட்டேஜ் வரும் வரை விடவே இல்லை.
என்ன தான் பழகி இருந்தாலும், அணைப்பு முத்தம் வரை சகஜமாயிருந்தாலும் ஒரே அறையில் அதுவும் ஒரே படுக்கையில் சுதாவிற்குக் கொஞ்சம் சங்கோஜமாய் இருக்க அவன் முகம் பார்த்து அரைத் தூக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
கடந்த இரண்டு நாட்களாக இரவு ஒழுங்காய் தூங்காததின் விளைவு. கண்ணன் என்ன சொல்லுவானோ என்று நல்ல பிள்ளையாய் அமர்ந்திருந்தவள் கண் மூடி மூடி திறந்தது.
பூத்த புன்னகையை அடக்கிக்கொண்டு அவன் அருகில் அமர்ந்து கையை அவளைச் சுற்றிப் போட.. வந்த தூக்கம் எங்குச் சென்றதோ தெரியவில்லை. பட்டென்று விழித்துக் கொண்டாள்.
முழு கண்ணையும் விரித்து அவனைப் பார்க்க.. ‘இப்படி முழிச்சு முழிச்சே மனுஷன உயிரோட சகடிக்கரா..’
முதல் முறை அவள் கண்ணைப் பார்த்தவன் நினைத்தான்.. அவள் கன்னம் பிடித்து அந்த கண்ணைப் பார்க்கவேண்டும் என்று. இன்று அதைச் செய்தான்.
“உன் கண் நிறம் ஃபாரின்லயே ரேர் தெரியுமா? இந்தியால விரல் விட்டு எண்ணலாம் இந்த பழுப்பு சேரிந்த கடல் பச்சை கண்ணுள்ளவங்கள… ஒரு செலிப்ரிட்டிக்கு இருக்கு.. அவங்க உலகழகினா.. நீ? உன் அப்பா சைட் எல்லாருக்கும் இந்த கலர் தானா?”
“இல்ல.. அப்பாக்கும், அத்தைக்கு, தீபக்குக்கு, எனக்கு தான். வேற யாருக்கும் நான் பார்க்கல!”
அவள் இடையைச் சுற்றி கை போட உடல் விறைத்தாள். அவன் அதற்கு மேல் ஒன்றும் செய்யவில்லை. ‘ஏன் அருகில் வந்ததும் உடல் விறைக்கிறாள்?’ அவனின் மண்டையை குடைந்த கேள்வி. ‘வீட்டில் இசைந்தாளே..’
இருவருக்கும் இடையிருந்த மாய திரை விலக மருத்தது. கை வைத்ததோடு சரி.. பின் அவன் போக்கில் ஏதேதோ கேட்டான்.. மெஹந்தி இட்ட கையை பார்த்தான்.. அவன் சென்று வந்த ட்ரிப் பற்றிக் கதை கதையாய் கூறினான்.  இவன் வேலைக்கே ஆக மாட்டான் என தெரிந்ததும் அவள் சாமி ஆட ஆரம்பித்தாள்.
அவளைப் பார்த்தவனுக்கு, ‘கும்பகர்ணீக்கு இன்னைக்குக் கூட தூக்கம் வருது!’ எண்ணிக்கொண்டான்.
“படுக்கலாமா?” என்று அவளைப் பார்க்க… நிமிர்ந்து அமர்ந்தவள், “இல்ல.. தூக்கம் வரலை நீங்க சொல்லுங்க” என்றாள்.
வந்த சிரிப்பை உள்ளே புதைத்துக்கொண்டு, “என் கிட்ட எதுக்கு இப்படி… நீ என்ட்ட எப்பவும் போல நீயாவே இரு சுதா.. அது தான் எனக்கு பிடிச்சிருக்கு.”
“ம்ம்.. தூக்கம் வருது.. ஆனாலும் ஏதோ.. கலையுது. ரெண்டு நாளா ஒரே அரட்டை. ஒழுங்கான தூக்கம் இல்ல.. ரொம்ப டையர்டா இருக்கு.. அதலான தூக்கம் கலைஞ்சு போகுதுனு நினைக்கறேன்”  
“த்தாங் காட்.. நான் கூட.. என் அறுவை தாங்காம தூங்கி விழரியோனு பயந்துட்டேன்”
அவன் கட்டில் ஓரத்தில் அமர்ந்துகொண்டு, “வா.. மடியில படுத்துக்கோ.. தூக்கம் வரும்” என்று படுக்கவைத்து தலை கோத ஆரம்பித்தான்.
கணவன் விரலின் மாயமோ.. இல்லை அவன் மடி தந்த சுகமோ.. இரண்டே நிமிடம் முழு தூக்கத்தில் அவள்.
நிம்மதியான.. உலகம் மறந்த தூக்கம்.
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்..

Advertisement