Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 50_2
வீட்டினுள் நுழைந்தவனிடம், “நீங்க வந்ததும் அம்மா சாப்பாடு கொடுக்க சொன்னாங்க. சாப்பிட்டு ரூமுக்கு போவிங்களாம். அப்போ தான் மாத்திரையை போட்டுட்டு படுக்கச் சரியாய் இருக்கும்னு சொன்னாங்க. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமாங்கையா?” என்று ராமுவின் மனைவி மைதிலி கேட்டுக்கொண்டு வந்து நின்றாள்.
“ம்ம் எடுத்து வைங்க.. நான் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.”
“தம்பி உங்களுக்குத் துணியும், டவலும் எடுத்து கிழ இருக்க கெஸ்ட் ரூம் பாத்ரூம்ல வச்சிருக்கேன்.. மேல உங்க ரூம் வரைக்கும் போக வேண்டாம்“ என ராமு கலக்கமாய் உறைக்க,
ராமுவை பார்த்து அஷோக் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
“என்ன ராமு நீங்க?? கை கால் எல்லாம் உடைஞ்சு நடக்க முடியாதவனா வருவேன்னு நினைச்சு பயந்துடீங்களா?.. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல… ரோம்ப சின்ன அடி தான்.. அதுக்கு போய் இவ்வளவு டென்ஷனா? எடுத்து வைங்க ரெண்டு பெரும் ‘பிரெஷ்’ ஆகிட்டு ரெண்டே நிமிஷத்துல வந்திடுரோம்!”
வேட்டியை மடித்து விட்டிருந்தான். உடல் முழுவதும் பச்சை காயம்.. சிலதே வாட ஆரம்பித்திருந்தது. பல இடங்களில் கிழிந்த சதையும் இரத்த நிறமும் அப்படியே தான் இருந்தது. பிடிவாதம் பிடித்து வீட்டிற்கு வந்திருக்கின்றான்.
அவர்கள் சென்றதும் மைதிலி தயங்கித் தயங்கி ராமிடம், “ஏன் மாமா.. தம்பி உடம்பு பூரா காயமா இருக்கு.. வலிக்கலியா இப்படி சிரிக்கராங்க? பாக்கவே பாவமா இருக்கு! 
அப்புரம்.. நீ சொன்ன மாதரி தம்பி ரூம்ல இருந்த சின்னம்மா துணிய சலவ போட்டு பெட்டியோட ஐய்யா ரூம் பக்கத்து ரூம்ல வச்சத தம்பிட்ட சொல்ல வேண்டாமா?”
“பெரிய வீட்டு விஷயம்.. பார்த்ததை அப்படியே மறந்திடு. அம்மாவோ ஐய்யாவோ கேட்ட மட்டும் வாய திறந்தா போதும்! புரியுதா? யார் கிட்டயும் மூச்சு விட கூடாது.” அவளிடம் ஸ்ரிக்டாக கூறிவிட்டான். 
பிரஷ் ஆகி வந்தவர்கள், சாப்பிட மனமில்லாமல் சாப்பிட்டு விட்டு, மேல் தளத்திலிருந்த அஷோக்கின் அறையை நோக்கிச் சென்றனர்.
“நடந்துடுவியா?”
கேட்ட வெங்கட்டை முறைத்தவன், “இவ்வளவு நேரம் பறந்தா வந்தேன்? கைல தான்டா அடி! கால்ல இல்ல!” கூறி கொண்டே நொண்டி நொண்டி நடந்தான். ஏனோ அனைவரின் பரிதாப பார்வையும் கூடவே.. ‘கொஞ்சம் பார்த்து வண்டி ஓட்டக்கூடாதா?’ என்ற கேள்வியும் எரிச்சலைக் கூட்டியது. 
“கை கால் உடஞ்சாலும் உன் கொழுப்பு மட்டும் அடங்காது.. போடா போ.. வெங்கி இங்க வலிக்குது அங்க வலிக்குதுனு வருவ இல்ல.. அப்போ நான் யார்னு காட்டறேன்..”
“கிழிப்ப… நான் சொன்னதும் ‘ஓ’னு ஒப்பாரி வைப்ப.. பார்த்தேனே ரெண்டு நாள் நீ செஞ்ச அலம்பல… அம்மாக்கு இருக்க தைரியம் கூட இல்லடா உனக்கு..”
“போடா டேய்.. ஓவரா பேசி பேசி உடம்ப ரணமாக்கிக்காத. சொல்ல மறந்துட்டேனே… லீவ் ரெண்டு வாரம் தான்.. அப்புறம் வீட்டுல இருந்து வேல பாக்கணும். நாளைக்கு இங்க இருக்க ஆபீஸ் ஜாயின் பண்ணனும்.. ஒரு தரம் போய் தலையை காட்டிட்டா, வீட்டுல இருந்தே வேல பார்த்துகலாம்! என்ன… சிங்கப்பூர்  ஆபீஸ் டைம்க்கு வொர்க் பண்ண வேண்டி இருக்கும்.”
“உன்ன நம்ம கம்பெனில ஜாயின் பண்ணிகோனு சொன்னா.. நீ தான் கேக்க மாட்டேங்குற! ஐ.டி. டிபார்ட்மெண்ட் முழுசா உன் கன்ரோல் கீழ இருக்கும்..”
“இப்போவும் நல்ல வேலைல தானே இருக்கேன்.. அப்பறம் என்ன டா..”
“என்னமோ போ.. நான் சொல்ரத..”
பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்தவன் முகத்தில் கேள்விக்குறியுடன் நின்றதை கண்டதும், “என்ன அஷோக்? உன் ரூம்குள்ள போக எதுக்கு இதனை யோசனை?”
“யாரு டா என் ரூம்ம இப்படி மாத்தினது? செவத்துல எல்லாம் ம்யுரல்ஸ்(ஓவியம்)?”
‘வெங்கி.. சுதா போட்டோ அனுப்பி இருக்கா பாரேன்.. ரெண்டு பேரும் லவ் தான் பண்ராங்க.. இன்னும் வீட்டுக்குக் கூடச் சொல்லலை, அதுகுள்ள அஷோக், ரூம அவளுக்கு பிடிச்ச மாதரி மாத்திக்க சொல்லிடாராம். வெறும் வெள்ளையா இருந்த ரூம் சுவர் எப்படி சூப்பராகிடுச்சு பாரேன். நானும் உன்  ரூம, நம்ம ரூமா எப்போ மாத்துரது?’ ஜென்னி சொன்னது நினைவுக்கு வர, வருத்தத்தோடு அஷோக்கைப் பார்த்தான்.
அஷோக்கோடு இருக்கவே வெங்கட்டிற்குப் பயமாய் இருந்தது. புதிதாய் பார்வை கிடைத்து வெளியே செல்லும் குழந்தை போல் தெரிந்தான். ஆம்.. குழந்தை தான். தன்னையே தொலைத்துவிட்டு அவனையே தேடும் குழந்தை.
ஒன்றும் புரியவில்லை.. ஒட்டிக்கொண்டு விலகாத விவரிக்கத் தெரியாத உணர்வு.. அவனைச் சுற்றி ஏகப்பட்ட நினைவுகள் இருப்பது போலவும் அது அவனைப் பிடித்து இழுப்பது போலவும்.. அது என்னவென்றே தெரியாமல் புதை குழியில் மாட்டிக் கொண்டது போலவும் ஒரு பயம்.. மூச்சு முட்டல்.. அவன் என்ன தான் செய்வான்.. அவனைச் சுற்றி அவள் மூச்சுக் காற்று சுற்றிச் சுற்றி வருகிறதே. தென்றலில் தவழ்ந்து.. நாசியில் நுழைந்த செண்பகத்தின் மணம் அவனைப் புதிதாய் படுத்தி எடுத்தது.
“நீ இப்படியே கேள்வி மேலக் கேள்விக் கேட்டா நான் கிளம்புறேன். ரூம்ல கொஞ்சம் ச்சேஞ்சஸ் இருந்தா தான் என்ன?
நீயே மாத்தி இருக்கலாம்! இல்ல அம்மா மாத்தியிருக்கலாம்.. இது ஒரு மேட்டரா? இன்னும் கொஞ்ச நேரம் தான்.. அம்மா வந்துடுவாங்க.. அப்புறம் அவங்கட்ட உன் இன்டர்வியூ வச்சுகோ..
இப்போ வந்து மாத்திரியை போட்டுட்டுப் படு..” கூறிக்கொண்டே அஷோக்கின் தோள்பட்டை வலி தெரியாவண்ணம் அவன் தலையணையை மெத்தையில் சாய்த்து வைத்தான்..
அஷோக்கின் நினைவு தெரிந்த நாள் முதல் அவன் யாரையும் அவன் அறையில் அனுமதித்தது இல்லையே.. வெங்கட்டுமே அதிகம் வந்தது இல்லை. அறையின் தோற்றமே மாறிப்போயிருக்க அவன் என்னவென்று நினைப்பான்?
அஷோக்கிற்கு தன்னை சுற்றி நடப்பதில் ஏதோ மர்மம் இருபது போலவே தோன்றியது. அந்த அறையும் கூட ஏதோ நினைவுகளை வெளி கொண்டுவர நினைத்தது போல உணர்ந்தான்.
எவ்வளவு முயன்றும் எதுவும் நினைவில் வர மறுத்தது. உடம்பில் உள்ள  ஐந்தரை லிட்டர் இரத்தமும் ஒன்றாய் அவன் மூளையை நோக்கி சூடாய் பாய்வது போலவும் அங்கே இடமில்லாமல் அவன் தலை வெடித்துச் சிதற முற்படுவது போல அவன் தலை வலிக்க ஆரம்பித்தது.
வலியில் கண் சுருக்கி,  தலை பிடித்து படுத்தவனைப் பார்க்க வெங்கட்டிற்குப் பாவமாய் போனது. அவனுக்குச் சுதா மேல் வெறுப்பாய் வந்தது. ‘என்ன செய்து வைத்திருக்கின்றாய் என் உயிர்த் தோழனை. ஏன் இங்கு வந்தாய்.. இவன் வாழ்கையில் நீ வராமலே இருந்திருக்கலாம்’ என்றே எண்ணத் தோன்றியது வெங்கட்டிற்கு!
அவனுக்கு சுதா-கண்ணன் காதல் புரியவில்லை.. ‘சுதா தான் உன் எல்லாம்’ என்ற ஒற்றை வாக்கியம் இரு உயிரைக் காக்கும் என்று அவனுக்கு நிஜமாகவே தெரியவில்லை. தெரிந்திருந்தால் கண்டிப்பாய் அவன் தோழனை உயிரோடு கொன்று புதைக்கப் பாட்டியோடு கூட்டுச் சேர்ந்திருக்கவே மாட்டான்.
மாத்திரை கொடுத்து, “படுடா.. கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் கீழ இருக்கேன்” சொல்லியவன் சென்றதும், படுத்திருந்த மெத்தையைத் தான் பார்த்தான் அஷோக்.
மெல்ல அந்த மெத்தையை நீவி விட்டான். மனம் அடைத்தது. பதில் எல்லாம் மெத்தைக்குச் சொல்லத் தெரியவில்லை. வாயிருந்தால் கண்டிப்பாய் சொல்லியிருக்கும் இதே மெத்தையில் அவன் அணைப்பிலிருந்த சுதா அவன் மனைவி என்று. அதன் அடியில் இருக்கும் புடவை சுதாவிற்குச் சொந்தமானது என்று. அவள் இல்லாமல் நீ நடைப் பிணமாய் சுற்றப்போவதுக்குச் செத்து போவென்று!
 

Advertisement