Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 50_1
மீண்டும் ஒரு பயணம் வீட்டை நோக்கி. இம்முறை மருத்துவமனை அறையிலிருந்து நேரே வீட்டிற்கு.
விரும்பாத மௌனம் நிலைத்திருந்தது அந்த பயணத்தில்.
மருத்துவமனையில் இருந்த சில நாட்கள் அஷோக் யாரிடமும் அதிகம் பேசவில்லை. எதற்குள்ளோ சிக்கிக் கொண்ட உணர்வு. கண்டிப்பாய் அது சுதா விஷயமாய் இருக்கும் என்பது அவன்  அனுமானம்.
சுதாவை பார்க்கவே தலைவலி என்று அவன் நினைக்க.. மருத்துவரோ, “நீங்கத் தேவையே இல்லாமல் பழையதை நினைவு படுத்தறேன்னு ப்ரெய்ன்ன ரொம்ப ஸ்ரெஸ் பண்ணறீங்க.. அதனால தான் இந்த தலை வலி. பீ கூல் மிஸ்டர் அஷோக்.. உங்கள மீறி எதுவும் நடக்காது. பழசு தேவைப் படும்போது அது நம்மள தேடி வரும். ஏன் டென்ஷன் ஆகரீங்க. மிஞ்சி போனா சில புது ஃப்ரெண்ட்ஸ்.. க்ரோத் இன் பிஸினஸ்.. அவ்வளவு தானே… இதில யோசிக்க என்ன இருக்கு… ஃப்ரீயா விடுங்க. இப்போ உங்க கூட இருக்க இவங்க தான் நிஜம். பழச நினைக்கறேன்னு நிஜத்தைக் கோட்ட விட்டுடாதீங்க… உங்க அம்மாவ மட்டும் பாருங்க. ஓஞ்சு போயுட்டாங்க… ரிலேக்ஸ் அஷோக்” என்று ஆரம்பித்து தினம் ஒரு மணி நேரம் அவனுக்கு கௌன்ஸ்லிங்க் செய்தே அனுப்பினார்.
கொஞ்சம் தெளிவு அவனுக்கு ஏற்பட தான் செய்தது. அவனுக்குண்டானது அவனிடம் வந்துவிடும் என நம்பினான். அம்மா முகத்திற்காகவாவது எதையும் நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.
அது சுதா!
மனம் எதிலும் பதியவில்லை. அவளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு வந்துமே யாராவது ஏதாவது சொல்லி இருந்தால் சமன் பட்டிருப்பானோ? எதையோ மூடி மறைக்கவும் உள்ளுணர்வு விழித்துக் கொண்டது.
சுசிலா மகனிடம் எதையுமே மறைக்க மாட்டார். அவர் மறைக்கவும் இல்லை… அவனுக்கு அதில் தெளிவு. பாட்டியால் அவனிடம் எதையும் மறைக்க முடியுமா என்ன? பாட்டியைச் சரியாக தவறாய் எடை போட்டுவிட்டான். வெங்கட்? அவன் எதையோ மென்று விழுங்கிக் கொண்டிருக்கின்றான். அது என்ன?
‘சுதா!’ மீண்டும் மீண்டும் அவள் பெயரை அஷோக்கின் இதயம் அசை போட்டது. ஏனோ மூளையால் அவளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவனோடு ஊர் சுற்றியவளை எப்படி மறந்தான்?
அவனிடம் இல்லாத பதில் வெங்கட்டிடம் கிடைக்குமா என்று பார்த்தால், அவன் வாய் திறப்பதாகத் தெரியவில்லை. வெங்கட்டிற்கும் அஷோக்கிற்கும் இடையில் ரகசியங்கள் இருந்தது இல்லை. காதல் என்று வந்தபின் ரகசியங்கள் மனைவியோடு மட்டும் தான். இது ஊரறிந்த ரகசியம் அவனுக்கு தெரியவில்லை. 
அஷோக்கின் முகம் எள்ளும் கொள்ளுமாக வேடிக்க.. என்செய்வதென்று தெரியாது வெங்கட் மௌனமாய் வாகனத்தை வீட்டை நோக்கி விரட்டினான்.
ஏதோ தவறு நடப்பது போன்ற உணர்வு என்ன தட்டியும் ஒட்டிக்கொண்டே வந்தது  அஷோக்கோடு.
பொறுத்து பார்த்தவன்  கேட்டேவிட்டான். “என்னை சுத்தி என்ன நடக்குது வெங்கட்? எதுக்கு இவ்வளவு வேலி? எனக்கு ஏதோ உண்மை தெரிய கூடாதுன்னு ரோமப்ப பாடுபடரியே… என்ன அது?”
‘ஐயோ இவன் கண்ணுக்கு எதுவுமே தப்பாதா.. மண்டை உடஞ்சாலும் புத்தி கூர்மை மட்டும் அப்பிடியே இருக்கு’ உள்ளுக்குள் நினைத்தவன்,
“அ..அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லியே… எல்லாம் சொல்லி..ட்டேனே.. உன் கிட்ட  ம்..மறைக்க என்ன இருக்கு?” ஏதோ திக்கித் திணறி உளறி வைத்தான்.
“என்னோட நாலு வயசுல இருந்து நீ எனக்கு ஃபிரெண்ட்.. உனக்குப் பொய் சொல்ல தெரியல.. அட்லீஸ்ட் என் கிட்ட.! உன் முகமே சொல்லுதே… இங்க ஏதோ என்னைச் சுத்தி நடக்குதுன்னு! அது என்ன?”
“..”
“சுதா யாரு? கார்ல அவள நான் எதுக்கு கூட்டிட்டு போணும்?  இது என்ன புது பழக்கம் எனக்கு.. பொண்ணுங்களோட ஊர் சுத்தரது? இவ மட்டும் தானா இல்ல இன்னும் இருக்கா? ஒரு பொண்ண என் கார்ல, அதுவும் அவளுக்கு நானே டிரைவ் பண்ணிட்டு.. அவ்வளவு காலையில ஒரு பொண்ணு கூட போர அளவுக்கு அப்பிடி எனக்கு அவ கூட என்னடா பழக்கம்?”
அஷோக்கிடம் அவன் எதையும் மறைக்கவில்லை என்று காட்டிக்கொள்ள, “அப்போவே சொன்னேனே அது தான் அவ மீனாட்சி பாட்டியோட பேத்தி?!..”
“ம்ம்.. மேல சொல்லு” அழுத்தமான குரல் வெளிப்பட்டது.
‘மேல என்னத்தனு சொல்ல..’ எண்ணியவன், “அவ பாட்டிய பாக்க வந்திருந்தா! அப்போ பாட்டி மூலமா கொஞ்சம் பழக்கம். அவ்வளவு தான். பாட்டிக்காக அவளை ஸ்டேஷன்ல விடப் போகும்போது விபத்து நடந்தது.”
“என்ன ஸ்டேஷன்ல? அம்மா நான் ஏர்போர்ட்க்கு போனப்போ ஆஃஸிடென்ட் ஆச்சுனு சொன்னாங்க”
‘சாகடிக்குரானே..’ “எங்கையோடா.. எனக்கு எப்பிடி தெரியும்? பாட்டி தான் அவங்களுக்காக நீ அவளுக்கு உதவினதா சொன்னாங்க!”
“ஓ.. அப்போ பாட்டி எதுக்கு ‘அவளுக்கு ஒண்ணும் இல்ல’, எனக்குச் சரி ஆகரதுக்கு முன்னாடியே சரி ஆகி போய்டுவானு சொன்னாங்க?”
வெங்கட்டிற்கு ஏ.சி காரில் வியர்வை அரும்ப ஆரம்பித்தது. ‘நீ போய் அவள பார்பேனு ஆவங்களுக்குத் தெரியுமா என்ன? என்னை சாகடிக்காம விடமாட்டான் போல இருக்கு!’ மனதுக்குள் எண்ணிக்கொண்டு,
“எதுக்கு வீணா உன் கிட்டச் சொல்லி உன்ன கஷ்ட படுத்தனும்ன்னு நினைச்சு இருப்பாங்க “
“அவ நிலமை தெரிஞ்சா நான் மனசு கஷ்ட படுர அளவுக்கு எனக்கு அவக் கூட பழக்கமா?”
‘வக்கீலா போக வேண்டியவன் டா நீ!’ என்று நினைத்தவன்,
“இல்ல டா.. தெரிஞ்ச யாருக்காவது இப்பிடி ஆனா நமக்கு மன கஷ்டம் தானே.. அதுல நீ வேற இப்போ தான் சரி ஆகிட்டு வர… உன் கிட்ட எப்பிடி சொல்ல? அவ்வளவு தான்… மத்தபடி ரொம்ப பழக்கம் இல்ல!! வெறும் பத்து நாள் பழக்கம் நினைக்குரேன்”
“நீ சிங்கப்பூர் போய் என்ன ஒரு நாலு மாசம் இருக்குமா?”
“ம்ம்.. அதுக்கு மேல இருக்கும்.. ஏன் டா?”
“அப்போ கூட.. நீ சொன்னியே.. அன்னைக்கு, நான் அவள ஏதோ பார்ட்டிக்கு கூட்டிட்டு வந்தேன்னு?”
அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாமல் விழித்தான் வெங்கட்! 
‘யார் முகத்தில முழிச்சேனோ.. இவன் கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன். தண்ணி காட்டரானே..’ மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது!
“உன்ன தான் டா.. அவளைப் பத்தி என்ன டா நீ சொல்ல மாட்டேங்குற? அவள பாக்கவே முடியல.. மனசு என்னவோ பிசையுது! ரொம்ப நெருக்கமான யாரோ படுத்து கிடக்கிற மாதரி ஒரு ஃபீலிங்! ரொம்ப பாவம் டா.. எல்லாம் என்னால தானே? எங்க டா போய் இப்படி மோதினேன்? நான் டிராபிக் ரூல்ஸ் எல்லாம் சரியாய் தானே ஃபாலோவ் பண்ணுவேன்.. அப்புறம் எப்படி டா? அவ பிழைச்சிடுவால்ல?.. டாக்டர் என்ன சொல்லுறாங்க?” இதயம் துடிக்கக் கேட்டான். எப்படியாவது அவள் பிழித்துவிட மாட்டாளா… அவளைப் படுக்க வைத்த பாவத்திலிருந்து விமோசனம் கிடைக்காதா என்ற மனப்போரட்டம்.
ஒரு இடம் என்றில்லாமல் அவளை முற்றிலும் நொறுக்கி அல்லவா போட்டுவிட்டான். அவன் எண்ணம் அப்படி தான் போனது. அவனே அவள் நிலைக்குக் காரணம் என்று நம்பினான்.
நடப்பது எதுவும் உவப்பாய் இல்லை வெங்கட்டிற்கு. சுதாவை ஓரிரு முறை நேரில் பார்த்திருப்பானா… அவ்வளவு தான். மற்றபடி ஃபோனில் அஷோக்கோடு பேசும் வேளை அவளோடு பேசியது. பார்த்ததும் பிடிக்கும் ரகம் சுதா. “அண்ணா” என்று உரிமையாய் கூப்பிட்டு பேசும் அவளை வெங்கட்டிற்கும் மிகவும் பிடிக்கும். அஷோக்கிற்காகவே படைக்கபட்டவள்.
அவனே ஜென்னியிடம் கூறினானே.. “அவங்க காதல், காவிய காதல்.. இந்த ஜென்மத்தில அவங்கள ஒருத்தராலையும் பிரிக்க முடியாது” என்று.. ‘ஓ.. என் கண்ணே பட்டுவிட்டதோ’ அவனுக்கும் ஏதேதோ எண்ணம்.
பிழைக்கவே மாட்டாள் என்று தெரிய.. இனி அஷோக்கிடம் அவளைப் பற்றி என்ன சொல்ல? அவளைப் பார்த்ததும் அவன் பட்ட பாடை நேரில் பார்த்தவனாயிற்றே. இனி அவனாவது வாய் திறப்பதாவது.
“ஏன் வெங்கி.. ஒன்னுமே சொல்ல மாடேன்ர?”
“என்ன டா சொல்லணும்? சொல்ல ஒன்னும் இல்ல டா!”
“அவள பத்தி உனக்குத் தெரியும் தான? என்ன தெரியுமோ சொல்லுட..”
முதல் நாள் சுதாவைப் பார்த்த அன்று அஷோக் இவனோடு தான் மாடியில் அமர்ந்து கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான். அன்று ஆரம்பித்தான் அஷோக் சுதாவைப் பற்றிப் பேச..
‘நீ அவள பார்கணும் டா.. வாலில்லாத குரங்கு குட்டிடா அவ.. மாடிலேர்ந்து தாவித் தாவி இறங்கினா தெரியுமா?’ என்று ஆரம்பித்தவன்,  
கடைசியாக வெங்கட்டோடு பத்து நாள் முன் பேசிய போது, தான் சென்னை வந்ததும் ஒரு சர்ப்ரைஸ் தரபோவதாக கூறியிருந்தான். 
“வெங்கி.. நீ இங்க சீக்ரம் வர வேண்டி இருக்கும்.. அடுத்த வாரம் ஒரு நாலு நாள் வர வேண்டி இருக்கும். லீவ் ரெடி பண்ணிக்கோ.” என்றானே… இதைப் பார்க்க தானா என்று மனம் விம்மியது.
வெங்கட் ஏதாவது சொல்லுவான் என்று பார்க்க அவனோ கண்ணும் கருத்துமாய் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான். இருவர் மனம் போலவே வானமும் இருட்டியே இருக்க… வாகனம் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
“நான் கேட்டுகிட்டே வரேன்.. நீ ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற?” அஷோக்கின் பேச்சில் கோபம் எட்டி பார்க்க..
“என்ன டா கேட்ட?”
“சுதா யார் எனக்கு? இந்த ஆஸ்டென்ட் எப்படி ஆக்சு? யார் மேலத் தப்பு? ஏன் இன்னும் நான் விக்கிய பாக்கல?” அப்படி ஒரு கோபம் அவன் குரலில். 
இனி இவனிடம் ஒரேடியாய் பொய் சொல்ல முடியாது என்றதும் வெங்கட் ஒரே ஒரு உண்மையை மறைத்து மற்றதைக் கூறினான்.
“சுதா பாட்டி வீட்டுக்கு வந்து கொஞ்சம் மாசம் ஆச்சு! அம்மா அப்பா இல்ல. இறந்துட்டாங்க. ஆன்டிய தான் அம்மானு கூப்பிடுவா. 
அம்மா கூட ரொம்பவே  க்ளோஸ் அவ. அதனால் தான் அம்மா இன்னும் அங்கேயே அவப் பக்கத்திலேயே இருக்காங்க.
ரொம்ப நல்ல பொண்ணு. அன்பா பழகுவா. கொஞ்சம் குறும்பு.. வாலும் கூட. உன் கூட நல்ல பழக்கம். உன் ஃப்ரெண்ட். கொஞ்சம் க்ளோஸ் ஃப்ரெண்ட். ஒன்னா ரொம்ப சுத்தியிருக்கீங்க. ஆன்டினா அவளுக்கு ரொம்ப இஷ்டம். பிஸினஸ் விஷயமா ப்பாரீஸ் போய்ட்டு ரிட்டர்ன் ஆன ஆன்டிய கூப்பிட நீயும் அவளும் போயிருக்கீங்க.
சண்டே மார்னிங்.. குணானு ஒரு எக்ஸ் மினிஸ்டர் பையன் குடிச்சுட்டு போதையில உன் வண்டிய இடிச்சுட்டான்.. டைரக்ட் இம்பேக்ட் சுதா மேல. அவ்வளவு தான்.”
“அவன சும்மா விட்டுடியா? விக்கி எங்க?”
“விக்ரம் டெல்லி-ல போஸ்டிங்க்.. இங்க இல்ல. புது  ஆபீசர் இதெல்லாம் சொன்னார். அந்த குணா இப்போ உயிரோடா இல்ல மச்சான். பயங்கர போதை.. இடிச்சவன் நெஞ்சு ஸ்டியரிங்ல இடிச்சிடுச்சு. அதனாலையா இல்ல அவனுக்கு ஏதேச்சையா ஆதே நேரம் கார்டியாக் அரெஸ்ட் வந்தனாலையானு தெரியல.. ஃபுல் ஆட்டாப்சி ரிபோர்ட் பார்த்த பிறகு தான் தெரியும்னு சொல்லிட்டங்க. செத்து ஒழிஞ்சவன பத்தி இதுகு மேல எதுக்குனு நான் கேட்டுக்கல!”
“அவ்வளவு ஈசியா செத்துட்டானா?” அஷோக்கிற்கு பற்றி கொண்டு வந்தது
“இல்ல மச்சான்.. அவன் சாவு ஒன்னும் சட்டுனு நடக்கல… கார இடிசுட்டு கிளம்பிட்டான். ஆனா கார இடிச்ச வேகத்தில அவன் நெஞ்சு ஸ்டியரிங்ல இடிச்சுடுச்சு. கொஞ்ச தூரம் போன வண்டியை ஒரு சந்துல ஓரங்கட்டி நிப்பாட்டிருக்கான். ரொம்ப நேரம் நெஞ்சு வலியோட பாதி மயக்கமா லாரிலயே இருந்திருக்கான். ரொம்ப பாடுபட்டுத் தான் செத்திருக்கான். ரெண்டு நாள் அனாதை பிணமா கிடந்து இருக்கான். மகன் காணம்-னு ஊரெல்லாம் மினிஸ்டர் தேட.. அவன் அனாதையா.. பிணமா ரோட்டோரம் ஒரு லாரில… கொடுமை டா!”
மீண்டும் ஒரு அமைதி. சுதாவை இந்த நிலையில் கொண்டுவந்தவன் போயே போய் விட்டான் என்ற நிம்மதி! ஆனால் முகத்தில் குழப்பம் மட்டும் குறையவில்லை.
அஷோக்கிடமிருந்து சத்தம் வராமல் போகவே.. அவனைப் பார்த்த வெங்கட், “இன்னும் என்ன டா?”
“பச்!” அஷோக்கின் குரல் சற்று தளர்ந்தது. திடீரென்று சுதாவால் ஏற்பட்ட இதயத்தின் வெற்றிடத்தை நிரப்ப தெரியாதவன் போல, “இல்ல வெங்கி ஏதோ இருக்கு டா.. உன் கிட்ட சொல்லாம விட்டிருப்பேனோ?.. அவள தொட்டதும்.. அந்த உணர்வு.. புது விதமான உணர்வு அது.. சொல்லமுடியாத சோகம்.. எனக்கு சொல்ல தெரியல.. புரியவும் மாட்டேங்குது! அந்த ஹாஸ்பிட்டல்ல இன்னும் இத விட மோசமான நிலையில இன்னும் எத்தன பேர்.. அவங்க கிட்ட இல்லாத பரிவு எதுக்கு இவ கிட்ட சொல்லு? நமக்கு எல்லார் மேலையும் எப்படி தோணுறது  இல்லியே..”
வெங்கட்டிற்கு கோபம் வந்துவிட்டது. இவனிடம் எப்படி விளக்க? பேராபத்தின் கதவையல்லவா தட்டிக் கொண்டிருக்கின்றான்? சுதாவால் அஷோக் வலியில் துடித்ததைப் பார்த்தவன் வாய் திறப்பானா? ‘அவள மறந்த பிறகும் எதுக்கு டா அவளையே பிடிச்சுகிட்டே தொங்குர! பாட்டி சொன்னது சரி தான்.. அவ உனக்கு வேண்டாம் டா.’ வெங்கட்டின் மனம் கதற,
“எனக்கு மட்டும் எப்படி இருக்குன்னு நினைக்குர.. என் மனசு உடைஞ்சு போச்சு.. அதிகமா நேர்ல்ல எனக்கு பழக்கம் இல்ல.. ஃபோன்ல பேசி இருகேன்.. ‘அண்ணா.. அண்ணா’னு ஆசைய வாய் நிறைய கூப்பிடுவா.. எனக்கே வலிக்குது… உனக்கு அவ க்ளோஸ் ஃப்ரெண்டு.. உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாதா? அதனால தானே உன்கிட்ட அவள பத்தி ரொம்ப பேசல!
தயவு செஞ்சு அவள பத்தி கேக்கரத விடு.
என்னாலா இதுக்கு மேல நார்மலா இருக்க மாதிரி நடிக்க முடியாது! எனக்கு வலிக்குது. ரொம்ப வலிக்குது. அவள அப்பிடி பார்த்ததும் மனசு ஏதோ செய்யுது. நான் பார்த்த சுதா இவ இல்லனு கத்தணும் போல இருக்கு.. உன் முன்னாடி அழக் கூட முடியல..
தயவு செஞ்சு உனக்கு மட்டும் தான் நெஞ்சு பிசையுதுனு நினைச்சு அதையே பேசாத. விடு.. இதோட விடு ப்ளீஸ்! உனக்கும் அவளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. பக்கத்து வீட்டு பொண்ணூ. சேந்து சுத்த ஒரு நல்ல ஃப்ரெண்ட் அவ்வளவு தான்! நீ அவ நிலைமைக்குக் காரணமும் இல்ல… உன் கில்டி ஃபீலிங்க கொஞ்சம் மூட்ட கட்டி வை!”
வெங்கட் துக்கத்தில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தான். அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்கத் தோன்றாமல் இருக்கையில் சாய்ந்தவண்ணம் கண்களை மூடினான் அஷோக்.
‘சுதா… என் க்ளோஸ் ஃப்ரெண்ட்..’ உள்ளுக்குள் பதிக்க முயன்றான் அஷோக்.
வீட்டை சுற்றி இருந்த மதில் சுவரின் பெரிய இரும்பு கேட்டை இரு வாயில்காவலர் திறந்து விட.. வந்த வேகத்திலேயே கார் நடைபாதை வழியாய் வீட்டின் முன் நின்றது. வாயிலில் நின்று கொண்டிருந்த ஓட்டுநர் ஓடி வந்து காரை ‘கராஜ்’ எடுத்துச் செல்ல, “வாங்கத் தம்பி… எப்படி இருக்கீங்க” என்றான் வாயிலில் காத்திருந்த ராமு.
காரை விட்டு இறங்கியவன் கண்கள் அவன் பூந்தோட்டத்தை நோட்டமிட்டது. மலர்ந்த தோட்டம் போல் வாழ்வும் இருக்க வேண்டும் என்பது அவன் கருத்து. சில புது செடிகள் முளைத்திருந்தது. ஆறு மாதத்தில் தோட்டம் இன்னும் அழகாய் மாறியிருந்தது.
இரவு ஆரம்பித்த மழை ஓய்ந்திருக்க, மலர்களின் இதழ்கள் கீழே கொட்டிக்கிடக்க… தேனீக்கள் அமர மலரும் இல்லை இனி அருந்த அதற்குத் தேனும் இல்லை! இன்றைய நிலையில் அவன் தோட்டம் போல்தான் அவன் வாழ்வும்!
வாழ்க்கை என்னும் மாயக்கண்ணாடி பல ஜாலங்களை அவனுக்கு காட்டிக்கொண்டிருக்க.. இன்று அதில் இலையுதிர் காலம் தெரிந்தது!

Advertisement