Advertisement

“எப்படி இருக்கீங்க??” என்று நலம் விசாரித்தான் அவன்.
“ஹ்ம்ம் இருக்கேன்”
“அன்னைக்கு நடந்ததுக்கு சாரி சார்”
“அதெல்லாம் விடுங்க கபிலன்” என்றவனுக்குள் ஏதோ யோசனை சட்டென்று அமைதியானான் அவன்.
“ஹேய் நீ பார்த்தி தானே. நீ இங்க என்ன பண்ணுறே??” என்று உடனிருந்த பார்த்திபனை கேட்டான் கபிலன்.
“கபிலன் அவர் நமக்கு ரொம்ப வேண்டியவர்”
“இல்லை சார் பார்த்தி பாவம் கான்ஸ்டபிள் தான். உங்களுக்கு கமிஷனர் பார்க்கணும்ன்னா சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன் அவர் என்னோட கிளாஸ்மேட் தான்” என்றான் அவன்.
“கபிலன் ப்ளீஸ் பார்த்திபத்தி எதுவும் இப்போ பேச வேண்டாம். அவர் இல்லன்னா வதுவை நம்மாள கண்டிப்பா தனியா கண்டுப்பிடிக்க முடியாது. அவர் யாரு என்னன்னு நாம வீட்டில போய் பேசுவோம்”
“இப்போ உங்களால எனக்கு ஒரு காரியம் ஆகணும், முடியுமான்னு மட்டும் சொல்லுங்க…”
“என்ன காரியம் சார்??” என்று கேட்டது பார்த்திபன்.
கபிலனுக்கு பிரியன் பார்த்திபனை இவ்விஷயத்தில் ஈடுப்படுத்துவது உடன்பாடில்லை. அது அவன் முகத்திலேயே தெரிந்தது.
அவனால் என்ன முடியும் என்று ஒரு எண்ணம் அவனுள். வதனா என் தோழி என்னால் அவளை மீட்க முடியாதா, அது இவனால் தான் முடியுமா என்ன என்ற ஈகோ.
“அது எதுக்கு உனக்கு அவர் என்கிட்ட சொல்வார். நீ பேசாம இரு…” என்று பார்த்திபனை அடக்கினான் கபிலன்.
“கபிலன் ப்ளீஸ் கொஞ்சம் மரியாதையா பேசுங்க. நம்மைவிட குறைஞ்சவங்கன்னு இந்த உலகத்தில யாருமே இல்லை. பார்த்தி யாருன்னு தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்க”
“முதல்ல உங்க ஈகோவை விட்டு நான் சொல்றதை கேட்கறீங்களா” என்றவன் “பார்த்தி நீ தப்பா எடுத்துக்காதே” என்று அவனிடத்தில் சொல்லவும் மறக்கவில்லை பிரியன்.
“சார் எனக்கு இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை. எனக்கு மேடம் காப்பாத்தணும் அது மட்டும் தான் எண்ணம்” என்று சொல்லி பெரிய மனிதனானான் அவன்.
“சரி கவனமா கேளுங்க கபிலன். எனக்கு இப்போ தெரிய வேண்டியது சில விஷயங்கள் தான். அதுக்கு உங்க உதவி கண்டிப்பா தேவைப்படும்”
“என்னன்னு சொல்லுங்க” என்றான் கபிலன்.
“விகேபி தெரியுமா உங்களுக்கு”
“யாரை சொல்றீங்க எம்பி ராஜசேகர் அப்பாவா??”
“ஆமா… அவர் எம்பியோட அப்பா மட்டுமில்லை. அந்த கட்சியோட மூத்தத்தலைவர் அவர் தான்”
“கேள்விப்பட்டிருக்கேன் சொல்லுங்க. நான் என்ன செய்யணும்??”
“அவர்க்கு எங்கெங்கே வீடு இருக்குன்னு தெரியணும் எனக்கு, வித் அட்ரஸ்”
“சார் அதை நானே வாங்கி கொடுத்திருவேனே” என்று சொன்னது பார்த்திபன்.
“பார்த்தி…” என்று அதட்டினான் கபிலன்.
பிரியன் பொறுமையிழந்தவனாக “கபிலன் பார்த்திபன் விகேபியோட சன்” என்று போட்டு உடைத்துவிட்டான்.
“என்ன??” என்று அதிர்ந்தான் அவன்.
“சார் அதெல்லாம் எதுக்கு சொன்னீங்க?? சரி விடுங்க அட்ரஸ் நான் வாங்கி தர்றேன் சார்…”
“வேணாம் பார்த்தி நீ விசாரிச்சா பிரச்சனை வரும். உன் மூலமா தான் நான் மூவ் பண்ணுறேன் தெரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கிறேன். நீ தானே சொன்னே அவங்க நம்ம போற வழியை அடைக்கறாங்கன்னு”
“கரெக்ட் தான் சார்”
கபிலன் வாயடைத்து போனவன் தான் இருவர் பேசுவதையும் ஒரு பார்வையாளன் போல் வேடிக்கை பார்த்தான். தன்னையும் ஒரு காயாய் அவர்கள் நகர்த்துவது போல் தான் உணர்ந்தான் அக்கணம்.
“என்ன நடக்குது இங்க?? இன்னும் என்னெல்லாம் அதிர்ச்சி கொடுக்க போறீங்க??” என்றான் அவன் வாய்விட்டே
“கபிலன் நீங்க ராம்கிட்ட பேசலையா?? ராம் எதுவும் உங்ககிட்ட சொல்லலையா??”
“வதனாவை காணோம்ன்னு மட்டும் தான் சொன்னார். அடுத்து உங்களுக்கு தேவையான ஹெல்ப் பண்ணச்சொன்னார் அவ்வளோ தான் எனக்கு தெரியும். நான் டீடைல்ஸ் கேட்கறதுக்குள்ள போனை வைச்சுட்டார்”
“அதெல்லாம் நாம வீட்டில போய் பேசுவோம்…” என்று முடித்துவிட்டான்.
விகேபி இல்லம்
——————————-
“ஹலோ” என்றவாறே போனை காதில் வைத்தார் குலசேகரன்.
“அப்பா ஊருக்கு போயிருக்கார். ஆமா ஒரு பூஜை ஒண்ணு அது முடிச்சுட்டு நாளைக்கு வந்திடுவார். இங்க இன்னும் ரெண்டு நாள்ல வீட்டில பெரிய பூஜை இருக்கு” என்று போனில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.
அவர் பேசி முடித்து வைத்ததும் அங்கு வந்த ராஜசேகர் “யார்கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்கே குலசேகரா” என்றார்.
“அப்பாவை கேட்டு போன் பண்ணியிருந்தாங்க. ஏதோ கட்சி விஷயமா பேசணும்ன்னு சொன்னாங்க…”
“யார் போன் பண்ணாங்கன்னு என்ன ஏதுன்னு விசாரிக்காம எல்லாமே ஒப்பிச்சு வைப்பியா நீ” என்று காய்ந்து எடுத்தார் அவர் தன் தம்பியை.
“எல்லாம் கேட்டு தான் பேசுனேன். டெல்லில இருந்து தான் பேசுனாங்க. பேரு கூட XXX”
“டேய் முட்டாள் அவர் பேசினா என்கிட்ட கொடுக்க வேண்டியது தானே. உனக்கு அவரைப்பத்தி என்ன தெரியும்” என்று மேலும் பொரிந்தார் அவர்.
“என்ன ஆளாளுக்கு என்னையே விரட்டுறீங்க எல்லாரும். நீயும் பெரியவனும் கட்சியில இருந்திட்டா பெரிய ஆளுங்களா, நம்ம பிசினஸ் எல்லாம் நான் தான் பார்த்துக்கறேன்”
“உன்கிட்ட பேசுறது வேஸ்ட்” என்றுவிட்டு ராஜசேகர் நகர்ந்தார்.
வாயிலில் ஏதோ சத்தம் கேட்க ராஜசேகர் அங்கு விரைந்தார். அங்கு இந்தரை கண்டதும் ‘இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்’ என்று எண்ணிக்கொண்டே செக்யூரிட்டிக்கு அழைத்தார்.
“அவன் எதுக்கு வந்திருக்கான்”
“சார் அவர் பெரியவரை பார்க்கணும்ன்னு சொல்றார்”
“எதுக்காம்??”
“அதை அவர்கிட்ட தான் சொல்வேன்னு சொல்றார் சார்…”
‘இவன் வேற ரொம்ப ஸ்மார்ட்டா வேலை பண்றான்னு அந்தாளு ஓவரா பேசுறாரு. இவனை அவரை பார்க்கவே விடக்கூடாது, நல்ல வேளையா அப்பாவும் இப்போ ஊர்ல இல்லை…’
‘நாமலே என்ன விஷயம்ன்னு போய் விசாரிப்போம்’ என்று எண்ணி அவரே நேராக வாயிலுக்கு சென்றார்.
“நீ எதுக்கு இங்க வந்தே??”
“அவர் இல்லையா??”
“இல்லை…”
“சரி நான் கிளம்பறேன்…” என்று திரும்பி பார்த்திபன் நடக்க “டேய் இந்தர் உனக்கு என்னடா வேணும், என்ன விஷயம் பேச வந்தேன்னு சொல்லிட்டு போ…”
“உங்ககிட்ட எல்லாம் அதை சொல்ல முடியாது”
“எதுவா இருந்தாலும் அப்பா என்னைத்தான் பார்க்கச் சொல்லியிருக்கார்” என்றார் ராஜசேகர்.
“அப்பாவே சொல்லிட்டாரா…” என்றான் அவன் கிண்டல் குரலில்.
அது புரியாதவரோ “ஆமா சொல்லு என்ன விஷயம்…”
“எப்படி இங்க வாசல்லவே வைச்சு சொல்லணுமா??” என்றான் அவன் கேலியாய்.
“உள்ள வந்து தொலை…”
“என்னோட இன்னொருத்தரும் வந்திருக்காரு”
“யாரு??”
“நீங்களே பாருங்க…”
பார்த்திபனுடன் கபிலன் வந்திருந்தான் பூசாரி போன்ற உடையணிந்து. ராஜசேகர் அவனைப் பார்த்துவிட்டு பின் “இந்தர் இவரை எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க”
“அப்பா தான் வீட்டில ஏதோ விசேஷம்ன்னு சொன்னார். அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணத்தான் இவர் வந்திருக்கார்”
“ஆமா பூஜை இருக்கு” என்று தன்னையறியாமல் வாயைவிட்டார் ராஜசேகர்.
“ஹ்ம்ம் பூஜைக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணணுமாம். கோவில்ல வேற சிறப்பு பூஜைக்கு சொல்லியிருக்கார். அவர் வர்றதுக்குள்ள கோவில்ல நடக்கற பூஜைக்கு எல்லாரும் வந்து கலந்துக்கணுமாம்”
“அதுக்கு எல்லாம் தயார் பண்ணணும்ல அதான் வந்திருக்கேன்”
“அப்பா இதைப்பத்தி என்கிட்ட எதுவும் சொல்லவேயில்லையே”
“அப்போ நீங்க அவரையே போன் பண்ணி கேளுங்க” என்றுவிட்டு திமிராய் நின்றான் அவன்.
‘இவன் உண்மை சொல்றானா இல்லை பொய் சொல்றானா’ என்று யோசித்தவர் ‘எதுக்கும் அவருக்கே போன் பண்ணி கேட்டிடுவோம்’ என்று அழைப்பை விடுத்தார் தன்னை பெற்றவருக்கு.
அழைப்பு எடுக்கப்படாமலே ஓய்ந்து போக மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தும் அது எடுக்கப்படாமலே போனது.
“என்னாச்சு”
“போன் எடுக்கலை…”
“அப்போ நீங்க அவர்கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ணுங்க. நான் அப்புறம் வர்றேன், சாமி வாங்க நாம போவோம்…” என்று கபிலனுக்கு ஜாடை காட்டினான்.
ராஜசேகருக்கு அவனை உள்ளே அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பம். வதனா வேறு அங்கு தானிருக்கிறாள். இவன் தெரிந்து வந்தது போலவே பேசுகிறான்.
இவனை நம்புவதா வேண்டாமா என்ற பெருங்குழப்பம் அவருக்கு.
அப்போது அங்கு வந்து சேர்ந்தார் குலசேகரன். எப்போதும் தந்தையிடம் அதிகம் பேச்சு வாங்கும் ஒரு மனிதர்.
வாயிலில் இந்தரை பார்த்ததும் அவருமே ராஜசேகரை போல ‘இவன் எதுக்கு இங்க வந்தான்’ என்று எண்ணிக்கொண்டே தான் வந்தார்.
“என்ன விஷயம்??” என்று உடன்பிறந்தவனை பார்த்து கேட்டார் அவர்.
ராஜசேகரும் விஷயம் சொல்ல “அதான் அப்பாவே சொல்லிட்டாருல அப்புறம் ஏன் இவனை வெளியவே நிற்க வைச்சுட்டு இருக்கே… உள்ள கூப்பிட வேண்டியது தானே…”
“முட்டாள் மாதிரி பேசாத, இவனை எப்படி நம்புறதுன்னு எனக்கு தெரியலை. அப்பாவும் போன் எடுக்கலை. எனக்கு என்னவோ அப்பாகிட்ட பேசிட்டு இவனை வரச்சொல்லலாம்ன்னு தோணுது”
“நீ தான் இப்போ முட்டாள் மாதிரி பேசுற. இந்த அப்பா எப்பவும் இந்தர்க்கு தான் சப்போர்ட் பண்ணுவார். ஒழுங்கா நான் சொல்றதை கேளு, அவனை உள்ள விடு. இல்லை அதுக்கும் அவர் நம்மைத் தான் திட்டுவார் ஏன் அவனை உள்ள விடலைன்னு”
ராஜசேகரும் தன் தம்பியின் பேச்சை யோசிக்கவே செய்தார். “சரி உள்ள வாங்க…” என்று சொல்ல உதட்டோரம் வெற்றி சிரிப்பை அதக்கியவாறே உள்ளே நுழைந்தான் பார்த்திபேந்திரன்.
——————–
“உங்களுக்கு எல்லாம் அறிவு எங்கடா இருக்கு. இப்படி ஒரு அடிமுட்டாளாவா இருப்பீங்க. அண்ணன் தம்பி மூணு பேருக்கும் மண்டையில கொஞ்சம் கூட மசாலாவே இல்லை…”
“இப்படி கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்தவங்களை தப்பிக்கவிட்டு நீங்கள்லாம் எதுக்குடா இங்க தண்டத்துக்கு இருக்கீங்க??”
“ஒரு ரெண்டு நாள் தானேடா ஊருக்கு போனேன், அதுக்குள்ள இந்த வேலை பார்த்து வைச்சு இருக்கீங்க”
“நான் இந்தரை புகழ்ந்து பேசுறேன்னு மட்டும் உங்களுக்கு எல்லாம் கோவம் வருதே. இப்போ நிரூபிச்சிட்டான்ல அவன் புத்திசாலின்னு” என்று தன் மக்கள் மூவரையும் ஒன்றாய் நிற்க வைத்து வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் விகேபி.

Advertisement