Advertisement

            கவியின் அருகில் வந்தவள் கவியின் கன்னம் வீங்க மாறி மாறி அறைந்தாள். உதடு தடித்து மேல் உதட்டிலிருந்து இரத்தம் வடியத் துவங்கியதும் அடிப்பதை நிறுத்தினாள். ஸ்வேதா டைனிங் டேபிலில் இருந்த சாமான்களை சுவரில் அடித்து நொறுக்கினாள்.
கவி வேதனையில் சுருண்டு சோபாவில் உட்கார்ந்தாள். ஆனால் துளி கூட அசரவில்லை. அம்மாவிடம் இவ்வளவு கோபத்தை எதிர்பார்த்தாள் போல. அதனால் உண்டான திண்மை. பிரேம் இனி என்ன செய்வான்? அவங்க அம்மாவும் பிரேமை அடிப்பார்களா? இல்லை.. இல்லை.. அவனை அடித்தால் அவன் சட்டையை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே போய்விடுவான்..
அவனுக்கு வேலை இருக்கு, He is independent… அப்போதுகூட நாளை சனிக்கிழமையே அவனைப் பார்க்க முடியாதே என்பது தான் அவளுக்கு பெரிய கவலையாக இருந்தது. இரவில் வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. கவியின் ஆச்சி ஹாலில் போர்வை விரித்து படுத்துக்கொண்டார்.
******
7.00 P.M
மணி ஏழு தான் ஆனது.
“ச்சே! ஏழுதான் ஆகுதா? அம்மா இன்னும் என்ன செய்யப் போகிறாளோ” என்று கவிக்கு திக் திக் என்றிருந்தது.
            பிரேம் என்ன செய்வான்? நமக்காக கொஞ்சநாள் பொறுமையாக இருப்பானா? இல்லை, பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்குவானா? இல்லை, இல்லை அவன் ஒதுங்க மாட்டான் நமக்காக இன்னும் ஐந்தாறு வருடம் பொறுமையாக இருப்பான். நிச்சயம்.. இருப்பான் என்று கவி எண்ணும்போதே… பொறுமை அவன் குணமில்லையே என்று சொன்னது மூளை.
            “ச்சே! மாட்டிக் கொண்டிருக்கவே கூடாது. தேவையில்லாமல் மாட்டி இப்படி அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்க வேண்டுமா?” என்றெல்லாம் மனதில் முணுமுணுத்தாள். மெல்ல சோபாவிலிருந்து எழுந்து பெட்ரூமுக்குள் சென்றாள். மெத்தையின் ஓரமாய் குறுகிப்படுத்துக் கொண்டாள். கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்தாள். கள்வன் தூங்கியதாகச் சொன்னால் அவனுக்கு தூக்கம் என்றால் என்ன? என்று ஒருவர் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஸ்வேதா கவி தூங்கிவிட்டாள் என்றே நம்பிவிட்டாள். காரணம் ஒன்றும் பெரிதில்லை எல்லா அன்னைக்கும் தன் பிள்ளை கள்வன் இல்லை என்ற அசைக்க முடியா நம்பிக்கை. ஏதோ கெட்ட நேரம் என்று மனதை சமாதானப் படுத்திக்கொள்ளும் தாய் மனது.
            மணி ஒன்று என்றது கவியின் கைக் கடிகாரம். அம்மா அழும் சத்தம் கவிக்கு நன்கு கேட்டது. ஆனால் கவி மறந்தும் கண்களைத் திறக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அம்மா யாருடனோ செல்போனில் பேசுவது கேட்டது. கவி ஒட்டுக் கேட்டாள்.
“ஷ்யாம் நான் கவியை ரொம்ப அடிச்சிட்டேன்.”
            “அப்பா!” மனதில் கவி முதல் முதலாக தந்தையின் பெயரைக் கேட்டு பயந்தாள்.
            “ஷ்யாம் எனக்கு அவ பிடிவாதம் பார்த்தா ரொம்ப பயமா இருக்கு! ஒரு சாரி கூட கேட்கலை! நம்ம பொண்ணு இப்படியான்னு எனக்கே ஆச்சர்யமாயிருக்கு. எவ்வளவு புத்திசாலி அவள்…. பிறகு ஏன் இப்படி தவறான சபலங்கள் வரணும்? ஆஸ்திரேலியாவில் இருந்தா நம் பண்பாடு புரியாதுன்னு அங்க வராம இருக்கோமே.. ச்ச ச்ச எனக்கே அருவருப்பா இருக்கு! அவன் உங்களவிட பத்து வயது தான் கம்மி! She likes sex at fifteen… She is taking pills sham… oh my God! Oh my God… ஒரு சாரி கேட்கலை, அம்மான்னு கூப்பிடலை. நான் எவ்வளவு செய்திருப்பேன் அவளுக்காக? உன்னை விட்டு இந்தியாவில் தங்கி.. தனியே ஒத்த குரங்கு போல மனம் உன்னிடமும் அவளிடமும் தாவ.. எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்?
            “ப்ளீஸ் ஷ்யாம் என்னை கூட்டிட்டு போயிடுங்க. அவ இங்க அம்மாகிட்ட இருக்கட்டும். நான் உங்ககிட்ட வந்திடுறேன். இப்போது எனக்கு தேவை உன் மடிதான். நன்கு அழ உன் மடி வேண்டும் ஷ்யாம். ப்ளீஸ் பேபி.. என் கோபத்தை அடக்க முடியல.. அழுகைய வெறுக்கிறேன். கவிய பார்க்கக் கூட பிடிக்கல. உங்களுக்கு ஒன்று தெரியமா? நான் நினைக்கிறேன் கவி கிணற்றில் விழவில்லை.. முற்றிலும் மூழ்கிவிட்டாள் என்று! யஸ்! சில டாப்லட்ஸ் பார்த்தேன் அவ மெத்தைக்கடியில்! உங்களால் நம்ப முடியலயில்ல? நம்ம கவியான்னு, என்னாலும் தான் நம்ப முடியல. அம்மா! அம்பிகையே என்னைக் காப்பாற்று!”
            பிறகு வெகு நேரம், சத்தம் இல்லை. அப்பா என்ன செய்வார்? கண்டிப்பாக தன்னுடன் பேச மாட்டார். அம்மாவையும் அப்பா ஆஸ்திரேலியா கூட்டிக் கொண்டு போய் விடுவார். அம்மாவுக்கு தலைவலி என்றாலே விட மாட்டார். இப்படி அழுது புரண்டால்? கண்டிப்பாக டிக்கெட்டுடன் தான் இந்தியாவே வருவார்.
            “நாம் மட்டும் இங்க என்ன செய்வது? அம்மாயில்லாமல் ஆச்சியுடனா? ஆச்சிக்கு அம்மா போல சிரித்துப் பேசத் தெரியுமா? ச்ச..! ஒரே குழப்படி. கம்பிளீட் மெஸ்!” என்ற மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தாள்.
            திடீரென்று டெலிபோன் ஒலி கேட்டது. ஒரு மணிக்கு யார் கூப்பிடுவது? பிரேமாக இருக்குமோ? என்று ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு அவன் ஃபோனை அட்டன்ட் பண்ணினால் அம்மா என்ன செய்வாளோ? இருக்கும் ஆத்திரத்தில் காஸ்ஸை திறந்துவிட்டால் கூட ஆச்சர்யம் இல்லை. அதனால் ஆடாமல் அசையாமல் படுத்துக் கொண்டாள்.
            டெலிபோன் மணி அடித்து அடித்து ஓய்ந்தது. இரண்டு நிமிடம் கழிந்தது. மீண்டும் டெலிபோன் ஒலி கேட்டது. மீண்டும் மீண்டும் பிரேம் கால் செய்ய மாட்டானே, பிறகு யார் கூப்பிடுவது? என்று யோசித்துக் கொண்டே தொலைபேசியை எடுத்தாள்.
            “ஹலோ” தந்தையின் குரலை எதிர்முனையில் கேட்டுத் திடுக்கிட்டாள்.
அப்பா! ஊமைகளின் குறையில் வலியும் உண்டு, பதில் பேச முடியா தருணத்தில் சலுகையும் உண்டு. இந்த நேரத்தில் நாம் ஏன் ஊமையாகப் பிறக்கவில்லை என்று நொந்து கொண்டாள். “ஹலோ” எதிர்முனையில் கவியின் அப்பா, ஷ்யாம் பொறுமை இழந்து சொன்ன இரண்டாவது ஹலோ.
            “அப்பா”  
“கவி நீ முழிச்சிட்டியா? அம்மா எங்கே? காலையில் இருந்து ஒரு போன்கூட அவ பண்ணலை. செல்போன் கூட ஆப்ஃ ஏன்? Is she alright? all good?.”
     “all good dad. she is asleep.”
     “OK then. Ask her to call me when she wakes up. Bye dear.”
“bye dad.”
 தொடர்பு துண்டிக்கப்பட்டது. அம்மா செல்போன் எங்கே? என்று தேடினாள். அவள் தலையணைக்குப் பக்கத்திலேயே கிடைத்தது. ஃபோன் நம்ம கிட்டதான் இருந்திருக்கு. நான்தான் அம்மா ஃபோன் பேசுவதாக நினைத்துக் கொண்டேன் என்பதை புரிந்து கொண்டாள்.
            ச்ச! நாம் அம்மாவை பைத்தியம் போல தனியே பேச வைத்து விட்டோமே என்று தன்னையே திட்டச் சொல்லிக் கொடுத்தது கவியின் மனசாட்சி.
            கவிக்கு விடிய விடிய தூக்கம் மறந்தது. காலையில் முதல் வேலையாக அம்மாவை சமாதானம் செய்துவிட வேண்டும் என்ற தீர்மானம் செய்து கொண்டாள். அதற்கு பிரேமை விட வேண்டும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒன்று. அம்மாவின் பிரிவை தடுக்க பிரேமை விடச் சொன்னது இரவெல்லாம் தூங்காமல் இருந்த இதயமும், மூளையும்.
            உடல் இச்சை இந்த இரண்டு பெரிய எதிரிகளை சமாளிக்க முடியாமல் சுருண்டது.
She likes sex at fifteen… oh my God Oh my God…  அம்மாவின் வார்த்தைகள்.
உடல் இச்சைக்கு முழுத்தோல்வி. 
            விடிந்தது. அம்மா கண்களை திறந்து தான் படுத்திருந்தாள். அம்மா பக்கமாக நெருங்கி அம்மாவை அழைத்தாள்.
“அம்மா, அம்மா..” ஸ்வேதாவிடம் பதில் இல்லை.
            “அம்மா நான் இனி பிரேமை பார்க்க மாட்டேன்.”   பதில் இல்லை.
“ப்ராமிஸ்ம்மா நான் கண்டிப்பா இனி அவனைப் பார்க்க மாட்டேன். அப்பா மேல ப்ராமிஸ்.”
            ஸ்வேதா எழுந்து அடுக்களைக்குள் சென்றாள். காபி போட்டு அன்னைக்கு கொடுத்துவிட்டு தானும் ஒரு காபி குடித்தாள்.
            அம்மாவிடம் நெருங்கக்கூட முடியவில்லை.
அம்மாவிடம் கவி ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை.
            ஸ்வேதா தன் வேலைகளைக் கட கடவென்று செய்தாள். கவி ஸ்வேதா கையைப் பிடித்துக் கொண்டு, “அம்மா நான் செய்தது பெரிய தப்பும்மா.. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் உங்க கண்ணில் படாமல் இருக்கணுமா? சரி. நம்ம வீட்டிலே உங்க கண்ணில் பட மாட்டேன். இல்லை… ஹாஸ்டல்ல படிக்கணுமா? அதுக்கும் சரி சொல்றேன். அப்ப கூட மாதம் ஒரு தடவை உங்களை நான் பார்க்கலாம்ல்ல? அது போதும் எனக்கு. நான் முட்டாள்தனமா நடந்ததற்கு ரொம்ப வெட்கப்படுறேன்.. ப்ளீஸ்ம்மா.”
            “என்னைப் பாருங்களேன்.. ஒரு தடவை என்னை கவின்னு கூப்பிடுங்கம்மா.. என்னை இன்னும் அடிங்க.. நான் எவ்வளவு அடினாலும் வாங்குவேன். ஆனா நீங்க என்னை விட்டு போகாதீங்கம்மா.. என்னால நீங்க இல்லாம இங்க இருக்கவே முடியாது.. நைட்டெல்லாம் தூக்கமே வராது.. கெட்டக் கெட்ட கனவாதான் வரும்.. அப்பாமேல் ப்ராமிஸ்! நான் இனி தப்பு வழி போகவே மாட்டேன்.”
            கவிக்கு என்ன தோன்றியதோ அதைச் சொன்னாள்.. ஒரு கயிறு கிடைத்தால் போதுமே குழிக்கள் இருந்து தப்பி விடலாமே என்று என்னும் பேதையைப் போல அம்மாவின் மனதைக் கரைக்க தன்னால் ஆனமட்டும் முயற்சி செய்தாள்.. ஆனால், ஒரு மின்னலுக்கு சலனமில்லாத கற் தூணைப் போல ஸ்வேதா எதற்கும் அசையவில்லை. கவியால் அவளை அசைக்க முடியவில்லையா? இல்லை அசைக்க முடியாத வண்ணம் அவள் தன்னை இறுக்கிக் கொண்டாளா? அதை எவராலும் கண்டுபிடிக்க முடியாது.

Advertisement