Advertisement

            2006 ஆம் வருடம் முடிவில்.. கணவனைக் காண ஸ்வேதா ஆஸ்திரேலியா செல்கிறாள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் கணவனின் நினைவுகள் அவளை வாட்ட, அவளே தனது சொந்தச் செலவில் ஆஸ்திரேலியா செல்கிறாள்.
ஷ்யாம், ஸ்வேதா ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில். . . .
            ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில் ஸ்வேதாவின் கணவன் ஷ்யாம் அவளை அழைக்க வந்தான்.
            “ஸ்வேதா… இதோ இங்க பாரேன்!” யாரோ தன்னை அழைப்பது அவளுக்குக் கேட்டது. தனது மூட்டை முடிச்சை அந்த நகரும் பெல்டிடமிருந்து பெற்றுக் கொண்டு டாக்சி பிடிக்க ஏர்போர்ட் வெளியே வந்தாள்.
            அப்போதுதான் எதிரே ஷ்யாம் தன்னை அழைப்பது அவளுக்குக் கேட்டது.
            “ஸ்வேதா…!” இருவரும் கண்டுகொண்டனர். சிரிப்புகள் பகிரப்பட்டது. பிறகு டாக்ஸியில் ஏறி வீட்டிற்குச் சென்றனர்.
வீட்டில் தனியே இருவரும்..
எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது என்று எண்ணிக் கொண்டாள் ஸ்வேதா.
“ஸ்வேதா..! என்ன திடீர்ன்னு இங்க வந்திட்ட?”
“நீங்க ஒழுங்காயிருக்கீங்களான்னு பார்க்க வந்தேன்னு சொன்னா..”
“அடி விழும்..”
“போப்பா உனக்கு எல்லாமே விளையாட்டு தான். தெரியல்ல ஷ்யாம். என்னமோ மனசு சரியாயில்ல. அதான் ஒரு மாசம் இங்க இருந்திட்டு போகலாம்ன்னு..”
            “ஒரு மாசமா? கவி அங்க தனியா என்ன செய்வா?”
            “சிக்ஸ்த் படிக்கிறா கவி. அவள் வேலைய அவளே செய்துக்கிறா. இன்னும் ஒரு மாதம் தானே. அம்மா அவள் கூட இருக்காங்க ஷ்யாம்.”
         “அப்படி என்னம்மா கஷ்டம் உன் மனதுக்கு? உனக்கு ஒன்று தெரியுமா ஸ்வேதா? – A thorough and complete  *** for months would solve all the problems between husband and wife”
            “ ம்… ம்… நானும் அதை எங்கோ படிச்சிருக்கேன்! ஆனா…” அவள் பேசும் முன் அவன், அவன் கூறியதை செயலாற்றினான்.
             இல்லறம் என்பது யாதெனில்? **** என்ன? எழுத்துக்கள் தெரியவில்லையா? அழகான, இம்சையான ஒலி வடிவங்கள் எழுத்து வடிவில் கொண்டு வர இன்னும் மனிதன் கற்கவில்லையப்பா!
*****
            ஒரு மாதம் கடந்தது….
            “ஸ்வேதா.. என்ன பேபி. போகும் போது சிரிச்சிட்டே இருக்கணும் இப்படியா உம்முன்னு இருப்பது,”
            “இந்தியா போகணுமா? உன்னை பார்க்காமல் எப்படிப்பா நாட்களைத் தள்ளுவது?”
            “உனக்கே அப்படியிருந்தால் என் நிலைமை யோசித்துப்பார் ஸ்வேதா கிளம்பும்போது ஏன் என்னை கோபப்படுத்துற?”
            “சரிப்பா.. அடுத்து எப்ப நீ இந்தியா வருவ?”
            “இருபது நாட்களுக்குள் அங்கயிருப்பேன். சரியா,”
            “சரி.. வேளைக்கு சரியா சாப்பிடணும். பக்கத்துவீட்டு ஆன்டர்சன் அங்கிள் கேட்டா.. கால் பண்றேன்னு சொல்லு..”
            “என் BED உன்னை எங்கே என்று கேட்டா?”
            “இந்தியா போகும்போது அதையும் கூட்டிட்டு போறேன்னு சொல்லு!”
                        ஸ்வேதா இந்தியா வந்து சேர்ந்தாள்.
           ******
   (2010) கவி இப்போது பத்தாம் வகுப்பு. . .
“கவி, கவி உனக்கு எத்தனை தடவை சொல்வது, கூப்பிட்டதும் சாப்பிட வர முடியாதா?” – ஸ்வேதா, கவியின் அம்மா.
கவிக்கு தாயின் குரலைக் கேட்டதும் வியர்த்துக் கொட்டாத குறை. அம்மாவிடம் என்ன பொய் சொல்வது?
            “நான் பிரேமிடம் ஒரு முத்தம் கேட்டேன்” என்று சொன்னால்? அடித்து துவைத்து விடுவாள்.
“அவன் எனக்கு கொடுத்த முத்தம் என்னை பைத்தியமாக்கி அவன் சொன்னதையெல்லாம் செய்யச் சொன்னது” என்று சொன்னால்? இந்த ஜென்மம் முழுவதும் பேசமாட்டாள்.
     மொட்டைமாடியில் அவள் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு இதயம் வேகமாக அடிக்க… படி இறங்கி கீழே முதல்தள வீட்டிற்குச் சென்றாள். அவள் கைபேசியில் அவன் எண்களை அழித்தாள். தாயின் கண் மறைவில் அவன் கொடுத்த கீரிட்டிங் கார்ட், ஐபாட் ஆகியவற்றை மெத்தையின்கீழ் ஒளித்து வைப்பது இமயம் ஏறுவதை விட சவாலான காரியம்.
            அதையும் செய்து முடித்தாள்.
நான் கவி….
என்  பெயர் கவி… tenth std (X B)
பிரேமின் கைகள் என்மேல் இருந்த கணமெல்லாம் என் பெண்மையை உணர்ந்தேன். அவனது உதடுகள்… ஆஹ்… அவனது கைகள்… ஆஆஹ்…
முதல் நாள் ஆறு முத்தங்களாக இருந்த முத்தக்கணக்கு மறுநாள் எட்டானது, அதன் மறுநாள் பத்தானது… அதன் மறுநாள் கணக்கில்லாமல் போனது. எனது தனிமை… பெற்றோர் என்னை நம்பிக் கொடுத்த தனிமை முழுதும் அவனுடன் என்றானது.
வேண்டாம் இது தவறு என்று சொல்லும் மனமே இன்னும் இன்னும் வேண்டும் என்று அதன் மீது பைத்தியமாய்த் திரிந்தது. அதைப் பற்றி நான் கூகுள்கூட செய்து பார்த்தேன். பன்னிரெண்டு வயதில் உடல் ரீதியான சம்பந்தம் வைத்திருக்கும் காதலர்கள் அமெரிக்காவில் இருந்தார்கள். அப்படியென்றால்? இந்த வயதில் நான் போகும் பாதை மனித இயல்பில் ஒன்றானது தானா? நான் பிரேமின் காதலியா? இல்லையே? மீண்டும் எனது கணினியில் கூகுள் செய்து பார்த்தேன் எனது இன்டர்நெட் மோடம் வேலையே செய்யவில்லை ஆயாசமாக கணினியை அணைத்தேன். அப்போது தான் ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. எட்டு வயதில் குரங்கு தனது உடலின் அனைத்து தேவைகளையும் முடித்துக்கொள்ளுமாம்… அப்படிப்பார்த்தால் நாம் குரங்காகக்கூட வாழலாம். மனிதனுக்கும் குரங்கிற்கும் யுகங்களாய் சம்பந்தம் இருக்கும்போது குரங்காக வாழாமல் மனிதன் ஏன் மனிதனாக வாழ வேண்டும்? ஏன் என்றால் மனம் என்னும் ரிமோட்டை பயன்படுத்தி மனிதர்களால் மட்டுமே உடல் தேவையை ஒத்திப்போட முடியும். எனது தலைக்குள் பல விஷயங்களை யோசிக்க யோசிக்க தலை பாராங்கல்லைப் போல கனத்தது. தவறு என்று மனதில் நிச்சியமாய் தெரிந்த விஷயம் பிரேமின் கைவிரல்கள் என் மேல் பட்டதும் தவறின் இலக்கணங்களை எல்லாம் மூளையின் எங்கோ ஒரு மூலையில் ஒளித்து வைத்துவிடும். அவனது உதடுகள்… ஆஹ்… அவனது கைகள்… ஆஆஹ்… நான் கவி….  என்  பெயர் கவிதா… tenth std (X B)
அந்த ரிமோட்டை கையில் எடுத்திடத்தான் தனது ஹார்மோன்கள் விடவில்லை என்று கவி புரிந்துகொண்டாள். தவறான பாதையில் அவள் கால்கள் சுற்றித்திரிந்தன.
            கவிதா பத்தாம் வகுப்பு மாணவி, ஸ்வேதா அவளுடைய தாயார். இருவரும் பேசினால் மணிக்கணக்காக பேசுவார்கள். கவி பாடத்திலும் கெட்டி. ஒரு விஷயம் சொன்னால் அதை கற்பூரமாய் பிடித்துக் கொள்வாள்.
            அம்மாவின் கண் அப்பாவின் உயிர் அவள். கவி எது கேட்டாலும் உடனே அவளுக்கு கிடைத்துவிடும். தனக்கு என்று தனி அறை உண்டு அவளுக்கு. கணினியில் எந்நேரமும் கேம் விளையாடுவாள். ஒரு முறை ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு பெயர் சொல்லி.. இந்த முறையில் எந்த நாட்டில் பெயர் வைப்பார்கள்? என்று கேட்டபொது கவி பளிச்சென்று ‘Russia’ என்ற பதில் சொன்னாள். கணினி மூலம் எப்படி உலகைக் கற்றாளோ அவ்வாறே பல வேண்டாத விஷயங்களும் அவள் மனதில் பதிந்தது.
            கவி ஒரு நாள் அம்மாவிடம் கேட்டாள், “அம்மா உங்களுக்கு எந்த ஹீரோ பிடிக்கும்?”
            “ஏன் கவி கேட்கிற?”
            “சும்மாதான்.. தெரிஞ்சிக்கத்தான்..”
            “ரஜினியை தளபதியில் பிடிக்கும்.. கமலை குணாவில் பிடிக்கும்.. இப்படி ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவர் பிடிக்கும்..”   
     “ஓகே அதனால் தான் உங்களுக்கு மேக்ஸிலும் எல்லா சேப்டரும் பிடிக்குதா?” என்று கேட்டு தாயிடம் ஒரு கொட்டு வாங்கிக்கொண்டாள்.
            கவியின் அம்மாவுக்கு இணையதளத்தில் ஈ.பீ பில் கட்டிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் பிரேம் அவளுடைய வீட்டுக் கதவைத் தட்டினான். கவி கதவைத் திறந்தவள் கேட்டாள், “சார்.. யார் வேண்டும்?”
            “இல்லை.. சாரி என் வீடு மாடியில் உள்ளது.. சுஜாதா சார் கிட்ட இந்த சார்ஜர் குடுக்கணும்.. அவர் வீடு?” என்று அவன் கேட்டபோது..
            “எதிர் ப்ளாட்தான்..” என்று பதில் சொன்னாள்.
            பிரேமை அதற்குப் பிறகு பல முறை பார்த்தாள். பிரேம் அவளிடம் எப்போதுமே சிரித்த முகமாய் தான் இருப்பான். அவள்  school bag-க்கை போட்டுக் கொண்டு நிற்கையில் பால்கனியில் கையில் பேப்பர் வைத்திருந்தவன் அவளைப் பார்த்து.. சிரிப்பான்..
            பள்ளி வாசலில் அவளைப் பார்த்தால்.. சிரிப்பைத் தாண்டி ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போவான்.. அவள் தோழி அவள் காதிலே சொன்னாள், “அந்த ஆளைப் பாரேன்.. ச்ச! நம்ம பக்கம் திரும்பின மாதிரி இருந்தது இல்ல?.. எனக்கென்னவோ நம்மையே பார்த்த மாதிரிதான் இருந்தது. ஆனா இந்த வினோ சொல்றா அவன் ரேன்ஜே வேற.. மூன்று முறை லன்டன் போயிருக்கான்.. என் அண்ணன் கூட தான் வேலை பார்க்கிறான், அவனாவது நம்மைப் பார்ப்பதாவது… அவன் நம்மைப் போய் லுக் விடுவானா? “
     கவிக்கு ஜில்லென்று ஐஸ் வைத்தது போல் இருக்கும்.
            பிரேம் தான் அவளை “பெபிகால் லுக்” விடுகிறானே.
கவி இளமை பருவத்திற்குள் நுழையவில்லை பிள்ளைப்பருவத்திற்கு உரிய அசட்டுப் பேச்சகளையும், எல்லோரிடமும் ஒரே சிரிப்பை பகிரும் அந்த குழந்தைப் பருவத்தையும் கடந்துவிட்டாள். அவள் சிறுமியும் அல்ல, குமரியும் அல்ல.. இந்த இடைப்பட்ட பருவத்திற்கு பெயர்தான் என்ன?
            அந்த பதிநான்கு, பதினைந்து வயதிற்கு ஒரு பெயர் வேண்டுமே! நறுக்கென்ற பதில்கள், நீட்டி முழங்காத பேச்சுகள், கண்களில் சிரிப்பை வித்தியாசப்படுத்தும் அந்த பருவத்திற்கு பெயர் வேண்டுமே! அந்த பெயர்தான் என்ன?
            ஒரு நாள் பிரேம் அவள் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தபோது அவளிடம் கேட்டான், “ஹலோ கவி.. உன் பெயர் கவிதான?”  
“ம்.. கவிதா”
            “உங்க Wifi பாஸ்வர்ட் தர முடியுமா? என்னோடது ஏதோ பிரச்சனை கொஞ்சம் நெட்ல வேலை இருக்கு ஆனா நெட்டே கிடைக்கலை.”
            கவி பாஸ்வர்ட் சொன்னாள்.
            கவி அவளுடைய Wifi password கொடுத்தாள். அதற்கு மாறாக அவன் ஒரு கின்டில் கொடுத்தான். அவள், “வேண்டாம் என்னிடம் இருக்கு நான் எல்லா கதைகளும் படித்துவிட்டேன்” என்று சொன்னபோது, “இதுபோல் அது கண்டிப்பாக இருக்காது டிரை பண்ணிப் பாரேன்” என்றான்.
            பிறகு ஒரு நாள் மினரல் வாட்டர் நம்பர் வேண்டுமென்று சொன்னான்… அதைப் பெற்றுக் கொண்டு அவளுக்கு ஹாரி பாட்டர் நாவல் ஒரிஜினல் காப்பி குடுத்துப் படித்துப் பாரேன் என்று சொன்னான்.
            கவி கொடுத்த Wifi  password ‘கிண்டில்’ ஆனது …
            கவி கொடுத்த மினரல் வாட்டர் தொலைபேசி எண்… ஹாரிபாட்டர் நாவல் ஆனது.
            கவி கொடுத்த ஒரு ஃப்ரண்ட்ஷிப் பான்ட் ஒரு குட்நைட் குறுஞ்செய்தி ஆனது..
            கவி கொடுத்த ஒரு இலவச சிரிப்பு ஒரு இலவச… இல்லை இல்லை கடன்கார முத்தம் ஆனது. அந்த கடன்கார முத்தம்… வேறொரு பெரும் பிழை ஆனது.
            “அம்மா என்னை கூப்பிட்டீங்களா? இப்ப தான் டவர் இல்லாதலால மொட்டைமாடியில் சுதாவுடன் பேசிகிட்டிருந்தேன்.”
            “முதல்ல காலை சாப்பாட்டு வேலைய முடி!”
            “Ok ma… எனக்கு கொஞ்சம் பால்கோவா வேணும்.”
            “பிரிட்ஜ்ல இருக்கு எடுத்துக்கோ.” அரை மணி நேரத்தில் சாப்பாட்டு வேலை முடிந்தது.
            “அம்மா இன்று சுதா வீட்டிற்கு போயிட்டு வந்திடுறேன். அவகிட்ட மேக்ஸ் டவுட் கேக்கணும்..”
            “Tenth மாக்ஸ்தான?  Algebra தான? நானே சொல்லித்தறேன். வா, வா, அல்ஜீப்ரா புரிந்ததா? பிராக்டிக்கல் ஜாமன்டிரி டெக்ஸ்ட் புக்கும் கொண்டு வா.”
            இரண்டு மணி நேரம் இறக்கை கட்டிப் பறந்தது. பத்தில் ஆறு கணக்குகள் சரியாகச் செய்தாள் கவி. நான்கு தவறானதுக்கு பிரேமின் இரண்டு முத்தங்களும் இனிக்க இனிக்க அவன் சொன்ன “ஐ மிஸ் யு பேபி” யும் தான் காரணம்.
            “கவி, சனிக்கிழமை கண்டிப்பாக மொட்டை மாடிக்கு வந்திடு, ப்ளீஸ் பேபி. உனக்கு என்ன வேண்டும்? நாளைக்கு எனக்கு சம்பளம் கெரடிட் ஆகும். what do you want babe… name it… name it, its yours..” பிரேமின் கெஞ்சல் மனதில் கேட்க அம்மாவிடம் தப்புத் தப்பாக விடை கூறி மூன்று முட்டாள், இரண்டு அடி முட்டாள் பட்டமும் ஒரு கொட்டும் வாங்கிக் கொண்டாள்.
            அடி வாங்கியும் வெட்கப்படாது இருந்தால் என்ன அர்த்தம்? அடித்தது சரி என்று அர்த்தம்.   அல்ஜீப்பிராவின் “X” “Y” கடிணமாக இருந்தது. காரணம் என்ன? அவன் சொன்ன வார்த்தைகள் மூளையை இன்ச் இன்ச்சாக நிரப்பினால் யக்ஸ்ஸும் ஒய்யும் எங்குதான் போகும்? name it name it… its yours என்று அவன் சொன்ன வார்த்தைகள் மூளையை இன்ச் இன்ச்சாக நிரப்பினால் யக்ஸ்ஸும் ஒய்யும் எங்குதான் போகும்?
            கவியின் காதுகளில் அங்கு பேசிய பேச்சுகள் தெள்ளத் தெளிவாக ஞாபகம் வந்தது.
            “உன் அழகு என்னை மயக்குது கவி. oh… my sweet little devil…”
            “பிரேம் சிகரட் பிடித்தியா? நீ கிஸ் பண்ணும் போது வாடை வருது.”
            “ஒரு இழுதான் டா. என் அப்பா பழக்கம் என்னை டெம்ட் பண்ணுது.”
(மகன் முன்பு சிகரட் பிடிக்கக் கூடாது என்று அந்த தந்தைக்கு யார் சொல்லிக் கொடுப்பது?)
            “சிகரட் பிடித்தால் கேன்சர் வரும் தெரியுமா?”
            “சரி சரி அதை விடு..” என்று சொன்னவன் பிறகு மறந்துகூட பேசவில்லை அவளை பேச விடவும் இல்லை.
            முத்தம் எத்தனை வகை என்று அவன் சொல்லிக் கொடுத்தபோது அவள் அசைவற்றுப் போனாள். விரல்களைக் தொட்டதும் சுருண்டாள். மூச்சுக் காற்றில் திணறிப் போனாள். பிரேம் அவளது எண்ணற்ற முக மாற்றத்தை… அவன் தொடுகையில் நிகழும் எண்ணற்ற முக மாற்றத்தை கண்டு ரசிக்கும் ரசிகன் ஆனான்.
“கவி என்னுடன் பேச வாயேன்.” என்று மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றவன் பேசுவதை மறந்துவிட்டு மற்றதைச் செய்தான்.
            பள்ளியின் பாடங்கள் யாவும் வெட்டிப் பேச்சுகளாகத் தெரிந்தன கவிக்கு, அவன் பேச்சுகள்.. அவன் கவி என்று கூப்பிட்டால் கூட அடி.. ஆத்தாடி.. என்று மெட்டு இல்லாமல் மனது பாட்டுப் பாடும்.     மூங்கில் மரத்தின் உரசுதல்கூட இவ்வளவு வெப்பம் கொடுக்காது. அவன் தொடுகை கொடுத்தது… எரிந்து முடியாத கங்கின் வெப்பம்.
            உடல் நோகாத காய்ச்சலின் வெப்பம், மனம் கூடச் சுடும் வெப்பம்..
 போதும் என்று சொல்லத்தோன்றாத இனிப்பு.
*****

Advertisement