Advertisement

                 போட்டி நாள். . .
            ஜாஃபர் பரபரப்பாக வேலை செய்தான். கலீம் அவனிடம், “தேவையில்லாமல் எதற்கு பெட் வைப்பானேன்? பிறகு இப்படி அல்லாடுவானேன்?” என்று கேட்டான்.
“கலீம் நல்லா படிச்சியா?” என்று ஜாஃபர் கேட்டான்.
“எதுக்கு?”
“எதுக்கா? இன்றுதான்டா போட்டியே!”
“ஓ.. படிச்சாச்சு! படிச்சாச்சு!”  என்று ஜாஃப்ரை சமாதானம் செய்தவன் அகிலிடம் திரும்பி,
“அகில் நீ படிச்சிட்டியா? உனக்கென்ன உன் மேல்மாடி படு கெட்டி நீ கவலைப்படத் தேவையில்லை!” என்று சொன்னபோது,.
“கவி எனக்கு ஈசியாகதான் கேள்வி கேட்பா! நாங்க எல்லாம் திக் ஃப்ரண்ட்ஸ் தெரியுமா? ஜாஃபர் தான பெட் வச்சான்? அவன் தான் விழுந்து வழிந்து படிக்கணும்!” என்று அகில் சொல்லும்போதே கௌஷிக்கும் வந்து சேர்ந்தான்..
“ஜாஃபர் இது என்ன?” என்று தனது கைபேசியின் அழைப்புகளை அவனிடம் காண்பித்தான் கௌஷிக்.
 ஜாஃபர் அவனிடம் “இன்று ஞாயிற்றுக்கிழமை. கௌஷிக் நீ மறந்து காலையில் தூங்கிடக்கூடாதுல்ல.. அதான்..”
“அதுக்காக? பதிமூன்று மிஸ்டு காலா? ரொம்ப ஜாஸ்தி! அவன் காலர் டோனை முதலில் மாற்ற சொல்லு அகில்.. “கௌஷிக், Your friend is calling you” என்று வருது. ஞாயிற்றுக்கிழமை ஏழு மணிக்கு எழுப்பினால் அவன் என் ஃப்ரண்டே இல்லை தெரியுமா?”
“விடு டா கௌஷிக் அவனுக்கு பயம்.. எங்கே கவிகிட்ட தோத்துப் போயிடுவோமோ என்று” என்ற சமாதானத்தை அகில் சொல்லும்போது, கவி, கண்மணி, ஸ்வர்ணா மூவரும் வந்து சேர்ந்தனர்.
******
போட்டி இனிதே முடிந்தபோது கவியிடம் விலையுயர்ந்த மருத்துவ புத்தகங்கள் நான்கு இருந்தன.
கண்மணி தனது ஆப்பிள் ஃபோனை இறுகப்பற்றியபடி ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள்.
ஆம் போட்டியில் கவி வென்றுவிட்டாள். பெண்கள் தங்களது கைபேசியை இழக்கவில்லை.
ஜாஃபர் அகிலிடம் கேட்டான், “எப்படி எப்படி?? நீயும் கவியும் ஃப்ரண்ட்ஸ் அதனால கவி ஈசியாதான் கேள்வி கேட்பாளா? நம்ம கேள்விகளுக்கும் அவுங்க கேட்ட கேள்விகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்… நம்ம கேள்விகளுக்கு ஆன்சர்ஸ் எல்லா டெக்ஸ்ட் புக்லயும் இருந்தது. ஆனா அவுங்க கேட்ட கேள்விகள்…”
“கேள்விகூட எந்த டெக்ஸ்ட் புக்லயும் இல்ல டா…” என்று ஜாஃபரின் வாக்கியத்தை அகில் முடித்தான்.
“மூனும் விடிய விடிய தூங்கல போல… என்னோட பெரிய வாப்பா கவியின் தீவிர ரசிகனாக மாறி பத்து நிமிஷம் ஆச்சு.” என்று சொல்லி கலீம் தன் பங்கிற்குப் புலம்பியபோது அகில் தூரத்தில் கவியின் சிரிக்கும் இதழ்களைப் பார்த்து, ஐ லவ் யூ டாமிட்… Hey nerdy girl… I love your stupid nerdy brain… என்றான் மனதிற்குள்.
  அகில் கவியை, கவியின் புத்தியை காதலித்துக்கொண்டே இருக்க, கவி அகிலின் காதலைக் கண்டுபிடிக்காமலே பல நாட்கள் கடந்தன. ஒரு நாள்          கவி மருத்துவமனை செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்தாள். அவள் அருகே இரண்டு வாலிபர்கள் தள்ளுவண்டியில் இளநீர் விற்பவரிடம் இளநீர் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தனர். கவியும் ஒரு இளநீர் வாங்கினாள். அப்போது …
            “ஏய் இப்ப எந்த ஸ்டேஜ்? கடைசிக் கட்டம் எப்ப மச்சான்?? நீ லவ் பண்ண ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது..”, இப்படி அந்த வாலிபர்களில் ஒருவன் கேட்க, “நல்லா போய்கிட்டு இருக்கு… பொண்ணுதான் கொஞ்சம் பயப்படுத்துப்பா.. அதான் மெதுவா….” என்று கட்டம் போட்ட சட்டைக்காரன் பதில் அளித்தான்.
            முதலில் கேள்வி கேட்டவன் தனது வாட்டர் பாட்டிலை அவனிடம் தூக்கிப்போட்டுச் சொன்னான், ‘catch’ அந்த இளநீர் கடையில் கவி அவர்கள் பேசியதை முழுவதும் கேட்டாலும் அவன் “கேட்ச்” என்று இரண்டு அர்த்தத்தில் சொன்னது மட்டும் நன்றாகத் கேட்டது.
            பிறகு குடித்த இளீநீரை குப்பையில் போடும் சாக்கில் “கேட்ச்” என்று சொன்னவன் பக்கத்தில் சென்றாள் கவி.
  “அந்தப் பொண்ணு உன் கூடப்பிறந்த தங்கச்சியா? “- கவி அவனிடம்.
“…..”-  பதிலற்று அவன்… (கேட்ச் என்று இரண்டு அர்த்தத்தில் சொன்னவன்.)
“உன் தங்கச்சியோட அவன் எந்த ஸ்டேஜ்ல இருந்தாலும் உனக்குப் பிரச்சனை இல்லையா?” – கவி அவனிடம்.
 அவன் முறைக்கவும், “ஓ… கோபம் வருதா?” என்று நக்கலாய்க் கூறிவிட்டு நகர்ந்தாள் கவி.
            அவன், கவியின் கேள்வியால் அதிர்ச்சியடைந்து நின்றபோது கவியின் பஸ் வந்தது. கவி இருவரையும் கோபப் பார்வை பார்த்துவிட்டு பஸ்ஸில் ஏறினாள். மருத்துவமனை சென்றதும் கேன்டீனுக்குச் சென்று ஒரு ஃப்ருட் சாலட் சர்க்கரையில்லாமல் ஆர்டர் கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்தாள். காலை எட்டு மணி, கேன்டீனில் எண்ணி மூன்று பேர்தான் இருந்தனர்.
அந்த இடமே அமைதியாக இருந்தது. ஆனால் கவியின் மனதில் துளிகூட அமைதி இல்லை. ‘CATCH’ என்ற வார்த்தை மனதை அமைதியற்று இங்கும் அங்கும் திரியவிட்டது.
******
பல வருடங்களுக்கு முன்பு…
எந்த வருடம்???? எப்போதும் போல அது ரகசியம்…
“சரி உன்னோட வயசை நீ சொல்ல வேணாம். ஆனா எந்த வருஷம் பிறந்த என்று மட்டும் சொல்லு கவி பேபி.”- பிரேம்.
“ஏய்.. என்ன எப்பப்பாரு அதையே கேட்டுட்டு இருக்க? லீவ் இட்..”- கவி
“ஹும் ஹும்.. சொல்லுப்பா கவி ப்ளீஸ்.”
“எதுக்கு?”
“ஐ ஆம் டாம் curious kavi… ப்ளீஸ்..”
“அதான்… I know You are damn curious… அதான் எனக்கும் சொல்லத் தோணலை.”
“யூ.. யூ லிட்டில் டெவிள்…” என்று கவியைக் கொஞ்சியவன் அவளது பஞ்சுக் கன்னத்தில் முத்தமிட்ட உதடுகளால் மீண்டும் அவளிடம் “மை ஸ்வீட் லிட்டில் டெவிள்.” என்றான்.
******
இன்று
2019….
கேன்டீனில் கவியின் மனதில் துளிகூட அமைதி இல்லை. ‘CATCH’ என்ற வார்த்தை மனதை அமைதியற்று இங்கும் அங்கும் திரியவிட்டது.
பிரேம், அவனது முத்தங்கள்,
பிரேம், அவனது கைகள்…
பிரேம், அவனது உதடுகள்…
பிரேம், அவனது “லிட்டில் டெவிள்.”
அவனது “எல்லாம்” கசப்பு இலைகள், கசப்பு கனிகள், கசக்கும் பூக்கள் நிறைந்த காடாய் அவள் நினைவுகளில் எட்டிப் பார்த்தன…
ஒவ்வொருவரின் வாழ்க்கைப் புத்தகத்திலும் சில கருப்புப் பக்கங்கள் இருக்கும். கவியின் நினைவலைகள் அவளது வாழ்க்கையின் கருப்புப் பக்கங்களைப் புரட்டியபோது கவியின் உள்ளம் முழுதும் பாவ மன்னிப்புகள் நிரம்பி இருந்தன.
 தனது பள்ளிப் பருவத்திற்கு வரமாட்டேன் என்றவளை கைபிடித்து தர தர வென்று இழுத்துச் சென்றது கவியின் நினைவலைகள்.
அவளுக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்தது. அது 2006 ஆம் வருடம்.
அவள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.
கவியின் நினைவுகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவியை அவள் எண்ணப் போக்கில் விட்டு விட்டு, 2006ஆம் வருடத்தில் இருந்து பயணம் மேற்கொண்டால்… அந்தப் பயணம் நிச்சியமாக இப்படித்தான் தொடங்கி இருக்கும்.
பயணம் தொடங்குகிறது. . . .
வருடம் என்ன?
2006, இனி இது ரகசியம் இல்லை.
2006 ஆம் வருடம்….   
மதுரை வெற்றி தியேட்டர், ஏ.சி.யில் “இம்சை அரசன் புலிகேசி” படத்தைப் பார்த்த கவி அம்மாவிடம் சொன்னாள், “அம்மா, உங்க சேலை முந்தானை தாங்களேன்!”
            “ஏன் கவி?”
            “அம்மா தியேட்டர் குளிர் தாங்கலை..”
            “ஓ அப்படியா கவி, இந்தாடா.. நல்லா மூடிக்கோ !”
            “என்ன கவி இது? இந்த குளிர் தாங்க முடியாதா?” – இப்படி கவியை அதட்டுவது கவியின் ஆச்சி.
“ஸ்வேதா நீ உன் பொண்ணுக்கு ரொம்ப செல்லம் தர்ற… உன் வீட்டுக்காரர் பக்கத்தில் இருப்பதால், நான் பேசாமல் இருக்கிறேன்.. இல்லை என்றால் என்றால் உன் மகளுக்கு நல்ல அர்ச்சனை கிடைத்திருக்கும்” என்று தனது வசவு சொற்களை மகளுக்கும் சேர்த்துக் கொடுத்தார்.
            “அம்மா! அவர் காதில் விழப்போகுது! அப்புறம் தனது சட்டையைக் கழட்டி மகளுக்கு கொடுத்துடுவார்! உங்கள் மருமகன் சட்டையில்லாமல் தான் படம் பார்க்கணுமா சொல்லுங்க? அதை விடுங்க, அவர் நாளை ஆஸ்திரேலியா போகிறார். வீட்டிற்கு போகும் முன் நம் தெரு விநாயகர் கோவிலில் சூடம் ஏற்றணும். எனக்கு ஞாபகப்படுத்துங்க! சரியா?”
            “ஆனாலும் உன் மகளுக்கு இவ்வளவு செல்லம் ஆகாதடி!”
*****

Advertisement