Advertisement

    திருமணப் பேச்சால் கோபம் கொண்ட கவி மீண்டும் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று குறிப்பெடுக்க ஆரம்பித்தாள். ஒரு உள்நோயாளியின் டிஸ்சார்ஜ் சம்மரி தயார் செய்து கொண்டிருந்தார்கள். சுதாவிடம் பேசிவிட்டு கௌஷிக்கும் அவளுடன் இணைந்துகொண்டான். கவி முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாள். அவளுக்கு அந்தத் திருமணப்பேச்சில் அத்தனைக்கோபம். அகிலைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதால் அவளுக்கு கோபம் இல்லை, அகில்… is a perfect gentleman. அவளைப் பற்றிய ரகசியங்கள் அனைத்தும் தெரிந்த சுதா எதுவுமே நடக்காததுபோல தனது திருமணப்பேச்சை எடுத்ததால் தான் கோபம்.
     அகில் அறைக்குள் நுழையும்போதே கவியிடம் தலையசைத்து மௌனமாய் ஒரு குட்மார்னிங் சொன்னான். நேற்று இரவு நாராயணன் அவர்களுக்கு ஒரு அறுவை சிகிச்சையில் உதவியவன், அந்த சிகிச்சையின் ரிப்போர்ட்டுகளை சேகரித்து வருவதற்குள் மணி பதினொன்றானது. அறைக்குள் நுழைந்தவன் கவியும் கௌஷிக்கும் இறுகிய முகமாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, ‘காரணம் என்ன?’ என்று சைகையில் கேட்டான்.
            இருவரும் “ஒன்றுமில்லை” என்று சைகை பாஷையில் தோளைக் குலுக்கிச் சொன்னாலும்.. அவன் அதை நம்பவில்லை. ஆனால் நாராயணன் அவர்கள் மூவரையும் அதற்கு மேல் சைகை பாஷையில் பேச விடாமல் வேலை கொடுத்தார். கவியும் அகில் மேற்கொண்டு கேள்வி கேட்டு துளைக்காதலால் நிம்மதி அடைந்தாள். அகில் சுத்த சைவம். மதியம் கேன்டீனில் மூவரும் சைவ உணவு சாப்பிட்டுக்கொண்டே பேசினர்.
            கௌஷிக் தண்ணீரைக் குடித்தபோது, அகில் அவனிடம் கேட்டான், “என்ன கௌஷிக் காலையில் அம்மாவுடன் ரொம்ப நேரம் ஃபோனில் பேசிக்கிட்டு இருந்த?  ம்? என்ன விஷயம்?  
கவிக்கு புரையேறியது… செருமினாள். கொஷிக்கை பார்வையால் “சொன்ன… செத்த..” என்று எச்சரித்தாள்.
கொஷிக் அகிலின் கேள்விக்கு அசடாய் சிரித்தான்.
“ஸ்வர்ணாவின் ஃபோன் நம்பர் அம்மாகிட்ட கேட்டியா? அம்மா நீ என்ன பேசின என்று சொல்ல மாட்டிக்கிறாங்களே.. ம்? விஷயம் என்ன?“
கவி மீண்டும் கண்ணால் கௌஷிக்கிடம் எச்சரிக்கை செய்தாள்.
“ஒண்ணும் பெருசா இல்லடா.”- கௌஷிக்.
“அப்படியா? உன்னோட அம்மா உன்னோட கல்யாண விஷயமா என்கிட்ட பேசுனாங்க கௌஷிக்..”
‘ஹா… ஹா… இரண்டுபேர் அம்மாவுக்கும் நம்மளை யார் கையிலயாவது பிடிச்சிக்கொடுக்கணும்னு ஒரே நேரத்துல தோணிருக்கு..’ என்று மனதில் நினைத்த கௌஷிக் அதைச் சொல்லாமல் சிரிக்க மட்டும் செய்தான்.
“ஸ்வர்ணா பற்றி உன்னோட அம்மா என்கிட்டச் சொன்னாங்க..” –  அகில்.
“அப்படியா?”- கௌஷிக்.
“ம்… Yes. ஸ்வர்ணா ரொம்ப அமைதி. அவளுக்கு உன்னைப் பிடித்தால் நீ லக்கிதான். நீதான் காலம் முழுக்க பேசணும், அவள் வாயே திறக்க மாட்டா. உன் அம்மாவுக்குதான் ஸ்வர்ணாவை ரொம்ப பிடிக்குதாமே. நேற்று கூட என்னிடம் சொன்னாங்க. உன் அம்மா நல்லா செலக்ட் பண்றாங்கப்பா.”
            அப்போதும் கௌஷிக் மனதில் பேசிக்கொண்டான்,
            “அகில், உன் அம்மா செலக்ஷன் இன்னும் டாப். நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுதும் பேசிக்கிட்டே இருக்கணும், வாழ்நாள் முழுதும் சண்டை போடணும் என்று உன் அம்மா ஆசைப்படுறாங்களே! அதற்கு என் அம்மாவை நான் கோயில் கட்டி கொண்டாடணும். என் தங்கக்குட்டி ஸ்வர்ணா இஸ் எ குட் சாய்ஸ். ஸ்வர்ணா இஸ் மை ஏன்ஜல். பிகாஸ் “ஏன்ஜல்” எப்போதும் கேள்வி கேட்பதில்லை. ஒரு அரை மணி நேரம் முன்பு நீ வந்திருந்தால் உனக்கும் விஷயம் புரியும். உன் அம்மா சுதாவிடம் சொன்ன மேரேஜ் ப்ரோபோசல் பற்றி உனக்குத் தெரியாமல் போனது நல்லது தான். விஷயம் தெரிந்து இப்போது தான் என்னையும் சுதாவையும் வெளுத்து வாங்கினா கவி…”
அகில் அதற்குப்பிறகு கௌஷிக்கின் திருமணப் பேச்சை பேசாமல் மருத்துவப் பணிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.
கவி அவசரம் அவசரமாக சாப்பாட்டை மென்றும் மெல்லாமலும் இடத்தைக் காலி செய்தாள்.
கேன்டீனை விட்டுச் சென்றதும் கவி தனது வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அவளைப் பொறுத்த வரை அகிலுக்கு விஷயம் தெரியாத வரையில் அவளுக்கும் நிம்மதியே. “நிம்மதி!”, அதுதான் இன்று போய் நாளை வரும் என்ற உறுதி நமக்குத் தருவதில்லையே.
கவி வெளியே செல்வதைப் பார்த்துக் கொண்டே அகில் கௌஷிக்கிடம் கேட்டான்,
            “என்ன கௌஷிக்? அம்மா கேட்டதற்கு மாட்டேன் என்று சுதாவிடம் சொல்லி அனுப்பிட்டாளா?”
 “அகில் உனக்குத் தெரியுமா? எதுவுமே தெரியாதது போல இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்த?”
            “நான் தான் அம்மாகிட்ட எனக்கு கவியைப் பிடித்திருக்கு என்று சொன்னதே! நான் சொன்னதா சொல்ல வேண்டாம் என்று மட்டும் கண்டிப்பா சொல்லிவிட்டேன் கௌஷிக்! கவி என்னதான் நல்லா சிரிச்சி பேசினாலும் அவள் தள்ளி நின்றுகொண்டு ஒரு சிகப்பு கோட்டுக்குள் இருப்பது போலத்தான் இருக்குது. அதனால் தான் நானே நேரில் கேட்கலை. அவள் ஏதாவது காரணம் சொன்னாளா?”
            கௌஷிக் மறுப்பாய் தலை அசைத்தான்.   அகில் தனது நண்பனிடம் தனது ஆசைகளை எந்த வார்த்தைகள் கொண்டு விவரிக்கலாம் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக மேலும் பேச ஆரம்பித்தான்.
“கவியை ரொம்ப பிடிச்சிருக்கு கௌஷிக். ஆனா எப்படி நெருங்க என்றுதான் தெரியலை. முகத்தைப் பார்த்து நேருக்கு நேர் கேட்டுவிடுவேன். ஆனால் அவள் மறுத்திட்டா பிறகு சேர்ந்து வேலை பார்ப்பது கூட சிரமமாகிவிடும் கௌஷிக். அந்த ஒரு காரணத்திற்காகத்தான் பொறுமையாக இருக்கேன். ஒரு வருஷத்திற்கு மேலாக சேர்ந்து வேலை செய்கிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் PG NEET பரீட்சை வந்திடும். அப்புறம் எல்லோரும் அவங்க அவங்க பாதையில் போயிடுவாங்க. அதற்குள்ளே கவியை எப்படி சம்மதம் சொல்ல வைப்பேன் என்றே தெரியலை. “நோ” என்ற பதில் வராது என்று தெரிந்த பிறகுதான் ப்ரபோஸ் பண்ணணும் என்று நினைத்திருக்கேன் கௌஷிக். அவள்தான் நான் சைட் அடிப்பதை கவனிக்கவேயில்லை. நீ கூடவா கவனிக்கலை?  ரேஷ்மா என்னோடு இருந்திருந்தா எப்பவோ கண்டுபிடிச்சிருப்பா தெரியுமா?”
            கௌஷிக் அகில் சட்டைப் பாக்கெட்டை இறுகப் பற்றியிழுத்துச் சொன்னான், “அகில் உன் பிள்ளைக்கு என் பெயர்தான் வைக்கப்போற.. சரியா? நான் தானே உங்களை சேர்த்து வைக்கப்போறதே!”
“thanks டா”  – அகில்.
               ******
சில நாட்களுக்குப் பிறகு…
“அகில் இந்த புக் படிக்க வைத்துக்கொள், நேற்றுதான் எனக்கும் உனக்கும் லைப்ரரியில் எடுத்தேன்.. ரொம்ப நல்லாயிருக்கு.”
            “கவி நீ எப்படி பரீட்சைக்கு படிக்கிற? இன்னும் மூன்று மாதத்தில் பரீட்சை வருதே. நான் என் ஃப்ரண்ட்ஸ்சுடன் தான் இப்போதெல்லாம் படிக்கிறேன்.”
            “பரீட்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஹாஸ்பிட்டல்ல இருந்து ரிலீவ் ஆகிடுவேன் அகில்.”
“ஓ! அப்புறம்?”
            “கௌன்சிலிங் வரை ரெஸ்ட்தான், அம்மாவும் அப்பாவும், ஆஸ்திரேலியா கூப்பிடுறாங்க, அங்கதான் போகணும். நீ என்ன செய்யப்போற அகில்?”
            “நான் ஹாஸ்பிட்டல்ல தொடர்ந்து வேலை செய்வேன் கவி. பி.ஜி சேரும்வரை இங்கதான். எங்க சீட் கிடைத்தாலும் அம்மாவை என்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடுவேன்.”
            “oh… Super அகில்.”
            “நீ என்னுடன் என் ஃப்ரண்ட்ஸ் வீட்டிற்கு மாலையில் வர்றியா? நேரத்தை வீணாக்காமல் படிப்பதில் மட்டுமே எங்கள் அனைவரின் கவனமும் இருக்கும் வர்றியா?”.
            “ம். சரி அகில். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்றால் அடுத்து வரமாட்டேன். நீ உங்களுடைய நோட்ஸ் மட்டும் எனக்கு கொடுத்தால் போதும்.”
            “நீயும் வந்துதான் பாரேன்!”
******
பல வருடங்களுக்கு முன்பு…
எந்த வருடம்???? அது ரகசியம்… ஆனால் பின்னால் வருடத்தின் விபரம் தரப்படும்.
“யேய் கவி உன்னோட வயசு என்ன?”- பிரேம்.
“எதுக்கு கேட்குற?”- கவி.
“சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னுதான் கேட்டேன் தப்பா?”
“பிரேம் நீ ரொம்ப சிகரெட் பிடிக்கிற… உன்மேல ஒரே சிகரெட் வாடை…”
“ஏய் பேச்ச மாற்றாத, உன்னோட வயசு என்ன?”
“என்னோட வயசு என்னவா இருக்கும்? 80?? 70?? 60??”- கவியின் செர்ரி இதழ்கள் அவனிடம் அசடாய் கேட்க பிரேம் அந்த செர்ரிகளை  பறித்துக்கொண்டான்.
*****
இன்று…
 
2019
தனது நண்பர்கள் கண்மணி, ஸ்வர்ணா, கலீம், கௌஷிக், அகில் மற்றும் ஜாஃபர் அனைவருக்கும் கவியை அறிமுகம் செய்து வைத்தான் அகில். கலீமின் வீட்டில் தான் குரூப் ஸ்டடி…
கலீமின் பெரிய தந்தை ஒரு டாக்டர். M.D முடித்த பிறகும் படித்துக் கொண்டே பல பட்டங்கள் பெறும் டாக்டர். அவரும் கலீமிற்கு உதவுவார். நிறைய புத்தகங்கள் வாங்கிக்கொடுப்பார். கலீம் வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்த கவி அரண்டுதான் போனாள். அவை அனைத்தும் மிக மிக விலை உயர்ந்தவை. நூலகத்தில் கூடக் கிடைக்காது. இங்கு வந்தது சரியே என்று அந்த புத்தகங்களைப் பார்த்தபோதுதான் அவளுக்குத் தோன்றியது.
தனது புத்தகங்கள் யாவையும் இவற்றோடு ஒப்பிட்டால் ஒரு எறும்பு போலத்தான் இருக்கும் என்று எண்ணியவள் அவள் கொண்டுவந்த புத்தகங்களை வெளியே எடுக்கவேயில்லை. கலீமின் பெரிய தந்தை, இடத்தைவிட்டு அசையவில்லை. ஒரு ஓரமாய் நாற்காலியைப் போட்டுக் கொண்டு ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். வாசித்தாரா? கண்காணித்தாரா?
            பக்கம் பக்கமாக பயோகெமிஸ்ரியும், நியுரல் சைன்சும்,  ஹுமன் அனாடமியும் பல அறிஞர்கள் எழுதிக் குவித்திருந்தார்கள். அவற்றைப் படித்து மனப்பாடம் செய்து பிறகு பரீட்சையில் கேட்கும் கேள்விக்கு பதிலை மனப்பாடம் செய்த பாடத்திலிருந்து கண்டுபிடிப்பதற்குள் அவர்கள் குழம்புவதை கலீமின் பெரிய தந்தை பார்த்துப் பார்த்து, தனது பொழுதைக் கழிப்பார்.
அவர் தயார் செய்யும் ‘மாதிரி’ வினாத்தாள் அவருக்கு அவ்வளவு கர்வம் கொடுக்கும். கவி வந்து சேர்ந்த அரை மணி நேரத்தில் அகிலின் நண்பர்கள் ஆறுபேரும் ஞானப்பழங்கள்தான் என்பது கவிக்கு தெளிவானது. இரண்டு மணி நேரம் ஒரு சாப்டர் படிப்பார்கள். கலீம் அங்கிளிடம் கேள்வி கேட்கச் சொல்லுவார்கள். அவர் கேட்கும் கேள்விக்கு யார் பதில் சொல்வது என்று போட்டி நடக்கும்.
            ஒரு வாரம் மிக மிக சுவாரஸ்யமாக சென்றது.
            ஜாபர் கவியிடம் ஒரு கேள்வி கேட்டான். கவி அவனிடம் அந்த கேள்விக்கு மூன்று சரியான பதில் சொன்னாள். அவன் அசந்துதான் போனான்.
            ஜாஃபர் கவியிடம் “ஏன் இத்தனை புத்தகங்கள் புரட்ட வேண்டியிருக்கோ?” என்று சலித்துக் கொண்டபோது கவி, “ஒன்றா? இரண்டா? ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மனிதர்கள் உடல்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்ததை ஒரு புத்தகத்தில் திணிக்க முடியாதே.” என்றாள்.
            “சரி தான். ஆனால் எல்லாவற்றையும் மண்டைக்குள் திணிப்பதுதான் இங்கு உதைக்கிறது. நீங்கள் லேடி டாக்டர்ஸ் கைனகாலஜி இல்லை கண் பிரிவில் ஈசியாக செட்டில் ஆகிடுவீங்க! ஆனால் நாங்கள்தானே மாட்டுவது ஹார்ட், லங்ஸ் என்று டஃபான துறை செலக்ட் செய்யும்போது திண்டாடவேண்டியிருக்கு!”
            “ஜாஃபர் நீ என்ன சொல்ற? லேடி டாக்டர்ஸ்க்கு தான் கைனகாலஜி என்ற துறையே இருக்குன்னு சொல்றியா? இல்லை கைனகாலஜியை மட்டுமே நாங்கள் இலக்காக வைத்துப் படிக்கிறோம் என்கிறாயா?”
            “எப்படி வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் விஷயம் ஒன்றுதான். டாப் மோஸ்ட் இடங்கள் எல்லாம் யார் நிரப்புறாங்க? ஆண் மருத்துவர்கள்தான். தெயர் ஜாப் இஸ் த ட்ஃபஸ்ட்”
            “ஓ. அப்படினா நீ அதற்கு தயாராக இருக்கியா?”
            “எதற்கு?”
            “டஃப் ஜாப்பிற்கு?(Tough job)”
            “நிச்சியமாக!”
            “சரி இப்போ நீ தயாராக இருக்கியா? இல்லை நான் தயாராக இருக்கேனா என்று பார்ப்போமா?”
            “எப்படி?”
            “வெகு சுலபம். ஒரு போட்டி வை. என்னை மதிப்பிடு. நானும் ஒரு டெஸ்ட் வைக்கின்றேன். யார் டஃப் ஜாபிற்கு (Tough job) தயாராக இருக்காங்க என்று தெரிந்து விடும்! என்ன சொல்ற?”
 இவ்வளவு நேரமும் இவர்கள் வாக்குவாதம் கேட்ட கண்மணி சொன்னாள், “என்னிடமும் கேள்வி கேளு ஜாஃபர். நீ சொல்வது தவறு.”
            ஜாஃபர் இதை எதிர்பார்க்காமல், “சரி, பெட்டை ஃபிக்ஸ் பண்ணலாம்.” என்று கூறி பேச்சை முடித்தான்.
            “ஓ! அப்படினா நான் bet match நடத்தவா?” என்று அங்கிள் கேட்க,
            “இல்லை, இல்லை அங்கிள். ஜாஃபர் அவனுக்குத் தெரிந்ததை என்னிடம் கேட்கட்டும். நானும் எனது மூளையை கசக்கி அவனிடம் கேள்வி கேட்கிறேன்! யாருக்கு பதில் சொல்ல முடியுதுன்னு பார்ப்போமே!” என்று கவி சொன்னாள்.
            “பொண்ணுங்க பக்கம் மூனு பேர் தான் இருக்கீங்க! பசங்க நாலு பேர் இருக்காங்க, ஒன்றும் பிரச்சனை இல்லையே?”
            “ஒன்றும் பிரச்சனை இல்லை அங்கிள். We can manage…” என்று கவி துடுக்காக பதில் தந்தாள்.
            “சரி அப்ப பெட் பற்றிப் பேசுவோம். பாடத்தை இன்னும் சுவாரசியமாக படிப்பீங்க!” – அங்கிள்
 “சரி அங்கிள். நான் ஒரு ப்ளான் வச்சிருக்கேன்! எங்கள் கேள்விகளுக்கு ஐ லே த ரூல்ஸ்! அப்புறம் பசங்க அவங்க கேள்விகளுக்கு அவங்க ரூல்ஸ் வச்சிக்கட்டும்.  எங்க கேள்விக்கு அவுங்க எப்படி ஆன்சர் பண்றாங்க… அவுங்க கேள்விக்கு நாங்க எப்படி ஆன்சர் பண்றோம்னு பார்த்து நீங்க ஜட்ஜ்மென்ட் தாங்க அங்கிள்.”
அங்கிள் சம்மதமாக தலை அசைக்க..
“முதலில் போட்டியில் ஜெயித்தால் என்ன பரிசு? பரிசை ஜெயிப்பவர் முடிவு செய்யலாம். நாங்கள் ஜெயித்தால்.. அதோ அந்த ஷெல்ப்பில் இருக்கே.. அந்த புக்ஸில் எங்களுக்கு பிடித்த நான்கு புக்ஸ் எடுத்துக்குவோம். உங்களுக்கு… ஜெயித்தால்… என்ன வேண்டும்?” – கவி.
“அதென்ன நான்கு புக்ஸ்? நீங்க மூன்று பேர் தான இருக்கீங்க?” என்று கலீம் கஞ்சத்தனம் பிடிக்க, கவி சொன்னாள், “கலீம் நாங்க மூன்று பேர், நாலு பேரை ஜெயித்தால் எங்கள் பரிசும் பெரிதாகதானே இருக்கணும்?”
கலீம் ஒன்றும் சொல்லாமல் தங்களது பரிசைச் சொன்னான்.. “எங்களுக்கு உங்கள் மூவரின் கைபேசி வேண்டும்..”
   என்ன இவன்… நாம நாலு பேர் இருக்கோம். மூன்று பேரோட ஃபோன் மட்டும் கேட்கிறான்… என்று நினைத்த ஜாஃபர், கலீமின் காதில், “டேய் மூனு ஃபோன் தான டா வரும்? நாம நாலு பேரு இருக்கோம்.” என்று சொன்னான்.
உடனே கலீம் கண்மணியிடம்,
“கண்மணி உன்னிடம் இரண்டு ஆப்பிள் ஃபோன் இருக்குதுல்ல? கவி உன்னோடது ஆஸ்திரேலியன் மேட் தான?” என்று கேட்டான்.
கண்மணி பல்லைக் கடித்தபடி ஆம் என்றதும்,
“ஸ்வர்ணாவோடது டப்பா ஃபோன் தான். ஆனா கௌஷிக் அதை பத்திரமா வச்சிக்குவான்… ஒண்ணும் பிரச்சனை இல்ல, நானும் ஜாஃப்ரும் கண்மணியின் ஆப்பிள் ஃபோன் வச்சி அட்ஜெஸ்ட் செய்துக்குவோம். அகிலுக்கு கவியின் ஆஸ்திரேலியன் மேட் ஃபோன். எங்க நாலு பேருக்கும் நாலு ஃபோன். கணக்கு சரியா வருதுல?” என்று அனைவருக்கும் விளக்கம் தந்தான் கலீம்.
“எப்ப கேம் வச்சிக்கலாம்?” என்று ஜாஃபர் கேட்டதற்கு
“ஞாயிற்றுக்கிழமை வச்சிக்கலாம்?” என்றாள் கவி.
“சரி ஆல் த பெஸ்ட்”
            “பை. நாளை பார்க்கலாம்!” கவி சீக்கிரமே கிளம்புவதைப் பார்த்ததும் அகில் அவளிடம் வந்து தானே அவளை தனது காரில் இறக்கிவிடுவதாகச் சொன்னான். கவியும் சரியென்று அவனுடன் சென்றாள். விடுதியில் இறக்கிவிட்டவன் காரிலிருந்து இறங்கி பார்க்கிங் ஏரியாவில் கவியுடன் பேச ஆரம்பித்தான்…
“கவி, நான் இந்த பெட்டை உண்மையில் விரும்பவில்லை. நீங்க பெட் பற்றிப் பேசிட்டு இருந்ததை எல்லாம் கேட்டேன். ஃப்ரண்ட்ஸ்குள்ள இது தேவையா?”
கவி சிரித்தாள்.
“ஓ… ப்ரஸ்டீஜ்… Feminism… I Get It…” – அகில்.
            “Yes… prestige… Feminism… But you will never get it… you can not understand it.”
அகில் சிரித்தான்.
“அகில், உண்மையில் ஜாஃபர் நல்ல பையன். ரொம்ப புத்திசாலி. அவன்கிட்ட Bet-யில் ஜெயிப்பது ஒரு திரில்தான்.”
            “Its ok… Then… நீ ஆஸ்திரேலியா போகப்போறேன்னு சொன்னியே. அது உறுதியாகிடுச்சா?”
 “ஆமா உறுதியாகிடுச்சு.” என்று சொன்ன கவி அகிலிடம், “குட்நைட். சன்டே காலையில் bet இருக்கு, மறந்திடாத…” என்றாள்.
“ஹா… ஹா… ஜாஃபர் சன்டே வரை தூங்க மாட்டான் கவி.”
“நீயும் தான் கலந்துக்கற…”
“யெஸ்… I am in… என்னை விட்டுவைப்பானா அவன்?? ஆல் த பெஸ்ட்.”
“ஆல் த பெஸ்ட். குட்நைட்.”
அவன் அவனது காருக்கும் அவள் அவளது ஹாஸ்டல் ரூமிற்கும் சென்றார்கள்.

Advertisement