Advertisement

கவி அகிலைப் பற்றி தனது அம்மாவிடமும் சுஜாதா அங்கிளிடமும் சொன்னதும், சுஜாதா அங்கிள் அகிலைப்பற்றி அக்கு வேர் ஆணி வேராக ஆராய்ந்துவிட்டார். தனம் ஆச்சிக்கு எல்லையில்லா ஆனந்தம். ஸ்வேதாவும் ஷ்யாமும் அன்றே இந்தியா வந்தனர். திருமணம் இரண்டு நாளிலா? என்ற கேள்விக்கு கௌஷிக்தான் இதுவே ரொம்பவும் தாமதம் என்று அகில் புலம்புவதாகக் கூறவும், அனைவரும் மறுபேச்சின்றி ஒத்துக்கொண்டனர். திருமணம், பதிவுத் திருமணம் என்பதால் ஆடம்பரம் இல்லாத வரவேற்பு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
            நாள், கிழமை பார்க்கவில்லை.. இருவருக்கும் அதில் நம்பிக்கையில்லை. இரண்டு நாட்களில் திருமணம் என்று பெரியவர்கள் முடிவு செய்தனர். கவி தனது ஆச்சியிடம் தனது திருமண செய்தியைச் சொன்னபோது அவர் நேரே திருப்பதிக்குச் சென்று பெருமாளுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தார். 
 ‘சாரதா’ மடத்தில் சேர்ந்து சேவை தொடங்கியதால் எழுபது வயதில் தனம் ஆச்சி பலருக்குத் தாயானார். கவி தன் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லிய பிறகு சுதாவிடம் சொல்ல ஏங்கிக் கொண்டிருந்தாள். சுதா கருவுற்றிருந்தாள். அதனால் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றவளை கவியால் தொடர்புகொள்ள முடியவில்லை. பகல் இரவு வேறுபாடு வேறு. அகில்கூட கிண்டல் செய்தான், “என்னிடம் கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள எத்தனையோ இருக்கும் போது சுதாவுடன் பேசுவதற்கு என்னம்மா துடிக்கிற? “
அவனுக்குத் தெரியுமா என்ன? கவி சுதாவுடன் பேசுகையில் அம்மையார் தான் முழு நேரமும் மூச்சு விடாமல் பேசுவது என்று ?
******* 
முகம் அறியா மணிதர்கள். . .
*******
            “ஏய் என்னப்பா இன்னும் நீ எனக்கு ட்ரீட் குடுக்கலை. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்திட்டா அழுத்தமா ஒன்ற கொடுப்பேன் என்று சொன்னியே? உனக்கு ரொம்ப ஞாபக மறதி கூடிப்பேச்சு. ஏற்கனவே பக்கத்தில் விடமாட்டிக்கிற. இதையாவது ஞாபகப்படுத்தினா ஏதாவது கிடைக்கும் என்று நினைத்தால், அதுக்கும் ரியாக்ஷன் கிடையாதா?”
            அவள் சிரிப்பது கேட்டதும்.. அவன் புலம்பல்கள் காற்றுடன் கலந்தது.. அவன் என்ன பேசினான்?
            “இதுக்குதான் ஆறுமாதம் கழித்துதான் பிள்ளை பெத்துக்கணும் என்று நான் சொன்னதே.. எங்கே அந்த ரெட் lingerie? சிரிக்காதே.. ம்.. எங்க வச்சிருக்க அதை? ம்.. முதலில் அதை என்னிடம் குடு!”
            இப்போது தான் சிரிப்பதை விட்டுவிட்டு தனது சந்தேகத்தைக் கேட்டாள் அவள்..
            “ஏன்டா செல்லம்? வா, என் பக்கத்தில் சும்மா படுத்துக்கோ!”
அவள் “சும்மா” என்ற வார்த்தையை அழுத்திச் செல்லவும் அவன் சொன்னான்….
            “அதே போல ஒன்று பார்சல் செய்து உன் அருமை தோழிக்கே.. உனக்கு கொடுத்த உன் அருமை தோழிக்கே கல்யாணப்பரிசாக கொடுக்கணும்! அகிலும் அனுபவிக்கட்டும்..”
            அவள் இப்போது நன்றாக சிரித்துக்கொண்டு சொன்னாள்,”அறிவாளிப் புருஷா, நம் இரண்டாவது குழந்தைக்கு அது வேண்டாமா? நான் உன்னிடம் அதைக்கொடுத்து நீ தொலச்சிட்டா என்ன பண்ணுவது?”
            “ஐந்து வருஷத்திற்கு பிறகு வாங்கிட்டா போச்சு” என்று கூறியவன் கேலி செய்த அவள் இதழை ஐந்து நிமிடத்திற்கு அசையவிடவில்லை.
               
            ஒரு கான்பரன்ஸ் கால் போட்டு நால்வரும் பேசிக்கொண்டனர். கவி அவள் வீட்டில் இருந்தாள். நால்வரும் அரட்டை அடித்துக்கொண்டனர் தங்களது கைபேசியில்.
            கௌஷிக் அகிலிடம் கேட்டான், “அகில், நீ சுதாவிடம் கவியை சமாளிக்கும் வழிமுறைகளை கேட்டுக்கிட்டியா?”
            “ம்… அதெல்லாம் எப்பவோ”
            “என்னவெல்லாம் சொன்னாள் அவள்?”
            “ஒரு ரோல் காட்டன், தலப்பாகட்டு ஹோட்டலில் ஒரு லைஃப் டைம் மெம்பர்ஷிப், சுதர்சன் சாருடைய வீட்டு அட்ரஸ் இப்படி நிறைய..” என்று அகில் அடுக்க…
            சுதா தன்னைக் காக்க, “கவி நீ கௌஷிக்கிடம் அகிலை சமாளிக்கும் வழிமுறைகளை கேட்டுட்டியா?” என்று கேட்டாள்.
            “ம்… அதெல்லாம் எப்பவோ.”
            “ஏய் சொல்லுப்பா என்னவெல்லாம் சொன்னான்?” என்று சுதா கேட்டபோது.
            “நிறைய சொன்னான்… ஆனா அதெல்லாம் ஜுஜுபி.. எனக்குத் தெரியாததா? இதைக் கேட்டுதான் தெரிஞ்சிக்கணுமா? உனக்குக் கொடுத்த கிஃப்டை நானே மறப்பேனா?”- கவி.
            அகில் தான் அவள் தந்த பதிலுக்கு பதிலாக கவியிடம் ஒரு சில்மிஷம் செய்ய முடியவில்லையே என்று யோசனையில், ஒன்றும் புரியாதது போல் இருந்து கொண்டு கேட்டான்.
திருமணம் முடிந்தவுடன் அன்னை சாரதா இல்லத்திற்கு மணமக்கள் புறப்பட்டனர். மதிய உணவை அந்த இல்லத்தின் சிறுவர்களுடன் முடித்துவிட்டு தேன்நிலவிற்காக உடனே அந்தமானுக்கு புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Just married என்ற வாசகம் எழுதியிருந்த காரில் அகிலுடன் கவி பயணித்தாள்.
காரின் கண்ணாடிக்கதவின் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள் கவி.
கார் அந்த மழை பெய்து நனைந்த ரோட்டில், குழிகளில் தேங்கியிருந்த தண்ணீரை நாலாபுறமும் சிதறடித்துப் பறந்தது. கார் அந்த மழையில் சீறிப் பாய்ந்தபோது.. ஒரு பள்ளி செல்லும் பெண்ணும்.. இல்லை இல்லை… பதினைந்து வயது சிறுமியும், ஒரு வாலிபனும் போஸ்ட் கம்பத்தை பிடித்துக் கொண்டு பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
பதினைந்து வயது நிரம்பிய கவி என்னும் சிறுமியை அந்த அறிமுகம் இல்லாத சிறுமியிடம் introduce செய்ய வேண்டும் என்று நினைத்தாள் டாக்டர் கவிதா. சாரி சாரி மிஸஸ் அகில்.
அந்த அறிமுகம் இல்லாத சிறுமியிடம் பதினைந்து வயது கவி கற்றப் பாடங்களை சொல்ல வேண்டும் என்று நினைத்தாள் டாக்டர் கவிதா. பதினைந்து வயதில் ஆரம்பித்து இப்போது வரை அவள் கடந்து வந்த போராட்டங்களை ஒப்பிக்க வேண்டும் என்று நினைத்தாள் டாக்டர் கவிதா.          
            கவியின் வாய் முணுமுணுத்தது…
நான் கவி….
என்  பெயர் கவி… tenth std (X B)
பிரேமின் கைகள் என்மேல் இருந்த கணமெல்லாம் என் பெண்மையை உணர்ந்தேன். அவனது உதடுகள்… ஆஹ்… அவனது கைகள்… ஆஆஹ்…
 
“வாரம் வரும் வருடம் வரும்… அதுபோல சபலமும் வரும். அது போல பகுத்து அறியும் ஞானமும் வரும். என்ன ஒரு கஷ்டம்…. ஞானம் வரும் வரை பொறுமைதான் முக்கியம்! சபலத்திடமிருந்து தள்ளி நிற்பதுதான் முக்கியம்! ‘விலகி நில் மனமே விலகி நில்’ என்ற மனப்பாடப்பாட்டை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான்!  அவ்வளவுதான் விஷயம் !
கவியின் உடல் முழுவதும் ஒரு மின்சாரம் பாய்ந்தது, ஆனால் சிரித்துக் கொண்டே காரை ஓட்டும் அகிலைப் பார்த்ததும் தன் வசத்திற்கு வந்தாள்.
           
கவி தன்னைத்தானே செதுக்கினாள். சிற்பம் அழகாக உருவம் பெற்றது. காதலில், காமத்தில் உருகும் போது, தனது உளியை புத்தியைச் செலுக்க உபயோகப்படுத்தினால்…
            இரண்டிற்கும் வேறுபாடு தெரியும்.
            பெண்னே கையில் உளியை எடு!
            வேகமாக இழுத்துச் செல்லும் நாகரீக சூறாவளியில் உன்னைத் தொலைத்து விடாமல் காத்துக்கொள்! ஆக, உங்களுக்குள் உள்ள சிற்பியை உபயோகப்படுத்துங்கள் தோழிகளே!
சிற்பமும் அவள் ! சிற்பியும் அவள் !        
என் இனிய வாசகர்களே,
கதை பிடித்திருந்தால் இந்த முகவரியில் ஒரு சில வார்த்தை சொல்லிட்டுப்போங்க… மறக்காதீங்க. நான் காத்திட்டு இருப்பேன்.
உங்கள் மின்னஞ்சல்களில் உங்களின் வார்த்தைகளை, எண்ணங்களை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் வாசகி…
               பாலா சுந்தர்
email id: [email protected]
facebook id: balasundar
எனது பிற நூல்கள்: ( all are available in kindle )
1) சிற்பமும் அவள் சிற்பியும் அவள்.
2) ஷ்… இது வேடந்தாங்கல்.
3) காஜலிட்ட விழிகளே…
4) டைட்டானிக் கனவுகள்…
5) லட்சம் காதலால் காதல் செய்.
6) ஆயூத எழுத்தில் காதல்.
7) காதலின்  லிட்மஸ்  பரீட்சை…

Advertisement