Advertisement

ஓம்  பிரகாஷ் திருமணம். . .
            ஓம் பிரகாஷ் திருமணத்திற்கு அகில், அவன் அம்மா, கௌஷிக், கவி எல்லோரும் சென்றார்கள். கல்யாணப் பெண் ஒரு விதவையாம், ராணுவ அதிகாரியாம் அவள் இறந்த கணவன்.
 அரசல் புரசலாக அவர்கள் காதில் விழுந்தது. கவி கொஞ்சம் கூட தயங்கவில்லை நேரே மேடைக்குச் சென்று ஓம் பிரகாஷ் கையைப் பிடித்து வாழ்த்து சொன்னாள். புகைப்படம் எடுத்துக் கொண்டாள். மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றி ஐந்து நிமிடம் அவர்களுடன் பேசினாள். அகிலும் பிரகாஷுடன் கொஞ்சம் பேசிவிட்டு வந்தான்.
            கவி அகிலிடம், “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”
            “என்ன?”
            “இன்று ஓம் பிரகாஷ் திருமணம்… உன் வீட்டு வேலைக்கார அம்மாவிடம் இரண்டு நாட்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து உன் அம்மா பாலில் கலக்க சொல்லியிருக்கேன்.”
            “ரொம்ப தாங்ஸ் கவி! என் பாலில்?”
“ச்ச.. ச்ச.. நீ டாக்டர் கண்டுபிடிச்சிடுவ இல்ல? அப்புறம் நீ ரொம்ப மனதிடம் உள்ள ஆளு..”
            “டபுள் தாங்ஸ்… that is a good compliment actually…”
அகில் கவியை ஆசையாய் பார்த்தான். ஆனால் கவி கௌஷிக்குடன் அரட்டையடிக்க ஆரம்பித்தாள். அகிலின் காதல் பார்வை இப்போதெல்லாம் கவிக்கும் புரிய ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவள் மௌனம் சாதித்தாள்.
            “நோ. என் பதில் ஷ்டிரிக்ட் நோ, நான் உன்னை  கல்யாணம் செய்ய மாட்டேன் அகில்!” என்றாள் கவி மனதுக்குள்.
            “நான் உன்னை கல்யாணம் பண்ண நினைக்கலயே!             உன் கூட எப்போதும் பேசணும். உன் கூட வாக்குவாதம் பண்ணணும். என் நண்பர்கள் உனக்குப் பிடிக்கணும். என் திறமைகளை நீ மெச்சணும். என் இரவுகளை நீ உன் இரவுகளோட        கோர்க்கணும்.. என்று தானே நினைக்கிறேன். இதற்கு பெயர் தான் கல்யாணம் என்றால்..   நீ நினைப்பது சரியே. நான் உன்னை சர்வ நிச்சயமாய் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன்!” –         என்றான் அகில் மனதுக்குள்.
            “என் தன்மானத்தை எப்படி விடச் சொல்ற அகில்?” என்றாள் கவி மனதுக்குள்.
            “என் இதயம் உன்னிடம் நாய்குட்டி போலக் கிடக்கும்            போது உன் தன்மானத்தைப் பற்றியா என்னிடம்             பேசுவது? இது அநியாயமில்லை?” என்றான் அகில் மனதுக்குள்.
******
“கவி கொஞ்சம் பெர்சனலா பேசணும்.”- அகில்
கவியின் மனதுக்குள் அபாய ஒலி ஒலித்தது.
“பெர்சனலாவா? நோ… அகில். நோ personal talks between us… I have certain limits to talk personally akil… pls understand..”- கவி.
“limits? limits…. tell me about the goddamn limits kavi… just tell me…”- அகில்.
தனது கடந்தகால பிழையைச் சொல்லி தன்னை தாழ்த்த விருப்பமில்லாமல், அகிலுக்கு தன்னிடம் ப்ரபோஸ் பண்ணும் தைரியம் தரக்கூடாது என்று நினைத்து கவி தனது பதில் தந்தாள்.
            “அடுத்தவருடைய பெட்ரூமிற்குள் நுழையாதே என்று நறுக்கென்று கூறுவதற்கு நீ எந்த அளவு  நிரணயிப்பாய் அகில்?”
            அவள் சொன்ன பர்ஸ்னல் ஸ்பேஸின் அளவு அகிலுக்கு புரிந்ததோ இல்லையோ.. ஆனால் அகிலுக்கு கவியின் பிடிவாதத்தின் அளவு நன்கே புரிந்தது.
            அவன் மேற்கொண்டு பேசும்முன் வார்ட்பாய் வந்துவிட்டான்.
  அவர்கள் இதயத்திற்குள்  என்ன  நடக்கிறது?
                        “……..” என்கிறாள் கவி இதயத்திற்குள்.
                        “பேசு” என்கிறான் அகில் இதயத்திற்குள்.
                        “…….” என்கிறாள் கவி.
                        “சரி. பேசாதே!” என்கிறான் அகில்.
                        “உனக்கு மௌனமாய்ச் சொன்னால்       புரியாதா?” என்கிறாள் கவி.
                        “பேசு என்றால் பேசமாட்டிக்கிற. பேசாதே       என்றால் பேசுகிற. உனக்கு எதில் தகராறு? பேசுவதிலா? இல்லை மொழியிலா?”- என்கிறான் அகில் இதயத்திற்குள்.
“ராட்சஸி” என்றாள் கவி  மனதுக்குள்.
“ராட்சஸன்” என்றான் அகில் மனதுக்குள்.
“யாரை ராட்சஸன்னு சொல்ற?” என்றாள் கவி.
“உன் பெண்மைக்குள் இருக்கும்.. நான் நேசிக்கும் ஆண்மையை. நீ யாரை ராட்சஸின்னு சொல்ற?” என்றான் அகில் மனதுக்குள்.
            “உன் ஆண்மைக்குள் இருக்கும் மிருதுவான என்னை நேசிக்கத் தூண்டும் உன் பெண்மையை!” என்றாள் கவி  மனதுக்குள்.
அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு உன்னைப்பிடிச்சிருக்கு என்று சொல்லிடும் அகிலின் விழிகளிடம் அவள் என்ன சொன்னாள்?
அவனது விழிகளிடம் அவள் பதில் பேசவில்லை…
அமைதி காத்தாள்.
ஆனால் அவளது விழிகளிடம் கெஞ்சலில் மன்றாடினாள்.
            “கண்களே, அழுது மட்டும் விடாதே. அவன் நேசத்தை நீ ரசிப்பதாகக் கூட வெளிக்காட்டாதே! அவன் அன்பின் அளவை ரசிக்க வைக்கிறான். என் நேசத்தைப் போற்றிப் புகழ் என்கிறான். “அன்பின் இலக்கணம் சொல்லிக்கொடுகிறேனே.. என் குருதட்சனை எங்கே?” என்று கேட்கிறான். அவன் வெற்றி பெற்றதை நீ அழுது காட்டிக் கொடுக்காதே என் கண்களே!” என்று மன்றாடினாள்.
அகிலின் நேசத்தை புரிந்து கொள்ளுதலில் பிரச்சனை இல்லையே… அதை ஏற்பதில் தானே பிரச்சனை, தவிப்பு, உண்மையைக் கூறமுடியவில்லையே என்று தன் மீதே அவமானம் நிறைந்த கோபம். . . . . இத்தியாதி… இத்தியாதி…
*****            
            அகில் அம்மா திருமணத்திற்கு அகிலை அவசரப் படுத்தினார். ஒன்று, அவர் கணினியில் பெண்ணின் புகைப் படங்களை வரிசைப்படுத்திக் காண்பித்தார், இல்லை, ரம்மி விளையாடுபவர்போல் போட்டோவை கைகளில் அடுக்கி அவனிடம் காண்பித்தார். எல்லாவற்றையும் அகில் நிராகரித்தான். இரண்டு ஆண்டுகளாக கவியைப் பார்க்கிறான்.
            ஒவ்வொரு நாளும் அவளை காலையில் பார்த்ததும் வரும் சந்தோஷத்தை நாம் ஏன் காலம் முழுவதும் அனுபவிக்கக்கூடாது? என்று உள்ளுக்குள் ஒரு எண்ணம். “அனுபவி” என்றது மனது. அவளிடம் கேட்காதே என்றது மூளை.
மனதுக்குள் இருவரும் பேசிக்கொள்ளும் கண்ணாம்பூச்சி ஆட்டம் போதும் என்று நினைத்த அகில் கவியிடம் நேரடியாகச் சென்று “டைம் என்ன கவி?” என்று கேட்பது போல சாதாரணமாகக் கேட்டான்,
            “கவி, என்னைக் கல்யாணம் செய்ய உனக்குப் பிடிக்குமா?”
            கவி அவன் கேள்வியை திரும்பச் சொல்லிப் பார்த்தாள். அதில் நிபந்தனை இல்லை. வற்புறுத்தல் இல்லை.
            “பிடிக்கும் என்றால் உன் பதில் என்ன அகில்? பிடிக்காது என்றால் உன் பதில் என்ன?”
            “பிடிக்கும் என்றால் எப்போ கல்யாணம் செய்துக்கலாம் என்று கேட்பேன். பிடிக்காது என்றால் திரும்பவும் என்னோட கேஸை உன்கிட்ட அப்பீலுக்கு கொண்டு வருவேன்… என்னோட வாதம் விவாதம் இன்னும் பலமா இருக்கணும்னு நினைப்பேன்..”
            “ஓ!
…..
“அகில் நான் உன்கிட்ட ஒன்று கேட்கணும்! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா அகில்? நான் கேட்ட கேள்வியை நீயும் என்னிடம் கேட்கலாம். நான் ஹானஸ்டா பதில் சொல்வேன்!”
“ம்.. கேளு!
            “வென் டிட் யூ have செக்ஸ்? When did you first had sex? “
கவியின் கேள்வியின் உள்அர்த்தம் அவனுக்குப் புரிந்தபோது அதிர்ந்தான்.
திகைத்த அகில் மூன்று வினாடிகளுக்குப் பிறகு பதில் சொன்னான், “நான் physician தான் ஆனா இந்த கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லை. என் ‘sex’ லைஃப் பற்றிப் பேச எப்படி எனக்கு விருப்பம் இல்லையோ அதுபோல உன் ‘sex லைஃப்’ பற்றிப் பேசவும் எனக்கு விருப்பம் இல்லை. இறந்த காலம் இறந்த காலமாகவே இருக்கட்டுமே கவி. அதை நிகழ்காலத்திற்கு கொண்டு வராதே. இப்போது இங்கு என் பக்கத்தில் நிற்கும் கவியைப் பற்றியும் உன் பக்கத்தில் நிற்கும் அகிலைப் பற்றியும் தான் பேச்சு. நீ என் sexual பார்ட்னர் நான் உன்னை கல்யாணம் பண்ணப் போறேன்…”
“அகில்…”
“இரு இரு நான் முடிச்சிக்கிறேன். உன்னை கல்யாணம் பண்ணினால் அந்த பார்ட்னர்ஷிப்பை பிறரிடம் பகிரமாட்டேன். இத்தனை நாள் என்னோடு பழகியிருக்க, உனக்கு கண்டிப்பா அது தெரிந்திருக்கும் உன்னிடமும் எனக்கு அந்த நம்பிக்கை இருப்பதால் தான் உன்னிடம் கல்யாணம் பத்தி பேசுறேன். நாம் நல்ல கப்பிளாயிருப்போம்ன்னு நம்புறேன். நாம் செய்யும் சர்ஜரியும் பெயில்லாகாது partnership-ம் பெயில்லாகாது. என் அம்மாவுக்கு உன்னை பிடிக்கும் உன் பேரன்ட்ஸ் இந்தியா வந்தால் நம் வீட்டில்தான் தங்கணும். நாம ரெண்டுபேரும் P.G செய்தால் நம்ம பேரன்ட்ஸ் நம்ம கிட்ஸ்ஸ மாறி மாறி பார்த்துக்கணும், எனக்கு ஒன்னுலாம் பத்தாது… all i want is to share a simple desert like…. like rasagulla with you in my cozy bed… ம் இப்ப நீ என்ன சொல்ல வந்த?”
    வேதம் புதிது!
            புத்தரின் வேதம் புதிது என்பதால் அவரை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அவரைக் கொண்டாடினார்கள். மலைகளைக் குடைந்து ஓவியங்கள், சிற்பங்கள் செய்து தலையில் வைத்துக் கொண்டாடினார்கள்.     ஒவ்வொரு மதம் ஜெயித்ததும் அதே காரணத்தால்தான். அதன் வேதம் புதிதாக இருந்தது. அதேபோல இன்று வரை இரு மனித மனங்கள் புரியும் காதல் என்னும் வேதமும் புதிதுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வேதம் மாறுபடும்.
            “உனக்கு நான்” ‘எனக்கு நீ” என்று கண்களால் சொல்லும் காதல் வேதம் ஒரு ரகம். “உனக்கு என்னை பிடிக்குதோ இல்லையோ.. நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சொல்வதும் ஒரு ரகம். “நான் உன்னை நேசிக்கிறேன். என்னை நீ நேசிக்கிறாயா?”. “உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்னையும் உனக்குப் பிடிக்கும்.. நாம் மனம் புரிந்து ஒன்றாக வாழ்க்கைப் பயணம் தொடங்கலாமா?”
            இப்படி சித்தாந்தங்கள் மாறுபடுவதால் காதல் வேதம் என்றுமே புதிது!
            அகில் சொல்ல நினைக்கும் வேதம் புரிந்தால்.. பிடித்தால்.. கவியும் சொல்வாள்..
            வேதம் புதிது! காதல் வேதம் புதிது!
கவிக்கு அகிலின் விளக்கம் பிடித்தது. கவி மனதிடம் விவாதம் செய்தாள்..
“When did you first had sex?” என்று கேட்டுவிட்டு, “நீயும் என்னிடம் இதே கேள்வி கேட்கலாம் ஹானஸ்டா நானும் பதில் சொல்கிறேன்” என்று சொன்ன பிறகும். “அப்படியா? நீ வெர்ஜின் இல்லையா?” என்று கேட்காமல்.. பழைய புழுதியைக் கிளறாமல்… “ஞானத்தால், மனக்கட்டுப்பாட்டால், செதுக்கப்பட்ட கவி என்னும் இன்றைய கம்பீர சிலையை நேசிக்கிறேன்! நீ என்னை நேசிக்கிறாயா?”என்றல்லவா கேட்கிறான்!”
            இந்த வகை நேசத்தை அவள் முன்பும் பல முறை அனுபவித்திருக்கிறாள்! ஆம், சுதாவிடம் இதே நேசம் அவளுக்குக் கிடைத்தது. தன் அன்னையிடமும் இதே நேசம் கிடைத்தது.
            கவியின் கம்பீரத்தை, நேர்மையை, உண்மை பேசும் விழிகளை கண்மூடித்தனமாக நேசித்தனர் இருவரும். இப்போது கணவனிடமும் அதே நேசம் கிடைக்கும் என்றால், அதை மறுப்பது ஆதாமும் ஏவாளும் ஏன் தோன்றினார்கள்? என்று கேட்பது போலத்தானே?
            அகிலுக்கு மனம் சம்மதம் சொன்னது. ஆனால் அதை வெளிக்காட்டவில்லை தன்னுள்ளே பேசிக் கொண்டாள்..
பல சிந்தனைகளில் சிலையாய் நின்றவளிடம்…
            “நீ என்ன சொல்ல வந்த?” என்று மறுபடியும் அகில் கேட்டான்.
            “நான் சொல்ல வந்ததா? அப்படி ஒன்று இருந்ததை மறக்கடித்துவிட்டு இப்போது நல்லகோடி நாணயம் கேட்பதைப்பார்! ரசகுல்லாவைப் பற்றி பேசினால் விழுந்து விடுவேன் என்று தெரிந்து தான் அதைப் பற்றி பேசியிருக்கிறான். எனக்கு ரசகுல்லா பிடிக்கும்னு தெரிஞ்சி வச்சிருக்கான் இந்த லவ்வபிள் இடியட்… சுதாவை நிற்க வைத்து… நிற்க வைத்து முத்தமிட வேண்டும்! அகில் லகோட்டியா என்னிடம் உங்கள் வாழ்க்கையை சமர்ப்பித்துவிட்டீர்கள் அதை கொஞ்சம் உருட்டி விளையாட வேண்டாம்? இதோ….” என்று நினைத்தவள், சொன்னாள்…
            “அகில்”
            “ம்…”
            “அகில் ஒரு அரை மணி நேரம் டைம் குடுப்பீங்களா?”
            ‘அரை மணி நேரம் எதற்கு? ஒரு Scan முடிக்கவா? இல்லை ராம் அண்ணாவுக்கு ஒரு ஓசி செக்கப் செய்யவா? இல்லை நாக்குவழிக்கவா..? Just say yes dammit… Its just a three letter word, y-e-s whats the big deal in it??” இத்தனையும் கேட்க நினைத்த போதும் அகில் கேட்கவில்லை.. கொஞ்சம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னான்..
            “ஓ கே! கவி. பை த வே சீஃப் உன்னை கூப்பிட்டார். அவரைப் பார்த்திடேன்” என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றான். போனவன் ஹிந்தியில் இருக்கின்ற கெட்ட வார்த்தையை யோசித்து யோசித்து மனதில் திட்டினான்!
            கவி நேரே தன் அறைக்குச்சென்றாள். தன் கைபேசியை எடுத்து திருமண செய்தியை குறுஞ்செய்தியாக பதிவு செய்து சுதா, அம்மா, அப்பா தவிர தன் பதிவேட்டில் உள்ள அனைவருக்கும் அனுப்பினாள். அதில் தன் மணாளனுக்கு உடனே வாழ்த்து தெரிவிக்குமாறு ஒரு குறிப்பு வேறு!
அகில் தனது கைபேசியில் குவிந்த வாழ்த்து மழையால் சொக்கிப்போனான். நேரில் வந்து வாழ்த்தியவர்களிடம் பதில் சொல்லத் திண்டாடினான்.
“அட அகில், கவி என்னிடமே ‘எப்ப கல்யாணம்’ என்று கேட்டப்ப பதிலே சொல்லலை தெரியுமா? kavi is a clever girl man… congradulations!”  என்று லாப் டெக்னிஷியன் வந்து சொன்னபோது…
“ப்ரபோஸ் பண்ணி அரை மணி நேரம் ஆச்சு. என்னிடமே இன்னும் ‘யஸ்ஸா?’ ‘நோவா’ என்று அவள் பதிலே சொல்லலை என்ற உண்மையை உங்களிடம் சொன்னால்… இரண்டு நாட்களுக்கு என்னைப் பார்த்து இருபது முறையாவது சிரிச்சு உங்க blood pressure குறைச்சுக்க மாட்டிங்க?” என்று மனதுக்குள் ஆலோசனை செய்து கொண்டிருந்தான்.
            அடுத்த அரை மணி நேரம் அகில் அனைவரிடமும் சிரித்த முகத்தை தன் எள்ளும் கொள்ளும் வெடித்த முகத்தோடு ஒட்டிக் கொண்டான். கடைசியில், “அந்த ரசகுல்லா எங்கே போனது?” என்று வாய்விட்டே ராம் அண்ணாவிடம் கேட்டுவிட்டான்.
            “கவிம்மா பஸ் ஏறிப் போயாச்சே!” என்று பதில் கூறினார் அவர். ஹாஸ்பிடலை விட்டு வருவதற்குள் அகில் வாழ்த்துமழையில் நனைந்தான். அதில் சிலர் பேசிய மொழி தமிழ்தான் என்று புரிந்துகொள்ளவே அவனுக்கு ஒரு நிமிடம் ஆனது. இடையில் அவன் அம்மாவேறு ஃபோன் செய்து “அகில், கவிக்கு engagementக்கு எந்த கலர் எடுக்க? she looks gorgeus in RED color! dont you think so??” என்று கேட்டபோது, “அவளைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் உங்களுக்கு 50000 rs just tell me where she is..” என்றான்.
            அகில் அம்மா தொகையைக் கேட்ட பிறகு துரிதமாக காரியத்தில் இறங்கி கவியை மகனிடம் காட்டிக்கொடுத்தார்.
            கவி ‘அம்மா மெஸில்’ ஒரு மீன் வறுவல் ஆர்டர் கொடுத்து விட்டு ஒரு ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அகில் அமைதியாக அவள் எதிரில் வந்து அமர்ந்தான். கவிக்கு குலோப்ஜாமுன் கசந்தது. யார் தன்னைக் காட்டிக்கொடுத்த கருத்த ஆடு என்று மனதில் கேட்ட கேள்விக்கு,
            “அம்மா தான் தகவல் தந்தது?” என்ற பதில் தந்தான்.
            அவள் துளிகூட அசராமல், “அகில் உனக்கு எப்படி ப்ரப்போஸ் பண்ணணும்னு தெரியலப்பா அதான் கொஞ்சம் டச்அப் குடுத்தேன். மீன் வறுவல் வேண்டுமா?” என்று கேட்டு அவன் முறைப்பைப் பெற்றுக்கொண்டாள்.
            பில் வந்தவுடன், “கவி இந்த மாதிரி ஹோட்டல் பில் கட்டவே நீ P.G படிக்கணும்..” என்று கூறி அவள் கையால் சின்ன அடியை சிரிப்போடு பெற்றுக்கொண்டான்.
            கார் பார்க்கிங்கில் காரில் ஏறும்முன் அவளை இழுத்து ஒரு முத்தம் பதித்துவிட்டு, “எனக்கு ப்ரபோஸ் பண்ண தெரியாது. ஆனா ஒண்ணு நல்லாவே தெரியும். அத எப்ப உன்னிடம் காண்பிக்க? Shall I kavitha??”
கவிதா என்ற அவனது அழைப்பில் அவளது சகல செல்களும் ஸ்தம்பிக்க…
“உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் சொல்கிறேன். ‘உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.”  என்றாள்.
*********

Advertisement