Advertisement

சுதாவின்  திருமணம்…
            சுதாவின் திருமணம். அகில் மற்றும் அவன் அம்மா வந்திருந்தனர். கவி தாவணியில் வந்திருந்தாள். அகிலுக்கு அந்த காஸ்ட்யூம் பற்றித் தெரியாதலால் அவன் கௌஷிக்கிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்கள் வழக்க கல்யாணங்களைப் போல் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது கல்யாண மண்டபம். தானும் திருமண பந்தத்தில் சீக்கிரம் நுழைய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். மணமகன் அறைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். “பத்து மணி முகூர்த்தம் அம்மாவால் எட்டு மணிக்கே வந்தாச்சு” என்று புலம்பினான். மணமகன் அறை பக்கமாக நின்று கொண்டான். சிறிதும் எதிர்பார்க்காததால் சுதா மணமகன் அறைபக்கம் வந்ததும் மிகவும் திடுக்கிட்டான்.
“அகில் கொஞ்சம் வழி விடுங்கள்” என்று அமைதியாக கேட்டாள் சுதா.
அகில் கொஞ்சம் வழிவிட்டு நின்று கொண்டான். வாசலில் சுதாவின் வருங்கால கணவன், செந்தில், அவளை எதிர்பார்த்திருந்தான் போல. அவளுக்காக கதவைத் திறந்து விட்டான்.
அறைக்கதவு திறந்து வைத்தாள். அறை வாசலில் நின்ற அகில் கிளம்பிவிட நினைத்தான். ஆனால் செந்தில், “உள்ளே வாங்க சுதா இப்ப கிளம்பிடுவா.. நீங்க உள்ளே வாங்க!” என்று அகிலை அழைத்தான்.
மணக்கோலத்தில் சுதா மெழுகு பொம்மைபோல இருந்தாள். செந்தில் முகத்தில் பெருமையும், சேட்டையும் சேர்ந்து ரகளை செய்தது.
சுதா உள்ளே வந்ததும் அகிலைப் பார்த்து கொஞ்சம் தயங்கினாள். பிறகு, சிறு வெட்கத்துடன் சொன்னாள்,
“செந்தில் உங்களுக்கு தங்கை இல்லை. நாத்தனார் முறையை கவி செய்தால்…?”
சுதா முடிக்கும் முன் செந்தில் கூறினான், “அதனால் ஒன்றுமில்லை சுதா.. இதற்காகத்தான் ‘நான் நேரில் ஒரு விஷ் கேட்கணும்’ என்றெல்லாம் பீடிகை போட்டியா?”
“இல்லை செந்தில் நான், இது எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே நேரில் வர நினைத்தேன். கவியும் நானும் பிரியப்போகும் இந்த நேரத்தில் இது ஒரு சிறு ஆறுதல்.. இல்லையா?”
உடனே அகில் முந்திக்கொண்டு சொன்னான்,
 “நீ சந்திரனுக்கா போகப்போற? அமெரிக்காதான? அமெரிக்காவுக்கு எத்தனை ஃப்ளைட் இருக்குன்னு உனக்குத் தெரியாதா? இல்லை உன் ஹப்பியின் பேங்க் பேலன்ஸ் தெரியாதா? பத்து ஃப்ளைட் மாறியாவது உன்னை இந்தியா வந்து சேர்க்க மாட்டார்?”
சுதா இயல்புநிலைக்கு மாறினாள். அகிலுக்கு சுதா கேட்ட விஷயம் முதலில் புரியவில்லை. ஆனால் கவி மாங்கல்யத்தின் மூன்றாவது முடிச்சு போடும்போதும்.. கவி விளக்கை கையில் பிடிக்க மணமக்கள் அவள் பின்னால் சென்று அக்னியைச் சுற்றிய போதும்.. அந்த சடங்குகளில் இருந்த நாத்தனார் கெத்து புரிந்தது. சபையில் இருந்த அனைவரின் கண்களும் விளக்கைப்பிடித்திருந்த கவியின் மேல்தான்.
  பெருசுகள் செந்திலிடம், “விளக்கப்பிடிச்சிட்டுப் போனது உன்னோட தங்கச்சியா? டாக்டரா அந்தப் பொண்ணு… கவின்னு கூப்பிட்டியே முழுப்பெயரே கவியா? என்னோட அண்ணன் பையன் இருக்கான்… பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டோம், சரியா வரும்னு நினைக்கிறேன். செந்தில்… எப்படி வரன் பாக்கிற?” என்று கேட்டபோதும் நன்றாகவே புரிந்தது.
சரியான ஆளுதான். உரிமையும் பெற்றுக் கொடுத்து ஓசியில் மேட்ச் fixing செய்கிறாளோ! என்று மனதில் நினைத்தான். கவிக்கும் சுதாவிற்கும் தனிமை கொடுக்க எண்ணி அம்மாவை பிறருடன் அரட்டை அடிக்கவிடாமல் அழைத்துச் சென்று விட்டான்.
சுதா மறு வீடு செல்லும் சமயம் கவி கொஞ்சம் மனம் கலங்கினாள். ஆனால் விரைவில் சுதாரித்துக்கொண்டு,  “சுதா நீ U.S போனதும் உன் புது நம்பரை எனக்கு மெயில் பண்ணு இன்று ஒரு முக்கியமான procedure இருக்குப்பா.. நான் உடனே கிளம்பணும் உனக்கும் இன்னும் மூனு மணி நேரத்தில் சென்னைக்கு ரயில்.. அதனால் நான் இப்பவே கிளம்பினால் சரியாக இருக்கும். இந்தா என் கிஃப்ட் இதை நீ பப்ளிக்கா ஓபன் பண்ணாத, என் மானம் போகும். தனியா உன் First nightல ஓப்பன் பண்ணு ? என்ன புரியுதா? சரி நான் கிளம்பட்டா?” என்று அவள் கையில் ஒரு பார்சலைத் திணித்துவிட்டு கிளம்பப் போனாள்.. சுதா அதற்குள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்… உடனே கவி, “என்னப்பா நீ? சிறு பிள்ளைபோல் அழுற.. நாம் என்ன சின்ன பசங்களா? பிரிவு பழக கொஞ்ச நாள் ஆகும். அப்புறம் எல்லாம் பழகிப்போகும். என் அம்மாவைவிட்டு நான் இல்லை? சந்தோசமா இரு. செந்திலையும் சந்தோஷமா வச்சிக்கோ! என்ன புரியுதா?”
“சரி கவி, உன் மூஞ்சிய பார்க்காம நானும் என் மூஞ்சிய பார்காம நீயும் இன்னும் எத்தனை நாள் இருக்கணும்?”
“நான் U.S க்கு P.G படிக்க வரும் வரை.. இல்லைன்னா இன்னொரு ஈசி வழி சொல்றேன்.. நீ சீக்கிரம் கன்சீவ் ஆகிடு. டெலிவரிக்கு இந்தியா வருவேல…”
“அதெல்லாம் அவர் ஆறு மாசம் போகட்டும் என்று சொல்லிவிட்டார் போ!” என்று சுதா நொந்து கொண்டாள்.
“சுதா என் கிஃப்ட்டை நீ First nightடில் பிரி ஆறுமாசம் தடாவெல்லாம் அம்பேல்!” என்று கூறி நகைத்தாள். 
தோழிகள் பேசிச் சிரித்தனர்… நிறைய அழுதனர்… விடை பெற்றுக் கொண்டனர்.
சுதாவின் திருமணம் முடிந்த மறு நாள். . . .
            கவி மிகவும் அமைதியாக இருப்பதை அகில் உணர்ந்தான். கவியை வலுக்கட்டாயமாக கேன்டீனுக்கு அழைத்துச் சென்றான்.
            “கவி உனக்கு டசர்ட்ஸ் என்ன சொல்ல? ஒரு ரசகுல்லா சொல்கிறேன்.”
            “ஒரு ஆப்பிள் ஜூஸ் சீனி இல்லாமல் மட்டும் போதும்.. வீட்டில் போய் ஏதாவது கம்மியா சாப்பிட்டுக்கிறேன்!”
            கவி அகில் வற்புறுத்த ஒரு ப்ரூட் சாலட் மட்டும் சாப்பிட்டாள்.
“நீயும், சுதாவும் நல்ல ப்ரண்ட்ஸ்”
            “ரொம்ப!”
            “நானும் கௌஷிக்கும் அப்படித்தான்! நானும் ரேஷ்மாவும்கூட ரொம்ப ரொம்ப கிளோஸ்… அவ மனசுக்கு அவ கோடி வருஷம் வாழ்ந்திருக்கணும். ஓம் பிரகாஷ் அவளை லவ் பண்ணான்… அவளும் அவனை லவ் பண்ணா… ரெண்டு பேரும் ரொம்ப நாள் சந்தோஷமா வாழ்ந்திருக்கணும்…”
“அகில் உன்னோட வீட்டுக்குப் போவோமா? உன்னோட அம்மாகிட்ட பேசி நாள் ஆச்சு.” என்று பேச்சை மாற்றினாள்.
அகிலும் உடனே சரி என்றான்.
   கவியும், அகிலும் அகில் வீட்டிற்குள் நுழையும்போது வீட்டிற்குள் பேச்சு சத்தம் கேட்டது.  ஓம் பிரகாஷ் திருமண அழைப்பிதழ், அகில் ஹாலில், மேஜையில் கிடந்தது.
            “ஓம் பிரகாஷ்! வாங்க…” –அகில்.
 ஓம் பிரகாஷை சிறு சிரிப்புடன் வரவேற்றுவிட்டு கொஞ்ச நேரம் பேசினான்.
“கவிகூட வெளியே போகணும். ஒரு ஃபைல் எடுக்க வந்தோம். ஹாஸ்பிட்டல்ல முக்கியமான வேலை இருக்கு..”- அகில்.
“ஓ… சரி அகில்.” – ஓம் பிரகாஷ்.
            கவி குறிப்பு உணர்ந்து வெளியே செல்ல அவளுடைய கைப்பையை எடுத்தாள். அகில் அம்மாவிடம் விடை பெற்றுவிட்டு இருவரும் வெளியே கிளம்பினார்கள்.
            அகிலுக்கு ரேஷ்மா ஞாபகம் வந்துவிட்டதை கவி நன்கு உணர்ந்தாள். ஆனால் அவன் சிறிதும் வெளிக்காட்டாமல் எவ்வளவு பக்குவமாக நடந்து கொள்கிறான்? என்று கவி ஆச்சர்யப்பட்டாள். இவனை எப்படி இயல்பாக்க? என்று யோசித்தாள்.
            “அகில் உனக்கு எந்த டாபிக் பிடிக்கும்? சொல்லு அதைப்பற்றிப் பேசலாம்.”
            “எனக்கு ஒன்னும் தோணலை.. ஹாஸ்பிடல் போவோமா?”
            “அகில்… ஏதாவது ஜோக் சொல்லவா? இந்த வருஷத்தின் பெஸ்ட் ஜோக் எனக்குத் தெரியும்….”, கவி சொல்லி முடிக்குமுன் சுதா கைபேசியில் அழைத்தாள்.
“சுதா is calling…”என்று கூறியபடியே கவி அழைப்பை ஏற்றாள்.
“சுதா நீ பேசுறது கேட்கலப்பா…”- கவி.
“டவர் இல்ல கவி.”- சுதா.
“கவி ஃபோன்னை ஸ்பீக்கர்ல போடு… அப்ப சுதா பேசுறது கேட்கும்…”-  அகில்.
கவி தனது கைபேசியை ஸ்பீக்கரில் போட்டாள்.
            “கவி உன் கிஃப்ட் சூப்பர்!”
            “என்ன கிப்ஃட்?” என்று கவி யோசிக்கும் முன்.. சுதா பொரிந்து தள்ளிவிட்டாள்.
            “அந்த ரெட் லான்ஜரீ (lingerie) செந்தில் கிளீன் போல்ட்… சீக்கிரம் குட் நியூஸ் சொல்றேன்…”- சுதா.
            கவி கமுக்கமாக ஃபோனை கட் செய்தாள்.
அகில் கேள்வியாகப் பார்த்தபோது “டவர் இல்ல… அப்புறமா பேசிக்கிறேன்… nothing serious.”
 ‘லான்ஜரீ (lingerie) பற்றி அகிலுக்குத் தெரியாது… ச்ச பசங்களுக்கு அதன் அர்த்தம் தெரியவாய்ப்பில்ல…’- கவி மனதில்.
கவி மனதில் அகிலுக்கு ஒரு வார்த்தை கூட புரிந்திருக்காது என்ற நம்பிக்கை..
அந்த நம்பிக்கை தவிடு பொடியானது.. அகில் சிரிப்பை அடக்கக் கஷ்டப்பட்ட போது!
            “ச்ச! அவனுக்கு இனி டாபிக்கே வேண்டாம்.. இதுவே இந்த நாள் முழுவதும் போதும்! டாக்டர் நாராயணன் பக்கத்தில் அயிக்கியமாகிடணும் இவன் அப்பதான் சிரிக்க மாட்டான்.” என்று கவி மனதில் நினைத்தாள்.
 அன்று முழுவதும் அகில் கௌஷிக்கிடம் பேசினால் கூட கவிக்கு சங்கடமாக இருந்தது.
சிரித்தால்.. சொல்லவே வேண்டாம்.
மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போது கவியின் புத்தகத்தைக் அவள் கையில் திணித்தான்.
அது சுதர்சன் சார் கையெழுத்திட்ட புத்தகம் தான். அவள் அவனிடம் இத்தனை நாளும் கெஞ்சிக் கேட்ட புத்தகத்தை ஒரு மனதாக அன்று மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போது அவளிடம் கொடுத்துவிட்டான்.
“தாங்க்ஸ் அகில். தொலைக்காமல் பத்திரமா வச்சிருந்ததுக்கு…”- கவி.
“தாங்க்ஸ் கவி இந்த வருஷத்தின் பெஸ்ட் ஜோக் சொன்னதுக்கு… சுதாகிட்ட அடுத்து பேசும்போது நான் கேட்டேன்னு சொல்லு.” – அகில்.
அகில் சொல்லி முடித்ததும் இருவரும் தங்களை மறந்து சிரித்தனர்.

Advertisement