Advertisement

******* 
மீண்டும் முகம் அறியா மனிதர்கள்…
******* 
            “அகிலாண்டேஸ்வரி… அகிலாண்டேஸ்வரி…” –  அவன்
            அவள் முறைத்தாள். ஏனெனில் அவள்பெயர் அகிலாண்டேஸ்வரி இல்லை.
            அவன் தொடர்ந்தான், “உனக்கு அந்த புனிதப் பெயர்தான் சரி. ஒரு ‘நான்-வெஜ்’ சமாச்சாரம் உண்டா நம்மிடம்?”
            “அதெல்லாம் பிறகுதான்.”
            “எனக்கு பிறகு உண்டு என்று தெரியும். ஆனால் இப்போது நாம் இருவர் மட்டும் இந்த நூலகத்தில், நம் முதுகுக்கு பின்னேயும் முகத்திற்கு முன்னேயும் இரண்டு செல்ஃப் புத்தகங்கள் பார்டிகார்டாக இருக்கும் போது… ஏதாவது நடக்க வாய்ப்பில்லையா?”
            “நூலகம் கோயில் மாதிரி!”- அவள்
            இப்போது அவன் காதுகளில் ஆயிரம் தரம் அவள் “நோ” சொன்னதுபோல் கேட்டது அமைதியாகச் சென்று ஓரமாக ஒரு இருக்கையில், கையில் “கணபதி மந்திரங்கள் ஆயிரம்!” என்னும் புத்தகத்தை அவள் கண்ணுக்கு நன்கு தெரியும் விதம் வைத்துப் படித்தான்.
            அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு வந்த வேலையை செவ்வனச் செய்தாள்.
            அந்த பெண், நூலக மேலாளர் இருப்பிடம் நோக்கிச் சொன்றாள். ஒரு நூறு ரூபாய் அவர் கையில் திணித்தாள்.
            இது புத்தகத்தை, அவர் இடது கையோரமாய் இருந்த புத்தகத்தை அவர் கஷ்டப்பட்டு எடுத்ததற்கு! அந்த நூலக மேலாளர் தனது பதிவேட்டு புத்தகத்தை எடுத்தார். அப்புறம் திறப்பதற்கு ஒரு நூறு ரூபாய்.
            அவர் திறந்து விட்டார். சரியான பக்கத்தை எடுத்தார். அதில் ஒரே தலைப்பில் இரண்டு புத்தகங்கள் ஒரு பெண்ணின் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது.
            இரண்டு பக்கங்கள் புரட்டினார். மீண்டும் ஒரே தலைப்பில் இரண்டு புத்தகங்கள் தலைப்பு மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்தது அல்லாமல்  வேறு. இப்படி ஐந்து முறை இரண்டு பிரதிகள் ஒரே தலைப்பில் புத்தகங்கள் எடுக்கப்பட்டிருந்தது.
ஆக, வந்த விஷயம் முடிந்தது.
இரண்டு காதல் பறவைகளும் பறந்தது.
               *****
அது மருத்துவர்களின் கலந்தாய்வுக்கூட்டம். சென்னை மும்பை என்று அனைத்து பெருநகரத்தில் இருந்தும் மருத்துவர்கள் வந்திருந்தனர். கவி லாப்ரோஸ்கோபி பற்றி செமினார் எடுத்தாள். அகில் கேன்சர் பற்றிய ஒரு கட்டுரையை சமர்ப்பித்தான். செமினார் முடிந்ததும் கவி தனது நாற்காலியில் அமர்ந்தாள். தனது கைபேசியில் ஏற்கப்படாத அழைப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது “கவி” என்று ஒரு பரிச்சியமானக் குரல் கேட்டது. நிமிர்ந்துப் பார்த்தபோது அதிர்ந்தாள்.
அங்கே நின்றது வருண்.
            “கவி. நீதான் மேடையில் பேசியதா? உங்க சீஃப் கவிதா கவிதான்னு சொன்னபோது நான் யாரோன்னு நினைச்சிட்டேன். ரொம்ப சந்தோஷம் உன்னை பார்த்ததில், நீ மதுரையில்தான இருக்க? நான் இப்ப லன்டனில் இருக்கேன். ம்.. எப்படி இருக்க?” – வருண்.
            “நல்லாயிருக்கேன் வருண்.. நம்ம பேட்ச் பசங்ககூட டச்சே இல்லை. மது மட்டும் அடிக்கடி பேசுவா. லன்டன் எப்படியிருக்கு?”
            “ஃபண்டாஸ்டிக் கவி. மதுரை எப்படியிருக்கு?”
            “குட்… உண்மையில் வெரி குட். போக்குவரத்து இடைஞ்சல் கிடையாது… சென்னையை விட பெட்டர். படிப்பெல்லாம் எப்படி?”
            “ரொம்ப நல்லா புரிஞ்சிக்க முடியிது… வெரி நெஸ்… நீ வாட்ஸ் அப் குரூப்பில் இல்லையா? உன் நம்பர் தா, நான் உன்னை சேர்த்து விடுறேன்.”
            கவி தனது எண்ணைக் கொடுத்தாள். “அப்புறம் உனக்கு என் நிச்சியதார்த்த ஃபோட்டோஸ் அனுப்புறேன். அடுத்த வருஷம் தான் கல்யாணம். நீ கண்டிப்பாக வரணும்.”
            “ஓ! கண்டிப்பாக வருவேன் வருண். நம் ஃப்ரண்ட்ஸ் அனைவரும் வருவாங்கல்ல?”
“ம்… எல்லோரும் வருவாங்க.”
            “ஓகே வருண் பை.. சீ யு சூன்.”
            வருண் இன்னும் பேச நினைத்தான். ஆனால் கவிக்குப் பேச தோன்றாதலால், அவனும் “பை” சொல்லிவிட்டு கிளம்பினான். நின்று கொண்டே சாப்பிடப் பிடிக்காமல் உட்கார ஒரு இடம் தேடினாள்.
            சுவரை ஒட்டி ஓரமாக சில இருக்கைகள் இருந்தது. கவி அதில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
            கௌஷிக் அவளுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டான். “கவி உனக்கு வருணைத் தெரியுமா?”
            “ம்.. தெரியும் கௌஷிக்… ஏன் கேட்கிற?”
            “ஓ அப்படியா? நீ உன் பிள்ளைக்கு மெடிக்கல் சீட் கன்பர்ம்னு சொல்லு. வருண் யாரை கல்யாணம் செய்கிறான்னு தெரியுமா? பைனான்ஸ் மினிஸ்டர் பொண்ணு”
“ஓ இந்த வருண் பற்றி நான் உனக்கு ஒண்ணு சொல்லவா… அவனுக்கு பணம், பொண்ணுங்க எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவனுக்கு அவற்றின் மேல் அலாதி காதல்… unfortunately பொண்ணுங்களுக்கும் பணத்துக்கும்கூட அவன் மேல் காதல் தான்…”
“எனக்கு ஒரு விஷயம் புரியல, பொண்ணுங்க இந்த மாதிரி பசங்களைத் தான பிடிக்கிது… audi கார்…”- கௌஷிக்.
கவி ஐந்து நிமிடம் எதுவும் பேசவில்லை. பிறகு கௌஷிக்கிடம் கேட்டாள், “கௌஷிக் ஒரு பர்ஸ்னல் கேள்வி கேட்கலாமா?”
            “ம். கேளு கவி”.
            “கௌஷிக், ஏன் பசங்க பொண்ணுங்களை எப்போதும் ட்ரை பண்ணிட்டேயிருக்காங்க. ஏன் அவங்களை ஈசியா மடக்கலாம்ன்னு நினைக்கிறாங்க?” 
      “கவி முதலில் இது என்னோட பர்ஸ்னல் கிடையாது. ஆண்களின் பர்ஸ்னல்… இல்லை… இல்லை… இது தனி மனிதனின் பர்ஸ்னல். நான் கூட உன்னிடம் இதே கேள்வியைக் கேட்கலாமே?, “ஏன் பொண்ணுங்க பசங்களை பார்த்துப் பார்த்து சிரிக்கிறாங்கன்னு?”
            “பசங்கதான் முதல்ல வந்து அசடு வழிவாங்க கௌஷிக்.”
            “இல்லை, இல்லை முதலில் பொண்ணுங்கதான்..”
            “நான் அதிகமாக பாதிக்கப்படும் நபரைப் பற்றி சொல்றேன் கௌஷிக். மயக்கும் பெண்களைவிட, எளிதில் மயங்கிடும் பொண்ணுங்கதான் அதிகம். அப்பாவிப் பெண்கள்தான் அதிகம் கௌஷிக். sometimes… no no manytimes girls are brainless… they become brainless… and they become an easy catch for boys like varun.”
            கவி கூறியதின் உண்மை புரிந்து கௌஷிக் சொன்னான், “கவி உன் சந்தேகத்தை அகில்கிட்ட கேட்போமா? கவி, ஆண்களை அவன் என்னைவிட நல்லாவே காப்பாற்றுவான். இந்த கேஸை அவன் ஹான்டில் பண்ணினால் வாதம் எதிர்வாதம் அனல் பறக்கும். அவனை நான் கூப்பிடவா? இல்லை நீயே கூப்பிடுகிறாயா? ச்ச… பேசாமல் அவன் கூடவே உட்கார்ந்து சாப்பிட்டிருக்கலாம். அவன், பேசாமல் உம்முன்னுயிருந்து பிராணனை வாங்குறான். நீ, கேள்வி கேட்டே என்னை அலற வைக்கிற! நீ ஏன் கேஸ்ட்ராலஜி தேர்வு செய்த? சைகாலஜிதான் உன் ஏரியா கவி.. ச்ச மிஸ் பண்ணிட்டியே! என்னைவிட அவன் பசங்க மனோதத்துவம் நல்லா படிச்சிருக்கான்.. சிரிக்காதே கவி.. அவன் சைகாலஜில நைன்டிபை பர்சன்ட் நான் செவன்டிதான்.. சிரிக்காதே கவி.. உன் கேள்விக்கு அவன் யோசிக்காமல் பதில் சொல்வான். அவன் ஐ.கு. level ஏழாம். இப்பதான் ஐ.கு. டெஸ்ட்கூட எடுத்தான். அவங்க அம்மா அவனிடம் அடிக்கடி “உனக்கு அறிவிருக்கா அகில்’ னு கேட்கிறாங்களாம் அதனால் டெஸ்ட் எடுத்து அவன் அம்மாகிட்ட காண்பிச்சானாம்.”
            கவி சிரித்து சிரித்து அவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
            கவி சிரிப்பதைப் பார்த்த அகில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
“என்ன கவி வாட் இஸ் த ஜோக்?(what is the joke?)” என்றான் அவள் அருகே அமர்ந்தபடி.
“இல்ல… ஒரு கேஸ் பற்றி வாதம் விவாதம் செய்தோம், கேஸ் ஜெயிக்குமான்னு தெரியல…” – கௌஷிக்.
“ஆழம் தெரியாமல் காலை விடாத கௌஷிக்… விவாதம் செய்தா ஜெயிக்கிற கேஸ்ல மட்டும் தான் செய்யணும்.” – அகில் கேலியாய் சிரித்தபடிச் சொன்னான்.
“அப்படின்னா நீ எதைப்பற்றியாவது விவாதம் செய்யிற மாதிரி வந்தால்… விவாதம் செய்து நீ ஜெயிச்சிடுவியா?”- கவி.
“கண்டிப்பா ஜெயிச்சிடுவேன். ஏன்னா எந்த விஷயத்தின் மேல நான் 200 பெர்சென்ட் நம்பிக்கை வச்சிருக்கேனோ அந்த விஷயத்துக்கு மட்டும் தான் சாதகமா விவாதிப்பேன். அதனால கண்டிப்பா ஜெயிச்சிடுவேன். ஜெயிச்சி கண்டிப்பா டிரீட்டும் வைப்பேன்.”
“oh… treat??? you are sure that you will win always?? – கவி.
 “yes… sure sure ஜெயிச்சா டிரீட்.” – அகில்.
“ஜெயிக்கலைன்னா?”- கவி
 “அப்பவும் டிரீட் வைப்பேன்… கண்டிப்பா என்னோட கேஸை அப்பீலுக்கு கொண்டு போவேன்…”
“புரியல…”
“அப்பவும் டிரீட் வைப்பேன்… ஏன்னா அப்பீல்ல கண்டிப்பா வின் பண்ணிடுவேன் கவி. என்னோட அப்பீல் வாதம் படு படு ஸ்டாராங்கா இருக்கும் கவி.”
அகிலின் தன்னம்பிக்கையை மனதில் மெச்சினாள் கவி. ஆனால் அதன்பிறகு பேச்சை வளர்க்க விரும்பாமல்,
“சாப்பிடலாமா? பசிக்குது…” என்று சொன்ன கவி பஃப்வேயை நோக்கினாள்.
“சீஃப் அப்பவே கூப்பிட்டார் நான் கிளம்புறேன். யூ போத் கேரி ஆன்…”- கௌஷிக்.
“ஓகே, போயிட்டு வேமா வா கௌஷிக், அகில் வா சாப்பிடலாம்.” என்றபடி பஃபே நோக்கி நடந்தாள் கவி.
அவள் பஃப்வே நோக்கி நடந்தபோது அகிலிடம், “நீங்க கடலை போடுங்க டாக்டர். கவி சூப்பர் மூட்ல இருக்கா, பெர்சனலா கேள்வி கேட்குறான்னா பார்த்துக்கோ, இப்ப உன் மனசுல இருக்கிறதை சொல்லிடு அகில். நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாத பை.” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
“அகில் கமான்… ” என்று பஃப்வேயின் வரிசையில் நின்ற கவி சைகையில் அவனை அழைத்தாள்.
“அகில் கமான்…  லெட்ஸ் டூ இட். say her I love you “-  அகில் மனது
“இப்ப இல்ல… ஆனா சீக்கிரமே…” என்றான் அகில் மனதிடம்
*****                    

Advertisement