Advertisement

கவிக்கு பயங்கர அதிர்ச்சி. அகிலின் நெடுநாள் கோபம் இப்போது புரிந்தது.
“சாரி அகில். நான் அப்படி உன்னை நினைத்திருக்கக்கூடாது. நீ அந்த மாதிரி கிடையாது!”
            “ம்? அப்படியா? இப்போது எப்படி முடிவு செய்த?”
            “நீ ஒரு நல்ல டாக்டர்! நல்ல டாக்டர்ஸ் ஜொல்லு விடுவதில்லை. எனக்குத் தெரியும்!”
“ஓ! நான் எப்படி நல்ல டாக்டர்னு சொல்ற?”
“கணபதி சார் விஷயத்தில் என் இதயத் துடிப்பு இரட்டிப்பானபோது என் கண்களைப் பார்த்தே அதை கண்டுபிடிச்சியே! அதான், நீ நல்ல டாக்டர்.”
            “தாங்க்ஸ் கவி!”
 “அகில் கணபதி கேஸ் நடக்கும் போது.. என்னை control-ல வைக்க உதவியதற்கு ரொம்ப நன்றிப்பா..”
            “ஓ உன் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்ததை சொல்கிறாயா? அச்சோ, கவி தப்பா நினைச்சிட்டியே.. நான் உன் பல்ஸ் எழுபத்தி இரண்டா? இல்லை எழுபத்திமூன்றா? என்றல்லவா செக் செய்தேன். ச்ச.. சரியா போச்சு போ! எல்லாமே தப்பு தப்பா தோணுது உனக்கு. நான் சில மெடிசன்ஸ் தரவா?” என்று கூறிக்கொண்டே பானட் பாக்கெட்டில் கையை விட்டான்.
            பாக்கெட்டிலிருந்து சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி எடுத்து அவளிடம் கொடுத்தான். கவி அதில் அவள் முகத்தைப்பார்த்து சிரித்தாள்.
            அகில் சொன்னான், “கவி இந்த டாப்ளட்டை எப்போதும் கூடவே வச்சிக்கோ.. நான் என் கூட எப்போதுமே வைச்சிருப்பேன்.”
சிறிது நேரம் பேசிக்கொண்டருந்தார்கள். பிறகு கவி அகிலுடன் கிளம்பி தனது ஹாஸ்டலுக்குப் போனாள்.
            இருவரும் பல விஷயங்களில் ஒத்துப் போனார்கள்.
கவியை விரும்பினாலும் “உன் சம்மதம் பெறும்வரை நான் நண்பனே” என்று அகில் மனதில் கூறிக்கொள்வான். இருவரும் நட்பு என்னும் வட்டத்திற்குள் நட்பைத் தவிர மற்றவற்றை எட்டிப்பார்க்ககூட விடுவதில்லை.
            சில சமாச்சாரங்களை, நம் வீட்டின் அறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட செருப்பைப்போல் வட்டத்தின் வெளியேதான் வைப்பார்கள்.
******
            “அகில் இன்று படு போர், நான் சாயங்காலம் கோவிலுக்குப் போகப்போறேன். அனுப்பானடியில் ஒரு ஆஞ்சிநேயர் கோவில் இருக்கு! நீ போயிருக்கியா? நீ வேண்டுமானால் உன் அம்மாவை அழைச்சிட்டு வர்றியா?”
            “ம் வர்றேன் கவி! எத்தனை மணிக்கு போகலாம்?”
            “ஒரு ஆறுமணிக்கு போகலாம், சரியா?”
ஆனால் அகில் அம்மா வரமுடியாதலால் (???) கவியும் அகிலும் மட்டும் கோவிலுக்குச் சென்றனர்.  கோயிலின் வாசலில் அருகே தனது காரை பார்க் செய்யத் திண்டாடினான் அகில்.
“கவி நீ கோயிலுக்கு உள்ளே போ. நான் பார்க் பண்ணிட்டு வர்றேன்.”
“சரி அகில்… லெஃப்ட்ல இடம் இருக்கு. அங்க காரை பார்க் பண்ணிடேன்.” என்று காரில் இருந்து இறங்கியதும் அவனிடம் சொன்னாள்.
“அங்க தான் ஓரம்கட்டணும். நீ போ…”
கவி சென்றபிறகு தான் கவனித்தான். அவள் அமர்ந்திருந்த சீட்டில் கவியின் கைபேசி இருந்தது. வேண்டாம் என்று நினைத்தபோதும் கை தானாக தனது கைபேசியை எடுத்து கவிக்கு அழைப்பு விடுத்தது
கவியின் கைபேசியை உற்றுப் பார்த்தான்.
            “DR Akil lakotiya calling” என்றது அவள் அருமை கைபேசி. அகில் சிரித்தான்… சாரி சாரி கவியை காதலிக்கும் அகில் சிரித்தான்.
 *******
முகம் அறியா மனிதர்கள். . .
*******
            “நல்லா பாருப்பா.. அவள் அவனை பார்க்கிறாளா?”- காதலி.
            “ஆமாம்”- காதலன்.
            “அவன் என்ன செய்கிறான்?”
            “ஆஞ்சிநேயரை கையெடுத்து கும்பிடக்கூடயில்லை. எப்ப வெண்ணெய் தருவாங்க என்று யோசிக்கிறான் போல!”
            “ஏய், வேடிக்கை செய்யாதே!” என்று கேட்டாள் காதலி.
            “நிஜமாத்தான் சொல்றேன். கோயில்ல வந்து பொய் சொல்வேனா?”  என்றான் காதலன்.
            “சரி. அவள் இப்ப என்ன செய்யிறா?” என்று கேட்டாள் காதலி.
            “இப்ப அவன் அவளைப் பார்க்கிறான். ஆனால் அவள் பயபக்தியோடு ஆஞ்சிநேயரை பாhக்கிறாள்.” என்றான் காதலன்.
            “பத்து நொடிகள்..” எண்ணினாள் காதலி.
            “பதினைந்து நொடிகள்..” எண்ணினாள் காதலி.    “இருபது நொடிகள்.. அவன் என்ன செய்யிறான்?” என்று தொணதொணத்தாள் காதலி.
            “அதே பார்வை தான்! ஆனால் அவள் அவனைப் பார்க்காதபோது தான்!      ” என்றான் அவள் காதலன்.
            “சரி. வந்த வேலை முடிந்தது. வாப்பா கிளம்பலாம்.” என்று சந்தோஷப்பட்டாள் காதலி.
            “அப்பாடா இன்றைக்கு கோட்டா முடிந்தது. வா நாம் பார்க் போகலாம்!” என்று குஷியானான் காதலன்.
            “ஆனால் அரை மணி நேரம் தான்..” காதலி முடிக்கும் முன் காதலன் சொன்னான்,
            “தெரியும் தாயே.. அரை மணி நேரம்தான்.. பார்க்கில் நம்மைச் சுற்றி பத்து தள்ளுவண்டியாவது இருக்க வேண்டும்.. போகும்போதும் வரும்போதும் மெயின் ரோடுதான்.. அப்புறம்… ம்.. ஞாபகம் வந்திடுச்சு. நான் உன் கண்ணை பத்து நொடிக்குமேல் பார்க்கக்கூடாது.. சரியா?”           “100 மார்க். நூற்றுக்கு நூறு”  என்று கூறி நகைத்தாள் காதலி. பிறகு இரு கேலிப் பிசாசுகளும் பார்க் போனதாம்!
   அகில் அம்மா
அகில் அன்னை மருத்துவமனைக்கு வந்திருந்தார். மாதாந்திர செக் அப். எப்போது வந்தாலும் கவியைப் பார்க்காமல் செல்ல மாட்டார். அவர் வரும் போதெல்லாம் இருவரும் சேர்ந்தே மதிய உணவையும் சாப்பிடுவார்கள்.
இருவரும் பேசிக் கொண்டே கேன்டீனுக்குச் சென்றனர்.
            “ஆன்டி நீங்க டெல்லியில் இருந்து இங்க சென்னைக்கு வந்து எவ்வளவு வருஷம் ஆனது?” – கவி.
            “அகிலுக்கு மூன்று வயது இருக்கும் போது வந்தோம். பிறகு ரேஷ்மா பிறந்த பிறகு இங்கேயே தங்குவது என முடிவானது. கவி, உன் அம்மா, அப்பா எப்ப இந்தியா வருவாங்க?”
            “அப்பாக்கு ஆஸ்திரேலியா தான் பிடிச்சிருக்கு என்னையும் அங்கதான் கூப்பிடுறார். படிப்பு முடிந்ததும், யோசிக்கணும். படிப்பு முடிய இன்னும் வருஷம் இருக்கே… நான் P.G பத்தி சொல்றேன். மேலும் அமெரிக்காவுல ஒரு மேற்படிப்பு செய்யணும்னு ஆசை இருக்கு. ரேஷ்மா???”
“She is no more…. brain tumor..”
“sorry aunty…”
“Its ok… அப்போது அகில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருந்தான். ரேஷ்மா பொறியியல் கல்லூரி முதல் ஆண்டு.. இருவரும் பயங்கர தோஸ்த்.. அகில்தான் ரேஷ்மா sick ஆனதை முதலில் கண்டுபிடித்தது.. அவள் அடிக்கடி வாந்தி  பண்ணினாள்.. பசியில்லை.. நான் ஏதோ அஜீரனக்கோளாரு என்று நினைத்து சாதாரண ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன்.. ஆனா அகில் ஒரு நிமிஷம் கூட வீணாக்கலை… நேரே ஹாஸ்பிட்டல் வந்துட்டான். அங்கயிருந்து உடனே எங்களை மதுரையின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனான். அவன் மெடிசன் படிச்சதால ஆரம்பத்திலேயே ரேஷ்மாவின் நிலை அவனுக்குப் புரிந்துவிட்டது. அன்று இரவு வீடு வந்ததும் பயங்கரமா அழுதான். ரேஷ்மாவை கட்டிக் கொண்டு அழுதான். ரேஷ்மா வாயே திறக்கலை அண்ணன் அழுவதைப் பார்த்து பயந்துட்டாபோல.. எனக்கு உலகமே நின்னமாதிரி இருந்தது.”
            “மருத்துவ பரிசோதனை முடிவுகள் மூளையில் கட்டி என்று சொன்னது. ரேஷ்மா எங்க ரெண்டு பேரையும் இங்கிட்டு அங்கிட்டு போக விடல்லை.. ஓம்பிரகாஷ் தினமும் ரேஷ்மாவைப் பார்க்க வந்து விடுவான்.. இருவரும் விரும்பியதே எனக்கு அப்போது தான் தெரியும். அகிலுக்கு முன்பே தெரியும் போல. அவன் தான் ஓம்பிரகாஷ் பத்தி என்கிட்ட சொன்னான். பத்து நாள் தான்.. தூக்கத்தில் எங்கள் வீட்டிலேயே அவள் கடவுள் கிட்ட போய்ட்டா.. முன்பு அவளைப்பற்றி யாரிடமும் பேசக்கூட முடியாது. இப்ப வருஷம் நான்கு ஆனபிறகு தான்.. கேட்கிறவங்களுக்கு பதிலாவது சொல்ல முடியுது.”
            “ஓம் பிரகாஷ் அம்மாவும் அப்பாவும் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தாங்க. ரொம்ப நல்ல பையன். இப்பவும் என் கூட ஃபோனில் பேசுவான். எங்களைப்போல் அவனும் ஒரு பொக்கிஷத்தை இழந்திட்டான். நாம் என்ன தான் மனசுக்கு சமாதானம் சொன்னாலும் எனக்கு ஏன் இது நடந்தது? என்று தான் மனசு கேட்டுக்கிட்டே இருக்கு. அகிலின் அப்பா டெல்லியில் ஒரு மாதம் சென்னையில் ஒரு மாதம் என்று தினம் தினம் பறந்து கொண்டிருந்தார். அவர் தொழில் printing சம்பந்தப்பட்டது.. ரேஷ்மா இறந்து இரண்டு வருடங்களில் அகில் அப்பாவும் தவறிவிட்டார். ரொம்ப வெறுமை.. வாழ்க்கையே ரொம்ப வெறுமை.. அகில் கல்யாணத்தையாவது சீக்கிரம் முடிக்கணும்னு நினைக்கின்றேன் கவி. அவன் பிள்ளைகள்தான் இனி என் உலகம்.. மனசே வலிக்குது கவி.. எனக்கு ஏதாவது தூக்க மாத்திரை கொடேன்.. அகில் தர மாட்டிக்கிறான். இரவில் தூக்கமே வருவதில்லை..”
            “ஆன்டி.. நான் அகில்கிட்ட கேட்டு கண்டிப்பா வாங்கித் தர்றேன்” என்று முகத்தில் கண்டுபிடிக்க முடியாத பொய் சொன்னாள் கவி.
            கவிக்குத்தெரியும் அகில் ஏன் தூக்க மாத்திரை தரவில்லை என்று. மூளையை நாமே மருந்துக்கு அடிமையாக்ககூடாது. அதுவே தனது எண்ண அலைகளை மாற்ற வேண்டும். வலிமிகுந்த நினைவுகளை அதுவே ஒரு கட்டத்தில் மறக்கும். அதற்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். சில சமயம் வருடங்கள் தேவைப்படலாம். ஆனால் நிச்சயம் மன வலியின் தாக்கம் சிறிது சிறிதாக குறையும்.
கிளம்பும் நேரம் வந்தபோது…
கவி “குட்பை ஆன்டி” என்றாள்
“குட்பை கவி” என்றார் அகிலின் அன்னை.
ஆனால் இருவரின் மனதிலும் வேறு ஒரு கேள்வி இருந்தது.
‘கவி… நீ ஏன் அகிலைக் கல்யாணம் செய்துக்க யெஸ் சொல்லலை?? Why dont you marry him… he loves you clever girl… he definetly loves you…’- அகில் அன்னை மனதில்.
‘ஆன்டி நீங்க எதுக்கு அகிலை கல்யாணம் பண்ணச் சொன்னீங்க? I am not fit for akil… he deserves better…’- கவி மனதில்.

Advertisement