யாழினிக்கு, மனோ பேசியது எதுவும் தெரியாதே. எனவே, எவ்வளவு நேரம் பாட்டு கேட்பது.. சோபாவில் படுத்திருந்தவள்… அப்படியே உறங்க தொடங்கினாள்.
அதன் பிறகும், தேவியும்.. கார்த்தியும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும்.. யாழினியின் நிலை தெரியவில்லை.
தேவியை, எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என எண்ணம்தான் கார்த்திக்கு. தம்பியாய் இல்லாமல் அன்னையாய் அவரிடம் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தான்.
தனது பெற்றோர் இருந்திருந்தால்… ஒருவேலை அக்கா… ஆறுதலுக்காக அங்கு வந்திருப்பாளோ… வாய் விட்டு அழுதிருப்பாலோ… என கார்த்திக்கு மனது அடித்துக் கொண்டது.
வயது இருவருக்கும் ஐம்பதை தொட்டது… கார்த்திக்கு நாற்பதில் இருக்கும். இந்த வயதில், அக்கா.. அத்தான்.. என பார்ப்பது அரிது தானே. அத்தோடு.. அது அவள் பாடு என இல்லாமல்… இங்கு இரவு அமர்ந்து அக்காவுடன் பேச நினைக்கிறார்… நம் வளர்ப்பு அப்படி.
ஒரு தம்பி பாதுகாக்க… இன்னுருவர்… அறுதல் தர… என தம்பி உடையாளாக நிற்கிறார் தேவி.
எப்போதும் அலுவலக விஷயம் தேவிக்கு, தெரியும் என்பதால்… இப்போது அதை கொண்டே முதலில் பேச்சை தொடங்கினார் கார்த்தி. அதில் தானே அவரை எளிதில் நெருங்க முடியும்..
“பூந்தமல்லி… மால், வேலைகள் முடிய போகுது… தேவிக்கா…. அதுக்கு பிறகு, வரதராஜன், நம்ம சீனியர் இஞ்சினியர்.. வர மாட்டார்…
அடுத்து ஆள் பார்க்கணும்..” என இன்னும் ஏதோ சொன்னார்… தேவி எப்போதும் போல.. அலட்டாமல் கேட்டுக் கொண்டார்.. தனக்கு தோன்றியதையும் சொன்னார். மெல்ல தன்னிலிருந்து வெளி வந்தவராக… இத்தனை நாள் இருந்த நிலை சற்று மாறிற்றோ…
மெல்ல கார்த்தி… “அத்தான் பத்தி ரொம்ப யோச்கிக்காத க்கா…” என சொல்ல..
தேவி “நான் நல்லா இருக்கேன் கார்த்தி…
நீங்க யாரும் கவலை படாதீங்க… “ என எப்போதும் போல நிமிர்வாய் சொல்ல..
கார்த்தி லேசாக சிரித்தான் “க்கா…. உன்னை எனக்கு தெரியும், எங்கும் நீ அத்தானை விட்டு கொடுக்க மாட்டேன்னு தெரியும்,
அதே போலதான் நானும்…. என் அக்கா எங்கையும்… இறங்கி போக கூடாதுன்னு நினைக்கிறேன்.
நீ அவர் மேல கோவபடு, பேசாம இரு, இல்ல சமாதனாம் ஆகு, அது உன் பாடு,
ஆனால், நான் எப்படி சும்மா இருக்க முடியும்… நீங்க எங்களுக்கு முக்கியம் க்கா…
தம்பியாக இங்குதான் கார்த்தி தோற்று போனார்… சொந்தம் என்பதால் நம்பிவிட்டோமோ… என தோற்று போனார்… பேசவே இல்லை கார்த்தி.
தேவி “என்ன டா, இதுக்குதான் நான் பேசல… யாரையும் தப்பு சொல்ல முடியாது…
அவரு, முன்னாடியே சொன்னா மட்டும் என்ன செய்திருப்போம்…” என்றார் திடமான குரலில்.
ஆனாலும் முடிந்த செயல்கள்… என்பதை கருத்தில் கொண்டு… மேலும் இப்போதுதான் தன் வழிக்கு அக்கா வருவதாக ஒரு எண்ணம்… கொஞ்சம் பேசுவதால் அப்படியொரு எண்ணம்… கார்த்திக்கு.
“சாரி சாரிக்கா…. எங்க மேலதான் தப்பு…
விசாரிக்கல” என்றார் எப்போதோ நடந்த, அதுவும் இவர்கள் சம்மந்தமில்லா நிகழ்வுக்கு.
தேவி சிரித்தார்… “போடா..” என்றார் உண்மையாகவே சிரிப்பு வந்தது தேவிக்கு. என் தம்பிகள் இவ்வளவு நல்லவர்களா என. அப்படியே சற்று நேரம் அமைதி.
பின் கார்த்தி.. எதையோ சொல்லும் ஸ்திரத்துடன் “அதேதான் க்கா, எல்லாம் முடிந்த விஷயம்…
நீ எப்போதும் போல தெளிவோட இரு….
அப்புறம்…” என்றார் லேசாக தயங்கிய குரலில்.
தேவி “இன்னும் என்ன டா, சொல்லு… இன்னும் எனக்கு தாங்கும் பலம் இருக்கிறது….
எனக்கு ஒரு பொண்ணு, இருக்கா…. கல்யாணம் ஆகமா,
அவளை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒன்னு இருக்கு…
அதனால, இன்னும் தாங்குவேன் சொல்லு….
எல்லாம் விட்டு போச்சு… டா…” என்றார் முதல் முறை… தன்னிலையிழந்து.
கார்த்திக்கு, அக்காவின் வேதனை புரிந்தாலும்… அந்த மகன் வரவை சொல்லி, தயார் செய்ய வேண்டுமே…
எதையும் ஏற்பார், பொறுப்பார் என்றாலும், இந்த அதிர்ச்சி சற்று அதிக தானே… என எண்ணி அமைதியானார்.
தேவியே “என்ன டா…” என்றார் சலிப்பான குரலில்.
கார்த்தி பெரு மூச்சு விட்டு “இன்னும் ஒரு, ஓரிரு நாளில் அந்த மகன் இங்கு வருவான் போல க்கா,
அத்தான், அந்த பையன்தான்… ஆபீஸ் பார்க்க கூப்பிட்டிருக்கார்…
அதாவது அந்த பையனுக்கு பவர் கொடுக்கிறார்…” என்றார், என்ன செய்ய முடியும் என்பதான குரலில்.
தேவிக்கு, இவர்கள் செய்தது எதுவுமே தெரியாதே, எனவே “என்ன டா, சொல்ற… முழுசா என்ன நடந்தது சொல்லு” என்றார்.
கார்த்தி இப்போதுதான்… ஆவுடையப்பனுக்கு எதனால் உடல் நிலை சரியில்லாமல் ஆகியது, அதை தொட்டு, தாங்கள் என்ன செய்தோம் என எல்லாம் சொல்லினார்.
தேவி எல்லாவற்றியும் கேட்டு முடித்து “ஆக, அக்காவுக்கு நல்லது செய்றதா நினைச்சு… நீங்கதான் எல்லாம் இழுத்தது விட்டதா” என்றார் ஏதோ விளையாட்டாக பேசும் குரலில்.. ஆனால் அந்த வலியை வார்த்தையில் சொல்ல முடியாமல்.. கண்ணில் காட்டினார் தேவி..
கார்த்தி “க்கா” என்றார் அதே வலியுடன்.
“விடு டா… இப்போவாது தெரிஞ்சதே… எனக்கு.
நான் ஏதோ…
நா….நான்தான் அவருக்கு எல்லாம் ன்னு, மமதையில இருந்தேன்…
அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு.. இப்போவாது எனக்கு புரிஞ்சதே…” என தன் புடவையில் கண்களை துடைத்துக் கொண்டார்.
கார்த்திக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை… அமைதியாகினர்..
இப்படியே இரவு இரண்டு மணி வரை பேச்சு சென்றது அக்கா தம்பி இருவருக்கும்.
அதன் பிறகு எழுந்து கார்த்தி கிளம்ப “இரேன் டா…. காலையில் போ” என்றார் தேவி.
“இல்ல க்கா… தீபா… முழிச்சிருப்பா… வரேன்னு சொல்லிட்டு வந்தேன்… நீ தூங்கு” என இருவரும் வெளியே வர… டிவி ஓடிக் கொண்டிருக்க… யாழி அங்கேயே உறங்கிக் கொண்டிருந்தாள்.
தேவி “பாரு டா… இவள… இங்கேயே படுத்துட்டா…” என்றார்.
கார்த்தி “பாவம் க்கா, எங்க வேளையில் இவளையும் இழுத்திட்டோம்..” என்றார் யாழியை பார்த்தபடியே.
இன்னும் என்ன, என்ன… வர போகுதோ” என்றார் ஆற்றாமையாய்.
தேவியின், அறையிலிருந்து போர்வை கொண்டு வந்து, தன் மருமகளுக்கு போர்த்தி விட்டு, கார்த்தி கிளம்பினார்.
இப்போது கார்த்திதான், ஆவுடையப்பனின் நேரடி தொடர்பில் இருப்பவர். எனவே வீட்டிகுள்ளேயே மீடியேட்டர்… வைத்தாகி விட்டது. உறவுகளில் விரிசல் வந்தாகி விட்டது.
மனைவியே அந்நியம் எனும் போது, யார்தான் அருகில் வருவர். அப்பு, நொந்தே போனார்.
மீண்டும் ஒதுக்கம்… மேகலை எப்படி ஒதுங்கினாரோ, அதே போன்ற சத்தமில்லா ஒதுக்கம்.. இப்போது தேவியுனுடையது.
பேசுவதற்கு கூட யாருமில்லை… அத்தோடு எல்லோரும் பார்க்கும் பார்வையில்.. பெயருக்கு கூட அன்பு இல்லை, ஏதோ குற்றம் சொல்லும் ப்பாவம்தான் தெரிந்தது.
என்ன செய்வது எல்லாம் ஏற்றாக வேண்டும் என தெரிகிறது.. ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லையே.
யாழி வந்து எப்போதும் போல “ப்பா… வலிக்குதா… சாப்பிட்டீங்களா” என கேட்டால் கூட… அப்புக்கு, ஏதோ அவள் தன்னை குற்றம் சொல்லுவதாகத்தான் தோன்றியது.
அத்தனை உறவுகள்… ‘என் தம்பி, என் அத்தான்’ என பெருமை பேசிய உறவுகள் எல்லாம் இப்போது காணவே கானோம்.
ஆம், அலுவலகத்தில் சேகர், மீனாட்சி கணவரிடமும், உமா அக்கா கணவரிடமும் இதை பற்றி சொல்லிவிட்டார்.
எனவே, மீனாட்சியும், உமாவும் வந்து… பார்க்கவில்லை அப்புவை. மேலும் தேவியின் முகத்தை எப்படி பார்ப்பது… என்பது ஒரு பெரிய கவலை.
அத்தோடு… இதையெல்லாம் அப்பு தங்களிடம் சொல்லவில்லை என கோவம் வந்தது அக்காக்களுக்கு. மேலும் மகன் வருகிறான்… எனவும் சொல்லியிருக்க… அதுவும் கோவம் அவர்களுக்கு, ‘எப்படி வருவான் பார்க்கிறேன்’ என சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆக, சேகர்… எல்லோரையும் தயாராக்கினார்… வருபவனை எதிர்க்க.
!@@!@!@@!@!@!@!
மறுநாள் காலை.. இந்த கதிரவன்.. வெப்பன்… சூரியன்… இவன் இல்லையென்றால்.. இந்த உலகம் இப்படியே கவலை, சூழ்ச்சி, களங்கம், தவறு, அநியாயம் இதிலேயே மறைந்து விடும் போல…
அப்படி ஆக கூடாது என்பதற்காகவே இந்த பகலவன்… வெளிச்சம், நம்பிக்கை, சுறுசுறுப்பு, தெளிவு, பொதுநலம் என்ற தனது கதிர் வீச்சால் இந்த உலகை புதுப்பிக்கிறான் போல…
அப்படிதான் இன்றும்… நல்லதாகவே விடிந்தது.
நேசன்… காலையில் தயாராகி… வந்தான் வக்கிலை பார்க்க… ஏதோ, திருவிழாவிற்கு செல்பவன் போல… ஆர்பாட்டமாக வந்தான்.
சின்ன ‘தீ’யான கோவம் அவனுக்கு ‘அம்மாவின் இறுதி நாளுக்கு கூட வரவில்லை… மேலும், எனக்கம் உனக்கும் சம்பந்தம் இல்லை என கையெழுத்து வேறு கேட்க்குறீர்கள், அதுவும் அந்த சின்ன பெண்ணை வைத்து’ என கோவம்.
மனோ, காலையில் எழுந்துதான்… யாழினியிடம் கேட்க செய்தாள்… “யாரு டி அவன், எதற்கு அந்த நேரத்தில் போன் செய்தான்” என கேட்டுக் கொண்டிருக்க…
யாழி “யாரு…” என்க.
“ம்… யாரோ சிங்கப்பூரிலிருந்து வந்தானாம்” என சொல்ல சொல்ல…
யாழியின் முகம் பூவாய்தான் மலர்ந்தது.
பார்த்த மனோக்கு கோவம் வர “என்னடி… யார் அது” என்றாள்,