Advertisement

அத்தியாயம்….8 
கீழ் தளத்தில் கார் நிற்க்கும் இடத்தில் வந்து நின்ற ராஜசேகர்…. “ எங்கேன்னு சொன்னா நானே ட்ராப் பண்ணிடறேன்னே…” பவித்ரனிடம்   அழைப்பு விடுத்தார்.
இரண்டு கார் தள்ளி நின்ற ஒரு காரை காட்டி…” என் பிரண்ட் கார எடுத்துட்டு தான் வந்து இருக்கேன்.” என்று சொன்ன பவித்ரன் அடுத்து பேசாது கொஞ்சம் தயங்கி நின்றான்.
“ என்னிடம் ஏதாவது கேட்கனுமா பவித்ரன்.”  பவித்ரன் என்ன தான் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல் பேசினாலும், ராஜசேகரால் அப்படி பேச முடியவில்லை.
சிறு வயதில் அவர்  வீட்டில் இருந்ததோடு,   நாரயணன் வீட்டில் இருந்தது தான் அதிகம். அதுவும் பவித்ரனின்  அப்பா ஒரு மென் புன்னகையோடு தான் தன்னை பார்ப்பான். ஏதோ பதவி ஆசை. வாழ்க்கையில் மற்றவர் போல் உயர வேண்டும் என்ற வெறி. சந்திரசேகரின் செயலுக்கு துணை போக செய்தது.
இப்போது தான் நினைத்த இலக்கை அடைந்த பின். அதுவும் கடந்த இரண்டு வருடமாய் சந்திரசேகரின் மனஅழுத்தத்தை  பார்த்தவர். ஒரு நண்பனாய் சந்துரு தப்பு செய்ய நினைத்தாலும் நான் தடுத்து இருக்க வேண்டுமோ…
அப்படி தடுக்க முடியாத பட்சத்தில் , புனிதா பக்கமாவது  நின்று இருக்க வேண்டுமோ…? காலம் கடந்து வந்த ஞானோதையத்தால் என்ன பயன்…?  அது தான் அவர் செய்த வினை, பவித்ரன் போல் சிறு பையனிடம் எல்லாம் பணிந்து போக செய்தது.
ராஜசேகர் இப்படி கேட்டதும், பவித்ரன் தன்னிடம் உள்ள  கார் சாவியை வேணியிடம் நீட்டி… “ காருல உட்கார்ந்து இரு.” என்று சொன்னதும், ஏன்…? எதற்க்கு…? என்ற கேள்வி எழுப்பாது பவித்ரன் சொன்னதை செய்தவளை ராஜசேகர் அதிசயத்து தான் பார்த்தார்.
கொஞ்ச நேரம் முன் பேசியது இவளா…? அதுவும்  அவ்வளவு பெரிய குழுமத்தின் தலைவரை மிஸ்டர் என்று  போட்டாலும் பெயர் சொல்லி அழைத்து, உதயனிடமும் எந்த பயமும் இல்லாது பேசியது. புது இடம்.  புது சூழல் எதுவும் பாராது, அந்த அந்த சூழ்நிலையை கைய்யாண்ட விதத்தை பார்த்து பரவாயில்லை பொண்ணு தைரியசாலி, தன்னம்பிக்கை  உடைய பெண் தான் என்று நினைத்தார்.
ஆனால் இப்போது அதற்க்கு எதிர் பதமாய் பவித்ரன் சொன்னதை அப்படியே கேட்டு காரில் வேணி அமரும் வரை பார்த்திருந்த  ராஜசேகர் அப்போது தான் தன்னையே பார்த்திருந்த பவித்ரன் கவனத்தில் பட…
“ என்ன தம்பி என் கிட்ட கேட்கனும்…?” என்று பவித்ரனை பார்த்து ராஜசேகர் கேட்டார்.
“ தம்பி எல்லாம் வேண்டாம். பெயர் சொல்லியே கூப்பிட்டா போதும்.” என்று சொன்னவன், பின் தயங்கி …. “ மிஸ்டர் உதயேந்திரன் எப்படி…? அவரை  பத்தி உங்களுக்கு தெரியுமா…?”
திடிரென்று உதயனை பத்தி இவன் ஏன் கேட்கிறான்…? என்று யோசித்தவர். தனக்கு தெரிந்த விவரங்களை சொன்னார். அதாவது படிப்பு, எந்த வயதில் ஜெர்மனி  சென்றான். அங்கு அவன் செய்த தொழில்…மேலும் எதை பற்றி ராஜசேகர் சொல்லி இருப்பாரோ…
“போதும். போதும்.” என்பது போல்  கை காட்டி அவரின் பேச்சை நிறுத்தினான் பவித்ரன்.
” நான் கேட்டது அவருடைய பர்சனல்.”
“ பர்சனல்னா…?” முகத்தில் குழப்பத்தின்  ரேகை தெரிய கேட்ட ராஜசேகரிடம்…
“ பர்சனல்னா…? அவன் பெண்கள் விசயத்தில் எப்படி…?” ராஜசேகரிடம் இப்படி பேசிய  படி பவித்ரனின் கண் தன்னால் வேணி அமர்ந்து இருக்கும் காரின் பக்கம் சென்று மீண்டது.
பவித்ரன் கேட்ட விசயமும், கேட்ட போது அவன் பார்வை சென்ற இடமும் பார்த்தே பவித்ரனுக்கு என்ன பயம் என்பதை புரிந்துக் கொண்டவனாய்… 
“ நான் விசாரிச்சி சொல்றேன் பவித்ரன்.” என்று சொன்ன ராஜசேகர் அதோடு விட்டு இருந்தால்  பரவாயில்லையாக இருந்து இருக்கும்.
“ நீ கவலை படாதே வேணிக்கு ஒன்னும் ஆக நான் விட மாட்டான்.” என்பதையும்   கூட சேர்த்து சொன்னார் ராஜசேகர். பவித்ரனை கோபம் ஏற்ற இந்த ஒரு வார்த்தையே போது மானதாக இருந்தது.
“ வேணிக்கு நான் இருக்கும் வரை ஒன்னும் ஆக நான் விடமாட்டேன்.” என்று  அழுத்தம் திருத்தமாய் சொன்ன பவித்ரன். கூடவே… “ அவ அம்மாவை பாதுகாத்தது போல் இவளை பாதுகாப்பிங்கலா….?” என்று கேட்ட பவித்ரன் ராஜசேகரை துச்சமான ஒரு பார்வை பார்த்துக் கொண்டே…வேணி அமர்ந்து இருந்த காரில் ஏறி அமர்ந்து  கிளப்பி சென்று விட்டான்.
“என்ன பவி ஒரு மாதிரியா இருக்க. நான் அங்கு ஏதாவது  சொதப்பிட்டேனா…?” போக்குவரத்து நெரிசல் பகுதியை கடந்து பின் தான்,  ஏதோ யோசனையில் வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்த பவித்ரனிடம் இந்த கேள்வியை கேட்டாள்  கிருஷ்ணவேணி..
“ இல்ல.” என்பது போல் தலையாட்டி மறுத்த பவித்ரன்.  அதற்க்கு அடுத்து எதுவும் பேசாது இருப்பதை பார்த்து… “ பவி  என்ன தான் பிரச்சனை உனக்கு. அத வாய திறந்து சொன்னா தானே எனக்கு தெரியும்.” வேணியின்  பொறுமை பறந்து கேட்டாள்.
இதற்க்கு மேல் நாம் எதுவும் பேசவில்லை என்றால், தன் தலையில் முடி இல்லாது செய்து விடுவாள் என்று அவளை பற்றி நன்கு தெரிந்தவனாய்… “  இப்போதைக்கு பிரச்சனை ஒன்னும் இல்ல.” என்பதிலேயே அவனின் பயம் அறிந்தவனாய்..
“ இப்போதைக்கு இல்லேன்னா என்ன அர்த்தம்.  இனி வருமுன்னு நினைக்கிறியா…?” என்று கேட்டவளை யோசனையுடன் பார்த்த பவித்ரன்..
 “ நீ  உதயேந்திரனை பற்றி என்ன நினைக்கிற வேணி…?”  தான் கேட்டதற்க்கு சம்மந்தமே இல்லாது பவித்ரன் கேள்வி கேட்டாலும், “ அவனை பத்தி  நினைக்க என்ன இருக்கு…?” தோளை குலுக்கி விட்டு சாதரணமாய் தான் அவள் பேசினாள்.
ஆனால் பவித்ரன் மனதில் இன்று அந்த மீட்டிங்  ஆராம்பத்தில் வேணியை அனைவரும் அதிர்ச்சியுடன் தான் பார்த்தனர். அது ஏன் என்று அவன் நன்கு அறிவான். சந்திரசேகரை வேணி தான் பார்க்கவில்லையே தவிர பவித்ரன் இரண்டு வருடமாய் நான்கு முறை பார்த்து இருக்கிறான்.
 அவர் நான் யார் என்று தெரியாமலேயே தன்னிடம் அவர் ஒரு தடவை பேசியும் இருக்கிறார். முதல் தடவை சந்திரசேகரை பார்க்கும் போது  அவனுக்கு ஆச்சரியமே ஏற்பட்டது.
உருவத்தில் மட்டும் அல்லாது இதோ இப்போது உதயனை பற்றி கேட்கும் போது,  இது எல்லாம் ஒரு விசயமா…? என்பது போல் பதில் அளித்து விட்டு வேணி தோளை ஏற்றி இறக்கினாளே…அதே போல் தான் அந்த மீட்டிங்கிலும் அவர் மூன்று தடவை செய்தார்.
அவன் வேலை பார்க்கு ஐடி கம்பெனி சார்பாய் தான் அவன் அந்த மீட்டிங்கை அட்டன் செய்தான். அங்கு தான் முதன் முதலில் சந்திரசேகரை பவித்ரன் நேரில் பார்த்தது. சொந்த தாய்  மாமன். அதோடு அத்தையின் புருஷனுமான சந்திரசேகரை முதலில் பார்த்ததும், இவரை எங்கேயோ பார்த்து இருக்குற பாதிரி இருக்கே…? எங்கே…? போன மாதம் டெல்லி போனோமே அங்கா…? இல்ல சேலம் போனோமே அங்கே…? என்று யோசித்தவனுக்கு, சந்திரசேகர் இந்த தோள் குலுக்கும் மேனரிசம் தான்…
இது போல் நம்ம வேணியும் செய்வாளே என்று எண்ணும் வேளயில், இவரின் புகைப்படம் பழைய சாமன் வைத்திருந்த அறையில் பார்த்த நியாபகம். கூடவே வேணியின் முகம்  ஜாடை கூடவே அவர் தன்னை சந்திரசேகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மூன்றையும் கணக்கிட்டவன், அவர் யார்…?என்று தெரிந்துக் கொண்டான்.
அது வரை சாதரணமாக கேட்டுக் கொண்டு இருந்த அவரின் உரையாடல் அவர் யார்…? என்று தெரிந்ததில்,  முகத்தை சாதரணமாக வைத்திருக்க மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது.
அந்த வாரம் வீடு வந்ததும் தன் தந்தையிடம் சொல்லி விட்டான்.  அவர் “ யாரிடமும் சொல்லாதே…குறிப்பா வேணிக்கு சொல்லாதே. மீண்டும் அவரை பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தால் , அங்கு வந்த மத்தவங்க மாதிரி தான் அவரும். இதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்.”  தந்தை சொன்னது போல் அடுத்த முறை பார்க்கும் போது யாரோ என்பது போல் தான் சந்திரசேகரை பார்த்தான்.
அதனால் அந்த மீட்டிங்கில் வேணியை அப்படி அதிசயத்து பார்த்ததில் அவனுக்கு வியப்பு எதுவும் இல்லை.  முதலில் மற்றவர்கள் பார்த்தது போல் தான் உதயனின் பார்வையும் இருந்தது.
ஆனால் அடுத்து அடுத்து வேணி பேச, பேச,   உதயனின் பார்வையில் மாற்றம் வந்ததோ என்ற சந்தேகம் பவித்ரனுக்கு. அதனால் தான் பெண்கள் விசயத்தில்  உதயன் எப்படி என்று அறிந்துக் கொள்ள ராஜசேகரிடம் விசாரித்தான்.
கொஞ்சம் முயன்று இருந்தால், பவித்ரனே உதயனை பற்றி  அந்தி முதல் ஆதி வரை அனைத்தையும் தெரிந்துக் கொண்டு இருந்து இருப்பான். அவன் இந்தியாவில் இருக்க மாட்டான் என்ற செய்தியில் அதோடு அவனை பற்றி விசாரிக்க வில்லை.
இப்போது அவனை பற்றி விசாரிக்க வேண்டுமோ…என்ற  யோசனையின் முடிவில் அவர்கள் தங்கி இருந்த ஓட்டல் வந்து விட… “  ரிசப்ஷனில் கீ வாங்கிட்டு இரு. நான் காரை பார்க்கிங் செய்துட்டு வந்துடுறேன்.” என்றதும்,
“ சரி.” என்பது போல் தலையாட்டி அவன் சொன்னது போல்  அறையின் சாவி வாங்கிக் கொண்டு பவித்ரனுக்காக காத்திருந்தாள். பவித்ரன் வந்ததும்….” என்ன பவி என்ன பிரச்சனை…? ஏன் உம்முன்னு இருக்க. நீ சொன்னது போல் நான் நடந்துக்கலையா…?” பவித்ரன் பக்கத்தில் இருந்தாலே அவள் கையை அவன் கைய் வளையத்தில் விட்டுக் கொண்டு தான் இருப்பாள்.
அதே போல்   பவித்ரனின் கை பற்றிக் கொண்டே வேணி கேட்டுக் கொண்டு இருக்க… “ இது வேறு வேணி.” என்று சொல்லிக் கொண்டு நடக்கும் போது தான் பவித்ரன் ஒன்றை கவனித்தான்.
அது அங்கு இருந்தவர்களின் பார்வை தங்களை குறு குறு என்று பார்ப்பது. அது எதற்க்கு…?  என்று தெரியாத அளவுக்கு பவித்ரன் சின்ன பையன் இல்லையே. படிப்பு முடிந்து கடந்த இரண்டு வருடமாய் சென்னையில்  தானே ஐடி கம்பெனியில் குப்பை கொட்டுக்கிறான்.
மின் தூக்கியில் ஏறிய வாறே ஏதாவது வீடு பார்க்க வேண்டும்.  கடந்த இரண்டு வருடமாய் சென்னையில் தன்னோடு வேலை பார்த்தவர்களின் அறையை தான் பகிர்ந்துக் கொண்டு இருந்தான். 
இனி தனியாக வீடு பார்க்க வேண்டும் என்று எண்ணும் போதே…வேணியோடு தனியாக தங்குவதை பற்றி தன் அம்மா சொன்னது நியாபகத்தில் வந்து போனது. அடுத்து அவர் சொன்னதும் நியாபகத்தி வரத்தான் செய்தது.
முயன்று அதை பற்றி இப்போது நினைக்க கூடாது. இப்போது பார்க்க வேண்டியதே நிறைய இருக்கு என்று நினைத்தவன் அறைக்கு வந்ததும், “ வேணி  டையாட இருந்தா நீ ரெஸ்ட் எடு. நான் ஆபிஸ் வரை போயிட்டு வர்றேன்.” என்று சொன்னவன்.
“ பார்த்து வேணி யார் வந்து கதவை தட்டினாலும்  திறக்காதே. நான் இன்னும் இரண்டு மணி நேரத்துல வந்துடுவேன்.” என்று சொன்னவனை போக விடாது அவனை  தடுத்தவள்.
“ நான் அவனுக்கு அந்த சேர்மேன்  பதவிக்கு ஒகே சொன்னது என் மீது கோபமா பவி.” சிறு வயதில் பவித்ரன் வேணி மீது கோபத்திக் கொண்டு பேசாமல் இருந்தால் இப்படி தான்,  அவனை பேசும் மாறு செய்தால் தான் அவளாள் அடுத்து வேலை பார்க்க முடியும்.
இப்போதும்  அதே போல் தன் கை பற்றி சமாதானப்படுத்த முயன்றவளை அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்தவன். எதிர் இருக்கையில் தான் அமர்ந்துக் கொண்டு… “ நீ ஒகே சொல்லலேன்னாலும் அவன் தான் அந்த பதவியில அமர்ந்து இருப்பான். இப்போ நீயே சரி அவனே அமரட்டும் என்று  சொன்னதால், அங்கு இருந்தவர்களுக்கு நம் மீது நல்ல எண்ணம் தான் வந்து இருக்கும்.” என்று அவள் எதை நினைத்து சொன்னாளோ அதையே பவித்ரன் சொன்னதும்.
“ அப்போ எதுக்கு கோபம்…?” அதையே திரும்ப திரும்ப கேட்கவும், நான் ஏதாவது சொன்னால் தான் நம்மை விடுவாள் என்று… தான் நினைத்ததை சொல்லாது…
 “ என் ஆபிசுல அடுத்த மாசம் யூ.எஸ் போறியான்னு கேட்டதுக்கு, நான் சரின்னு சொல்லிட்டேன். இப்போ போய் நான் பேப்பர் போட்டா  உடனே ஒத்துப்பாங்கலா…? அது தான் யோசனை.” பவித்ரனுக்கு இந்த பிரச்சனையும் மனதில் ஓடிக் கொண்டு தான் இருந்தது.
“ பேப்பர்  ஏன் போடுற பவி. நான் தனியா மேனஜ் பண்ணிப்பேன் நீ கவலை படாதே…” என்று  வேணி சொன்னதும்,
“உன்னை அங்கு தனியா எல்லாம் விட முடியாது வேணி. நான் எப்போதும் உன் கூடவே தான் இருப்பேன். அப்படி நான் இருக்க கூடாதுன்னா…உனக்கு சென்னையே வேண்டாம். வா நாம ஊர பார்த்து போகலாம்.”
இப்படி பவித்ரன் சொன்னதும்.. “ முதல்ல எப்படியோ…?  ஆனா இப்போ என் அம்மாவ பார்த்து அந்த பெரிய மனுஷர் சொன்ன வார்த்தை  தெரிந்ததில் இருந்து. அவருக்கு பதில் அடி கொடுக்காம நான் சென்னையை விட்டு வர மாட்டேன்.”
வேணி இப்படி பவித்ரனிடம் பேசிக் கொண்டு இருக்க,  அங்கு அந்த பெரிய மனுஷர் பரமேஸ்வரர் தன் பெரிய மகனிடம் கத்திக் கொண்டு இருந்தார். 
“ நீ மட்டும் சரியா இருந்து இருந்தா…? என் தொழிலை ஏன்டா  இவ புருஷன் கிட்ட கொடுக்க போறேன்.” அங்கு நின்றுக் கொண்டு இருந்த மகளை காட்டி  திட்டியவர்.. தன் மகளை திட்டவும் மறக்கவில்லை.
“ புருஷன்காரன் என்ன  செய்யிறான். ஏது செய்யிறான்னு பார்காம  அதோடு வேலை என்ன உனக்கு. இரண்டு வருசமா கொஞ்சம் கொஞ்சமா நம்ம கம்பெனி ஷேரை  அவன் பொண்ணு பேருல வாங்கி இருக்கான்.” என்று சொன்னவர் தன் கையில் இருந்த டாக்குமென்ஸை அங்கு இருந்த டீப்பாவின் மேல் போட்டவர்.
“ இது எல்லாம்   அவர் பொண்ணு பேருல சென்னையில வாங்கி போட்டு இருக்குற  சொத்து.”
கீர்த்தி, க்ரீஷை காட்டி  “ இவங்க பேரில, இதுல கால் பங்கு சொத்து கூட இல்ல. இது எல்லாம் பார்க்காம அவன் கூட பார்ட்டி, லேடிஸ் க்ளப்புன்னு சுத்திட்டு இருந்து  இருக்க. மகன் மகள் இரண்டு பேருமே எனக்கு சரியில்ல.” மீட்டிங்கில் பட்ட அவமான்ங்களை தன் மகள் மகன் மீது வார்த்தைகளாய் கொட்டி தீர்த்தார்.
அப்போது தான் அங்கு வந்த உதயேந்திரன்… “ அப்பா நான் தானே சேர்மேனாய் இருக்கேன். இன்னும் ஏன் கோபம்…?” தன் தந்தையை சாந்தப்படுத்தினான். அவர் பயமே இப்போது வேறு ஒரு வடிவத்தில் வந்து மிரட்டுவது அவனுக்கு எங்கு தெரியப்போகிறது.

Advertisement