Advertisement

அத்தியாயம்….6 
என் மகளின் நிச்சயம் இனிதே உங்கள் வாழ்த்தால் நடந்து முடிந்தது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.
தன் கையில் உள்ள பிறப்பு சான்றிதழ் பற்றி  வேணியை மேலும் பேச விடாது எழுந்து நின்ற உதயேந்திரன், “ அவங்க யாருன்னு  தெரிஞ்சிக்கிறதுக்கு முன், நான் யாருன்னு உங்களுக்கு தெரியப்படுத்தவா…?” 
இங்கு என்ன நடக்கிறது…? என்று குழம்பி போய் பார்த்துக் கொண்டு இருந்த  அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர்…” என்ன மிஸ்டர் உதயேந்திரன் எங்களுக்கு உங்கல தெரியாம இருக்குமா …?” என்று  கேட்டதற்க்கு,
மற்றொருவரோ… “ இந்தியா வந்து போகும் இடமா ஆனதால, நாம மறந்துட்டோமோன்னு நினச்சிடார் போல.  மிஸ்டர் உதயேந்திரன் உங்க ஷேர் இங்கு இருக்கும் வரை யாரும் உங்களை மறக்க மாட்டாங்க.” என்று சொன்னார்.
அந்நிறுவனத்தில்  வருடாந்திர சந்திப்பின் போது, இப்போது யார்…? யாரிடம்…?  எவ்வளவு சதவீதம் பங்கு இருக்கிறது என்று அனைவரின் முன்நிலையிலும் தெரியப்படுத்துவர். கடந்த மூன்று ஆண்டாக இந்த சந்திப்பில்  பரமேஸ்வரர் குடும்பத்தில் இருந்து சந்திரசேகரை தவற வேறு யாரும் பங்கு பெறவில்லை.
அப்போது   யார்…? யாரிடம்…?   எத்தனை சதவீதம் பங்கு இருக்கிறது என்று தெரியப்படுத்தும் போது,  உதயேந்திரன் வசம் இருக்கும் இருபது சதவீதம் பங்கு இருக்கிறதே..அதை படிக்க தானே செய்வர்,  என்பதை தான், அந்த நபர் இப்படி தெரிவித்தார்.
“இனி  இந்த சந்திப்பில் என் பெயரை,  வெறும் பங்குதாரராய் மட்டும் வராது. யார்…? யாரிடம் எத்தனை சந்தவிகிதம் பங்கு இருக்கிறது என்பதை சொல்பவனாய் இருப்பேன்.”  உதயேந்திரன் சொன்னதின் அர்த்தம் புரிந்துக் கொண்டவர்கள்….
 “ அப்படியா…?” என்பதை போல் வியந்து உதயேந்திரனை பார்த்தனர்.
கிருஷ்ணவேணியின் பேச்சை  இடையில் நிறுத்து விட்டு உதயேந்திரன் பேச  ஆராம்பிக்கும் போதே, ஏதோ வில்லங்கம் வரப்போகிறது என்பதை பவித்ரன்  புரிந்துக் கொண்டான். அப்படி என்ன தான் வரப்போகிறது என்பதை தெரிந்துக் கொள்ள அமைதியாக   அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டும் இருந்தான்.
வேணியும் பவித்ரன் முகத்தை பார்த்தவள். பின் அமைதியோடு  உதயேந்திரன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தாள். கடைசியாக அவன் பேசிய பேச்சு புரியாது பவித்ரனை பார்க்க, அங்கும் புரியவில்லை  என்ற முகபாவனையே தெரிந்தது.
உதயேந்திரனின் பேச்சை புரிய வைக்கும் வகையாக கம்பீரத்தோடு எழுந்து நின்ற பரமேஸ்வரர்… “ என் மகள் ஜெய்சக்தி  வசம் இருந்த இருபது சதவீதம் பங்கை அவள் தன் சகோதரன் உதயேந்திரனுக்கு கொடுத்து இருப்பதால், ஏற்கனவே உதயேந்திரன் வசம் இருக்கும் இருபது சதவீதத்தை சேர்த்து நாற்பது சதவீதம் இப்போது உதயேந்திரன் வசம் உள்ளது.
  இந்த  குழுமத்தில் அதிக பங்கு பெற்று இருக்கும் உதயேந்திரன் இந்த குழுமத்தின் சேர்மேனாய் அமர இருக்கிறார்.”  என்று தன் பேச்சு முடிந்தது போல் அமர்ந்து விட்டார்.
சந்திரசேகர் இறப்புக்கு பின் அவர் மனைவி ஜெய்சக்தி தான் சேர்மேனாக அமர்வார் என்று அனைவரும் எதிர் பார்த்து இருந்தனர். உதயேந்திரன் என்ற மகன் பரம்மேஸ்வரருக்கு இருக்கிறார்.
அவர் ஜெர்மனியில் தொழில் செய்கிறார். அவருக்கு இந்தியா பிடிக்காது. உதயேந்திரன் பற்றி காது வாக்கில் கேட்ட விசயங்கள் இவைகள்.  ஆனால் இப்போது ஜெய்சக்தி தன் பங்கையும் தன் தமயனுக்கு கொடுத்து விட்டார் என்று சொன்னதும், அங்கு இருந்த அனைவரும் ஒரு நிமிடம் அமைதி காத்தனர்.
பின்  யார் வந்தால் என்ன…? நமக்கு நம் பங்கு ஏறவேண்டும். வெளி நாட்டில்  தொழில் செய்து வெற்றி பெற்றவன். பார்க்கலாம் இவன் என்ன செய்கிறான் என்று மனதில் நினைத்தாலும், வெளியில் அதை  காட்டாது, நாங்க இதை வர வேற்கிறோம் என்று தன் கைய் தட்டல் மூலம் தெரியப்படுத்தினர்.
 தான் பேசிய போதும் சரி, தன் தந்தை   பேச ஆராம்பித்த போதும் சரி உதயனின் பார்வை மொத்தமும் வேணி, பவித்ரனிடம் மட்டுமே இருந்தது.  அவர்கள் எந்த வித பதட்டமும் இல்லாது ஏதோ செய்தி வாசிப்பை கேட்பது போல் முகபாவனையோடு கேட்டுக் கொண்டு இருப்பதை பார்த்து அவனுக்கு ஆச்சரியமே…
அதுவும் பவித்ரன் முகம்.  தான் பேசியது புரியாது முதலில் கொஞ்சம் முகத்தில்  வந்த யோசனை. பின் என்ன தான் வரப்போகிறது என்ற முகபாவனை யோடு கேட்டுக் கொண்டு இருப்பதும். அதே குழப்பத்தோடு வேணி பவித்ரனை பார்த்ததும், பின் அவன் தெளிவு அவள் முகத்தில் வருவதும் பார்த்தவன் மனதில்,  திட்டம் வகுக்க தொடங்கினான்.
ராஜசேகர் பவிதரன் கீழ் தளத்தில் வேணிக்கு பயிற்ச்சி கொடுக்க ஆராம்பிக்கும் போதே  வந்து விட்டார். அங்கு எதிர் புதிருமாய் இருக்கும் இரு குடும்பமும் அவருக்கு வேண்டிய குடும்பம்.
ஒரு குடும்பம் இன்று  தான் இந்த நிலைக்கு இருக்க காரணமான குடும்பம். மற்றோரு குடும்பமோ தன்னை  மகன் போல் பார்த்த குடும்பம். ஆனால் நான் அவர்களுக்கு செய்தது நம்பிக்கை துரோகம். அதை தீர்க்க தான் இரண்டு வருடமாய்  நண்பர் சந்திரசேகரின் திட்டத்துக்கு எல்லாம் கூட இருந்தேன்.
அந்த திட்ட வெற்றியின் முதல் படியாய் தான் இதோ  இப்போது வேணியை இங்கு வரவழைத்து இருக்கிறேன். வேணிக்கு இப்போது தான் உதவி செய்வது ,ஏறி வந்த ஏணியை  எட்டி உதைப்பதற்க்கு சமம். ஆனால் நான் உதைக்க தான் வேண்டும். முன் செய்த பாவத்தை சரி செய்ய, மீண்டும் ஒரு பாவம்.
முதல்  பாவம் செய்யும் போது,  வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற ஒன்றே குறிகோளாய் இருந்தது. அப்போது இந்த பாவம் புன்னியம் எல்லாம் பெரியதாய் அவர் கண்ணுக்கு தெரியவில்லை.
ஆனால் மத்தியதர வயதில் இருக்கும் இப்போத    துரோகம் செய்யும் போது, தன் குழந்தையின் மீது இந்த பாவம் சேர்ந்து விடுமோ என்ற பயம் இருக்க தான் செய்கிறது. அதன் வெளிப்பாடாய் இந்நேரம் மீட்டிங் தொடங்கி இருக்கும் என்று தெரிந்தும், அங்கு போகாது தன்னை திடப்படுத்திக் கொள்ள நேரம் கடத்தினார்.
பின் போய் தான் ஆகவேண்டும் என்று எண்ணும் வேளையில் பவித்ரனிடம் வந்த அழைப்பில் தயக்கம் உதறி தள்ளியவராய் மீட்டிங் நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்.அனைவரையும் பார்த்து….
 “ மன்னிக்கனும்.” என்று மன்னிப்பு வேண்டியவராய் அவர் இருக்கையில் சென்று அமர்ந்தார்.
பரமேஸ்வரர்… “ அது தான் வக்கீலும் வந்துட்டாரே..இன்னும் என்ன…? தன் முன் இருக்கும் காகித்த்தை அனைவரும் பார்க்கும் படி தூக்கி போட்டவர். “ ராஜசேகர் இதை நீயே படியும் படிச்சிட்டு நீயே கைய்யெழுத்தும் வாங்கு.” என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல் தன் வெள்ளை நிற மீசையை முறுக்கி விட்டவராய் கம்பீரமாய் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார்.
தன் முன் விழுந்த காகிதத்தில் எழுதி இருப்பதை பார்த்து குழம்பி போன ராஜசேகர் ஜெய்சக்தியை பார்த்தார்.  ஜெய்சக்தியோ தலை நிமிராது தன் விரலில் நகை கண்ணை பார்த்த வாறு அமர்ந்து இருக்க, பின் அவர் பார்வை கீர்த்தி, கிரிஷ் வசம் சென்றது அவர்களும் தலை நிமிரவில்லை.
ராஜசேகர் அவர்களை நோட்டம் விடும் போதே எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்த பவித்ரன்  அந்த காகித்தை கைய் பற்றி அதில் இருந்த வற்றை படித்தவன். பின் தன்னிடம் ராஜசேகர் கொடுத்த உயிலையும் படித்து …
.” எனக்கு இதில் சில சந்தேகம் இருக்கு.” என்று கூறியவனாய் எழுந்து நின்றான்.
‘புதுசா இவன் யாருடா….? சந்திரசேகர் போல் இருக்கும் அந்த பொண்ணே யாருன்னு தெரியாம குழம்பி போய் இருக்கோம். இப்போ இவனை நினச்சும் குழம்பிக்கனுமா…?’ நினைத்ததை வெளியில் சொல்லாது பங்குதாரர்கள் பவித்ரனை பார்த்தனர் என்றால்,.
நம் நாயகன் உதயேந்திரனோ…. “ இது கட்சி மீட்டிங் இல்ல. கண்டவங்க எழுந்து  நின்னு பேசுறதுக்கு. இதில் பங்கு வெச்சி இருக்குறவங்க மட்டும் தான் பேச அனுமதி.” என்று  உதயேந்திரன் சொன்னதுமே…
“ அப்போ மிஸ்டர் பரமேஸ்வரருக்கு இங்கு பங்கு இருக்கா….?”  பவித்ரனை உதயேந்திரன் கண்டவங்க என்ற சொன்ன வார்த்தையில், ,கிருஷ்ணவேணி வில்லிருந்து வந்த அம்பாய் வார்த்தைகளை யோசிக்காது எழுந்து நின்று சொல்லி விட்டாள்.
அவள் சொன்ன வார்த்தையின் வீரியம் அவளே அறியாள். இது வரை அந்த குழுமத்தில் இருக்கு வயதானவர்களே பரமேஸ்வரரை பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். அவரை குறிப்பிடும் சொல். பெரியர் என்பதே…
சிறு பெண். இன்னும் இப்பெண் யார்…?  என்ற முழுவிவரமும் தெரியவில்லை. அனைவரின் முன்நிலையிலும்  பெரியவரை பெயரை குறிப்பிட்டு சொன்னதும் அதிர்ச்சியோடு பார்த்தனர் என்றால்,
 உதயேந்திரனோ…”ஏய்…” என்று  கத்திய வாரே ஆவேசமாய் எழுந்து நின்று விட்டான்.
பரமேஸ்வரரோ வேணியை ஆராய்ச்சியுடன் பார்த்தவாரே, உதயனிடம் … “ உதய் அமைதி.” அவனை அமைதி படுத்த முயன்றார்.
தன் தந்தையின் பேச்சுக்கு அவர் முகத்தை பார்த்த உதயேந்திரன்,  என்ன நினைத்தானோ… கொஞ்சம் கோபம் அடங்கியவனாய்… “ யார மரியாதை இல்லாம பெயர் சொல்ற…?” இப்போதும் அவன் குரலில்  கொஞ்சம் கோபம் எட்டி பார்க்க தான் செய்தது.
அனைவரும் தன்னை அதிர்ச்சியுடன் பார்த்தும் அடங்கதவளாய்… “ நான்  அவரை வெறும் பெயரை மட்டும் சொல்லலையே… முன்ன மிஸ்டர் போட்டு தானே சொன்னேன். முன்னே மிஸ்டர் போட்டால் அது மரியாதையாய் அழைப்பது தானே…?” அங்கு இருந்த அனைவரையும்  பார்த்து கேட்டாள்.
இப்படி கேட்டால்…? அங்கு இருந்தவர்கள் எப்படி தான்  பதில் சொல்வர். வேணி சொல்வது போல், மிஸ்டர் என்ற வார்த்தை  மரியாதையை குறிப்பிடும் சொல் தான். ஆனால் இது வரை பரமேஸ்வரரை யாரும் அப்படி அழைத்தது இல்லையே…  அதை ஒருவர் குறிப்பிடவும் செய்தார்.
அதற்க்கும் நம் வேணி… “ எதற்க்கும் முதல் ஒன்று உண்டல்லவா… அது என்னால் ஆகட்டும்.” என்று சொன்னவளின் பார்வை முழுவதும் பரமேஸரரின்  பக்கம் மட்டுமே… வேணியின் பார்வையில் தெரிவது என்ன….? யோசனையுடன் உதயேந்திரன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே… சாதரணமாக தன்னை காட்டிக் கொண்டவள். பின்  பேச்சை தொடர்ந்தாள்.
“ மிஸ்டர் பரமேஸ்வரர் , மிஸ்டர் உதயேந்திரன்  சார்பாய் பேசும் போது, என் சார்பாய் மிஸ்டர் பவித்ரன் பேசலாம் தானே…”
கிருஷ்ணவேணி சிறு பிசிரும் இல்லாது பரமேஸ்வரர் என்று சொல்லும் போது நேர்க் கொண்டு அவரை பார்த்தது.அதே போல் உதயேந்திரன் என்று சொல்லும் போது உதயேந்திரனை நேர்க் கொண்டு பார்த்து பேசியது. கடைசியாக பவித்ரன் என்ற பெயரை குறிப்பிடும் போது அவள் உதட்டில் தோன்றிய புன்னகையோடு அவனை பார்த்தது.
இவை அனைத்தையும்  பார்த்துக் கொண்டு இருந்த உதயேந்திரன்  மனதிலோ, இவள் தான் பார்த்து கடந்து வந்த பெண்கள் போல் இல்லை. இவள் வேறு மாதிரி. நாமும் இவளை வேறு மாதிரி தான் அணுக வேண்டும் என்று நினைத்தானே ஒழிய…அந்த வேறு மாதிரி என்ன  என்பதை அவனே முடிவு செய்யவில்லை.
‘இந்த பெண் என்ன இவ்வளவு சொல்லியும் பெரியவரை மண்டையில் அடித்தது போல் பெயர் சொல்லியே சொல்லுது.’ அங்கு இருந்தவர்கள் இப்படி , நினைத்ததை சொல்லவில்லை என்றாலும், அந்த குழுமத்தின் விசுவாசி ஒருவர்  எழுந்து நின்று…
“ முதல்ல  நீ யாருன்னு சொல்லும்மா…முதல்ல உனக்கும் இந்த குழுமத்துக்குமே என்ன சம்மந்தமுன்னு தெரியல. இதுல நீ எனக்கு பதில் இவர் பேசுவாருன்னு அந்த பையன கைய் காட்டுற…” அறுபதின் முடிவில் இருக்கும் அந்த பெரியவர். நீ அந்த பையன் என்று பேசுவதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாது…
 கிருஷ்ணவேணி… “ இது சரியான கேள்வி. இதை விட்டுட்டு பெயர்  சொல்லி சொல்ற. இப்படி பேச்சை வளர்க்க கூடாது என்று சொன்னவள்.  பரமேஸ்வரரை பார்த்தவாரே… “ இந்த குழுமத்தில் உங்கள் அனைவரையும் விட அதிக்கப்படியான பங்கு இருக்கும்  பங்குதாரர்.” என்று கிருஷ்ணவேணி சொன்னதும். அவர்களுக்குள் சில பல பேச்சு முடிந்து…
நீ என்று சொன்ன அந்த அறுபதை கடந்தவர் இப்போது… “ நீங்க என்ன சொல்றிங்க…?” என்று கேட்டார்.
இந்த பேச்சு வார்த்தைகளை உதயேந்திரனும் பரமேஸ்வரரும்  அமைதியுடன் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் தெரியும் இதை கடந்து தான் ஆகவேண்டும் என்று…
ஆனால் பரமேஸ்வரரின் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள். அதுவும் ஜெய்சக்தி அவர் பிள்ளைகள் அடுத்து  வேணி பேசும் பேச்சில் தங்களை என்ன மாதிரி பார்ப்பார்களோ என்று தலையை குனிந்தது, குனிந்த வாரே இருந்தனர்.
தன் கையில் உள்ள உயிலை ராஜசேகரிடம் கொடுத்தவர்… “ இதை இந்த  குழுமத்தின் வக்கீலே படிச்சி காட்டுவார்.” 
அதற்க்கு என்று காத்திருந்த்து போல் ராஜசேகர்…தான் எழுதிய உயிலை அனைவரின் முன்னும் படித்தார்… “ அதாவது… என் முதல் மனைவி புனிதா…” ராஜசேகர்  இப்படி படித்ததும் அனைவரின் பார்வையும் ஜெய்சக்தி பக்கமே…. ராஜசேகர் உயிலை படித்து முடித்து விட்டு அனைவரையும் பார்த்தார். ஆனால் அதிர்ச்சியில் யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை.
பின் அவரே தொடர்ந்து… “ இந்த  குழுமத்தின் பங்கு அதிகம் வைத்திருக்கும் மிஸ் கிருஷ்ணவேணி இந்த முழுமத்தின் சேர்மேனாய் பதவி வகிக்க உள்ளார்.” என்று ராஜசேகர் படித்ததும் தான் அனைவரும்…” என்ன…இது..இந்த சின்ன பெண்ணிடம் இவ்வளவு பெரிய குழுமத்தின் பதவியா….?”
இந்த பெண்ணின் செயல் இந்த முழுமத்தில் பங்காய் போட்டு இருக்கும் தங்கள்  பணம் சரிவை நோக்கி போகுமோ …என்று பயந்து தயங்கி அடுத்து என்ன பேசுவது…? என்று தயங்கி அனைவரும் பரமேஸ்வரரை பார்த்தனர்.
அவர்கள்  பார்வையில் அர்த்தம் கண்டவராய் தொண்டை கணைக்க எழுந்து நின்ற பரமேஸ்வரர்…” எங்க குடும்ப பிரச்சனையில் உங்க  பங்கை சரிவை நோக்கி போக விட மாட்டேன். அதனால் தான் என் மகளின் பங்கை என் மகனுக்கு கொடுத்து நாற்பது சதவீதம் பெற்று இருக்கும் உதயேந்திரனை இந்த குழுமத்தின் சேர்மேனாய் அறிவிக்கிறேன்.” என்று தன் கம்பீரக் குரலில் சொன்னதும்..  இது அங்கு இருந்த அனைவருக்கும் ஏற்புடையாதாய் தான் இருந்தது.
பவித்ரன் அந்த உயிலில் படித்து அறிந்துக் கொண்டது என்ன…? அதை தெளிவு படுத்தினால் உதயேந்திரனுக்கு அப்பதவி கிட்டுமா…? 
 

Advertisement