Advertisement

வேணியும் அவர்கள் எதிர் பார்த்ததுக்கு ஏதுவாய் தான் மிகவும் பதட்டத்துடன் தன் நகங்களை கடித்து துப்பிய வாறே மிக பதட்டத்துடன் காணப்பட்டாள்.
“என்னடா நீ பார்த்துட்டியா….மாப்பிள்ளை யாரு…? உன் கூட வேலை பாக்குறவரா…?” என்று அவன் தந்தை கேட்க…
“என் கூட வேலை பாக்குறவர் கிடையாது.” என்று சொல்லிக் கொண்டே வேணியை பார்க்க…
அவளோ வேண்டாம் இப்போது சொல்ல வேண்டாம் என்பது போல் தலையை மறுப்பது போல் ஆட்டினாள்.
ஆனால் பவித்ரனோ இந்த விசயத்தை இன்று இல்லை என்றாலும், வேறு ஒரு நாள் பேசி தானே ஆகவேண்டும். அதை இன்றே பேசி முடித்து விடலாம் என்று நினைத்து தன் தாத்தாவை பார்த்து…
“மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை. நம்ம உதயேந்திரன் தான்.” என்று  அவன் சொல்லி முடித்ததும், அந்த இடமே சிறிது நேரம் அமைதியாக இருந்தது. யாரும் எதுவும் பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து தான்… “அந்த வீட்டு பிள்ளை எப்போதிலிருந்து  நம்ம வீட்டு பிள்ளை ஆனான் என்று மட்டும் சொல்றியா பவி.”
பவித்ரன் சொன்ன நம்ம உதயேந்திரன் என்ற வார்த்தையை தான் பெரியவர் இப்படி கேட்டார்.
அதற்க்கு பவித்ரன் திரு திரு என்று முழித்திருக்க….அவனுக்கு பதிலாய் புனிதா தான்… “எப்போ இந்த வீட்டு பெண் விரும்ப ஆராம்பிச்சாளோ அப்போ இருந்து அந்த வீட்டு பையன் நம்ம வீட்டு பையனா ஆயிட்டான்…” என்று சொன்ன புனிதா பவித்ரனை பார்த்து….
“நான் சொன்னது சரி தானே பவி.”   அதற்க்கு பவியும் சரி என்பது போல் தலையாட்டினான்.
அந்த வீட்டின் பெரியவராய் நாரயணன்…அங்கு இருந்த இருக்கையில் சோர்ந்து போய் அமர்ந்த வாறே…  “இது சின்ன பசங்க விசயம் இல்ல பவி.”
காயத்ரியை காட்டி…  “இந்த பெண்ணை ஏத்துக்குறதே ரொம்ப கஷ்ட்டப்பட்டு மனச தேத்திக்கிட்டு  தான் ஏத்துக்கிட்டோம். ஆனால் அந்த வீட்டில் சம்மந்தம் வெச்சிக்கனும் என்றால்…” மிகவும் தயங்கி தன் மருமகள் புனிதாவை பார்த்தவர்…
பின் ஒரு பெரும் மூச்சோடு… “ என் மருமகள் உடஞ்சி போயிடுவா பவி. அவ ஏற்கனவே ரொம்ப  கஷ்ட்டப்பட்டுட்டா…இனியாவது சந்தோஷமா இல்லை என்றாலும் நிம்மதியாவது இருக்கட்டும்” என்று சொல்லி முடித்தவர்  புனிதாவை பார்த்தவர்…
“நீ என்னம்மா சொல்ற…? முதல்ல நான் எடுத்த முடிவு சரியில்லாமல் போயிடுச்சி.  இனியாவது சரியா இருக்கனும் என்பது தான் என் ஆசை.” என்று அவர் சொல்லி முடித்ததும்.
தன் மகள் வேணியை பார்த்துக் கொண்டே… “நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா நான் ஒன்னும் சொல்லட்டுங்கல மாமா….” தன் மாமனாரிடம் அனுமதி கேட்க..
“என்னம்மா எது என்றாலும் தாரளமாக சொல்லும்மா…இது உன் மக சம்மந்தப்பட்டது.” என்று நாரயணன் சொன்னதும்…
“நீ..ங்க எடுத்…த இ..ந்த முடி…வும் சரியில்ல மாமா.” தயங்கி தயங்கி என்றாலும், புனிதா  தன் மனதில் இருப்பதை சொல்லி விட்டாள்.
புனிதா இது வரை தன் மாமனாரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட  பேசியது இல்லை. அவர் மகன் தனக்கு துரோகம் செய்த போது கூட…. அவரிடம்… “உங்க மகன் இப்படி செஞ்சிட்டாரே…” என்று கேட்டாள் இல்லை.
ஆனால் இன்று இப்படி சொன்னதும் தன் மருமகளை அதிர்ச்சியோடு பார்க்காது, ஆச்சரியத்தோடு தான் பார்த்தார் நாரயணன்.
தொடர்ந்து புனிதா… “அன்னிக்கு  விருப்பம் இல்லாது உங்க மகனுக்கு என்னை கட்டி வெச்சிங்க. இப்போ விருப்பம் இருக்கிறவங்களுக்கு கட்டி வைக்காம தப்பு செய்யிறிங்க. அந்த பையன் எப்படியோ எனக்கு தெரியாது. ஆனா என் மகள் இந்த பையனை தவிர வேறு ஒருத்தனுக்கு கட்டி வெச்சா அவ சுகமா வாழ மாட்டா என்பது மட்டும் எனக்கு தெரியும்.
நான் தான் ஒழுங்கா வாழல. என்  மகளாவது ஒரு நல்ல வாழ்க்கை வாழட்டும் மாமா. நீங்க என்னை பத்தி எல்லாம் யோசிக்காதிங்க.  என் மனசு காயப்பட்டு காயப்பட்டு அது மறுத்து போயிடுச்சி…இனி யாராவது அதை காயப்படுத்தினா கூட சுரனை இருக்குமான்னு கூட எனக்கு தெரியல.”
புனிதா எனக்கு இந்த திருமணத்தால் புதிதாய் காயம் பட என்ன இருக்கிறது…? என்பது போல் பேசினாள்.
“நான் உனக்காக மட்டும் தான் பார்த்தேன் அம்மா.” என்று சொல்லியவர் அதற்க்கு அடுத்து என்ன என்று அவர் யோசிக்கும் வேளயில்… தன் அக்கா பிள்ளைகளோடு அங்கு வந்தான் நம் உதயேந்திரன். 
அனைவரும் அவனை எப்படி வரவேற்க்கிறது என்பதில் ஒரு வித தயக்கம் உருவாகியது. அந்த தயக்கம் எல்லாம் சிறுபிள்ளைகளுக்கு இல்லை போலும்… க்ரீஷூம். கீர்த்தியும், நாரயணன் அருகில் சென்று …
“நாங்க வந்தது உங்கள்ளுக்கு பிடிக்கலையா தாத்தா…” என்று இருவரும் நாரயணனின் இரு கை பற்றி கொண்டு கேட்டனர்.
அவருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. இவர்களும் தனக்கு பேரன் பேத்தி தான். ஆனால் அவர்களிடம் உரிமையுடன் பேச முடியாது.
 அப்படி பேசினால் அது தன் மருமகள் புனிதாவுக்கு செய்யும் துரோகம் என்று நினைத்தவர் அவர்கள் முகம் பாராது…
“அதெல்லாம் ஒன்றும் இல்லை.” என்று சொன்னவரின் குரல் கர கரத்து கேட்டது.
அந்த குழந்தைகளை புனிதாவும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். இவர்கள் தன் கணவரின்  பிள்ளைகள். அவர்களுக்கும் தாத்தா என்ற ஆசை இருக்கும்.
அவர்கள் தன் தாத்தா கை பற்றி கேட்கும் போது அவர்கள் முகத்தில் தெரிந்த அந்த ஏக்கம், ஆர்வத்தை பார்த்த புனிதா குழந்தைகள் என்ன தப்பு செய்தார்கள்.
பெரியவர்கள் செய்த  பாவத்தை சிறியவர்கள் ஏன் சுமக்க வேண்டும்…? என்று நினைத்து…
“உங்க தாத்தாவுக்கு நீங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம் தான் பா…” மனதில் ரணம் இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்காது முகத்தில் புன்னகை  மின்ன சொன்னவளை ஒரு வித ஆற்றாமையோடு பார்த்தார் பெரியவர்.
“விடுங்க மாமா சின்ன பசங்க. வேணி பவித்ரன் போல தானே அவங்களும்.” என்று சொல்லி முடித்தவளின் பார்வை  தனக்கு மருமகனாய் வரப்போகும் உதயேந்திரன் பக்கம் சென்றது.
இதற்க்கு தான் காத்துக் கொண்டு இருந்தது போல் புனிதாவின் அருகில் சென்ற உதயேந்திரன் வேணியின் கை பற்றி வேணியிடம் சொன்னது போலவே அவரின் காலில் விழுந்து…
“நீங்க தான் எங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கனும் அக்கா.”  என்று உரிமையுடன் தன் விருப்பத்தை சொன்னான்.
தாத்தா நாரயணன் தான்… “அதெல்லாம் சரிப்பா…உங்க அ.” பரமேஸ்வரரை உன் அப்பா என்று கூட சொல்லாது நிறுத்தி விட்டார்.
கீர்த்தி தான் அவரின் உடல்நிலை பற்றிய முழுவிவரத்தையும் சொன்னவள். அவர் கேட்கும் சூழ்நிலையிலும் இல்லை. புரிந்துக் கொள்ளும் சூழ்நிலையிலும் இல்லை என்று சொன்னதும் தான் அங்கு இருந்தவர்களுக்கு அப்பாடி என்று ஆனது.
ஆம் அவரின் உடல் நிலை கேட்டு நிம்மதி தான் அடைந்தனர். இந்த திருமணம் நடந்தால் அந்த பெரிய மனுஷனால் வேணி என்ன என்ன பிரச்சனையை எதிர் கொள்ள நேரிடுமோ என்று பயந்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இந்த விசயம்  எவ்வளவு பெரிய ஆசுவாசம். அதனால் அனைவரும் ஒரு பெரும் மூச்சி விட்டனர்.
பின்னும் நாரயணனுக்கு இந்த கல்யாணம் விசயமாக பேச ஒரு வித தயக்கமே  இருந்தது. அதை பார்த்த உதயேந்திரன் நாரயணன் அருகில் சென்று அவர் கை பற்றியவனாய்…
“உங்க நிலை எனக்கு புரியுது அங்கிள். நானே இதை நினச்சி கூட பாக்கல. உங்க வீட்டுக்கு வந்து உங்க வீட்டு பெண்ணை கேட்பேன் என்று. ஆனால்…” என்று உதயேந்திரன்  தன் பேச்சை இழுத்து நிறுத்த…
“ எங்களுக்கும் ஆச்சரியம் தான்  எங்க வீட்டு பெண் உன்னை விரும்புவா என்று. அதோடு ஆச்சரியம் என் மருமக இந்த கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தது.”என்று உதயேந்திரன் நிறுத்திய பேச்சை பெரியவர் முடித்து வைத்தார்.
புனிதாவின் சம்மதம் கிடைத்ததில் உதயேந்திரனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. தங்களுடைய இந்த கல்யாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட போவது புனிதா அக்கா தான் என்பது அவனுக்கு தெரியும்.
அவர் சட்ட திட்டமாய் மறுத்து விட்டால் உதயேந்திரனால் ஒன்றும் செய்ய முடியாது. புனிதா அக்கா மறுத்தாலும் அதில் தவறு இல்லை என்று உதயேந்திரனே சொல்வான். புனிதா அக்காவை எப்படி சம்மதிக்க வைப்பது என்ற குழப்பத்தில் தான் இங்கு வந்ததே…
இப்படி உடனே அதுவும் தான் வருவதற்க்கு முன்னவே அவர்  சம்மதித்தில் அவ்வளவு மகிழ்ச்சி உதயேந்திரனுக்கு…
அந்த மகிழ்ச்சியோடு புனிதாவிடம்.. “நீங்க சங்கடப்படுவது போல் எதுவும் நடவாது நான் பார்த்துக்  கொள்கிறேன். என் கல்யாணத்துக்கு என் அக்கா ஜெய்சக்தி வருவாங்க அத மட்டும் நீங்க கொஞ்சம் பொறுத்துக்குனா  போதும்.
அதன் பின்  அவங்கல பார்க்கும் சங்கடமான சூழ்நிலையை நான் உங்களுக்கு உருவாக்க மாட்டேன்.” என்று புனிதாவின் மனதை புரிந்தவனாய்  வாக்களித்தான்.
அவன் வாக்களித்தது போல் தான் பவித்ரன், வேணியின்  திருமணம் ஒரே நாளில் ஒரே மேடையில் நடத்த திட்டமிட்ட படி நடந்தேறியது.
அதில் ஒரு அக்காவாக ஜெய்சக்தி வந்து வாழ்த்தி விட்டு சென்றதோடு சரி. அதன் பின் உதயேந்திரன்  தன் வேணியை தன்னோடு ஜெர்மனிக்கு அழைத்து சென்று விட்டான்.
ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை இந்தியா வரும் போது வேணியை கம்பத்தில் விட்டு விட்டு இவன் சென்னையில் முடிக்க வேண்டிய வேலையை முடித்து விட்டு தன் தந்தை, சகோதரியோடு ஒரு வாரத்தை கழித்து தன் மனைவியை இத்தனை நாள் பிரிந்திருந்ததே பெரிது என்பது போல் தன் மனைவியை பார்க்க கம்பத்துக்கு சென்று விடுவான்.
உதயேந்திரனின் தந்தை அதே ஜடம் போல் தான் வாழ்க்கையை தள்ளுகிறார். வேணியை கம்பத்துக்கே அனுப்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்த உதயேந்திரன் அவனே கம்பத்து ஆளாய் ஆகி விட்டான்.
********************************************** 
இக்கதையில் குறை எதாவது இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த கதை முடிக்க எனக்கு பல மாதங்கள் எடுத்து விட்டது. இது போல் நான் எந்த கதையும் இழுத்து அடித்தது கிடையாது. என்ன ரொம்ப வெச்சி செஞ்சிடுச்சி இந்த கதை…அடுத்த வாரம் எபிலாக்கோடு வருகிறேன். அதற்க்கு முன் திங்கட்கிழமை கனவு பட்டறையில் என் முதல் பதிவை பதிவிடுகிறேன். திங்கள் புதன் வெள்ளி  வாரம் மூன்று பதிவு கொடுக்கிறேன் வாசகர்களே… இங்கு கொடுக்கு இந்த ஆதாரவை கனவு பட்டறையிலும் கொடுப்பிற்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் விஜயலட்சுமி ஜெகன்.

Advertisement