Advertisement

அத்தியாயம்…..49…..3
க்ரீஷூம், கீர்த்தியும் முதலில் பார்த்தது வேணியை தான். ‘இவங்க எப்படி…” என்று நினைத்தவர்கள் பின்  தன் மாமா தான் அழைத்து வந்து இருப்பார் என்று சுற்றியும் முற்றியும் பார்த்தனர்.
பாவம் அவர்கள் மாமா தரை தளத்தில் இருப்பது தெரியாது அவர்கள் பார்வை மேல் நோக்கியே வட்டம் இட்டுக் கொண்டு இருந்தது. பின் தான் வேணி ஒரு வித சங்கடத்துடன் கையை பிசைந்த வாறே…
“ஸ்…ஸ்” என்ற சத்தத்துடன் தங்களை பார்ப்பதும்,  கீழே பார்ப்பதும் இருப்பதை பார்த்து பயத்துடன் தான் கீர்த்தியின் கண்ணும் கீழே பார்த்தது.
வேணியின் மூலம் வெளி வந்த   அந்த ஸ்…ஸ் என்ற அந்த சத்தம். வேணி இட்டதா இல்லை வேணியின் கால் கீழ் பாம்பு சத்தம் இட்டுக் கொண்டு இருக்கிறதா…?என்ற பயத்தில் வேணியின்  கீழ் பார்த்தால்…அங்கு அவர்கள் பயந்த பாம்புக்கு பதிலாக தன் மாமன் விழுந்து கிடக்கவும்…
“அய்யோ….” என்று இருவரும் ஒரு சேர வாய் பொத்தி  கொண்டனர்.
“எழுந்துடுங்க…என்ன இது பிள்ளைங்க எதிரில்…”  என்ற வேணியின் அந்த அதட்டல் என்னவோ காலம் காலமாய் இப்படி உதயேந்திரன் அவளின் காலில் விழுவது போலவும்…இப்போது பிள்ளைகள் எதிரில் விழுந்து அவள் மானம் பறிபோனது  போலவும், பேசியதை ஒரு வித ரசனையுடன் கேட்டுக் கொண்டே தான் உதயேந்திரன் வேணியின் கால் கீழ் இருந்து எழுந்து நின்றான்.
மாமனின் இந்த சிரிப்பு முகத்தை பார்த்து விட்டு..என்னடா இது என்னவோ பரிசு கிடைத்தது போல் இப்படி சிரிச்சிட்டு இருக்கார்.  உதயேந்திரனின் சிரித்த முகத்தை பார்த்து இருவரும் இப்படி தான் நினைத்தனர்.
சிறியவர்கள் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது…வேணியின் இந்த அதட்டல் உருட்டல் கேட்க அவன் காத்துக் கொண்டு இருந்ததை…
க்ரீஷ் தான்… “மாமா நாங்க வேணா  போயிட்டு பின் ரொம்ப நேரம் கழிச்சி வரவா…?” என்று க்ரீஷ்  தன் மாமனிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தாலும், அவன் கண் முழுவதும் தன் அக்கா வேணியின் வசமே இருந்தது.
கிரீஷ்க்கு அப்பா என்றால் உயிர். அவர் தான் அவனுக்கு ரோல் மாடல். அதுவும் தன் நண்பர்கள்… “உங்க அப்பா சும்மா இப்போவும் ஹீரோ போல  இருக்காருடா…” என்று சொல்லும் போது அவனுக்கு அவ்வளவு பெருமையாக தான் இருக்கும்.
பின் நடந்த நிகழ்வை தாங்க முடியாது தான் அவன்  தன்னையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்றது. இன்று தன் தந்தை மறுபிம்பமாய் இருக்கும் தன் சகோதரியை பார்க்க பார்க்க என்னவோ அவனுக்கு தன் தந்தை தன்னிடம் திரும்பவும் வந்து விட்டது போல் ஒரு நினைப்பு.
தன் அக்கா மகனின் பேச்சு தன்னிடம் இருந்தாலும், கவனம் தன்னிடம் இல்லை என்று தெரிந்துக் கொண்ட உதயேந்திரன் க்ரீஷ் அருகில் சென்று அவன்  முடியை கலைத்து விட்ட வாறு…
“என்னடா என்ன…?” எப்போதும் தன் அக்கா பிள்ளைகள் இது போல் சோர்ந்து இருந்தாலோ…இல்லை கவனம் இங்கு இல்லாமல் இருந்தாலோ…இது போல் கேட்பது தான்.
அப்போது எல்லாம்.. .தன் முடியை கலைத்து விட்ட மாமனை முறைத்த வாறே… “இப்போ எதுக்கு நல்லா இருந்த ஹார் ஸ்டைலை கலச்சி விடுறிங்க…?” தன் மாமனை கோபிப்பது போல் கேட்டு வைப்பான்.
இன்றோ தன் மாமனின் பரிவில் கண்கள் கலங்க தன் சகோதரியையே பார்த்துக் கொண்டு இருந்தான். வேணியும் இதை கவனித்தாள் தான்.
“நாம இங்கு வந்தது இவனுக்கு பிடிக்கவில்லையோ…” என்று தவறாய் புரிந்து கொண்டு… ஒரு வித தர்மசங்கடத்துடன் அங்கு நின்றுக் கொண்டு இருந்தாள்.
இது என்ன மாதிரியான நிலை. இவர்கள் என் உடன் பிறப்புகள் தான். ஆனால் ஏதோ ஒரு வெளியாள் முன் நிற்பது போல் என்று அவள் நினைப்பு ஓடும் போதே…
“கிருஷ்ணா எங்க எல்லோருக்கும் காபி கொண்டுட்டு வர்றியா…?” என்று உதய் சொல்லவும், அவள் குழம்பி போய் அவனை பார்த்தாள்.
என்ன இவன் விளையாடுகிறானா…? இங்கு சமையலறை எங்கு இருக்கேன்னே எனக்கு தெரியாது. இதுல காபி போட்டு எடுத்துட்டு வரனுமா…? என்று அவள் நினைப்புக்கு பதில் கொடுக்கும் வகையாக…
சமையல் அறை பக்கம்  தன் கை நீட்டி… “கிருஷ்ணா கிச்சன் அந்த பக்கம் இருக்குடா…. பசங்க இப்போ தான் வந்தாங்க. நீ தான் பார்த்தியே…சர்வண்ட்ட காலையிலேயே அனுப்பிட்டேன்.” என்று கொஞ்சம் பாவம் போல் சொன்னவனின் பேச்சை காதில் வாங்கிய வாறே… அவன் கை நீட்டிய பக்கம் போனாள்.
‘வேலைக்காரங்கல அனுப்பிட்டு தான் அய்யா என்னை கூப்பிட்டு வந்தாங்கலோ…’ என்று நினைக்கும் போதே அவள் உதட்டில் ஒரு  மெல்லிய புன்னகை வந்து அமர்ந்துக் கொண்டது.
வேணியின் சிரித்த முகத்தை பார்த்ததும் தான் உதய்க்கு மனது கொஞ்சம் நிம்மதி அடைந்தது. உதய் பேச்சு யாரிடம் இருந்தாலும், பார்வை எப்போதும் வேணியிடமே தான் இருக்கும்.
இது இப்போது அல்ல. அவன் ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்த நாள் தொட்டு அவன் பார்வை அவளையே தான் வட்டமிட்டுக் கொண்டு இருந்தது.
என்ன ஒன்று அப்போது எல்லாம் அவன் பார்வையில்…இந்த பெண்ணை கம்பத்துக்கு அனுப்பிட முடியுமா…? என்ற ஆராய்ச்சி பார்வை பார்த்தான் என்றால், இப்போது எல்லாம் தன் கிருஷ்ணாவாக அவளின் முகமாறுதலில் அவள் மனம் புரிய வேண்டி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
மொத்தத்துக்கு அவன் பார்வை இந்தியா வந்த தொட்டு  வேறு எந்த பெண் மீதும் செலுத்தாது வேணியின் மீதே செலுத்தி இருந்தான் என்பது தான் உண்மை.
தன் பார்வை மொத்தமும் வேணியிடம் இருந்ததால் தான் தன் அக்கா பிள்ளைகள்  வந்ததும், அவள் ஒரு வித தர்மசங்கடத்துடன் இருப்பதை பார்த்து தான் அவளை சகஜமாக்கும்   பொருட்டு காபி தயாரிக்க அனுப்பினான்.
உண்மையில் காலையில்  வேலையாட்களிடம்… “ஈவினிங் வர வேண்டாம்.” என்று  சொன்னது உண்மை தான்.
வேணியிடம்  கொஞ்சம் மனது விட்டு பேசவும், அவளுடன் தனிமையில் இருக்கும்  பொருட்டு தான் வேலையாட்களை வர வேண்டாம் என்று சொன்னது.
ஆனால் வேணியிடம் கழிக்க இருந்த தனிமையை கலைக்கும்  விதமாய் தன் அக்கா பிள்ளைகள் வந்து நிற்பார்கள் என்று அவன் நினைக்கவில்லை.
எப்போதும் நேரம் கழித்து தான் இருவரும் வருவர். கீர்த்தி வீணை, கம்பியூட்டர் க்ளாஸ், சென்று தான் வருவாள். க்ரீஷ் கோச்சிங் சென்டர் சென்று, அவனும் நேரம் கழித்து தான் வருவான்.  இன்று என்ன இருவரும் ஒரு சேர வந்து இருக்கிறார்கள் என்று சந்தேகத்துடன் தன் அக்கா பிள்ளைகளை பார்த்தான்.
க்ரீஷின் பார்வையும் சமையல் அறைப்பக்கம் சென்ற வேணியிடம் தான் இருந்தது. கீர்த்தியின் பார்வையும் வேணியிடம் தான் இருந்தது. ஆனால் பார்வையில்  வித்தியாசம்…
கீர்த்தியிடம் அவளை பார்த்துக் கொண்டே… “இன்னைக்கு க்ளாஸ் போகலையா குட்டிம்மா…?” என்ற மாமனின் கேள்வியில் வேணியின் பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தவள் ஒரு அதிர்வுடன் மாமனை பார்த்த வாறு…
“இல்ல.” என்று சொன்னவளின் குரலில் ஏதோ ஒரு வெறுமை இருப்பது போல் இருந்தது. என்ன இது…? திரும்பவும் முதலில் இருந்தா…. உதயேந்திரனுக்கு ஏதோ ஒரு வித சலிப்பு.
அன்று தான் கீர்த்தியிடம் குழந்தைக்கு சொல்வது போல்… “நீ சக்தி அக்கா போலவும், புனிதா அக்கா போலவும் போக கூடாது. இது படிக்கும் வயசு..இந்த வயசுல  ப்யூச்சர் ப்ளான் டிசைட் பண்ணலாமே ஒழிய… ப்யூச்சர் பார்ட்னர செலக்ட் செய்ய கூடாது. உன் நிலையில் நீ இருந்தா…உன்னவன் உன்னை தேடி வருவான்.ஆனால் அதற்க்கு உண்டான காலம் இது அல்ல.” என்று அவள் மனதில் ஏறும் அளவுக்கு சொன்னதும்… அன்று தலையை தலையை ஆட்டினாளே….இன்று ஏன்  வேணியை இப்படி பார்க்கிறாள்.
“குட்டிம்மா என்ன திரும்பவுமா…” அடுத்து  உதய் என்ன சொல்லி இருப்பானோ…
“ஏன் என் பசங்களும்  என்னை போல் இப்படி ஏங்கிட்டு இருக்கவா…” என்று சொன்னவளின் குரலில் என்ன இருந்தது என்று உதயால் சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும், சரி இல்லை என்று மட்டும் தெரிந்தது.
“என்னடா குட்டிம்மா உனக்கு என்ன குறை…? நீ ஏன் மத்தவங்கல பார்த்து ஏங்க போற…?” என்று கேட்டவனுக்கு பதிலாக கீர்த்தியின் கை சமையலறை பக்கம் நீண்டு…
“அவங்கல  பார்த்து தான் மாமா. அப்பாக்கு என்னோட எங்களோட அவங்கல ரொம்ப பிடிச்ச தொட்டு தானே… அவங்க சம்பாதிச்சது எல்லாத்தையும் அவங்க பேருல எழுதி வெச்சாங்க.” 
இதை கீர்த்தி தன் முன் நின்றுக் கொண்டு இருந்த மாமனின் முகத்தை பார்த்து கேட்டதால் பின் பக்கம் வந்து நின்ற வேணியை அவள்  கீர்த்தி கவனிக்கவில்லை.
கவனித்த உதயனும்  வேணி வருகிறாள் என்று கீர்த்திக்கு சொல்லவில்லை. எது வரை இவர்களுக்கு மீடியேட்டர் வேலை பார்ப்பது. எது என்றாலும் அவர்களே பேசி ஒரு நிலைக்கு வரட்டும் என்று நினைத்து வேணி கொண்டு வந்த காபியின் ஒன்றை தான் எடுத்துக் கொண்டு மற்றொன்றை க்ரீஷ் கையில் கொடுத்தவன்…
அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டே  க்ரீஷிடம்… “இங்க உட்கார்ந்தா இன்னும் உன் அக்கா நல்லா தெரிவா….வா காபி குடிச்சிடே உங்க அக்காவை பார்த்து பார்த்து பாச பயிரை வள.” என்று சொல்லிக் கொண்டே தன் காபியை   கொஞ்சம் கொஞ்சம் குடித்தவனாய் வேணியை பார்க்க ஏதுவாய் அமர்ந்துக் கொண்டான்.
“நான் பாசப்  பயிர் வளர்க்கிறேன். நீங்க என்ன வளர்க்க பார்வை இடுறிங்க…?” உதய்  சொன்னது போலவே தன் மாமன் பக்கத்தில் அமர்ந்த கிரீஷ் காபியை அருந்திய வாறே தன் அக்காவை பார்த்துக் கொண்டு தன் மாமனிடம் கேள்வியை  எழுப்பினான்.
இவர்கள் இப்படி பேசிக் கொண்டு இருக்க வேணியோ காபி கப்பை கீர்த்தியிடம் கொடுத்து விட்டு தானும் ஒரு கப்பை எடுத்து அதை அருந்திய வாறே…
“உன் மாமாவிடம் என்ன பேச்சிட்டு இருந்த கீர்த்தி.” அக்கா தங்கையின் முதல் உரையாடல் இது.
தன் மாமனிடம் அவ்வளவு தைரியமாக வாய் அடித்தவளுக்கு, தன் அக்காவிடம் பேச ஏதோ தயக்கம் வர…
“ஒன்னும் இல்ல.” அந்த ஒன்னும் இல்ல என்ற வார்த்தையே தேய்ந்து பின் காணமல் போனது போல் தான் கேட்டது.
கீர்த்தியின் ஒன்னும் இல்ல என்ற வார்த்தையை காதில் வாங்காதது போல் வேணி… “அப்பா உங்க அப்பா ஏன் என்னுடைய பெயரில் மொத்த சொத்தையும்  ஏழுதி வெச்சார் தெரியுமா…?” என்ற கேள்வியோடு வேணியின் பேச்சு முடிய கீர்த்தியோ எதற்க்கு…? என்பதும் போல் அவள் முகத்தை பார்த்திருந்தாள்.
கீர்த்திக்கும்   அவள் அம்மா போல் சொத்து பெரிய பிரச்சனை இல்லை. தாங்களும் அவருடைய பிள்ளைகள் தானே..இந்த செயல் தங்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்பதை தானே எடுத்து காட்டுகிறது. இது தான் கீர்த்தியின்  கோபமாய் இருந்தது.
கீர்த்தியின் ஆர்வமான பார்வையில்… “ஏன்னா உன்னை இங்கு எல்லோருக்கு சந்திரசேகரின் மகள்…” க்ரீஷை காண்பித்து…
“இவன் மகன் என்று இங்கு இருக்கும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்னை…” அதன் பின் எதுவும் சொல்லாது கீர்த்தி க்ரீஷ் முகத்தை வேணி பார்த்தாள்.
கீர்த்திக்கு வேணியின் இந்த பேச்சில் ஆடி தான் விட்டாள். எப்படி பட்ட நிலை இவங்களுக்கு. உரிமை பட்ட மனைவிக்கு மகளாய் பிறந்தும்  இன்னாருடைய மகள் என்று நிரூபிக்கும் நிலை. அது என்ன மாதிரியான நிலை.
அப்போது தான் தங்களோடு தன் அக்காவின் நிலை மிகவும் மோசம் என்று அவளின் நியாமான மனது எடுத்துரைக்க…
“அக்கா….” இது வரை தன் மாமனிடம் வேணியை  பற்றி பேசும் போது அக்கா என்று கீர்த்தி கூறியிருக்கிறாள்.
ஆனால் நேரிடையாக….”அக்கா…” என்றழைத்து  வேணியை அணைத்துக் கொள்ள…
க்ரீஷூம் …”நானு…நானு…” என்று அவர்களோடு  அந்த அணைப்பில் கூட்டணி அமைத்து கொள்ள…
உதயேந்திரன்…  “ஏய் நான்டா…” அவர்களோட கலக்க எழ பார்த்தவனிடம்… க்ரீஷ்… “உங்க ஹக் வேறு டிப்பார்ட்மென்டில் வரும். எங்க ஹக் வேறு டிப்பார்மென்டில் சேறும்.” என்று கையை ஒழுங்கு காட்டுவது போல் சொல்லியவனை வேணி….
“க்ரீஷ் என்ன இது  மாதிரி எல்லாம் பேசுற…”
வேணி வளர்ந்த சூழ்நிலையில் பெரியவர்களிடம் இது போல் கட்டி பிடிப்பது எல்லாம் பேசி பழகியது கிடையாது. அதனால் ஒரு அக்காவாக அவனை கண்டித்தாள்.
உதயோ… “கிருஷ்ணா இது போல் பசங்க பேசினா நாமலும் பிரண்டா பேசனும். இது தப்பு அது தப்புன்னு நாம பேச தான். அவங்க இதை நம்ம கிட்ட பேசாம வெளியில் பேசி அது வேறு மாதிரி முடியுது.” என்று வேணியை அதட்டியவன்…
க்ரீஷிடம் “நான் உனக்கு பிரண்டுடா மச்சான் நீ என் கிட்ட பேசு.” என்று சொல்லவும்…
“மச்சானா இது எப்போது இருந்து…” என்று கேட்டதற்க்கு,
“கிருஷ்ணாவை நீ அக்கா என்று அழச்சதிலிருந்து” என்ற அவர்களுடைய பேச்சை இடை மறிக்க என்று உதயேந்திரனுக்கு பேசியில் அழைப்பி வர…
அந்த அழைப்பை ஏற்றவனுக்கு  அந்த பக்கத்தில் சொல்லப்பட்ட செய்தி உண்மையா…?பொய்யா…? தன்னை அங்கு வர வழைக்க திரும்பவும் தன் தந்தை நாடகமாடுகிறாரா…? சந்தேகப்படும் வேளயில்…
கீர்த்திக்கு அவள் அன்னையிடம் இருந்து வந்த அழைப்பில்… “கீர்த்தி தாத்தாவுக்கு ஸ்டோக் வந்துடுச்சி…**** இந்த ஹாஸ்பிட்டலில் தான் வந்து இருக்கோம். நீ மாமாவை கூட்டிட்டு வா சீக்கிரம். எனக்கு எதுவும் புரியல.” என்ற   அழைப்பில் இந்த செய்தி உண்மை என்று நிரூபனன் ஆனது. 
 
 

Advertisement