Advertisement

“பேசலாம். தாரளமாய் பேசலாம். வேணி சொன்னா கண்டிப்பா பவித்ரன் கேட்பான்.” என்று சொல்லிக் கொண்டே உதயேந்திரன்   கீர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். கீர்த்தியின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து உதயேந்திரனுக்கு என்னவோ போல் ஆனது.
தன் அக்கா இரண்டாவது மனைவி என்று தெரிந்ததில் இருந்து… “தன்  அக்காவுக்கு என்ன குறை இது போல் வாழ்க்கை அமைத்துக் கொள்ள…” 
தன் அக்காவை நினைத்து அப்போது என்ன நினைத்தானோ, அதே தான் இப்போதும் தன் அக்கா மகளின் செயலை பார்த்து ‘இவளுக்கு என்ன குறை….?’ என்று நினைக்க தோன்றியது.
“வேணி சொல்லி   பவித்ரன் உன்னை கல்யாணம் செய்தா ஒன்னு புனிதா அக்கா நிலை உனக்கு வரலாம். இல்லை உங்க அம்மா நிலை உனக்கு வரலாம்.” என்று  உதயேந்தின் பேச பேச கீர்த்தியின் முகம் இருளடைய தன் மாமனை பார்த்திருந்தாள்.
கீர்த்தியின் கை பற்றி தன் அருகில் அமர்ந்த்திக் கொண்டவன்… “காதலிலும் சுய கவுரவம் தன் மானம் வேண்டும் குட்டிம்மா. பிடிச்சி திருமணம் செய்தா தான்  திருமண வாழ்க்கையில் அவங்களுக்குள் ஏதாவது பிரச்சனை வந்தாலும், சுமுகமா பேசி தீர்த்துக் கொள்ள தோனும். ஒருவருக்குள் ஏதாவது குறை இருந்தாலும், அதை அவங்க பெரிது படுத்த மாட்டாங்க.
இதே பிடிக்காது கல்யாணம் செய்தா ஒரு சின்ன பிரச்சனை என்றாலும், அவங்க கோர்ட்டுக்கு போய் நிப்பாங்க. மத்தவங்க சின்ன குறைய கூட பூத கண்ணாடி வெச்சி பார்க்க தோனும்.
உங்க அப்பா புனிதா அக்காவை பிடிச்சி கல்யாணம் செய்து இருந்தா…உங்க அம்மா என்ன பேரழகி வந்திருந்தா கூட அவர் கவனம் வேறு எங்கும் சென்று இருக்காது.
அந்த பிடிக்காத திருமணம் தான். இடையில் உங்க அம்மா வரக்காரணம்.  இதோ நீ இப்படி உன்னையே தாழ்த்தி பேசவும் காரணம். வேணி பிரச்சனைக்கும்  அந்த பிடிக்காத திருமணம் தான் காரணம்.”
***********************************************
உதயேந்திரன் தன்   அக்கா மகளிடம் பேசிக் கொண்டு இருக்கும் அதே சமயத்தில் பவித்ரன் காயத்ரியின் கை பற்றியவாறு தன் தாத்தாவிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
பவித்ரனுக்கும்,  உதயேந்திரனுக்கும்   உருவத்தில், குணத்தில், ஒழுக்கத்தில் மாறுபட்டு இருந்தாலும் எண்ணத்தில் ஒன்றாய் இருந்ததால் உதயேந்திரன் கீத்தியிடம் பேசிய அதே வார்த்தையை தான் தன் தாத்தாவிடம் உபயோகித்தான்.
“தாத்தா உங்க மகனிடம் புனிதா அத்தையை பிடித்து இருக்கா…?இல்லையா…? என்று கேட்காது. குறைந்த பட்சம் அவருக்கு யோசிக்க கூட அவகாசம் கொடுக்காது நீங்க உங்க விருப்பத்தை உங்க மகன் மேல் திணிச்சிங்க.”
இடையில் ஏதோ பேச வந்த நாரயணனை பேச விடாது… “அதுக்குன்னு அவர் செஞ்சது சரின்னு நான் சொல்ல வரல. அத்தை வாழ்க்கை கெட அவருக்கு எவ்வளவு பங்கு இருக்கோ… அதை விட அதிகப்பங்கு உங்களுக்கும் தான் இருக்கு. நீங்க இருவர் செஞ்ச தப்பால் பாதிக்கப்பட்டது என்னவோ அத்தையும், வேணியும் தான்.
அந்த தப்ப  திரும்பவும் நம்ம குடும்பம் செய்யனுமா….? எனக்கும் வேணிக்கும் விருப்பம் இல்லாத இந்த திருமணத்தை செய்து வெச்சி…இன்னொரு புனிதா அத்தை, வேணி உருவாகனுமா…?”
காயத்ரியிடம் தன் காதலை ஒத்துக் கொண்ட பவித்ரன். தவறு தவறு ஒத்துக் கொள்ள வைத்த காயத்ரியை கைய்யோடு தன் வீட்டுக்கு அழைத்து  பவித்ரன் “நான் இவளை தான் திருமணம் செய்துக் கொள்வேன். இவளை தான் எனக்கு பிடித்தும் இருக்கு.” என்று சொல்லி விட்டான்.
பவித்ரன் காயத்ரியை மூன்று வருடம் முன் தன் நண்பர்களோடு வண்டலூர்  பூங்கா போன போது தான் பார்த்தான். பார்த்தது என்னவோ அரை மணி நேரம் தான். 
ஒவ்வொரு விலங்கின் முன்னும் நின்றுக் கொண்டு, அந்த விலங்குகள் செய்வது போல் இவளும் செய்து காட்டிக் கொண்டு இருந்தாள்.  அவளை பிடித்தது.
ஆனால் அந்த பிடித்தத்தை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்ல அவன்  விரும்பவில்லை என்பதை விட… தன் குடும்ப சூழல் இடம் கொடுக்கவில்லை. இடம் கொடுக்காது என்று சொன்னால் சரியாக இருக்குமா…
பிடித்தம்  என்பது அவள் இல்லாது தான் இல்லை என்ற காதல் எல்லாம் இல்லை. வேணி அவனுக்கு சிறுவயது முதலே பழக்கம். தொட்டு பேசியதில் இருந்து சிறுவயதில் அடுத்து அடுத்து படுத்து உறங்கி என்று, வேணியை   ஒரு பெண் இல்லாது ஒரு நண்பனாய் பவித்ரன் நினைத்தான் என்றால் சரியாக இருக்கும்.
வீட்டில் திருமணம் பேச்சு நடந்த போது கூட வேணியோடு அது போல் ஒரு எண்ணம் பவித்ரனுக்கு தோன்றவில்லை. அவனே நினைப்பான் நான் பார்த்த பெண்களிலேயே வேணி தான் அழகு. ஏன் எனக்கு இவளிடம் அது போல் ஆசை வரவில்லை என்று.
பின் அவனே திருமணம் ஆனால் ஆசை வந்து விடும். அவனுக்கு அவனே இப்படி சொல்லிக் கொள்வான். ஆனால் காயத்ரி பார்த்த  அன்று அவள் நினைவில் வந்தால் என்று சொல்ல முடியாது.
மூன்று நாள் கழித்து ஏனோ வண்டலூர் பூங்காவில் பார்த்த பெண்ணின் முகம் அவன் முன் தோன்றி தோன்றி மறைவது போல் ஒரு பிம்பம் அவனுக்கு தோன்றலாயிற்று.
அது தினம்  தோறும் இல்லை என்றாலும், அவ்வபோது. அப்படி தான் ஒரு நாள் தன் ஆபிசின்  பார்க்கிங் ஏரியாவில் தன் இரு சக்கர வண்டியை நிறுத்தி விட்டு மின்தூக்கியை நோக்கி செல்லும் போது தன் எதிரில் கையில் ஒரு பைலோடு  வண்டலூர் பெண் வந்து கொண்டு இருப்பது போல் இருந்தது.
முதல்ல எல்லாம் ஒரு நிழலா தான்  தெரிஞ்சா. இப்போ நிஜமா நேரில் வருவது போல் இருக்கு. பவித்ரா இப்படியே போனா சீக்கிரம் மென்டல் ஆஸ்பிட்டல் போக வேண்டியது தான்.
அவனுக்கு அவனே நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் யாரோ… தன் எதிரில் நடந்து வந்த கற்பனை பிம்பத்துக்கு… “மிஸ் காயத்ரி இதை அப்பாவிடம் கொடுத்து விடுங்க.”
தன் ஆபிஸ் ப்யூன் கொண்டு வந்து  கொடுத்ததை பார்த்து விட்டு இவ நம்ம ஆபிசுக்கா வந்துட்டு  போறா… பெயர் காயத்ரி நல்லா தான் இருக்கு.
தன் இடத்துக்கு  வந்து அமர்ந்த பவித்ரன், ஆபிஸ் ப்யூனை தேவையில்லாது  கூப்பிடுவான்.
பின் எதையோ கேட்க வந்து வேறு ஒரு வேலை கொடுத்து செய் என்பான். மூன்று முறை இதே போல் நடக்க. அந்த ப்யூன்…
“சார் என் கிட்ட நீங்க ஏதாவது கேட்கனுமா…?இல்ல வேறு எந்த வேலையாவது ஆகனுமா…?” என்று  கேட்டவன்..
பின் “வேலைன்னா இந்த பைலை எடுத்து கொடு. டீ கொண்டு வான்னு அப்படி  பட்ட வேலை இல்ல சார். ஏன்னா நீங்க இது வரை என்னை அது போல் வேலை எல்லாம் ஏய்தவர் இல்ல. சொல்லுங்க சார்.” என்று அவர் வலியுறுத்தி கேட்ட பின்னும்…
பவித்ரன் தயங்கி தயங்கி தான்… “காலையில் பார்க்கிங் ஏரியாவில் ஒரு பென்ணிடன் பைலை கொடுத்திங்கலே…அந்த பெண் யார்…? இங்கு என்ன வேலையா வந்தா…?” என்று கேட்டான்.
காயத்ரி வந்து போனது காலையில். பவித்ரன் தயங்கி  தயங்கி கேட்தோ மாலை. அந்த கம்பெனியின் ப்யூனாய் அனைவரின் ஏவலையும் செய்து முடிப்பவன்.
பவித்ரன்  பெண் என்றதும்.  ‘இந்த சார் யாரை கேட்குறாரு.’ என்று யோசிக்கும் போது பவித்ரன் சொன்ன… “நீங்க கூட காய்த்ரின்னு அவங்கல கூப்பிட்டிங்க.” என்றூ சொன்னதும்..
சட்டென்று… “அட நம்ம வக்கீல் அய்யா பொண்ணு.” என்று சொன்னதும்  பவித்ரனுக்கு பொங்கும் பாலில் தண்ணீர் தெளித்தது போல் ஆனது. 
பவித்ரன் இந்த கம்பெனிக்கு வந்த ஒரு சில மாதத்திலேயே இந்த கம்பெனியின் லாயராய் ராஜசேகரை  பார்த்து விட்டான். பார்த்ததுமே யார் என்று அவனுக்கு தெரிந்து விட்டது.
அவருக்கும் தன்னை தெரியும் என்பதை அவ்வளவு உயரத்தில் இருக்கும் அவர்,   சாதாரண ஒரு எம்பிலாய் ஆனா தன்னிடம் வலிய வந்து பேச முயன்றதிலேயே தெரிந்து விட்டது. 
அவர் இங்கு வந்தாலே கூடிய மட்டும் அவன் அவரை விட்டு விலகியே இருப்பான். ஒரு நாள் சந்திராசேகரோடு, அதாவது வேணியின் அப்பாவும்,  தன் தாய் மாமனுமான சந்திரசேகரோடு கம்பெனிக்கு வந்ததுமே அவனுக்கு விசயம் விளங்கி விட்டது. ராஜசேகர் தன்னை பற்றி அவர் நண்பரிடம் சொல்லி  விட்டார் என்று.
சந்திரசேகர் தன்னை பார்த்த கண்ணில் தெரிந்த மின்னலை பார்த்து ஒரு நிமிடம் பவித்ரனே… ‘இந்த மனிதனா தன் அத்தைக்கு துரோகம் இழைத்தது.’ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது  அவர் தன் மீது செலுத்திய அன்பு பார்வை.
தன்னிடம் பேச வந்த சந்திரசேகரை… “என் அத்தைக்கு துரோகம் செய்த யாரையும் பார்க்கவும் பேசவும் பிடிக்கவில்லை. என்னிடம் இனி பேச முயற்ச்சிக்காதிங்க. அப்படி முயற்ச்சித்தா நான்  உங்க வயதையும் பார்க்க மாட்டேன். உங்க பதவியும் பார்க்க மாட்டேன்.
இது வரை பெரியவங்கல மரியாதை இல்லாது பேசினதும் இல்லை. நடத்தியதும் இல்லை. என் வீட்டு வளர்ப்பை கெடுக்கும் நிலைக்கு என்னை தள்ள மாட்டிங்கன்னு நினைக்கிறேன்.” என்று பவித்ரன்  எந்த வித பூச்சும் இல்லாது சந்திரசேகரின் முகத்துக்கு நேராக பேசி விட்டான்.
அடுத்து அவர் போகும் போது  பேசிய வார்த்தை… “கிருஷ்ணாவை  பார்த்துக்க. நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை. நீயே பார்த்துப்ப.” என்று சொன்னதோடு போய் விட்டார்.
அப்போது கூட பவித்ரனுக்கு… “மகளை சொன்னவருக்கு மனைவியின் நினைவு கூட வரவில்லையோ…” என்று தான் நினைக்க தோன்றியது.
அந்த சம்பவதுக்கு பின் பவித்ரன் சந்திரசேகர், ராஜசேகர் இருவரையும் மறந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் வீட்டில் இவர்களை பார்த்ததை சொல்லவில்லை.
இப்போது தன் மனதை பாதித்த பெண் ராஜசேகரின் மகள் என்றதும், ஏதோ ரிதம் தப்பியது போல் இருந்தது. பின் அவனுக்கு அவனே சமாதானமும் படுத்திக் கொண்டான்.
அவள் ராஜசேகரின் மகளாய் இல்லாது வேறு யாரின்  மகளாய் இருந்தால் மட்டும் அவளை திருமணம் செய்ய முடியுமா…?என்று அவன் மனது நினைத்த நொடி தன் மனது போகும் பாதையை நினைத்து அவனுகே அதிர்ச்சி உண்டாயிற்று.
என்ன இது…? நான் என்ன யோசித்து கொண்டு இருக்கேன். எனக்காக வேணி காத்துக் கொண்டு இருக்கா…தனக்காக வேணி இருக்கா… அவனுக்கு அவனே இதை பல முறை  சொல்லிக் கொண்டான்.
இப்போது அதற்க்கு எந்த வித பிரயோசனமும் இல்லாது  போயிற்று. வேணியின் மனது வேறு ஒருவன் இடம் பிடித்து விட்டான் என்று தெரிந்ததும், இனி தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது தான் காயத்ரி நினைவும் வந்தது.தன் விருப்பம் அவனுக்கு தெரியும். கொஞ்ச நாளாய் அவள் தன் பின் சுற்றுவதை சலிப்பு போல் அவன் காட்டிக் கொண்டாலும், அவன் உள்மனம் அதை ரசிக்கவே செய்தது.
இந்த தன் பின் சுற்றல் என்பது நிலையானதா…? இவளை நம்பி இதில் எந்த வகையில் இறங்குவது என்று இந்த ஒரு வாரமாய் நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் பவித்ரன் காயத்ரி சந்திப்பு இன்று நடந்து முடிந்தது.
காயத்ரி தன்னை பார்த்தது முதல்  அனைத்தும் சொல்ல கேட்டவனின் மனம் மகிழ தான் செய்தது. தன் மனதுக்கு பிடித்தவளை கரம் பிடிப்பதோடு,வேணியின் மீது பழி விழாது செய்ய என்ன  செய்ய வேண்டுமோ அதை இதோ செய்து முடித்து விட்டான்.
என்ன இடையில் அந்த கீர்த்தி வந்து ….”என்னை பிடிக்கலையா…?” என்று கேட்டது தான் அவன் விரும்பதாக நிகழ்வாய் நடந்து முடிந்து விட்டது.

Advertisement