Advertisement

அத்தியாயம்….39 
தன் வீட்டுக்கு வந்தும் உதயேந்திரனுக்கு ராஜசேகர் சொன்னதை  ஜீரணிக்க முடியவில்லை. அனைத்தும் திட்டம் போட்டு நடந்து முடிந்தவை.முதலில் அக்கா ஏதோ ஒரு சமயத்தில் சந்திரசேகரிடம்  தவறி இருக்கலாம். இல்லை சந்திரசேகர் தன் அக்காவிடம் தனக்கு திருமணம் முடிந்து விட்டதை தெரிவிக்காது பழகி இருக்கலாம்.  பின் அவரை மறக்க முடியாது திருமணம் செய்து இருக்கலாம். இப்படி ஏகாப்பட்ட இருக்கலாம் என்று தான் அவன் நினைத்தான்.
தவறு நடந்து இருந்தால் கூட அவரையே  தான் திருமணம் செய்து ஆக வேண்டுமா…? இல்லை மனதை பறிக்கொடுத்து இருந்தாலும் தன்னை ஏமாற்றியவனையே மணந்து தான் ஆகவேண்டுமா….? இப்படி தான் அவன் சிந்தனையில் ஓடியது.
ஆனால் இப்படி தான் நினைத்து இருக்க, கதையோ வேறு ரூபத்தில் அவன்  முன் இருக்க…அவனால் தாங்க முடியவில்லை.
அழகு புனிதா அக்காவின்(அது என்னவோ ராஜசேகர்  புனிதாவை பற்றி சொல்ல சொல்ல அவன் மனதில் ராஜசேகரிடம் புனிதா என்றாலும், அவன் மனதில் புனிதா அக்கா என்றே நினைத்துக் கொண்டான்.) வாழ்வு கெட காரணம்.
அதே அழகை வைத்து தான் தன் அக்கா சந்திரசேகரை மணந்து இருப்பது. தானும் அழகை ரசிப்பவன் தான். ஆனால் அந்த அழகு தன் வாழ்க்கையை நிர்ணயித்திட முடியுமா…?
இதே திருமணத்துக்கு பின் தன் அக்காவுக்கோ…இல்லை மாமாவுக்கோ ஏதோ ஒரு விபத்தில்  இருவரில் ஒருவர் தன் அழகை பறி கொடுத்து இருந்தால், அவர்கள் பிரிந்து இருப்பார்களா… ? என்று நினைத்த உதயேந்திரனின் மனதில் இதுவும் ஓடியது. இவர்களை பற்றி சொல்வதற்க்கு இல்லை என்று.
அன்று முழுவதும் இதே சிந்தனையிலேயே அவனின் நாள் கழிய அடுத்த நாள் காலையிலேயே ஜெய்சக்தியிடம் கைய் பேசியில் அழைப்பு  வந்தது.
பேசியையே பார்த்திருந்தவன்  இந்த அழைப்பை ஏற்ப்பதா …? வேண்டாமா….? என்று அவன் யோசிக்கும்   வேளயில் பேசி தானே அமைதியாகி விட்டது.
உதயேந்திரன் தன் அக்காவை தவிர்க்க முடியாது. அவளை எதிர் கொண்டு தான் ஆகவேண்டும். ஆனால் உடனே என்றால் தன் மனதில் இருக்கும் கோபம் வார்த்தையாய் அவள் மீது வீச தோன்றும், வேண்டாம் இன்று வேண்டாம் என்று முடிவு செய்தவனாய் பேசியை டேபுள் மீது வைக்கும் வேளயில் திரும்பவும்  ஜெய்சக்தியிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஒரு நிமிடம் யோசித்த உதயேந்திரனுக்கு என்ன தோன்றியதோ, பேசியின்   அழைப்பை ஏற்று காதில் வைத்த அடுத்த நொடி கைய் பேசி அழைப்பின் அந்த பக்கம் இருந்த ஜெய்சக்தி…
“என்ன நினச்சிட்டு இருக்கடா நீ. நான் உனக்கு அக்காவா…? இல்ல அவளா…? அவ கிட்ட இருந்து அவ புருஷனை பிரிச்சிட்டேன்னு என் கிட்ட இருந்து என் இரண்டு பிள்ளைகளோடு உன்னையும் சேர்த்து பிரிச்சிட்டா…அதுவும் தன் மகளை காட்டி…”
அடுத்து ஜெய்சக்தி என்ன பேசியிருப்பாளோ… “இதோட நீ பேச்சை நிறுத்துனா நல்லா இருக்கும். இல்லேன்னா ஏதோ ஒட்டிட்டு இருக்க நம்ம உறவு நிரந்தரமா பிரிச்சுடும். நான் பிரிச்சிடுவேன். இப்போ சொல் அவங்கல பத்தி…”
இது வரை என்ன தான் தன் சகோதரி தவறு செய்து இருந்தாலும், உதயேந்திரன் நீ என்று ஒருமையில் எல்லாம் அழைத்தது இல்லை.நேற்று ராஜசேகரிடம் பேசியதில் இருந்து மனதில் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக் கொண்டு இருந்த மரியாதை கூட இருந்த இடம் தெரியாது போய் விட்டன.
தம்பியிடம் இருந்த இத்தகைய பேச்சை எதிர் பார்க்காத ஜெய்சக்தி  பேசியை கையில் வைத்துக் கொண்டு சிலையாக நின்று விட்டாள்.
ஜெய்சக்தி பக்கத்தில் இருந்த பரமேஸ்வரர், ஜெய்சக்தியின் அதிர்ந்த முகத்தை  யோசனையுடன் பார்த்துக் கொண்டே கைய் பேசியை தன் மகளிடம் இருந்து வாங்கியர்…
“நம்ம குழுமத்தின் வருடாந்திர தணிக்கை இன்று தரனும். அது நியாபகம் இருக்கா உதய்…?”  என்று பரமேஸ்வரர் எப்போதும் போல் தன் அதிகார குரலில் கேட்டார்.
“ம். இருக்கு.” தன் வார்த்தையை அத்தோடு முடித்துக் கொண்டு உதயேந்திரன் பேசியை வைக்க பார்க்க…
“என்னடா பேச்சு எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு.” யோசனையுடன் தன் மகள் முகத்தில் பதித்த தன் பார்வையை திருப்பாது தன்  மகனிடம் பேசினார் பரமேஸ்வரர். 
“மனுசங்க  வெச்சு தான் நம்ம பேச்சும் இருக்கும்.” என்ற உதயேந்திரனின் பேச்சில் பரமேஸ்வரர் அப்போது தான் ஒன்றை கவனித்தார்.
அது தன்னை அப்பா என்று அழைக்காது தன் பேச்சை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல் பேசியதை.
“என்னடா திசை மாறுவது போல் இருக்கு. என்ன சொன்னான் அந்த வக்கீல் பையன்…?” என்ற தன் தந்தையின் கேள்வியில் புருவமத்தியில் ஒரு  முடிச்சு விழ…
“என்ன என்னை வேவு பாக்குறிங்கலா…?” என்று கேட்டவன், பின் அவனே…
 “அதுக்கு எல்லாம் அவசியம் இல்லை. எது என்றாலும் என்னிடம் கேளுங்க. நானே எல்லாம் சொல்றேன்.” என்று சொன்ன உதயேந்திரன் பின் “இப்போ ஒரு விசயம் சொல்லட்டா…?” உதயேந்திரன்  பேச்சை அந்த பக்கம் கேட்டுக் கொண்டு இருந்த பரமேஸ்வரரின் ஹார்ட் பிட்டை அதிர வைக்கும் வகையாக…
“ இன்றைய மீட்டிங்கிள் எனக்கு கொடுத்த  ஷேரை என் அண்ணனிடமே திரும்பவும் கொடுத்துடுறேன்.” என்று சொல்லி விட்டு கைய் பேசியை  அணைத்தான்.
பரமேஸ்வரர் அதிர்ந்த முகத்துடன் ஜெய்சக்தியை  பார்த்தார். இருவரில் யார் அதிகம் அதிர்ந்தது என்று தெரியாது,  இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
 சொன்னதை செயலாக்கும் பொருட்டு  ராஜசேகரை கைய் பேசியில் அழைத்த உத்யேந்திரன்…இன்று மீட்டிங்கில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்கினான்.
அதை கேட்ட ராஜசேகர்… “உதய் நீ உண்மையா தான் சொல்றியா…?” என்று கேட்டவர் மனதில் ஏதாவது விளையாடுகிறானா என்று நினைத்தார்.
“ இது விளையாடும் விசயம் இல்லை மிஸ்டர் ராஜசேகர். நான் சொன்ன டாக்குமென்ஸை கொண்டு வாங்க.”  என்று ராஜசேகர் மனதில் நினைத்தை உதயேந்திரன் சொன்னது மட்டும் அல்லாது அந்த குழுமத்தின் தலைவராய் உதயேந்திரன் பேச்சு இருக்க…
“நீங்க சொல்ற படியே செஞ்சுடுறேன் மிஸ்டர் உதயேந்திரன்.” ராஜசேகரின் பேச்சும் அந்த குழுமத்தின்  லீகல் லாயராய் மட்டுமே இருந்தது. 
பத்து மணி அளவில் அந்த அறையில் அந்த  குழுமத்தின் பங்குதாரர்கள் அனைவரும் இருந்தனர். அதில் நம் வேணியும்,  அவளுக்கு காரியதரசன் என்ற வகையில் பவித்ரனும் அங்கு இருந்தான்.
அந்த அறைக்கு வரும் முன் பரமேஸ்வரர் உதயேந்திரனிடம்… “உதய் முட்டாள் தனம் பண்ணாதே… இந்த குழுமத்தின் தலமை   பொறுப்பு காலம் காலமாய் நம் குடும்பத்து உறுப்பினர் மட்டுமே இருந்து வந்து இருக்கின்றனர். இப்போ நீ இப்படி செய்வதால், அடுத்து  அந்த பொண்ணு அந்த பதவிக்கு வந்துடுவா… தலமை பொறுப்பு போவது மட்டும் இல்லாம, நம்ம குடும்ப கவுரவமும் போயிடும் உதய். இது செய்யாதே…” 
எப்போதும் அதிகாராத்தோடு மட்டுமே பேசிக் கொண்டு இருந்த   பரமேஸ்வரர், அன்று தன் மகனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார்.
கெஞ்சிய தன் தந்தைக்கு பதில் அளிக்காது அவரையே ஒரு தீர்க்கத்துடன் கை கட்டி பார்த்துக் கொண்டு இருந்தான் உதயேந்திரன்.
பரமேஸ்வரர் எவ்வளவு பேசியும், தவறு தவறு கெஞ்சியும் உதயேந்திரன் வாய் திறக்கவில்லை. திரும்பவும் தன் மகனிடம் ஏதோ பேச பரமேஸ்வரர் வாய் திறக்கும் வேளயில், அந்த இடத்துக்கு வந்த வேணியையும், பவித்ரனையும் பார்த்து வாய் மூடிக் கொண்டார். அவர்கள் முன் நிலையில் தன் மதிப்பு தாழ்வதை  பரமேஸ்வரர் விரும்பவில்லை.
வேணிக்கு   பரமேஸ்வரரையும், உதயேந்திரனையும்,  கடக்கும் போது தன்னால் மனது பட பட என்று அடித்துக் கொண்டது. அதுவும் உதயேந்திரனின் அருகில் அவள் செல்லும்  போது அவனின் மூச்சு காற்று தன் மேல் தணலாய் வந்து வீசுவது போல் அவள் உணர்ந்தாள். 
உதயேந்திரன்  வேணியை பார்த்ததும் தன்னால் அவன் மூச்சு காற்றில் உஷ்ணம் ஏறியதோ…இல்லை அவர்கள் கடந்து போன வழி  மிகவும் குறுக்கலாய் இருந்ததால், மிக நெருக்கத்தில் அவன் மூச்சு காற்று பட்டதால், உஷ்ணம் ஏற்பட்டதோ.. மொத்தத்தில்  உதயேந்திரனை கடக்கும் போது வேணி அவளாய் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
வேணியின் நிலை இப்படி என்றால், பவித்ரனின் நிலை வேறு மாதிரியாக இருந்தது. பவித்ரன் உதயேந்திரனை கடக்கும் போது, இவன் என் தோழிக்கு பிடித்தமானவன் என்று ஒரு மனம் கூறினால், மறுமனமோ என் தோழிக்கு எந்த வகையில் இவன் தகுதியானவன்.
 தன் தோழி இவனை நினைத்த பாவத்திற்க்கு, அவளும் தன் குடும்பமும் என்ன என்ன இன்னல்களை பார்க்க வேண்டி நேரிடுமோ…அதுவும் தன் அத்தையின் நிலை நினைத்து தான் அவன் மனது அடித்துக் கொண்டது. 
இது எல்லாம்  பவித்ரன் மனதில் ஓட உதயேந்திரனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு கடந்தான் என்றால், பரமேஸ்வரரை பார்க்கும் போது பவித்ரனின் முகம் தன்னால் ஒரு இளக்காரத்தை காட்டியது.
உதயேந்திரன் வேணியின் காதல் தன் குடும்பத்துக்கு எப்படி பட்ட ஒரு தர்ம சங்கடங்களை கொடுக்குமோ… அதே அளவுக்கு ஏன் அதுக்கும்  மீறி தானே பரமேஸ்வரர் குடும்பம் சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். அதை நினைத்து பவித்ரனுக்கு ஏக திருப்தி தான்.
இப்படி இரு குடும்பமும்  இரு மாறுப்பட்ட எண்ண ஓட்டத்தில் அங்கு வந்து அமர்ந்து இருந்தனர். அனைவரும் ஏதேதோ குழுமத்தின் வளர்ச்சி, அந்த ஆண்டின் வருவாய்,  போட்டி குழுமத்தின் தற்போதைய நிலை, அவர்களை வெல்ல தாங்கள் செய்ய வேண்டியது என்ன…? என்று அந்த குழுமத்தில் தலமை பொறுப்பில் இருக்கும் உதயேந்திரன் மற்றவர்களின் பேசினாலும்,..
 அவ்வப்போது அவன் பார்வை தன்னவளின் மதி முகத்தை தழுவிக் கொண்டும் இருந்தது.  இப்படி பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கும் வேளயில்…
உதயேந்திரன் … “இந்த மீட்டிங்கில் வேறு ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டி உள்ளது.” என்று சொல்லி தன் எதிரில் அமர்ந்து இருந்த ராஜசேகர் பக்கம் தன் கையை நீட்டினான்.
அப்போதும்  உதயேந்திரன் பக்கத்தில் அமர்ந்து இருந்த பரமேஸ்வரர்… “உதய் நம்ம குடும்ப சண்டைய வீட்டில் வெச்சிக்கலாம். இதில் எல்லாம் விளையாடாதே…இப்போ எங்கள் மீது உள்ள கோபத்தில்  அவசரத்தில் முடிவு எடுக்காதே…” என்று உதயேந்திரனின் காதை கடித்தார்.
கேட்க வேண்டிய அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்த உதயேந்திரன், தன் ஒற்றை விரலை  கொண்டு காதை குடைவதை போல் செய்தவன் ராஜசேகர் கொடுத்தவற்றில் தன் கைய்யெப்பம் இட்டவன்…
அங்கு அமர்ந்து இருந்த தன் அண்ணன் கஜெந்திரனிடம்… “அண்ணா நீங்க எனக்கு கொடுத்த பங்கை நான் திரும்பவும் உங்க கிட்ட கொடுத்துடுறேன்.” தான் கையெப்பம்  இட்ட பைலை கஜெந்திரன் பக்கம் தள்ளினான்.
கஜெந்திரனோ அதை தான் எடுத்துக் கொள்வதா….? வேண்டாமா…? என்பது போல் தத்தளித்தவன், பின் எப்போதும் செய்வது போல் தன் தந்தை, மனைவியின் பக்கம் பார்வையை திருப்பினான்.  
எப்போதும் தன் தந்தை மனைவி இருவரும் ஒரே பதிலைய்  தான் தன் பார்வையால் கடுத்துவர். ஆனால் இன்று சோதனையாக மனைவி அந்த பைலை எடு என்று கண்  காட்டினாள் என்றால், தன் தந்தை அதற்க்கு எதிர் பதமாய் வேண்டாம் என்பது போல் சைகை செய்தார்.
தன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த மனைவி அவன் விலா எலும்பில் யாருக்கும் தெரியாது ஒரு இடி இடித்து விட்டு… “எடு.” என்பது போல் தன் முண்ட கண்ணை மேலும் விரித்து  சைகை செய்ததில் பயந்து போனவனாய் அந்த பைலை கையில் எடுத்து அந்த குழுமத்தின் தலமை பொறுப்பை கிருஷ்வேணிக்கு கொடுக்கும் படி செய்து விட்டார்.

Advertisement