Advertisement

அத்தியாயம்……31 (1)
வேணி தன்னை நோக்கி வந்தவனை முதலில் அச்சம் கொண்டு பார்த்தாலும், பின் என்ன நினைத்தாளோ எப்போதும் பார்க்கும் நேர்க் கொண்டு உதயேந்திரனை பார்த்தாள் என்று  சொல்வதை விட முறைத்தாள் என்று சொல்லலாம்.
முதலில் தன்னை பார்த்து  தன்னவளின் முகத்தில் தோன்றிய பதட்டத்தில் அருகில் சென்று….   
‘அம்மு குட்டி பயப்படாதே,  நான் சும்மா தான் உன் கிட்ட வந்தேன்.இப்போ நான் முத்தம் எல்லாம் கொடுக்க மாட்டேன்.பின் மொத்தமா கொடுத்துக்குறேன்.’ என்று அவளிடம் காதல் மொழி பேச நினைத்துக் கொண்டு அவன் அருகில் சென்றவனுக்கு , 
 தான் நெருங்க, நெருங்க  அவள் தான் பார்த்த அந்த அச்சப்பார்வையை  மாற்றி, தன்னை நேர்க் கொண்டு பார்த்தவளை உதயேந்திரன் யோசனையுடன் நெருங்கினான்.  மிக நெருங்கி நின்றான்.
அதுவும் தன்னை  பார்த்து வேணி முறைப்பது உதயேந்திரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காதலியின்  காதல் பார்வை ஒரு கிக் என்றால், அவளின் அச்சப்பார்வை கிக்கோ கிக்கு.
அதனால் தான் அவளின் அச்சப்பார்வைக்கு ‘ பயப்படாதே’என்று காதல் பேச்சு பேச நினைத்தான்.
ஆனால் இப்போது இந்த பார்வைக்கு பேச மொழி தேவையில்லை என்பது போல் அவள் அருகில் மிக மிக நெருங்கி நின்றவன், மிக கவனத்தோடு அவளை தொடாது நின்றான்.
ஆனால் அவன் மூச்சு காற்று  அவள் முகத்தில் படும் படி குனிந்து, வேணியின் மூச்சு காற்றை அவன் முகம் உணரும் மிக நெருக்கம் அது.
இப்போது வேணியின் முகம் தெளிவிலிருந்து,  மீண்டும் பதட்டத்துக்கு செல்லும் முன் நிலையில் கண் இரண்டும் பட பட என்று  அடித்துக் கொண்டாலும், தன்னை தைரியமாக காட்டிக் கொள்ள முயன்றுக் கொண்டு இருந்தாள்.
அதையும் உதயேந்திரன் கவனித்தாலும், முதலில் தோன்றிய அச்சம் அவள் முகத்தில் பார்த்திட அவன் மனம் முயன்றது.
அதனால் முதல் படியாய் குனிந்து இருந்தவன் நிமிர்ந்து நின்றானே ஒழிய கொஞ்சம் கூட விலக வில்லை. அதற்க்கு என்று தன் நெருக்கத்தை அதிப்படுத்தவும் இல்லை.
அவன் உடல் நிமிர்ந்ததில், அவன் நெஞ்சு பகுதி அவள் முகத்திற்க்கு மிக அருகில் வந்ததால்,  அவனின் இதயம் அடிக்கும் ஓசை அவள் காதுக்கு மிக தெளிவாய் கேட்டது. 
அந்த மின்தூக்கி குளில் சாதனவசதியோடு இருப்பது தான். அந்த மின்தூக்கியும் முதலில் குளர்ந்து தான் இருந்தது. ஆனால் இப்போது உதயேந்திரன் அந்த மின்தூக்கியின்  செயல் இயகத்தை நிறுத்தியதால் அந்த இடம் வெப்பமாகி வேணியின் முகத்தில் வியர்வையின் துளிகள் துளர்த்ததா…?
இல்லை உதயேந்திரனின் உடலில் வெப்பம் வேணிக்கு கடத்தப்பட்டு, அதன் வெப்பம் தாள முடியாது  வேணியின் முகத்தில் வியர்வை துளிகள் துளிர்த்ததா…? 
 வேணியின் முகத்தில் எப்படு வியர்வை துளிர்த்தது என்று நாம்  வியர்வையின் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கும் சமயத்தில்,  நம் நாயகனோ நாயகியின் முகவடிவ ஆராய்ச்சியில் மூழ்கி இருந்தான்.
அவளின் புருவத்தின் அருகில் தன் வலது ஆட்காட்டி விரலை கொண்டு சென்றவன், தொடாது புருவத்திற்க்கு மை தீட்டுவது போல் வில் போன்ற அந்த புருவ மயிர்கள் வளைந்து செல்வது போல் தன் விரலை வளைத்துக் கொண்டு சென்றே…
“கிருஷ்ணா த்ரெட்டிங் எல்லாம் செய்துக்க மாட்டியா…?” என்று கேட்டுக் கொண்டே மூக்கு பகுதிக்கு தன் விரலை கீழ் நோக்கி இழுத்து நிறுத்தியவன் பின்…
“பார்த்ததில் இருந்து ஒருந்து ஒரே இந்த சிகப்பு கல் மூக்குத்தி மட்டும் போடுற.” என்று  சொல்லி விட்டு, பின் சிரித்துக் கொண்டே…
“ஆன இந்த கலர் மூக்குத்தி  உனக்கு நல்லாவே இருக்கு கிருஷ்ணா.” என்று சொல்லி விட்டு அவன் விரலை உதட்டு பகுதிக்கு கொண்டு வந்தவன்…
“கிருஷ்ணா…” என்று ஆராம்பித்த உதயேந்திரனை உதட்டை  பார்த்து என்ன சொல்வான் என்று நாம் அறியும் முன்னவே வேணி…
“ஸ்டாபிட். ஸ்டாபிட்.” என்று கத்திக் கொண்டு தன் இரு கை கொண்டு காதை இறுகிக் கொண்டவளின் கண்ணும் தன்னால் மூடிக் கொண்டது.
மூடிக்  கொண்டவளின் விழிகள் அங்கும் இங்கும் சுழலாடுவது கண் இறுக மூடியிருந்தாலுமே, அவன் கண்ணுக்கு தெள்ள தெளிவாக தெரிந்தது.
அதுவும் வேணி “ஸ்டாபிட்.” என்று  சொல்லிக் கொண்ட அவள் தொங்கிக் கொண்டு இருந்த அவள் கையை அவள் மேலே தூக்கும் போது  எதிரில் மிக அருகில் நின்றுக் கொண்டு இருந்த உதயேந்திரனின் அங்கத்தில் மிக அந்தரங்கமான அங்கத்தில் பட்டு தான் வேணியின்  கை அவளின் காது பகுதிக்கு வந்தது.
அவள் கை பட்ட அங்கத்தினை வேணி உணரவில்லை என்றாலும், உதயேந்திரன் உணர்ந்தும் அப்போது அதை கருத்தில் கொள்ளாது வேணிக்கு  தான் பேசியது ஏதோ அவள் மனதை பாதித்து இருக்கிறது.
அதனால் தான் நான் இவ்வளவு நெருங்கி இருக்கும் சமயத்தில் தான் இப்படி செய்தால், தன் உடலை தொட வேண்டி இருக்கும் என்று கூட கருத்தில் கொள்ளாது இப்படி செய்து இருக்கிறாள்.
இதை உணர்ந்த உதயேந்திரனுக்கு தான் சொன்ன என்ன வார்த்தை அவளை பாதித்தது என்று தெரியாது  அவள் காது பகுதியில் இருந்து அவள் கையை விலக்கி விட்ட வாறே….
“கிருஷ்ணா…” என்று உதயேந்திரன் அழைத்தது தான் தாமதம், தன்  கையை உதயேந்திரன் நெஞ்சி மீது வைத்து தன்னை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி  நிறுத்து விட்டு….
“என்னை அந்த பெயர் சொல்லி கூப்பிடாதே…”   என்று சொல்லும் போது அவள் குரலில் கோபம் தெரிந்திருந்தால் கூட…
“சரி நான் கூப்பிடல.” என்று சொல்லி உதயேந்திரன் வேணியிடம் சரண் அடைந்து இருப்பான்.
ஆனால் அந்த  பெயரை வைத்து என்னை அழைக்காதே என்று சொல்லும் வேணியின் குரலில் தெரிந்த மிதமிஞ்சிய விரக்தி. அவள் முகத்தில் தோன்றிய மித மிஞ்சிய துக்கம் பார்த்தவனுக்கு சரி என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை.
அப்படி என்ன அப்பெயர் அழைப்பில் இருக்கிறது. அனைவரும் அவள் பெயரின் பின் பாதி வைத்து அழைத்தால், தான் அவளின் பெயரின் முன்பாதி வைத்து அழைக்கிறேன். இது அவள் பெயர் தானே…
அவள் பெயர் அழைப்பில் அப்படி என்ன துக்கம் வந்து விடும். அது என்ன ரகசியம். அதை அறிந்துக் கொள்ள…
“ஏன் இது உன் பெயர் தானே…ஆண் பெயரா இருக்குன்னு உனக்கு பிடிக்கலையா…?” காரணம் இது அல்ல. வேறு ஏதோ காரணம் இருக்கிறது. அதை அறிந்துக் கொள்ள உதயேந்திரன் கேட்டாலும், திரும்பவும் கிருஷ்ணா என்று  அழைத்து அவளின் துக்கத்தை அதிகப்படுத்த அவன் விரும்பவில்லை.
சாதரண சமயமாய் இருந்து இருந்தால், உதயேந்திரன்  கேட்ட கேள்விக்கு வேணியிடம் பதில் வந்து இருக்குமா…? என்று கேட்டால் இல்லை என்று தான் கதை படிக்கும் அனைவரும் சொல்வர்.
ஆனால் இப்போது அவளின் இந்த பலவீனமான சமயத்தில் அவன்  கேட்ட “ஆண் பெயர் என்று பிடிக்கவில்லையா…?” என்ற கேள்விக்கு தன்னால் வேணியின் உதடு…
“ ஏற்கனவே  ஒரு ஆண் இந்த பெயரை வைத்து என்னை  கூப்பிட்டதால் தான் எனக்கு இந்த பெயர் பிடிக்கவில்லை.” என்று சொன்னதும் யோசனையுடன்…..
“யார்…?” என்ற கேள்விக்கு,
“என் அ..ப்…பா” என்று சொல்லும்  போதே அவள் குரல் அழுகையில் விக்கி பின் நின்றது.
அதை கேட்ட உதயேந்திரனுக்கு ஏதோ போல் ஆனாது. இவளின் இந்த துக்கத்திற்க்கு தன் குடும்பம் தானே காரணம். குறிப்பாய் தன் சகோதரி. ஒரு குழந்தையிடம் இருந்து தன் தந்தையை பிரித்து விட்டாளே… என்று நினைத்த உதயேந்திரன், அன்பு கொடுக்க வேண்டிய சமயத்தில் அன்பு கொடுக்காது, இறந்த பின் ஆஸ்த்தி கொடுத்து என்ன பயன்…?
அவன் மனம் அவனுக்குள் இப்படி யோசித்தாலும் வாய் தன்னால் வேணியிடம்….
“அப்போ நீ ரொம்ப சின்ன பெண் தானே… மா…” மாமா என்று சொல்ல வந்த உதய்… “உன் அப்பா அழைத்தது உனக்கு நியாபகம் இருக்கா…?”
உன் அப்பா எனக்கு மாமா என்ற அந்த உறவு முறை என்று சொல்லி, ரணப்பட்டுக் கொண்டு இருக்கும் அவள் மனதுக்கு மேலும் ரணம் கூட்ட அவன் விரும்பவில்லை.
வேணி எப்போதும் தன் மனதில் இருப்பதை பவித்ரனிடம் ஒளிவு மறைவு இல்லாது சொல்லி விடுவாள். ஒன்றை தவிர. 
அது தன் தந்தையின் விசயம். பத்து வயதில் தன் தந்யை பற்றி பவித்ரன் சொன்ன….
“அவர் உனக்கு மட்டும் அப்பா இல்ல. வேறு குழந்தைகளுக்கும் அவர் தான் அப்பா.” என்று சொன்னதும், அதை கேட்டு மனதில் துடி துடித்து தான் போனாள் வேணி.
பின் அவள் தன் தந்தை பற்றி அவள் வீட்டில் பேசியது இல்லை. ஆனால் தந்தையின் மங்கலான நினைவுகள் தன் மன அடுக்கில்  அவ்வப்போது மேல எழும்பி வரும் தான்.
தந்தையின் நினைவு எழும் போது எல்லாம் அதை தட்டி அடக்கி விடுவாள். ஒவ்வொரு முறையும் அந்த நினைவை அடக்கும் போதும் அவளின் மனம் ரணப்பட்டு தான் போகும்.
தன் தந்தை அவனுக்கு தாய் மான்னாய் ஆகி போனதால் அந்த ரணத்தை அவள் பவித்ரனிடம் கூட பகிர்ந்தது கிடையாது. பவித்ரன் ஒரு சில சமயம் தன் அம்மாவிடம் “உன் அண்ணால் தான்  …” என்று சொல்லி ஏதோ குத்தி பேசுவதை வேணி கேட்டு இருக்கிறாள். அதனால் இதை பற்றி வேணி பவித்ரனிடன் வெளிப்படையாய் பேச முடியாது போய் விட்டது.
ஒவ்வொரு பெண்  குழந்தைக்கும் தன் தந்தை தான் நாயகன். ஆனால் தனக்கு…?  தன்னுடன் படிக்கும் தோழிகள், தன் தந்தையை பற்றி பேசும் போது எல்லாம்  தன் தந்தையை பற்றி இது கனவா…?நினைவா…? என்று குழம்பி போன மங்கலான நினைவுகள் அவளுக்கும் வரும்.
அதுவும் தன்னை கிருஷ்ணா என்று அழைத்ததாய் நியாபகம்.  அவர் தன்னை அப்படி தான் அழைத்தார் என்று அப்போது திட்ட வட்டமாய் எண்ண முடியவில்லை.
ஆனால் இப்போது உதயேந்திரன் தன்னை அந்த பெயர் கொண்டு அழைத்ததும், அந்த சந்தேகம் விலகியது.
ஆம் தன்னை தன் தந்தை கிருஷ்ணா என்று தான் அழைத்து இருக்கிறார். அந்த மங்கலான நினைவுகளை உதயேந்திரனின் இந்த அழைப்பால் துணி கொண்டு துடைத்தது போல்  அவள் மனது ஏடுகளில் பளிச்சென்று பழைய நினைவுகள் தெள்ள தெளிவாய் அவளின் நியாபக அடுக்கில் வந்தது.
 

Advertisement