Advertisement

அத்தியாயம்….3 
கம்பத்து பொண்ணு என்ற தலைப்பை மாற்றி சிந்திய முத்தங்களாய் உங்கள் பார்வைக்கு….
வேணி எப்போதும் போல்  துர்க்கைக்கு விளக்கு ஏற்றி விட்டு வெளியில்  வந்து காலில் செருப்பை மாட்டும் போது, தன் அருகில் வந்து நின்ற பவித்ரன்… “ என்ன இன்னைக்கு நான் சொன்னது போல வேண்டி கிட்டியா…?” பூஜை கூடையில் இருந்த வாழ  பழத்தை எடுத்து உறித்து பாதி தன் வாயில் போட்டு கொண்டவன். மீதி பாதியை வேணியின் வாயில் திணித்த வாரே கேட்டான்.
“ நீ..ஏ..ன் ஊ..ருக்கு போகல …?” வாயில் திணித்து இருந்த பழத்தால், பேச்சு தடைப்பட பேசியவளின் வார்த்தை புரியாது… “ அதை முழுங்கிட்டே பேசு.” என்று  பவித்ரன் சொன்னதும், அவன் சொன்னது போல் செய்தவள்.
பின்…“ ஊருக்கு போகலையா…?”  என்று இப்போது தெளிவாக பவித்ரனிடம்  வேணி கேட்டாள்.
சந்திரசேகர் இறந்ததில் இருந்து வேலைக்கு போகாது,  ஆபிசுக்கு விடுமுறை என்று ஒரு மெயில் அனிப்பியவன்,  இன்று வரை கம்பத்தில் வேணி பள்ளிக்கு போய் வரும் வரை வீட்டில் அடைந்து கிடப்பவன்,  அவள் பள்ளியில் இருந்து வந்து விட்டால், அவளோடு தான் சுற்றிக் கொண்டு இருக்கிறான்.
“ நான் ஊருக்கு போவது இருக்கட்டும் நீ என்ன முடிவு செய்து இருக்க….? முதல்ல அத சொல்.” என்று கேட்டவனின் கேள்விக்கு இன்றும் பதில் சொல்லவில்லை.
“ வேணி நான் உன்ன தான் கேட்குறேன்” கடந்த ஒரு வாரமாய் தன் வேலை வெட்டி அனைத்தும் விட்டு விட்டு,  அவளை வெளியில் அழைத்துக் கொண்டு சென்றவன் சொன்னது..
“ என்னோடு சென்னை வா. நான் உனக்கு பக்க பலமா இருக்கேன்.” எவ்வளவோ எடுத்து சொல்லியும்  … “ எனக்கு அந்த சொத்து வேண்டாம்.” என்பவளை இப்போது பவித்ரனுக்கு கன்னம் கன்னமாய் அறையலாம்  போல் இருந்தது.
தன்னை   கோபத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பவனின் கை பற்றிய வேணி… “ நீயும் என்னை கோச்சிக்காத பவி.” வீட்டில் இருப்பவரின் ஒட்டு மொத்தவரின் விருப்பமும்,  வேணி சென்னைக்கு சென்று அந்த பதவியை ஏற்க வேண்டும் என்பதே… ஆம் பதவி தான்.
S.P க்ரூப்பின் சேர்மேனாக அமர வைக்க, சென்னையில் இருந்த அந்த குழுமத்தின் சார்பாக கிருஷ்ணவேணிக்கு  மெயில் வந்து உள்ளது. ஒரு வாரம் முன் ராஜசேகர் தங்கள் வீட்டுக்கு வந்த போது, யாரும் அவரை வரவேற்காது  ஒரு இறுக்கத்துடன் இருப்பதை பார்த்து, வேணியும் நம் குடும்பத்தவர்கள் இப்படி நடந்துக் கொள்ள ஏதாவது காரணம் இருக்கும் என்று அங்கு நடப்பதை கை கட்டி பார்த்துக் கொண்டு  இருந்தாள்.
ராஜசேகரை அப்படி நடத்துவதற்க்கு உண்டான  காரணம் வேணிக்கு தான் தெரியாது. ஆனால் பவித்ரனுக்கு அவர் யார்…? என்ன..? என்று  தெரியும். அதனால் அவரை முறைத்த வாரே வேணியின் பக்கத்தில் நின்றுக் கொண்டான்.
 ராஜசேகர் வேணியை அவர் இரண்டு வருடம் முன் தான்,  தன் பரம்பரை சொத்தை விற்க வரும் போது பார்த்தார். அச்சில் வார்த்தது போல் தன் நண்பனை போலவே  இருக்கும் வேணியை பார்த்த்தும் போய் பேச தான் ஆசை.
ஆனால் பக்கத்தில் தன்னை விரோதியை  பார்ப்பது போல், பார்த்துக் கொண்டு இருந்த புனிதாவை பார்த்து ஒன்றும் பேசாது சென்று விட்டார்.  முன்பே பார்த்த தன்னுடைய நண்பனின் மகளை பார்த்து புன்னகை சிந்தினார். ஆனால் வேணியோ இவரை பார்த்து சிரிக்கலாமா…? வேண்டாமா…? என்ற சந்தேகத்துடன் தன் குடும்பத்தினர் முகம் பார்த்தாள். அங்கு மருந்துக்கும் அவர் வந்தத்தை வரவேற்க்கும் எண்ணம் இல்லை என்று புரிந்துக் கொண்டவள்,  அவரை பார்த்து சிரிக்காது அமைதியாக நிற்க.
பக்கத்தில் இருக்கும் பவித்ரனை பார்த்து… “ அட அட நம்ம சுகுனா மகனா.  குழந்தையில் பார்த்தது. இப்போ நல்லா வளர்ந்து விட்டான்.” எப்படியாவது அங்கு இருப்பவர்களிடம் நல்ல முறையில் பேசி தன் நண்பன் தன்னிடம் கொடுத்த கடமையை நிறை வேற்றி விட வேண்டும் என்று  சுமுகமாக பேச முயற்ச்சி செய்தார்.
ஆனால் அவர் முயற்ச்சிக்கு நல்ல எதிர் வினை இல்லாது எதிர் பதமாய் தான் முடிந்தது. “ நீங்க  பார்த்தப்ப எப்படி இருந்தமோ, அப்படியே இருந்துட முடியுமா…? நாங்களும் வளர்ந்து தானே ஆகனும்.” பவித்ரன் பேச்சில் மறைமுக குத்தல் மறைந்து இருந்தது. 
“ ஆமா…ஆமா…” என்று ராஜசேகர் அசடு வழிய…” என்ன விசயமா இங்கு வந்த சொல்லிட்டு போ.” நாரயணன் நேரிடையாக நீ இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்பது போல் பேசினார்.
ராஜசேகருக்கு தலை குனிவாய் போய் விட்டது. அவர்கள் பார்வையிலும் நாம் இறங்கி போய்  விட்டோம். இங்கும் நமக்கு தலை குனிவு தான் என்று நினைத்தவர்.
இதற்க்கு முன் இந்த  வீட்டில் எப்படி நாம் உரிமையாய்  வலம் வந்தோம். ஆனால் இன்று…இது தனக்கு தேவை தான் என்றும் அவரின் நியாயமான மனசாட்சி எடுத்து கூறியது.
ராசேகரின் வீடும் இதே வீதியில் தான் இருந்தது. சிறுவயது முதலே சந்திரசேகர் ராஜசேகர்  நட்பாய் பழகினர். அதன் பலன் படிப்பும் ஒன்றே…ஆம் சந்திரசேகரும் பி.ஏ. பி.எல் படித்து முடித்ததும், வக்கீல் தொழில் செய்ய ஆர்வம் இல்லாது, S.P க்ரூப்பில்   பரமேஸ்வரரின் பி.ஏவாக வேலையில் அமர்ந்துக் கொண்டார்.
நாரயணன்  ராஜசேகரையும் தன் மகனாய் தான் நினைத்தார். புனிதா எப்போதும் வாய் நிறைய அவரை பார்த்து…” அண்ணா…அண்ணா.” என்று தான் அழைப்பார்.
சந்திரசேகரின் துரோகத்தில் ராஜசேகரின் பங்கும் இருப்பதை கேள்வி பட்டு…” சீ..இந்த பொழப்புக்கு.” அடுத்து பேசாது நாரயணன் முகத்தில் காட்டிய அருவெருப்பில் அன்று  தலை குனிந்து போனவர் தான். இதோ இன்று தான் இவ்வீட்டின் படி மிதித்து உள்ளார். தனக்கு இங்கு அவ மரியாதை கிடைக்கும் என்று தெரிந்தே தான் இங்கு வந்தார்.
“ பெரிப்பா…” நாரயணனை  பார்த்து, ராஜசேகர் இவ்வாறு அழைக்கவும்.
“ உறவு எல்லாம் வேண்டாம். என்னன்னு விசத்த சொல்.” என்று சொன்னதும்,..
தன் கையில் உள்ள காகித்த்தை காண்பித்து …” இது சொத்து பத்திரம்.”  மற்றொரு கையில் உள்ள காகிதத்தை காண்பித்து… “ இது உயில்.” என்று சொன்ன  ராஜசேகர் இதை பற்றி யாராவது “ என்ன…? என்று கேட்பார்களா…? அனைவர் முகத்தையும் பார்த்தார். யாரின் முகத்திலும் அது என்ன…? என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் இல்லை.
அவர் வந்த வேலையை பார்த்தார்…” நான் இங்கு சந்திரசேகரின் வக்கீலாய் வந்து இருக்கேன். அவர் ஒரு வருடம் முன் எழுதிய உயில் இது. அவர் இத்தனை வருடம் தன் உழைப்பில் சம்பதித்த சொத்து முழுவதையும் அவர் பெரிய மகள் கிருஷ்ணவேணி பெயரில் எழுதி இருந்தார்.    என் கட்சிகாரர் இப்போது உயிருடன் இல்லாததால், அவர் எழுதிய உயில் படி உடையவரிடம் அதை சேர்க்க வந்தேன்.”
இங்கு சொந்தம்,  நட்பு என்று பேசினால், பேச விட மாட்டார்கள் என்று ஒரு வக்கீலாய்  பேசி முடித்தார்.
“ நீங்க இடம் மாறி வந்து இருக்கிங்கன்னு நினைக்கிறேன்.”  அவர் கையில் உள்ள காகிதத்தின் கணத்தை காண்பித்து,
 “ இவ்வளவு சொத்து   என் மருமகளுக்கு வரும் அளவுக்கு என் தங்கையை பணக்காரனுக்கு கட்டி வைக்கல. ஒரு சாதரணமானவனுக்கு தான் கட்டி வெச்சேன். அவனும் பாதியில் போயிட்டான்.  நான் சம்பாதிப்பது மட்டும் தான் இந்த வீட்டுக்கு.” யாரோ சொத்து எங்களுக்கு வேண்டாம் என்பது போல் சிவனேசன் பேசினார்.
“சிவா…” என்று ஏதோ பேச முயன்ற ராஜசேகரின் பேச்சை தடுத்து…” ஒரு வக்கீலாய் பேசுவதால் தான் உங்க பேச்சை கேட்டுட்டு இருக்கோம்.” பேச்சு வக்கீல் என்ற  எல்லையை தான்டி இருக்கு கூடாது என்பதை சிவனேசன் உணர்த்தினார்.
சிவனேசனுக்கும் ராஜசேகரை நன்கு தெரியும். சந்திரசேகர் போல் ஆழமான நட்பு இல்லை என்றாலும், எங்காவது பார்த்தால்… “ என்ன இந்த பக்கம்…?” என்று  கேட்கும் அளவுக்கு ஒரே வீதியில் இருந்தவர்கள் என்ற ரீதியில் பேச்சு வார்த்தை இருந்தது.
சிவனேசனும், புனிதாவும் சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்து தாய் மாமனான நாரயணன் தயவில் தான் அவர் வீட்டில் இருந்த்னர். அப்போது ராஜசேகர் இங்கு வரும் போது எல்லாம் தன் தங்கை இவனை பார்த்து “ அண்ணா… அண்ணா…” என்று அழைப்பாளே,  அன்று தன் தங்கைக்கு நேர்ந்த அனுதீயில் இவனுக்கும் தானே பங்கு இருக்கிறது.
அன்று  அந்த பெரிய மனுஷன் பேசும் போது,  இவனும் தானே அங்கு இருந்தான். தன் சுயநலத்துக்காக என்ன வேணாலும் செய்யும் இவன் எல்லாம் சீ…
“கிருஷ்வேணியின் பிறப்பு  சான்றுதழில், தந்தை இடத்தில் என்  கட்சிகாரர் சந்திரசேகரின் பெயர் தானே இருக்கு. அவர் மகளுக்கு அவர் தன் சொத்தை எழுதி வைத்து இருக்கிறார். உங்க வைராக்கியத்துக்காக அந்த பொண்ணோட நல்ல  எதிர்காலத்தை பாழாக்கிடாதிங்க.” என்று ராஜசேகர் பேச பேச தான் வேணிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் விசயம் விளங்கியது.
“ அவர் என் அப்பா இல்லேன்னு சொன்னா,  அது என் அம்மாவை அசிங்கப்படுத்தினது போல. என் பிறப்புக்கு காரணமானவர் வேனா  ஒழுக்கம் கெட்டவராய் இருக்கலாம். ஆனா எங்க அம்மா உத்தமி.அவங்க பேருக்கு சிறு களங்கம் வர நான் விட மாட்டேன்.” இப்படி சொல்லியது நம் கிருஷ்வேணியே தான்.
இவ்வளவு நேரம் அங்கு நடப்பதை ஒரு பார்வையாளராய் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தவள் வாய் திறக்க , அனைவரும் வேணியை தான் பார்த்தனர்.
ராஜசேகருக்கோ வேணியின் பேச்சில் இவளுக்கு கொஞ்சம் ட்ரையினிங் கொடுத்தால் போதும்,  அனைத்தையும் சமாளித்து விடுவாள். அவரின் வக்கீல் மூளை இப்படியாக கணக்கு போட்டது.
“ உங்க அம்மாவ பத்தி நீ சொல்லி எனக்கு  தெரிய வேண்டியது இல்லேம்மா. அவ தங்கமுன்னு எனக்கு தெரியும்மா…” 
“  அந்த பெரிய மனுஷன்  என் மருமகளைய் தகரமா பேசின போது…இந்த பேச்சு எங்கு போச்சி…?” இப்படி கேட்டது நாரயணன்.
“ தாத்தா தேவையில்லாத  பேச்சு எதுக்கு…? யார் சொத்தும் எங்களுக்கு வேண்டாம். அதை எடுத்துட்டு போகலாம்.”  பேச வேண்டியது எல்லாம் பேசியாச்சி, அவ்வளவு தான் பேச்சு. நீ கிளம்பலாம் என்பது போல் இருந்தது பவித்ரனின் பேச்சு.
அவன் பேச்சு திறமையில்… “ நீ வேலைக்கு போறியாப்பா…?” சிறு வயதில் பழகிய குடும்பத்தின் மகன்,  இப்படி சட்டம் திட்டமாய் பேசியதில் மகிழ்ந்து போய் தான் கேட்டார்.
“ அதெல்லாம் உங்களுக்கு எதற்க்கு….?”  வயது வித்தியாசத்தை கூட பார்க்காது மூஞ்சியில் அடித்தது போல் தான் பவித்ரன் பேசினான்.
“ காரணமாய் தான் கேட்டேன். என் கையில் இருப்பது சொத்து மட்டும் இல்ல. S.P க்ரூப்பின் தலமை பதவிக்கான  ருசு இது. இதை நீங்க வாங்கினா அந்த க்ரூப்பின் சேர்மேனாய் உட்கார இருப்பது கிருஷ்ணவேணி. அந்த உயர்ந்த பதவியில் இருக்கும் போது,  வேணிக்கு பக்கபலமாய் ஒருத்தர் வேண்டும் தானே….அதுக்கு தான் நீ என்ன செய்யிறேன்னு கேட்டேன்.” பவித்ரனை யோசிக்க வைத்த ராஜசேகர் தன்னுடைய கடமை முடிந்தது என்பது போல் கிளம்பி விட்டார்.
அன்றில் இருந்து…பவித்ரன் வேணியை நச்சரிக்க ஆரம்பித்து விட்டான். “ சென்னை வா…” என்று.
**********************************************************************************
“ நம்ம க்ரூப்பின் சேர்மேனாய் அந்த பொண்ணு. …?” சென்னையில் உதயேந்திரன்   தன் தந்தையிடம் எகிறிக் கொண்டு இருந்தான்.
“ நானும் இப்படி ஆகுமுன்னு நினைக்கல உதயா. தன் பொண்ணுக்கு  ஏதோ சொத்து எங்கேயோ வாங்கி போட்டு இருப்பான்னு பார்த்தா, இப்படி  அடி மடியில் கைய் வைப்பது போல..நம்ம கம்பெனி ஷேரையே வாங்கி போட்டு இருப்பான்னு நான் நினைக்கலேப்பா…”  பரமேஸ்வரனுக்கே இது பேரிடி தான். இந்த பேச்சில் ஜெய்சக்தி அவர்களின் பிள்ளைகளும் அங்கு தான் இருந்தனர்.
அதுவும் பரமேஸ்வர்  சொன்ன தன் பொண்ணுக்கு,  அந்த வார்த்தை கீர்த்தியை பலமாக தாக்கியது. அந்த தாக்கம் சொத்தால் அல்ல. இது நாள் வரை தன் அப்பாவுக்கு  நான் தான் மகள் என்பது மாறி…இன்னொரு மகள். அதை தான் அவளாள் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்போ நான் யார்…? நான் இல்லீகள் மகளா….? இந்த விசயம் என் பிரண்சுங்களுக்கு தெரிஞ்சா…? அசிங்கமா போயிடுமே…அந்த டீன் ஏஜில் கீர்த்தியின் கவலை இதுவாக தான் இருந்தது.
அதே கவலை தான் உதயேந்திரனுக்கும்.   ஆனால் வேறு மாதிரியாக. சொத்தை அந்த பொண்ணுக்கு வாங்கி போட்டு இருக்கார். அன்று  வக்கீல் வந்து போனதில் இருந்து இதை தான் நினைத்திருந்தான்.
அதற்க்கே அவன் கோபம்  எகிறியது. யார் சொத்தை வைத்து அதை எல்லாம் சம்பாதித்தது. இப்படி ஒரு பக்கம் கோபம் என்றால்,  இன்னொரு பக்க கோபம் தன் குடும்பதின் மீது. என்ன தலையெழுத்து தன் அக்கா இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட.
அப்போது கூட தன்  குடும்பத்தை பற்றி நினைத்தானே ஒழிய. தன் அக்காவின் இந்த போக்கால் பாழாய் போன இன்னொரு குடும்பத்தை பற்றி நினைக்கவில்லை.
நினைக்க வைக்க சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தாள் நம் கம்பத்து பொண்ணு.  எனக்கு அந்த சொத்து வேண்டாம் என்றவளை… 
“ பதினெட்டு வருஷம் முன்  நியாயம் கேட்க போன உன் அம்மாவை”   அந்த பெரிய மனுஷர் கேட்ட வார்த்தையை சொல்ல. அதை கேட்ட வேணி ..” பவி  இது உண்மையா…? இந்த வார்த்தைய அம்மா எப்படி தாங்கினாங்க…?” அந்த வார்த்தை பவித்ரன் வாயில் சொல்ல கேட்டே வேணி  துடி துடித்து போய் விட்டாள். 
அப்போது அம்மாவுக்கு எப்படி இருந்து இருக்கும்…? பெற்ற மகளாய் தாயுக்கு நியாயம் செய்ய துடித்தாள்.
அவள் முகமாற்றத்தை பார்த்துக் கொண்டே…   “ இப்போ சொல். உன் அம்மாவை பார்த்து கேட்ட அந்த பெரிய மனுஷர்  ஊர் முன் தலை குனிய வேண்டாமா…?”  
“ கண்டிப்பா தலை குனிய வைப்பேன்.”
 சென்னையே வேண்டாம் என்பவளை வர வழைத்த அந்த  வார்த்தை என்ன வார்த்தையாக இருக்கும்…?
 

Advertisement