Advertisement

அத்தியாயம்….28 
“என்னப்பா ஆச்சி?” தன் தம்பிக்கு போன்  போடாது, வியர்த்து வழிந்த வியர்வையோடு நின்றுக் கொண்டு இருந்த தன் தந்தையின் தோள் பற்றி விசாரித்து  கொண்டு இருந்தான் கஜெந்திரன்.
தன் தோள் மீது இருந்த பெரிய மகனின் கையை பிடித்து தள்ளிய  பரமேஸ்வரர் “முதல்ல உன் தம்பிக்கு போன போடுடா” என்று பரமேஸ்வரர் சொன்னார் என்பதை விட கத்தினார் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த கஜெந்திரனின் மனைவி வாணி “அவர் உங்க மகனா? இல்ல வேலைக்காரனா? டென்ஷனா இருக்கிங்கலே என்னன்னு தானே கேட்டார். அதை சொல்லாது சின்ன மகனுக்கு போன போடு சின்ன மகனுக்கு போன போடுன்னு அவர மிரட்டிட்டு இருக்கிங்க.” தன் மாமனரை வெளுத்து வாங்கிய வாணி.
பின் தன் கணவனை  பார்த்து “நீங்க மட்டும் கொஞ்சம் துப்போட இருந்து இருந்தா உங்க தம்பி போல உங்களுக்கும் இந்த வீட்டில் மரியாதை கிடச்சி இருக்கும்.” கஜெந்திரனை இப்படி மட்டம் தட்டி பேசுவது மனைவியான எனக்கு மட்டுமே ஏக போக உரிமை என்பது போல் பேசினாள் வாணி.
முதலில் பரமேஸ்வரரின் கத்தல் கேட்டு அனைவரையும் போல வாணியும் தான் பதறிய படி ஓடோட்டி வந்தாள். அதுவும் வியர்வை வழிய, ஒரு  கையில் போனுடன் ஒரு வித பதட்டத்துடன் இருக்கும் தன் மாமனாரை பார்த்து வாணியும் பயந்து தான் போய் விட்டாள்.
ஆனால் தன் கணவர்  கேட்டதற்க்கு பதில் அளிக்காது அவரை ஒரு வேலைக்காரன் போல்  மிரட்டி, அதுவும் தன் சின்ன மகனுக்கு போன் போடு என்று சொன்னதில், தன் கணவருக்கு இங்கு மரியாதை இல்லையா?
சின்ன மகனுக்கு போனை  போட்டு அழைத்து, என்ன விசயம் என்று சொல்வார். ஆனால் பக்கத்திலேயே குத்து கல்லாட்டம் இருக்கும் பெரிய மகனிடம்  பிரச்சனை என்ன என்று கேட்டாலும் சொல்ல மாட்டாராமா? அந்த ஆதாங்கத்தில் மாமனார் என்று கூட பாராது கத்தி விட்டாள்.
“அம்மா இப்போ பிரச்சனை பண்ற நேரம் இல்ல. குடும்ப மானம் போகாம இருக்க தான் நான் உதயைய் கூப்பிட சொன்னேன்.”தன் ஒன்று சொன்னால் அதற்க்கு பதில் பத்து மடங்காய் திருப்பி கொடுக்கும் மாமனார். இன்று  பணிந்து போய் பேசியதை பார்த்து தன் கோபத்தை மறந்த வாணி என்ன விசயம்.? என்பது போல் தன் மாமனாரை பார்த்தாள். விசயம் மிக பெரியது என்பது போல் தான் அவர் அடுத்து பேசிய பேச்சு இருந்தது.
“சரி உன் புருஷனுக்கே நான் முதல் மரியாதை கொடுக்குறேன். பிரச்சனை இது தான். கீர்த்தியை அந்த பவித்ரன்  பையன் கடத்திட்டான். உன் புருஷன் இதுக்கு என்ன செய்ய போறார். நீயே கேட்டு சொல்.” இது தான் விசயம் என்று போட்டு உடைத்ததில், அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர் என்றால்,
“என்னப்பா சொல்றிங்க? நீங்க  அந்த கம்பத்து பொண்ணோட, அந்த பையனையும் தானே கடத்திட்டதா நேத்து சொன்னிங்க.இப்போ என் பொண்ணை அவன் கடத்திட்டதா சொல்றிங்க.” ஜெய்சக்தி தன் தந்தையிடன்  கேட்ட கேள்வியில் இன்னும் அதிர்ந்து போய் நின்று விட்டனர் கஜெந்திரனும், அவன் மனைவியும்.
“என்ன சொல்றிங்க.?” கணவன் மனைவி இருவரும் அதிர்ந்து போய் கேட்டனர்.
அவர்களுக்கும் அந்த  கம்பத்து பெண் சென்னை வந்தது பிடிக்கவில்லை தான்.அதுவும் தங்களுடைய ஷேரை அவள் பெயருக்கு  வாங்கி போட்டது தெரிந்ததில் இருந்து, அவளை இங்கு இருந்து விரட்டுவதில் இவர்களும் குறியாய் தான் இருந்தனர்.ஆனால் …
“இப்போ கேள்வி கேட்கும் நேரம் இல்ல. நம்ம வீட்டு பெண்ணை அவன் பிடிச்சி வெச்சி என்னையே மிரட்டுறான். நம்ம பெண்ணை காப்பாத்தி அவனுக்கு நாம யாருன்னு காட்டனும்.” என்று  சொன்ன பரமேஸ்வரர்.
இப்போது தன்  மருமகளை பார்த்து “ இதுக்கு உன் புருஷன் ஏதாவது செய்வானா?” என்று  கேட்டார்.
“அதுக்கு எல்லாம் இவர் சரி பட்டு வர  மாட்டார். நீங்க உங்க சின்ன மகனையே கூப்பிட்டுக்குங்க.” என்று  சொன்னது மட்டும் அல்லாது கைய்யோடு தன் கணவன் கை பிடித்து தங்கள் அறைக்கு அழைத்தும் சென்று விட்டாள்.
ஜெய்சக்தி தான் தன் தம்பிக்கு தொடர்ந்து  கைய் பேசியில் அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்தாள்.
தொடர்து அழைப்பு வருவதை ஏற்காது தன் கைய் பேசியையே உற்று  பார்த்துக் கொண்டு இருந்த உதயேந்திரனை பார்த்துக் கொண்டு இருந்த க்ரீஷ், கீர்த்தி, தன் மாமன் கையில் இருந்த பேசியை யார்? அழைப்பது என்று  எட்டி பார்த்தனர்.
தன் அம்மாவின் பெயர் அதில் மிளிர்வதை பார்த்து தன் மாமனை யோசனையுடன் இருவரும் பார்த்தனர்.
தன் அக்கா பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே தன்  பேசியின் அழைப்பை ஏற்று காதில் வைத்ததும் அழைப்பின் அந்த பக்கத்தில் இருந்த ஜெய்சக்தி எடுத்து உடன் “எங்கே  இருக்க உதய். சீக்கிரம் வீட்டுக்கு வா.” என்று அழைத்தாள்.
“இப்போதைக்கு என்னால வர முடியாது அக்கா.” அவனும் ஏன்.? எதற்க்கு? என்று கேட்காது மறுத்தான். அவனுக்கு தான் தன்னை சீக்கிரம் அழைக்கும் காரணம் தெரியுமே.
“உதய் பிரச்சனை என்னன்னு கேட்காம அது என்ன வர மாட்டேன்னு சொல்ற.”என்று தன் மகள் காணாத ஆதாங்கத்தில் கத்திய ஜெய்சக்தி.
தொடர்ந்து “ஆமா இப்போ நீ எங்கே இருக்க?அப்போ நீ இந்தியாவுக்கு இன்னிக்கு வர்றேன்னு சொன்னார்.”
அந்த நிலையிலும் தன்னை குறுக்கு விசாரணை செய்யும் சகோதரியை மனதில் திட்டிய உதய். “ நான் இந்தியா வந்துட்டேன்.” உதய் இந்தியா வந்ததை மட்டும் சொன்னான். இப்போது எங்கு இருக்கிறான் என்று  சொல்லாது விட்டு விட.
“இந்தியா வந்தவன் வீட்டுக்கு வராம எங்கே இருக்க.” மீண்டும் தன்னையே குடைந்து கேள்வி எழுப்பிய சகோதரியிடம்…
“பெண் காணும்.அந்த சமயத்தில் கூட  என் கிட்ட விசாரணை நடத்திட்டு இருக்க?” என்று கேட்ட உதய்.
பின் “அவளுக்கு ஒன்னும் ஆகாது என்ற நம்பிக்கை தானே உன்னை என் கிட்ட இப்படி பேச வைக்குது.” என்று சொன்னவன். 
தொடர்ந்து… “அந்த நம்பிக்கை எதனால் வந்தது.பவித்ரன் உன் பொண்ணை தப்பா ஏதும் செய்ய மாட்டான் என்பதால் தானே.?” என்று கேட்டான்.
இந்த பேச்சை வார்த்தை அனைத்தும் ஜெய்சக்தி பேசியில்  ஸ்பீக்கர் ஆன் செய்து தான் பேசிக் கொண்டு இருந்தாள்.
இந்த உரையாடலை கவனித்துக் கொண்டு இருந்த பரமேஸ்வரர் “கீர்த்தி உன் பக்கத்தில் தான் இருக்காளா…? அவரின் அனுபவ அறிவு  அவ்வாறு கேட்க வைத்தது.
“அப்பா  என்னப்பா கேட்குறிங்க…?” ஜெய்சக்தி அதிர்ச்சியோடு தன் தந்தையை கேட்ட அதே நேரம்   உதயேந்திரன் சிரித்த நக்கல் சிரிப்பு கைய்பேசியின் வழியாக இவர்களின் காதுக்கு எட்டியது.
 உதயேந்திரனின் சிரிப்பில் “உதய்”  ஜெய்சக்தி அதிர்ச்சியில் அடுத்து பேச முடியாது வாய் அடைத்து நின்றாள் என்றால், பரமேஸ்வரரின்  மூளையோ அதற்க்கு எதிர் பதமாய் இரு மடங்கு சுறு சுறுப்போடு “உதய் முதல்ல நீ கீர்த்தியோட வீட்டுக்கு வா. எது என்றாலும் நம்ம வீட்டுல பேசிக்கலாம்.”
அவருக்கு அந்த பெண்ணும்,  அதாவது வேணியும் உதயோடு கூட இருக்கிறாளோ என்ற சந்தேகம். வேணி தான் உதயைய் அழைத்து இருப்பாளோ…மாமன் திட்டத்துக்கு கீர்த்தியும் அங்கு சென்று இருப்பாளோ…இப்படி தான் அவர் எண்ணினார்.
ஆனால் இத்திட்டம் மொத்தமும் தன் ரத்த சந்ததியினரால் மட்டுமே  திட்டமிடப்பட்டது என்று அவர் சிறிதும் நினைத்திருக்க வில்லை.
அவரை பொறுத்த வரை தங்களை பழி வாங்க அந்த கம்பத்து பொண்ணு தன் மகனை தன் வலையில் வீழ்த்தி, தன்னை வெற்றி கொள்ள நினைக்கிறாள் என்பதே. அவர் புத்தி அவரை அவ்வாறு தான் நினைக்க வைத்தது.
“நானும் உங்க கிட்ட  பேசனும். அதுக்காவது வீட்டுக்கு வந்து தானே ஆகனும்.” என்ற சொல்லோடு உதயேந்திரன் பேசியை அணைத்து விட்டான்.
ஆனால் இந்த பக்கத்தில் இருந்து உதயேந்திரனின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த பரமேஸ்வரர், உதய் சொன்ன பேசவாவது வீட்டுக்கு வந்து தானே ஆகனும் என்ற சொல்லின் அர்த்ததை யோசித்த  வாறே அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டார்.
தந்தையின் வெளிறிய முகத்தை பார்த்த ஜெய்சக்தி  “அது தான் தம்பி வீட்டுக்கு வர்றேன்னு சொன்னானேப்பா.” அடுத்து ஜெய்சக்தி என்ன சொல்லி இருப்பாளோ…
“முட்டாள்.முட்டாள். எல்லாம் உன்னாலே தான் இவ்வளவும். உனக்கு காதலிக்க வேறு எவனும் கிடைக்கவில்லையா…?”என்று  கத்தி விட்டு தன் தலையில் அடித்துக் கொண்டவர்.
பின் தன் கோபம் குறையாது மீண்டும் தன் மகளை பார்த்து  “அப்போ முட்டாளா இருந்தேன்னு பார்த்தா. இப்போ கூட அவன்  பேசுனதுக்கு அர்த்தம் தெரியாது. அது தான் தம்பி வர்றேன்னு சொல்லிட்டானேன்னு என்னை சமாதானப்படுத்துற. உங்களை எல்லாம் வெச்சிட்டு நான்.” என்று கத்தி விட்டு பரமேஸ்வரர்  மீண்டும் தன் தலையில் அடித்துக் கொண்டார்.
பரமேஸ்வரருக்கு  தன் பெரிய மகனின் புத்திசாலியற்ற தனம். மகளின் இந்த பேச்சு. தன் சின்ன மகனின் இப்போதையே பேச்சு.  அனைத்தும் சேர்ந்து அவரை ஒரு பாதுக்காப்பற்ற தன்மையை உருவாக்கியதால், எப்போதும் நிதானத்துடன் சிந்திக்கும் அவரின் தன்மை மாறி இவ்வாறு கத்த வைத்தது.
பரமேஸ்வரர் கத்திக் கொண்டு இருக்கும் போது உதயேந்திரன் தன் அக்காவின் இரு பிள்ளைகளோடு  தன் வீட்டுக்குள் நுழையும் அதே சமயம் கிருஷ்ணவேணி தன் வீட்டு டையினிங் டேபுள் முன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
அவளை சுற்றி அனைவரும் இருந்தும் வாய் திறக்கவில்லை.  அனைவருக்கும் வேணியிடம் கேட்க பல கேள்விகள் இருந்தது. பவித்ரனின் சைகையால் வாய் திறவாது எப்போதும் போல் சுகுனா…
“இன்னும் ஒரு இட்லி வெச்சிக்கோ. மெல்ல  மென்னு சாப்பிடு. அவசர அவசரமா ஏன் முழுங்கிற…?” என்ற அதட்டலோடு உணவு பரிமாறிக் கொண்டு இருந்தார்.
வேணி எப்போதும் உணவை மென்று விழுங்க மாட்டாள்.உணவை வாயில் போட்டதும் கபக் கென்று முழுங்கி விடுவாள். அதற்க்கு ஏதுவாய் சாப்பாட்டை “குழைய  வைங்க. இது என்ன நெட்ட நெட்டையா இருக்கு.?” சாப்பாட்டை அவசரத்துக்கு விழுங்க முடியாத போது தன் தாய், அத்தையை குறை சொல்லிக் கொண்டே தான் சாப்பிட்டு  முடிப்பாள்.
இபோதும்  இட்லியை கிருஷ்ணவேணி  முழுங்கும் போது சுகுனா இவ்வாறு சொல்ல. எப்போதும்  அதை காதில் வாங்காது தன் உணவை முழுங்கும் கிருஷ்ணவேணி அத்தையின் இப்பேச்சுக்கு.
“தலை வலிக்குது அத்தை. போதும்.” தட்டில் இருக்கும் உணவை சாப்பிடாது எழுந்துக் கொண்டாள்.
வேணியை எழ விடாது பிடித்து திரும்பவும் உட்கார வைத்த சுகுனா… “சரி நான் ஒன்னும் சொல்லலே. நீ எப்போவும் சாப்பிடுவது போலவே சாப்பிடு.” என்று சொன்னதும், வேணியின் கண்ணில் இருந்து தன்னால் கண்ணீர் வர.
 “என்னால முடியல  அத்த.” வேணியின் குரல் உடைந்து வெளி வந்தது.
பவித்ரன் எதுவும் பேசாதே  என்று அனைவரிடமும் சொன்னாதல் தான் யாரும் வாய்   திறந்து “என்ன ஆச்சி…?” என்று ஒருவரும் கேட்கவில்லை.
வேணியை பவித்ரனை விட புரிந்தவர்கள் எவரும் அவ்வீட்டில் இல்லை. அதனால் தான் பவித்ரன் சொன்னால் அதில் ஏதாவது விசயம் இருக்கும் என்று அமைதி காத்தது.
ஆனால் இப்போது வேணியின் உடைந்த குரலில் சுகுனா தன் மகனை முறைத்து விட்டு… “என்னடா என்ன ஆச்சி.” என்று அவர் ஆராம்பித்ததும், பின் அனைவரும் ஒருவர் பின் ஒருவாராக “ஒன்னும் இல்லடா.”  “ஒன்னும் இல்ல.” “அது தான் நல்ல படியா வந்திட்டியே.” “அத மறந்துடு.” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவளை அணைத்து ஆறுதல் அளித்தனர்.
அவர்கள் ஆறுதலில்  வேணியின் மனது தேறுவதற்க்கு   மாறாக, இன்னும் குற்றவுணர்வு மனதில்  அதிகமாக அவளுடைய அழுகையும் அதிகமானதே தவிர குறையவில்லை.
அவ்வீட்டில் அனைவரும் பேச நம் பவித்ரன் மட்டும் எதுவும் பேசாது அமைதியாக வேணியையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அதை பார்த்த சிவனேசன் “புள்ள இப்படி கதறுது குத்து கல்லாட்டும் அவளையே பார்த்துட்டு இருக்க.” சிவனேசனின் அந்த பேச்சி இத்தனை பேர் ஆறுதல் அளித்தும் நிற்காத அழுகை,  சுச்சை அணைத்தது போல் பொட்டேன்று நின்று விட, வேணி அதிர்ந்து பவித்ரனை நிமிர்ந்து பார்த்தாள்.
பவித்ரன்  வேணியின் அதிர்ந்த அந்த பார்வையையும்  கூர்ந்து பார்த்த வாறே… “ அது தான் உன் மருமகள் அழுகை நின்னுடுச்சிலே. இன்னும் ஏன் என்னை முறச்சிட்டு இருக்கிங்க.” பேச்சி தன் அன்னையிடம் இருந்தாலும், பவித்ரனின் பார்வை முழுவதும் வேணியிடம்  மட்டுமே நிலைப்பெற்றிருந்தது.
பவித்ரனின் அப்பார்வை வேணிக்கு இன்னும் பதட்டத்தை கூட்ட “எனக்கு தலை வலிக்கிறது. நான் ரூமுக்கு போறேன்.” என்று  அவரசமாக சொல்லிக் கொண்டு தன் அறைக்கு செல்ல, பவித்ரன் அவளினும் அவசரமாய் அவள் அறைக்கு அவள் நுழையும் முன் நுழைந்தது மட்டும் அல்லாது  அவள் அறைக்குள் நுழைந்ததும் கதவை இழுத்து சாத்தினான்.
அச்சமயம் உதயேந்திரனின்  வீட்டில் உதயை பார்த்த பரமேஸ்வரர்  அதுவும் தன் பேரன், பேத்தியோடு வருவதை பார்த்து … “ பெண் பித்தில்  நம்ம வீட்டு பெண் கடத்திட்டதா ஒரு வயசானவன் கிட்ட சொல்றியே அதிர்ச்சியில ஒன்னு கிடக்க ஒன்னு எனக்கு ஆகி இருந்தா…? இத நீ செய்யலேடா அந்த பொண்ணு உன்ன இப்படி செய்ய வெச்சி இருக்கா. ஆள் மயக்கி.” அடுத்து அந்த  பெரிய மனுஷன் என்ன பேசி இருப்பாரோ…
“அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை.” பரமேஸ்வரரை விட  உதயேந்திரன் கத்திய கத்தல், நமக்கு என்ன என்று ஒதுங்கி இருந்த கஜெந்திரன் அவன் மனைவி வாணியையும் ஹாலுக்கு வர வழைத்து இருந்தது.
எப்போதும் கோபம் என்றாலும் அதை ஒரு அழுத்தத்துடன் மட்டும் சொல்லும் உதயேந்திரன் இவ்வாறு கத்தவும், அதுவும் தன்னை அப்பா என்று அழைக்காது தன் ஆட்காட்டி விரலை தன் முன் நீட்டி எச்சரிப்பது போல் பேசிய பேச்சில் தன்னிலை  முற்றிலும் மறந்தவராய்…
“என்  கிட்ட என் கிட்ட விரல் நீட்டி பேசுறியா…?வயசு ஆச்சே இவன் என்ன செய்ய போறான்னு நினச்சிட்டிங்கலா…  செய்யிறேன்டா நான் செய்து காட்டுறேன். அவள் ஆத்தாலுக்கு தான் அந்த மூஞ்சு இல்ல. ஆனா இந்த குட்டி எந்த கேசு  வேணா போடுவது போல தான் அழகா இருக்கா.” என்று பரமேஸ்வரர் சொன்னதும்,
உதயேந்திரனுக்கு முன் கீர்த்தி… “நீங்க அவங்க மேல அப்படி கேசு மட்டும் தான் போட முடியும். ஆனா என்னால அப்படியாவே ஆகி நிக்க முடியும்.”  கீர்த்தியின் அந்த பேச்சு அவ்வளவு அழுத்தம் திருத்தமாக இருந்தது.
தன் மகளின்  இந்த பேச்சில் ஜெய்சக்தி மார்பின் மீது கைய் வைத்துக் கொண்டாள் என்றால், வாணி வாயில் மீது கைய் வைத்து  அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாள்.
உதயேந்திரன் தான்…”குட்டிம்மா என்ன பேச்சு இது…? சின்ன பெண்ணா பேசு.” என்று அவளை அதட்டினான்.
“பெரிய மனுஷங்க பெரிய மனுஷ தனமா  பேசுனா நான் சின்ன பெண்ணே பேசுவேன் மாமா.”
உதயேந்திரன் கீர்த்தியின் தலையை  தடவிய வாறே “இனி இப்படி பேச மாட்டார் கீர்த்தி. அதனால்  அவரை கோபப்படுத்த கூட இது போல் வார்த்தை உன் வாயில் இருந்து வரக் கூடாது.” என்று கீர்த்தியிடம்  மென்மையாக சொன்னான்.
என்ன தான் கீர்த்தியிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் உதயேந்திரன் மனது நெருப்பு குழம்பாய்  கொதித்துக் கொண்டு இருந்தது.
இது போல் ஒரு வார்த்தை வேறு யாராவது சொல்லி இருந்தால் அந்த நிமிடம் அவனின் உயிரை எடுத்து இருப்பான். 
ஆனால் சொன்னது…? மனம் அவனுக்கு ஆரவில்லை. இனி ஒரு தடவை அது போல் பேசுவது என்ன மனதில் கூட நினைக்க கூடாது.
விடு விடு என்று தன் அறைக்குள் நுழைந்தவன் கையில் கிடைத்த துணியை  பெட்டியில் போட்டு விட்டு நுழைந்த வேகத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியேறும் முன்  தன் தந்தையை பார்த்து…
“நீங்க சொன்னதை செய்ய நினைத்தால், கொள்ளி போட வேண்டிய கைய்யால் தான் உங்கள் உயிர் போக வேண்டி வரும்.” என்ற அந்த  சொல்லோடு அந்த வீட்டை விட்டு அவன் வெளியேறி விட்டான்.
என்னை மன்னிக்க வேண்டும். வேலை மிகுதியால் என்னால் எழுத முடியவில்லை. இரு மாதம் ஒரு முறை கதை கொடுக்க முயல்கிறேன். பின் தொடர்ந்து கொடுக்கிறேன். இக்கால தாமத்திற்க்கு  மன்னிக்கவும்.
 

Advertisement