Advertisement

அத்தியாயம்….21 
தான் சொன்ன காபி ஷாப்பில் தனக்கு முன் வந்திருந்த காயத்ரியை  பார்த்து புன்னகை புரிந்தவாறே அவள் எதிரில் வந்து அமர்ந்த உதயேந்திரன்…
“  வந்து ரொம்ப நேரம் ஆச்சா…?” அவள் முன் இருந்த காபி கோப்பையை பார்த்துக் கொண்டே உதயேந்திரன் கேட்டான்.
“ ம்..இப்போ தான் ஜஸ்ட் டென் மினிட்ஸ்.” என்று தோளை குலுக்கிக் கொண்டே சொன்ன காயத்ரியின் பேச்சில் உனக்கு எல்லாம்  நான் காத்திருப்பேனா என்ற தோனி தெரிந்தது.
ஆனால் அவள் முன் இருந்த காபி மக்கின் நிலை பார்த்தால், அதை அவள் குடித்து முடித்து கொஞ்சம் என்ன நிறைய நேரமே கடந்து விட்டது என்று எடுத்துரைத்தது.
“ ஓ…” என்று சொன்னவனின்  முகத்தில் இப்போது புன்னகை   கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தது.
 அதே புன்னகையுடன்  தான் எடுத்து வந்த மலர் கொத்தை அவளிடம் நீட்டி … “ பார் யூ…” என்று சொன்னதும்…
 “ எனக்கு  இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. என்னை பார்த்தா எப்படி தெரியுது….?  அது மாதிரி பொண்ணாவா…?”
அவள்  குரல் எப்போதும் கீச் கீச் என்று தான் எதிரொலிக்கும். அவள் சத்தமாய் பேசினால் அந்த காலத்தில் ரேடியோ பெட்டியில் சரியான அலைவரிசையில் வைக்கவில்லை என்றால்  பேசுபவர்களின் குரல் தெளிவாக கேட்காது. நாம் சத்தம் அதிகமாய் கூட்டினால் இன்னும் கர கர என்று சத்தம் இடுமே தவிர, அப்போதும் வானொலியில் பேசுவது நமக்கு சரியாக புரியாமல்  தான் கேட்கும்.
அப்படி பட்ட குரல் வளம் மிக்கவள் தான் நம் காயத்ரி. அதனால் அவள் பேசியது சரியாக உதயேந்திரனின் காதில் விழாது போக…
“ என்ன சொன்ன காயூ.”
“ என்னது காயூவா…?” காயத்ரியின் இந்த பேச்சு  உதயனின் காதில் சரியாக விழுந்தது.
“ ஆமா காயூ தான்.”  திரும்பவும் காயத்ரி என்ற  அவள் பெயரை காயூ என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னான்.
“ பாக்குற பெண்ணை எல்லாம் இப்படி  தான் அவங்க பெயரை சுருக்கமா வெச்சி கூப்பிடுவீங்கலா…கூடவே இந்த பொக்கேவோடு.” தன் முன் நீட்டியிருந்த மலர் செண்டை  பார்த்த வாறு கூறினாள் காயத்ரி. 
முதல் சந்திப்பின் போது அவள் தான் அவனை அவ்வாறு அழைக்க சொன்னாள் என்று மறந்தவளாய் கூறினாள்.
ஆனால் அதை உதயேந்திரன் காயத்ரிக்கு நியாபகம்  படுத்தும் வகையாய்…. “நீ தானே என்னை அப்படி கூப்பிட சொன்ன…” இப்போதும் உதயேந்திரன் பேச்சு அனைத்தும் ஒருமையில்  தான் இருந்தது.
அம்மணி இதையும் அவர்கள் முதல் சந்திப்பின் போது சொன்னது தான். “ நான் உங்களோடு ஒரு வருடம் என்ன…பல வருடம் சின்னவளாய் தான் இருப்பேன். அதனால் நீங்க வாங்க போட்டு அழைத்து என்னை வயசானவளாய் ஆக்க வேண்டாம்.” என்று. 
சொன்ன அவள் மறந்து விட்டாள். ஆனால் கேட்ட உதயேந்திரன் எதையும் மறக்காது அதை  அப்படியே கடை பிடித்தான்.
“ அன்னிக்கி அந்த பொண்ணு மேல இருக்கும் கோபத்தில் ஏதோ உங்க கிட்ட அப்படி சொல்லி இருப்பேன். ஆனா அதையே பிடிச்சி தொங்கிட்டு…என்னை  செல்ல பெயர் வெச்சி கூப்பிடுவிங்கலா….?
 தோ இது போல் காபி ஷாப்புக்கு கூப்பிட்டு பொக்கே எல்லாம் கொடுபிங்கலா…?” உதயேந்திரனுக்கு இப்போடு தான் அவன் கோபத்தின் காரணம் பிடிப்பட்டது.
விரிந்த புன்னகை இப்போது வெடி சிரிப்பாய் சிதற….சிரித்தவன், சிரித்துக் கொண்டே இருந்தவன். காயத்ரி பார்த்த கோப பார்வையில் சிரிப்பை கட்டுப்படுத்தியவனையும் மீறி , அவன் இதழ்  ஓரத்தில் உதடு கொஞ்சம் துடிக்க தான் செய்தது.
“ வாவ் க்ரேட் இமேஜினேஷன். காபி ஷாப் கூப்பிட்டா ப்ரபோஸ் செய்வது. அதே போல் பொக்கே கொடுத்தா ப்ரபோஸ் செய்வது. இந்தியாவுல இது போல் வேறு என்ன…. என்ன…? இருக்குன்னு சொல்லிடும்மா… இனி அது போல் செய்யாம பார்த்துக்குறேன். 
உனக்கு என் மேல அது போல் ஐடியா  ஏதும் இல்ல. அதனால நான் தப்பிச்சேன். இதே என் மீது நாட்டம் இருக்கும் பெண்ணிடம் இது போல் பேசினா வம்பா ஆகிட கூடாது இல்லையா…அதனால் தான். ” சிரிப்புக்கு நடுவே கொஞ்சம் சீரியசாகவும் பேசி வைத்தான் உதயேந்திரன்.
“ அப்போ இது எல்லாம் அதுக்கு இல்லையா…?”  தங்கள் முன் டேபுளில் இருந்த பூச் செண்டை காட்டி   காயத்ரி கேட்டாள்.
அவள் அந்த பூச்செண்டை வைத்து இப்படி பேசவும்,  தன் கையில் வைத்திருந்த பூச்செண்டை உதயேந்திரன்  டேபுளுக்கு இடம் மாற்றி இருந்தான்.
“ இல்லவே இல்ல.” என்று சொன்ன உதயேந்திரனை  சந்தேகமாய் பார்த்துக் கொண்டே…
“ அப்போ எதுக்கு கூப்பிட்டிங்க…?”
“ பேச தான்.”
“ பேசவா… பேச மட்டுமா  கூப்பிட்டிங்க…?” என்று இப்போதும்   காயத்ரியின் பேச்சில் நம்பாத தன்மையே காணப்பட்டது.
“ தோ பாரும்மா இந்த காதல். அதன் பின் இந்த ஊடல். அதை சரி செய்ய அந்த பொண்ணு பின்னாடி   சுத்துவது. இது எல்லாம் எனக்கு சரி பட்டு வரவே வராது. 
உனக்கும்  இது போல் விசயத்தில்  நம்பிக்கை இல்லை தானே. இல்ல அது போல் எண்ணம்  இருந்தா சொல்லிடு…இப்படியே கிளம்பிடுறேன்.” என்று உதயேந்திரன் சொன்னதும்.
வீர வேசமாய்… “ எனக்கும் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் என் அப்பா அம்மா பார்த்து எந்த நாய கட்டிக்க சொன்னாலும்  கட்டிப்பேன்.” இப்படி காயத்ரி சொன்னதும்…
நாய கட்டிப்பாளா…? என்று மனதில்  நினைத்தவன் அதை வெளியில் சொல்லாது… “  அப்போ பரம சந்தோஷம். இப்போ பிரண்டா பேசலாமா…?  இப்போவாவது இந்த பொக்கையே வாங்கிப்பியா…?” சிரம் தாழ்ந்து பேசுவது போல் பேசியவின் பேச்சில் சிரிப்பு பொங்க.
“ பிரண்ட் மட்டும்னா  ஒகே தான்.” என்று அவன் கொடுத்த பூச்சண்டை வாங்கி கொண்டாள்.
சிரித்துக் கொண்டே …  அங்கு வந்த பையனிட… “ ஒரு கோல்ட் காபி.” என்றூ அவனுக்கு மட்டுமே ஆர்டர் கொடுக்க..
டேபுல் மேல் வைத்திருந்த  உத்ச்யேந்திரன் கையை காயத்ரி சுரண்ட…. என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்த உதயேந்திரனிடம்… “ எனக்கும்…”  கோல்ட் காபி தனக்கும் சேர்த்து ஆர்டர் செய்யும் படி பணித்தவளை பார்த்து சிரித்த உதயேந்திரன்…
“ இரண்டு கோல்ட்  காபி.” என்று சொல்லி அவனை அனுப்பிய உதயன்…  “ அப்போ இந்த காபி நீ குடிக்கலையா…?”
“ நான் தான் குடிச்சேன்.” முகத்தில் அசடு வழிய சொல்லியவளின் பேச்சில்..
“ உன்னை எல்லாம் காதலித்து…யப்பா…” என்று மனதில் புலம்பியனுக்கு தெரியவில்லை.
அவளையும் காதல்லிக்க ஒருத்தன் வருவான். அதே போல் இந்த காதல் அதற்க்கு  பின் இந்த ஊடல் பின் சுத்துவது சுத்த பைத்தியக்கார தனம் என்று சொன்னவன் தான்  ஒரு நாள் பைத்தியம் போல் சுத்த போகிறான் என்று.
அவர்கள் ஆர்டர் கொடுத்த காபி  வந்த்தும் காபியை குடித்துக் கொண்டே…. “ உங்க அப்பா ஊர் கம்பம் தானே….”
அந்த கோல்ட்காபியை கண் மூடி அனுபவித்து குடித்துக் கொண்டு இருந்த  காயத்ரி உதய் பேச்சை காதில் வாங்கதவளாய் இருந்தாள்.
அவள் இதை  குடித்து முடிக்கும் வரை  நாம் பேசுவது எதுவும் காதில் விழாது என்று முடிவு  செய்தவனாய், தன் கையில் உள்ள காபியை ஒரு சிப் செய்து தன் முன் இருந்த  ஷோ கேஸ் கண்ணாடியை பார்த்தான்.
அதில்  அந்த காபி ஷாப்புக்குள்  பவித்ரனும், வேணியும் கைய் கோர்த்த வாறே  வந்து கொண்டு இருந்தார்கள். பவித்ரன் என்ன சொன்னானோ….
“ சீ..”  என்று வேணி சொன்னது அவள் உதட்டு அசைவில் தெறிய. அவன் தோள் மீது தட்டிய வேணி  திரும்பவும் விட்ட அவன் கையை பிடித்துக் கொண்டு அவர்கள் அமர ஏதுவாய் ஒரு இடம் பார்த்து அமர்ந்துக் கொண்டனர்.
அவர்கள் இருவரும் தன்னை பார்க்கவில்லை. தன் முதுகு புறமே அவர்களுக்கு தெரிவதால், தான் காட்டிக் கொண்டால் தான் உண்டு. இப்போது தான் போய் பேசுவதா….? இல்லை …
அவன் யோசனையின் இடையாய்… “ சே…சமா  ஜோடி அங்கே பாரேன் உதய்.” தன் எதிரில் தெரிந்த வேணி, பவித்ரனை பார்த்துக் கொண்டே சொன்ன காயத்ரியின் குரலில் ஏதோ ஒரு ஆதாங்கமும் சேர்ந்தே   ஒலித்தது.
 காயத்ரி  யாரை பார்த்து சொன்னாள் என்று  புரிந்துக் கொண்ட உதய். அதோடு காயத்ரியின் பேச்சில் தெரிந்த மாற்றதையும் சேர்த்து புரிந்துக் கொண்டவன்.
“ என்ன காயூ பஸ்ட் சைட்லயே ப்ளாட்டா….?” காயத்ரியின் பார்வை மொத்தமும், அதுவும் தான் குடித்துக் கொண்டு இருந்த கோல்ட் காபியை கூட மறந்தவளாய் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்ததால்,
உதய் பேசிய பேச்சு  காதில் விழுந்தாலும், அதை உள்வாங்கிக் கொள்ள  முடியாது. “ என்ன கேட்ட உதய்…”காயத்ரியின் பேச்சு உதயிடம் இருந்தாலும், பார்வை மொத்தமும் எதிரில் இருப்பவர்கள் வசமே இருந்தது. 
இப்போது  வெளிப்படையாகவே… “ பவித்ரனை  உனக்கு பிடிச்சி இருக்கா…?” என்று காயத்ரியிடம் நேரிடையாகவே   கேட்டு விட்டான்.
அவன் கேட்டதுக்கு பதில் அளிக்காது…. “ உனக்கு பவித்ரனை தெரியுமா…? எப்படி…?எப்படி…?” காயத்ரியின் பேச்சில் இருந்த பதட்டத்தின் மூலம் தெரிந்து விட்டது உதயனுக்கு, காயத்ரிக்கு பவித்ரனை எவ்வளவு பிடித்து இருக்கிறது என்று.
“ அப்போ அந்த பையனை நீ முதல்லையே பார்த்து இருக்க…” என்று காயத்ரியை கேட்டதுக்கு,
“ஆமாம்.” என்ற அர்த்தம் புரியவது போல் தலையாட்டினாள். 
“ எங்கே…?” என்று உதயேந்திரன் கேள்விக்கு,
“ பவித்ரன் வேலை பார்க்கும்  ஆபிசுக்கும், அப்பா தான் லீகல் அட்வைசர். ஏதோ ஒரு பேப்பர் வாங்கிட்டு வான்னு என்னை அனுப்பி வெச்சார். அப்போ தான்  பவித்ரனை பார்த்தேன்.”  
காயத்ரி முகத்தில் அசடு வழிய  சொன்னாலுமே, பவித்ரன் என்ற பேர் சொல்லும் போது எல்லாம் அவள் முகத்தில் வந்து போன பாவனையில், இவள் ஆசை நிறைவேறுமா….?  என்ற சந்தேகம் உதயனுக்கு வந்து போனது.
உதயன் தன் எண்ணம் போக்கை மாற்றியவனாய்… “ பார்த்த உடன்  பேர் தெரிஞ்சுடுச்சோ…?” என்று உதயேந்திரன் நக்கலாக கேட்டான்.
“ அவர் கழுத்துல தொங்கி இருந்த  ஐடி கார்ட்ல பார்த்தேன்.” என்று காயத்ரி சொன்னதும்
“ பவித்ரன் அருகில் அவளோ கிட்ட பார்த்து இருக்கே…” என்று உதயேந்திரன்   கேட்டான்.
 அதில் ரோசம் வரப்பெற்றவளாய் “ நான் ஒன்னும் வேணும் என்று  அவர் மேல விழல.”
இப்போது உதயன்… “ ஓ விழ வேற செஞ்சியா….?”
“ உதய் நான் பேப்பர் வாங்கிட்டு என் பெப் எடுக்கும் போது பாலன்ஸ் போய் விழ பார்த்தேன்.” என்று  காயத்ரி சொல்லிக் கொண்டே போக..
“இரு இரு மீதிய  நானே சொல்றேன். நீ விழ பார்க்க பின்னாடி வந்த நம்ம ஹீரோ சார் உன் இடைய பிடிச்சி நிக்க வைக்க. நீ உன் கண்ணை பட பட என்று சிமிட்ட….அவன் உன்னையே உத்து உத்து பார்க்க.”
இப்போது பேச்சை இடை மறிப்பது காயத்ரி வசம் வந்தது. “ இரு இரு முதல்ல சொன்னது எல்லாம் சரி தான். ஆனா அவர் என்னை உத்து உத்து பார்த்தாருன்னு சொன்னிங்கலே அது தப்பு. என் முகத்தை கூட பாக்காது நிக்க வெச்சிட்டு , பார்த்து இது சொல்லும் போது கூட என் முகத்தை பார்க்கலே தெரியுமா….?” சொன்ன காயத்ரியின் பேச்சில் அவ்வளவு ஆதங்கம் காணப்பட்டது.
இன்னும் இதை வளர விட  கூடாது என்று முடிவோடு… “ அவன் உன்னை இல்ல வேறு யாரையும் பார்க்க மாட்டான்.” என்று சொன்ன உதயனிடம் எதுவும் கேட்காது இருப்பதை பார்த்து உதயேந்திரன்…
“என்ன எதுவும் கேட்கல…?” உதயனே காயத்ரியிடம் கேட்க..
“அது தான் பார்த்தேன்னே..கைய விடாம இருக்குறதை. பொண்ணு நல்லா தான் இருக்கா. பார்த்தா ரொம்ப வருஷம் லவ் போல  தெரியுது.” அவளுக்குள் பேசுவது போல் ஒன்றுக்கு ஒன்று ஒட்டாது பேசியவளிடம்…
“ அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா…?”
“பவித்ரனோட லவ்வர்.” என்று காயத்ரி சொன்னதும், இல்லை என்று தலையாட்டிய உதயனின்  பேச்சில் மகிழ்ந்து போய்…
“ அப்போ தங்கையா….?” அதற்க்கும் உதயனிடம் இருந்து இல்லை என்ற தலையாட்டலே..
“ உதய் புரிவது போல் சொல்.”
“ அந்த பொண்ணு தான் கம்பத்து பொண்ணு.”
“ என்னது கம்பத்து பொண்ணா….?” காயத்ரி புரியாது கேட்கவும் தான் வேணியை பற்றி தான் நினைக்கும் போது எல்லாம் தன் மனதில் நினைக்கும் கம்பத்து பொண்ணையே சொன்னதை புரிந்தவனாய்…
“ மிஸ்டர் சந்திரசேகர். அதாவது உங்க அப்பா உயிர் தோழர் சந்திரசேகரோட பொண்ணு கிருஷ்ணவேணி.” என்று சொல்லி முடித்ததும், காயத்ரியின் பார்வையில் இருந்த மாற்றத்தை பார்த்து…
“ நீ நினைப்பது போல் அவங்க லவ்வர் கிடையாது. வேணியோட அத்தை பையன். அவளுக்காக அவன் என்ன வேணா செய்வான். என்ன வேணாவிலும் அவளை கல்யாணம் செய்வதும்  அடக்கம்.”
“ புரியல…” காயத்ரிக்கு இன்னும் தெளிவாக தெரிய வேண்டி இருந்ததால் அதற்க்கு விளக்கம் கேட்டாள்.
“ இரண்டு பேருக்குள்ளும் நல்ல தோழமை. நல்ல புரிதல். ஆனா  இருவருக்குள்ளும் காதல் இல்லை. இருந்தாலும் அவன் அவளை தான்  கல்யாணம் செஞ்சிப்பான்.” இப்போது காயத்ரிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
  இருந்தாலும் “ஏன் …?” என்று கேட்டு வைத்தாள்.
“ ஏன்னா அவளை அவனை தவிர யாரும் நல்லா பார்த்துக்க மாட்டாங்க. அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு.”
இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டு இருக்கும் போது பவித்ரனுக்கு ஏதோ தோன… தன் எதிர் பக்கம் நிமிர்ந்து பார்த்தான்.

Advertisement