Advertisement

அத்தியாயம்…20 
ராஜசேகர் அங்கு வந்த போது வேணி… “ ஆமா… ஆமா… எங்க அம்மா போல்,  என்னை போல் எல்லாம் உங்க வீட்டு ஆளுங்க இருக்க முடியாது தான்.” என்று சொல்லி விட்டு பரமேஸ்வரர் முகத்தை பார்த்த வேணி…
மேலும்… “ எங்கல மாதிரி இருக்க, அவங்க கிட்ட  உண்மை வேண்டும். அது இல்லாதவங்க ஊரு என்ன சொல்லும்,  உலகம் என்ன சொல்லுமுன்னு பயந்து தான் சாகனும். நாங்க ஏன் சாகனும்.”  வேணி பேச்சில் அவ்வளவு தைரியம், தன் நம்பிக்கை காணப்பட்டது.
பொய், திருட்டு, பிழை செய்தவர்களுக்கு அந்த நம்பிக்கையான பேச்சு வராது. தைரியம் என்பது நான் என்ன செய்தேன். என் அப்பா விட்டு போனது அவர் தவறு. அதற்க்கு நானும் என் அம்மாவும் பொறுப்பாக முடியாது. அந்த  உறுதி இருந்ததால் தான் வேணி, புனிதா இத்தனை ஆண்டு தலை நிமிர்ந்து வாழ முடிந்தது.
அந்த நேர்மை இல்லாது குறுக்கு வழியில் சந்திரசேகரை திருமணம் செய்த ஜெய்சக்தி கணவர் போன பின்,  அவர் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கி யார் என்ன சொல்வரோ…?என்ற பயத்தில் முன் இருந்த நிமிர்வு போய் தலை குனிந்து நிற்க வேண்டிய சுழ்நிலைக்கு தள்ளப்பட்டாள். மாதா செய்தது மக்கட்களுக்கு, பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளைகள் அனுபவிப்பதின் பலன்  தான் க்ரீஷ் மருத்துவமனையில் இருப்பது. அதை தான் வேணி உண்மை என்ற ஒற்ற வார்த்தையில் சொல்லி முடித்தது.
வேணி இப்படி சொன்னதும் . இங்கு இருக்க கூடாது . இனி தன் மகன் முன் வேணி குடும்பத்திடம் பேச்சு வார்த்தையில்  ஈடுபடுவது தன் தலையிலேயே தானே மண் அள்ளி போட்டுக் கொள்வதற்க்கு சமம் என்று சிறிது நேரம் முன் கூட நினைத்துக் கொண்டு இருந்த பரமேஸ்வரர் நினைத்தது எல்லாம் பறந்து போக..
“ உண்மையா…? என்ன உண்மைம்மா…? அடுத்தவன் சொத்தை அபகரிக்க நினைப்பது தான் உண்மையா…?” வேணியின் பக்கம் எகிறிக் கொண்டு போனார் அந்த பெரிய மனிதர்.
 பரமேஸ்வரரை  தன் பக்கம் பிடித்து இழுத்த உதயேந்திரன்… “ அப்பா என்னப்பா சின்ன பெண்ணு கிட்ட போய் இப்படி பேசிட்டு.” என்று உதயேந்திரன்  தன் தந்தையை திட்டம் செய்துக் கொண்டு இருக்கும் போது…
ராஜசேகர்… “ அப்பா சொத்தை பொண்ணு அனுபவிப்பதில்  எங்கு உண்மையில்லாது போகுது.”
இது வரை மறைமுகமாய் தான் ராஜசேகர் வேணி குடும்பத்துக்கு உதவி செய்தது.  என்னுடைய க்ளையண்ட் எழுதியதை நான் நடை முறைபடுத்து கிறேன் என்று.
பரமேஸ்வரர்… “ நீ அவங்க பக்கம் தானே ….” என்று  கேட்கும் போது எல்லாம் ராஜசேகர் இதை தான் சொல்வார்.
ஆனால் முதல் முறை இப்போது தான் நேரடியாக  வேணிக்கு சாதகமாய் பேசுவது. மகன் பிடியில் இருந்த பரமேஸ்வரர்… “ என்னப்பா ஆதாரவு எல்லாம் பலமா இருக்கு. எங்க சொத்தை அந்த பொண்ணுக்கிட்ட கொடுக்குறதுக்கு உனக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்.” என்று சொன்னவர்.
பின் யோசித்தவராய்… “ உனக்கு பையன் கூட இல்லையே…” என்று பரமேஸ்வரர் பேச்சின் தன்மை புரியாது ராஜசேகர் அவரை பார்த்ததும்… 
“ அந்த பொண்ண உன் மருமகளா ஆக்கிக்க தான்.” என்று சொல்லி விட்டு பின்   ஏதோ பெரிய ஜோக்கை சொன்னது போல் அவரே சிரித்தும் வைத்தார்.
“ அது ஒன்னும் இல்ல. அவர போல் நீங்க செய்விங்கன்னு சொல்றார்.” தன் சொத்தை காட்டி தானே சந்திரசேகரை வளைத்து போட்டது. அதை சுட்டி காட்டி வேணி ராஜசேகரிடம் பேசியதும், ராஜசேகர் வேணியின் இந்த பேச்சுக்கே மகிழ்ந்து தான் போனார்.
இது வரை நேரிடையாக வேணி ராஜசேகரிடம் பேசியது கிடையாது. அனைத்து பேச்சு வார்த்தையும் பவித்ரன் மூலம் தான் நடக்கும்.  முதல் முறை தன் முகம் பார்த்து வேணி பேசியதும் அவள் என்ன சொல்கிறாள் என்று கூட கவனியாது.
“ஆமாம். ஆமாம்” என்று தலையாட்டி வைத்து  உதயேந்திரன் முறைப்புக்கும் ஆளானார்.
பின் தன் தந்தையை பிடித்த கை விடாது அழைத்து  சென்ற உதய் வேணியை பார்க்கும் போது எல்லாம் பார்க்கும் அந்த பார்வையை இப்போதும் பார்த்து விட்டு தான்  சென்றான்.
அதை பார்த்து பவித்ரன் ஏதோ சொல்ல வர…  கைய்யெடுத்து கும்பிட்ட வேணி… “ அவன் பார்வைக்கு பொருள் ஆராய இங்கு நாம் வரவில்லை. தாத்தாவை பார்க்கலாம்.”
இதற்க்குள் கிருஷ்ணவேணி யார்…?  வேணிக்கு நாரயணன் யார்….? என்று தெரிந்துக் கொண்ட அந்த டாக்டர், முன்பதிவு செய்த நேரம் கடந்த பின்னும் காத்திருந்து அனைத்து மருத்துவ பரிசோதனையும் நாரயணனுக்கு செய்து முடித்தவர்.
தன் முன் இருந்த மருத்துவ அறிக்கையை பார்த்த வாறே… “ இந்த வயதில் உடம்பில் எந்த வியாதியும் இல்லாது இருப்பது அபூர்வம். உங்க தாத்தாவுக்கு பி.பி. ஷூகர், கொலஸ்ட்ரால். இப்படி எந்த வியாதியும் இல்லை.நீங்க ஏன் என்னை பாக்க வந்திங்க…?”  என்று அந்த டாக்டர் கேட்டதற்க்கு.
“ தாத்தா அப்போ அப்போ தோள் பட்டை வலிக்குதுன்னு சொல்றார். அப்புறம் எப்போ பார்த்தாலும்  வாயு வாயுன்னு சீரக தண்ணியே குடிச்சிட்டு இருக்கார். அதான் ஏதாவது பிரச்சனை இருக்க போகுது.” என்று  தான் வந்ததிற்க்காக பவித்ரன் விளக்கம் கொடுத்தான்.
“உங்க தாத்தாவுக்கு ஒன்றும் இல்ல மிஸ்டர் பவித்ரன். ஆரோக்கியமாவே இருக்கார். தோள் பட்டை வலி, அது வயதில் நரம்பு தளர்ச்சி, எலும்பு தேய்மானத்தால் வருவது. 
அப்புறம் அந்த வாயு தொல்லை, வயதானல்  ஜீரணம் ஆவது கொஞ்சம் கடினம். அதனால் இரவில்  சீக்கிரம் ஜீரணம் ஆகும் உணவை கொடுங்க.” மாத்திரை, மருந்து என்று எதுவும் கொடுக்காது நாரயணனை அனுப்பி வைத்தார் அந்த மருத்துவர்.
நாரயணனுக்கு முழுபரிசோதனை நடந்து முடியும் வரை ராஜசேகர் அமைதியாக அவர்களுக்காக காத்திருந்தார். 
தாத்தாவின் கை பிடித்து நடந்துக் கொண்டு வந்த வேணி, பவித்ரனிடம் கண் ஜாடையில் ராஜசேகரை பார்க்கும் மாறு சொல்ல.
“நான் பார்த்து விட்டேன்  கண்டுக்காம வா” என்று சொன்ன பவித்ரன் ராஜசேகர் அங்கு இருப்பதை பார்த்து கண்டும் காணமல் அவரை கடக்கும் வேளயில்…
அவர்களை பின் தொடர்ந்த ராஜசேகர்… “  டாக்டர் என்னம்மா சொன்னார்.” இக்கேள்வி வேணியை பார்த்து தான் ராஜசேகர் கேட்டது.
ஆனால் பதில் பவித்ரனிடம் இருந்து… “ நல்லவங்களுக்கு ஒன்னும் வராதாம்.” என்று சொன்னதோடு நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்லை கூடவே…
“ எனக்கு என்னவோ நீங்க இங்கே இருந்து முழுபரிசோதனை செஞ்சிக்கிறது நல்லதுன்னு   தோனுது. எதற்க்கும் வீட்ல யாராவது துணைக்கு அழச்சிக்குங்க.” இலவல ஆலோசனையும் சேர்த்தே வழங்கி விட்டு வந்தான்.
காரில் வரும் போது நாரயணன்… “ பவி வயசுல பெரியவங்க கிட்ட அப்படி எல்லாம் பேச கூடாதுப்பா…அவர் என்ன தான் தப்பு செய்து இருந்தாலும்,  அவர் வயதுக்காகவது மரியாதை கொடு.” பெரியவராய் தன் பேரனை நாரயணன் அதட்டினார்.
அதற்க்கு பவித்ரன் எந்த பதிலும் சொல்லாது அமைதி காத்ததின்  மூலம் அவருக்கு எல்லாம் என்னால் மரியாதை தர முடியாது என்பதை மறைமுகமாய் உணர்த்தினான்.
“ எனக்கு மனசு ஆற மாட்டேங்குது டா… எங்கு இருந்தோ வந்த அந்த பொண்ணு அந்த பேச்சு பேசுது. என்ன தைரியம் அந்த பொண்ணுக்கு பெரிய  மனுஷங்கலே என்னை பார்த்தா தலை குனிந்து மரியாதையா தான் பேசிட்டு போவாங்க.
நேத்து பெய்த மழையில இன்னிக்கி முளைத்த காளான் போல வந்த அந்த பொண்ணு என்னை பார்த்து நேருக்கு நேரா  பேசுவதா…? அந்த பொண்ணை சும்மா விட கூடாது உதயா….” மீண்டும் மீண்டும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தார் பரமேஸ்வரர்.
ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாத உதயேந்திரன்… “ இப்போ என்ன செய்ய சொல்றிங்க அந்த பொண்ணை…?” தன்  தந்தையிடம் கத்தி விட்டான்.
“ ஏன் அதெல்லாம் நான் சொல்லனுமா…?  நீயும் தொழில் செய்தவன் தானேடா… நம் தொழிலில் பிரச்சனை கொடுக்குறவங்களை நாம் என்ன செய்வோம் என்று  உனக்கு தெரியாது.” என்று சொன்ன தந்தையின் பேச்சில் குழம்பிய உதயேந்திரன்…
“ புரியலே…?”  உதய் தன் தந்தை மீதே பார்வையை பதித்த வாறு  கேட்டான்.
“ என்…ன  பு…ரியல…?” தந்தையின் பேச்சில் இருந்த  தடுமாற்றதை பார்த்து உதயேந்திரன்…
“ நிஜமா புரியலேப்பா. இங்கு தொழிலை எதிர்ப்பவங்களை என்ன செவிங்க…?” 
 கிருஷ்ணவேணியை என்ன செய்ய வேண்டும்…? என்று  கேட்டால் தான் பதில் இல்லை. அவளை என்ன செய்ய சொல்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள இப்படி கேட்ட உதயனுக்கு பதிலாய் பரமேஸ்வரர்… 
“ தூக்கிடுவோம்…” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து வைத்தார்.
இப்போதும் உதயேந்திரனுக்கு கொஞ்சம் தெளிவு பட வேண்டி உள்ளதால்… “ தூக்கிடுவோம்னா…புரியல…?”  திரும்பவும் பரமேஸ்வரரின் பேச்சில் கொஞ்சம் தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
“ அங்கே என்ன செய்வீயோ அதே தான் இங்கேயும்.” உதயேந்திரன் ஜெர்மனியில் செய்த தொழிலை சுட்டிக் காட்டி பேசினார்.
“ செய்வோம். நாங்களும் செய்வோம். நாங்களும் என்ன நானும் செய்து இருக்கேன்.” என்று  பேசிய உதயேந்திரனை முழுமையாய் பேச விடாது…
“அது தான். அதை தான் இந்த பொண்ணை செய்ய சொல்றேன்.”
நாம் பேசுவது புரியாது திரும்ப திரும்ப தூக்குவதுன்னா என்ன…? என்று  மகன் கேட்கவும், என்னடா இவன் இப்படி கேட்குறான். அப்போ அங்கே எப்படி தொழிலை பார்த்தான். நேர்மையாவா…?  அது போல் எல்லாம் தொழிலுக்கு சரிப்பட்டு வராதே, அப்படி அவன் அங்கு செய்யாத பட்சத்தில்…
இவனிடம் எப்படி விளக்குவது. நான் விளக்கி அவன் தன்னை தவறாய் நினைத்து  விட்டால். ஏற்கனவே மகன் இப்போது தன் கைய் விட்டு போவது போல் ஒரு எண்ணம் அவருக்கு.
இந்தியா வந்த புதியதில். விளக்கமாய் சொல்வது என்றால் ஜெய்சக்தியின் வாழ்க்கை  பற்றி ஆராம்பத்தில் தெரிந்த போது அப்பெண்னை விரட்டுவதில் ஆராம்பத்தில் அவனுக்கு இருந்த வேகம், இப்போது எல்லாம் கொஞ்சம் குறைந்தது போல் ஒரு  எண்ணம் அவருக்கு.
இந்த வேகம் தங்கள் நடவடிக்கை பிடிக்காததாலா…? இல்லை வேறு ஒன்று பிடித்து போனதாலா…? உண்மை நிலவரம் தெரியாது தன் மகனிடம் வாய் விடவும், பரமேஸ்வரர்  கொஞ்சம் தயங்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.
நாம் ஏதாவது கேட்க போய். “ ஆமாம் எனக்கு பிடித்து இருக்கு.” என்று சொல்லி விட்டால் அவரால் என்ன செய்ய முடியும். இதை நினைத்து தான் அவர் தயங்கி பேசுவதும். வேணி முன் அடக்கி வாசிப்பதும்.
இல்லை என்றால் அவரின் செயல் எப்போதும் அதிரடியாக தான் இருக்கும். தனக்கு வயதாகி விட்டாலும்,  காசை விட்டெறிந்தால் காரியம் செய்ய இன்னும் ஆட்கள் அவர் வசம் இருக்கிறார்கள் தான்.
ஆனால் இப்போது தயங்குவது தன் மகனுக்காக மட்டுமே… என்றோ ஒரு நாள் வேணியின் அம்மாவை அப்படி பேசினேன் என்று உதய் கேள்வி பட்டதில் இருந்து  ஒரு வாரம் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்து விட்டான்.
தானே வலிய சென்று பேசிய போதும்… “ என்ன பேச்சு அது…?” அவன் அதை சொல்லும் போதே முகத்தில் தோன்றிய பிடித்தமின்மையில்…
இவர் தான் தழைந்து போய்… “ அன்னிக்கி அக்காவை பத்தி ஆள் மயக்கி அப்படி இப்படின்னு அவங்க ஆளுங்க சொன்னதால் தான்  நம் இடத்துக்கு வந்தே நம் பெண்ணை அப்படி பேசுவதா… என்ற கோபத்தில் அப்படி பேசி விட்டேன்.” அக்காவை பற்றி தவறாய் பேசினார்கள் என்று சொன்னால் தான் அவன் தன் பேச்சை நம்புவான்.
அப்படி தழைந்து சொல்லியும்… “ என்ன தான் இருந்தாலும்,  நீங்க அப்படி பட்ட வார்த்தையை விட்டு இருக்க கூடாது.” தன்னையே தான் கடிந்தான்.
அப்போதே  முடிவு செய்து விட்டார். இவன் எதிரில் கொஞ்சம் தழைந்து போய் தான் காரியத்தை சாதிக்க வேண்டும் என்று.
ஆனால் இன்று அந்த பெண்  பேசிய பேச்சுக்கு ஏதாவது செய்தால் தான் மனசு ஆறும். ஊரு விட்டு ஊரு வந்து, தங்கள் சொத்தையே அனுபவித்துக் கொண்டு தன்னையே அப்படி பேச என்ன தைரியம் இருக்க வேண்டும்.
தன் எதிர்ல்  நிக்க கூட அருகதை இல்லாதவள் அப்பெண். என்னையே எதிர்த்து நிற்பதா..?அந்த கோபத்தில் தான் வேணியை தூக்கி விடலாம் என்று பரமேஸ்வரர் மகனிடம் பேசியது.
ஆனால் உதயேந்திரன் அதை பற்றி ஒன்றும் தெரியாதது போல் பேசவும், பரமேஸ்வரர் தன் பேச்சில் இருந்து பின் வாங்க தான்   பார்த்தார்.
ஆனால் உதய் நாங்களும் செய்வோம் என்று சொன்னதோடு நானும் செய்து இருக்கேன் என்ற  அவன் பேச்சில் தைரியம் வரப்பெற்றவராய்…
“ இது மாதிரி வேலை செய்யவே நம்ம கிட்ட   ஆளுங்க இருக்காங்க உதயா. சொன்னா போதும் கச்சிதமா முடிச்சிடுவாங்க.” என்று பக்கா  வில்லனை போல் பேசும் தன் தந்தையின் பேச்சு உதய்க்கு அதிர்வு கொடுத்தாலும், அதை முகத்தில் காட்டதவனாய்…
“ முடிச்சிலாமுன்னா…? ஒரே அடியாவா…?” கழுத்தில் தன் விரலை கொண்டு சென்று அறுப்பது போல் பாவனை செய்து காட்டியவனின் பேச்சில்…
“ சீ சீ அந்த அளவுக்குளா அந்த பொண்ணு  வெர்த் இல்ல. ஒரு நையிட் வெச்சி அனுப்பிட சொன்னா நம்ம ஆளுங்க செஞ்சுடுவாங்க. கிராமத்து ஆளுங்க ஒரு இரவு வயது பொண்ணு வீட்ல இல்லாம இருந்தா சும்மா பயந்துட மாட்டாங்க. அப்புறம் உரிமை.  சொந்தம் என்று பேசிட்டு இந்த ஊருல இருப்பாங்க….” தன் சாகசங்களை சொல்லி தன் மகனிடம் அபிப்பிராயமும் கேட்டார்.
மகனோ ஏதோ யோசனையில்… “ இருக்க மாட்டாங்க.” என்று பதில் அளித்து தன் அறைக்கு சென்றவன் காயதிரிக்கு  பேசியில் அழைப்பு விடுத்தான்.
 

Advertisement