Advertisement

அத்தியாயம்….16 
“ உங்க அக்கா கிட்ட பணம் மட்டும் தான் இருக்கா…அழகு இல்லையா…?”
“அழகுக்காகவா…” ஒரு பெண்ணை அழகை  பார்த்து விரும்புவது உலகில் நடப்பது தான். ஏன் அவனே அழகான ஒரு பெண்ணை பார்த்தால், மனம்  தன்னால் அவளின் அளவை கணக்கிடும்.
ஆனால் கல்யாணம் எனும் போது,  இது மட்டும் போதுமா…? மனதில் எண்ணியதை கேட்டும் விட்டான்.
அதற்க்கு ஒரு ஏளன சிரிப்பை சிந்திய ராஜசேகர்… “ உங்க அக்காவும்  சந்திரசேகர் அழகை பார்த்து தான் விரும்பினாங்க. அதுவும் அவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருப்பது தெரிந்தே…இதுக்கு என்ன சொல்றிங்க…?”
என்ன சொல்வான். இதற்க்கு பதிலாய்  உதயேந்திரனிடம் இருந்து ஒரு வார்த்தை வரவில்லை. தலை குனிந்து தான் போனான்.
சந்திராசேகர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பழகி பின் தெரிந்து  அவரை விரும்பி விட்டேன் என்று சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால் அவனை பொறுத்தவரை அதுவுமே பிடித்த மின்மை தான். 
பார்டனரிடம் எப்போதும் ஒரு நம்பிக்கை, உண்மை  இருக்க வேண்டும். அது இருந்தால் மட்டுமே தொழிலாய் ஆகட்டும், உறவாய் ஆகட்டும் நிலைத்து நிற்க்கும்.
அப்படி இருக்கும் போது அழகை மட்டுமே அடித்தளமாய் கொண்டு ஆராம்பிக்கும் திருமண வாழ்க்கை போக போக கசந்து விடாதா…? கசந்து  தான் விட்டதா…?அதன் பிரதிபலிப்பு தான் சொத்தை தன் மகளுக்கு வாங்கி குவித்ததோ…
ஆனால் சொத்தை அப்பெண் பெயருக்கு வாங்கியது எந்த வகையில் பார்த்தாலும், அவனுக்கு நியாயமாய் தோன்றவில்லை.
வேணியின்  அம்மாவை திருமணம் செய்த பின், அவர்கள் அழகு இல்லை என்று  தன் அக்காவை திருமணம் செய்து, பின் அதற்க்கும் உண்மை இல்லாது என்ன வாழ்க்கை வாழ்ந்து  சென்று இருக்கிறார்.
இப்படியாய் அவன் எண்ண  ஓட்டம் போகும் போது… “ சந்துரு அழகை பத்தி நான் உனக்கு புதுசா  சொல்ல தேவையில்லை. அவன் அழகு பத்தி அவன் மனதில் எப்போதும் ஒரு  பெருமை இருக்கும் . பள்ளியில் ஆராம்பித்தது இவன் பெண்களை பார்க்காது பெண்கள் இவனை பார்த்தது.”
ராஜசேகர்  பேச்சு மட்டும் தான் உதயேந்திரனிடம், அவர் தன் நண்பனோடு வாழ்ந்த அந்த வாழ்க்கைக்குள்ளேயே  சென்று விட்டது போல் அதனுள்ளேயே மூழ்கி போய் விட்டார்.
“ சந்துரு அந்த பொண்ணு உன்னையே பார்க்குடா….” பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் போது ஒரு நாள்   பேருந்து நிலையத்தில் நிற்க்கும் போது, ராஜசேகர் தன் நண்பனிடம் சொல்லும் போது…
“யார்…?” என்பது போல் திரும்பி பார்த்தவன், பின் தன் பார்வையை பேருந்து வருகிறதா என்று பேருந்து வரும் வழியில் அவன் பார்வை சென்றது.
இந்த கதை பள்ளியோடு மட்டும் அல்லாது கல்லூரியிலும் தொடர்ந்தது. இதை பார்க்க ராஜசேகருக்கு   கொஞ்சம் பொறாமையாக கூட இருக்கும்.
“ உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா…” அங்கலாய்த்து சொல்லும் போது எல்லாம், அவனிடம் இருந்து  ஒரு சிரிப்பு தான் வெளிப்படும்.
அப்போ அரவிந்த்சாமி படம் ரோஜா வந்த புதுசு.  அந்த படம் பார்க்க நானும் அவனும் போய் இருந்தோம். ஒரு சிலர் சந்துருவை பார்த்துட்டு..
“ சார் நீங்கலா…?உங்க  படம் மக்கள் மத்தியில பாக்க வந்துட்டிங்கலா…?” தன் கையில் இருந்த ஏதோ ஒரு பேப்பரை நீட்டி ஆட்டோகிராப் வாங்க நீட்டிட்டாருன்னா பாரு.
அப்புறம் அங்கு இருப்பவங்கல்ல ஒரு  சிலர்.” இல்ல இவர் அரவிந்த்சாமி இல்லேன்னு சொல்ல. ஒரு சிலர் இல்ல அவரு தான்னு  சொல்ல. பின் அந்த தியேட்டர் மேனஜர் வந்து எங்கல அழச்சிட்டு போக வேண்டியதா ஆயிடுச்சி.”
அது வரை தான் அழகு என்பதில் பெருமை  மட்டுமே பட்டுக் கொண்டு இருந்தவன். அதன் பின் தான் அவன் மனதில் தான் அழகு என்று  கர்வம் ஏற்பட்டது.
அதன் பிரதிப்பலிப்பாய் அன்று அப்படத்தை பற்றி  இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது… “ படம் நல்லா இருக்கு. அதுவும் புது இசையமைப்பாளரின்   இசை சும்மா அள்ளுது. எல்லா சரி ஆனா அரவிந்தசாமிக்கு ஜோடியா வேறு யாரையாவது போட்டு இருக்கலாம்.” என்று சந்திரசேகர் சொன்னதும்,
“ஏன்டா மதுபாலா நல்லா தானே  நடிச்சாங்க.”
“ஆ நல்லா நடிச்சாங்க. இன்னும் சொல்லப்போனா ஹீரோவோட அந்த பொண்ணு நல்லா நடிச்சது.”
“ஆ நீயே சொல்ற அந்த பொண்ணு நல்லா நடிச்சதுன்னு. அப்புறம் ஏன் அப்படி சொன்ன…?” என்று  ராஜசேகர் கேட்டதுக்கு,
“ அரவிந்த்சாமி பக்கத்துல  நாயகி கொஞ்சம் மங்கி தான் தெரியுறாங்க.” என்று சந்திரசேகர் சொன்னதும்,
“ஏய் அவர் பக்கத்துல எந்த நடிகை நடிச்சாலும், அப்படி தான் தெரிவாங்க.” என்று ராஜசேகர் சொல்ல.
“ம் பார்ட்னர் நம்ம ஈக்குவலா இருந்தா தான் பாக்க நல்லா இருக்கும். இல்லேனா  ரோட்ல நம்மல முன்ன போக விட்டு பின்னே கேலி பேசுவானுங்க. இல்லேன்னா நம்மல பரிதாபமான  ஒரு பார்வை பார்ப்பானுங்க.”
அப்போது  சந்திரசேகர்  மற்றவர்களை பத்தி சொன்னது போல எனக்கு தோன்றவில்லை. அவனை பற்றி சொன்னது போல் தான் ராஜசேகருக்கு தோன்றியது.
“நீங்க  மாமாவை அந்த மாய உலகத்துல இருந்து வெளியே  அழச்சிட்டு வரனுமுன்னு நினைக்கலையா…? ஒரு நண்பனாய்  அவருக்கு நீங்க அப்போவே புரிய வெச்சி இருக்கலாமே…”
உதயேந்திரனின் இந்த பேச்சில்…”ம்..ம்.. என்ன சொன்னிங்க.” எதிரில் இருப்பவனின்  பேச்சு புரியாது தான் சந்திரசேகருடன் வாழ்ந்த அந்த வாழ்க்கைக்குள்ளயே போய் விட்டார்.
பின் திரும்பவும் உதயேந்திரன் சொன்னதும்… “ம் நானும் அவன் பேச்சை கேட்டுட்டு இதை பத்தி இவன்  கிட்ட பேசனும் என்று நினைக்கும் போது தான், ஊருல இருந்து அவன் அம்மா சீரியஸா இருக்காங்கன்னு போன் வந்தது.” இது வரை ஏதோ கதை சொல்வது போல் சொல்லிக் கொண்டு இருந்த ராஜசேகர்.
பின்  “ நாம நினைப்பதற்க்கு  எதிர் பதமாய் தான் நடக்குமுன்னு  சொல்வாங்க. அவன் விசயத்தில் அது தான் நடந்தது. புனிதா  அவன் வீட்லேயே வளர்ந்த பொண்ணு. அது வரை சந்துருவுக்கு புனிதாவை கட்டுறதா அவன் வீட்ல  ஒரு பேச்சு கூட வந்தது இல்ல.
சந்துரு அம்மாவுக்கு கற்ப பையில் கேன்சர். முத்துன ஸ்டேஜ் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்கன்னு  சொன்னதும், திடிர்ன்னு அந்த அவன் அம்மா இரண்டு பசங்க கல்யாணத்தை பாக்கனும். இரண்டு நாள்ள ஒரு முகூர்த்தம் வருது முடிச்சிடுங்கன்னு தன் கணவர் கிட்ட சொன்னதும்,
நாரயணன் மாமா எங்கே பொண்ணு மாப்பிள்ளையே தேடுறதுன்னு கேட்டதுக்கு, வீட்லேயே வெண்ணைய வெச்சிட்டு நெய்க்கு ஏன் அலையனுமுன்னு சொன்னதும் நாரயணன் மாமாவுக்கே என்ன தோனுச்சே…
நம்ம பொண்ணுக்கு வேணா  என் தங்கச்சி மகளை முடிச்சிடலாம்.” என்று தான் நாரயணன் மாமா சொன்னார்.
ஆனா விடா பிடியா முடிச்சி தான் ஆகனுமுன்னு அவங்க நினச்சா மாதிரி கல்யாணம் முடிச்சி வெச்சிட்டு தான் அவங்க போய் சேர்ந்தாங்க.
போனவங்க நிம்மதியா போயிட்டாங்க. ஆனா அந்த அம்மா செஞ்ச விசயத்துல ரொம்ப பாதிக்கப்பட்டது சந்துரு தான்.
கொஞ்சம் கூட பிடித்தம் இல்லாத போது ,அந்த கல்யாணத்துக்கு எப்படி ஒத்துக்குனான்னு இன்ன வரை எனக்கே தெரியாது.
அவன் கல்யாணம், அவங்க அம்மா காரியம் எல்லாம் முடிச்சிட்டு சென்னை வந்தவன் ஊருக்கு ஒரு மாசம் ஆகி கூட போகல. 
ஒரு மாசம் கழிச்சி அவங்க அப்பா வற்புறுத்தி கூப்பிட்டு போனவன் இரண்டு நாள்ள  வந்தவன், என்னல முடியலேடா… என்னல முடியலே என்ன தான் முயற்ச்சி செய்தாலும் முடியல.”
அவன் பேச்சு புரியாது… “என்னடா முடியல …?” என்று நான் கேட்டதுக்கு,
“ புனிதா கூட வாழ  எவ்வளவு தான் முயன்றாலும் முடியலடா…கண்ண  மூடி முயற்சித்தாலும், பல் குத்தி என் பரிதாப நிலைய எனக்கு உணர்த்தும் போது நான் என்னடா செய்ய முடியும்.” அன்னிக்கி  தன் மனைவி பத்தி புலம்பினவன் தான்.
பின் அவன் அதை பற்றி எதுவும் பேசாது, மாதம்  ஒரு முறை ஊருக்கு போனால் இரண்டு நாளில் திரும்பவும் வந்துடுவான். கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தானோ அப்படி தான் இருந்தான்.  
அவன் தங்கை சுகுனா உண்டாகி இருக்கான் செய்தி வந்ததும் ஊருக்கு போனான்.  எப்போவும் ஊருக்கு போனா இரண்டு நாள் தங்கி வருபவன் அந்த தடவை அன்னிக்கே வந்துட்டான்.”
“என்னடான்னு….?” கேட்டதுக்கு,
“ அவன் அண்ணன் காரன் கேக்குறான். உன்னை நான் மாமா ஆக்கிட்டேன். என்னை நீ எப்போ மாமா ஆக்க போறேன்னு. இருக்க நிலையில அது ஒன்னு தான் குறச்சல்.”  அவன் பேச்சில் நான் கொஞ்சம் விக்கித்து தான் நின்று விட்டேன்.
ஒரு நண்பனாய் இருந்தாலும், கணவன், மனைவி அந்தரங்கத்தை  பற்றி எப்படி பேசுவேன். தயங்கி பேசாது இருந்தாலும், அவன் மனைவியோடு வாழுறானா…? எனக்கு சந்தேகமாவே இருந்தது.
அதுக்கு நடுவுல  என் அப்பா அம்மா எனக்கு ஒரு பொண்ணை பார்த்து கட்டி வெச்சாங்க. பொண்ணு சொந்தம் தான். நான் கல்யாணம் முடிச்ச உடன் சென்னையில வீடு பார்த்துட்டு என் மனைவிய என் கூட கூட்டி கிட்டேன்.
இதை பார்த்துட்டு நாரயணன் மாமா ராஜா உன் கூட்டாளி தானே…அவன் எவ்வளவு பொறுப்பா கல்யாணம் ஆனவுடன் மனைவி தன் கூட தான் இருக்கனும் என்று  வீடு பார்த்துட்டு தன் கூட வெச்சிக்கிட்டான். நீ ஏன்டா இப்படி இருக்கே…?” தன் மகனை அவர் கடிந்துக் கொண்டார்.
அதற்க்கு சந்திரசேகர்…. “ அது தான் நானும் கேக்குறேன். அவன் அப்பா உங்களுக்கு பிரண்ட் தானே. அவர்  எப்படி பொண்ணை பார்த்து அவனுக்கு கட்டி வெச்சி இருக்கார்.”
இந்த பேச்சி எல்லாம்  என் எதிரில் தான் நடந்தது. எனக்கு ஒரு மாதிரி இருந்தது. இந்த பேச்சு கேட்டு நான் போகலாமா,  இருக்கலாமான்னு யோசிச்சப்ப. சந்துரு என் கை புடிச்சிட்டு ..
“ சாரி சந்துரு நண்பன் மனைவி பத்தி இப்படி பேச கூடாது. என் அப்பா எனக்கு செஞ்ச  அநியாயத்துக்கு அவர வருத்த இப்படி பேசிட்டேன்.”
 இப்படி சொல்பவனிடம் நான் எப்படி கேட்பேன்.   “உன் மனைவியுடன் நீ வாழ்க்கை நடத்துறியான்னு….?” தயங்கிட்டு இருக்கும் போது, அவன் தங்கைக்கு   ஆண் குழந்தை பிறந்து இருக்குன்னு ஊருல இருந்து செய்தி வர, அவன் போனான்.
அந்த சமயம் என் மனைவியும்  உண்டானா. இதை எப்படி சந்துருவிடம் சொல்வேன்  யோசிச்சிட்டு இருக்கும் போது. ஊருல இருந்து வந்தவன்  இரண்டு ஸ்வீட் பாக்ஸை நீட்டி..
“   வீட்ல  கொடுக்க சொன்னாங்க.”
“ என்னடா இரண்டு பாக்ஸ். என்ன இரட்டை புள்ளயா பிறந்து இருக்குன்னு…?”
என் சந்தோஷத்தை பகிர நேரம் கடத்த ஏதோ ஒன்னு கேட்டு வெச்சா… “ ஒரு பாக்ஸ் நான் மாமா ஆனதுக்கு, இன்னொரு பாக்ஸ் நான் அப்பாவா ஆனதுக்குன்னு சும்மா ஏதோ செய்தி வாசிப்பது போல சொல்றான்.”
எனக்கு ஒன்னும் புரியல.. “ என்னடா சொல்ற…?”
“ம் நான் அப்பா ஆக போறேன்.”
“அதை ஏன்டா இப்படி சொல்ற…?”
“பின்ன எப்படி சொல்ல சொல்ற…?”  அப்போ பார்த்து இருக்கனுமே அவன் முகத்தை.    தான் அப்பாவாய் ஆக போகிறோம் என்று ஒரு துளி மகிழ்ச்சி கூட இல்ல.
“ என்னடா அது உன் குழந்தைடா…” நான் ஆதாங்கத்துடன் கேட்டதுக்கு,
“ என்  குழந்தை தான். நான் இல்லேன்னு சொல்லலையே. ஆனா அது அவ குழந்தையும் …” சந்துரு பேச்சை முடிக்காது இழுத்து நிறுத்தினான்.
“ என்ன சந்துரு என்ன சொல்ல வர்ற…?”
அது வரை அவன் முகத்தில் ஒரு பிடித்த மின்மை மட்டுமே பார்த்த  நான். அப்படி கேட்டதும் என் கை பிடிச்சிட்டு… “ குழந்தை அவ மாதிரி பிறந்துடுமோ எனக்கு  பயமா இருக்குடா…”
 சந்துரு இப்படி சொன்னதும் நான் என்ன சொல்றதுன்னே தெரியல. அந்த நேரத்துல அழகு முக்கியம் இல்ல. குணம் தான் முக்கியம் என்று பேசினேன் வை.  அப்புறம் என் கிட்ட கூட சரியா பேசாம இருந்துடுவான்.
ஏன்னா அவன் கல்யாணம் முடிஞ்சதுல இருந்து அவன் வீட்ல யாரோடும் அவன் சரியா பேசல. புனிதா உண்டாகி இருக்கான்னு சொன்னானே அது தான் அவன் கடைசியா  ஊருக்கு போனது.
அதோடு  புனிதா அண்ணன் “ மாப்பிள்ளை எனக்கு மருமகள் பிறந்து இருக்கா.”  சொன்னதும் தான் சந்துரு ஊருக்கு போனான்.
இது வரை ராஜசேகர் சொன்னதை எந்த வித உணர்வும் காட்டாது கேட்டுக் கொண்டு  இருந்த உதயேந்திரன் புனிதாவின் அண்ணன் சொன்ன எனக்கு மருமகள் பிறந்து இருக்கா என்ற அந்த வார்த்தையில் முகம் சுழித்தவனாய்…
“ அது தான் சொந்தத்துல விருப்பம் இல்லாது கல்யாணம் செஞ்சி இப்படி ஆயிடுச்சிலே, அதுக்கு அப்புறமும் ஏன் இவங்க சொந்தத்தை கட்டிட்டு அழறாங்க.” 
அப்போது உதயன் பேச்சில் இருந்த சிடு  சிடுப்பை கவனிக்காது ராஜசேகர் தொடர்ந்து பேசினார். 
“ எப்போவும் ஊருக்கு போனா ஓர் நாள். இல்ல இரண்டு நாள்ளே வந்துடுறவன். அந்த தடவை ஒரு வாரம் கழிச்சி இங்கு ஆபிஸ்ல போன் செய்து கூப்பிட்ட பின் தான் வந்தான்.
அன்னிக்கி அவன்  முகத்தை பார்க்கனுமே  மிஸ்டர் உதயேந்திரன் கல்யாணம் ஆனதில் இருந்து ஏதோ வாழறோம் என்பது போல் இருந்தவனின் முகத்தில் அன்னிக்கி அப்படி ஒரு புன்னகை.
என் கைய் பிடிச்சிட்டு… “  என் பொண்ணு அப்படியே ஏஞ்சல் மாதிரி இருக்காடா.”   அப்படி ஒரு மகிழ்ச்சி அவன் முகத்தில் பார்த்தேன்.
நான் கூட …” உன்னை மாதிரியாடா…?” என்று கேட்டதுக்கு.
நான் தான் அழகு என்று எப்போதும் மார்த்தட்டிக் கொள்ளும் அவன் அன்று… “ நான் என்னடா  அழகு. அழகுன்னா அது என் பொண்ணு தான்டா.” 
அவன் பொண்ணை  பார்த்து அப்படி ஒரு பெருமை பட்டுக்கிட்டான் அவன். நான் கூட சரி புனிதாவை மனைவியா  பிடிக்கலேன்னாலும், தன் குழந்தையின் அம்மாவா பிடிச்சி போயிடுமுன்னு நினச்சிட்டு இருந்தேன்.”
சந்திரசேகரின் வாழ்க்கையில்  சந்துருவின் மனநிலை, தனக்கு தெரிந்த தான் உணர்ந்த   சந்துருவின் மனநிலையை சொல்லிக் கொண்டு வந்த ராஜசேகர் கடைசியாக அவன் தேவதையின் அப்பாவாக உருவாறி பெருமை பட்டதை சொன்னவர்.
இப்போது நேரிடையா உதயேந்திரன் முகத்தை பார்த்து …. “ மேடம் ஜெய்சக்தி அவன் வாழ்வில் குறுக்கிடாது இருந்து இருந்தால், நான் நினைத்தது போல் தன் குழந்தையின் அம்மாவாக புனிதாவை ஏத்து இருக்கலாம் மிஸ்டர் உதயேந்திரன்.” என்று  சொன்னவர். 
உன் மாமாவை பற்றி கேட்டியே…இது தான் என்பது போல் அவர் பேச்சு இருந்தது.
“ஓ…” என்று ஒரே வார்த்தையில் ராஜசேகருக்கு  பதிலாய் அளித்த உதயேந்திரன், ஒரு நிமிடம் எதுவும் அவருக்கு பதில்  பேசாது அமைதி காத்தான்.
ராஜசேகர் கூட… ‘என்ன இது நாம இவ்வளவு பேசினோம். இவன் ஓ என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டானே…’ என்று நினைத்து முடிக்கும் வேளயில்…
“  நீங்க இப்போ சொன்ன கதையில  உங்கல மாமாவோட நண்பனாய் தான் சொன்னிங்கலே தவிர. எங்க க்ரூப்பில் நீங்க எப்படி வந்திங்க. எப்போ வந்திங்க. அதை பத்தி சொல்லவே இல்லையே  மிஸ்டர் ராஜசேகர்.” என்று கேட்ட உதயேந்திரன் .
“ இப்போ சொல்லுங்க. ரொம்ப வருசமா எங்க   க்ரூப்பின் லாயரா இருந்தவரை தூக்கிட்டு, அந்த  இடத்துக்கு நீங்க எப்போ …?யாரால்…? வந்திங்க…? அதுக்கு விலையா எது கொடுத்திங்க…?”
 
 

Advertisement