Advertisement

அத்தியாயம்….13 
அந்த விழாவுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல்,  அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார் புனிதா. வேணியும் தாயின் அருகில்  நின்றுக் கொண்டு இருந்தாளே தவிர, வாய் திறந்து தன் அன்னையுடன் பேசவில்லை.
நேரிடையாக பேசவில்லையே தவிர மனதில்  ‘தப்பு செஞ்சிட்டேமோ…வர மாட்டேன்னு சொன்னவங்கல வலுக்கட்டாயமாய் சென்னைக்கு அழைத்து வந்தது தவறோ…அதுவும் இந்த வீட்டுக்கு அழைத்து வந்து பெரிய தவறு செய்து விட்டேனோ…?’ 
மனதில் இந்த எண்ணங்கள் ஓட,  இதற்க்கும் மேல் பவியுடன் பேசாது தன்னால் முடியாது என்பது போல்,  தன் கண்ணை சுழல விட்டாள். அதற்க்கு அவசியமே இல்லாதது போல் அவள் அருகில் வந்து நின்றவன்.
“ என்ன வேணி ஏதாவது பிரச்சனையா…?” அவள் முகம் வாட்டத்தை பார்த்து கேட்டான்.
அதற்க்கு பதில் அளிக்காது வேணி  தன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த அன்னையின் பக்கம் பார்வை திரும்பி,  மீண்டும் பவித்ரனை பார்த்தாள்.
அந்த பார்வையிலேயே அவளின் மனநிலையை புரிந்துக் கொண்ட பவித்ரன்… “ நம்ம உடம்புல ஒரு கட்டி வந்தா அதுவா பழுத்து ஒடஞ்சி உள்ள இருக்க சீழ் வெளியே  வந்துடனும். அதுவா உடையிலேன்னா நாமலே உடச்சி சீழ எடுத்துடனும். இல்லேன்னா அந்த சீழ் உள்ள இருந்து குத்திட்டே இருக்கும்.” என்று சொன்னவன் வேணியின் குழப்பமான முகத்தை பார்த்து..
“ கட்டிக்குள்ள இருக்க சீழ் மாதிரி தான் வேணி மனசுக்குள்ள இருக்கும் ரணமும். அத்த மனசுல இருக்கும் அந்த ரணம் உன் அப்பா அவங்க விட்டு  போனதால மட்டும் இல்ல.
அத இன்னும் நோண்டி ரணப்படுத்துவது போல. இதோ இதே சென்னையில் தான். சென்னையில் என்ன…? பக்கத்து தெருவில் இருக்கும்   ஒரு பெரிய மனிதர் ஒரு வார்த்தையை சொன்னார். அந்த வார்த்தைக்கு ஏதாவது பதில் அடி கொடுத்தா தான் உங்க அம்மா மனசு சொஞ்சமாவது ஆறும் வேணி.
என்ன தான் அத்த சாதரணமா பேசிட்டு இருந்தாலும், அவங்க மனதளவுல  ரொம்ப அடி வாங்கி இருக்காங்க அந்த வார்த்தையால். அந்த வார்த்தை  என்ன வார்த்தைன்னு என் அப்பா அம்மா பேசிட்டு இருக்கும் போது தான் எனக்கு தெரிஞ்சது. அப்போ எனக்கு பதினைந்து  வயது தான்.அப்போவே அந்த பெரிய மனுஷனை கொன்னு போட்டுடனும் என்பது போல் அவ்வளவு ஆத்திரம் வந்தது.
கொஞ்சம் யோசிச்சேன் நாம வளந்து பெரியவன் ஆன பின் நாம அவரை  ஏதாவது செய்யனும் என்று. வளர வளர தான் அவங்க நிலைக்கு நாம் கிட்ட கூட போக முடியாது என்ற நிதர்சனம் மண்டையில் உரச்சது.
என்ன செய்யலாம்.  என்ன செய்யலாம். இப்படியே விட்டுட வேண்டியது தானா…இப்படி யோசிச்சிட்டு இருக்கும் போது தான் இதோ லட்டு போல  இந்த சான்ஸ் வந்தது. அதை நான் பயன் படுத்திக்க நினைக்கிறேன் இது தப்பா…? 
உள்ள இருக்கும் சீழ் வெளியே வரனுன்னா கொஞ்சம் வலி பொறுத்துக்க தான் வேண்டும். இப்போ இருக்கும் வலிய  பார்த்தா நிரந்தரமான தீர்வு நமக்கு கிடைக்காது வேணி.”
 இவை அனைத்தையும் புனிதா கொஞ்சம் தள்ளி நிற்க,  பவித்ரன் வேணியுடன் பேசியது. புனிதா கொஞ்சம் கவனித்து கேட்டு இருந்தால்,  அவர் காதிலும் விழுந்து இருக்கும். ஆனால் அவர் தான் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லையே…
புனிதாவை நிஜ உலக்குக்கு அழைத்து வர பரமேஸ்வரரின்….  “ யார் பங்களாவில் யார் வந்து பால் காச்சிவது…?” அந்த குரலை  கேட்டதும் ஏதோ நினைவின் தாக்கத்தில் இருந்த புனிதாவின் உடல் தூக்கி வாரி போட்டது.
அந்த உடல் அதிர்வோடு பக்கத்தில்,  நின்றுக் கொண்டு இருந்த தன் மகளின் கை பற்றி     பார்த்த அந்த பார்வையில் வேணி துடி துடித்து தான் போய் விட்டாள்.
சிறிது நேரம்  முன் பவித்ரன் சொன்ன  புரையேறிய சீழ் பற்றிய பேச்சி தான் அவளின் நினைவில் வந்து போனது. அவன் சொன்னது சரி தான். அந்த பெரிய  மனிதர் சொன்ன அந்த வார்த்தையின் வீரியம் என்ன என்று அவருக்கு காட்டினால் தான் அம்மாவின் இந்த துடிப்பு அடங்கும்.
என் அம்மாவுக்கு காட்டிய இந்த துடிப்பை அவர்கள் குடும்பத்துக்கு காட்டாது விட மாட்டேன்.ஏன்ன தான்  சென்னைக்கு நான் வர காரணங்களாய் ஆயிரம் பவித்ரன் அடுக்கினாலும், வேணியின் மனதின் ஒரு ஓரம் கொஞ்சம் தயக்கம் இருக்க தான் செய்தது.
அவர்கள்  பணத்தை கொண்டு அவர்களை  பழி வாங்குவது சரியா…? என்று. ஆனால் இப்போது இந்த நொடி அந்த தயக்கம் எல்லாம் பறந்து ஓடியது.
நியாயமானவர்களோடு மோதுவதற்க்கு தான்,  நியாயம் அநியாயம் எல்லாம் பார்க்க வேண்டும். இப்படி பட்டவர்களோடு மோதும் போது,  நாமும் கொஞ்சம் நியாயத்தில் இருந்து தள்ளி இருந்தால் தவறு இல்லை.
மனதில் உறுதி தோன்ற  கைய் பற்றிய தன் அன்னையின் மீது கை அழுத்தம் கொடுத்து… ‘நான் இருக்கேன்.’ என்பது போல் தன் அன்னையின் முகத்தை பார்த்தாள்.
அதற்க்குள் அங்கு அங்கு தன் வேலைகளை செய்துக் கொண்டு இருந்த  நாரயணன், சுகுனா, சிவனேசன் அனைவரும் புனிதாவின் பக்கத்தில் நின்றுக் கொண்டனர்.
எங்கு  எந்த வார்த்தை பேசினால்  பலன் கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்த பரமேஸ்வரர் நேராக  வந்து நின்ற இடம் புனிதாவின் எதிரில் தான்.
“ அடுத்த வீட்டு சொத்துக்கு அலையுறியா…? அசிங்கமா இல்ல. இதுக்கு…” அதற்க்கு மேல் என்ன பேசி இருப்பாரோ..
“ அடுத்த வீட்டு சொத்துக்கு அலைவதை பத்தி நீங்க பேச கூடாது மிஸ்டர் பரமேஸ்வரர்.  அத பேச எல்லாம் ஒரு தகுதி வேண்டும்.” 
பெரிய மனிதர் பெரிய மனிதராய் நடந்துக் கொள்ளாது  சின்ன தனமாய் நடந்துக் கொண்டால், இது போல் சிறு பெண்ணிடம் எல்லாம் இப்படி தான் பேச்சு வாங்க நேரிடும்.  அந்த நிலையில் தான் நம் பரமேஸ்வரரும் இருந்தார்.
“ நல்லா வளத்து வெச்சி இருக்கே பொண்ண…?” வேணி பேசியதற்க்கு, திரும்பவும் பரமேஸ்வரர் பேசியது  என்னவோ திரும்பவும் புனிதாவிடமே.
 “நீங்க வளர்த்ததோடு எங்க அம்மா என்னை நல்ல விதமா தான் வளர்த்து இருக்காங்க.”  அதற்க்கும் பட்டென்று பதில் வேணியிடம் இருந்து வந்தது.
“ வளர்த்து வெச்சி இருக்காளே…தோ  பெரிய மனுஷன் என்று கூட பாராது இப்படி  எதிர்த்து பேச.” என்று சொன்னவர்.
தொடர்ந்து   பவித்ரனை காட்டி… “ இவன் கூட  ஒட்டல்ல ஒன்னா இருந்தது. சீ..சீ  என்ன குடும்பமோ…?”
இந்த வார்த்தையில் உதயேனே ஒரு நிமிடம் ஆடி போய் விட்டான். அவனும் வேணியை பார்த்து இதே வார்த்தையை வேறு மாதிரி கேட்டு இருக்கிறான் தான்.
ஆனால் இப்போது பெரியவர் அனைவரின் முன்நிலையிலும் இப்படி கேட்டது,  அந்த பெண்ணுக்கு என்னமா வலித்து இருக்கும் நினைத்து வேணியை பார்த்தான்.
அய்யோ பாவம் என்பது போல் அவன் எதிர் பார்த்த வருத்தம் வேணியின் முகத்தில் துளியும் இல்லாது.  “ நான் ஒன்னும் அடுத்த வீட்டு புருஷன் கூட இல்லையே. இதோ சென்னைக்கு வரும் முன் நம்ம மாதிரி தான் பிறரும் இருக்கும் என்பது போல் பார்க்கும் ஜென்ம்ம் நிறைய இருக்கும். அதனால கல்யாணம் கட்டிட்டே சென்னைக்கு போங்கன்னு சொன்னாங்க.
நான் தான்   முடிக்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு. அதை முடிச்சிட்டு இந்த ஊரே பார்க்க சந்திரசேகர் மகளா கல்யாணம் செய்துக்குறேன்னு சொன்னேன்.”
அவள் சொன்னது சரியே… இவர்கள் சென்னை வரும் முன் பவித்ரன்,  வேணியின் தாத்தா நாரயணன்… “ என்ன செய்யனுமோ செய்யுங்க. ஆனா ஊருக்கு அவள கூட்டிட்டு  போவதற்க்கு முன், அவ கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு போ.” தன் பேரனை பார்த்து சொன்னார்.
அதற்க்கு பவித்ரன்…” தாத்தா என் பேர்ல நம்பிக்கை இல்லையா…?” என்றூ கேட்ட்தற்க்கு,
“ படவா என்ன பேச்சு பேசுற…? உன் மேல் நம்பிக்கை இல்லாம இல்லடா…நீங்க இரண்டு பேரும் நான் வளர்த்த  குழந்தைங்க. நான் ஊரு ஏதாவது பேசுமேன்னு தான் சொன்னேன். பன்னை மரத்துல அடியில இருந்து பால் குடிச்சாலும் கள்ளா  தான் நினச்சிப்பாங்க.” 
“ தாத்தா ஊரு உலகம் என்ன நினைக்குதுன்னு எல்லாம் பாக்க  கூடாது தாத்தா. இப்போ தான் எனக்கு இருபத்தி நான்கு வயது ஆகுது. இன்னும் மூணு வருசம் போகட்டும்.
என்று இவர்கள் இப்படி உரையாடிக் கொண்டு இருக்கும் போது வேணிக்கு நாரயணன் சொன்ன என் வளர்ப்பு என்ற வார்த்தையில்  ஒரு கசந்து முறுவலே வந்து போனது. என் அப்பாவையும் இவர் தானே வளர்த்தார் என்று. 
 அன்று ஊரில் நடந்த உரையாடலை நினைத்து தான்   வேணி பரமேஸ்வரரிடம் பேசியது. உதயேந்திரனுக்கு உண்மையில்  இவனை திருமணம் செய்ய இவளுக்கு பிடித்து இருக்கா…? என்ற யோசனையுடன் பவித்ரனை பார்த்தான்.
அவனோ ஏதோ அவள் செய்தி வாசிப்பதை உன்னிப்பாக கேட்பது போல் கேட்டுக் கொண்டு இருந்தானே தவிர. அவன் முகத்தில் வேறு எந்த உணர்ச்சியும் இல்லை. 
உதயேந்திரனுக்கு பவித்ரன் வேணியின் பழக்கத்தில் ஒரு நட்பு, பாசம், அரவணைப்பு இவை தான் தெரிந்ததே தவிர. அதில் காதல்,  நேசம் என்பது போல் ஒரு துளியும் தெரியவிலை.
வேணியிடம்  கூடுதலாக எந்த பிரச்சனை வந்தாலும், தன் தாயின்  முகத்தை பார்க்குமே குழந்தை. அது போல் தான் பவித்ரன் முகம் பார்த்து நடக்கும் குழந்தையாய் வேணி. இப்படி தான் இவர்கள் பழக்கம் இருப்பது.
திருமணம் செய்ய இது போதுமா…? என்று நினைத்தவன் மனதில் இன்னொன்றும் வந்து போனது. இந்தியாவில் முக்கால் வாசி திருமணம் இது போல் தானே நடக்குது.
இவர்களுக்காவது ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ஒரு ஐந்தோ பத்தோ நிமிடம்  பெண்ணை பார்ப்பது. பின் அந்த நேரத்திலேயே அந்த பெண்ணை பிடித்து இருக்கா….? இல்லையா…? என்று  அந்த ஆண் சொல்லி விடவேண்டும். 
அதே தான் அந்த பெண்ணுக்கும். அப்படி திருமணம் செய்து வாழவும் செய்கிறார்களே. ஜெர்மனி வாசம் உதயேந்திரனை இவ்வாறாக தான் யோசிக்க வைத்தது.
“ஓ..கல்யாணம் ஆவதுக்கு முன்ன  அப்போ என்னன்னா செய்யலாமா…?” அப்போதும் விடாது பரமேஸ்வரர் பேசினார்.
இதை எல்லாம் கேட்ட நாரயணனுக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது.  பரமேஸ்வரர் அப்படி சொன்னார் என்று தன் குழந்தைகள் மீது சந்தேகப் படவில்லை.ஊர் இப்படி பேசும் என்று சொன்னனே…வேதனையில் கசங்கியது அவர் முகம்.  இதை இதை தானே பரமேஸ்வரர் எதிர் பார்த்தார்.
நாரயணனின் முகம் கசங்கலை பார்த்து… “யோவ் என்ன பெரிய…” அதற்க்கு மேல் பரமேஸ்வரர் நாரயணனிடம் பேச விடாது , தன் தாத்தாவின் இரு பக்கமும் பேத்தி பேரன் நின்றுக் கொண்டு..
“ பெரிய மனுஷன்னா…அது எங்க தாத்தா தான். அந்த வார்த்தை சொல்றதுக்கு கூட உங்களுக்கு தகுதி இல்ல.” அச்சு அடித்த வார்த்தையை படிப்பது போல் பவித்ரனும், வேணியும்  அச்சு பிசகாது சொல்லி முடித்தனர்.
இவ்வளவு நேரமும் அங்கு நடப்பதை ஏதோ தனக்குள் கணக்கு போட்டு கேட்டுக் கொண்டு இருந்த  உதயேந்திரன். தன் தந்தையை, வயதில் சிறியவர்கள் இப்படி பேசியதை கேட்டு…
“ஏய்…என்ன என்ன பேச்சு பேசுறிங்க.  நான் அமைதியா போறேன்னு நான் எதுவும் செய்ய மாட்டேன்னு நினச்சிட்டிங்கலா…? வந்த இடம் தெரியாம போயிடுவிங்க ஜாக்கிரதை.”
அந்த நிலையில் மற்றவர்களாய் இருந்தால் , உதயேந்திரனின் உயரத்துக்கு தங்களை ஏதும்  செய்து விட வாய்ப்பு உண்டு என்று பயந்து தான் போவர்.
ஆனால் வேணி… “  இருந்த இடம் தெரியாமன்னா…எப்படி…?  எரிச்சிடுவிங்கலா…? சொல்லுங்க மிஸ்டர் உதயேந்திரன்.” என்று கேட்ட வேணி, பின் ஒரு கண்ணை மூடி,  கையை மோவாய் மீது வைத்து யோசனை செய்தவள்.
பின் உதயேந்திரன் பக்கம் திரும்பி… “இதை விட நல்ல ஐடியா நான் தரவா…?” என்று கேட்டவள், அவன் பதில் சொல்வான் என்று  கூட எதிர் பாராது அவளே தொடர்ந்து…
“ ஒன்னுன்னா செய்ங்கலே..என்னை விபச்சார வழக்குல சிக்க வெச்சிடுங்க. அப்புறம் நீங்க இவங்கல ஒன்னும் செய்ய தேவையில்ல. அவங்கலே போயிடுவாங்க.”
தன் குடும்பத்தை காட்டி, அவங்கலே போயிடுவாங்க என்று  சொல்லும் போது கையை மேலே காட்டி , நாக்கை வெளியே நீட்டி  சைகையிலும் சொன்னதும்,
  உதயேந்திரனுக்கு, ‘என்ன பேச்சு பேசறா இந்த பொண்ணு. அதுவும் அவள்  சொன்ன விபச்சாரம்… 
என்ன மாதிரியான பேச்சு இது…?’  என்று தான் நினைத்தான். தன் அப்பாவை அப்படி பேசவும் தான். உதயேந்திரன் இப்படி மிரட்டியது. அவனின் நோக்கம்,  இவர்களை சென்னை விட்டு போக செய்ய வேண்டும். 
அதுவும் சந்திரசேகர் மகள் இவள் என்று  அனைருக்கும் தெரியும் முன். குறிப்பாக தன் அக்கா பிள்ளைகளின் நட்பு வட்டத்திற்க்கு தெரிவதற்க்குள். கீர்த்தியும், க்ரீஷும் சொல்வது இது தான்..
“ என் பிரண்சுங்களுக்கு நான் இல்லீகல்  சையில்டுன்னு தெரிஞ்சிடுமா…?” சின்னவன் கேட்டதும்.
உதய்… “ ஏய் என்ன வார்த்தைடா அது. உன் அம்மாக்கு க்ராண்டா  கல்யாணம் செஞ்சு வெச்சோம்டா…” என்று சொன்னதற்க்கு, அதற்க்கு  உடனே பதிலாய் கீர்த்தி சொன்னாள்.
“ ஊரு பாக்க நடந்தாலும், முதல் மனைவி இருக்கும் போது, அவங்கல விவாகரத்து வாங்கமலோயோ, இல்ல இந்த  கல்யாணத்துக்கு நான் ஒத்துக்குறேன்னு அவங்க கிட்ட கைய்யெழுத்து வாங்காம செஞ்சா அது செல்லாது. இது நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும் என்பது இல்ல மாமா.” 
கீர்த்தி சொல்வதும் சரியே… இது உதயேந்திரனுக்கும்  தெரியும். பிள்ளைகள் மனதில் இருக்கும் பயம் போக்கவே  இப்படி பேசியது. இவர்கள் மனதில் இருந்து இந்த பயம் போக வேண்டுமானல், கிருஷ்ணவேணி தன் ஊரை பார்த்து போக வேண்டும்.
தன் குடும்ப கவுரவதுக்காகவும், தன் அக்கா பிள்ளைகளின் நன்மைக்காவும் வேண்டியே  கம்பத்து பொண்ணை ஊருக்கு அனுப்ப திட்ட தீட்டினான். ஆனால் அந்த திட்டதில் இப்படி  ஒரு யோசனை தன் கனவிலும் நினையாதது.
“சீ…என்ன பேச்சு இது. இப்படி பேச உனக்கு வெட்கமா இல்ல…?” என்று கிருஷ்ணவேணியை பார்த்து உதய் கேட்டான்.
அவன் வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஒழுக்கமானது எல்லாம் இல்லை. ஆனால்  இது போல் மற்றவர்கள் மீது அபாண்டமாய் பழி போடுவது அவன் தொழிலில் கூட இப்படி  யோசித்தது இல்லை. 
அப்படி இருக்கும் போது குடும்பத்துக்குள் எப்படி யோசிப்பான்..?  அவன் மனதில் வேணி தன் குடும்பம் என்ற உணர்வு அவன் அறியாமலேயே எழ ஆராம்பித்தது.
 
 

Advertisement