Advertisement

அத்தியாயம்….11
  மீட்டிங் முடிந்து அனைவரும் செல்ல வேணியும், பவித்ரனும் மின் தூக்கி  இருக்கும் இடத்தை நோக்கி நடந்துக் கொண்டு இருந்தனர். அப்போது “எப்படி வேணி உனக்கு இந்த ஐடியா வந்தது…?”  வெள்ளை முடிக் கொண்டு டோப்பா தயாரிப்பதை பற்றி வேணி சொன்னதை, குறிப்பிட்டு பவித்ரன் கேட்டதற்க்கு,
“ எல்லாம்  என் அத்தையால்  தான்.” என்று வேணி சொன்னதும்,
“ எங்க அம்மாவா…? அவங்க என்ன சொன்னாங்க உன் கிட்ட. முதல்ல இந்த மீட்டிங்கில் என்ன பேச போறாங்கன்னு நமக்கே  ஒரு விவரமும் தெரியாது. ஓட்டலில் உட்கார்ந்துட்டு இருக்க என் அம்மா இதை பத்தி உனக்கு ஐடியா கொடுக்க போறாங்கலா….?”
இன்னும் சந்திரசேகர் கொடுத்த பங்களாவுக்கு   வேணியும், பவித்ரனும் குடிப்போகவில்லை. ஓட்டலில் இருவரும் தனியாக தங்குவது பார்ப்போரை வேறு விதமாக பார்க்க வைப்பதால் தான், தனியாக  வீடு பார்க்க செய்தான்.
பின்  ராஜசேகர் சொன்ன யோசனை பவித்ரனுக்கு சரியாக பட,  முதலில் வேணியை தன் திட்டத்துக்கு ஒத்துக் கொள்ள வைத்து பின். கம்பத்தில் இருக்கும்  தன் குடும்பத்தோடு பேசும் போது தான், நான் நினைத்தது அவ்வளவு சீக்கிரத்தில் நடத்தி முடிக்க முடியாது என்பதை  பவித்ரன் உணர்ந்தான்.
வேணியின் அம்மா… “அந்த ஊருக்குள்ளேயே  என் காலடி படாது பவித்ரா… அப்படி இருக்கும் போது அந்த வீட்டுக்கு நான் வருவேன்னு நீ எப்படி எதிர் பார்த்தே, என்னால்  வர முடியாது.” திட்ட வட்டமாய் புனிதா மறுத்து விட்டார்.
போனில் பேசி முடியும் விசயம் இல்லை இது. ஏற்கனவே தன்  ஆபிசில் பேப்பர் போட்டதற்க்கு ஐயர் ஆபிசர் கூப்பிட்டு ஏகத்துக்கு திட்டியும்,   “என்னை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரிலீவ் செஞ்சுடுங்க சார்.” என்று தான் எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது என்பது போல் சொல்லி  விட்டான்.
அதன் பிரதிபலிப்பாய்… “  பேப்பர் போட்டு மூன்று மாதம் பின் தான் ரிலீவ் கிடைக்கும். இந்த  வேலைய முடிச்சி கொடுத்தா தான் உன்னை சிக்கிரம் ரிலீவ் செய்வேன்.” அவன் ஐயர் ஆபிசர்,  அவனை வைத்து செய்தார்.
அதற்க்காக  அவன் ஆபிசுக்கு ஒடே ஒடு என்று ஓடிக் கொண்டு இருக்கிறான். இடை இடையே பேட்டரிக்கு ஜார்ஜ் ஏத்துவது போல வேணி  டவுன் ஆகும் போது எல்லாம்.
“ உன் அம்மாவுக்கு  கிடைக்க வேண்டிய நியாயத்தை நீ தானே வாங்கி கொடுக்க முடியும் வேண்டும் .”  என்பது போல் அவ்வப்போது அவள் காதில் ஓதி கொண்டு, இப்படி சென்னையில் அவனுக்கு ஏகப்பட வேலை வரிசை கட்டி காத்திருக்க. ஊருக்கு சென்று அத்தையை   சென்னை வர சம்மதிக்க வைக்க, நமக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும் என்று ஊருக்கு போவதை தள்ளி வைத்தான்.
ஓட்டலில் துணைக்கு தன் அம்மாவை அழைத்துக் கொண்டான். முதலில் எடுத்து தங்கியது பெரிய ஓட்டல். இப்போது ஒரு மத்திய தர ஓட்டலில் இரு அறை எடுத்து,  ஒன்றில் அம்மா வேணியை தங்க வைத்தவன் மற்றொன்றில் அவன் தங்கிக் கொண்டான். இந்த இடைப்பட்ட குறுகிய காலத்துக்கு எங்கும் வீடு தர மறுத்து விட்டதால் தான் இந்த ஓட்டல் வாசம்.
தன் அம்மா சொன்னதாக சொன்னதும் ஓட்டலில் இருக்கும் அம்மா எவ்வாறு சொல்ல முடியும் என்று கேட்டதற்க்கு… தன் உள்ளங்கையை  விரித்து அவன் முன் காட்டி.. “ என் கைய்ய கொஞ்சம் உத்து பாரு.” தன் முன் நீண்ட கையை பிடித்து அப்படியும், இப்படியும்,  என்று நாளா பக்கமும் திருப்பி பார்த்தும், புதியதாய் அவள் கையில் ரேகை ஒன்றும் முளைத்திட ததை பார்த்து…
“ ஏய் லூசு.  நான் சொன்னதுக்கு பதில் சொல்லாம என்னத்துக்கு கைய என் கிட்ட காட்டுற….ஊருல  இருந்தா வேலை செஞ்சி கைய் கொஞ்சம் சொர சொரப்பா இருக்கும். இந்த இருபது நாள்ள சாப்பிட்டு சாப்பிட்டு டீவி பாக்குறதால கொஞ்சம் சாப்ட்டா இருக்கு. அதை பார்க்கவா  என் கிட்ட கைய் காட்டுற….?”
“ சீ நான் லூசு இல்லடா.  நீ தான் லூசு.” வேணி பவி பவி என்று ஆசையாக  அவனை அழைத்தாலும், அவ்வப்போது இது போல் மிக ஆசையாக டா போட்டு அழைப்பாள்.
தன் கையில் படிந்து இருந்த கரையை காண்பித்து… “ தோ பாரு.” என்று கிருஷ்ணவேணி  குறிப்பிட்ட பகுதியை சுட்டி காட்டி காண்பித்தாள்.
“ இது என்ன வேணி கருப்பா இருக்கு.” என்று  பவித்ரன் கேட்ட்தும், 
“அது தான்டா நான் சொல்ல வர்றேன். அதுக்குள்ள  இடை இடையே புகுந்து என்னை பேச விடாம செஞ்சிடுற. காலையில் அத்தைக்கு டைய் போட்டேன்.”
கிருஷ்ணவேணி அவ்வளவு சொல்லியும்…” நீ உன் அத்தைக்கு டைய் போட்டது அவ்வளவு முக்கியமா…?”
“ ஏய் அவசரத்துக்கு பிறந்தவனே…நான் சொல்வதை கேளுடா…டைய் போடும் போது அத்தை முழுசா போடாதே…நான் டைய் போட்டு இருக்கேன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிடும். அதனால கொஞ்சம் விட்டு விட்டு போடுன்னு சொன்னாங்க.”
இப்போது வேணி எதற்க்கு தான் கேட்டதற்க்கு  தன் அம்மாவை இழுத்தாள் என்ற காரணம் பிடி பட…”ஓ..” என்று இழுத்து நிறுத்தினான்.
அவன் முகத்தை பார்த்தே அவனுக்கு புரிந்து விட்டது என்பதை தெரிந்துக் கொண்டவளாய்… “ என்ன புரிஞ்சிடுச்சா… காலையில அத்தை சொன்னதை வெச்சி தான் இந்த ஐடியா கொடுத்தேன்.” தன் இல்லாத காலரை தூக்கி விட்ட வாறே சொல்லியும்,  பவித்ரனிடம் இருந்து எந்த வித பதிலும் வராததை பார்த்து திரும்பி அவனை பார்த்தாள்.
அவனோ கொஞ்சம் இடை வெளி விட்டு…  வந்த கைய்பேசி அழைப்பு ஏற்று காதில் வைத்த  வாறே..கண்ணை சுருக்கி சைகையில்…” ஒன் மினிட்…” என்று அவகாசம் கேட்டான்.
மின் தூக்கியை வர வழைக்க அங்கு இருந்த பட்டனை அழுத்தியவளுக்கு, மின் தூக்கி இதே தளத்தில் தான் இருப்பதற்க்கா ன குறியிடூ காட்ட… பின் பக்கம் திரும்பி பவித்ரனை பார்த்து… “ வா பக்கி லிப்டல பேசிட்டு போவ.” என்று பேசிக் கொண்டே மின் தூக்கியின் கதவை திறந்து  முதலில் ஒரு காலை எடுத்து வைத்தவள், கூடவே அடுத்த காலையும் தூக்கி இருந்த நிலையில்,
முதல் கால் வைக்கவே மின் தூக்கியில்  இடம் இல்லாது எடுத்து வைக்க கால் ஏதோ ஒரு அந்தரத்தில் துழாவுவது போல் இருக்க,  பின் அவள் எடுத்த வைத்த இன்னொரு காலை எங்கு வைப்பது. பயத்துடன் ஏதோ என்று உணரும் வேளையில்,  அவள் இடையில் ஒரு கரம் படிந்து, பின் அந்த கரம் இன்னொரு கரத்தையும் பற்றி தன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
தன்னை இழுத்தது யார் என்று கூட பாராது வேணி  பவித்ரனை பார்த்தாள். அப்போது தான் தன் கைய் பேசியில் இருந்து கவனத்தை வேணியிடம் திருப்பி இருந்தவன், அங்கு கண்ட காட்சியில் ஓடி வந்து அவர்கள் அருகில் நிற்பதற்க்கும், வேணியின் இடையில் கைய் வைத்திருந்தவன் இன்னும் தன் கைய் பற்றலில் அழுத்தம் கூட்டுவதற்க்கு சரியாக இருந்தது.
அப்போது  தான் வேணி பவித்ரனை பார்ப்பதை விட்டு, தன்னை யார் இழுத்தது என்று தலை நிமிர்ந்து பார்த்தாள். இவள்  மேல் நோக்கி பார்க்கவும், வேணியின் இடையில் கைய் வைத்திருந்த உதயேந்திரன் கீழ் நோக்கி குனியவும், அந்த காட்சியை ஒரு சிறந்த  ஒவியன் பார்த்திருந்தால் கண்டிப்பாக யாராவது படுக்கை அறையில் அது ஒவியமாக இடம் பெற்று இருந்து இருக்கும்.
 அவ்வளவு அருகில் வேணியின் முகத்தை பார்த்த உதயனுக்கு  என்ன தோன்றியதோ, இன்னும் தன் முகத்தை கீழ் நோக்கி குனிய  இடையில் பவித்ரன் கை அவன் கன்னம் தொட வந்தது.
ஆம் வந்தது தான்   தொடவில்லை. அதற்க்குள்  அவன் கைய் பற்றி தடுத்த உதயன்… “ நீ அடிக்க நான் என்ன அவ்வளவு இளப்பமானவனா….?” வேணியின் இடைப்பற்றிக் கொண்ட போது இருந்த முகத்துக்கு எதிர் பதமாய் கோபம் முகம் கொண்டு  உதயன் பவித்ரனை பார்த்து கேட்டான்.
அதற்க்குள்  உதயனின் பிடியில் இருந்த வேணியை,  தன் அருகில் இழுத்துக் கொண்டவன்… “ எங்க ஊருல  கல்யாணம் செஞ்சுக்காம ஒரு பொண்ணோட குடும்பம் நடத்துன்னா, அவன  பொம்பள பொறுக்கின்னு தான் சொல்லுவோம். அவன் கூட தங்கள் வீட்டு பெண்கள் பேசுவதை கூட நாங்க அனுமதிக்க மாட்டோம்.”
இந்த இடைப்பட்ட நாட்களில்  பவித்ரன் உதயேந்திரனை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக  ஆய்ந்து தெரிந்துக் கொண்டான். தெரிந்த விசயத்தில் வேணியை அவன் பார்ப்பது கூட விரும்பாது இருந்தவன்.
 இப்போது அவ்வளவு அருகில், அதுவும் அவள் முகத்தை நோக்கி குனியவும்,  யாரிடம் இவன் வேலையை காண்பிக்கிறான் என்று தான் வேணியை ஏன் பிடித்து இழுத்தான் என்று எதற்க்கு….? ஏன் என்று  பாராது கைய் வீசி விட்டான். 
பவித்ரன் தன்னை அப்படி இறக்கி பேசியதும்,  தன் கோப முகத்தை சிரித்த முகமாய் மாற்றிக் கொண்டே…” ஓ அச்சா….அப்போ நீங்க இருந்தது என்ன கணக்குல சேர்த்தி. அப்போ நீ பொம்பள பொறுக்கி இல்லையா….?” என்று கேட்டான்  உதயேந்திரன்.
பின் அவனே…”ஒ அத்தை மாமன் பொண்னோடு இருந்தா அது  பொறுக்கி தனம் இல்ல. உரிமை தனமோ…” என்று உதயேந்திரன் கேட்டதிலேயே,   பவித்ரன் உதயனை பற்றி விசாரித்தது போல், உதயனும் பவித்ரனை பற்றி விசாரித்து இருக்கிறான் என்று தெரிகிறது.
ஆனால் விசாரிப்பு தான் சரியில்லையோ…இல்லை சரியாக விசாரித்து, இப்போது பதில் கொடுக்க வேண்டுமே என்று இவ்வாறு சொல்கிறானோ…அது அந்த உதயேந்திரனுக்கே  வெளிச்சம்.
இவ்வாறு  பவித்ரனை   சொல்லியும்,  கோபம் வராது அமைதியாக இருப்பதை பார்த்து, உதயன் புருவ சுழிப்போடு இருவரையும் பார்த்தான். பவிதரனுக்கு தான் கோபம் வரவில்லை. வேணியின் குண நலன்களுக்கு,  குறைந்த பட்சம் அவளுக்காவது கோபம் வர வேண்டுமே, என்று அவள் முகத்தை பார்த்தான்.
 அவளும் அமைதியோடு உதயேந்திரனை பார்த்திருந்தாளே தவிர,  அவள் முகத்தில் கோபத்தின் சாயல் துளியும் இல்லை. “ என்ன மிஸ்டர் உதயேந்திரன்,  நீங்க சொன்னதும் கோபம் வந்து சண்டை போடுவேன்னு பார்த்திங்கலா…? கண்டிப்பா போட மாட்டேன்.
நீங்க சொன்னது ஒரு வகையில் சரி தான். அதான் அத்தை பொண்ணு மாமன் பொண்ணு உரிமையான்னு கேட்டிங்கலே… ஒரு வகையில் உரிமை தான். ஆனால் அது அத்தை பொண்ணு மாமன் பொண்ணு என்பதால் வந்த உரிமை இல்லை” என்று  சொன்ன பவித்ரன்.
வேணியின் தோள் மீது கைய் போட்டு… “ நான் கட்டிக்க போற பொண்ணு என்பதால் வந்த உரிமை.” என்று பவித்ரன் சொன்னதும் உதயன் சட்டென்று வேணியின் முகத்தை  தான் பார்த்தான்.
அங்கு  எந்த எதிர்ப்பு இல்லாது, அவன் சொன்னது உண்மை தான் என்பது போல்,  ஒரு கெத்தாக நிமிர்வோடு தான் உதயனை பார்த்திருந்தாள்.
 இதை பார்த்த உதயேந்திரனுக்கு யோசனை ஒரு நிமிடம் தான்,  பின் சாதரணமாக… “ அப்படியா…?” என்பது போல் அதிசயத்து கேட்டான்.
இவன் கேட்கும் விதமே சரியில்லையே என்று பவித்ரன் யோசிக்கும் வேளயில்,  மீட்டிங்கில் பங்கு பெற்ற அனைவரும் வந்து விட்டனர். வந்தவர்கள் வேணி உபயோகிக்க பார்த்த   மின் தூக்கியின் முன் நிற்காது சிறிது கடந்து இருந்த மின்தூக்கியை உபயோகித்தனர்.
அப்போது தான் வேணிக்கு தன் கால் அந்தரங்கத்தில் ஆடியது நினைவுக்கு வந்தது. ஏன் என்று அவள் யோசிக்கும் வேளயில்… உதயேந்திரன் தன் கைய் பேசி மூலம் யாருக்கோ அழைத்து…
 “ செக்யூரிட்டிய கூப்பிடு.”  என்று சொன்ன உதயேந்திரனின் குரலில் கோபம் அதிகமாகவே தெரிந்தது.
பவித்ரன் திரும்பவும் வேணி உபயோகித்த மின் தூக்கியின் பட்டணை  தட்டும் வேளயில் வேணி அவன் கை பிடித்து தடுத்து… “ வேண்டாம்.” என்பது போல் தலை அசைத்து அடுத்து மின் தூக்கி உபயோகிக்கும் பகுதியை காண்பித்து… “ அதில் போகலாம்.” என்று சொன்னாள்.
அதற்க்குள் உதயேந்திரன் அழைத்த செக்யூரிட்டி இல்லாது இன்னும் இரண்டு பேர்  அறக்க பறக்க என்று ஓடி வந்து மூச்சு வாங்க உதயேந்திரன் எதிரில் நின்றவர்கள்…
” சா…”  வந்தவர்கள் மன்னிப்பு கேட்கும் முன்னவே,  உதயேந்திரன் கைய் விரல் தடையம் அவர்கள் கன்னத்தில் பதிந்திருந்தது.
“ என்ன வேல பாக்குறிங்க.  நான் கொஞ்சம் அசந்து இருந்தா…”  வேணியை காண்பித்து … “ கீழே போக நினைத்தவங்க மேல போய் இருப்பாங்க.” என்று   சொன்னவன்,
 அந்த மின்தூக்கியின் பக்க வாட்டில் மறைவாக வைத்திருந்த …மின் தூக்கி வேலை செய்யவில்லை.  அதன் பழுது வேலை நடை பெறுவதால், இதை உபயோக்கிக வேண்டாம். என்று எழுதி இருப்பதோடு டெஞ்சர் என்பதற்கு அறிகுறியாய் ஒரு எலும்பு கூடு தலை சின்னமும் வரைந்து இருந்தது.
“இப்போ புரியுதா…நான் எதுக்கு இழுத்தேன் என்று” உதயனின் பேச்சு பவித்ரனிடம் இருந்தாலும்,   பார்வை மொத்தமும் வேணியின் இடையில் தான் பதிந்து இருந்தது.
 

Advertisement