Advertisement

அத்தியாயம்….29 
கதவை அடைத்த பவித்ரன் வேணியிடம் எதுவும் கேட்காது கதவின் மேல் சாய்ந்த வாறு கைய் கட்டி வேணியையையே பார்த்த வாறு நின்று இருந்தானே ஒழிய,  வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.
ஆனால் பார்வை மட்டும் வேணியின் முகத்தில் மட்டுமே நிலை பெற்று இருந்தது. அந்த பார்வையோ… ‘என்ன…? உன் பிரச்சனை என்ன…? என்னிடம் நீ சொல்லி தான் ஆக வேண்டும்.’  என்பது போல் இருந்தது.
வேணியால் பவித்ரனின் அந்த  நிலைத்த பார்வையை ஒரு நிமிடத்திற்க்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது, தலை கவிழ்ந்து  விட்டாள்.
இப்போது அந்த நிலப்படி மீது இருந்து மெல்ல நடந்து வேணியின் அருகில் வந்த பவித்ரன், அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வாறு செய்து…
“என் வேணி எப்போது  என் முன் இப்படி தலை குனிய நிக்க மாட்டாள். அது போல நானும் வேறு யாரின் முன்னும் உன்னை தலை குனிய வைக்க மாட்டேன்.” என்று சொன்னவன் கை பிடித்து அங்கு இருந்த கட்டில் மீது அமர வைத்தவன் தானும் அவள் பக்கத்தில் அமர்ந்து பிடித்த அவள் கையை விடாது…
“இப்போ சொல். என்ன பிரச்சனை…?”வேணியை பார்த்து  நேரிடையாகவே பவித்ரன் கேட்டு விட்டான்.
உதயேந்திரனின் கெஸ்டவுசில் இருந்து  வேணியை தங்கள் வீட்டுக்கு அழைத்து கொண்டு வரும்  வரை, அங்கு இருந்து உடனே வந்து விட வேண்டும். அப்போது பவித்ரனின்  எண்ணம் முழுவதும் அதுவாக மட்டுமே இருந்தது.
அதனால் வேணியின் முகத்தையோ, அதில் சூழ்ந்து இருந்த கலக்கத்தையோ அவன் கவனிக்கவில்லை. இங்கு வந்ததும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் வேணியை ஒப்படைத்த பின் தான் அவனுக்கு கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது.
அந்த ஆசுவாசம் கூட கொஞ்சம் தான். அவன் உடன்  இருக்க வேணியை கடத்தியதில் அவன் மனம் வெகுவாக பாதுக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
வேணியை சென்னைக்கு அனுப்ப  அத்தை பயந்த போது… “நான் இருக்க அவளுக்கு ஒன்றும் ஆக நான் விட மாட்டேன்.”  என்று தன் அத்தையிடம் சொல்லி தான் வேணியை சென்னைக்கு அழைத்து வந்தது.
இப்போது நான் இருக்கவே இப்படி நடந்து விட்டதே. உதயேந்திரனின் கெஸ்ட் அவுசில் இருந்து வீடு வரும் வரை இதுவும் அவன் மனதை குழப்பிக் கொண்டு  தான் இருந்தது. 
வீட்டுக்கு வந்த உடன்  அத்தை தன் சட்டையை பிடித்து ஏதாவது கேள்விகள் கேட்டு இருந்தால் கூட அவன் மனம் கொஞ்சம் ஆறி இருக்கும்.
ஆனால் பயத்தில் தன் மகளை கட்டி பிடித்து அழுத அத்தையை, வேணியின் மனநிலை தொட்டு    உதட்டு அசைவில் சாதரணமாக இருங்க என்று தான் சொன்னதை கேட்டு வந்த அழுகையை அடக்கி சாதரணமாக இருந்தது. அவனை பெரிதும் பாதித்தது என்று  தான் சொல்ல வேண்டும்.
அத்தை சென்னை வர எவ்வளவு பயந்தார்கள் என்று  அவனுக்கு தான் தெரியுமே. அவன் தான் வேணியின் எதிர்காலத்திற்க்கு அவள் சந்திரசேகரின் மகளாய் உலகுக்கு  அடையாளம் காண வேண்டும் என்று தான் எடுத்து கூறியும், பயந்து தான் அவர்கள் சென்னை வந்தது.
இப்போது ஒரு இரவு முழுவதும் வயது பெண் வீடு வரவில்லை. கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர்கள் குடும்பம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலைக்கு இதை நினைத்து எப்படி பயந்து இருப்பார்கள் என்பதும் அவனுக்கு  நன்கு தெரியும்.
அதுவும் அத்தை தன் வாழ் நாளுக்கு மகள் மட்டுமே என்று  பற்று கோளாய் நினைத்து வாழ்பவர். அவருக்கு மகள் இரவு வராதது அதுவும் இதற்க்கு காரணம் அவர்கள் குடும்பமாய் இருக்குமோ  என்று தான் சந்தேகம் அனைவருக்கும் வந்து இருக்கும். அந்த நிலையில் அவர்கள் எவ்வளவு பயந்து இருப்பார்கள். 
இருந்தும் தன்னை ஒரு சொல் கடிந்து பேசவில்லையே…இதுவும் அவன் மனதை குத்த தான் செய்தது.
இப்படியாக அவன் நினைவில் அவன் சுழன்று கொண்டு  இருந்ததால் தான் அவன் வேணியை கவனிக்க தவறினான்.
பின் தான் வேணியின் அழுகுரலில் அவளை கவனிக்க ஆராம்பித்தது. கவனித்ததில் தான் அவளை பற்றி நன்கு தெரிந்த பவித்ரன்  இது அவள் இயல்பு இல்லையே.
பின் தான் அவன் எண்ணம் பின் நோக்கி சென்றது. அது உதயேந்திரனின் கெஸ்டவுசில் அவள் இயல்புக்கு மாறாய் நடந்துக் கொண்டது. பின் அமைதியாய் தன் பின் வந்தது.
ஏதாவது தவறாய் நடந்து இருக்குமோ என்ற அந்த சந்தேகம் வந்த உடன் வேணியின் பிடித்து இருந்த கையின் அழுத்தம் கூடி…. “வேணி அ..ங்..கே..ஏதா.வது…” வேணியிடம் இதை பற்றி எப்படி கேட்பது.
அவர்களுக்குள் உறவையும்  தான்டிய பழக்கம் தான். சிறு வயது முதல் அவர்கள் பேசாத பேச்சுகள்  இல்லை தான்.
  சினிமா, அரசியல்,குடும்ப உறவு முறைகள் பற்றி என்று  அனைத்தும் பேசி இருக்கிறார்கள். ஏன் இன்னும் சொல்ல போனால் காதலை பற்றி  கூட அவர்கள் இருவரும் பேசி இருக்கிறர்கள். அந்த காதல் மற்றவர்கள் காதலாய் பற்றிய தாய் தான்  இருக்கும்.
உதாரணத்திற்க்கு தங்கள் கூட படித்தவர்கள் காதலில் விழுதால், பவித்ரன் வேணியிடம் … “அந்த  பொண்ணு எவ்வளவு அழகா இருக்கு.போயும் போயும் அவளுக்கு அந்த பையன் தானா கண்ணுல மாட்டுனான்…?” என்று சொன்னால்…
“ஏன் அவள் உன்னை பாக்கலேன்னு வயிற்று எரிச்சலில் சொல்றியா….? அந்த பையன் ஒன்னும் நீ சொல்ற அளவுக்கு எல்லாம் ரொம்ப மோசம் எல்லாம் இல்ல.” என்று வேணி  பவித்ரனின் பேச்சுக்கு மறு மொழி கூறினால்.
அதற்க்கு பவித்ரன் சும்மா இல்லாது…. “ரொம்ப மோசம்  இல்லேன்னா. அப்போ கொஞ்சம் மோசம் என்று நீயே ஒத்துக்குற…?” என்று பவித்ரன் வேணியை மடக்கினால்,
“கன்பாம் கன்பாம் உனக்கு அந்த பொண்ணு மேல ஒரு கண்ணு. இரு இரு மாமா கிட்ட சொல்றேன்.”
இப்படியாக கூட அவர்கள் பேச்சி இருந்து இருக்கிறது. ஆனால் இப்போது வேணியிடம் கேட்ட கேள்வி. அவளிடம் தான் எதிர் பார்க்கும் பதில். எப்படி கேட்பது…? அதற்க்கு அவள் ஏதாவது தான் விரும்பதாக தகவல் ஏதாவது சொல்லி விடுவாளோ…என்ற பயத்தில்  அவன் வார்த்தைகள் தந்தி அடித்ததில் அவன் கேட்க வந்த கேள்வி என்ன என்று விளங்காது.
“என்ன கேட்குற பவி. ஒழுங்கா கேளு. ஏற்கனவே எனக்கு மண்டை காயுற பிரச்சனையுல இருக்கேன்.” என்று வேணி சொன்னதும்.
“மண்டை காயும்  பிரச்சனையா…? அது என்ன பிரச்சனை சொல்.”   அவள் பேசின பேச்சையே கெட்டியாக பிடித்துக் கொண்டு அங்கு விரும்பத்தகாத பிரச்சனை ஏதாவது நடந்ததா…? 
 என்பதை தெரிந்துக் கொள்ள பவித்ரன் முனைந்தான்.
“என்…ன பிர..ச்சனை…? அங்…கு என்..ன நடந்..தது  தா…ன் உன..க்கு தெரி…யுமே…?” இப்போது திக்கி திணறி  பேசுவது வேணியின் முறையானது.
வேணியின் இந்த தடுமாற்றமான பேச்சால் எப்படி கேட்பது என்ற யோசனை எல்லாம் விட்டு…
“குட்டிம்மா நான் முதல்ல கண் முழிச்சப்ப அங்கு இருந்தவனில் ஒருவன் பார்வை சரியில்ல.அவன் தான் எனக்கு திரும்பவும் மயக்கம் மருந்து கொடுத்துட்டான்.
நான் திரும்பவும் கண் முழிக்க  கொஞ்சம் டைம் எடுத்தது. அந்த டைமில  அங்கு உனக்கு வேறு ஒன்னும் நடக்கலையே…?”
பவித்ரன் இதை  கேட்க முதலில் பயந்த பவித்ரன். கேட்டதும் அவள் வாய் மொழியாய் என்ன  வருமோ… என்று பயந்து போய் அவள் உதட்டு அசைவையே வெறித்து பார்த்திருந்தான்.
பவித்ரன் கேள்வி மூலம் தன் தடுமாற்றம் அவனை எப்படி எல்லாம் யோசிக்க வைத்திருக்கிறது என்று புரிந்ததும்…
“சேச்சே என்ன பவி என்ன என்னனோ யோசிச்சி வெச்சி இருக்க. அப்படி ஒன்னும் நடக்கல.” என்று அவசரமாக  பவித்ரனின் பதட்டத்தை தவிர்த்தவள்.
தொடர்ந்து அவள் சொன்ன… “அது..க்கு..ள்ள அவ..ர் வ..ந்து தடு…த்துட்டார்.” முதலில் பேசிய அந்த பேச்சின் வேகம் பின்னர் சொன்ன அவர் வந்து தடுத்துட்டார்  என்ற பேச்சில் மெல்ல முதலில் குறைந்து பின் மறைந்து ஒலித்ததோ… இப்போதும் பவித்ரனின் பார்வை யோசனையுடன் தான் வேணியின் முகத்தில் வட்டமிட்டது.
இங்கு பரமேஸ்வரரின் இல்லத்தில்  இருந்து தன் இருப்பிடத்தை தனக்கு என்று வந்திருந்த இடமான கெஸ்டவுஸ் அதாவது வேணி கடத்தி   வைத்திருந்த இடத்திற்க்கு உதயேந்திரன் தன் ஜாகையை இடம் மாற்றி ஒரு வாரம் கடந்த நிலையில் தன் உடல் பயிற்ச்சியை முடித்து விட்டு எப்போதும் அந்த வீட்டுக்கு காவல் இருக்கும் வாட்ச் மேனின் மனைவி  சத்துமாவு கஞ்சியை கையில் கொடுத்து கூடவே அவள் சொன்ன…
“சின்ன பாப்பாவும், சின்ன பையனும் வந்து இருக்காங்க.”  என்று பேச்சில் அங்கு மாட்டி இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான்.
கடிகாரமோ  தன் நேரம் சரியாக ஆறுமணி இருபது நிமிடம் ந்பது போல் காட்ட, இந்த விடியகாலையில் எதுக்கு வந்டு இருக்காங்க. அங்கு ஏதாவது பிரச்சனையா…?
தன் கையில் உள்ள சத்து மாவு குடிக்காது அங்கு இருந்த டேபில் மேல் வைத்து விட்டு, அவசர அவசரமாய் அங்கு கழட்டி போட்ட தன் டீ ஷர்ட்டை  தலை வழியே நுழைத்துக் கொண்டே தன் வேக நடையுடன் படிகட்டில் இறங்கி வந்தான்.
அங்கு ஷோபாவில் வேலையாள் சொன்ன சின்ன பாப்பா, சின்ன  பையனான கீர்த்தி, க்ரீஷ் காவலாளி மனைவி கொடுத்த காபியை உறிஞ்சிக் கொண்டு இருந்தார்கள். கூடவே இடை இடையே   டீப்பாயின் மீது இருந்த பிஸ்கட்டை ஒரு கடி கடித்த வாறே…
வேக நடையுடன் இறங்கி வந்துக் கொண்டு இருந்த உதயேந்திரன் தன் அக்கா  மக்களின் செயலில் ‘பிரச்சனை ஏதும் இல்லை போல். ஆனால் ஏன் இந்த அதிகாலை விஜயம்…?’ என்று உதயேந்திட்ரன் மனதில் நினைத்து முடிக்கும் வேளயில் அவன் கண்ணில் சிக்கியது அவர்கள் கொண்டு வந்த சூட்கேசுகள்.
முதலில் வந்த வேகநடையுடன் இல்லை என்றாலும், கொஞ்சம் வேகமாகவே இறாங்கி வந்த உதயேந்திரன் தன் தோளில் போட்டிருந்த டவலை கொண்டு தன் முகத்தினை துடைத்த வாறே…
“என்ன காலையிலேயே இந்த மாமனின் நியாபகம்…?” என்று உதயேந்திரன் கேட்ட கேள்வியில் என்னவோ கிண்டல் மிகுந்து ஒலித்தாலும், பார்வையோ கூர்மையுடன் அவர்கள் பக்கத்தில் வைத்திருந்த சூட்கேசுகளின் எண்ணிக்கையை நினைத்து கணக்கு போட்டுக் கொண்டு இருந்தது.
‘எதுக்கு இவங்க வீட்ட விட்டு வந்து இருக்காங்க…?’ வந்த நேரமும், பெட்டியின் எண்ணிகையும் கொண்டு உதயேந்திரனால் இப்படி தான் நினைக்க தோன்றியது.
தங்களையே குறு குறு என்ரூ பார்த்துக்  கொண்டு இருந்த மாமனை இதற்க்கு மேல் சோதிக்க வேண்டாம் என்றோ..இல்லை கையில் பிடித்திருந்த காபி மக்கில்  காபி தீர்ந்து போனதாலோ…
“மாமா இனி நாங்க அங்கு போக மாட்டோம்.” என்று இருவரும் ஒரு சேர சொன்னதும்…
“போக மாட்டிங்கன்னா…?” என்று கேள்வி கேட்டு இருவரையும் உதயேந்திரன் பார்த்தான்.
“போக மாட்டோம்னா இனி இங்கு தான் நாங்க இருப்போம்.” இப்போது பதில் கீர்த்தியிடன் மட்டும் வந்தது.
இப்போது தன் பார்வையை கீர்த்தியின் முகத்தில் மட்டும் நிலை நிறுத்தி  விட்டு… “ஏன் அங்கு என்ன ஆச்சி…?”என்று உதயேந்திரன் கேட்டதற்க்கு…
முதலில் பேசிய இலகு பேச்சு இல்லாது… “அங்கு நடக்குறது எதுவும் சரியில்ல மாமா. என்ன என்னவோ பேசுறாங்க. எதுவும் சரியில்ல.” என்று சொன்ன கீர்த்தி  தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் தன் மாமன் அருகில் அமர்ந்துக் கொண்டு அவன் புஜத்தை தன் கைய்யால் இறுக்கமாக பற்றிக் கொண்டவள்…
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா.”  என்று சொன்னவளின் கைய் மீது தன் கைய் வைத்து அதில் அழுத்த்தை கூட்டிய உதயேந்திரன்.
“எதுக்கு பயம். நான் இருக்கேன்ல.” என்று கீர்த்திக்கு தைரியம் அளித்தவன்.
“இப்போ சொல்லு நீ பயப்படும் படி அங்கு என்ன நடந்தது…?”
“அவங்களையும்…” என்று ஆராம்பித்த கீர்த்தி மாமனின் பார்வையில்…
 “வே…ணி அக்…காவையும், பவித்ரன் அத்தானையும் ஏதோ இணச்சி பேசி நம்ம கம்பெனி முழுவதும் இந்த பேச்சி பேசுவது போல செய்ய போறேன். என் கிட்ட இருந்து என் மகனை பிரிச்சிட்டாளே…இப்படி என்ன என்னவோ பேசிக்கிறாங்க மாமா.” என்று சொன்னவள் தேம்பிய வாறே  மாமன் தோள் மீது சாய்ந்தாள்.
“குட்டிம்மா நீ சின்ன பெண். இதை நினச்சி எல்லாம் கவலை பட கூடாது. உன் மாமா நான் இருக்கேன். இது போல  எதுவும் ஆக நான் விட மாட்டேன். புரியுதா…
இனி உன் கவனம் மொத்தமும் உன் படிப்பில் தான் இருக்கனும்.” என்று கீர்த்திக்கு ஆறுதல் அளித்தவன் க்ரிஷ் பக்கம் தன் பார்வையை செலுத்தியவன்…
“உனக்கும் தான்டா சொல்றேன். வீட்டு பிரச்சனை எல்லாம் நான் பார்த்துக்குறேன். இந்த வருடம் உனக்கு கவர்மென்ட் எக்ஸாம். உன் கவனம் படிப்பில் மட்டும் இருக்கட்டும்.” என்று சொன்னதும்.
“சரி மாமா.” என்று சொன்ன க்ரீஷ்.
பின் “ஆனா நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன். இங்கு தான் இருப்பேன்.” என்று திட்ட வட்டமாக க்ரீஷ் சொல்லி விட்டான்.
அவனை  தொடர்ந்து கீர்த்தியும்… “நானும் இங்கு தான் இருப்பேன். அங்கு போக மாட்டேன்.” 
அங்கு எங்களால் போக முடியாது என்று அவளும் அழுத்தம் திருத்தமாய் சொல்லி விட, சிறிது யோசித்த உதயேந்திரன்…
பின் இருவரையும் பார்த்து புன்னகைத்த வாறே… “ஒகே டன்.” என்று ஒத்துக் கொண்டான்.
உதயேந்திரன் ஒத்துக் கொண்ட பின்னும் கீர்த்தியின் முகம் தெளிவில்லாமல் இருப்பதை பார்த்து…
“என்னடா குட்டிம்மா. அது தான் நீங்க இங்கு தங்க ஒத்துக் கொண்டு விட்டனே. இன்னும் என்ன…?”என்ற உதயேந்திரனின் கேள்விக்கு,
கீர்த்தி கொஞ்சம்   தயங்கிய வாறே… “அவங்கல பத்தி தப்பா கம்பெனில பேச வைக்கிறேன்னு.” கீர்த்தியின் பேச்சை முடிக்க விடாது உதயேந்திரன்…
“வேணியை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேச நான் விட மாட்டேன். என்னை நம்பு.” என்று வாக்குறுதி அளித்தவனிடம் திரும்பவும் கீர்த்தி கேட்ட கேள்வியான…
“பவித்ரன் அத்தானை பற்றியும் தவறா பேச விட மாட்டிங்க தானே மாமா.” இப்படி கேட்ட அக்கா மகள் மீது யோசனையோடு,  கவலையும் சேர்ந்த பார்வையை செலுத்தினான் உதயேந்திரன்.
அன்னை கடமை முடித்த திருப்தியில் என்னையும் ஒரு எழுத்தாளராய் மதிக்கும் உங்களிடம் திரும்பவும் வந்து விட்டேன்.
இனி வாரம் நான்கு அத்தியாயம் கொடுக்கிறேன். நான் கொடுக்கவில்லை என்றாலும், கேட்டு வாங்குவது உங்களுடைய பொறுப்பு. ஏன்னா இந்த கதையை இந்த மாதத்திற்க்குள் முடித்தால் தான் அடுத்த கதையான கனவு பட்டரைக்குள் நான் நுழைய முடியும். உங்களை மட்டுமே  நம்பியே இதில் நுழைகிறேன் பார்த்துக்குங்கோ…
  

Advertisement