சில்லென புது மழைத்துளி!

22

கரண், தன் புதிய அத்யாயத்தின் இந்த சூரிய உதயத்தினை, நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.. கடற்கரையில். கரண், உடைந்திருந்த நாட்கள்.. இல்லை வருடங்கள் அதிகம். லாவண்யா தன்னோடு ஒட்டாமல்.. தன்னை பற்றி கவலையில்லாமல் தன்னோடு வாழ்ந்துக் கொண்டிருந்த நாட்களிலேயே.. தனியனாகிவிட்டான் கருணாகரன். ஊரறிய மனையாள் தன்னை விட்டு போய்விட்டால் என்பது.. முகம்காட்ட முடியாத வேதனை. சொல்லி புலம்ப கூட ஆளில்லா நிலை.. ஊர் வாயில் விழுந்து.. நண்பர்களே கேலி கிண்டல் செய்து.. பெற்றோரே மகனின் முகம் பார்க்க அஞ்சி.. மகனின் முகத்தினையும்.. அவனின் ஏக்கத்தினையும் போக்க வழியில்லாமல்.. கொச்சை வார்த்தையில் சொல்வதானால்.. கையாலாகதவன் என்பவனின் நிலை.. அந்த ஆழ்கடலினை நீந்திக் கடக்க முடியாமல்.. தத்தளித்துக் கொண்டிருந்தான்.

இன்று அருகே தெரியும் இந்த உதயம்.. அவனுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது.. புது ராஜகங்கம் அமைந்துவிட்டது.. என்ற நம்பிக்கை அவனுக்கு. ராஜாவின் அழகே ராஜ்யத்தை கட்டிகாப்பதுதானே. சிலகாலம் எதோ நடந்துவிட்டது போல.. ஆனால், விடாமல் மீண்டும் தனக்கான ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டான் கருணாகரன்.

கரண் ஜாக்கிங் முடித்து வீடு வந்தான்.. சுபி, இப்போதுதான் எழுந்திருப்பாள் போல.. ரெஸ்ட்ரூமில் இருந்தாள்.

கரண் மற்றொரு அறையில் குளிக்க சென்றுவிட்டான்.

சுபி, குளித்து.. பால்காய்ச்சிக் கொண்டிருந்தாள். 

கரண் குளித்து முடித்து வந்து “குட் மோர்னிங் சுபி” என்றான். சுபியும் முகமன் சொல்லி.. காபி கலக்கத் தொடங்கினாள்.

கரண் அவளுக்கு உதவுகிறேன் என ப்ரெட் டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்ய தொடங்கினான். எதையும் பேசி புரிந்துக் கொள்ள என அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.. அமைதியாகவே தங்கள் இருவரின் அருகாமையை மனத்தால் உணர மட்டுமே தொடங்கினர். அன்றைய நாள்.. மெதுவாகவும் சென்றது.. பிள்ளைகளோடு விளையாட்டு பேச்சு.. என ஆர்ப்பாட்டமாகவும் சென்றது.

மறுநாள், காலையில் கரணின் பெற்றோர்.. சுபியின் பெற்றோர் வந்தனர்.. இவர்கள் இருப்பிடத்திற்கு. பெரியவர்கள் வந்து சமைத்து.. பரிமாறி என வீடு கலகலப்பாக இருந்தது.. மதியமாக கார்த்திக் சங்கீதா.. சாரதா பிரகாஷ் என எல்லோரும் குடும்பமாக வந்து சேர்ந்தனர். இன்று மாலை இனிமையாக கழிந்தது. எல்லோரும் இங்கேயே ஒருநாள் தங்கி சென்றனர்.

கார்த்திக் ஆஸ்ட்ரேலியா கிளம்பினார், மறுநாள்.

அருணகிரி விசாலாட்சி இருவரும்.. மகனிடம் “குலதெய்வம் கோவிலுக்கு போய்விட்டு வந்துசிடலாம்” என பேசினார். 

அதன்படி.. கிடவிருந்து ஏற்பாடு செய்தனர்.. உறவுகளுக்கு எல்லாம் சொல்லி. லாவண்யாவின் பெற்றோருக்கும் அழைப்பு சென்றது. கரண் ஏதும் அதை கேட்டுக் கொள்ளவில்லை.

நாட்களை கடத்த பெற்றோருக்கு எண்ணமில்லை, அதனால் அடுத்த வாரத்தின் முதல்நாளில்.. அந்த விருந்தினை ஏற்பாடு செய்திருந்தனர். 

கருணா இன்று மிகவும் அமைதியாக இருந்தான்.. ஆனால், சுபியை அருகிலேயே நிறுத்திக் கொண்டான். சாமிக்கு அபிஷேகம்.. ஆராதனை என எல்லாம் நடக்கும் போதும் சரி.. விருந்து சமையல் நடப்பதை கவனிக்கும் போதும்.. அதை பரிமாறும் போதும்.. என எல்லா இடங்களிலும்.. சுபியை அருகிலேயே இருக்க பார்வையால் பணித்திருந்தான்.

சுபி, சாமியை பார்த்துவிட்டு.. காற்று வாங்கலாம் என வெளியே வந்தாலும்.. கரணின் பார்வை அவளை உடனே.. அருகில் வா எனதான் பார்த்தது. பெரிதான ஒரு அறை.. அதில் அடுப்புமூட்டி சமையல் நடந்தது.. பட்டு புடவை.. வெயில் என.. சுபியினால் நிற்கவே முடியவில்லை.. ஆனால், கரணின் பார்வை.. அவளை இங்கேயே இருக்க சொன்னது. பெண்ணவள் என்ன ஆகிற்று எனதான் விழித்தாள். மீறவும் முடியவில்லை.. அவனை. அதற்காக கைபிடித்து கட்டாயப்படுத்தவில்லைதான் கரண்.. ஆனால், என்னமோ அவனின் பார்வை தன் மீது பதியவும்.. அதை மீற முடியவில்லை. என்னமோ சொல்லுகிறது.. அதைவிட என்னமோ தேடுகிறது.. அவனின் பார்வையும் செய்கையும்.

சுபி, அவனை புரிந்துக் கொண்டபிறகு.. புடவையை இழுத்து சொருகிக் கொண்டு.. கணவனோடு சேர்ந்தே உணவு பரிமாறினாள். இப்படியே  அவனுக்கு உதவிக் கொண்டு.. தானும் அந்த வேலைகளை செய்துக் கொண்டும் அங்கேயே நின்றாள். 

குரு விசாகன் இருவரும் சேர்ந்தே இருந்தனர். விசாகனுக்கு, எல்லோரிடமும் புன்னகையோடு பழக.. சுபி குரு இருவரும் முன்பே சொல்லியிருந்தனர். அதனால், விசாகன் எதற்கும் பயமோ தயக்கமோ காட்டவில்லை. கருணா ‘குரு..’ என அழைக்கும் நேரத்தில் இரு பிள்ளைகளும்.. நேராக அங்கே சென்று.. தங்களை.. அறிமுகம் செய்து வைக்கும் நபரிடம் பேச வேண்டும்.. அதில்தான் விசாகன் கொஞ்சம் தயங்கினான். ஆனாலும், குரு கையை பிடித்திருக்க.. விசாகன் “ஹாய் தாத்தா” என சொல்லி.. தன் பெயரினை சொல்லி.. என தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான். பார்ப்பதற்கு அழகாகவே இருந்தது.. சுபியின் பின்னே சென்று மறையவில்லை என்பது இன்னமும் அழகாக.. கரண் அடிக்கடி தூக்கிக் கொண்டான் விசாகனை. விசாகனும் “டாட்.. விளையாட போறேன்..” என சொல்லி இறங்கிடுவான்.

கரண், சுபிக்கு பேசிக் கொண்டே.. உறவுகள் எல்லோரையும் தனித்தனியாக அறிமுகம் செய்து வைத்தான். பின், முன்சொன்னது போல.. விசாகனை முக்கியமான உறவுகளுக்கு அறிமுகம் செய்தான். நிறைய பேச்சுகள் இப்போதும் எழுந்தது.. கரண் பற்றி. ஆனால், காதில் வாங்க அவன் நின்று கேட்கவில்லை. எதை செய்தாலும் பேசத்தான் செய்வார்கள் என எண்ணிக் கொண்டு தன் மனையாளோடு வேலையை கவனித்தான்.

ஒருகட்டத்தில் சுபி ரொம்ப தொய்ந்து போய்  “கரண்.. கால் ரொம்ப வலிக்குது.. நீங்களும் டயர்டா இருக்கீங்க.. ப்ளீஸ் கொஞ்சம் உட்கராலாமா” என்றாள்.

கரண், புன்னகைத்தான் லேசாக “ம்.. போதும் நீ போ..” என்றான், ஆனால், அவன் பரிமாற சென்றான்.

சுபி.. விட்டால் போதேமென.. ஓடிவிட்டாள்.. தன் அன்னை தந்தை மாமியார் மாமனார் இருந்த இடத்திற்கு. பெரிதான பந்தல்.. ஆங்காங்கே கூலர்ஸ்.. என இருந்தாலும் சுபியினால் அந்த வெயிலை சமாளிக்க முடியவில்லை.

ஒருவழியாக எல்லோரும் உண்ணலாம் என பிரகாஷ் வந்து அழைத்தார். பிள்ளைகள் நால்வரையும் சாரதா அப்போதே உண்ண வைத்திருந்தாள்.

சாரதா வந்து நின்றாள் இப்போதுதான் சுபியின் எதிரே, காலையிலிருந்து சுபியை நெருங்கவே முடியவில்லை அவளால்.. அண்ணன் அருகிலேயே நின்றான்.. ‘வா சுபி வந்து கொஞ்சம் உட்கார்’ என்றால் கூட.. கரண் முறைத்தான். பிரகாஷ்க்கு என்ன ஆகிற்று என புரியவில்லை.. அப்படி.. சுபியை யாராலும் நெருங்க முடியவில்லை.

இப்போதுதான் சுபியை பார்க்கவும் “என்ன அண்ணன்.. புதுமாப்பிள்ளைன்னு காட்ட்ரானோ” என்றாள் தன் தோழியிடம்.

சுபி ஒருவிரல் காட்டி மிரட்டினாள்.. தன் நாத்தனாரை.

எல்லோரும் வரிசையாக அமர்ந்து உண்டனர். கரண் தன்னவளோடு அமர்ந்து உண்டான். 

மாலை வரை இருந்து பாத்திரம் பண்டம் எல்லாம் எடுத்து வைத்து.. பந்தல் வாடகை.. சேர்ஸ் கூலர்ஸ் வாடகை.. என எல்லாம் எடுத்து கொடுத்துவிட்டு.. கருணா பிரகாஷ்  இருவரும் வீடு வந்தனர். 

சுபி, நாலு பிள்ளைகளோடு.. நல்ல உறக்கத்தில் இருந்தாள். மற்ற எல்லோரும் ஆங்காங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

கரண், சுபியை தேட.. சாரதா “நீ அவளை வாங்கின வேலைக்கு இன்னும் நாலுநாள் எழமாட்டா.. உள்ளே பிள்ளைகளோடு சேர்ந்து தூங்கறா” என்றாள், அண்ணனுக்கு மட்டும் கேட்ட்கும் குரலில். கரண் ஏதும் காட்டிக் கொள்ளவில்லை தங்கையின் கிண்டலுக்கு. அமைதியாக அம்மா கொடுத்த காபி பருகி அமர்ந்திருந்தான்.. 

விசாலாட்சி காபி கொடுத்துக் கொண்டிருந்தார்.. கேட்டரிங்கில் சொல்லியிருந்தனர். உறவுகளிடம் பேச்சுகள் சென்றுக் கொண்டிருந்தது.

அருணகிரி “நீங்க ரெண்டுபேரும்.. அந்த ரூமில் கொஞ்சம் தூங்குங்க.. ஏழு மணிபோல் கிளம்பலாம்” என்றார்.

பெரியவர்களுக்கு என பெரிய வேன் ஏற்பாடு செய்திருந்தனர்.. சாரதா.. கரண் குடும்பம்.. மட்டும் அவரவர் காரில் வந்தனர். அதனால், காரெடுக்க வேண்டுமே என மாமனார் சொன்னார்.

பிரகாஷ் கொஞ்சம் உறங்கினால் தேவலாம் என சென்று படுத்துக் கொண்டார். 

கரண் போன் பேசி முடித்து அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான். சுபி எழவேயில்லை. ‘என்ன ஆகிற்றோ..’ என தோன்றியது. அந்த அறைக்கு செல்லவும் தயக்கமாக இருக்க.. மெதுவாக அவளது செல்லுக்கு அழைத்தான்.

அவன் நேரம்.. அந்த போன், ஹாலில் இருக்கும்.. ஜார்சரில் இருந்து அலறியது. சாரதா சட்டென பார்க்க.. கட் செய்துவிட்டான், கரண். ஒன்றும் செய்ய முடியாமல் பிரகாஷோடு சென்று படுத்துக் கொண்டான்.

எட்டு மணிக்கு ஒருவழியாக எல்லோரும் கிளம்பினர். முன்னால்.. பெரியவர்களின் வேன் செல்ல.. பின்னால் ஆளுக்கொரு கார் எடுத்து கிளம்பினர்.. கரண் பிரகாஷ் இருவரும்.

சற்று தூரம் சென்றதும்.. சுபி “நான் கொஞ்ச தூரம் டிரைவ் பண்ணவா..” என்றாள்.