ஒருநாள், சுபி தாமதமாக வீடு வர.. காரினை பார்க் செய்துவிட்டு.. காரிலிருந்து இறங்கவில்லை.. அப்படியே அமர்ந்திருந்தாள்.
கரண் சற்று நேரத்தில்.. கீழே வந்தவன்.. சுபியின் கார் இருப்பதை பார்த்துவிட்டு, சுபிக்கு அழைக்க.. அவள் எடுக்கவில்லை. அத்தோடு எதிரே இருந்த காரில்தான் போன் மின்னியது. கரண் பார்த்துக் கொண்டே இருந்தான்.
சுபியோ, தன் போனில் லக்ஷ்மியின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. ‘ஏன் டா.. என்னை விட்டு போனாய்’ என்றாள். அவனிடம் ‘கரண்’ பற்றி பேசவே தயக்கமாக இருந்தது.. என்னமோ குற்றம் செய்வதாக எண்ணம்.. சுபி கண்ணீர் சிந்தினாள்.. மனதுள் ‘லக்ஷ்மி.. எனக்கு பயமா இருக்கு.. கரணை உன்னிடத்தில் வைத்து பார்க்க முடியுமா தெரியவில்லை..’ என நினைத்தாள். ம்.. பெண்மனம்.. நேசத்தை ஏற்க தொடங்கிவிட்டது. அதனால்தான் குழப்பமே.
அந்த நேரம்.. அவளின் காரின் கண்ணாடியை லேசாக தட்டினான் கரண். சுபி அனிச்சையாய் நிமிர.. போனில் ஸ்கிரீன் லைட்டில்.. பெண்ணவளின் கண்களில் கண்ணீர் வைரமாய் மின்ன.. காரின் கண்ணாடியை இறக்கினாள். அப்படியே தன் போனினை மறைத்துக் கொண்டாள்.
கரண் “என்ன மேடம் லேட்.. சாரதா உனக்காக வைட்டிங்..” என்றான். அப்படியே அவள் போனினை தன்னிடமிருந்து மறைப்பதை பார்த்தான்.. “யாரு.. லக்ஷ்மியா.. காட்டு..” என்றான்.
கரண் “என்ன.. அழுதியா..” என கேட்டுக் கொண்டே அந்தபக்கம் சட்டென வந்தவன்.. காரின் கதவினை திறந்துக் கொண்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்தான்.
சுபி “என்ன க..ரண்.. எ..ன்ன” என திணறினாள்.
கரண் “போன் கொடு.. லக்ஷ்மிகாந்தனை நானும் பார்க்கிறேன். எனக்கு மறந்தே போச்சு..” என்றான்.
சுபி இயல்பாகி.. போனினை கரணிடம் கொடுத்தாள்.. அதில், தாஜ்மகால் அருகில் இருவரும் நின்றிருப்பது போல.. புகைப்படம். கரண் கண்கள் முதலில் சுபியைதான் பார்த்தது.. பின் லக்ஷ்மியை பார்த்தான்.. “ம்.. என்ன சொல்றார்” என்றான் சுபியிடம்.
சுபி பதில் சொல்லவில்லை.
கரண் டாஷ்போர்ட்டில் லேசாக தாளம் போட்டான் விரல்களால்.. பின் “சரி விடு, எப்படி இருக்க..” என்றான் ஆழமான குரலில்.
சுபி “மாமாகிட்ட போய்.. கல்யாணம் அது இதுன்னு பேசியிருக்கீங்க.” என்றாள், சாந்தமான குரலில்.
சுபி “கரண்.. எனக்கு நீங்களும் டென்ஷன்தான் கொடுக்குறீங்க..” என்றாள்.
கரண் “ம்.. சரிதான், எனக்கும் அதே டென்ஷன் இருக்கே.” என சொல்லி நேராக பார்த்துவாறு.. “உண்மையை சொல்லவா.. எனக்கும்.. உனக்கும் சப்போர்ட்டா இருக்கத்தான் இந்த மேரேஜ். நீ இதில் எந்தவிதமான.. க்கும்.. எனக்கு எந்த தேவையும் இல்லை.. காலப்போக்கில் நடப்பதை பார்த்துக்கலாம். உன் மாமனாரை நான் சமாளிக்கிறேன்.” என சொல்லி சுபியை பார்த்தான்.
சுபி, கரண் சொன்னதை ஒருமுறை தனக்குள் சொல்லிபார்த்தால்.. ஆழமான வார்த்தைகள்.. நம்ப முடியவில்லை. கரண் சொல்லும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை. இரண்டாம் திருமணம் என்றாலே.. பெரிய நெருக்கடி.. தாம்பதியம்தான். அதை கையாளுவதுதான் அதன் வெற்றியே. இப்போது கரணின் வார்த்தைகள் ஆழமாக.. நாசூக்காக அதை.. காலத்திடம் விட்டதும்.. பெண்ணவளின் பெரிய தயக்கம் மறைந்து போனது.
சுபி கடை கண்ணால்.. ஏக்கமாக ஓரு பார்வை பார்த்தாள்.. குரு, இவளை பார்ப்பது போல ஒரு பார்வை. கரண் அதை ஏற்று.. எதிர்கொண்டு வாங்கி.. இமைக்காமல் அவளை பார்வையால் தழுவினான். இருவருக்கும் முதல் ஸ்பரிச பார்வை.. “பயமா இருக்கு.. கரண்.” என்றாள் முதல்முறை..
வார்த்தைகள் இல்லை அவனிடம்.. கரண் அவளின் கைகளை நோக்கினான்.. பெண்ணவள் பதிலே பேசாத கரணை திரும்பி பார்க்க.. அவனின் பார்வை.. தன் கைகளில் படர்வதை உணர்ந்தவள்.. காரின் ஸ்டியரிங்கில் இருந்த.. தன் விரல்களை மடக்கிக் கொண்டாள்.
கரண், அவளின் கண்களை பார்த்தான்.. அதில் பயம் மட்டுமே.. கரண், அவளின் கைகளை இப்போது துணிந்து தன் கையில் எடுத்துக் கொண்டான். சில்லிட்டிருந்தது அவளின் மென் விரல்கள்.. இரண்டு விரலில் மோதிரங்கள்.. அதனால் வலிக்காமல் அழுத்தமாக அவளின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டான்.. கதகதப்பான கரணின் விரல்கள்.. பெண்ணவளின் நடுக்கத்தை.. லேசாக அதிகரித்து, பின் குறைத்தது.. கனிவான குரலில் “பயம் இருக்கும்.. ஆனால், நிறைய இழப்புகளை பார்த்துட்டோமே.. அதையே கடந்து வந்துட்டோம். கொஞ்சம் சந்தோஷமாகவும் இருக்கலாமே.. ம்.. எல்லாம் சரியாகும்.” என்றான்.
சுபியின் விரல்கள்.. கொஞ்சம் சாந்தம் கொண்டது. ஆனாலும் அவனின் விரல்களோடு இணங்கவில்லை. கரண் “குரு.. விசாகன் இரண்டு பசங்களையும் கொஞ்சம் யோசி.. நாமே பயந்தால் எப்படி. அதிலும் விசாகன் கொஞ்சம் பயப்படுறான்.. என்னை பார்த்தால். அவனை கொஞ்சம் என்கூட பழகவிடேன்” என்றான்.
சுபி ஏதும் பேசவில்லை.. தங்களின் விரல்களையே பார்த்திருந்தாள். கரண், அவளின் கவனம் தன் பேச்சில் இல்லை என உணர்ந்து.. அவளின் விரல்களை, லேசாக அழுத்தி மெதுவாக விட்டான்.
“தாமரை இலை நீர் நீதானா..
தனியொரு அன்றில் நீதானா..
புயல் தரும் தென்றல் நீதானா..
புதையல் நீதானா”
பின் கரண் மீண்டும் அவளின் விரல்களை பற்றினான் “தேங்க்ஸ்.. டென்ஷன் பண்ற..” என்றான், தன் மூச்சினை இழுத்து வாய் குவித்து ஊதி விட்டவன் “சுபி.. என்ன சொல்றது.. ” என சொல்லி அழுத்தி பிடித்தான் அவள் விரல்களை.
சுபி லேசாக புன்னகையோடு பார்த்தாள் அவனை.
கரண் “லவ் யூ” என்றான். கண் நெற்றி மூக்கு தாடை.. என எல்லாம் இருக.. உதடுகள் மட்டும் தளர்ந்து புன்னகையோடு சொன்னான்.
சுபி வார்த்தைகளால் அல்லாமல்.. அவனின் விரல்களை.. அவனைப்போலவே இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.. ஆம் என்பதாக தலையசைத்தாள்.. அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.
கரண், அவளின் விரல்களை.. மெதுவாக விடுவித்து.. அவள் மோதிரத்தி.. சரிசெய்து விட்டு “அதெல்லாம் ஒண்ணுமில்ல.. சரியாகிடுவ, பயத்தை குறை.. வா சாரதா வெயிட் பண்றா, விசா குரு சாப்பிட சொன்னேன்.. வா போலாம்” என சொல்லி.. தலையை கோதிக் கொண்டே.. காரின் கதவினை திறந்துக் கொண்டு இறங்கினான், பொறுப்பான காதலனாக. சுபி, இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள்.
சுபியும் இறங்கி.. கரணின் வீடு நோக்கி சென்றாள்.
சாரதா இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் வாசலில். இப்போது இருவரும் காரிலிருந்து இறங்கி வந்தது தெரிந்தது.. கரண் முதலில் வந்தான். தங்கை “என்ன டா நடக்குதிங்க” என்றாள்.
கருணா இயல்பாக “வா சொல்றேன்” என முன்னாள் நடந்தான்.. சாரதா “வா சுபி.. ஈவ்னிங் வீட்டுக்கு வந்தேன்.. ப்ரைடே கூட சீக்கிரம் வரதில்லையாம்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால்தான் என்ன” என்றாள்.
சுபிக்கு, கரணின் தாக்காத்திலிருந்து இன்னமும் மீளவில்லை அதனால்.. “ம்ம்ம்..” என்றாள்.
சுபி சரியாக கவனிக்கவில்லை.. சாரு இப்படி சொல்லவும்.. உடனே வாழ்த்தினாள் “ஓ.. சாரி சாரு.. ஹாப்பி வெட்டிங்டே” என்றாள்.
சாரதா “தேங்க்ஸ், இன்னிக்கு இல்ல.. செவ்வாய்கிழமை ஈவினிங்.. அண்ணாவோட ரிசொர்ட்ல சின்ன பங்க்ஷன்.. நீ விசா கண்டிப்பா வரணும்.” என சொல்ல.. வீட்டின் உள்ளே வந்திருந்தனர்.
பின் பிரகாஷிடம் “எப்படி இருக்கீங்க..” என்றாள். அவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். பிள்ளைகள் நால்வரும் உண்டுக் கொண்டிருந்தனர்.
விசாகன் எழுந்து வந்தான்.. குருவும் அவன் பின்னாலேயே வந்தான்.. விசாகன் “அங்கிள் நீ வர லேட் ஆகும் சொன்னாங்க.. பாட்டிக்கிட்ட கேட்டுட்டுதான் சாப்பிட்டேன்” என்றான்.
சுபி “எனக்கு டைம் ஆகும் குரு, நீ சாப்பிடு, இன்னொருநாள் உன்கூட சாப்பிடுறேன்” என்றாள்.
இருவரும் உள்ளே சென்றனர்.
கரண்.. போனில் பேசிக் கொண்டிருந்தான்.. சற்று தூரமாக. இதெல்லாம் அவனின் பார்வையில் விழும் தூரத்தில் இருந்தது.
அருணகிரி “எப்படிம்மா இருக்க… பார்க்கவே முடியலை.. உன் அப்பா சொல்லிட்டு இருந்தார்.. உன் மாமனார் பத்தி. என்னமோ போ.. நல்லது பண்றதா நினைத்து, அவர் இப்படி பண்ணிருப்பார். நீ கவலைபடாத.. எல்லாம் சரியாகிடும்” என மெல்லியகுரலில் எதோ பேச தொடங்கினார்.
விசாலாட்சி அருகில்தான் அமர்ந்திருந்தார்.. அவரும் ஆறுதலாக பேசினார்.
சாரதா பிரகாஷ் இருவரும்.. மற்ற இருவரையும் ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.
விசாகன் உண்டு வந்தான்.. சுபி எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினாள். சுபி கரணிடம் எப்படி சொல்லுவது என தயக்கம்.. அதனால், திரும்பி பார்த்தாள்.. அவனோ போனோடு.. வந்தான். கையசைத்தான்.. சுபி தலையசைத்து கிளம்பினாள். பெரியவர்கள் வரை இந்த செய்கை கவனம் ஈர்த்தது.
விசாகன் “குரு இன்னிக்கு அவங்க அத்தையோடு ஊருக்கு போறான்.. நான் என்ன பண்றது..” என தொடங்கி.. என்ன விளையாடினார்கள்.. கரண் எப்போது அழைத்து வந்தான்.. என்ன வரும் வழில் உண்டனர் என பேசிக் கொண்டே வந்தான்.