கரண் “எந்த மாமா.. உன் மாமனாரா? அவன் உன் பையன். எதோ அவசரத்தில் கூட்டி போயிருப்பார்.. நீ கூட்டிட்டு வந்திடு ஏதும் பேசாத. அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றான் திடமான யோசனையாக.
சுபி “ஓகே.. நான் போறேன்”என்றாள் உடனே பெண்ணும்.
அவனோ “உன்னால் டிரைவ் பண்ண முடியுமா.. வேண்டாம் டா.. நான் டாக்ஸி புக் பண்றேன்.. நீ பைபாஸ் வந்திடு.. நாம போயிடலாம்..” என்றான்.
சுபி “உனக்கு புத்தி இருக்கா இல்லையா.. நீ எப்படி என்கூட வருவா.. நான் என் காரில் போறேன்.. எனக்கு ஒண்ணுமில்ல.. நீ உன் வேலையை பாரு.. கம்பளைன்ட் கொடுத்தால் லேட் ஆகும்.. நான் விசாகனை கூப்பிட போறேன்.. கரெக்ட்.. அதுதான் சரி.. பைய்..” என்றவள் அழைப்பினை துண்டித்தாள்.
கருணாவிற்கு புன்னகைதான்.. கொஞ்சம் பயமும்தான். எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விடுவளா என எண்ணம்.. மற்றபடி அவன் கொடுத்த யோசனையில் எந்த தயக்கமும் இல்லை அவனுக்கு. அடுத்து என்ன செய்வதென அவனுக்குதான் தெரியவில்லை.
கரண், பைபாஸில் காரோடு காத்திருந்தான்..
அவள் வரும் நேரம் உணர்ந்து அழைத்தான்.. “எங்க இருக்க..” என்றான்.
சுபி பதில் சொன்னாள். சற்று நேரத்தில் அவள் கார் வருவது அறிந்து.. போன் செய்து தான் நிற்கும் இடம் சொல்லி நிறுத்த சொன்னான். ம்ஹூம்.. பெண்ணவள் முடியாது.. என சொல்லி நேராக சென்றுவிட்டாள். கரண் அவளை பின் தொடர்ந்தான்.
சுபி நல்லவிதமாக வண்டியை செலுத்தினாள். அவன் வருவதை உணர்ந்தாள்.. மிரர் வழியாக. ஆனால், தடுக்கவில்லை.
மாலை நேரம்.. சுபி தன் மாமனார் வீட்டின் முன் நின்றாள். எப்படி வந்தால்.. எது செலுத்தியது அவளை என தெரியவில்லை.. பிள்ளையை காண வந்துவிட்டாள். இறங்கி நிற்கவும் காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.. அது அவளுக்கு மட்டும்தானே தெரியும். அப்படியே காரில் சாய்ந்து நின்றாள்.. தனியான பெண் சிங்கம் போல.
சுபியை பார்த்து.. வீட்டில் எல்லோருமே அதிர்ந்தனர்.. விசாகன் பால் குடித்துக் கொண்டிருந்தான். உள்ளே செல்லவில்லை பெண். அவளின் மாமனார் வெளியே வந்தார்.. முறைத்துக் கொண்டு நிற்கவில்லை மருமகள்.. கண் கலங்க நின்றாள்.
அந்த பெரியவருக்கு.. ஆடிப்போனது சர்வமும், அவளின் முரணான தோற்றம் கண்டு.. திமிராக காரின் மேல் சாய்ந்துக் கொண்டு.. கண்களில் கண்ணீரோடு நிற்பவளை பார்க்க.. நெறி பிழறிய தன் நிலை சட்டென நினைவு வந்தது கண்முன்.
ஆனாலும் நிதானித்து “உள்ளே வா.. சுபிம்மா” என்றார்.
கருணா தூரத்தில் நின்றுக் கொண்டான்.. என்ன நடக்கிறது என பார்ப்பதற்காக நடந்து வந்தான். ஆனால், அவனின் நடை உடை பாவனை எல்லாம் வேறாக இருக்க.. ‘நம்ம ஊர் இல்லையே இவர்’ என எல்லோரும் வேடிக்கை பார்க்க.. கருணா மீண்டும் காரில் சென்று.. தூரமாக நின்றுக் கொண்டான்.
மாமனார்க்கு, பயம்தான் முன்பே.. பங்காளியின் முன் சம்பந்தி பேசிவிட்டாரே என ஆத்திரத்தில் பேரனை கொண்டு வந்துவிட்டார். ஆனால், மருமகள் பேரனில்லாமல் இருக்கமாட்டாள்.. தான் இப்படி கூட்டி வந்தது தவறு எனவும் எண்ணம்தான்.
ஆனால், வீரா தைரியம் சொன்னான்.. ‘நாம என்ன செய்ய போறோம் சித்தப்பா.. எல்லாம் அவர்கள் நல்லதிற்குதானே.. என்னையும் யோசிங்க’ என்றான்.
சுபியின் மாமனார் தைரியமாகினார்.
மருமகள் இப்படி வந்து நிற்பாள் என எண்ணவில்லை. என் பேச்சினை மீறமாட்டாள் என எண்ணம் அவருக்கு.. அன்று பேசியதற்கே.. கார்த்திக்கிடம் பஞ்சாய்த்து.. மன்னிப்பு.. என வந்து சேர்ந்தே. அதனால் சுபி அமைதியாகிடுவாள்.. பிள்ளைக்காக ஒத்துக் கொள்வாள் என எண்ணிவிட்டார்.
இப்போது சுபி கண்ணீரோடு நிற்கவும் பயந்துவிட்டார்.. வீராவிற்கு யாரோ வேலை செய்பவர்கள் அழைத்து சொல்லிவிட்டனர்.. அவன் வந்துக் கொண்டிருந்தான்.
சுபி “மாமா, விசாகன் எங்கே” என்றாள்.
வினு “வா வா.. சுபி.. உள்ளே வா.. ஏன் இங்கேயே நிற்கிற” என மாமானாரையும் விட்டு கொடுக்க முடியாமல், சுபியையும் சாமாதானம் செய்ய வேண்டுமே என திணறினாள்.
விசாகன் ஓடி வந்துவிட்டான் அன்னையிடம்.. “ம்மா..” என கால்களை கட்டிக் கொண்டான்.. அப்போதுதான் அந்த அன்னையின் நடுக்கம் நின்றது. மகனை தூக்கி எடுத்துக் கட்டிக் கொண்டாள். விசாகனை விடமாட்டேன் என இறுகிக் கொண்டாள் தன்னோடு.. நெற்றி கன்னம் மூக்கு உதடு என பிள்ளையை முத்தம் வைத்து அணைத்துக் கொண்டாள் மீண்டும். குழந்தையும் ஏதும் பேசவில்லை, அன்னையின் கழுத்தை கட்டிக் கொண்டது..
பார்த்திருந்த மாமனாருக்கு சங்கடமாக போனது..
சுபியிடம் மாமனார் “சுபி, உள்ளே வாம்மா.. பேசிக்கலாம்.. வா.. எதோ பேரனை ஆசையாக கூட்டி வந்துட்டேன்.. என்ன இப்போ..” என்றார் தன்மையாக.
சுபி முறைத்தாள்.. தைரியமாக.
மாமனாரின் பேச்சு நின்றது.. மகனை காரின் உள்ளே அமர வைத்தாள்.
வினு “அவசரப்படாத சுபி.. பேசிக்கலாம்.. ஸ்ரீ மாமா வந்திடுவாங்க.. உள்ளே வா.. நீதான் எங்களுக்கு முக்கியம்.. இது எதோ” என சொல்ல சொல்ல.. மாமனார் உள்ளே சென்றார்.
சுபி சத்தமாக “வேண்டாம்.. என்னோட உறவு.. உங்க பையனோடு முடிந்தது. இனி என்னையும் என் பையனையும் நிம்மதியாக வாழ விடுங்க ப்ளீஸ்.. அது போதும் எனக்கு” என்றவள் “சாரி வினு க்கா” என சொல்லி காரினை ரிவர்ஸ் எடுத்து கிளம்பினாள்.
வீராவேசமாக கிளம்பிதான்விட்டாள்.. ஆனால், சுபிக்கு இப்போதுதான் காரினை செலுத்த முடியவில்லை.. என்னோ உடலெல்லாம் தளர்ந்தது.. மெதுவாக காரினை செலுத்திக் கொண்டிருந்ததாள்.
இன்னமும் நேரம் அவளை விடவில்லை போல.. எதிரே வீரா வந்தான். அவள் காரினை பார்த்தவன்.. அவளை பின் தொடர்ந்து.. பின், அவள் காரின் எதிரே நின்றான். ஊர் சாலை.. ஒன்றிரண்டு வண்டிகள் சென்றதே தவிர அந்த நேரத்தில் கூட்டம் என ஏதுமில்லை.
வீராவின் வண்டி எதிரே நிற்க.. தன்போல கார் நின்றது சாலையில்.
வீரா, இறங்கி வந்து காரின் கதவினை தட்டி.. “இறங்கு சுபி” என்றான். பெண்ணவள் காரின் ஜன்னல் கூட திறக்கவில்லை. வீரா விடாமல் தட்ட.. சுபி இப்போது ஹாரன் ஒலிக்க விட தொடங்கினாள்.
கருணா சற்று தூரத்தில் இருந்தவனுக்கு இந்த சத்தம் கேட்டது.. கொஞ்சம் பயமாக கூட இருந்தது.. என்னவென பார்க்கலாம் என வண்டியெடுக்க.. இப்போது சுபியின் கார் அவன் காரினை தாண்டி சென்றது.
ம்.. வீராவினை, வண்டியில் போவோர் வருவோர் பார்க்க.. சுபி கார் கதவினை திறக்காமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்க.. வீராதான் நகர வேண்டியதாக இருந்தது.
கருணா, சுபியை பின்தொடர்ந்தான்.. அப்படியே போனில் அழைத்தான்.
சுபி அவனின் அழைப்பினை ஏற்கவில்லை. நிதானமாகத்தான் கார் சென்றது. அதிக வேகமில்லை.. பெண்ணவளின் நினைவு முழுவதும்.. தன் மாமனாரிடமே இருந்தது.. ‘என்ன இது’ என. சற்று நேரத்தில் பெட்ரோல் லோ என இண்டிகேட் செய்யவும்தான் கொஞ்சம் இயல்பானாள் சுபி.
பைபாஸில் பெட்ரோல் பங்க ஒன்றில்தான் காரினை நிறுத்தினாள் பெண். ஹப்பா.. கருணா தன் காரினையும் நிறுத்தி.. அவளிடம் வந்தான். தளர்ந்து அமர்ந்திருந்தாள்.. கலைந்த சிகை.. ஓய்ந்த கண்கள்.. வெளிறிய முகம் என.. அகதியாக அமர்ந்திருந்தாள் சுபி காரில்.
பெரிய முடிவுகள் எல்லாம்.. எதோ யோசித்து ஆராய்ந்து.. பகுத்து வகுத்து.. பார்த்து எடுக்கபடுபவை என எல்லோரும் சொல்வதுண்டு. ஆனால், கரணின் முடிவு.. இந்த நொடியில் நிகழ்ந்துவிட்டது ‘இவளில்லாமல் இனி என் நாட்கள் இல்லை’ என சட்டென முடிவெடுத்துக் கொண்டான் அவளின் அயர்ந்த.. அரண்டுபோன தோற்றத்தில்.
சுபி சொன்னதை செய்தாள். கரண் காரினை ஓரமாக நிறுத்துவிட்டு.. விசாகனை அழைத்துக் கொண்டு.. பங்க ஆபீஸ்சில் சென்று எதோ பேசி வந்தான்.
பின் சுபியிடம் வந்தான் “சுபி.. என் காரில் போலாமா.. நீ டயர்டா தெரியுற.. ம்.. விசாகன் கொஞ்சம் டென்ஷனா இருக்கான்.. வா.. இந்த காரில் போலாம்” என்றான்.
சுபிக்கு உண்மையாகவே முடியவில்லை.. கண்ணில், அடுத்து என்னவெல்லாம் நடக்குமோ என எண்ணம்தான்.. சொல்லபோனால் பீதிதான் அவளுக்கு இருந்தது. கார் ஓட்ட முடியவில்லைதான். கரண் கேட்கவும் பின் சீட்டில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
கரண் விசாகனுக்கு இளநீர் வாங்கி கொடுத்தான்.. சுபி அதெல்லாம் வேண்டாம் என படுத்துக் கொண்டாள். கருணா விசாகனோடு பேசிக் கொண்டே.. அவனுக்கு பிடித்த பாடல் போட்டுக் கொண்டே டிரைவ் செய்தான். சுபி உறங்கியிருந்தாள்.
வீடு வந்தனர்.. விசாகன் இறங்கி தன் வீடு செல்ல.. கதவு பூட்டி இருந்தது. தன் அன்னையின் பாகில் சாவி இருக்கும் என சொல்லி.. விசாகன் அதை எடுத்தான். வீட்டின் கதவை திறந்து சென்றான்.
சுபி இன்னமும் எழவில்லை.. கருணா அவளை எழுப்ப.. விழிப்பே இல்லாமல் உறங்கினாள் பெண். கருணாகரன் நிதானமாக.. அந்த இரவு நேரத்தில்.. எதை பற்றியும் கவலைபடமால், சுபியை கைகளில் ஏந்திக் கொண்டு அவள் வீடு நோக்கி சென்றான்.