Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 27
 நீண்ட நாளுக்குப் பின் சுசிலா மும்பையிலிருந்து சென்னை வீட்டிற்கு வந்திருந்தார்.
சுசிலாவின் தகப்பனார் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமலிருக்கவே மும்பை அலுவலகம் மீண்டும் இவர் வசம் வர, வேலை சுசிலாவை அதிகமாய் இழுத்து கொண்டது. அங்கேயே இருந்து தகப்பனாரை பார்த்துக்கொண்டு அவ்வப்போது சென்னைக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார்.
இன்று சென்னை வந்திருக்க, அவரைப் பார்க்கும் பொருட்டு மீனாட்சி பாட்டியும் சமயலறையைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
கண்ணனைப் பார்த்து நான்கு நாளாகி விட, வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்த சுதாவிற்கோ கண்ணனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.
என்றும் போல் இல்லாமல் சீக்கிரமே வந்து விட்டாள். நான்கு நாள் முன்பு வேலை விஷயமாய் மும்பை சென்றிருந்தான். இன்று இரவு வருவான் என்று தெரியும்.. நாளை காலை வேலைக்கு போகவேண்டும். பார்க்க வாய்ப்பில்லை. நாளை மாலை தான் பார்க்க முடியும்.
அதுவரை…? இன்றே பார்க்கவேண்டும் என்ற ஏக்கம். எப்படி பார்ப்பதென்ற எண்ணம் மட்டுமே. அவனிடம் காலை பேசியது.. ஃபோன் காளும் போய்ச் சேரவில்லை.
உடையை மாற்றிவிட்டு அடுக்களைச் சென்றவள், “என்ன பாட்டி இந்நேரம் சிக்கன் கழுவீட்டு இருக்கீங்க?” என
“சுசிலா வந்திருக்கா.. அது தான் பிள்ளையைப் போய் பார்க்கலாம்னு..”
“பாத்து எவ்வளவு நாள் ஆச்சு? நானும் வாரேன் பாட்டி… க்ளீன் பண்ணி, மசலா போட்டு வச்சிடுங்க… நான் பண்றேன்.”
சிக்கன் கிரேவியும், காய் கறி குறுமாவும் செய்து அடுப்பைக் குறைந்த நெருப்பில் வைத்துவிட்டு, கிளம்பச் சென்றாள்.
குளித்து விட்டு வந்தவள் எதை உடுத்தலாம் என்று வாட்ரோபை திறந்து வைத்துக் கொண்டிருந்தவள் கண்ணில் பட்டது, அவள் முதல் முதலில் உடுத்திய பெரிய பாவாடை. அதை ஆசையாய் நீவ, அவள் பனை மரம் தான் அவள் நினைவில். இன்னும் அதிகமாய் அவனை மிஸ் செய்தாள்.
அனார்கலி முறையில் பத்து மீட்டர் சில்க் ஷிபானில் அவளே தைத்திருந்தாள். அவள் ஓடினால் அழகாய் காற்றில் பறந்து வருவது போல இருக்கும். ஹால்டர் நெக் சட்டையோடு போட்டுக்கொண்டாள். சட்டையும் படிந்து வளைவுகளை அழகாய் எடுத்துக் காட்ட.. பார்த்த பாட்டி, “வெளியில் போறியா சுதா? சுசி வீட்டுக்கு வாலியா?” என்று ஒரு முறைப்பையும் வாங்கிக் கொண்டார்.
“நீ இத ரெண்டையும் எடுத்துக்கோ.. இப்போ தான் 5:30 ஆகுது. சுசி அதுகுள்ள நாலு தரம் ஃபோன் போட்டுட்டா..”
சுசிலாவிற்க்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி இருவரையும் பார்த்ததில். சுதாவைக் கட்டிக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டவர்.. “என் கண்ணே பட்டிடும் உன் மேல..” என்று கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
“என்ன பண்ணியிருக்கீங்கமா… என்னமா மணக்குது” என்று உணவு பொருட்களை அடுக்களைக்குள் கொண்டு சென்றவர், “சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சிடலாமா?.. இல்ல புலாவ்.. ஃப்ரைட் ரைஸ் பண்ணலாமா?” என்ற கேளிவி எழுப்ப
“நான் இல்ல சுசி.. சுதா தான் செஞ்சா.. இப்போ எல்லாம் அவளே எல்லா வேலையும் செஞ்சுடுரா, எனக்கு ஒரு வேலையும் இல்ல..” என்று இருவரும் பேசிகொண்டிருக்க
கதவில் சாய்ந்து கொண்டிருந்தவள் மனமோ, ‘அம்மா முத்தம் எல்லாம் குடுக்கராங்க.. பெத்து வச்சிருகது ஒரு சன்னியாசி..’ மனம் சொல்ல உதடு விரிந்தது. ‘இது என்ன சுதா புது ஆசை’ தலையில் மெல்லத் தட்டிக் கொண்டாள்.
இத்தனை மாதத்தில் அவன் அவளைச் சீண்டி இருந்தான். தனிமையில் இருக்கையில் கைகளில் முத்தம் கொடுத்திருக்கிறான்.  ஏன் சுசீலாவைப் போல் அவனும் நெற்றியில் அல்லது உச்சந்தலையில் முத்தம் தந்ததும் உண்டு.. 
ஆனால் அவள் உள்ளம் இன்று வேறு எதையோ எதிர்பார்க்க, ‘முழுங்கர மாதிரி பாக்கரதோட சரி..’ ஒரு நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து.
ரகசிய குரலில், “என்ன மூச்செல்லாம் பெருசா இருக்கு?” அவள் பின்னிலிருந்து இடையோடு தூக்கி அவளை அடுக்களையின் பின் சுவரின் அருகில் நிற்கவைத்தான். அவன் தான்.. அவனே தான்.. இன்ப அதிர்ச்சியிலிருந்து அவளால் வெளிவரமுடியவில்லை. மனது எப்படி எல்லாமோ அலை பாய.. ஏதேதோ உணர்ச்சி கலவை.
தன் புறமாய் அவளைத் திருப்ப, கண்களை மூடி இருந்தாள். கண்கள் மட்டும் தான் மூடி இருந்தது. எல்லா உணர்ச்சிகளும் விழித்து விட்டது.
“என்ன லட்டு.. பாக்க மாட்டியா?” வாயில் எதையோ அரைத்து கொண்டே கேட்டான்.
“…”
“என்ன கொஞ்சம் பாரேன்..” கொஞ்சலாய் கேட்டான்.
கண்களைத் திறந்து அவன் முழு உயரத்திற்கும் விரித்து பார்த்தாள். ஏக்க பார்வை.. என்னை விட்டுச் சென்றுவிட்டாயே என்ற ஏக்க பார்வை. கண்கள் தானாய் இரண்டு சொட்டு தண்ணீரை உருட்டி வெளியே விட, குனிந்து அவள் கண்களின் இமைமேல் அவன் இதழ் பதித்தான். ஆழ்ந்த முத்தம்.. ‘நானும் உன்னை மிஸ் செய்தேன்..’ என்றதைச் சொல்லியதோ?
அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன்,“ரொம்ப மிஸ் செஞ்சியா?” எனவும்
“ம்ம்ம்.. ரொம்ப..” என்றாள்.. சிறுபிள்ளையாய்
“நான் கூட”
“ஓ அதனால தான் போனதுல இருந்து பேசிட்டே இருந்தீங்களா?” சண்டைக்குத் தயாரானாள்.
அவன் சமாதானக் கொடி பரக்க விட்டான். “பேச முடியல டா.. ஏக பட்ட மீட்டிங்க்ஸ்.. வேலை. ரொம்ப நாளுக்கப்புறம் போகவே தாத்தா.. சொந்தங்கள்.. ஃப்ரண்ட்ஸ்.. உன்ன பாக்கணும்னு சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சிட்டு, இருந்த டிக்கட்ட கேன்சல் பண்ணிட்டு, நாலு மணி நேரம் முன்னாடியே அம்மாவோட வந்துட்டேன். அம்மா இருந்தா நீயும் இங்க வருவனு தெரியும்..”
“கண்ணா.. யாரு வந்திருக்கானு வந்து பாரு..” அடுக்களையிலிருந்து அம்மாவின் சத்தம் செவியில் விழ, அவளைத் தன்னை விட்டுப் பிரித்தவன், ஓரடி பின் சென்று, “யாரு வந்திருக்கா.. பாக்கட்டும்” என்று அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளக்க.. அவன் விழுங்கும் பார்வையில் அவன் கன்னம் சிவக்க, கைகளால் முகத்தை மூடிக் கொள்ள மட்டும் தான் முடிந்தது. அவனின் நீண்ட பெருமூச்சில் கையை எடுத்தவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“இப்போ நீங்க எதுக்குப் பெருமூச்சு விட்டீங்க?”
அவள் வாயை கைகளால் மூடியவன், “சத்தம் போடாத… நீ எதுக்கு அப்போ பெருமூச்சு விட்ட?” கிசிகிசுத்தான்.
“அது கம்பனி சீக்ரட்.. வெளில சொல்ல முடியாது..” என்று அவன் கைக்குள்ளே உதடு உரைய, அவனுள் அனல் பரவியது. கையை மெதுவாய் நகர்த்தியவன் பார்வை அவள் உதடில் நிலைத்தது. உதட்டின் மென்மை உள்ளங்கையில் கதகதப்பை ஏற்படுத்த, அந்த மென்மையை அனுபவிக்க மனம் துடிக்க ஆரம்பித்தது.
அவனுள் பற்றி எரிந்த நெருப்பு அவன் விழி வழி அவளையும் பற்றிக் கொள்ள, இருவர் இதயமும் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது. அவளை இடையோடு தூக்கி அவன் இதழை அவள் இதழோடு ஒற்றவும், இருவர் உடலிலும் மின்சார பாய்வது போன்ற உணர்வு. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை குளிர்ச்சியும் உஷ்ணமும் ஒன்று சேர புரட்டிப் போட்டது.
அவன் இதழ் பிரிக்கவும்,  “கண்ணா… கொஞ்சம் வந்திட்டு போ…” என்ற சத்தம் அவனை அப்படியே நிருத்த. அவனின் மனம் எப்பொழுதும் போல் ‘டேய்.. கல்யாணம் முன்னாடி என்ன டா வேல இது.. கன்ரோல் யுவர்செல்ஃப்’ என வார்னிங் கொடுக்க,
வட போச்சே எஃபக்டில் சோகமே உருவாக அவளை மெதுவாய் கீழே விடவும், அவன் ட்-ஷர்டோடு அவனை இழுத்து அவன் ஆரம்பித்ததை அவள் முடித்தாள்.
நீண்ட முத்தம்… அவள் கண்களைத் திறந்து பார்க்க, அவன் கண்கள் மூடியே இருந்தது. அவளை தன்னோடு அணைத்துப் பிடித்திருந்தவன் வேருலகத்தில் இருந்தான். ஆழம் தெரியாமல் விஸ்வாமித்திரன் தவத்தைக் களைத்தாள் மேனகை. இதழை அவள் பிரித்தெடுக்கவும் கண்களைத் திறந்தான்.
“அம்மா கூப்பிடாங்க… போங்க..” அவன் கைகளிலிருந்து தன்னை விடுவித்தவாறே கூர
ஓரடி எடுத்து வைத்தவன் மீண்டும் வந்து அவளை தன் முழு பலத்தோடு இறுக அணைத்து விட்டு, அதே அழுத்தத்தோடு அவள் இதழில் அவன் இதழை ஒற்றி எடுத்தான்.
“அதிரசம் நல்லாவே இருக்கு” என்ற அவள் கூறியதைக் கேட்டவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. செல்லமாய் “போடி..” என்றுவிட்டுச் சென்றான்.
அம்மாவிடம் பேசிவிட்டு அவன் வெளியில் வர அவள் ஹாளில் இல்லை. “அம்மா ஆச்சா? மொட்டை மாடிக்குப் போகலாமா?”
“நீ போ.. பின்னாடியே வரோம்.. சுதா எங்கனு பாரு.. எப்பவும் போல தோட்டத்தில இருக்கப் போரா..”
சரி என்றவன் நேரே சென்றது அவனறையை நோக்கி. பால்கனியில் சூரிய அஸ்தமனத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வந்தவன் மார்பில் வானத்தை பார்த்துக்கொண்டே பின்னோடு சாய்த்தவள்,
“ரொம்ப அழகா இருக்கில்ல? காலைல பூரா வேல பார்த்துட்டு, அதோட கடல் காதலிக்குள்ள போய் நிம்மதியான நித்திரை..”
சூரியன் மறையும் வரை அவன் அவளை அணைத்தவாறே அதை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.
“அம்மா மேல மொட்டை மாடியில நம்மள தேடுவாங்க.. போலாமா?”
அவன் கேள்வி அவள் காதில் விழுந்தா தெரியவில்லை. அவள் வேறு எண்ணக் கடலில் மூழ்கியிருந்தாள். கடலை பார்த்துக்கொண்டே கேட்டாள், “கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று
இந்த நான்கு நாட்கள் அவனைக் காணாமல், பேசாமல் அவள் அவளாயில்லை. மனைவியாய் இருந்தால், இப்படி அவனைக் காண வரக் காரணம் தேட வேண்டாம் என்ற எண்ணமே. 
யோசித்துப் பார்த்தால் மற்ற கதலர்கள் போல் அப்படியெல்லாம் அவர்கள் அதிகம் பேசியது கூட இல்லை. பார்க்கும் வேளையில் வார்த்தையோடு இதய பரிமாற்றம். அவள் குட்டி நட்பின் வட்டம் கூடவே இருக்க நட்பு பேச்சுகள் மட்டுமே..
மணிக் கணக்கில் கைப்பேசியோடு இருந்ததே இல்லை. அவள் பேச ஆரம்பித்த அடுத்த நிமிடம் வேறு காள் அவனுக்கு வந்திவிடும்..
அவளுக்கு போதவில்லை. அவன் வேண்டும்.. அவள் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அவனோடு இருக்க வேண்டும் என்ற ஏக்கம்.
அவனுக்கோ அவனை விழுங்கி விடும் அளவு வேலை. அதுவும் இப்பொழுது எடுத்திருக்கும் ‘லண்டன்-ஸ்விஸ்’ வேலை அவனை முழுவதுமாய் தன்னுள் இழுத்து கொண்டது. அவனுக்குள்ளும் ஒரு ஆசை.. சுதாவோடு ஆசை தீர இருக்க வேண்டும் ஒரு காதலனாய்.. அதன் பின் திருமணம் என்று.
அவளை தன் பக்கம் திருப்பியவன், “கொஞ்ச நாள் போகட்டுமே.. இப்போ தானே காதலிக்கவே ஆரம்பிச்சிருக்கோம்.. ரெண்டு பேருக்கும் வயசென்ன? அதுக்குள்ள எதுக்கு?”
“அம்மாட்டையாது சொல்ல வேண்டாமா?”
“கதையை கெடுத்தியே… அம்மாக்கு தான் தெரியவே கூடாது. உடனே ஆரம்பிச்சுடுவாங்க அவங்க வேலைய… நான் சொல்றவரைக்கும் மூச்!” என்றான்
அவள் ஒன்றும் சொல்லவில்லை.  அமைதியாய் மாடிக்குப் படி ஏறினாள். ஏமாற்ற வலி. தனிமை அவளை அதிகமாய் வாட்டியது. தோழர்கள் இருந்தாலும்.. அவளுக்கென்று கண்ணன் இல்லை என்ற உணர்வு என்ன தள்ளியும் ஒட்டிக்கொண்டது..
அதை அதிகப் படுத்தியது பாட்டியே. இப்பொழுதெல்லாம் பாட்டி ஒரு ஒட்டுதல் இல்லாமல் பேசுவது நன்றாய் தெரியத்தான் செய்கிறது.. ஆனால் அதற்கு அவள் என்ன செய்ய வேண்டும்? தெரியவில்லை. 
அன்றும் அப்படி தான், “சுதா.. உன் அப்பா வேற ஆளு.. நம்மதுல உனக்கு மாப்பிள்ளைக் கிடைக்காது. நீ உன் அத்த மகனை கட்டிகரது தான் நல்லது. இவ்வளவு நாள் அவன் கூட அங்க தானே இருந்த.. நான் அவங்கட்ட பேசறேன். காலா காலத்துக்கு அவன கட்டிட்டு பொழப்ப நடத்து. தேவ இல்லாம இங்க சுத்திட்டு இருக்காத!”
அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தொழனாய் கணவனாய் அவளுக்காக நேரம் ஒதுக்கும் உறவாய்.. கண்ணன் அவளுக்கு வேண்டி இருந்தது.
அவன் மாட்டவே மாட்டேன் என்றது போன்ற வலி. ‘அப்போ என்னை மாதரி அவர் என்னை மிஸ் பண்ணலியா? நான் அவருக்கு அவ்வளவு தானா?’ மனம் தேவையில்லாமல் கண்டதையும் அசை போட ஆரம்பித்தது.
அவன் அவளருகில் செல்லும்முன் சுசிலாவும் பாட்டியும் வர, அவரோடு போய் அமர்ந்து கொண்டாள். வழக்கம் போல சுசிலா பூவை கட்டி சுதா தலையில் வைத்து அழகு பார்க்க தவரவில்லை.
அவள் யாரிடமும் பேசாதது, அவனைப் பெரிதும் பதித்தது. காரணம் அவன் அறிந்ததே..
அங்கேயே சாப்பிட்டு பேசிக்கொண்டிருக்கவும், சுசிலா மடி மீது தலை வைத்து சுதா படுத்துக் கொள்ள, சுசிலா அவளின் தலையைக் கோதி விட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.
கடற்காற்றும், சுசிலாவின் சுகமான கோதலும், நான்கு நாள் தூக்கமின்மையும் ஒன்று சேர அப்படியே தூங்கிப்போனாள். மணி பத்தை தொட்டும் அவள் எழுந்திருக்கவில்லை. அவளை மெல்ல அழைத்துப் பார்த்தும் அவள் அசையவில்லை. ஆழ்ந்த உறக்கம்.
பாட்டி அவளை உலுக்க, சுசிலா தான், “மா.. பாவம் அவள எதுக்கு இந்த ஆட்டு ஆட்டுறீங்க.. குழந்த பயந்திடப் போரா..” பதறினார்.
ஆனால் அது ஒன்றும் நம் சுதாவை அசைக்கவில்லை. அவள் இன்னும் சுசிலா இடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு மடியில் ஒன்றிக் கொண்டாள்.  சுசிலாவிற்குத் தான் மனதே இல்லை அவளை எழுப்ப.
பார்த்துக்கொண்டிருந்த அஷோக்கிற்குப் புன்னகை விரிந்தது. ‘மேடம் இப்படி தூங்கினா என் கதி? கொஞ்சம் கஷ்ட்டம் தான்..’ என்ற நினைப்பு அவன் புன்னகையை விரிவு படுத்தியது.
கைப்பேசி அழைக்கவும் அஷோக் அவ்விடம் விட்டு அகன்று விட்டான். பாட்டி என்ன உலுக்கியும் கும்பக்கர்ணீ எழுப்பினால் தானே.. “ம்மா.. ப்ளீஸ் கௌரி.. இன்னும் கொஞ்ச நேரம்.. இன்னைக்கு லீவ் தானே.. ப்பா.. சொல்லுங்க” என்று தூக்கத்தில் உளறினாளே ஒழியக் கண்திறக்கவில்லை.
தாய் மடிக்கு ஏங்கும் குழந்தை போல இருந்த அந்த முகத்தை பார்த்த சுசிலா, “இங்கையே இருக்கட்டுமா.. அவளும் இந்த வீட்டு பொண்ணு தானே… இன்னைக்கு இங்க இருக்கட்டுமே..”
பாட்டிக்கு சுத்தமாய் இதில் உடன்பாடில்லை. “வயசு பொண்ணு சுசி.. சரி வராது..”
“என்ன பேசரீங்க.. சொந்த காரங்க வீட்டுக்குப் போன தங்கரது இல்லையா? அப்படி நினைச்சுக்கோங்களேன்”  என்று பேசி ஒரு வழியாய் சம்மதிக்க வைத்தார். சுசிலா மனதில் கள்ளம் இல்லை. அவருக்குச் சுதாவைப் பிடிக்கும். கண்ணனுக்குப் பிடிக்கும் பட்சத்தில் அவருக்கு அதை விட மகிழ்ச்சியான விஷயம் இல்லை.. ஆனால் கண்ணன் இதைப் பற்றி எதுவும் பேசாது போகவே அவர் அவளை தாயன்புக்கு ஏங்கும் மகள் போல் தான் பாவித்தார்.
“அவள எப்படி தனியா?..” என்று தயங்கியவரிடம்
“அவ்வளவு தானே.. நீங்களும் இங்கையே தங்கிடுங்க! இத தான் கால காலமா நான் சொல்லிட்டு இருக்கேன்.. இருங்களேன்” ஆசையாய் முகம் பார்த்து நின்றார்.
சுசிலாவின் திட்டத்தைக் கேட்டவர், “என்னவோ போ, அவளும் இங்க தான் உங்க ரெண்டு பேரச் சுத்தி சுத்தி வரா.. நீயும் ஒன்னும் கண்டுக்க மாடேங்கர.. எனக்கு எதுவும் சரியா படலை!” முணுமுணுத்தார்.
சுதா இங்குச் சுசியின் மனதில் இடம் பிடிப்பது பாட்டிக்கு பிடிக்கவில்லை. அவர் முகம் காட்டியது, எப்படிப் பிடிக்கும் கண்ணன் அவர் பொக்கிஷம் ஆயிற்றே.. அவனுக்கு உலக அழகியைத் தான் மனைவியாய் கொள்வார் போலும்! சுதா 
‘அந்த’ ஒருவாரம் அவரிடம் அதிகம் பேசாமல் போனபின் வந்த மாற்றம் பாட்டியிடம்! அவள் தன் பேத்தி என்பதை மறந்துவிட்டாரோ என்னவோ? அவருக்கு தான் வெளிச்சம்!
ஒருவழியாய் சுசிலா அவளைக் கைதாங்கலாய் அவர் அறையருகிலிருந்த விருந்தினர் அறையில் படுக்க வைத்தார்.
வெங்கட்டோடு ஃபோன் பேசிக்கொண்டிருந்தவன் கவனம் முழுவதும் இங்கு தான். இறக்கையில்லாமல் பறந்து கொண்டிருந்தான்.
அம்மாவும் பாட்டியும் அடுத்த அறை பக்கம் செல்லவும், ஃபோனை அணைத்தவன் அவளைத் தான் தேடி வந்தான்.
நல்ல உறக்கம். அவள் கூட்டில் இருக்கும் நிம்மதி. தலையிலிருந்த க்ளிப்பை எடுத்து, கலைந்திருந்த ஆடையை இழுத்து விட்டு, கழுத்து வரை போர்த்தியும் விட்டவனால் அவள் முகத்திலிருந்து கண் எடுக்க முடியவில்லை.
‘அனிச்சப்பூவே! நல்ல மென்மைத் தன்மையை உடைய நீ வாழ்வாயாக. எம்மால் விரும்பப்பட்டவள் உன்னைவிட மென்மையான தன்மையை உடையவள்’ என்பதின் பொருள் அவனுக்கு விளங்க  ‘ஒரு நிமிடத்தில் எப்படி வாடிப் போய்விட்டாள்’, முடிவெடுத்து விட்டான் அந்த நோடியே..
“இந்த லண்டன் வேல முடியட்டும்.. அடுத்து நம்ம கல்யாண வேல தான்.. அப்புறம் நீ இங்க இல்ல.. நம்ம ரூம்ல.. என் நெஞ்சு மேல தான்” மென்மையாய் அவள் நெற்றியில் இதழ் பதித்து எடுத்தான். தூங்கிக் கொண்டிருந்தவளிடம் சொல்லியதை முன்பே அவளிடம் சொல்லியிருக்கலாம்.
படுக்கையில் போய் படுத்தவனும் சுதா அடுத்த அறையில் இருக்கும் நிம்மதியில் தன்னை மறந்து உறங்கினான்.  

Advertisement