Advertisement

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.8

தன் கண்களையே தன்னால் நம்ப முடியாமல் அதைவிட இத்தனை நாட்களில் தான் போட்ட திட்டங்களும் கணக்குகளும்  சரியாய் வந்து முடியும் நேரத்தில் நந்தி போல் இடைபுகுந்து…… ஆட்டத்தை கலைக்க முயலும் அந்த ஆரியனின் தலையீட்டை…..என்ன செய்து முறியடிப்பது என்று தெரியாமல் விழித்தான் யுகேந்திரன்…..

ஆனாலும்   தோல்வியை ஒப்புக் கொள்ள மனமற்று  தன் முன்பு நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தான்……பார்த்தவரையில் எந்த ஒரு மாறுபாட்டையும் அவனால் அவர்களுக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை…….எங்கே  தான் கூட அவர்கள் இருவரும் உண்மையான காதலர்கள் என நம்பி விடுவோமோ என்னும் ஐயம் கூட வந்தது……

ஷிவானி அந்தக் கல்லூரியில் சேர்ந்த இரண்டு வருடங்களாகவே அவனுக்கு அவளை நன்கு தெரியும்…… மெல்லிய முல்லைக்கொடியை ஒத்தது  போல் மென்மையான பெண் அவள்‌….

சந்தனத்தை செதுக்கி அதற்கு   உயிர் கொடுத்து. மழலையின் மனதையும் குணத்தையும் சேர்த்து படைத்த……இறைவனின் அற்புத படைப்பான  அவளை அவனுக்கு மிகப் பிடிக்கும்……

எப்போதும் தன் வழி போய் தன் வழியே வரும் ஷிவானியின்….. கடைக்கண் பார்வை அவன் புறம் திரும்ப வைக்கத்தான்  யுகேந்திரன் பட்ட பாடுகள் எத்தனை……. அவளுக்காக பார்த்துப் பார்த்து அவன் செய்த ஒவ்வொன்றும் சமீப காலத்தில் தான் பலன் தர ஆரம்பித்து இருந்தது……

அந்த  தேன் சிட்டு  போன்ற பெண்ணின் அழகிய கரு விழிகளில்   அவனுக்கான சிறு ஈடுபாட்டை கண்டு கொண்டவன்……. அவன் கனவு மெய்ப்படும் வேளையில் அதன் பிறகான  நாட்களின் வசந்தத்தை நினைத்து பல கற்பனைகள் உள்ளுக்குள் கண்டுகளித்து காத்திருக்க….. இதில்….

நேற்று வந்த எவனோ  ‌ அவளை , அவன் ஆசைக்கு உரியவளை ,  தட்டிப் பறிப்பதா…?? அதைப் பார்த்துக்கொண்டு அவனும் கைகட்டி நிற்பதா…?? எந்த நொடியில்  ஷிவானியை அந்த ஆரியனின் கை வளைவில் கண்டானோ அப்போதே உள்ளுக்குள் மூண்ட ஆத்திரமானது……. இப்போது அவன் நவ துவாரத்திலும்  தீயாய் பற்றிக்கொண்டு அவனையே தீப்பந்தமாய் மாற்ற….

அதற்கு மேல்  பொறுக்க முடியாமல் ஆரியன்  யார் , அவன் எப்படிப்பட்டவன் , அவன் தகுதியும் அந்தஸ்தும் அவனின் ஆளுமையும்  அனைத்தும் அறிந்தும் கூட அவளுக்காக அவனை எதிர்க்கத் துணிந்தான் யுகேந்திரன்…….

ஏன் என்றால் அவளின் தகுதி அப்படிப்பட்டது……தேவதை  பெண்களுக்கான போட்டியும் போர்களும் கடந்த காலம் தொட்டே நடந்து வந்தவை ஆயிற்றே…..

தன் தோல் வளைவில் பொதிந்த படி நிற்க முடியாமல்….. அவன் அருகாமை பிடிக்காமல்  நெளிந்து , அவனைத் தள்ள முயன்று…… தவியாய் தவித்து தன்னை விட்டு தள்ளிப் போகத் துடிக்கும்…… அவளின்  எந்தவொரு உணர்ச்சிக்கும் அசைவிற்கும் சிறிதுகூட எதிர்வினையே இன்றி…….

இன்னும் சொல்லப் போனால் அவளின்  ஒவ்வொரு போராட்டத்தையும் துளித் துளியாய்  தேன்மழையாய் ரசித்து ருசித்து சுவைக்கும் பேரின்பத்தில் ஆழ்ந்திருந்தான் ஆரியன்……

பின்னே எத்தனை கட்டம் கட்டி எவ்வளவு நாட்கள் காத்திருந்து…… அவன்  ஆத்திரம் வெறி கோபம் அனைத்தையும் தீர்த்துக்கொள்ள பதுங்கி பாய்ந்து தன் உணவாய் அள்ளிப் உண்டு பசி தீர்க்க……  தான் எண்ணியதை. அடி பிசகாமல் நிறைவேற்ற…..

இன்னும் பலவற்றுக்காகவும்  அவன் ஆவலே உருவாய் சிறை எடுத்தவள் அந்த ஷிவானி ஆயிற்றே……

தன் அனைத்து விவேகத்தையும் பயன் படுத்தி  பிடித்த…..அந்த சிறு பெண் புறாவின் இறகை ஒன்றொன்றாய் பிடுங்கி  பறக்கும் ஆசையே அதற்கு அற்றுப் போக….. செய்யவில்லை என்றால் இத்தனை தூரம் அவன் பட்ட பாட்டிற்கு தான் பலன் என்ன…….. இந்த  யோசனை உள்ளுக்குள் ஓடிய நிமிடத்தில்……

  எப்போதும் இதழோரம்   ஒருவித சுளிப்போடு மற்றவரில்  இருந்து மிகவும் மாறுபட்ட அவனின்  பிரத்தியேக சிரிப்பு இப்போதும் ஆரியனின் உதட்டில் குடிகொள்ள…….. அந்தப் புன்னகையின் அடி நாதமாய்  ஷிவானியின் இடையில் மேலும் அழுத்தத்தோடு பதிந்தது அவன் கைகள்…….தன் உள்ளங்கையில் பற்றி தாம் விளையாடும் பொம்மையவள்  என்று பறைசாற்றும் விதமாய்…….

என்னதான் உயிர் துடிக்கும் வலியை உள்ளுக்குள் உணர்ந்தாலும்…… அவள் அவசரத்தில் தனக்குத் தானே  விதைத்துக்கொண்ட வினையால் அடங்கிபோய்……. தேள் கொட்டிய வலியை பிறர் அறியாமல் உள்ளுக்குள் அடக்கும் திருடனாய்…… தன் துயரத்தையும்  கண்ணீரையும் இதழ் கடித்து பொறுத்தவளின் கட்டுப்பாட்டை……

ஷிவானி யின்  உடலில் பதிந்த அவனின்  கைகளின் அழுத்தம்…… தகர்த்தெறிய  விழியின் விழிம்பில் தேங்கிய நீர் துளிகள் இப்போது அவளின்   கண்ணங்கள் வழி பயணித்து கழுத்தில் இறங்க ஆரம்பித்தது……

ஒருவேளை அந்த நொடி தங்கள் தோழியின் கண்கள் வடிக்கும்  கண்ணீரைக் கண்டு இருந்தாள்……. அவர்களின் அப்பாவி தோழியை   பாதத்தில் பற்றி தன் நகக் கண்ணில் வைத்து கிழித்தெறிய பார்க்கும் அந்த பிரம்மாண்ட ராஜாளியிடம் இருந்து அவளைக் காப்பாற்றி இருக்க கூடுமோ என்னவோ……

ஆனால் அதற்குக் கூட வாய்ப்பளிக்காது அவளின்…… விழிநீர் தரைத் தொடும் முன்னும் மற்றவர் பார்வைக்கு படாமல்  ஷிவானியின் முகத்தை தன் நெஞ்சோடு பதித்து கொண்டவனின்…..மார்பு சட்டையில் வர்ணம் தீட்ட ஆரம்பித்தது ஷிவானியின் கண்ணீர்……

உன்னுடைய   முகம் கொஞ்சம் வித்தியாசப்பட்டாலும்…… அல்லது அடுத்தவர் கண்களுக்கு  உன் கஷ்டங்கள் வெளிப்பட்டாலும் அதற்கான…….பின் விளைவுகள் நீ எதிர்பார்க்காத அளவுக்கு பயங்கரமாய் பல மடங்காய் உனக்கே திரும்ப வழங்கப்படும்   பெண்ணே…….

தன் உடலோடு ஆடையாய்  அவளை சேர்த்தவன் ஷிவானியின்…… செவிகளை அழுத்தமாய் தன் உதடு கொண்டு உரசி அவள்  காதிற்குள் முனகலாய் அவன் வஞ்சகத்தை விஷமாய் காக்க……..

ஆடவனின் கை பட்ட பெண்மை அதற்குண்டான இளமையின்  எந்த உணர்வும் இன்றி முழு மொத்தமாய் பயத்தில் பரிதவித்தது…….அடுத்தவர் கண்களுக்கு விருந்தான அவர்களின் நெருக்கம் அங்கிருந்த பலரையும் பலவிதமாய் தாக்கியது  என்னவோ உண்மை……

ஷிவானியின்  கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தவன்….. தன் முன்பு நிழலாடும் உருவம் யார் என்று பார்க்க தலை நிமிர்ந்தவனின்……..  எதிரில் நிற்பவனை கண்டு அதுவரை மழை சாரலில் நனையும் குளுமையை சுமந்திருந்த ஆரியனின் வதனம் கல்லை விட கடுமையாய் கடின பட….. வெறுப்பை சற்றும் மறைக்காத  முகபாவத்தோடு அலட்சியமான புருவ அசைவில் அவன் கேள்வி எழுப்ப…….

இங்கே யுகேந்திரனின்  ரத்த அழுத்தம் தான் ஏகத்திற்கும் அதிகமானது…… இருந்தும் தன் காரியம் நடைபெற முயன்று தன் அமைதி காத்து…… ஷிவானி தென்றலாய் வருடும் குரலில் அவளை அழைத்தவன் ஆரியனின் நெஞ்சில் இருந்து முகம் விலக்கி தன்னைப் பார்த்த ஷிவானியின் கண்களை நேராக நோக்கி…….

உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க எப்படியும் நான் உங்களுக்கு நிச்சயம் உதவுவேன்…… அவள் தன் வார்த்தைகளை நம்ப வேண்டுமே என்ற எதிர்பார்ப்போடு யுகேந்திரன் வேகமாய் பேச……. ஆனால் அவனின் சொல்லுக்கும் பட படத்திற்கும் ஷிவானி பதில் கூறும் முன்னும்……..

வாவ்….!!! சோ நைஸ் ஹீரோ சார் உங்க வாய்ஸ் அப்படியே என் நெஞ்சை கட்டி இழுக்குது தெரியுமா…?? நான் மட்டும் ஒரு பொண்ணா இருந்திருந்தேன்னா …….இப்பவே உங்களை அப்படியே  கட்டிப்பிடிச்சு கிஸ் கொடுத்து இருப்பேன்…….. ஆரியனின் வானரப் படையின் தளபதியான ராஜீவ் பெண்ணைப் போலவே நளினமாக பேசி காட்டி யுகேந்திரன் வெறுப்பேற்ற……

டேய் முட்டாள் யாரைப் பார்த்து என்ன பேச்சு பேசுற…… அவருடைய கம்பீரத்தையும் அழகையும் பார்த்து நான்தான்டா மயங்கிட்டேன் யுகேந்திரன் டார்லிங் எனக்கு மட்டும்தான் நீ என்கிட்ட வம்புக்கு வந்த உன்னை இங்கேயே புதைத்து விடுவேன்…… இப்போது அந்த ஐவர் படையில் மற்றொருவனான ரூபனும் சேர்ந்து அவனை  வெறுப்பேற்ற ஆரம்பிக்க…….

அவர்களின் நெளிவும் குழைவும்  யுகேந்திரனுக்கு கோபத்தை அதிகமாக உண்டாக்க…….. யூ ராஸ்கல்ஸ் யாரடா சீண்டிப் பாக்குறீங்க கத்திக் கொண்டே ரூபனையும்  ராஜீவையும் அடிப்பதற்கு நெருங்கிய வன் முன்னாள் பலம் பொருந்திய பாறையாய் நொடியில் வந்து நின்றான் ஆரியன்……

என்ன மிஸ்டர் யுகேந்தர் உங்களுக்கு கோபம் வருது போல..?? அலட்சியமாய் கேட்டவன் இப்போது அவன் கண்களுக்குள் தன் பார்வையைச் செலுத்தி…….எங்களுக்கு எதிரா ஒருவன் தன் விரலை உயர்த்தினால் அதற்கு பதிலாய்   அவனுடைய கையை வெட்ட கூட நாங்கள் தயங்க மாட்டோம்……

எதிராளிக்கு எப்பவும்  வாய்ப்புக் கொடுத்து எங்களுக்கு பழக்கமே கிடையாது…… ஆனா உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . என் முன்னாடி நிக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கே அதுக்காக……

இது உன்னுடைய கடைசி வார்னிங்…..இனி எப்போதும் என் முன்னால்   குரலையோ கைகளை உயர்த்த ஒருபோதும் முயற்சிக்காதே……அடுத்து எண்ணி வருந்துவதற்கு உன் உயிர் கூட உன் இடத்தில் இல்லாமல் போய்விடும்……

தன் கண்ணோடு கண் பார்த்து பல மறைமுக அர்த்தங்களை……. உள்  வைத்து அமைதியாய் ஆனால் ஆணவமாய் எச்சரித்தவனை என்ன முயன்றும் எதிர்த்துப் பேச…… முடியாமல் யுகேந்திரனின் தொண்டைக்குழி அடைபட…..

அவன் கண் முன்னாலேயே ஷிவானி மீண்டும் தன்னோடு பினைத்த படி  ஆரியன் புறப்பட்டுச் செல்ல…… அவனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத தன் நிலையை நொந்தபடி அங்கிருந்த இருக்கையில்  அமர்ந்தான் யுகேந்திரன்…….

என்னாச்சு யுகேந்திரன் அந்த ஆரியன் உங்க கிட்ட என்ன பேசினார்….. ஷிவானி ஏதாவது சொன்னாளா..?? அங்கிருந்த அமரும் கல்லில் துவண்டு போய் இருந்தவனின் அருகில் வந்த நிஷா வினவ…… ஆரியனின் வார்த்தைகளை கூற மனமற்று மறுப்பாய் தலை அசைத்தவன்…….

இல்லை  மிஸ் நிஷா ஷிவானி கிட்ட பேச ட்ரை பண்ணும்போது அந்தக் கும்பல் குறுக்கே  வந்து தடுத்து விட்டது…… அவங்க கிட்ட ஒன்னும் பேச முடியல . ஆனா அது பரவாயில்லை…..

நீங்க ஈவினிங் அவங்களோட வீட்டுக்கு போய் இந்த ஆரியன் .  அவன் கூட அவங்க இதுக்காக இவ்வளவு நெருக்கமா…… இருக்கணும்னு அதுக்கு என்ன காரணம் அவனால்  அவங்களுக்கு என்ன பிராப்ளம் இது எல்லாத்தையும் தெளிவா பேச முடியுதா என்று பாருங்கள்…… என்றவன் யோசனையோடு  அமைதியாய் அங்கிருந்து விலகிச் செல்ல……

தோழிகள் இருவரும் தங்கள் தலைமுடியை தாங்களே பிடுங்கி  கொள்ளும் அளவிற்கு ஷிவானியின் விஷயத்தில் எப்படி யோசித்தாலும் குழப்பம் மட்டுமே மிஞ்சியது…..

இதற்கு முன்பு  அந்த ஆரியன் உடனான மூன்று  சந்திப்புகளுமே ஷிவானிக்கு கஷ்டம் துன்பம் அளிப்பதாகவே இருக்கும் போது…… இன்று திடீரென அவனுடனான இந்த நெருக்கம் எப்படி வந்தது…..?? அதுவும் கடைசி முறை…..அவர்கள் இருவருக்கும் முன்பாகவே அவன் அவளை எத்தனை தூரம் அவமானப்படுத்தினான்……

அந்த பங்களாவிற்குள் செல்லும் நாளின் பகல் பொழுது…….தங்கள் கல்லூரியின் புல்வெளியில் அமர்ந்து அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்களுள் படிப்படியாக அது கிண்டலும் கேலியுமாய் மாற……ஒருவருக்கொருவர் செல்லமாய் அடித்து  கொண்டும் திட்டிக்கொண்டும்….. அங்கேயே ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பிக்க……

நிஷாவை துரத்திப் பிடிக்கும் மும்மூரத்தில் கட்டிட வளாகத்திற்குள் புகுந்து ஒரு திருப்பத்தில் மறைந்த நிஷாவை துரத்தி பின் சென்றவள் திடீரென்று வெளிப்பட்ட எதன் மீதோ பலமாக மோதி…… அந்த அதிர்வு தாங்காமல் கீழே விழப்போக கண்களை மூடி கைகளை பிடிமானத்திற்காக விரித்து தன் உடல்  தரை தட்டும் தருணத்திற்காக காத்திருந்தவள் அப்படி எதுவும் நடக்காமல்……

நிமிடங்கள் கடந்தும் தான் அந்தரத்திலேயே நிற்பதையும் தன்னை யாரோ வலுவான  கைகள் கொண்டு அழுத்தமாய் பிடித்திருப்பதும் உணர…… விழி திறந்து பார்த்த அவளின் கண் முன்னால்……

சிவந்த விழிகளும் கோரமான கோபம்  ததும்பும் கொடூர முகம் தாங்கிய ஆரியனின் உருவத்தை அவள் மட்டும் சரியாக கவனிக்கவில்லை என்றால்……அது ஏதோ பேய் அல்லது பயங்கர பிசாசு என்று கூட அவள்  பயந்து அலறி இருக்க கூடும்…….

ஆனால் இரண்டொரு முறை அவனை சந்தித்த அனுபவத்தில் அவன் யார் என்று உணர்ந்து கொண்டாலும்…… இந்த நொடி அந்த ஆரியனின் ஆத்திரம்  எதற்கு என்று தெரியாமல் அது எதற்காக இருந்தாலும் இத்தனை கோபம் அதிகப்படி என்னும் சிந்தனையும் தோன்ற……

அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவளின் முன்னால்….. தன் வலது கை சொடுக்கி நினைவுக்குக் கொண்டு வந்தவன்…… அவள் முகம் பார்த்து  நெருப்பாய் காய ஆரம்பித்தான் இது மாதிரி தினம் ஒருத்தன் மீதும் போய் விழுந்திட்டே இருக்கியே உனக்கு வெக்கமா இல்லையா….

அன்னைக்கு அந்த அவன்  பெயர் என்ன..?? அவளிடம்   கேட்டவன் யோசிப்பது போல் பாவனை செய்துவிட்டு….. யுகேந்தர் அவன் தானே…? அன்று அவன் இன்று  நான் நாளை யாரோ…?? இப்படி எத்தனை பேரின் கைகளில் விழுந்திருக்கிறாய்……

கிண்டல் நக்கல் இன்னும் என்னென்ன கேலியான பாவனைகள் உண்டோ  அனைத்தும் முகத்தில் தாங்கி…..அவள் இதயத்தையும் ஒழுக்கத்தையும் ஒரே நொடியில் கூறுபோடும் வார்த்தைகளை மிக சாதாரணமாக அவன் கேட்க…….

அடுத்த வினாடியில் அவன் கைகளிலிருந்து துள்ளிக்கொண்டு ஒரு வேகத்தோடு வெளிவந்து தள்ளி நின்றவள்……. பதில் சொல்ல குரல் எழுப்பும் முன்னமும் அவன் கண்கள் கண்ணீரை அருவியாய் பொழிய…….ஆரம்பிக்க அவள் உதடுகளும் ஆவேசமான வார்த்தைகளுக்கு பதில் விக்கலையும் விசும்பலையும்  தான் வெளிப்படுத்தியது……

தங்களை துரத்தி வந்தவள் காணாமல் அதே வழியில் திரும்ப வந்தவர்களின் கண் முன்னால் அந்த ஆரியனும்  அவன் எதிரில் அழுதபடி ஷிவானி யும் நிற்க….. ஏதோ விபரீதம் என உணர்ந்து … இவர்கள் விரைந்து அருகில் செல்லும் போதே தன் அலட்சிய புன்னகையோடு  அவன் அங்கிருந்து புறப்பட்டு போயிருந்தான்……..

சென்றவனின் முதுகை பார்த்தபடி அழுது கொண்டு நின்ற தோழியின் கைகளை ஆதரவாய் பிடிக்க…… இன்னும் அதிகப்பட்ட கண்ணீரோடு அவர்களின் தோளில் சாய்ந்தவள் அவன் கூறிய கொடும்  வார்த்தைகளை திக்கித் திணறி சொல்லிவிட்டு……

என்னை யாரும் இவனை மாதிரி இவ்வளவு மோசமா இதுவரைக்கும் பேசியதே இல்லை நிஷா…… இனி ஜென்மத்துக்கும் இந்த ஆரியனின்  முகத்திலும் மட்டும் நான் விழிக்கவே கூடாது…….. தனக்குத்தானே சபதம் போல் தெரிவித்த ஷிவானியை அன்று சமாதானப்படுத்தி அமைதி அடைய வைப்பதே அவர்களுக்கு பெரும் வேலையாய்  இருந்தது………

அப்படிப்பட்டவனின் கைகளில் இன்று அவர்கள் தோழி அத்தனை நெருக்கமாய்…… அதுவும் ஒரு காலத்தில் அவளுக்கு கொடும் பாலைவனமாய் சுட்ட அவனின் அருகாமை இன்று இத்தனை இனிமையான தின் மர்மம்தான் என்ன……

தோழிகள்  இருவரின் எண்ண ஓட்டத்தை உணர்ந்தது போல்…. ஷிவானியின் உள்ளம் கூட  தான் சற்றும் விரும்பாத அவள் வாழ்வில் அவள் வெறுக்கும்……ஒரே நபரான  ஆரியனின் கை கோர்த்து இன்று தான் நிற்கும் துர்பாக்கிய நிலை தனக்கு…… ஏன்   எப்படி ஏற்பட்டது என்று மீண்டும் ஒரு முறை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தாள்…….

அனைத்துமே அந்த மாளிகைக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட விபரீதம்….. ஒரு நாள் இரவு அவள் வாழ்க்கையைத்தான் எப்படி புரட்டிப் போட்டுவிட்டது…….

                              சின்ரெல்லா வருவாள்……..

Advertisement