Advertisement

ஓ..!!  மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.9

தன்முகம் மொத்தமாய்   ஒற்றைக் கையால் அழுத்தமாக    ஆரியன் மூடியிருக்க மூச்சுக்கூட சரிவர…… சுவாசிக்க முடியாமல்  திணறியவளின் தோற்றத்தை அமைதியாய் சில கணங்கள் வேண்டுமேயன்றே வேடிக்கை பார்த்தவன்…….. தன் முழு விட்டத்துக்கும் விரிந்து எக்கச்சக்க மிரட்சியோடு  அவனையே பார்க்கும்….. அவள் கரு விழிகள் உருளும் கண்களுக்குள் ஆழமாய் குத்தும் கூர்வாளாய் தன் பார்வையை கலக்க விட்டவன்…….

ஓய்..!!  பூனைக்குட்டி நான் உன்கிட்ட பேசணும் அத நீ ஒரு சின்ன சத்தம் கூட போடாம    அமைதியா கேட்கணும்…… இல்ல நான் கத்துவேன் இந்த நடு ராத்திரியில எல்லோரையும்  எழுப்பி விடுவேன் அப்படி இப்படின்னு ஏதாவது சீன் போட முயற்சி பண்ண…… உன்  மூச்சை இங்கேயே அடக்கிடுவே……எப்படி இருந்தாலும் சேதாரம் உனக்குத்தான் ரொம்ப அதிகமா இருக்கும்……

 அத்தோட  உன் கூட இருக்காங்களே உன்னோட  உயிருக்கு உயிரான பிரண்ட்ஸ் அவங்களும் ரொம்பவே கஷ்டப்படுவாங்க…… கூடவே உன்னோட ஆண்டியும் என்று  சொல்லி நிறுத்தியவனின்……..முந்தைய மிரட்டலுக்கு சற்றும் கலங்காத ஷிவானி ஆரியனின் கடைசி வார்த்தைகளில் மொத்தமாய் அடங்கி விட்டாள் என்றே சொல்ல வேண்டும்……

அவனிடம் இருந்து தப்பித்துக்கொள்ள அவள் எடுத்த அனைத்து முயற்சிகளும்……தான்  மிகவும் நேசிக்கும் நட்புக்கும் உறவுக்கும் பிரச்சனை என்றவுடன் பாலில் இட்ட  நீராய் அடங்கி விட்டது……

இப்போதும் கண்களில் பயம் இருந்தாலும் அதையும் தாண்டி……. ஒரு கேள்வியை  தன் விழிகளில் தேக்கி ஷிவானி அவனைப் பார்க்க…… குட் இப்படிதான் இருக்கணும் இந்த மாதிரி அடி பணிந்து நான் சொல்வதைக் கேட்டு நடந்தால்  எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் இப்போ உன்ன பிடிக்கிற மாதிரி…..

அவள் முகத்தின் மிக அருகாமையில்  நெருங்கி கிசுகிசுப்பாய் உறைத்தவன்……இப்போது . தன் வலது கையை அவள் முகத்திலிருந்து சற்று மென்மையாய் பிரித்தெடுத்தான்……அடுத்த நொடியே  தன் மீது இருந்து அவனைத் தூரம் தள்ளி எழுந்து கட்டிலை விட்டு இறங்கி நின்றாள் ஷிவானி……

இங்க பாருங்க மிஸ்டர் நீங்க யாரா இருந்தாலும் எனக்கு…….பயம் கிடையாது  நான் இப்பவே உங்கள போலீஸ் கிட்ட பிடித்து கொடுத்துடுவேன்…….எதை சொல்லியும் என்னை  உங்களால மிரட்ட முடியாது……அவனைத் தன் அறையில் அதுவும் இந்த நடு இரவில் கண்டதில் இருந்தே உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்து இருந்தாலும்…….

ஒருவனின் மிரட்டலுக்கு பணிந்து போக கூடாது என்னும் அளவிற்கு….. புத்தி வேலை செய்ய துணிச்சலாய்   இருப்பது போல் தன்னைக் காட்டிக் கொள்ள…… முயன்ற ஷிவானியின் முயற்சியை கேலியான ஒரு உதட்டுச் சுழிப்பில்  சற்றும் கண்டுகொள்ளாது புறம் தள்ளிவிட்டு…….

போலீஸ் தானே..??  கூப்பிடு நான் உன் வீட்டுக்குள்  அனுமதியின்றி நுழைந்தது தப்பு என்றால் நீ அப்புறம்……அந்தப் பொண்ணுங்க ரெண்டு பேரும் என்னுடைய வீட்டிற்குள் அத்துமீறி திருட்டுத்தனமாய் நுழைந்து……பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை  திருடிட்டு போனதற்கு என்ன தண்டனை இன்று அவங்ககிட்டயே கேட்கலாம்……. என்ன என்ன நாங்க திருடினோமா…?? மிதமிஞ்சிய அதிர்ச்சியோடு கேட்ட ஷிவானியை பார்த்து கிண்டலாய் கண் சிமிட்டியவன்……

இல்லை தான் ஆனா நான் அப்படி தானே  சொல்லப்போறேன்……அப்போதுதான் கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும் உங்க மூணு பேருக்கும் அதிகமான தண்டனையும் கிடைக்கும்…….. என்றவனை அளவு கடந்த  பிரமிப்பாய் பார்த்தவள் ஆ..னா…. ஆனா இதெ…ல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் வார்த்தை வராமல் திணறி இருந்தும் தன் சந்தேகத்தை கேட்டு முடிக்க……

என்ன நான் சொல்ல வருவது  இன்னும் உன் அதி புத்திசாலி மூளைக்கு  புரியவில்லையா…?? சரி நானே உனக்கு தெளிவுபடுத்துகிறேன்    நீங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி….. சுவரேறி குதிச்சு ஒரு  மணி நேரமா சுத்தி பார்த்திட்டு வந்தீங்களே அது என்னுடைய வீடு என்று சொன்னேன்…….

அவன்  முடிக்கும் முன்பே மீண்டும் பேச்சில் இடைப் புகுந்தவள்……அப்போ அந்த ரவுடி   அவர் யாரு…?? எங்க அத்தை கிட்ட சண்டை போட்டு அவங்கள அழ வைத்தது …… வேகமாய் கேட்ட ஷிவானி யின்  கழுத்து இப்போது ஆரியனின் ஒற்றைக் கையால் அழுத்தமாக பற்ற பட்டது…….

அத்தோடு  தன் பிடியை  விடாமல் அவளை ஒருவித வெறியுடன்…….நகர்த்திச் சென்று அங்கிருந்த சுவற்றில் பொருத்தி அசையவிடாது நிறுத்தியவன்…… நமக்கு  முழுசா தெரியாத எந்த விஷயத்தைப் பற்றியும் எந்த ஒரு மனிதரை பத்தியும்…… தப்பா பேசக்கூடாது என்கிற சிறு நாகரீகம் கூட உனக்குத் தெரியாதா….??

இன்னொரு முறை  யாரைப்பத்தியும்  தப்பா பேசக்கூடாது சரியா…… ஒவ்வொரு வார்த்தைக்கும் தன்  கைகளின் பிடியை கொஞ்சம் கொஞ்சமாய் அழுத்திக் கொண்டே அவன் கேட்க  அவளின் தலை தானாகவே சம்மதமாய் அசைந்தது…….. அவள் விழிகள் அவனின் கண்களோடு   சில கணங்கள் நிலைத்து நிற்க…….

ச்சே….. சத்தமாக இரைந்து      அவள் கழுத்தில் இருந்து தன் கைகளை எடுத்துக் கொண்டு விலகி நின்றவன்……. அவளின்  முகத்தை ஓரவிழிகளால் அளவிட அவன் நினைத்தது போலவே சற்று முன்பு….. தான் பேசிய வார்த்தைகளையும் கேட்ட கேள்வியையும்  மறந்திருந்தாள் ஷிவானி…….

அதுவும்  அவனுக்கு மிகவும் நெருக்கமான   அந்த அவரை பற்றி…….மீண்டும் அவளுக்கு ஞாபகம் வரக்கூடாது என்னும் தீர்மானத்தோடு அவள் யோசிக்க அவகாசமே கொடுக்காமல்   செயல்பட்டான் ஆரியன்….. அவனுக்குத்தான் அவளை கையாளும் வித்தை கைவந்த கலையாயிற்றே……..

அத்தோடு வருங்காலத்தின் அவனின் அனைத்து திட்டங்களுக்கும்…… முக்கியமான துருப்புச் சீட்டே  அவள் தான் என்னும் போது ஷிவானியை தன் பிடியில் தக்க வைப்பதும் மிக அவசியமான ஒன்றுதான்……

தன் செல் போனை எடுத்து அவளுக்கு நேராய் உயர்த்திக் காட்டியவன்……இதுல இருக்கா வீடியோஸ் மட்டும்  நான் போலீஸ் கிட்ட கொடுத்துட்டா போதும்…….. அப்புறம் மீதி எல்லாத்தையும் அவங்க பார்த்துக்குவாங்க எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட இடத்துக்கு  நீ தனியாக வருவ கொஞ்சம் கூட உனக்கு பயமே இல்லை இல்ல…??!!!!

இந்த ராத்திரில இப்படி ஒரு வேலையை செய்ய போறோமே…… நமக்கு மட்டும் இல்லாம நம்ம ஃப்ரெண்ட்ஸ் கும்  ஏதாவது ஒரு ஆபத்துன்னா யார் வந்து காப்பாத்துவான்னு…… நீ யோசிக்கவே இல்லை…..

உன்ன மாதிரி ஒரு வடிகட்டின முட்டாளை  நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே கிடையாது…..அது நேரம் வரை இருந்த அவன் இயல்பு முற்றிலுமாய் மாறியது போல்….. ஒரு வித சிறு தவிப்போடு படபடத்த அவன் வார்த்தைகளை உள்வாங்கினாலும்……  அவனின் முகம் காட்டும் உணர்வுகளை சரியாய் பகுத்தறியும் அளவுக்கு அந்த சிறு பெண்ணிடம் அனுபவம் இல்லை…….

அப்படி இருந்தும் கூட தன்னளவில் முயன்று  அவன் மாறுபாட்டை ஷிவானி உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பிக்கும் போதே……. அவனின் அந்த சிறு தடுமாற்றமும் பொய்யோ எனும் அளவிற்கு மீண்டும் ஆரியனின் முகம் பழையபடி மாறிவிட……. என்ன  இப்போ சத்தம் போட்டு ஊரை கூப்பிடு பார்க்கலாம்…….. வீட்ல இருக்காங்களே அந்த அவங்களையும் சேர்த்து இங்கு வர சொல்லி இப்போ கத்து …….

அவள் தோள்களைப் பிடித்து உலுக்கியவனின் இழுப்பிற்கு……அசைந்ததை தவிர  ஷிவானி இடம் வேறு அசைவு இல்லை என்பதை புரிந்து விலகியவன்……

தன் வார்த்தைகள் சரியாய் அவளை தாக்கி விட்டதையும்……தன் தோழி களுக்காகவும் அவளின்   பிரியமான அத்தை காகவும் அவள் யோசிப்பதை ஷிவானியின் முகபாவத்திலிருந்து……. தெரிந்தது கொண்டவனின் இதழ்களில் இப்போது மறைக்கப்பட்ட வெற்றிப் புன்னகை……..இதுதான் இப்படி தான்  எப்போதும் என்னிடம் அடங்கி இருக்க பழகிக் கொள்…….

பூனைக்குட்டி மியாவ் என்று சத்தமிட்டால் தான்  பார்க்க அழகா இருக்கும்…… அதனால உன் சக்திக்கு மீறி  ஓவரா சவுண்டு விடுவதை நிறுத்து…. நீ என்னை போலீஸில் பிடித்துக் கொடுக்க போறியா…??  கேலியாய் ஒற்றை புருவம் தூக்கி கேட்டவன்….. நான் நினைத்தால் உன்னை உன்னோட ஃபிரண்ட்ஸ் உன் அத்தை    என அனைவரையும் ஒரு கை அசைவில் தூக்கி உள்ள வைக்க முடியும்……

அப்படி நடக்கக் கூடாது என்று  நினைத்தால் என் முன்னால் மண்டி போட்டு யாசகம் கேள்……விளையாட்டுப் போல் ஆரம்பித்தவனின் குரல்  கடைசியில் முடித்த போது தெரிந்த கடுமையில்……

முன்னெப்போதையும்  விட மிக அதிகமான பயமின்னல்  ஒன்று தோன்றி….. அவள் முதுகு தண்டின் வழியாய் மூளைக்குள் பாய அவனை….. எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க ஷிவானி  விழித்தாள்…….

அவளின்  அவல நிலை அவனுக்கு  இன்பத்தைக் கொடுத்ததோ..?   கண்களில் புதிதாய்த் தோன்றிய…….  ரசனையோடு இலகு நிலையில் அவளின் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன்…… இது தான்  சரியான நேரம் என்று மனதிற்குள் சொல்லிக் கொணடவன் தன் திட்டத்தின் அடுத்தடுத்த படிகளில் அரங்கேற்ற ஆரம்பித்தான்…….

ஷிவானியை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தான் பின்பு……. ஏய் லுக் நீ இப்படி நடுக்கத்தோடு என் முன்னாடி நிக்கிறது பார்க்க எனக்கு……. ரொம்பவே ஹாப்பியா தான் இருக்கு ஆனாலும்  நாம பேசி முடிக்க வேண்டியது நிறையவே இருக்கே……

எனக்கு வேற  ரொம்ப தூக்கம் வருது உடற்பயிற்சியால்….. இறுகிய தன் இரண்டு தோள்களையும்    மேலே தூக்கி சோம்பல் முறித்தவன்……

நீ   ஒன்னும் பெருசா எதுவும் செய்ய வேண்டாம்……. எனக்கு ரியல் லைப் கேம்ஸ் அது தரும்  என்ஜாய்மென்ட் ரொம்ப பிடிக்கும் அதனால் இந்த நாளில் இருந்து….. நீ என் உண்மையான  கீழ்ப்படிதலான சர்வன்ட் எப்பவும்…… என் கூடவே இருந்து எனக்கு தேவையானது எல்லாம் சரியாய் கவனித்து செய்து   ஒரு நல்ல சர்வன்ட் மேய்டா இருக்கனும்…….

சொல்லிக்கொண்டே போனவன் ஷிவானியின்  முகத்தில் தெரிந்த….. தீவிரமான மறுக்கும் பாவத்தை கண்டு   தன் தலையை இடவலமாக அசைத்து உதடுகளை கேலியாய் பிதுக்கி காட்டியவன்…….. உனக்கு வேறு  வழியே இல்லை பூனைக்குட்டி……

வேணும்னா உனக்காக நான் ஒரு சில சலுகைகள்…… கொடுக்க முடியும்  உன்னோட வேலை எனக்கு பிடித்திருந்தால் சீக்கிரமே என் கிட்ட இருந்து உனக்கு விடுதலை……. அத்தோடு சிறப்புச்சலுகையாய்  இதுவும் நீ என்கிட்ட இருந்து ஃப்ரீடம் வாங்கும்போது உன் கைக்கு கிடைக்கும்……. சொன்ன ஆரியனின் கைகளில் இருந்த அந்த  ஒன்றை பார்த்ததும் தெரிந்துவிட்டது ஷிவானிக்கு………

அவன் சொல் கேட்டு அதன்படி நடப்பதை  தவிர தனக்கு….. வேறு வாய்ப்புகள் எதுவும்  இல்லை என்று . ஏனென்றால்…?? அவன் அவளுக்கு அன்பளிப்பாய் தருவதாய் சொன்னது….

அன்றொரு நாள் தான் யுகேந்திரனுக்கு  கொடுக்க நினைத்து….. முடியாமல் தவறிப்போய் இந்த ஆரியனிடம் அவள் தவறவிட்ட  காதல் கடிதம்…….

ஒரு முழு நீள திரைப்படத்தை போல் அன்று இரவு நடந்த அனைத்தும் ஷிவானியின் மனக்கண் முன்பு படமாய் ஓடி மூடிய…….தன் முட்டாள்தனத்தையும் மோசமான தலையெழுத்தையும் நொந்தபடி….. கிட்டத்தட்ட 2 மணி நேரமாய் நடந்தவளின்  பாத யாத்திரை ஒரு வழியாய் முற்றுப் பெற்றது என்பதை அறிவிக்கும் இதமாய்……..

ஒரு டாக்ஸி அவள் கண்களில் பட்டது  தன் சக்தி அனைத்தையும் திரட்டி அந்த வாகனத்தை ஓடிச்சென்று பிடித்தவள்….. டிரைவரின் அனுமதியோடு உள்ளே ஏறி அமர…….

வேகமெடுத்து கிளம்பிய அந்த  வாடகை காரை சற்று தொலைவில்….. அவளால்  கண்டுகொள்ள முடியாது அளவிற்கு சாதுரியத்துடன் பின்தொடர்ந்தது அந்த  ஹார்லி டேவிட்சன் பைக்……..

                        சின்ரெல்லா வருவாள்……….

Advertisement